
காதல் -23
நொடிகளும் நிமிடங்களாக கடந்து சென்றது.. தன் தந்தை தான் தன்னை அடித்தாரா! சிறிதும் நம்ப முடியாமல் கன்னத்தை தாங்கி நின்று கொண்டிருந்தான் மறவன்.
பின்னே அவன் செய்த காரியம் ஒன்றும் சாதாரணம் அல்லவே.. அவர் மனைவி உயிருடன் இருப்பதையே இத்தனை நாட்களும் மறைத்து இருக்கிறான்.. இது எத்தனை பெரிய அபத்தம்.
ஆனால் பெற்ற பிள்ளையே இந்த உண்மையை மறைத்து இருக்கிறான் என்றால் இதற்கு பின் ஏதோ வழுவான காரணம் இருப்பதாக தோன்றியது அவருக்கு.
” என்ன டா பண்ணி வச்சுருக்க ” உள்ளே போன குரலில் மூர்த்தி கேட்டதும்.. அதுவரை அமைதியாக நின்றவன் அடுத்த நொடி அவனது தந்தையை பாய்ந்து அணைத்து கொண்டவன் இத்தனை நாளும் அடக்கி வைத்திருந்த கண்ணீரை வெடித்து சிதற ஆரம்பித்தான்.
அவனது அழுகையில் மூர்த்தியே ஆடிப் போனவர். ” என்னாச்சு மறவா, நீ இப்படி அழுகிற அளவுக்கு என்ன டா ஆச்சு, திரும்பவும் சிந்தாமணிக்கு முடியலையா என்ன , அவ என் வாழ்கையில இல்லைன்னு நினைச்சேன் டா, இப்படி ஆசை காட்டி மறுபடியும் என்கிட்ட இருந்து பிரிச்சு வச்சுடாதீங்க டா.. சத்தியமா என்னால தாங்கிக்க முடியாது ” என்றதும் அவசரமாக அவரை தழுவிக் கொண்டான் மறவன்.
” அப்பா அப்படி எல்லாம் அம்மாவுக்கு எதுவும் ஆகாது பா, இப்ப அவங்க ரொம்ப நல்லா இருக்காங்க, இன்னொரு விஷயம் இத்தனை நாளா கோமாவுல இருந்தவங்க இன்னைக்கு தான் பா கண் முழிச்சு இருக்காங்க ” என்றதும் அதிர்ந்து போனார் மூர்த்தி.
” என்ன டா ஆச்சு உங்க அம்மாவுக்கு, முதல்ல செத்து போயிட்டான்னு சொன்னீங்க, இப்போ கோமா அது இதுன்னு என்ன டா நடந்துச்சு உண்மையை சொல்லு டா ”
” முதல்ல அம்மாவை போய் பாருங்க பா, அப்பறம் நம்ம விஷயத்தை பேசலாம், எல்லாத்தையும் நான் உங்களுக்கு தெளிவா சொல்லுறேன்.. அப்பறம் இங்க எப்படி திடீர்னு வந்தீங்க ” என்று மறவன் தன் சந்தேகத்தை கேட்க..
” நீயும் உன் பொண்டாட்டியும் கிளம்பி ஹனிமூன் போறேன்னு போயிடீங்க, எனக்கு பிஸ்னஸ் பார்த்து கொஞ்சம் பொழுது போகலை, அதான் மேல இருக்குற நம்ம வீட்டை ஒரு எட்டு பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்.. வந்ததும் தானே தெரியுது எவ்வளவு பெரிய விஷயத்தை என் கிட்ட இருந்து மறைச்சிடீங்க ” தன் மகனை அழுத்தமாக பார்த்து விட்டு அறைக்குள் நுழைந்து விட்டார் மூர்த்தி.
இத்தனை வருடங்களுக்கு பின்னே தன் மனைவியை பார்த்தவர் பூரித்து போனார். ” சிந்து…… ” என தழு தழுத்த குரலில் அழைத்து கொண்டே உள்ளே போக…
அவருக்கே மட்டுமே ஆன பிரத்தியோக அழைப்பு , சாயாலியின் மீது இருந்த கவனத்தை திசை திருப்பியது.
மெதுவாக கண்களை சூழ விட்டு அந்த அறை வாயிலை பார்த்தவரின் கண்களில் இருந்து கண்ணீர் உருண்டிட.. அவர்களுக்கு தனிமை கொடுக்க நினைத்து அந்த அறையில் இருந்து சாயாலி சாப்பாட்டுடன் வெளியேறினாள்..
” சிந்துதுது… ” என கண்ணீர் மல்க ஓடி வந்து தன் மனைவியை தழுவிக் கொண்டார் மூர்த்தி. ஆடவில்லை அசையவில்லை கண்ணீர் கோடுகள் மட்டும் அவரது உணர்ச்சிகளை காட்டிக் கொண்டே இருந்தது.
” ஏதாவது பேசு டி… நீ இல்லாத இத்தனை வருஷத்துல வெறும் பிணம் மாதிரி வாழ்ந்துட்டு இருந்தேன்.. நம்ம பிள்ளைக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையாம நான் ரொம்ப நொந்து போயிட்டேன்… இப்ப நீ வந்தது எனக்கு எவ்வளவு தெம்பா இருக்கு தெரியுமா…
இன்னொரு விஷயம் சொல்லவா, ஒரு மனுஷன் இருக்குற அப்போ அவங்களுக்கு அந்த அருமை தெரியாதாம்.. இல்லாத அப்போ தான் தெரியுமாம்.. அது என் விஷயத்துல உண்மை ஆகிடுச்சு .. நீ போனதுக்கு அப்பறம் தான் உன்னோட அருமை எனக்கு தெரிஞ்சது… உன்ன ரொம்ப காயப் படுத்திட்டேன் சிந்து , என்ன மன்னிச்சிடு டி ” என மனதார மன்னிப்பை வேண்டினார் மூர்த்தி.
தன் கணவனா இது என அதிர்ச்சியில் கண்கள் விரிய பார்த்து வைத்தார் மூர்த்தி.. அவர் சாப்பிட்ட மிச்சம் அவரது உதடுகளில் மையம் கொண்டிருக்க.. அதை எல்லாம் சுத்தமாக துடைத்து விட்டவர்.. பின் மனைவியின் கூந்தலை அழகாக வாரி கொண்டையிட்டு ” கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடு மா… நான் வெளியே உன் மகன் கிட்ட பேசிட்டு வரேன்.. நம்ம பேச வேண்டியது நிறையா இருக்கு.. இப்போவே பேசிட்டா பின்னால பேச நமக்குள்ள விஷயம் வேணும்ல ” என மனைவியின் கன்னத்தை தட்டியவர் மீண்டும் அவரை படுக்கையில் விட்டு கதவை அடைத்து விட்டு வெளியேறினார்.
மறவன் மட்டும் தனியாக தோட்டத்தில் அமர்ந்திருப்பதை பார்த்து .. உண்மை தெரிய வேண்டிய கட்டாயத்தில் அவனை நோக்கி அடியெடுத்து வைத்தவர்.. மகனின் முகத்தை வைத்து ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்து கொண்டவர்.. மெல்லமாக அவனிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தார்.
” மறவா … ”
” ம்ம் சொல்லுங்க பா ” ஸ்ருதியே இல்லாமல் வெளி வந்தது அவனது குரல்.
” என்னாச்சு எதையோ நினைச்சு நீ மருகிட்டு இருக்க, உன் அம்மா திரும்ப வந்த சந்தோஷம் உன் முகத்துல இல்லையே பா ” என்றதும் அவன் அமைதியாக இருக்க..
” அப்பாகிட்ட சொல்ல முடியாத விஷயமா ”
” அப்படி எல்லாம் இல்ல பா , இன்னைக்கு நியூஸ் பார்த்தீங்களா ” என்றதும் அவருக்கு விஷயம் புரிந்து விட , தற்போது அவரிடமும் அதே மௌனம்.
” தமிழ் காதலன் .. விருது கொடுத்தாங்களாம்… விருது வாங்க தமிழ் காதலன் வரலையாம் ” என விரக்தியாக அவன் சிரிக்க.. முகம் இறுகி போனது மூர்த்திக்கு.
” அப்பா தப்பு பண்ணிட்டேன் டா ” என்றதும் பதறிய மறவன்.. ” அதெல்லாம் இல்ல பா.. உங்க மேல என்ன தப்பு.. எல்லாம் என் தப்பு ”
” உன் அம்மா கோமாவுல இருந்ததை ஏன் மறைச்ச ”
” சொன்னா உங்கனாள தாங்க முடியாது பா .. அதான் ”
” அப்போவாவது உண்மைய சொல்லுவியா ”
” எனக்கும் முழுசா என்ன நடந்ததுன்னு தெரியலை பா , ஆனால்…. ”
” சொல்லு பா எதுனாலும் நான் தெரிஞ்சுக்க விரும்புறேன் ”
“அன்னைக்கு அம்மாவுக்கு நடந்தது ரொம்ப கொடுமை பா” என இறந்தகாலத்தை கூற ஆரம்பித்தான்.
சிந்தாமணி வசதியான வீட்டு பெண்.. மூர்த்திக்கு வீட்டில் பார்த்து திருமணம் செய்து வைத்தவர் தான் சிந்தாமணி. தொழிலில் கொடி கட்டி பறந்த சிந்தாமணியின் தந்தை திடீரென மாரடைப்பில் இறந்து விட, அப்போது தான் கல்லூரி படிப்பை முடித்திருக்க , சிந்தாமணி தந்தையின் தொழிலை கையில் எடுத்தார்.
வீட்டிற்கு ஒரே பெண் என்பதால் சொத்துக்கள் அனைத்தும் அவருக்கு தான் .. அதோடு அவர் படித்த படிப்பும் அவருக்கு கை கொடுக்க.. முதலில் சற்று தடுமாறினாலும் கொஞ்சம் கொஞ்சமாக தொழிலை கற்று கொண்டு தந்தைக்கு நிகரான பெயரை நிலை நாட்டினார்.
மூர்த்தியும் அவரது தொழிலை ஒரு பக்கம் நடந்திக் கொண்டிருக்க, சிந்தாமணியும் ஒரு பக்கம் உயர்ந்து கொண்டிருந்த சமயம் அது..
தொழிலில் போட்டிகள் அதிகரிக்க, ஒரு பக்கம் விரோதிகளும் அதிகரித்து கொண்டே வந்தனர். இதை எதையும் அறியாத சிந்தாமணி தொழிலில் மட்டுமே தன் முழு கவனத்தையும் செலுத்திக் கொண்டிருந்தார்.
மறவன் பட்டப்படிப்பை முடித்து விட்டு வெளிநாட்டில் இருந்து வந்திருந்த சமயம் அது … மகனை தொழிலில் அமர்த்தி அவன் கையில் பொறுப்பை ஒப்படைப்பதற்காக காத்துக் கொண்டிருந்தனர் பெற்றவர்கள்.
அப்படி இருந்த சமயத்தில் தான்.. அன்று அடைமழை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த நேரத்தில், மறவன் அவனது நண்பர்களுக்கு எல்லாம் பார்ட்டி கொடுத்துக் கொண்டிருந்தான்.. பட்டப் படிப்பை முடித்து வந்ததற்காக அவர்களுக்கு செய்ய வேண்டியதை எல்லாம் ஒரு ஹோட்டலில் வைத்து கொண்டாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது அவனிடம் இருந்த வந்த அலைபேசி அழைப்பில் நடுங்கி போனான் என்று தான் சொல்ல வேண்டும்.. அப்படியே ஹோட்டலில் இருந்து வெறி பிடித்தவன் போல ஓட்டம் எடுத்தவன் தன் காரை எடுத்துக் கொண்டு அவர்கள் கூறிய இடத்திற்கு சென்றான்.
அங்கு போலீசார்கள் எல்லாம் குமிந்து இருக்க, காரை விட்டு இறங்கிய மறவனின் உடல் நடுங்கியது..
” வாங்க மிஸ்டர் மறவன், உங்களுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கோம்” என மேல் அதிகாரி அவனை அழைத்துக் கொண்டு சென்றார்.
அங்கே கிழித்து எறிந்த நாராக கீழே கிடந்தார் சிந்தாமணி. தன் அன்னையை அந்த கோலத்தில் பார்த்தவன் அடுத்த நொடி கீழே விழுந்து கதறி துடிக்க.. ” சார் இவங்க மிசஸ் சிந்தாமணி தானே ” என உறுதிப் படுத்திக் கொள்ள கேட்க..
தலையில் அடித்துக் கொண்டு அமோதிப்பகாக தலை அசைத்தான். அதே நேரம் மூர்த்திக்கும் தகவல் கொடுக்க.. அவரும் அந்த இடத்திற்கு வந்து , அந்த இடமே கண்ணீரில் மூழ்கியது.
” சார் பாடி இப்போ ஜிஹெச் போகுது, போஸ்ட் மார்டம் பண்ணதுக்கு அப்பறம் வந்து வாங்கிக்கோங்க” என ஆம்புலன்சில் ஏற்றிக் கொண்டு சென்றனர்.
மூர்த்தியை முதலில் மருத்துமனைக்கு போக கூறி விட்டு, அவன் அதே இடத்தில் அமர்ந்து விட.. மீண்டும் அவனது அலைபேசி அழைத்தது.
” சார் நான் இன்ஸ்பெக்டர் பேசுறேன் , உங்க அம்மாவுக்கு பல்ஸ் வந்திடுச்சு சார் … நாங்க இப்போ ஆக்சிஜன் கொடுத்து கூட்டிட்டு போயிட்டு இருக்கோம், நீங்க அடிவாரத்தில இருக்கிற பெரிய ஹாஸ்பிடல் வந்திடுங்க… ” என்றதும் தான் அவனுக்கு உயிரே வந்தது..
வேகமாக தன் காரை எடுத்துக் கொண்டு கீழே உள்ள மருத்துவமனைக்கு விரைந்தான்..
அதற்குள் அங்கு அவருக்கு சிகிச்சை தொடங்கப் பட்டிருக்க… மறவன் வந்து சேர்ந்த பத்து நிமிடத்தில் சிந்தாமணியின் அறையில் இருந்து வெளியே வந்த மருத்துவர் நெற்றியை நீவிக் கொண்டு ” சாரி மிஸ்டர் மறவன் ” என்ற வார்த்தையை கூறி விட, அதுவரை இழுத்து பிடித்திருந்த மூச்சும் அவனை விட்டு தூரமாக செல்ல..
” உங்க அம்மா கோமாவுக்கு போயிட்டாங்க, தென் யுவர் மதர் வாஸ் ரேப்புடு ” என அவர் மறவன் தோளில் தட்டி விட்டு செல்ல… இடி விழுந்ததை போல அப்படியே அந்த இடத்தில் அமர்ந்து விட்டான்..
தாயை கற்பழித்து இருப்பதை எந்த மகனால் தான் தாங்கிக் கொள்ள முடியும் .. பேச கூட முடியாமல் நெஞ்சம் அடைக்க அங்குள்ள சேரில் கண் மூடி அமர்ந்து விட்டான்.
அதே நேரம் மேலே உள்ள மருத்துவமனைக்கு சென்ற மூர்த்தி.. அங்கு சிந்தாமணி இல்லாது தன் மகனை தொடர்பு கொள்ள… கையில் இருந்த அலைபேசி அழைப்பில் போனை எடுத்து வெறித்து பார்த்தவன்.. தன் தந்தையின் அழைப்பை கண்டு மேலும் துடித்தவன்.. ஒரு முடிவெடுத்தவனாக… அலைபேசியை எடுத்தான்
” மறவா அம்மா எங்க டா, இங்க இருக்கிற ஹாஸ்பிடல்ல வரலைன்னு சொல்லுறாங்க ”
“அப்பா… நான் சொல்லுறதை பொறுமையா கேளுங்க பா, அம்மாவை கூட்டிட்டு வந்த ஆம்புலன்ஸ் ஆக்சிடெண்ட் ஆகி பள்ளத்தாக்குல விழுந்திடுச்சு பா, பாடியை எடுக்க முடியாதுன்னு சொல்லிட்டு இருக்காங்க பா ” என்றதும் மொத்தமாக நொறுங்கி போனார் மூர்த்தி..
“நீங்க வீட்டுக்கு போங்க, நானும் வரேன் ” என அதோடு அவரை பேச விடாமல் அலைபேசியை அணைத்தான்..
அதன் பின் அங்குள்ள மருத்துவமனையில் பேசி அவர் இறந்ததை போல சான்றிதழ்களை ஏற்பாடு செய்ய கூறிவிட்டு … வீட்டிற்கு விரைந்து விட்டான்.
மூர்தியையும் நம்ப வைத்து அவருக்கு தெரியாமல் தாயை அழைத்து கொண்டு மேலே உள்ள அவனது மற்றொரு வீட்டில் வைத்து சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தான்.
” அம்மாவுக்கு இப்படி நடந்தது தெரிஞ்சா நீங்களும் என்ன விட்டு போயிடுவிங்களோன்னு பயம் தான் பா ” என அவரது கையை இறுக்கப் பிடித்துக் கொண்டான் மறவன்.
நடந்த அனைத்தையும் கேட்ட மூர்த்தி கல்லென சமைந்து போனார்..
சனா💖

