Loading

காதல் -27

 

“என்ன சொல்லுற சிந்து… இதுல சாயாலியோட அப்பா எப்படி வந்தாரு ” அதிர்ந்து கேட்டார் மூர்த்தி..

 

“சொல்லுறேன் எல்லாத்தையும் சொல்லுறேன் ” என்ற சிந்தாமணியின் நினைவுகள் பின்னோக்கி சென்றது..

 

வழக்கம் போல அன்று அலுவலகம் முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சமயத்தில் மலை உச்சியில் இருந்து அவரது கார் கீழே இறங்கிக் கொண்டிருந்தது.. வழியில் டயர்களில் ஊசி இறங்கி பஞ்சர் ஆகி விட… டிரைவரும் சிந்தாமணியும் காரில் இருந்து கீழே இறங்கினார்கள்..

 

“அம்மா ரோட்ல யாரோ வேணும்னு பஞ்சர் ஆகுறதுக்கு போட்ட மாதிரி இருக்கு மா ” என சரியாக கூற… அந்த மலை சருக்கில் அங்கு நிற்கவே பயம் பிடித்து கொண்டது சிந்தாமணிக்கு…

 

” இப்ப பஞ்சர் பார்க்க பக்கத்துல ஏதாவது கடை இருக்கா ?”

 

” இல்ல மா… கீழே போனா தான் உண்டு, அப்படி இல்லைனா அங்க இருந்து யாராவது மெக்கானிக்கை வர சொல்லி வேலை பார்த்திட்டு அப்பறம் வண்டியை எடுக்கனும் ” என்றதும் யோசனையில் இருந்தவர் ..

 

” நீங்க போய் மெக்கானிக்கை கூட்டிட்டு வந்தா அது சரியா வராது, அதுனால இங்க ஏதாவது வண்டி வந்தா அதுல ஏறி போயிடலாம், நாளைக்கு வந்து வண்டியை எடுத்துக்கலாம்… இப்போவே இருட்ட தொடங்கிருச்சு ” என்றதும் அந்த ஓட்டுனரும் அதை ஆமோதித்து வழியில் வரும் வண்டியை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தான்.

 

அப்போது தூரத்தில் ஒரு வெள்ளை நிற அம்பாசட்டர் கார் வந்து கொண்டிருக்க.. ” அம்மா நீங்க இங்கேயே இருங்க.. நான் அந்த காரை நிறுத்தி பேசிட்டு உங்க கிட்ட வரேன் ” என ஓடி சென்று அந்த காரை நிறுத்தினான்..

 

அவன் கை காட்டியதை உணர்ந்து அந்த காரும் நின்று விட, காருக்குள் இருந்து இறங்கி வந்தான் ராஜவேல்.. அதாவது சிந்தாமணியின் எதிரி.. தொழில்முறை எதிரி என ஊருக்கே தெரியும். அவன் காரை விட்டு இறங்கவும் முகத்தை சுழித்த சிந்தாமணி .. ” டிரைவர் வேற வண்டியை நிறுத்துங்க .. நம்ம வெய்ட் பண்ணி போகலாம் ” என முகத்தில் அடித்தார் போல கூறி விட்டார்.

 

துஸ்டரை கண்டால் தூர விலகு என்பதை போல ராஜனிடம் இருந்து அவரும் விலகத் தான் பார்க்கிறார்.. ஆனால் விடாது கருப்பு போல அவரையே துரத்தி கொண்டு வருகிறார் ராஜவேல்..

 

” என்ன சிந்தாமணி மேடம் இப்படி சொல்லிட்டீங்க, மேலே இருக்குறது உங்க எஸ்டேட் அப்பறம் என்னோட எஸ்டேட்… அப்ப அங்க இருந்து கீழே வண்டியில வரது ஒன்னு நானா இருக்கனும் இல்ல நீங்களா இருக்கனும்.. உங்க வண்டி பஞ்சர்.. இப்ப கூட உங்க தலை கணத்தை இறக்கி வச்சுட்டு என் கூட வண்டில வந்தா தான் என்ன ?” என நக்கலாக கேட்டான்..

 

அதில் கொதித்த சிந்தாமணி… ” யாருக்கு தலைக்கணம்… உனக்கா இல்ல எனக்கா.. நீ  என் வழில குறுக்க வராத ”

 

” அட எதிரிக்கு கூட ஒரு இக்கட்டான நிலைமையில உதவனும்னு நினைக்குறவன் நான் … அதுவும் நீங்க ஒரு பெண் வேற .. இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில உங்களை விட்டுட்டு போக எப்படி என்னால முடியும்.. ”

 

” உங்க உதவி எனக்கு தேவையில்லை.. மிஸ்டர் ராஜ வேல் ” என பிடிவாதமாக நின்றார் சிந்தாமணி..

 

” இங்க பாருங்க அம்மணி .. இருட்டிடுச்சு வேற , நல்ல எண்ணத்துல தான் நான் கூப்பிடுறேன்.. தொழில் முறையில நம்ம இப்பவும் எதிரி தான், ஆனால் எனக்கு மனிதாபிமானம்ன்னு ஒன்னு இருக்கு , எதையும் நிமைக்காம வந்து வண்டில ஏறுங்க.. எனக்கு ஒரு பொண்ணு இருக்கா… அப்படி இருக்கும் போது நான் சுயநலமா யோசிக்க மாட்டேன் .. அதுக்கு மேலே உங்க இஷ்டம் ” என காருக்குள் சென்று அமர்ந்து கொண்டார் ராஜ வேல்..

 

ஏனோ இதற்கு மேலும் வீம்பு பிடிக்க மனம் வரவில்லை சிந்தாமணிக்கு, ஆனால் இவனுடன் ஒன்றாக செல்வதா என்ற எரிச்சலும் வந்தது… மூர்த்தி தன்னை தேடுவார் என்பதை நினைவில் கொண்டு… ” டிரைவர் நான் முன்னாடி போறேன், நீங்க மெக்கானிக்கை வச்சு சரி பண்ணிட்டு வண்டியை எடுத்துட்டு வாங்க… நாளைக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு ” என்று ராஜ வேல் வண்டியில் பின்னால் சென்று அமர்ந்து கொண்டார் சிந்தாமணி.

 

” நானே என் மெக்கானிக்கை வர சொல்லுறேன் தம்பி, நீங்க சீக்கிரம் வண்டியை எடுத்துட்டு வாங்க ” என காரை கிளப்பி கொண்டு சென்றார் ராஜ வேல்.

 

அந்த மலை பாதையில் இருந்து மெது மெதுவாக இறங்க ஆரம்பித்தது வண்டி.. மூர்த்தி இந்நேரம் தன்னை தேடிக் கொண்டு இருப்பாரே என்ற நினைவில் பாதை மாறி சென்றதை கவனிக்கவில்லை சிந்தாமணி.

 

அமைதியாக வரும் சிந்தாமணியை முன்னாள் உள்ள கண்ணாடியின் வழியே பார்த்து மர்மமாக சிரித்து கொண்டான் ராஜ வேல்..

 

இருவரும் எஸ்டேட் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள் .. வருகிற தொழிலாளர்கள் அனைவரும் சிந்தாமணியின் எஸ்டேட்டில் வேலைக்கு சேர்ந்து விட, ஆட்கள் பற்றாக் குறையால் எரிச்சல் அடைத்தார் ராஜ்.

 

அதற்கும் காரணம் உண்டு… உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கொடுப்பதில்லை என பல போராட்டங்கள் செய்தும் சிறிதும் சம்பளத்தை கூட்டாமல் அடி மாட்டு விலைக்கு அங்குள்ள மக்களை வேலை வாங்கி கொண்டிருந்தார் ராஜ்.

 

ஆனால் சிந்தாமணி வந்ததில் இருந்து நியாயமான விலையும், அவ்வப்போது போனஸ், விழாக்கள் வந்தால் அட்வான்ஸ் மற்றும் பரிசுகள் என மக்களுக்கு கொடுத்து வர, ராஜ் எஸ்டேட்டில் இருந்து அனைவரும் சிந்தாமணி எஸ்டேட்டிற்கு மாறினர்.

 

அதை விட சிந்தாமணியில் எஸ்டேட்டில் தான் விளைச்சலும் அதிகமாக இருந்தது. ஆட்கள் அதிகமாக இருக்க, வருமானமும் பெருகிக் கொண்டு சென்றது..

 

இதை எல்லாம் கவனித்த ராஜ்.. ஒரு முடிவாக சிந்தாமணியிடன் பேசி பார்க்க.. மக்களை அடி மாட்டு விலைக்கு வேலை செய்ய ஒரு போதும் ஒப்புக் கொள்ள மாட்டேன் என பிடிவாதமாக மறுத்து விட்டார்.. முடிந்தால் நீங்களும் நியாயமான விலையை கொடுத்து வேலைக்கு ஆட்களை சேர்த்து கொள்ளுங்கள் என்று விலகிக் கொண்டார் சிந்தாமணி.

 

அதிலிருந்து ஏதாவது ஒரு வகையில் சிந்தாமணியின் எஸ்டேட்டில் பிரச்சனைகளை கொடுத்து கொண்டிருந்தான் ராஜ்… எதற்கும் அசராமல் அனைத்தையும் தூசி போல தட்டி விட்டு எழுந்து நிற்கும் சிந்தாமணியை பார்க்க ஆத்திரம் தாங்கவில்லை அவனுக்கு…

 

இதற்கு மேல் இவளை விட்டு வைத்தால் தன்னுடைய சாம்ராஜ்ஜியமே அழிந்து விடும் என்ற எண்ணம் வர, மொத்தமாக அவளை தீர்த்து கட்டுவது என முடிவோடு காத்திருந்தான் ராஜ்.

 

இதோ அதற்கான சந்தர்ப்பமும் லட்டு போல அவர் கையில் வந்து சிக்கி இருக்க, விட்டு வைக்க அவன் என்ன முட்டாளா??

 

அலைபேசியின் ஓசையில் நிதானத்திற்கு வந்த சிந்தாமணி.. மூர்த்தியின் அழைப்பை கண்டு அதை ஏற்று பேசினார். ” வந்துட்டு இருக்கேன்… கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ” என அவரை பேச விடாமல் இவரே பேசி போனை வைத்து விட்டார்.

 

அப்போது தான் வெளியில் பார்க்க .. கார் வேறு பாதையில் சென்று கொண்டிருந்தது . அதில் துணுக்குற்ற சிந்தாமணி.. ” என்ன ராஜ வேல் என் வீட்டுக்கு போற பாதை இது இல்லையே ” என அப்போதும் கம்பீரமாகவே கேட்க..

 

” ஓ இப்ப தான் மேடம் வெளிய பார்த்தீங்களா … ரொம்ப லேட் பண்ணிட்டீங்க … ச்சு..ச்சு.. சரி பரவாயில்லை எல்லாம் ஒரு காரியமா தான் போயிட்டு இருக்கோம், அமைதியா வாங்க ” என்றதும்…

 

” காரை நிறுத்து , நான் இறங்கிக்கிறேன்” என அடக்கப்பட்ட கோபத்துடன் கூறினார் சிந்தாமணி.

 

” நான் சொன்னா தான் கார் நிக்கும் மணி மேடம் ”

 

இவனை நம்பி இவனது காரில் ஏறி வந்தது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்பது காலம் கடந்த பின்னே யோசித்தார். உடனே கையில் இருக்கும் அலைபேசியில் தனது கணவனுக்கு அழைக்க போக.. முன்னாள் அமர்ந்திருந்த சீட்டில் இருந்து கொண்டே வெடுக்கென்று போனை பறித்து காரில் இருந்து தூக்கி எறிந்தான் ராஜ்.

 

” நீ ரொம்ப தப்பு பண்ணுற ராஜ், இதற்கான பின் விளைவுகள் எல்லாம் ரொம்ப மோசமா இருக்கும், மரியாதையா என்ன வீட்ல விடு” என்றதும்..

 

” உன்ன வீட்ல விடவா இவ்வளவு பிளான் பண்ணி தூக்கிருக்கேன்” என ராஜ் கூறவும் அதிர்ந்து பார்த்தார் சிந்தாமணி.

 

” என்ன பிளானா ”

 

” ஆமா, உன் வண்டியை பஞ்சர் பண்ணது நான்தான்.. அப்போ தானே நீ என் கூட வருவ, வர வச்சேன் பார்த்தியா… ” என விஷமாக பேசினான் ராஜ்..

 

” இது கொஞ்சம் கூட சரி இல்ல ராஜ் .. நீ என்கூட நேரடியா மோதனும், அதை விட்டுட்டு இப்படி முதுகுல குத்தாத… ஆம்பளையா நடந்துக்கோ ” என சினம் கொப்பளிக்க பேச.. வெறியாகி போனான் ராஜ்.

 

” என்ன டி நானும் பார்த்துட்டே இருக்கேன்… ரொம்ப பேசிட்டு இருக்க.. ஆம்பளை யாருன்னு உனக்கு காட்டுறேன்… இதோட உன் கதையை முடிக்கிறேன்.. ” என காரை அவன் இடத்தில் நிறுத்தி விட்டு … பின்னால் வந்தவன்.. சிந்தாமணியின் தலை முடியை கொத்தாக பிடித்து இழுத்து வெளியே அழைத்து சென்றான்…

 

மலைக்கு ஒதுக்குப் புறமாக இருக்கும் அந்த சின்ன வீட்டிற்குள் அழைத்து சென்றவன்.. சப்பென்று சிந்தாமணியின் கன்னத்தில் அறைந்து அவரை மயக்கம் அடைய செய்தான்..

 

அதன் பின்னர் தீவிரமாக சிந்தித்து அந்த வீட்டின் கதவை அடைத்து விட்டு உள்ளே வந்தவன்… எப்படியும் சாக போகிறவள் தானே… ஒரு கை பார்த்தால் என்ன என தோன்ற அடுத்த கணமே அவரது சேலை கேட்பாரற்று கிடக்க… ராஜ் என்கின்ற மிருகம் சிந்தாமணியை வேட்டையாட தொடங்கியது…

 

பௌர்ணமி ஒளி

இழந்து…

அம்மாவாசை ஆட்சி

புரியும் நேரமிது!

 

பெண்கள் சுயம்

இழந்து..

ஆண் மிருகம் ஆட்சி

புரியும் நேரமிது!

 

காத்துக்கொள்…

உன்னை தவிர

ஒருவராலும் உன்னை

காக்க இயலாது

பெண் இனமே..!

 

 

சனா💖

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்