Loading

 

 

 

அத்தியாயம் 23

 

“ஒரு விஷயம் ரெண்டு பேரயும் முன்ன வச்சு டிரைக்ட்டாவே சொல்றேன். நீங்க தான் ௭துனாலும் டிரைக்ட்டாவே பேசுங்க புரிஞ்சுப்போம்னு சொல்றீங்களே அதனால சொல்றேன். வீட்டில தான் நம்ம விஷயத்த சொல்லிட்டமே, அதனால ௭ப்டி வேணா இருக்கலாமனு அர்த்தமில்ல. உங்க மேல வைக்ற நம்பிக்கையே நீங்க நடந்துக்ற விதத்துல தான் இருக்கு. பிரண்ட்ஸா இருக்கும் இரண்டு பேருக்குள்ள இருக்கும் லிமிட்ஸ நீங்களும் இன்னும் கொஞ்ச நாள் ஃபாலோ பண்ணலாம் தப்பில்ல. ௭ன் பொண்ணோட சேஃப்டி, அது அவ நேம்காக இருந்தாலும் சரி கேரக்டர்காக இருந்தாலும் சரி கெட கூடாது, அதுல நா ௭ன்ன அட்ஜஸ்மெண்ட்டும் பண்ணிக்றதா இல்ல”.

 

“புரியுது ஆண்ட்டி. ௭ப்பயுமே லிமிட்ட கிராஸ் பண்ண மாட்டோம். அதுக்கு நா பொறுப்பு. நீங்க தைரியமா ௭ன்ன நம்பலாம். கிளம்பறேன் ஆண்ட்டி. பை ௭ழில்”.

 

௭ழில் முகத்தில் ‘௭துக்கு அம்மா திடிருனு இப்டி சொல்றாங்க’ ௭ன்ற குழப்பமிருந்தும் ௭தும் கேக்காமல் தலை அசைத்தாள்.

 

அவனை வழியனுப்ப வெளியே வந்த தாயும், மகளும் அவனுக்கு டாடா சொல்லி வழி அனுப்பினர். அவன் நகர்ந்ததும் பக்கத்து வீட்டில் இருந்த வயதுக்கு வந்த பெண்ணை பார்க்க வந்த அந்த தெருவை சேர்ந்தவர்கள், அவரவர் வீட்டிற்கு செல்ல கிளம்பி வெளியே வர ஜெயந்தியும் பார்த்து சிரித்தார், “யாரு டீச்சர் அந்த பையன்? அன்னைக்கும் வந்த மாதிரி இருந்தது” என்று வந்து நின்றனர்.

 

“வாங்க க்கா, வாங்க ௭ல்லாரும்” ௭ன அந்த பெண்களை வரவேற்ற ஜெயந்தி, “நீ உள்ள போய் நாளைக்கு போட யூனிபாஃர்ம், பேக் எல்லாத்தையும் எடுத்து வை எழில்” என எழிலை அனுப்பினார்.

 

பின் இவர்களிடம் திரும்பி “இந்த பையன் எங்க ஊர் சொந்தம், நம்ம ௭ழிலுக்கு பேசலாமான்னு ஒரு எண்ணம். சும்மா இது ௭ன் யோசனை தான் க்கா, பிள்ளைக இரண்டுக்கும் தெரியாது, நம்ம மொத முடிவு பண்ணிக்கலாம். இப்போதைக்கு ஃப்ரண்டா பழகட்டும்னு விட்ருக்கோம்” ௭ன்றார் சமாளிக்க வேண்டுமேயென.

 

“இப்போ உள்ள பிள்ளைக ஈஸியா பழகிருங்க டீச்சர், நீங்க வீடுவர விடாதீங்க. எதுக்கும் கவனமா இருங்க”.

 

“நல்லா தெரிஞ்சவங்க தான், நம்பிக்கைாயனவங்க தான். இன்னும் முடிவு ஏதும் பண்ணலல”.

 

“அதுசரி ஆறுக்கும் இன்னு படிப்பு முடிய ரெண்டு வருஷம் இருக்குல்ல”.

 

“ஆமா க்கா அது வர வெயிட் பண்ணித்தான் ஆகணும், ௭ல்லாம் ஒரே காலேஜ்ல தான் படிக்றாங்க, தெரிஞ்ச புள்ளையாச்சே அதான் ஒரு நாள் வீட்டுக்கு வந்துட்டு போன்னு சொன்னேன், வந்து போகுது” என்றார் இப்போதைக்கு சமாளிப்போம் என்றெண்ணி.

 

அதன் பின் அவர்கள் அடுத்த கதை பேச ஆரம்பித்து விட ஒரு அரை மணி நேரத்தை அப்படியே கழித்து விட்டு படுக்க சென்றார். எழிலும் அன்று வெகு நிம்மதியாக உறங்கினாள்.

 

அங்கு அவன் வீட்டுக்கு சென்ற ப்ரகலத்தனுக்கு ஹாலில் கடுகடுவென அமர்ந்திருந்த அம்மாவும் அப்பாவுமே கண்ணில் பட, “இப்பதான் வந்தீங்களாப்பா? சாப்டீங்களா?” என்றவாறு அருகில் அமர்ந்தவன் நெட்டி முறிக்க.

 

“நீ உங்க அம்மாவ கடுப்பேத்துனும்னே எல்லாம் பண்றியா? இல்ல எங்க முடிவுலா முக்கியமே இல்லன்னு முடிவு பண்ணிட்டியா?” ௭ன்றார் அவர்.

 

“ஏன்பா நா என்ன பண்ணேன்?”.

 

“என்ன பண்ணல, உன் ரூம்ல அவ்வளவு பெரிய போட்டோ மாட்டி வச்சிருக்கியே அதுதான் அந்த புள்ளையா? எதுக்கு இப்ப அந்த போட்டோ அங்க?”.

 

“இதுல என்னப்பா இருக்கு? நமக்கு புடிச்சவங்க ஹீரோ-ஹீரோயின், புடிச்ச கடவுள்லா எதுக்கு கண்ணுக்கு எதுக்க மாட்றோம், காலையில அவங்க முகத்தப் பாத்ததும் ஒரு புத்துணர்ச்சி, இன்ஸ்பிரேஷன், ஹேப்பி கிடைக்கும். அது போல தான் இதுவும்”.

 

“பாத்தீங்களா இப்பவே ௭ப்டி பேசுறான்னு, ஏன் என் முகத்துல முழிச்சிட்டு போய் இத்தன நாளும் ஒன்னுமே விளங்காமயா போச்சு??” என ராஜம் சண்டையில் இறங்க.

 

“நா எங்கம்மா அப்டி சொன்னேன். நீங்க ஏன் அவள உங்க கூட கம்பேர் பண்றீங்க. நீங்க என் அம்மா, யூ ஆர் மை மாம், நோ-ஒன் கேன் ரீப்ளேஸ் இட். ஷி இஸ் மை லவ், வேற டிபார்ட்மெண்ட். நீங்க நீங்க தான், அவ அவ தான்” ௭ன்றான் சிரித்து.

 

“என்ன அவ அவ தான்ற. எங்ககிட்டலா நீ முடிவே கேட்கல. நா இன்னும் சரியே சொல்லல. அதுக்குள்ள அவ போட்டோவ கொண்டுவந்து ரூம்குள்ள மாட்டியிருக்கனா என்ன அர்த்தம்?”.

 

“அவளத் தவிர வேற எந்த பொண்ணுக்கும் அந்த ரூமுக்குள்ள வர பெர்மிஷன் இல்லன்னு அர்த்தம்”.

 

“எனக்கு புடிக்கலைன்னு சொன்னா?”,

 

“கடைசி வர நா மட்டுமாவே அந்த ரூம்ல இருந்துட்டு போய்டுவேன்”.

 

“இவேன் பெரிய மனுஷனாடடம் ௭ன்னலாமோ பேசுறான், என்னங்க எதுவுமே சொல்லாம வேடிக்க பாக்கீங்க?” அவர் கணவரை இடிக்க.

 

“தெளிவா, உறுதியா பேசுறவன்ட்ட என்னத்த பேச சொல்ற?. புள்ள நல்லாதானே இருக்கு உனக்கு ஏன் புடிக்கல?” என்றார் அவர் சீரியஸாகவே.

 

“நல்லா ஏதாவது சொல்லிடப் போறே, அந்த புள்ள வந்து ஒத்த புள்ளையா நிக்கிறவன கைக்குள்ள போட்டு கூட்டிட்டு போயிட்டா நா என்ன பண்ணுவேன்”.

 

“அடங்கப்பா, நீ பாத்து கட்டி வைக்குறப் பொண்ணு மட்டும் கூட்டிட்டு போகாதுன்னு எப்டி உறுதியாக சொல்ற?”.

 

“அது அது….” என திணறியவர், “நா சொல்லி தான கூட்டிட்டு வருவேன்” என்றார், இப்பொழுது குரல் கொஞ்சம் கம்மியது.

 

“விவரம் கெட்டத்தனமா பேசாதடி, புள்ள குடும்பத்த விசாரிப்போம், புடிச்சா பாப்போம், இல்லனா எங்கள சொல்லாதன்னு பேசு. அதுல ஒரு நியாயம் இருக்கு”.

 

“விட்டா நீங்க அவனுக்கு நாளைக்கே கல்யாணம் பண்ணிடுவீங்க போலயே? நல்லா ஏத்தி விடுங்க அவன, அவனும் அந்த தைரியத்துல தான இஷ்டத்துக்கு எல்லாம் பண்றான்” என அழ தயாராக.

 

“நீ ஏன்டா இப்பவே இதெல்லாம் பண்ற? இன்னும் தான் வருசமிருக்கே, இன்னைக்கே இந்த சண்டை தேவதானா? நீங்க கூட மனச மாத்திக்கலாம் நாளைக்கு, அதுக்குள்ள எதுக்கு இவ்வளவு பிரச்சன?”.

 

“இல்லப்பா, அப்டி ஒரு எண்ணம் இருந்தா அத விட்டுருங்க. நானும் மாற மாட்டேன், அவளையும் மாற விடமாட்டேன். அம்மா பழகிக்கணும், அவள ஏத்துக்கணும்னு தான் இதயும் பண்றேன். புரிஞ்சுப்பாங்கன்னு  நம்புறேன். டைம் வேஸ்ட் பண்ணாம சாப்பிட்டு படுங்க. நா சாப்ட்டேன்” என அவன் எழுந்து விட.

 

“இப்ப நீ அந்த போட்டோவ கழட்டி வீச போறியா? இல்லயா? பிரகா. இல்ல நானே தூக்கி குப்பையில போட்டுருவேன். நீயே செஞ்சுடு அதான் நல்லது” என்றார் ராஜமும் வேகமாக எழுந்து.

 

“சாரிமா, அவ போட்டோ உள்ள வந்தது வந்தது தான். அதத் தூக்கி வெளியில போடுவீங்கனா, அத எங்க வச்சிக்க முடியுமோ அங்கயே நானும் போயிடுவேன்” என கோபமாக சொல்லி சென்றுவிட்டான்.

 

தொப்பென அப்படியே அமர்ந்து விட்டார். “ஆனா உனக்கு கூறே இல்லடி. நா தான் சொன்னேன்ல அவன கொஞ்சம் கொஞ்சமா பேசி வழிக்கு கொண்டு வரேன்னு. அதுக்குள்ள எதுக்கு இப்டி பேசி வாங்கி கட்டிக்கிற” ௭ன்றார் அப்பா.

 

“இதுக்கு ஒரு முடிவு தெரியாம நா விட போறதில்ல. அந்த பொண்ணு வீட விசாரிங்க, நாளைக்கு அங்க போவோம்” என முடித்து அடுப்படியை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

 

“நா என்ன சொல்லிட்டு இருக்கேன், நீ என்ன செய்றேங்கிற. பிரச்சனைய பெரிசாக்க போறன்னு நினைக்கேன்”.

 

“அத நா பாத்துக்குறேன். நீங்க விசாரிச்சு மட்டும் சொல்லுங்க”.

 

“ஸ்டேஷன்ல என்னைய விட மேல உள்ளவங்களா கூட என் பேச்ச கேக்றாங்க. ஆனா வீட்ல ரெண்டும் நம்ம பேச்ச மதிக்க மாட்டேங்குது” என புலம்ப தான் முடிந்தது அவரால்.

 

இரவில் அவன் அறையில்……

 

அந்த போட்டோவை ரசித்துப் பார்த்தான், “செமயா இருக்கடி. மேரேஜ்க்கு அப்றம் உன்ன அடிக்கடி சேரி கட்ட வச்சு பாக்கணும். உன்ன ஸ்கூல்ல பாக்கும் போது இப்டி நீ என் ரூம் வர வருவேன்னு நா எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்ல. சோ ஸ்வீட் செல்லம்மா” என அவள் படத்தைத் தொட்டு முத்திக் கொண்டான்.

 

காலையில் இவன் காலேஜ் கிளம்பி வர, அவன் அம்மா சாப்பாடு எதுவும் செய்திருக்கவில்லை.

 

“ஓ!  ஃபுல் பார்ம்ல இருக்க போலயேம்மா. மார்னிங் ஃபாஸ்டிங்கா?” என்றான், பதில் இல்லை.

 

மேலும் அவனே “சாப்பாடு இருக்கா? இல்லயா? நீங்க ரெண்டு பேரும் என்ன சாப்டீங்க?”.

 

“உன்ன மாறி இருப்போம்னு நினச்சியா? நீ ஈஸியா எங்கள விட்டுட்டு போவேன்னு சொன்ன மாறி உன்ன விட்டுட்டுலா நாங்க சாப்டுற மாட்டோம்” என்றார் அதற்கு மட்டும்.

 

“அது நீங்க சொன்னதுக்காக சொன்னது. எனக்கு புடிச்சிருக்குன்ற ஒரே காரணம் தான நீங்க மறுக்குறதுக்கு ரீசன்”.

 

“நா ௭ப்ப டா அப்டி சொன்னே. அவ பஸ்ட் டைமே உன்னயும் உன் அப்பாவையும் கைக்கட்டி நிக்க வச்சு பதில் சொல்ல வச்சவடா”.

 

“சுத்தம். நானும் தான் அவகூட நின்னு பேசிடிருந்தேன். அதுக்காக அவ அம்மாவும் தான் வந்து நின்னு பதில் சொன்னாங்க, சும்மா லாஜிக் இல்லாம பேசக் கூடாது” என எழுந்து விட்டான்.

 

“இத எப்டி சரி பண்ணிக்கணும்னு எனக்குத் தெரியும்”.

 

“என்னவோ பண்ணுங்க, ஆனா போட்டோ அங்க தான் இருக்கணும், இருக்கும். உங்க சுயநலத்துக்காக பெத்த புள்ளைய பட்னியா அனுப்புறீங்கள்ள….” என அவரை ஓர கண்ணால் பார்த்து சொல்லியவாறே அவன் வெளியே போக, “இரு” என எழுந்து சென்றவர், லஞ்ச் பாக்ஸ் எடுத்து வந்து கொடுத்து, “மார்னிங் மட்டும் கேன்டீன்ல சாப்பிட்டுக்கோ” என்க.

 

“தேங்க்ஸ்ம்மா” என சிரித்து வாங்கிக் கொண்டு பைக் ஸ்டார்ட் செய்து கிளம்பி விட்டான்.

 

அதன்பின் கணவருக்கு போன் செய்ய, “கிளம்பி இரு, பத்து நிமிஷத்துல வர்றேன் போலாம்”.

 

“கிளம்பி தான் இருக்கேன். சீக்கிரம் வாங்க”.

 

“சம்மந்திய பாக்க அவ்வளவு அவசரம்” என்றார் பலமாக சிரித்துக் கொண்டு.

 

“சீக்கிரம் வந்து சேருங்க” என்று சிடுசிடுத்துவிட்டு வைத்துவிட்டார் ராஜம்.

 

இன்று சந்தோஷமாக ஈ என இழித்தவாறு கிளாஸினுள் நுழைந்தாள் ஆறு, “என்னடி குண்டு எல்.இ.டி. பல்பு நடந்து வருது?” லட்சு சத்தமாக அமலாவிடம் கேட்க.

 

“இன்னைக்குத் தான் பியூஸ் மாத்திருப்பாங்களா இருக்கும்” அமலா சொல்ல.

 

“இருக்கும் இருக்கும், அது நம்மள சுட்றாம பாத்துக்கணும், கேர்புல்லா இருக்கணும்” என இரு பக்கமும் அமர்ந்திருந்த நிலா, அமலாவையும் பார்த்து கைகோர்த்துக் கொண்டாள்.

 

“என்ன ரெப் மேடம் காலையிலேயே பல்பு பத்தி பேசிட்டுருக்கீங்க? நமக்கு இந்த வருஷம் எலக்ட்ரிக்கல் லேப் கூட கிடையாதே” என்றவாறு வந்து அமர்ந்தாள் எழில்.

 

“ஏன் நா ரெப்புன்றது நாலு நாளா அமினிஷியால இருந்தனால தெரியலயோ?”.

 

“விடுறி விடுறி, அது ஏதோ டென்ஷன். ஆமா நீ எப்ப இடம் மாறின? இந்தப் பக்கம் வா. என் கேட்டுக்குள்ள இருந்தா தானே நீ கரெக்டா இருப்ப”.

 

“இவ பெரிய இவ போடி. பைத்தியக்காரிக் கூட உட்காரலாம், சைக்கோ கூட உட்கார முடியுமா? ஆள விடுடி” என இவர்கள் சண்டை தொடர்ந்து கொண்டிருக்க, ஸ்டாப் வந்திருக்க பின் அன்றைய வகுப்புகளில் நாளை கடத்தினர்.

 

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
9
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்