
காதல் -25
அங்கிருந்த ஒருவரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை… அத்தனை உணர்ச்சிகளையும் வெளியே காட்ட முடியாமல் எங்கோ பார்த்த படி அமர்ந்திருந்தாள் சாயாலி.. என்ன பேசியும் அவளிடம் இருந்து சிறு அசைவு கூட தென் படவில்லை. கல் போல அமர்ந்திருப்பவளை என்னவென்று சொல்வது.
அதை விட மறவன் அவள் மேல் ஆத்திரத்தில் இருந்தான்.. எவ்வளவு தைரியம் இருந்தா என்ன அடிச்சு இருப்பா… சிந்தாமணி இல்லையென்றால் இந்நேரம் அவள் கதி ?? மொத்த கோபத்தையும் அடக்கி கொண்டு அமர்ந்திருந்தான்..
இது சரிபட்டு வராது என்று மூர்த்தி அலைபேசியின் மூலம் தேனுவிற்கு அழைத்து விட்டார்..
” தேனு மா.. கொஞ்சம் வீடு வரைக்கும் வர முடியுமா .. நான் சொல்லுற அட்ரஸ்க்கு வாங்க” என தயக்கமாக மலை உச்சியில் இருக்கும் அவரது வீட்டின் முகவரியை கொடுத்து வர கூறினார்.
சாயாலி அமர்ந்திருக்கும் நிலையை பார்க்க மறவனுக்கே ஏதோ போல் குற்ற உணர்வாக தான் இருந்தது. இரவு என்ன நடந்தது என்பது சரியாக தெரியாமல் அவள் மீது அல்லவா குற்றம் சுமத்தி உள்ளான்.. அதுவும் சிறிது சிறிதாக வந்த நிழல் படத்தை வைத்து எப்படி அவளை குறை கூறுவான்.. வார்த்தைகளை விட்ட பின்பு தற்போது சிந்தித்து என்ன பயன்..
ஆனால் சிந்தாமணி மட்டும் அவளை விட்டு சிறிதும் நகரவில்லை… துரோகம் இழைத்த அவளிடம் என்ன பந்தம் ?? என்று ஆதங்கமாகவும் இருந்தது அவனுக்கு..
” நீ பண்ணது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா ? இப்படி கல்லு மாதிரி உட்கார்ந்து இருந்தா எல்லாம் சரியா ஆகிடுமா டா … நீ ஆசை பட்ட ஒரே காரணத்துக்காக தான் இந்த பொண்ணை உனக்கு கல்யாணம் பண்ணி வச்சேன் .. நீ இப்படி பேசி அவளை உயிரோட கொல்ல போறேன்னு தெரிஞ்சு இருந்தா அப்போவே உனக்கு கட்டி வைக்காம , இந்த வாய் இல்லா பிள்ளையை உன் கிட்ட இருந்து காப்பாத்தி இருப்பேன் டா ” என வார்த்தைகளை வீசினார் மூர்த்தி…
அவர் பேசியதை விட சிந்தாமணி அவனை வெட்டும் பார்வை பார்ப்பதை தான் அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை ..
” அம்மா நான் பண்ணது தப்பா மா ” என சிறு குழந்தை போல கேட்கும் அவனை… வெறி கொண்டு முறைத்தார் சிந்தாமணி.
” இங்க பாருங்க… இவன் என் கிட்ட பேச கூடாது.. இந்த பொண்ணோட அம்மா வரவும் இவளை நம்ம பத்திரமா அனுப்பி வச்சிடுவோம், அதுக்கு அப்பறம் லீகல்லா விவாகரத்து வாங்கி இவன் கிட்ட இருந்து இந்த பொண்ணுக்கு விடுதலை வாங்கி கொடுக்கனும் ” என முதல் முறையாக பல வருடம் கழித்து அவன் தாய் பேசியதை நினைத்து பூரித்து போனாலும், சாயாலியுடன் விவாகரத்து என்றதும் முகம் கருத்து போனது மறவனுக்கு…
” அம்மா… ” என உணர்ச்சி பெருக்கில் அவன் அழைக்க…
” நிறுத்து , உன் கிட்ட பேச எனக்கு கொஞ்சம் கூட இஷ்டம் இல்ல … ” முகத்தில் அடித்தார் போல வந்த பதிலில் அமைதியாகி போனான் மறவன்..
அப்போது அவனுடைய நெருங்கிய நண்பன் குமரன் அவர்களது வீட்டிற்கு வர, மறவன் யோசனையாக அவனை வரவேற்றான்…
” அம்மா இப்போ உங்களுக்கு உடம்பு பரவாயில்லையா” என நலம் விசாரிக்க…
” எனக்கு என்ன பா… நான் நல்லா தான் இருக்கேன்.. அதான் கண் முழிச்ச உடனே எல்லாரும் என்ன ரொம்ப சந்தோஷ படுத்திட்டிங்கல ” என்றதும் குமரன் அடுத்த நொடி தன் நண்பனை தான் பார்த்தான்.. அதன் பின்பே ஏதோ சரி இல்லை என்பதை உணர்ந்தவன்…
” சரி மா.. நீங்க உடம்பை நல்லா கவனிங்க.. அடிக்கடி செக்அப் போங்க ” என பட்டும் படாமல் கூறி விட்டு, “மறவா உன்கிட்ட கொஞ்சம் பேசனும் ” என அவனை தனியாக அழைத்து கொண்டு தோட்டத்திற்கு சென்றான்.
” என்ன டா நடக்குது வீட்ல… ”
” ஒரு சின்ன பிரச்சனை டா எனக்கும் சாயாலிக்கும்”
” பெருசா ஆக விடாம பார்த்துக்கோ டா … அவளை பத்தி பேச தான் இப்போ வந்தேன் ”
” எதுவும் முக்கியமான விஷயமா டா ”
” ஆமா… சாயாலிக்கு பேச முடியும் டா ” என பட்டென்று போட்டு உடைத்தான் குமரன்.
” வாட் …… ” என மறவன் அதிர்ச்சியில் கண்களை விரிக்க….
” ஆமா டா… சாயாலிக்கு இப்ப டெஸ்ட் ரிசல்ட் வந்துருச்சு… சின்ன நரம்பு பிரச்சனை கூட இல்ல.. பேசுறதுக்கான எல்லா தகுதியும் அந்த பொண்ணு கிட்ட இருக்கு டா ”
” அப்போ ஏன் பேசல ”
” தெரியலை… பேசாம இருக்கிறதே நல்லதுன்னு நினைச்சுட்டாங்க போல ”
” உலராத டா ”
” பின்ன என்ன சொல்ல சொல்லுற, நீ தான் இவ்வளவு நாள் அவங்க கூட இருந்திருக்க, கூட இருக்குற பொண்ணுக்கு பேச முடியுமா முடியாதான்னு கூட உன்னால கண்டு பிடிக்க முடியலை.. ” எரிந்து விழுந்த நண்பனை இயலாமையுடன் பார்த்து வைத்தான் மறவன்.
” நான் இன்னும் என்னலாம் ஏமாந்து இருக்கேன்னு தெரியலை டா ” விரக்தியாக வெளி வந்த குரலில் , குமரன் சற்று இறங்கி வந்தான் ..
” சரி விடு.. இது என்னோட கணிப்பு மட்டும் தான் … நீ அவங்க கிட்ட பேசி பாரு… அப்படி இல்லைனா உடனே ஹாஸ்பிடல் கூட்டிட்டு வா … லேட் பண்ணிடாத… ”
” ஏன் டா வேற எதுவும் பெரிய பிரச்சனையா அவளுக்கு… ”
” எனக்கு தெரிஞ்சு இருக்க வாய்ப்பில்லை… ஆனாலும் செக் பண்ணி பார்க்குறது நல்லது… எதுவும் இருக்காதுன்னு நம்புவோம் ” என நண்பனுக்கு ஆறுதல் கூறி விட்டு விடைபெற்றான் குமரன்..
பலத்த சிந்தனையுடன் வீட்டிற்குள் வந்தான் மறவன்.. அமைதியாக அமர்ந்திருக்கும் சாயாலியை பார்க்கும் பொழுது அவனுக்கு அப்படி ஒன்றும் பெரிதாக தெரியவில்லை.. ‘ நம்ம இவ்வளவு தூரம் பேசியும் அவ வாயை திறக்காம இருக்கா, ஆனால் குமரன் இவளுக்கு பேச்சு வந்ததா சொல்லுறான்.. ஒருவேளை இவளுக்கு உண்மையாவே பேச்சு வரலையோ, வேற ஏதோ பெரிய பிரச்சனை இருக்கோ ‘ என மனதில் நினைத்து கொண்டே வந்து அமைதியாக அமர்ந்து விட்டான்…
மனம் தவியாக தவித்தது… இன்னும் சிறிது நேரத்தில் தேனு வந்து அவனது மனைவியை அழைத்து செல்ல போகிறார்.. தன்னவள் இனி தனக்கில்லை என்பதே பெரிய வேதனையாக இருந்தது.. இப்போதும் அவளை தக்க வைத்துக் கொள்ள முடியும்.. ஆனால் அவனது எண்ணத்திற்கு குறுக்கே இருப்பது சிந்தாமணி ஆயிற்றே.. அதனால் தான் இத்தனை பொறுமையும்… தற்போது தான் குணம் அடைந்து வந்திருக்கிறார் .. மேற்கொண்டு அவரை எதிர்த்து ஏதேனும் செய்ய எண்ணி அவருக்கு எதுவும் நேர்ந்து விடுமோ என்று அவனது முடிவில் இருந்து பின் வாங்கினான்.
நடப்பது நடக்கட்டும்… உண்மைகள் தெரிய வரும் பொழுது சிந்தாமணி தன்னை புரிந்து கொள்வார் என தீவிரமாக நம்பினான் மறவன்.
ஆனால் உண்மை அதுவல்லவே… முழு உண்மையும் தெரிய வந்தால் மறவனது நிலைமை தான் என்ன ஆகும்…?
அதே நேரம் தேனு வீட்டிற்குள் பதட்டத்துடன் நுழைந்தார்.. யாருக்கு என்ன ஆனதோ என்ற பயம் தான்… அவர் கண் முன் அனைவரும் நிற்க.. நிம்மதி பெருமூச்சு விட்டவர், ஓரத்தில் அமர்ந்திருக்கும் சிந்தாமணியை பார்த்து அதிர்ந்து போனார்.
” ஐயா… அம்மா எப்படி… ??? அப்போ அவங்களுக்கு எதுவும் இல்லையா… எல்லாம் சரி ஆகிடுச்சா,.. ” என ஆச்சரியத்தில் கேட்டார்.
” ஏன் தேனு பார்த்தா எப்படி இருக்கு, நான் நல்லா குணமாகி தான் உன் முன்னாடி இருக்கேன் ” என்றதும்… ” ரொம்ப சந்தோஷம் மா… இதுக்கு தான் என்ன வர சொன்னீங்களா… நான் கூட பயந்துட்டேன்.. நல்ல விஷயம் தான் ” என தேனு பேசினாலும் , தன் மகள் எங்கோ வெறித்த வண்ணம் அமர்ந்திருப்பதை பார்க்க தவறவில்லை அவர்.
” உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும் தேனு மா” என மூர்த்தியே ஆரம்பித்தார்..
” சொல்லுங்க ஐயா.. ”
” அது…. எப்படி சொல்லறதுன்னு தெரியலை… ” என தயங்கியவரை தடுத்த சிந்தாமணி… ” இதுல என்ன தயக்கம் இருக்கு, சாயாலிக்காக நம்ம தேனு கிட்ட பேசி தான் ஆகனும், இனிமேலும் ஒரு பொண்ண கஷ்ட படுத்த நான் விட மாட்டேன்.. அதுனால முடிவை சொல்லிடலாம்.. ” என மகனை ஒரு முறை பார்த்தவர்…
” தேனு மா நான் பண்ணுறது தப்பு தான்… அது எனக்கே தெரியும் ஆனால் வேற வழி இல்ல… எனக்கு சாயாலி நல்லா இருக்கனும்… அதுக்காக தான் இவ்வளவு தூரம் பேசுறேன்… நீங்க உங்க பொண்ணை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுங்க ” என நேருக்கு நேராக உடைத்து விட.. தேனு அதிர்ந்து போனார்.
” ஏன் என்ன பிரச்சனை மா… சாயா எதுவும் கோவப் பட்டு பேசிட்டாளா… நான் கேட்கிறேன் .. அவ சின்ன பொண்ணு… எனக்காக மன்னிச்சுடுங்க” என பதறி போனார்…
” நானும் சாயாலி நல்ல படியா இருக்கனும்னு தான் இவ்வளவு தூரம் பேசுறேன்… அவ இங்க இருந்தா சந்தோஷமா இருக்க மாட்டா.. அவ எங்க இருந்தாலும் நிம்மதியா இருக்கனும்… இப்ப கூட்டிட்டு போங்க… நான் வக்கில் கிட்ட பேசி இவங்க ரெண்டு பேருக்கும் விவாகரத்து ரெடி பண்ணுறேன் ” என்றதும் தேனுவிற்கு மயக்கம் வராத குறை தான்…
அதற்கு மேலும் அங்கு அமர்ந்திருக்க மனம் வராமல்… அமைதியாக எழுந்து வந்து தேனு கைகளை பிடித்து கொண்ட சாயாலி.. ‘ வீட்டுக்கு போகலாம் மா ‘ என்பதை போல சைகை காட்ட .. அதற்கு மேல் பேச விரும்பாமல் தேனு அமைதியாக தன் மகளை அழைத்து கொண்டு வெளியேறினார்..
மகளை வீட்டை விட்டு அனுப்பி வைத்தவர்களிடம் ஒரு வார்த்தை கூட காரணத்தை கேட்க தோணவில்லை அவருக்கு… சாயாலியின் முகத்தில் இருந்த தீவிரம் அவரை கட்டி போட்டு விட… வீட்டிற்கு சென்று மகளிடம் பேசிக் கொள்ளலாம் என மனம் முழுக்க பாரத்துடன் இருவரும் அந்த வீட்டை விட்டு வெளியேறினர்.
மறவன் உணவற்று அமர்ந்திருக்க .. சாயாலி சென்றதும் அவன் பக்கம் திரும்பினார் சிந்தாமணி…
” என்ன மறவா இப்போ சந்தோஷமா… அவளை வீட்டை விட்டு துரத்திட்டேன் .. இனிமே உனக்கு பிரச்சனை இல்ல தானே, உனக்கு அம்மா நானும் திரும்ப வந்திட்டேன்… ” என ஒரு மாதிரி குரலில் அவர் கேட்க…
காதலித்து திருமணம் செய்த சரிபாதியும், பாதியில் போக… மன அமைதி இல்லாமல் தலையை பிடித்து கொண்டு அமர்ந்திருந்தான் மறவன்… அவளை அழைத்து வந்து கொடுமை படுத்தி அவளது தப்பை உணர வைக்க வேண்டும் என்று தான் நினைத்தானே தவிர , அவளை வாழ்க்கையை விட்டு அனுப்ப சிறிதும் நினைக்கவில்லை…
இத்தனை காதல் இருந்தும்.. வெளியே தன் தாயிடம் .. ” அவ என்னைக்கா இருந்தாலும், வெளிய போக வேண்டிய தான் மா… கொலைகாரி ” என்றதும் அடுத்த நிமிடம் … சிந்தாமணி அவனை அறைந்து இருந்தார்.
” மா……. ” என அவன் கன்னத்தை பிடித்து கொண்டு அவரை பார்க்க…
” யாரு டா கொலைகாரி… யாரு கொலைகாரி… அன்னைக்கு மட்டும் அவ கொலை பண்ணலேனா நான் இன்னைக்கு உன் முன்னாடி இருந்திருக்க முடியாது டா… எனக்காக தான் டா அவ இந்த காரியத்தை செஞ்சா ” என அப்படியே தரையில் மடிந்து அமர்ந்து அழ தொடங்கினார் சிந்தாமணி…
சனா💖

