22. நெஞ்சுக்குள்ளே காதல் விழா

Loading

அத்தியாயம் 22

ரஞ்சனி தயாரித்துத் தந்த தேநீரை அருந்திக் கொண்டிருந்தான் கணியன். சில நொடிகளில் மௌனி பணி முடிந்து இல்லம் வந்து சேர, “ஹாய் அக்கா..”

“ஹாய்டா.. என்ன இந்த டைம்ல இங்க வந்திருக்க?”

“நான் உங்க மேல கோபமா இருக்கேன்.”

மெலிதாய்ப் புன்னகைத்தவள், “எதுக்கு?”

“எங்கேஜ்மெண்ட் ஆகி இருக்கு. ஒரு வார்த்தைக் கூட சொல்லவே இல்ல?”

“ரஞ்சு சொன்னாளாக்கும்.?”

“ம்ம்..”

“எங்கேஜ்மெண்ட் விஷயத்தை மட்டும் தான் சொன்னாளா? மத்த எதுவும் சொல்லலையா?”

“எல்லாத்தையும் தான் சொல்லுச்சு, அந்த பிசாசு.”

“அங்க இருந்த சுச்சுவேஷன்ல, எனக்கு உன்னோட ஞாபகம் வரல. ஸாரிடா..”

“ச்சோ.. அக்கா. அது பரவாயில்ல. உங்களுக்கு மாப்பிள்ளைய பிடிச்சிருக்கு இல்ல?”

“ம்ம்..”

“அது போதும். எங்கேஜ்மெண்டுக்குச் சொல்ல மறந்துட்டீங்க, ஓகே. நீங்க சாரி வேற கேட்டதால, தம்பி பெரிய மனசு பண்ணி உங்களை மன்னிச்சுடுறேன். மேரேஜுக்கும் என்னை மறந்து சொல்லாம விட்டுடாதீங்க, என்ன?”

“அதெல்லாம் மறக்க மாட்டேன். நீதான் மணமேடையில எனக்குத் தம்பியா வந்து நிக்கப் போற. ஓகேவா?”

“அடடா! பொண்ணு வீட்டு சார்பா ஃபோட்டோ கிராஃபர் ஆகி கல்லா கட்டலாம்னு பார்த்தா, இப்படி உங்களுக்குத் தம்பி ஆக்கிட்டீங்களே? அக்கா கல்யாணத்துல வேலை செய்யிறதுக்கு, பணம் வாங்க முடியாதே?” என அவன் பொய்யாய் வருத்தம் கொள்ள, சிரித்தாள் மௌனி.

“எங்க ரஞ்சு, ஆளைக் காணோம்? வெளிய ஸ்டாண்ட்ல ஸ்லிப்பர் இருந்துச்சே?”

“ரெஸ்ட் ரூம் போயி இருக்கா.”

“எதுவும் வேலையா கணி?”

“ஏன் க்கா, அப்படி கேக்குறீங்க?”

“பொதுவா இந்த மாதிரி எல்லாம் இங்க வந்து உட்கார மாட்டியே.?”

“ரஞ்சுவோட ஸ்கூட்டி ரிப்பேர். அதான் அதைக் கொண்டு போயி மெக்கானிக்கிட்ட விட்டுட்டு, அவளை வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தேன். டீ’ன்ற பேர்ல எதையோ போட்டுக் கொடுத்துட்டு, வர்றேன்னு சொல்லிட்டு போச்சு பிசாசு. சொல்லாம எப்படி போறதுனு வேற வழி இல்லாம, நான் உட்காந்து இருக்கேன்.”

“டீ மட்டும் தானா? வேற எதுவும் சாப்பிட கொடுக்கலயா, உன்னோட மாமா பொண்ணு?”

“அவனுக்கு டீ போட்டுக் கொடுத்ததே பெருசு. அதுக்கு மேல வேற என்ன தரணும்?” என்றவாறே உடைமாற்றி வந்தாள் ரஞ்சனி.

குழலை மொத்தமாய் அள்ளிக் கொண்டை இட்டவளைப் பார்த்து, “நன்றி மறப்பது நன்றன்று, என்னோட மாமன் மகளே!” எனச் சீண்டலாய் உரைத்தான் கணியன்.

“அதான் டீ குடிச்சியே? நன்றி மறந்தாங்களாம், பேச்சைப் பாரு!”

சிரித்த கணியன், “மௌனி அக்கா, அந்த சந்துரு..”

அவள் கேள்விப் பார்வையுடன், “உனக்கு எப்படித் தெரியும்?”

“நான்தான் சொன்னேன் படி! அவன் இன்னைக்குக் காலையில நடந்துக்கிட்ட விதம், எனக்குச் சரியா படல. நாம ரெண்டு பேரும் தனியா இருக்கிறோம்னு, முட்டாள்தனமா எதுவும் செஞ்சிடக் கூடாது இல்ல. அதான் கணியனை அடிக்கடி வந்து போக சொல்லி இருக்கேன். டெய்லி நீயே வந்து என்னை டிராப் பண்ணுறியாடா?” என ரஞ்சனி தனது மன எண்ணத்தை உரைத்து அத்தை மகனிடம் உதவி வேண்ட, “நான் இங்க இருக்கும் போது, ஸுயரா வர்றேன். வேலையா வெளியூர் போறப்ப மட்டும் நீ பார்த்துக்க.”

“அது பரவாயில்ல. அட்ஜெஸ்ட் பண்ணிக்கிறேன்.”

தலை அசைத்த கணியன், “அக்கா, உங்க வீட்டுல இதைப் பத்திச் சொல்லலாம்ல?” என வினவினான் மௌனிகாவிடம்.

வலிந்து புன்னகைத்தவள், “யாருக்கிட்ட சொல்லுறது? அப்படி சொல்லுறதுக்கு எனக்குனு யாரும் இல்ல. ஆச்சியோட ஹெல்த் இருக்கிற நிலைமைக்கு, அவங்கக்கிட்ட எல்லாம் சொல்ல முடியாது!”

“என்னக்கா நீங்க? நாங்க இருக்கோம் உங்களுக்கு.” என்று அருகே சென்று அவளின் கரத்தை, ஆதூரமாய் பற்றினான் கணியன்.

“ஏன் படி, இப்படிப் பேசுற? அதான், இப்ப எங்கேஜ்மெண்ட் ஆகிடுச்சே? உன்னோட வுட்பி இருக்காரே? காலையில நீ அவரைப் பத்திச் சொன்னதை வச்சுப் பார்த்தா, நிச்சயம் சந்துரு விஷயத்துல ஏதாவது ஆக்ஷன் எடுப்பாருனு தான் தோணுது.”

“மேரேஜுக்கு முன்னாடியே, அவரை பிரச்சனையில இழுத்துவிட சொல்லுறியா? அதுவும் இல்லாம அவருக்கிட்ட விஷயத்தைச் சொன்னா, ரெண்டு பேரோட வீட்டுக்குமே தெரிய வந்திடும். எங்கேஜ்மெண்ட் முடிஞ்சதுமே இது என்ன, இப்படினு நெகட்டிவ் தாட் வர்றதுக்கான வாய்ப்பு இருக்கு. எல்லாருக்குமே வீணான மன சங்கடம். விடு பார்த்துக்கலாம்.”

“ரிஸ்க் எடுக்கணுமா படி?”

“எனக்கு இன்னுமே கன்ஃபர்மேஷன் ஆகல படி!”

இருவரும் அவளைப் புரியாது பார்க்க, “நிச்சயத்துக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி சட்டுனு ஃபங்ஷனை நிறுத்துனவரு, கல்யாணத்துக்கு முன்னாடி எங்களுக்குள்ள ஏதாவது பிரச்சனை வந்தா இதையும் உடனே ஸ்டாப் பண்ண மாட்டாருனு என்ன உறுதி?”

கணியன் கனத்த மனதுடன் அவளைப் பார்க்க.. ரஞ்சனி பதற்றத்துடன், “என்ன படி, இப்படி பேசுற?” என்றாள்.

“எதுவும் நடக்கலாம் தான? அதுவும் இல்லாம இதுவரைக்கும் என்னோட லைஃப்ல வந்த ஸ்ட்ரகில்ஸை நானே தான் ஃபேஸ் பண்ணி இருக்கேன். யார்க்கிட்டயும் ஹெல்புனு கேட்டது இல்ல. சோ.. இதையும் என்னால ஹாண்டில் பண்ண முடியும். பார்த்துக்கலாம்!”

மௌனியின் தனிமையான வாழ்வு.. ‘அவளுள் எவ்விதமான பாதுகாப்பு அற்ற உணர்வுகளையும் நம்ப மறுக்கும் மனதையும் உருவாக்கி இருக்கிறது.’ என இருவரும் இந்நொடியில் உணர்ந்து கொண்டனர்.

“நீ ஒன்னும் தனியா இல்ல படி. உன்கூட நாங்களும் இருக்கோம்!” என ரஞ்சனி தோழியின் பின்னிருந்து அணைத்து தொளில் தாடையை பதித்து உரைத்திட, மெலிதாய்ப் புன்னகைத்தாள் மௌனிகா.

வீட்டிற்கு முன்னரே தகவல் சொல்லிவிட்டு, இரு பெண்களுடனும் இணைந்து அன்றைய இரவு உணவை முடித்துவிட்டு பதினோறு மணிக்கு மேல்தான் அங்கிருந்து கிளம்பினான்.

ரஞ்சனி அவளின் அறைக்குச் சென்று விட, படுக்கையில் விழுந்தாள் பாவை.

பணி முடிந்து இல்லத்திற்கு வந்ததில் இருந்து கணியனுடனும் தோழியுடனும் நேரத்தைக் கடத்தியவள், அப்பொழுது தான் கைப்பேசியைக் கையில் எடுத்தாள்.

பணியின் காரணமாக அமைதி நிலைக்கு மாற்றப்பட்டு இருந்த கைப்பேசி, ரெங்கநாயகி மற்றும் சரணிடம் இருந்து வந்த இரு தவறிய அழைப்புகளையும், ஆடவன் அனுப்பிய ஒரு குறுஞ்செய்தியையும் தாங்கிக் காட்சி அளித்தது.

மணியைப் பார்த்தாள். பதினொன்றரை.

‘ஆச்சி இந்நேரம் மாத்திரை போட்டு தூங்கி இருப்பாங்க. காலையில பேசிக்கலாம்!’ என முடிவெடுத்தவள், ஆடவன் அனுப்பிய குறுஞ்செய்தியைத் திறந்தாள்.

“கால் பண்ணேன், நோ ரெஸ்பான்ஸ். பிஸியா மோனி? ஃப்ரீ ஆனதும் பேசு!” என்று தட்டச்சு செய்து இருந்தான்.

‘லேட் ஆச்சு. முழிச்ச இருப்பாரானு தெரியலயே?’ என ஒரு நொடி சிந்தித்தவள், ‘முழிச்சு இருந்தாலும் சரி, இல்லனாலும் சரி.. ரிப்ளை பண்ணிடுவோம். அவருக்கு நான் ரெஸ்பான்ஸ் பண்ணலனு நினைச்சிடக் கூடாது!’ என்று சரணிற்குக் குறுஞ்செய்தியைத் தட்டி விட்டாள் பாவை.

கைப்பேசியின் அறிவிப்பு ஒலி கேட்டது.

அரிசி ஆலையின் கணக்கு வழக்குகளை நோட்டில் எழுதிக் கொண்டிருந்த ஆடவனின் கவனம் கலைய, அதனை எடுத்து நோக்கினான்.

“ஆர் யூ தேர்?” என வருங்கால மனைவியிடம் இருந்து செய்தி வந்திருந்தது.

“எஸ். பேசணும் மோனி. இப்ப ஓகேவா உனக்கு? கால் பண்ணவா? இல்லேனா நாளைக்குப் பேசுவோமா?” என்று மறுசெய்தி அனுப்பினான் அவனும்.

அடுத்த நொடி பாவையே அழைத்து விட்டாள்.

“ஹலோ..”

“சொல்லுங்க சரண், என்ன விஷயம்?”

“ரொம்ப பிஸியா மோனி? மெசேஜையே இப்பதான் பார்த்திருக்க?”

“ஸாரி.. மொபைலை சைலண்ட் மோட்ல போட்டிருந்தேன், அதான் நீங்க கால் பண்ணது தெரியல. பிஸினு எல்லாம் இல்ல, ஃப்ரெண்ட்கிட்ட பேசிட்டு இருந்தேன். இடையில ஃபோனை பார்க்கல. சோ..” என உண்மைமை உரைத்தாள்.

மெலிதாய்ச் சிரித்தவன், “ஓகே. யார் அந்த ஃப்ரெண்ட்னு தெரிஞ்சிக்கலாமா.?’

“பேர் ரஞ்சனி. என்கூட தங்கி இருக்கா. நாங்க ரெண்டு பேரும் தான், ஹவுஸ் ரெண்ட்டை ஷேர் பண்ணிக்கிறோம்.”

“ம்ம்..”

“என்ன பேசணும் சரண்?”

‘மேரேஜ் டேட் செலக்ட் பண்ணணும். ஜோசியர், ஒரு நாலஞ்சு டேட் சொல்லி இருக்காரு.”

“உங்களுக்கு எது கன்வீனியண்ட்டா இருக்கோ, அதை செலக்ட் பண்ணுங்க.”

“ஓகே, அதுக்கு முன்னாடி நாம கொஞ்சம் பேசுவோமா?”

“ம்ம்.. ஸுயர். சொல்லுங்க.”

“உனக்கு எங்க கல்யாணம் செஞ்சுக்கணும், மண்டபத்துலயா கோயில்லயா?”

“ஏன் இந்த கொஸ்டின்?”

“ரெண்டும் வேற வேற எக்ஸ்பீரியன்ஸ் மோனி. மண்டபம்னா.. ஐயரைக் கூப்பிட்டு, அக்னி வளர்த்து, புகையில உட்கார்ந்து, கண் எரிச்சலோட ஒவ்வொரு சடங்கையும் செஞ்சு மேரேஜ் பண்ணிக்கணும். கோயில்லனா, சாமி முன்னாடி தாலி கட்டுறது மட்டும் தான். சொல்லு, உனக்கு எது வேணும்.”

“நீங்க என்ன நினைக்கிறீங்க?

“கோயில் பெஸ்ட். சிம்பிளா பத்து நிமிஷத்துல முடிஞ்சிடும். மண்டபம்னா, மந்திரம் சொல்லி ரெண்டு மணி நேரம் உட்காரணும். கொஞ்சம் கஷ்டம்!”

“எதுக்குக் கஷ்டப்படணும், ஈஸியான ஆப்ஷன் இருக்கும் போது? நாம சிம்பிளாவே செஞ்சுக்கலாம்!”

“குட்.. அப்ப நான் டேட்ஸ் அனுப்புறேன் பார்த்து சொல்லுங்க.”

“உங்களையே செலக்ட் பண்ண சொன்னேனே?”

“மோனி.!” என அவன் சற்று அழுத்தமாய் அழைக்க.. ஆடவனின் குரல் மாற்றத்திற்கான பொருளை உணர்ந்து கொள்ள முடியாமல், “என்ன சரண்?” என்றாள்.

மெலிதான பெருமூச்சை விட்டுக் கொண்டவன், “உனக்கு ரெகுலர் பீரியட்ஸா, இர்ரெகுலர் பீரியட்ஸா?”

எதிர்பாராத அவனது திடீரென்ற வினாவில் சற்றே திகைத்தவள், “என்ன கேட்டீங்க?”

“பீரியட்ஸ் டைம்ல கோவிலுக்குள்ள போக முடியாதுமா. டேட் செக் பண்ணணும் இல்ல?”

அவன் தன்னை ஏன் திருமண தேதியை தேர்ந்தெடுக்க சொன்னான் என்பதற்கான காரணம் புரிய, “ஸாரி, நான் இதை யோசிக்கல.”

“இட்ஸ் ஓகே மோனி!”

அவள் அமைதி காக்க, “என்னோட கொஸ்டினுக்கு, இன்னும் பதில் வரலயே?”

“இர்ரெகுலர். பட் ரொம்ப எல்லாம் டேட் டிஃபர் ஆகாது. மேக்ஸிமம் ஒன் வீக்குள்ள முன்ன பின்னனு மாறி வரும்.”

‘லாஸ்ட் மந்த் டேட்?”

“தேர்ட்டீன்!”

“ஹோக், மார்ச் டிவன்டி ஃபைவ் ஓகேவா?”

“ம்ம்.. பட் ஃபார்ட்டி டேஸ்தான இருக்கு?”

“அரேஞ்ச்மெண்ட்ஸ் எல்லாம் நான் பார்த்துக்கிறேன். உனக்கு சம்மதமானு மட்டும் சொல்லு.”

“ஓகேதான் சரண்!”

“உன்னோட வாய்ஸ் சரி இல்லயே மோனி?”

புரியாது விழித்தவள், “ஹான்?”

‘நேத்து நீ கிளம்பும் போது இருந்த மோனி இல்ல நீ! ஏதோ மிஸ் ஆகுதே?”

மெலிதாய் புன்னகைத்தவள், “அது எப்படி இவ்வளவு உறுதியா சொல்லுறீங்க?”

“இங்க, ஊர்ல நாம பேசும் போது எல்லாம் உன்னோட குரல்ல ஒருவிதமான நிமிர்வும் கான்ஃபிடன்ஸும் இருக்கும். ஆனா, இப்ப அது மிஸ்ஸிங். தூரம், மனுசங்களோட இயல்பை மாத்தும் தான். ஆனா, ஒரே நாள்ல எப்படி?”

“ஒன்னும் இல்ல. லேட் நைட் ஆகிடுச்சு இல்லையா? இந்த டைம்ல, நான் வழக்கமா தூங்கிடுவேன். ஆனா இன்னைக்கு..” எனப் பாதியில் நிறுத்திட, “சரி, அப்ப நீ முதல்ல ரெஸ்ட் எடு. மீதியை நாளைக்குப் பேசிக்கலாம்!” என்று பேச்சை முடித்தான் சரண்.

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 70

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
68
+1
2
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்