Loading

 

அத்தியாயம் 26

 

“மோனி.” என்ற சரணின் அழுத்தமான அழைப்பில் தயக்கத்துடன் அவளை நோக்கினாள்.

 

“என்னனு கேட்டேன். நீ இன்னும் பதில் சொல்லல.”

 

“அது ஒன்னும் இல்ல. ஒரு சின்ன ஆக்ஸிடெண்ட்.”

 

“ஆக்ஸிடெண்டுனா?”

 

“இதுக்கு நான் என்ன பதில் சொல்லுறது? ஏன் ஆக்ஸிடெண்டுனா உங்களுக்கு மீனிங் தெரியாதா?”

 

“இதை நான் கேட்டதும் நீ சொல்லி இருந்தா, அடுத்த கொஸ்டினுக்கான தேவையே இருந்திருக்காது. எதிர்பாராம நடந்த விபத்துக்கு இவ்வளவு யோசிக்க வேண்டிய அவசியம் என்ன?”

 

சற்றே தன்னை நிதானப்படுத்திக் கொண்ட மௌனிகா, “கதவுல இடிச்சிக்கிட்டேன் சரண்.”

 

அவளை ஆழப் பார்த்தவன், “இதுக்கு முன்னாடி இப்படி நடந்திருக்கா?”

 

“இல்ல. இதுதான் பர்ஸ்ட் டைம். கொஞ்சம். கேர்லஸ்ஸா இருந்துட்டேன்.”

 

மெலிதாய் புன்னகைத்தவன், “பொய்!”

 

அவள் திகைத்துப் பார்க்க, “நீ எந்த அளவுக்கு கேர்ஃபுல்லான ஆளுனு, எனக்கு நல்லாவே தெரியும். வீட்டுல இருந்து என்னோட ரைஸ் மிவ்லுக்கு வர எவ்வளவு நேரமாகும்னு முன்னாடியே கேட்டு, லொகேஷனை ஆன்ல வச்சு, வர்ற வழி கரெக்ட் தானானு செக் பண்ணிக்கிட்டே வந்த பொண்ணு. உன்னோட கேர்லஸ்னால காயமாகிடுச்சுனு சொன்னா, நான் நம்பிடுவேனா? 

 

அதுவும் இங்க குடியிருந்த இவ்வளவு நாளா இல்லாம, இப்ப கதவுல இடிச்சுக்கிட்டியா? பழக்கப்பட்ட இடத்துக்கு கூடுதல் கவனமா இருக்கணும்னு அவசியமே இல்ல. கண்ணு பாக்குறதுக்கு முன்னாடியே, நம்ம உடம்பு இருக்கிற ப்ளேஸை உணர்ந்திடும்.

 

இந்த வீக்கம் எதுலயும் இடிச்சதுனால வந்த மாதிரி தெரியல. அதோட இந்த நாலு கோடு..” எனச் சிவப்பேறிய தடங்களைச் சுட்டிக் காட்டியவன், “ரஞ்சனி!” என்று அவளின் தோழியை நோக்கினான்.

 

சட்டென்று அம்பு தன்பக்கம் திரும்பும் என எதிர்பார்த்து இராதவள் சற்றே பதற்றத்துடன், “ஹான் அண்ணா..?”

 

“என்ன நடந்துச்சு?”

 

“அதான் அவ சொன்னாளே?” என உரைத்தவளின் குரல் மெலிந்து ஒலித்தது.

 

“மோனி சொன்னது பொய்யினு, எனக்கும் தெரியும் உனக்கும் தெரியும். இப்ப, நீ சொல்லுறியா உண்மையை?”

 

அவள் தோழியைப் பார்த்தாள். தலை குனிந்து அமர்ந்து இருந்தாள் மௌனிகா.

 

“எதுவா இருந்தாலும், உங்கக்கிட்ட அவதான சொல்லணும்? நான் எப்படி அண்ணா?”

 

“அவ சொல்லுறதா இருந்தா, இந்நேரம் சொல்லி இருப்பா தான? உன்னோட ஃப்ரெண்டுக்கு என்கிட்ட சொல்லணும்ங்கிற எண்ணமே இல்ல. அதுனால தான், நான் உன்கிட்ட கேட்கிறேன். என்னை நீ அண்ணானு கூப்பிடுறது உண்மையா இருந்தா, சொல்லு!”

 

மௌனிகா முதல் நாளே ‘சரணிடம் விஷயத்தை மறைக்க எண்ணவில்லை. சொல்லாமல் மட்டுமே தவிர்க்கிறேன்!’ என உரைத்து இருந்ததால், இந்நொடியில் தான் அதைச் சொல்லிட முடிவெடுத்தாள்.

 

ரஞ்சனி நடந்த அனைத்தையும் காட்சி மாற்றாது வார்த்தை கூடாது குறையாது அப்படியே ஒப்புவிக்க, நிர்மலமாய் மௌனிகாவைப் பார்த்தான் அவன்.

 

எவ்வினாவும் கேட்டுக் கொள்ளவில்லை. முகத்தைப் பற்றி நிமிர்த்தி தன்னைக் காணச் செய்தான்.

 

கன்னத்தைத் தொட்டுப் பார்த்தவன், “வலிக்கிதா?”

 

பாவையின் விழிகள் லேசாய் கலங்கி இருந்தது. இல்லை என்பதாய் மறுத்துத் தலை அசைத்தாள்.

 

“ஒன் டைம் டாக்டரைப் பார்த்துடலாம், என்ன?”

 

அவள் வலிந்து புன்னகைக்க, “ஃபங்ஷனுக்கு முன்னாடி சரி ஆகிட்டா, ஓகே! இல்லேனா மேரேஜ் போட்டோல முகம் வீங்கி ஆக்வர்டா இருக்கும்ல.?”

 

ஆடவனை விசித்திரமாய் பார்த்தவள், “சரி.” எனச் சம்மதித்தாள்.

 

“ஓகே.. போய் ரெடி ஆகிட்டு வா. வெளிய போகணும்.”

 

“எங்க சரண்?”

 

“காரணம் இல்லாமலா, நான் ஊர்ல இருந்து கிளம்பி இவ்வளவு தூரம் டிராவல் பண்ணி வந்திருக்கேன். வந்த வேலையைச் செய்யணும்ல.?”

 

“என்ன வேலை?”

 

“கிளம்பு சொல்லுறேன்!” என மௌனியை அறைக்குள் அனுப்பியவன், “ரஞ்சனிமா, எனக்கு இன்னும் சிலது தெரிஞ்சிக்கணும்.” என்று அவள்புறம் திரும்பினான்.

 

“என்ன அண்ணா?”

 

“ஏன், அவ என்கிட்ட சொல்லல?”

 

“இதை நீங்க, மௌனிக்கிட்டயே கேட்டு இருக்கலாமே அண்ணா?”

 

“அவ முகத்தைப் பார்த்த இல்ல? ரொம்ப டவுன்னா ஃபீல் பண்ணுறா. நான் மேல மேல கொஸ்டின் கேட்டா, அது கூட கொஞ்சம் காயப்படுத்தும்!”

 

அவனது புரிதலான வார்த்தைகளில் மனம் லேசானது ரஞ்சனிக்கு. 

 

“இதுவரைக்கும் அவளுக்குச் சொல்லுறதுக்குனு யாரும் இல்ல. அந்த சைடு ஆச்சியும், இந்தப் பக்கம் படியோட அம்மா பேரண்ட்ஸும் வயசானவங்க. சோ, எதையும் அவங்கக்கிட்டப் பெருசா சொல்லிக்க மாட்டா. தனக்குத் தான் மட்டும்தான்னு பழகிட்டா. அதேதான் இப்பவும் நடந்திருக்கே தவிர, உங்கமேல நம்பிக்கை இல்லாம இல்ல அண்ணா.”

 

“நீங்க ரெண்டு பேரும் எப்ப இருந்து ஃப்ரெண்ட்ஸ்?”

 

“இந்த வீட்டுக்கு வந்த பின்னாடிதான். ஸ்ட்ரேஞ்சர்ஸா அறிமுகமாகி ஃப்ரெண்ட்ஸா மாறினோம். ஃபேமிலியை பத்தி ஒருத்தருக்கு ஒருத்தர் ஷேர் பண்ணிக்கும் போது தான், அவ வளர்ந்த விதத்தைப் பத்தித் தெரிஞ்சிக்கிட்டேன்.”

 

“ம்ம்..”

 

“அப்புறம் இன்னொரு விஷயம் அண்ணா. மேரேஜ் அரேஞ்ச்மெண்ட்ஸ் எல்லாம் நீங்களே பார்க்கிறதால, இதை வேற சொல்லி உங்க மேல பிரஷர் போட வேணாம்னு நினைச்சுதான் அமைதியா இருந்துட்டா.”

 

“மோனி சொன்னாளா, இதை?”

 

சின்னதாய்ச் சிரித்தவள், “எஸ்.. உங்க ஆளுதான் சொன்னா. நான் அதுல எதையும் ஒட்டவோ, கட் பண்ணவோ இல்ல.”

 

அவனும் சிரித்து, “சோ, அப்ப மொபைல்ல பேசுன உன்னோட அத்தைப் பையன் தான், மோனிக்காக சண்டைப் போட்டது.”

 

“ஆமா.”

 

“சரி, இப்ப மெயின் பார்ட்டுக்கு வருவோம்.”

 

“புரியாமல் பார்த்தவள், மெயின் பார்ட்டா?”

 

“அந்த சந்துரு எங்க இருக்கான்?”

 

ரஞ்சனி திடுக்கிட்டு, “அண்ணா?”

 

தப்பைத் தன்மேல வச்சிக்கிட்டு, ஹெல்ப் பண்ண உன்னோட ரிலேஷன் மேல கம்பிளைண்ட் கொடுத்திருக்கான். அதை அப்படியே விடச் சொல்லுறியா? எல்லாம் சரியாகுற வரை, மோனியால நார்மலா இருக்க முடியாது. மேரேஜ் டைம்ல, அவ பிரஷர்ல இருக்கிறதை நான் விரும்பல. 

 

அதோட என்னோட பியான்ஸிக்கு ஹெல்ப் பண்ண உன்னோட அத்தைப் பையனுக்கு நானும் ஏதாவது செய்யணும்ல? அவளை அக்கானு வேற கூப்பிடுறான். அப்ப, எனக்கு மச்சினன் ஆச்சே? மாமனா, அவன் மேல கொடுத்திருக்க கம்பிளைண்டுக்கு ஏதாவது வழி பண்ணணும் இல்ல?”

 

முகம் மலர்ந்த ரஞ்சனி, “உங்களால முடியுமா?”

 

“இந்த விஷயம் என்னோட சக்திக்கு உட்பட்டது தான். சோ, நிச்சயமா முடியும். இப்ப நாம பேசுன எதுவும் மோனிக்குத் தெரிய வேணாம், ஓகேவா?”

 

“ம்ம்.. அண்ணா, ஒரு விஷயம் சொல்லுங்க. இந்த விஷயம் தெரிஞ்சுதான் சென்னைக்கு கிளம்பி வந்தீங்களா நீங்க?”

 

“நான் வேற வேலையா வந்தேன். அதை, ரெண்டு நாளைக்கு முன்னாடியே பிளான் பண்ணி வந்திருக்கணும்னு தோணுது. நான் இங்க இருந்திருந்தா, இந்த அளவுக்கு அந்த சந்துருவை போக விட்டிருக்க மாட்டேன்!”

 

புன்னகைத்துத் தலை அசைத்த ரஞ்சனி, மூவருக்குமாக தேநீர் கலக்கச் சென்றாள்.

 

இவர்கள் இருவரும் அருந்தி முடிக்க, தயாராகி வந்தாள் மௌனிகா.

 

அவளைப் பார்த்து புன்னகைத்த சரண், “இப்ப ஓகேவா, நீ?”

 

“ம்ம்.. பெட்டர்.”

 

“வித் யுவர் பர்மிஷன், நான் உன்னோட ரூமை யூஸ் பண்ணிக்கலாமா? நைட்ல டிராவல் பண்ணது, சர்ட் ஃபுல்லா வியர்வை வேற. குளிக்கணும் ப்ளீஸ்..”

 

“ஸுயர்.. வாங்க..” என தனது அறைக்கு அழைத்துச் சென்றவள், “டவல் இருக்கா சரண்?”

 

“தேவையான எல்லாத்தையும் நான் பக்காவா பேக் பண்ணிக் கொண்டு வந்துட்டேன். நீ போய் டீயைக் குடி. ரெடியாகி வந்துடுறேன்!” என அவன் குளியல் அறைக்குள் செல்ல, விரைந்து கூடத்திற்கு ஓடி வந்தாள் மௌனி.

 

ரஞ்சனியின் கையைப் பற்றியவள், “உன்கிட்ட எதுவும் கேட்டாரா?”

 

“என்ன கேட்கப் போறாரு?”

 

“நடந்த விஷயத்தைப் பத்திதான்.”

 

“நீ இருக்கும் போதே, அண்ணன்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேனே?”

 

“ஆமா, அவர் எப்ப இருந்து உனக்கு அண்ணன் ஆனாரு?”

 

“இப்பதான், ஒரு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி இருந்து. யூ நோ, அண்ணா இஸ் ஸுவீட் பர்சன்.”

 

“யாரு சரணா? கோபம் வந்தா, டோன் எப்படி மாறும்னு தெரியுமா? முதல்ல உன்கிட்ட பேசுனதுக்கும், என்ன நடந்துச்சுனு விசாரிச்சதுக்கும் இடையில குரல் மாறுனதை நீ கவனிக்கலயா?”

 

ரஞ்சனியும் அதைக் கவனித்து இருந்ததால், “அதுல என்ன இருக்கு? நாம நார்மலா இருக்கும் போது ஒரு மாதிரியும், அதுவே கோபம் வந்தா வேற மாதிரியும் பேசுறது இல்லையா? எல்லாருமே மனுசங்க தான் படி! சரி, நான் போய் ரெடி ஆகுறேன்!” என்று தோழியின் தொடர் கேள்விக் கணைகளில் இருந்து தப்பிப்பதற்காக, உடனடியாய் அங்கிருந்து நகர்ந்தாள்.

 

“படி, ப்ளாஸ்க்ல உனக்கு டீ வச்சிருந்தேன். ஊத்திக் குடிச்சுக்கோ!” என உள்ளிருந்து அவள் குரல் கொடுக்க, சரணின் திடீர் வருகை எதற்காகவென்று யோசித்தபடியே தேநீரை அருந்தி முடித்தாள் பாவை.

 

சிறிது நேரத்தில் மற்ற இருவரும் தயாராகி வர, “அண்ணா, மௌனியும் வந்தாச்சு. இப்பவாது சொல்லுங்களேன் என்ன சர்ப்ரைஸ்னு?” என்று ரஞ்சனி வினவிட, தனது பையில் இருந்து அழைப்பிதலை எடுத்தான்.

 

“இதுதான் சர்ப்ரைஸா?” என அவள் வியப்புடன் வினவ, “ம்ம்.. மோனிக்கிட்ட எத்தனை இன்விடேஷன் வேணும்னு கேட்டேன். அஞ்சு போதும். ரஞ்சனியையும் அவளோட அத்தை ஃபேமிலியையும் தவிர வேற யாரும் இல்லனு சொல்லிட்டா. சோ, அந்த முக்கியமான ஆளுங்களை அவக்கூட சேர்ந்து எங்க மேரேஜுக்கு இன்வைட் பண்ணலாம்னு வந்தேன்!” என்றவன் வருங்கால துணைவியைக் கண்களால் அழைத்தான்.

 

அகத்தோடு முகமும் மலர்ந்திட, ஆடவனின் அருகே வந்து நின்றாள்.

 

“நீ, இப்ப மோனிக்கு ஃப்ரெண்ட் மட்டும் இல்ல, எனக்குத் தங்கச்சியும் கூட. சோ, நாலு நாளைக்கு முன்னாடியே வந்திருந்து கல்யாண வேலையை கூட இருந்து கவனிச்சு, நல்ல முறையில நடத்திக் கொடுக்கணும் சரியா.? இந்தா இன்விடேஷன்!” எனத் தாம்பூலம் மற்றும் இனிப்பு பலகார பெட்டியை வைத்து, மௌனியுடன் சேர்ந்து தங்களின் திருமணத்திற்கு அழைப்பு விடுக்க, முகம் கொள்ளா புன்னகையுடன் வாங்கிக் கொண்டாள் ரஞ்சனி.

 

“என்ன அண்ணா? ஸுவீட் பாக்ஸை மட்டும் கொடுத்து இந்தத் தங்கச்சியை ஏமாத்திடலாம்னு பார்க்குறீங்களா?”

 

“திடீர்னு கிளம்புனதால, நான் எந்த பிளானும் பண்ணல. அதுக்குத்தான் உன்னை நாலு நாளைக்கு முன்னாடியே வரச் சொல்லுறேன். வீட்டுக்கு வா, உனக்கு என்ன வேணும்னு மட்டும் சொல்லு. செய்யிறதுக்கு என்னோட சேர்த்து தம்பி தங்கச்சியும் இருக்காங்க.”

 

“சும்மா சொன்னேன். எனக்கு இதுவே போதும் அண்ணா. ரொம்ப ஹேப்பியா இருக்கு.”

 

“நான் சும்மா எல்லாம் சொல்லல. சீரியஸா தான் சொன்னேன்.”

 

அவள் தலை அசைத்துச் சிரித்திட, “ரஞ்சனிமா ஆஃபிஸுக்கு டைம் ஆச்சா உனக்கு?”

 

“ம்ம்.. போகணும் அண்ணா.”

 

“ஒரு டூ ஹவர்ஸ் பர்மிஷன் போட முடியுமா? உன்னோட அத்தை வீட்டுக்கும் போய் இன்விடேஷன் கொடுத்துடலாம்.”

 

“அது..” என அவள் தயங்கிட, ,எனக்குப் புரியிது. மோனிக்காக ஹெல்ப் பண்ணி இருக்காங்க. நேர்ல பார்த்து தேங்க்ஸ் சொல்லுறது தான முறை.?”

 

“ஆனா, அந்த எருமை இல்லையே அண்ணா. வேலைக்காக வெளிய போயிட்டான்.”

 

“அதான் உன்னோட அத்தையும் அண்ணியும் இருக்காங்க இல்ல? நடந்த பிரச்சனையால, அவங்க பிள்ளைய நினைச்சு கவலை இருக்கும். நான் அவங்கக்கிட்டப் பேசுறது தான் சரியா இருக்கும்.”

 

அவள் தயங்க, மௌனிகாவை நோக்கினான் சரண்.

 

“நான் வொர்க் ஃப்ரம் ஹோம் போட்டுக்கிறேன். நாம போயிட்டு வரலாம்!” என அவள் உரைத்திட, புன்னகைத்தான்.

 

ரஞ்சனியும் சம்மதமாய் தலை அசைக்க, மூவரும் கணியனின் தமக்கை யாமினியின் இல்லத்திற்குக் கிளம்பினர்.

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 43

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
49
+1
6
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்