
திமிர் 24
“ஓய்!”
சாப்பிட்டுக் கொண்டிருந்தவள், அவனை ஒரு முறை பார்த்துவிட்டுச் சிலுப்பிக் கொள்ள, “ஐயோடா!” என அவள் காலைச் சீண்டினான்.
“ப்ச்!”
தன் கால் இரண்டையும் அவள் கால்களைச் சுற்றிச் சிறைப் பிடித்தவன் புருவம் உயர்த்த, எட்டி உதைத்தாள்.
மெல்லியதாகச் சிரித்தவன், “என்னடி பிரச்சினை உனக்கு? நானும் பார்த்துட்டே இருக்கேன், ரொம்ப சீன் போடுற. என் மேல பயம் விட்டுப் போச்சா?” கேட்டதும், “ஹூ ஆர் யூ?” ஒரே போடாகப் போட்டாள்.
“மேடம்…”
“உங்களை டைவர்ஸ் பண்ணிப் பதினாறு மணி நேரம் ஆச்சு.”
“ஓஹோ!”
“உங்களுக்கு ஒரு குட் நியூஸ்.”
“வாட் மேடம்?”
தன் கைக்கடிகாரத்தில் மணியைப் பார்த்தவள், “நாலு மணிக்கு எனக்கு ட்ரெயின் இருக்கு. உங்ககிட்ட இருந்து விடுதலை வாங்குன கையோட, என் தாயகத்துக்குக் கிளம்புறேன். இனி உங்களுக்கும், இந்தத் திருச்சிக்கும், எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.” என்றதும் மூன்றாம் கண்ணைத் திறந்து முறைத்தான் அகம்பன்.
“கமல்!”
“அண்ணி மேடம்…”
“நீயும் இங்க இருந்து கிளம்பிடு. சில குடிகாரப் பசங்க உன்னைக் கெடுத்துடுவாங்க.”
“ஏய்!”
“இவங்க மிரட்டலுக்கு எல்லாம் பயப்பட மாட்டேன்னு சொல்லு கமல்.”
“டைரக்ட்டா கேட்டுருச்சு அண்ணி மேடம்.”
“ஓகே கமல், எனக்கு டைம் ஆகுது. நான் கிளம்பனும்.”
“இப்ப மணி பத்து தான அண்ணி மேடம் ஆகுது.”
அவனை வீம்புக்காக முறைத்தவள், “என் திங்ஸ் எல்லாம் எடுத்து வைக்க வேண்டாமா? வெட்டியாய் பேசிட்டு இருக்காமல் போய் ரிசைன் பண்ற வேலையப் பாரு.” என்றவள் தன்னை முறைத்துக் கொண்டிருப்பவனைக் கண்டு கழுத்தை வளைத்து விட்டுச் சென்றாள்.
பாதி சாப்பாட்டோடு கை கழுவியவன், அவளுக்குப் பின்னால் பூனை நடை போட, தெரியாதது போல் மினிக்கிக் கொண்டு நடந்தாள். அவள் கொனட்டலை ரசித்துக்கொண்டு பின் தொடர்ந்தவனைச் சிறிதும் மதிக்காது அறைக்குச் சென்றவள், கதவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டாள். அவள் காத்திருந்து ஆகிவிட்டது நிமிடங்கள். முகத்தைச் சுருக்கி யோசித்தவள் லேசாகக் கதவைத் திறந்து பார்த்தாள். அவளை நேசித்தவன் அங்கு இல்லை. சுருங்கிய முகம் இன்னும் சுருங்கி வெடுக்கென்று கதவைத் திறக்க, கைகளைக் கட்டிக்கொண்டு குறும்புப் புன்னகையோடு சுவரில் சாய்ந்தபடி நின்றிருந்தான் அகம்பன் திவஜ்.
கண்மூடித் தன் திருட்டுத்தனத்தைத் தானே காட்டிக் கொண்டதால் தலையில் அடித்துக் கொண்டவளை, அலேக்காகத் தூக்கிக்கொண்டு உள்ளே நுழைந்தவன் வலது காலால் எட்டி உதைத்துக் கதவைச் சாற்றினான்.
“என்னடி சொல்லிட்டு வந்த?”
“என்ன சொன்னேன்?”
“நான் குடிகாரப் பையனா?”
“குடிக்கிறவனை அப்படித்தான் சொல்லுவாங்க!”
“இந்த வாய்க்கு என் மேல இருந்த பயம் விட்டுப் போச்சுன்னு நினைக்கிறேன். விட்ட பயத்தைத் தொடர வைக்கல, நான் அகம்பன் திவஜ் இல்லடி.”
“ப்ச்!” துள்ளிக் குதித்து இறங்கியவள், “நான் கோவமா இருக்கேன்.” எனத் திரும்பி நிற்க, “இருந்துட்டுப் போ…” கட்டி அணைத்தான்.
தோளை அசைத்துத் தள்ளி விட்டவள், “நீ என்ன அடி போட்டாலும் ஒன்னும் நடக்காது. ட்ரெயினுக்கு நேரமாகுது, நீ கிளம்பு.” என்றவளைத் தன் பக்கம் திருப்பினான்.
தன் முகத்தைப் பார்க்கக் கூடாது எனப் பரிதவிக்கும், அவள் நிலையை எண்ணி உதட்டுக்குள் சிரிப்பை மறைத்தவன், “அதை நேராய் பார்த்துச் சொல்லுங்க மேடம்.” கண்களைச் சுருக்கினான்.
“அதுக்கெல்லாம் நேரம் இல்லை.”
“ரொமான்ஸ் பண்ண நேரம் இருக்கா?”
“அதுக்குத்தான் சார் முதல்ல இல்ல.”
“சரிங்க மேடம், நீங்க கிளம்பிகிட்டே இருங்க. நான் என் வேலையை முடிச்சுக்கிட்டே இருக்கேன்.”
“ஹான்!”
இடது காதோரம் மீசையை உரசி இதழை விரித்துக் கூறினான். “எவ்ளோ நாள் தான் சாஃப்டா ரொமான்ஸ் பண்றது. இன்னைக்கு உன்ன…” என்றதும் அவன் உதட்டில் அடிக்க,
“நேத்து ராத்திரி ஏன்டி என்னை உள்ள விடல.” கேட்டுக் காதைக் கடித்தான்.
“நீ நீயா இருந்த மாதிரிப் பேசுற.”
“உன்னைக் கொஞ்ச எந்தப் போதையும் தேவையில்லடி… என் அழகு மதுணி.”
“நாத்தம் குடலைப் புடுங்குச்சு.”
உதடு குவித்து ஊதியவன், “இப்ப…” என்றிட, காதோரம் விளையாடிய முடியை ஒதுக்கிவிட்டு, “அதுக்கு நேத்து ராத்திரியே பரவால்ல.” என்றாள்.
அவளை அப்படியே தள்ளிக் கொண்டு, சுவரை மறைத்திருந்த கண்ணாடி முன்பு நிறுத்தியவன், “நேத்து தான் மிஸ் பண்ணிட்டியே.” என இடைக்குள் விரல்களை மேய விட்டான்.
வயிற்றைச் சுருக்கிக் கொண்டவள், “அது உனக்குத் தண்டனை!” என அவன் கை மீது கை வைத்தாள்.
“குட்!” என்று விட்டு அந்தக் கையைச் சுழற்றி முதுகுக்குப் பின்னால் எடுத்து வந்தவன், “நான் பண்ண தப்புக்கு பனிஷ்மென்ட் கொடுத்துட்ட. என்னை ராத்திரி முழுக்கத் தனியா தூங்க விட்டதுக்கு உனக்கு என்ன பனிஷ்மென்ட் தரலாம்.” கேட்டுக்கொண்டு உதட்டைக் கழுத்தோரம் கொண்டு சென்று மயிலிறகாய் வருடினான்.
“நா..நான்…”
“நீ…”
“வி..விடு!”
“அப்படி எல்லாம் மன்னிச்சு விட முடியாது.” என்று விட்டுக் காதின் பின்புறம் சின்னச் சத்தத்தோடு முத்தமிட, கழுத்து மரத்துப்போனது மதுணிகாவிற்கு.
பேச்சிழந்து நின்றவள் கூந்தலைக் கலைத்தான் நுனி மூக்கால். இடுப்பு வரை கட்டையாக வளர்ந்திருந்த கூந்தல், அவன் மூச்சு அச்சுறுத்தலுக்குப் பயந்து திணற, தன்னவளைத் திணற வைத்தான் மொத்தத்தையும் ஒதுக்கி முத்தமிட்டு. பாதி முத்தம் அவன் அணிவித்த செயினில் புதைந்து போனது. பின்னங்கழுத்தோரம் குடியிருந்த சின்ன முடி, தன்னைத் தாக்கிய மீசையை முறைக்க, சிறுத்துளி பயமில்லாமல் மீண்டும் அவன் மீசை அங்கேயே முத்தமிட்டது.
முதல் முத்தத்திற்குச் சிணுங்கிய முடிகள், இரண்டாம் முத்தத்திற்கு அடங்கி வளைந்து கொடுக்க, அவள் உடல் மெல்லக் குறுக ஆரம்பித்தது. இடைக்குள் இருந்த விரல் நடைபழகி, தனக்குத் தேவையான இடங்களைப் பரிசோதித்துக் கொண்டது. நாணம் சூழ, முகம் சிவந்து தனக்குள் அடங்கத் துடிக்கும் தன்னவளைக் கண்ணாடியின் உதவியால் ரசித்துக் கொண்டு, “பனிஷ்மென்டுக்கு ரெடி?” கிசுகிசுத்தான்.
அவனுக்குப் பதில் சொல்லும் நிலையில் இல்லாதவள், திரும்பி நெஞ்சில் முகம் புதைக்க, அவனின் கர்வமான சிரிப்பைக் காட்டிக் கொடுத்தது கண்ணாடி. தன் விரலும் முத்தமும் மனம் கவர்ந்தவளை அடிமையாக்கியதை எண்ணி மெச்சிக் கொண்டவன் அள்ளிக் கொண்டான் கையோடு.
அவளால், காலி செய்யப்பட்ட பார் மேடையில் அமர வைத்தான். கால்கள் இரண்டையும் தன் இடுப்பைச் சுற்ற வைத்துக் கொண்டான். தோள்களைச் சுற்றி இருந்த இரு கைகளையும் விலக்கியவன் விழிகளால் காதல் அம்பை எய்திட, இன்னும் சில நொடிகளில் மனமும், உடலும் அவன் மந்திரத்திற்குக் கட்டுப்பட்டுக் கூச்சமின்றிக் கிடக்கப் போவதை உணர்ந்து கொண்டாள்.
மதுணிகாவின் கைகள் பின் சென்று பலமாகப் பிடித்துக் கொள்ள, “ஒவ்வொரு ராத்திரியும், நீ என் கூடத்தான் இருக்கணும். சில நாள் காமமும், பல நாள் காதலும் என்னைத் தூங்க வைக்கணும். நேத்து மாதிரி என்னைக்காவது தள்ளி வச்சா இதுதான் நடக்கும்.” என்றவன் அவள் கண்ணிமைக்கும் நேரத்தில் இதழை வேகமாகச் சிறை எடுத்தான்.
கோபமாக இருக்கிறானா! என்று மிரண்டவள், விழிமூடி ஆழ்ந்து முத்தமிடும் அவன் பாவனையில் குழம்பினாள். முன்னுக்குப் பின் முரணான முத்தத்தை, நொடிக்கு நொடி வேகம் எடுத்துக் காண்பித்தவன், மூச்சு விட முடியாமல் முதுகைத் தாக்கும் அவள் செயலில் கைவிட்டான். சின்ன இதழ் அந்தக் காட்டுமிராண்டியின் இதழுக்குச் சமமாக வீங்கிப் பெருத்த வலியைக் கொடுத்தது. பலமான மூச்சை இழுத்து விட்டு, உதட்டில் கை வைத்தவளுக்கு எரிச்சல் கட்டுப்படவில்லை. கடித்து வைத்திருக்கிறான் என்பதே அப்போதுதான் புலப்பட்டது. போட்டு, மாங்கு மாங்கு என்று அடிக்க ஆரம்பித்தவளை, அள்ளி மெத்தையில் தள்ளியவன் இறங்கப் பார்க்கும் கால்களை இறுக்கிப் பிடித்தான்.
தன் எதிர்ப்பை நிறுத்தி, இறுக்கமாகக் கண்களை மூடினாள். பாதத்தில் பதிந்த முத்தத்தால். அவள் நிலை கண்டவன், தொடர்ந்து அங்கேயே முத்தத்தைக் கொடுத்துக் கொண்டிருக்க, எடுக்க முயற்சித்தாள். நகர்ந்த கால்களை இழுத்துத் தன் உதட்டோடு பொருத்திக் கொண்டவன் கூழாங்கல் பாதங்களை வருடினான். பெருவிரலுக்கு முன்னேறிய முத்தம், ஒவ்வொரு விரலையும் கடந்து கணுக்காலைச் சுற்றி வந்தது.
அவன் வசதிக்காகவே அணிந்திருந்த பாவாடை, அவனுக்கு வேலை வைக்காமல் விலகிச் செல்ல, தடித்த முத்தம் அழுத்தமாக முன்னேறியது. முட்டி வரை முத்தமிட்டவன் எப்படியும் திரும்பிக் கொள்வாள் என்றறிந்து, அவளை மடக்கப் பாய்ந்து வயிற்றில் முத்தமிட்டான். இதை எதிர்பார்க்காதவள் அங்கும் இங்கும் அசைய முடியாது முகத்தை மூடிக்கொண்டு முனங்கினாள்.
நடுவயிற்றில் முத்தமிட்டு மீசை குத்த நோகடித்தவன், ஆடைகளை விலக்காமல் கழற்றத் துணிய, அடம் பிடித்தாள். கை இரண்டையும் சேர்த்துப் பிடித்துத் தலைக்கு மேல் உயர்த்தி வைத்தவன் புருவம் உயர்த்த, “நைட்!” கிறங்கியது வார்த்தை.
“விட்டதை முடிச்சிட்டுக் கணக்கை க்ளோஸ் பண்ணிடலாம்.”
“வேலை இல்லையாடா உனக்கு?”
“எல்லாத்தையும் விட இது முக்கியமான வேலைடி.”
“காட்டுமிராண்டி!”
“இப்பதான் அந்த உதட்டைப் பாவம் பார்த்து இனிமே கடிக்கக் கூடாதுன்னு நினைச்சேன். ம்ம்… தப்புதான்.” என்றவன் தன்னைத் திட்டிய உதட்டைக் கவ்விட, தன் வாயே தனக்கு சூனியம் ஆனதால் கைகளை விடுவிக்க முயற்சித்தவள் முடியாமல் முத்தத்தை அனுபவித்தாள்.
முத்தமிட்டுக் கொண்டே ஆடையை விலக்கினான் அகம்பன். உதட்டை விட்ட அடுத்த நொடி வயிற்றில் முகம் புதைக்க, விடுபட்ட கைகள் அவன் தலை முடியை இறுக்கமாகப் பிடித்தது. முடிந்தவரை எந்த இடத்தையும் மிச்சம் வைக்காமல் எச்சிலை மருதாணியாகப் பூச, மொத்த உடலும் சிவந்தது.
அவன் தலை முடியைப் பற்றி இழுத்தவள் கண்ணை அசைக்க, இதற்காகவே காத்திருந்தவன் அவளோடு சேர்ந்து இதழோடு இதழ் பொருத்திச் சரிக்குச் சமமாக முத்தமிட்டான். தண்டனையை ஏற்க ஆரம்பித்தவள், நேற்றுத் தனியாகத் தூங்கிய ஏக்கத்தை அவன் இதழைச் சுவைத்துத் தீர்த்துக்கொள்ள, அவன் கொடுக்கும்போது துளிராத காமம், அவள் காதலில் தண்டுவடத்தைச் சிலிர்க்க வைத்தது. அவள் உடலில் பூத்திருந்த வேர்வைத் துளிகள் அவன் உடலுக்கு இடம் மாறியது. அவன் கொடுத்த அனைத்துச் சுக வேதனைகளையும், மறக்காமல் திருப்பிக் கொடுத்தவள் போர்வைக்குள் பதுங்கிக்கொள்ள, அதைத் தள்ளி உடும்பாக மேனியைத் தழுவியவன் செய்த அத்தனையும் காதல் சேட்டைகள்.
வியர்வையில் நனைந்த உள்ளங்கை அவன் முதுகைப் பிடிமானத்திற்குப் பிடிக்க முடியாமல் தடுமாற, அன்பாக அவளைத் தாங்கிக் கொண்டவன் அடிக்கடி கிடைக்கும் குட்டி முத்தத்தில் மோகத்தை உற்சாகமூட்டினான். பாதத்தில் முத்தமிட்டு மோகத்திற்கு அழைத்தவன், அவள் சிணுங்களில் முடிக்க மனம் இல்லாமல் பெண்ணவள் உடலையே சுற்றிவர, முடித்து வைக்கும் எண்ணம் அவளுக்கும் இல்லை. உடல்கள் இரண்டும் மனதோடே காதல் தவம் புரிய, அவனை விட அவளுக்குத்தான் காயங்கள் அதிகம். வலி கொடுக்கும் பற்களைத் தன் பற்களால் பழி தீர்த்தவள் அவனோடு ஐக்கியமானாள், அவனே விருப்பப்பட்டு முடிக்கும் வரை.
திகட்டத் திகட்டக் காதலை அவள் மேனியில் தெளித்தவன், பொறுக்க முடியாத வெறுப்பைக் காட்டிவிட்டு இதே மெத்தையில் தனியாக உறங்கப் போகிறான். அவன் இல்லாத இரவை அவன் நினைவோடு கழிக்கப் போகிறாள் மதுணிகா.
***
ஒவ்வொரு பொழுதும் காதலோடு பூக்க, ஒவ்வொரு இரவும் அவனோடு நகர்ந்தது. சுற்றி எங்கும் உமிழப்படும் வெறுப்புகளுக்கு மத்தியில், அகம்பன் எனும் மனிதப் பாம்பின் காதல் குடையில், நனையாமல் ஒய்யாரமாக நாள்களைக் கழித்தாள். எத்தனை முயற்சி எடுத்தும் பெரும் தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் அனுசியா, சரியாகத் திட்டமிட்டுப் பெரிதாக ஒரு வேலையைச் செய்ய முரளியை அழைத்திருக்கிறாள்.
கிட்டத்தட்ட அகம்பன் துவைத்து எடுத்து இரண்டு மாதம் ஆவதால், நன்றாகத் தேறி இருந்தது அவர் உடல். பெற்ற மகன் தான் இன்னும் வலுப்பெறாமல் இருக்கிறான். நாள்தோறும் அதைக் கண்ணால் கண்டவருக்கு, அகம்பன் மீது இருக்கும் கோபத்தை விட வளர்த்தவள் மீதுதான் அதிகக் கோபம். ஓயாமல் என்ன நடந்தது என்று கேட்டு நச்சரித்த அஞ்சலை, படுத்த படுக்கையாக இருக்கிறார். அவர் நிலை அறியாது வளர்த்த மகள் இங்கு ஆனந்தமாக இருக்கிறாள்.
நரிக்கூட்டம், சிங்கத்தை முறியடிக்கத் திட்டம் போட்டால் செல்லுபடி ஆகுமா! விமான நிலையத்தை விட்டு வந்த முரளியை அலேக்காகத் தூக்கியது அகம்பன் திவஜ் தீவு கட்டப்பாக்கள். வெறியோடு வந்தவர், உயிர்நாடி நின்று விடுமோ என்ற பயத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் காருக்குள் அமர்ந்திருந்தார். அலட்டாமல் அவசரம் இல்லாமல் தன் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு வந்தவன்,
“பச்சோந்தி புத்தியைக் காட்டிட்ட பார்த்தியா?” என்றான்.
“என்னை எதுவும் பண்ணிடாத. என் பொண்ண ஒரு தடவை பார்த்துட்டுப் போகலாம்னு தான் வந்தேன்.”
“பொண்ணா… ஹா ஹா!” சத்தமிட்டுச் சிரித்தவன், உடனே அதை நிறுத்திவிட்டு முறைத்த முறைப்போடு, “நீ அவளை எப்படா பொண்ணா பார்த்திருக்க? எதுக்காக அவளை வளர்த்தேன்னு தெரியாதுன்னு நினைக்கறியா. நீ ரெட்டைக் கொலை பண்ணவன்னு ஊரு உலகத்துக்குத் தெரியாமல் இருக்கலாம். எனக்கு எப்படிடா தெரியாம இருக்கும்?” என்றதும் முகம் வேர்த்துக் கொட்டியது அவருக்கு.
“உன்ன அவளுக்காக மட்டும் தான் விட்டேன். அதே அவளுக்காக, உயிரை எடுக்கவும் தயங்க மாட்டேன். நீ ஒரு கொலை பண்ணா உடம்பைக் கார்ல வச்சு எரிச்சி, விபத்துன்னு நம்ப வைக்கணும். எனக்கு எந்த அவசியமும் இல்லை. ஆமா, நான்தான் கொலை பண்ணேன்னு சொன்னால் கூட ஒருத்தனும் ஒன்னும் பண்ண முடியாது. உன்னை எதுக்கு சங்கரன் இங்க வர வச்சாரு…”
“சங்கரனா!”
“நல்ல நடிகன்டா நீ. உன்னை இப்படிக் குண்டுக் கட்டா தூக்கிட்டு வந்தவனுக்கு, அவனைத் தூக்க ரெண்டு நிமிஷம் ஆகாது. அதிரடியா பண்ண அகம்பன் இப்போ மாறிட்டான். எல்லாத்தையும் பொறி வச்சுப் பிடிக்க நேரம் பார்த்துட்டு இருக்கான். மீனா சிக்கி ரெட்டைக் கொலைகார வாழ்க்கையை அழிச்சுக்காத. மதுணி என் கண்ட்ரோல்ல இருக்கா. அவ ஹேரைக் கூடப் புடுங்க முடியாது உன்னால.” என்றவன் கமல் பக்கம் திரும்ப,
“மேடம்!” என்றான்.
“பசிக்குது அகா…” போனில் சிணுங்கினாள் அம்மு.
“பத்து நிமிஷத்துல வரேன்டி.” என்றவன் கைபேசியை அணைத்துவிட்டுக் கமலிடம் தூக்கிப் போட, “காதலனும் சாரே, காட்டுமிராண்டியும் சாரே…” என ராகம் பாடி அவன் இதழைப் புன்னகைக்க வைத்தான்.
“இனி நான் இங்க வரமாட்டேன். என்னை விட்டுடு.”
“வரக்கூடாது!” எனக் கட்டளை இட்டவன் கைக்கட்டை அவிழ்த்துவிட்டு, “அந்தச் சங்கரன்கிட்டச் சொல்லு. அவன் பாச்சா என்கிட்டப் பலிக்காதுன்னு.” எனக் காரை விட்டு இறங்க, வந்த வழியே திரும்பினார் முரளி.
விஷயம் அறிந்த அனுசியா, தையத்தக்கவென்று குதித்து, “நம்ம எல்லாரையும் வாட்ச் பண்ணிட்டு இருக்கான். அவனைத் திசை திருப்பனும். அந்த மது அவனை எந்த வகையிலும் காண்டாக்ட் பண்ணக்கூடாது. அப்படி ஒரு சிச்சுவேஷனைக் கிரியேட் பண்ணிட்டுத் தான் அவளை அடிக்கணும்.” தந்திரத் திட்டத்தைக் கூறினாள்.
***
“அம்மா…” என்ற குரலில் புத்தகம் படித்துக் கொண்டிருந்தவர் அமைதியாகத் திரும்ப, “உங்ககிட்டக் கொஞ்சம் பேசணும்.” தன்மையாகக் கேட்டாள் மதுணிகா.
அவள் அழைத்த அழைப்பே அவருக்கு ஒரு மாதிரியாக இருக்க, பதில் சொல்லும் நிலையில் இல்லை. அவர் அமைதியைத் தனக்குச் சம்மதமாக எடுத்துக் கொண்டவள், “என்னை உங்களுக்குப் பிடிக்கலைன்னு தெரியும். என் மேல இருக்கற கோவத்தை உங்க பையன்கிட்டக் காட்டாதீங்க. அவருக்கு உங்களை எவ்ளோ பிடிக்கும்னு நான் சொல்ல வேண்டியதில்லை. என்னதான் அவர் எனக்காக சப்போர்ட் பண்ணாலும், அம்மா பேசலன்ற வலி அவருக்குள்ள நிறைய இருக்கு. என் அகா அப்படிக் கஷ்டப்படுறது பிடிக்கல. என் மேல எவ்ளோ வெறுப்பை வேணாலும் கொட்டுங்க. அவர்கிட்டப் பேசுங்கம்மா…” என்றவள் அவர் பதிலுக்காகக் காத்திருந்தாள்.
ஒரு வார்த்தை பேசாமல் பிடித்த மௌனத்தை விடாமல் பின்தொடர, “வீட்டுக்குள்ளேயே தனியா இருக்கற வலி என்னன்னு எனக்குத் தெரியும். நான் உயிரா நேசிக்கிற ஒருத்தருக்கு அதை என்னால கொடுக்க முடியாது. என் அகா சிரிப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும். தன்னை மறந்து அவர் சிரிக்கிற அந்த நிமிஷம், இந்த உலகத்துல அழகுன்ற வார்த்தைக்கு உதாரணம், அந்தச் சிரிப்பைத் தவிர வேற எதுவும் இருக்காது. ஒரு அம்மாவா நீங்களும் அதை ரசிச்சு இருப்பீங்கன்னு நம்புறேன். எனக்காக உங்க மகன் முகத்துல அந்தச் சிரிப்பைக் கொண்டு வாங்கம்மா…” என்றவள் வார்த்தை அவர் மனதிற்குள் நின்றாலும் எந்தப் பாவனையும் கொடுக்கவில்லை.
இவைதான் அவருடைய பதிலாக இருக்கும் என்று ஊகித்துப் பேசியவள், “நான் பண்ண தப்புக்கு என்னை மன்னிச்சிடுங்கம்மா” கற்பகம் பாதம் பணிய, பதறி அடித்து விலகி நின்றார்.
“உங்க பையனைத் திட்டம் போட்டுக் காதலிக்கல. எனக்கு அவரைச் சத்தியமாய் பிடிச்சிருக்கு. அவரை விட்டு விலகனும்னு நிறைய முயற்சி பண்ணேன். எவ்ளோ விலகிப் போனாலும், நீதான்டி வேணும்னு காதலைக் கொட்டுற அந்த மனுசனை ஒதுக்க முடியல. ஒதுக்கப்பட்டவளா இருக்கிறவளுக்கு, அந்த ஒதுக்கத்தை நேசிக்கிறவனுக்குக் கொடுக்க முடியல. அவரை விட்டுப் பிரியுறதைத் தவிர, வேற எது சொன்னாலும் நான் கேட்கிறேன். அவர்கிட்ட மட்டும் பேசுங்கம்மா.” என்றவளைக் கடந்து சென்றார் கற்பகம்.
***
ஆயுத பூஜை விழா ஜோராகத் தொடங்கியது. இன்னும் சில வாரங்களில் ஆதிகேஷ், பிரியா ஜோடிகளின் திருமணம் நடக்க இருப்பதால், இரட்டிப்பு மகிழ்ச்சியாக விழா துவங்கியது. வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த பத்திற்கும் மேற்பட்ட கார்களுக்கு மாலையிட்டுப் பூஜை செய்யத் தயார் நிலையில் வைத்தார்கள். அவர்களிடம் பணிபுரியும் ஊழியர்கள், கிடைக்கப் போகும் பரிசுக்காக ஆர்வமாகக் காத்திருக்க, அகம்பனைத் தவிர அனைவரும் அங்கு இருந்தார்கள்.
முதல்முறையாக, அவள் இருக்கும் வீட்டில் நடக்கும் விழாவில் அவள் இருக்கிறாள். யாரும் அழைக்கவில்லை என்றாலும், நடக்கும் ஏற்பாட்டை வைத்து அவளே அங்கு வந்துவிட்டாள். அவள் முன்பு அங்கிருக்கும் வேலையாள்களை அதிகாரமாக வேலை வாங்கிக் கொண்டிருந்தாள் அனுசியா. அகம்பன் போல் அவன் காதலியும் சிறுதுளி மதிக்கவில்லை அவளை.
வெள்ளை நிறம் ஜொலிக்க அங்கு வந்த நவரத்தினம், “எல்லாம் ரெடியா?” கரகரத்த குரலில் கேட்க, “ஆதி சார் வரணும், சார்” என்றான் கமல்.
“நேரமாகுதுடா. கட்சி மீட்டிங் ஒன்னு இருக்கு. ஆதிய சீக்கிரமா வரச் சொல்லு.”
தன்னை மறந்து ரசித்துக் கொண்டிருந்த மதுணியை மனம் கருகப் பார்த்துக் கொண்டிருந்த அனுசியா, “நீ போய் அகம்பனைக் கூட்டிட்டு வா…” அதிகாரம் இட்டாள்.
முகம் சுருக்கியவளிடம், “என்னடி பார்க்குற, போய் கூட்டிட்டு வா.” என்றிட, அகம்பன் பெற்றோர்கள் இருப்பதால் அமைதியாகச் சென்றாள்.
“அவன் எப்பமா இதுக்கெல்லாம் வந்திருக்கான்?”
“அட இருங்க அங்கிள். இவ என்னமோ மும்தாஜ் ரேஞ்சுக்கு சீன் போட்டுட்டு இருக்கா. இந்த மும்தாஜ் கூப்பிட்டு உங்க பையன் வராறாருன்னு பார்க்கலாம். எப்படியும் இவளைத் திட்டிதான் அனுப்பப் போறாரு. கருகின மூஞ்சியோட வந்து நிக்கிறவளுக்கும் சேர்த்துப் பூஜை போட்டு விடலாம்.” எனக் கொக்கரிக்கச் சிரித்தவளைச் சினம் பொங்கப் பார்த்துக் கொண்டிருந்தான் கமல்.
அகம்பனுக்கு ஆன்மீகத்தின் மீது நாட்டமில்லை. பெரிதாக வழிபடும் எந்த விழாவிற்கும் வந்து நிற்க மாட்டான். கட்சி சார்பில் நடந்தால் மட்டும் தலை காட்டி விட்டு வருவான். தன்னவன் விருப்பம் தெரியாது அறைக்குள் நுழைந்தவள்,
“எல்லாரும் சாமி கும்பிடக் கீழ இருக்காங்க, இங்க என்ன பண்ற?” அவன் கையில் இருக்கும் போனைப் பிடுங்கினாள்.
“ஹேய்! கேம் விளையாடிட்டு இருக்கேன்.”
“கீழ பங்ஷன் நடக்குது, கேம் முக்கியமா?”
“ப்ச்! அதெல்லாம் எனக்கு செட்டாகாதுடி. நீ வேணா போய் பாரு.”
“என்னடா இப்படிச் சொல்ற?”
“போனைக் கொடு.” எனப் பிடுங்கிக் கொண்டு விளையாட்டில் கவனமானான்.
களை இழந்த முகத்தோடு வந்து கொண்டிருக்கும் மதுணிகாவைக் கண்டு ஏளனம் பொங்கச் சிரித்த அனுசியா, “பாருங்க!” எனக் கை காட்ட, அனைவரும் வாயைப் பிளந்தனர்.
சோகமான முகத்தோடு வந்து கொண்டிருந்தவள் பின்னால், சிரித்த முகமாக வந்து கொண்டிருந்தான் அகம்பன் திவஜ். வந்தது அவன்தானா என நம்ப முடியாமல் கமல் கண்ணைக் கசக்க, மெல்லப் புன்னகை அரும்பியது ஆதிகேஷ் முகத்தில். எத்தனையோ முறை, தம்பியை அழைத்துத் தோற்றுப் போனவன் அவன் வரவில் உள்ளம் மகிழ, பெருமை பொங்கப் பார்த்தார் நவரத்தினம்.
வேலை ஆள்கள் உட்பட அனைவரும் அவன் வரவைக் கொண்டாட, ஏளனம் பொங்கப் பார்த்த அனுவின் முகம் தான் கடைசியில் கருகிப்போனது. அவன் வரவை அறியாதவள் தலை குனிந்து கொண்டு ஓரமாக நிற்க, அவள் தோள் மீது கை போட்டவன், “என்ன முதலாளி மேடம், இங்க நின்னுட்டீங்க. உங்க கையால கிப்ட் வாங்க அவ்ளோ பேர் வெயிட்டிங்.” என்றவனைக் கண்டவளுக்கு விவரிக்க முடியாத பேரின்பம்.
ஒரு நொடி கண் கலங்கிவிட்டது. இத்தனை நாள் மருத்துவமனையில் நடக்கும் ஆயுத பூஜைகளில் மட்டுமே பங்கு கொண்டிருக்கிறாள். அதுவும், எதுவும் செய்யாமல் ஒதுங்கி நின்று விட்டு வாழ்த்தோடு விலகி விடுவாள். அப்படிப்பட்டவளுக்காகத் தன் கொள்கையைத் தளர்த்திக் கண் சிமிட்டியவன், கைப்பிடித்து அழைத்துச் சென்றான்.
யாரும் மறுப்புச் சொல்லும் நிலையில் அங்கு இல்லை. அகம்பன் வரவே மெய் மறக்க வைத்திருந்தது. தாம்பூலத் தட்டைக் கையில் கொடுத்துக் கண்ணைக் காட்ட, முட்டிக்கொண்டு வரும் அழுகையோடு அவன் நெஞ்சில் முகம் புதைத்தாள்.
அம்மு இளையாள்.

