Loading

 

 

 

அத்தியாயம் 22

 

சிறிது நேரம் மௌனம் நிலவியது அந்த அறையில். அந்நேரம் “ம்மா என்ன கதவ திறந்து போட்டு உட்கார்ந்துருக்க?” என கேட்டுக் கொண்டே உள்ளே வந்தாள் ஆறெழில். 

 

அவனை கண்டதும் கப்பென வாய் மூடிக்கொள்ள, அறைக்கு செல்ல நடந்தவளை, “எழில் என்ன பழக்கம் இது? வந்தங்கள வாங்கன்னு கேளு” என்றார் ஜெயந்தி. 

 

“ப்ரெசிடெண்ட் ஒன்னும் விருந்தாளு இல்ல” என்று விட்டு சென்று விட. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர். 

 

“சரி ஆண்ட்டி, அப்ப நா கிளம்புறேன். நாளைக்கு காலேஜில வேணும்னா பேசிக்கிறேன்” என அவன் எழ. 

 

“வேணாம்ப்பா எதுனாலும் இங்கேயே பேசி சரி பண்ணிக்கோங்க. காலேஜ்ல போய் உக்காந்து மணி கணக்கா பேசுறதெல்லாம் வேணாம்” என எழுந்து சென்றார். 

 

உள்ளிருந்தவளிடம், “அந்த பையன இத்தோட அத்துவிட்டுறலாம்னு முடிவு பண்ணிட்டேன்னா போய் மூஞ்சிக்கு நேரா சொல்லி அனுப்பிட்டு வந்துரு. சும்மா எதுக்கு ஓடி ஒளிஞ்சிட்டுருக்க. பேச பிடிக்ல வேணாம்னா முடிவா சொல்லியே அனுப்பிடு. ௭னக்கும் பொண்ணு ௭ப்போ ௭ன்ன பண்ணுவாளோன்ற பயமில்லாம இருக்கும்” என்ற பின், அவரை முறைத்தவாறே சென்று அவன் எதிரில் அமர்ந்தாள். 

 

கொஞ்ச நேரம் அவளையே குறு குறுவென பார்த்தான். ஸ்கர்ட்டும், டாப்பும் அணிந்து, முடியை ஏற்றி கொண்டையிட்டு, சிறிய கண்ணுக்கு தெரியாத அளவில் பொட்டு வைத்து எங்கோ பார்த்து அமர்ந்திருந்தாள். அப்படி இருப்பவளைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் தான் தோன்றியது. 

 

“எழில்” ௭ன அழைத்து பார்த்தான். அவளிடம் ரியாக்ஷன் இல்லை, “எழில் இங்கப் பாரு. இப்ப நா என்ன செஞ்சா சமாதானம் ஆகுவ? ௭த்தன நாள் இப்டியே மூஞ்ச தூக்கி வச்சுக்கிட்டு இருக்க போற?”, ௭ன்க. அதற்கும் அந்த பக்கம் பதில் இல்லை.

 

“சரி சாரி, நீ எதுக்காக கோவமா இருக்கன்னே தெரியல, இருந்தாலும் உன்ன மூணு நாளா கோவத்துல சுத்த விட்டதுக்கு ரெம்ப ரெம்ப சாரி. நீ என்னன்னு சொன்னா தான், நா என்ன செஞ்சு உன்ன கோபப்படுத்துனேன்னு தெரிஞ்சுக்க முடியும், சொல்லு மா ப்ளீஸ்”. 

 

இப்பொழுது திரும்பி அவன் முகத்தை பார்த்தாள், பேசவில்லை, “சரி நா வேணும்னா பனிஷ்மென்ட்க்கு கைய தூக்கிட்டு ஷோபா மேல ஏறி நிக்கட்டா?” என அவன் வேகமாக எழ, ஓடி வந்து இறுக்கி கட்டிக்கொண்டாள்.

 

உள்ளிருந்து இருவர் பேசுவதிலும் கவனத்தை மட்டும் வைத்து, துணியை மடித்து கொண்டிருந்த ஜெயந்திக்கு வெளியே நடப்பது தெரிய வாய்ப்பில்லை. 

 

எனவே ‘அந்தப் பையன் எம்புட்டு இறங்கி வருது, கிறுக்குத்தனம் பிடிச்சவ, ஊம கொட்டானாட்டம் உக்காந்துருக்காளோ. நம்மளாது அந்த பையன சோஃபா மேலலா ஏறவேணாம்னு சொல்லுவோமா, நாம போனா அந்த புள்ளைக்கு ரொம்ப எம்ப்ராசஸிங்கா இருக்குமோ?. பரவாயில்ல நாம சொன்னத புரிஞ்சுகிட்டு இவ்வளவு தூரம் இறங்கி வந்து பேசுது அந்த புள்ள. இனி இவளுக்குத் தான் புரிய வைக்கணும்’ என அவர் போக்கில் நினைத்து முடிவு எடுத்துக் கொண்டார்.

 

ஒரு சின்ன விஷயமும் தன் பெண்ணின் வாழ்க்கையில் பெரிய பிரச்சனையாக உருமாறும் முன் அதை சரி செய்திட நினைத்தார் ஜெயந்தி. அதில் அவர் பெண்ணின் நிம்மதி அதி முக்கியமானதாக நினைத்தார். 

 

அவள் வந்து கட்டிக்கொள்ளவும், தானும் இறுக்கிக் கொண்டவன். பின் ஆண்ட்டியை நினைத்து பதறி ‘எழில்’ என விளக்கி நிறுத்த, விட மாட்டேன் என்பது போல் நின்றிருந்தாள் அவள். 

 

“அடிப்பாவி நடு வீட்ல இப்டி நின்னா ஆண்ட்டி வந்து பாத்துட்டு, இனி என்ன வீட்டுக்குள்ளயே வர விடாம துரத்துறதுக்கா இப்டி பிளான் பண்ற” என்ற பின், அவன் கையில் அடித்து விட்டு விலகி நின்றாள். 

 

“பேசிப் பிரச்சினயத் தீத்துக்கலாம் எழில், சொல்லு எதுக்கு 4 நாளா பேச முடியாத அளவுக்கு ௭ன்மேல கோபம்?”.

 

“ஃபர்ஸ்ட் நீங்க சொல்லுங்க, அந்த பையன் அப்டி சொல்லிட்டு போனதுக்கு நா என்ன பண்ண முடியும்? நீங்க ஏன் கோவப்பட்டிங்க?”. 

 

“அவேன் சொன்னது என் கோவமில்ல. நீ ஏன் டக்குனு பதில் சொல்லாம யோசிச்ச? அப்ப நீ இன்னும் உன் முடிவுல ஸ்ட்ராங்கா இல்லன்னு தான அர்த்தம். ஸ்கூல்ல படிக்கும் போதே என்ன சொன்னேன், நமக்கு இன்னும் வயசு இருக்கு, உன் மனசு மாறலாம்னு சொன்னேன். ஆனா நீ அன்னைக்கு ஸ்ட்ராங்கா இது க்ரஷ் இல்லன்னு ப்ரூவ் பண்றேன்னு பேசிட்டு, இன்னைக்கு யோசிச்சு நின்னனா, என்ன அர்த்தம்? அதான் கோவம் வந்துருச்சு”. 

 

“அப்ப இன்னும் நீங்க என்ன நம்பல??, நா யோசிச்சதும், என் லவ் ஸ்டராங்கா  இல்லன்னு சந்தேக பட்ருக்கிங்க அப்டித்தான?” அவள் இடுப்பில் கை வைத்து முறைத்து கேட்க. 

 

“ஏய் நீ என்ன பெரிய வர்ட்ஸ்லா யூஸ் பண்ற. நா ஜஸ்ட் நெனச்சேன் அவ்வளவுதான்”. 

 

“இன்னும் நா சொன்ன லவ்வ அக்ஸப்ட் பண்ணாத உங்களுக்கே அவ்வளவு கோவம் வருதுன்னா. நீங்க 12த் முடிச்சுட்டு சொல்லாம போனத நெனச்சு ஃபீல் பண்ணி, ஸ்கூலுக்கு மார்க் சீட் வாங்க வந்தப்போ பி.டி., சார்ட்ட நீங்க சொல்லிட்டு போனத வச்சி, அவர கரெக்ட் பண்ணி, நீங்க சேந்த காலேஜ் தெரிஞ்சுகிட்டு, அதுக்காகவே அந்த காலேஜ்ல சேருரதுக்காகவே படிச்சு, கவுன்சிலிங்ல நீங்க படிக்கிற காலேஜ் அவைலப்ல்லா இருக்கணுமேன்னு பயந்து, சி.எஸ்.சி எடுக்க முடிவு பண்ணி போனவ அந்த காலேஜ்ல  இ.சி.இ மட்டும் தான் அவைலப்லா இருக்குன்னு தெரிஞ்சும் அத எடுத்து வந்து சேந்துருக்கேன், இதுல இன்னும் நீங்க அம்மாகிட்ட கேக்கணும், ஆண்ட்டிட்ட கேக்கணும்னு எத சொல்லி தட்டிக் கழிச்சாலும், நா எடுத்த ஸ்ட்ராங் டெசிஸன் மேல் உள்ள நம்பிக்கையில தான் எல்லாரயும் சமாளிக்கிறேன். ஆனா அந்த சின்ன விஷயம், இதுக்கு முன்ன என் முன்ன யாரும் இப்டி சொன்னதில்லாதனால வந்தப் பயத்துல ஒரு ரெண்டு செகண்ட் யோசிச்சு நின்னுட்டேன், அதயும் உங்கட்ட தான வந்து சொன்னேன், கோவிச்சுட்டு போனீங்களே! சமாதானப்படுத்த, நீங்க கிளம்புற வர எத்தன டைம் கூப்டேன், மூஞ்சிய மூஞ்சிய பாத்தேன் கண்டுக்கிட்டிங்களா? அவ்வளவு ஈகோ”. 

 

அவன் ஏதோ சொல்ல வர, கை நீட்டி தடுத்தவள், “நா இன்னும் முடிக்கல” ௭ன்றுவிட்டு, “அன்னைக்கு மறுநாள், ஒரு சின்ன எக்ஸ்பெக்ட்டேஷன், நைட்டு கோவமா போன வச்சோமே, ௭ப்டியும் நம்மல கன்சோல் பண்ண தான வெய்ட் பண்றாங்க, கிராஸ் பண்ணி போனா கூப்பிடுவீங்களான்னு பாப்போம்னு, ஆனா நீங்க கூப்பிடல. லூசு மாறி உங்களுக்கு தெரிலன்னும், நீங்க பாக்கலன்னும் நினச்சுட்டு, மரத்த சுத்தி திரும்ப திரும்ப வேற நடந்துருக்கேன்”, அதற்குமேல் சொல்ல விடாமல் அழுகை வந்து நிறுத்த, கேட்டுக் கொண்டிருந்த இருவருக்குமே பல விஷயங்கள் அப்பொழுது புரிந்தது. 

 

ப்ரகலத்தனுக்கு மிகவுமே கஷ்டமாக இருந்தது. “ரெம்ப சாரிமா, ரியலி பீல் வெரி சாரி. நா இவ்ளோலா யோசிக்கல. நா சும்மா, உன்ன டீஸ் பண்ண அப்டி பண்ணேன்”. 

 

“இல்ல, நா உங்கள வேணும் வேணும்னு வர்றதுனால தான நீங்க இப்டி டீஸ் பண்ணி பாக்குறீங்க”. 

 

“நா சும்மா விளையாட்டா பண்ணத நீ ஏன் சீரியஸா எடுக்கமா. சரி ஓ.கே அழாத, என்னயிருந்தாலும் தப்பு என்னிது. உன்ன நா இன்னும் சரியா அண்டர்ஸ்டாண்ட் பண்ணலன்னு புரியுது. இனி பண்ணிக்க ட்ரை பண்றேன். ஓகேவா ரிலாக்ஸ்” என அவ தோளில் தட்டி கொடுத்தவன், “கடைசி அந்தப் பிரச்சன என்னாச்சு? அவேன் மறுபடியும் வந்தானா? இல்லையா?” அவள் இதை பற்றி பேச மீண்டும் அழுவாளென அடுத்த டாப்பிக்கிற்கு அழைத்துச் சென்றான். 

 

“உங்கள வந்து கேட்டுக்க சொன்னேனே, வரலியா?” என பதில் கேள்வி கண்ணை துடைத்துக்கொண்டு இவள் கேட்க. 

 

“என்ட்டயா? என்ன சொல்ற? யாரும் வந்து உன்ன பத்தி என்ட்ட பேசலையே?” இவன் யோசிக்க. 

 

“டியூஸ்டே வந்து, என்ன டிசைட் பண்ணிருக்க? ஓகே வான்னு கேட்டாங்க. அத நா மட்டும் சொல்ல முடியாது சீனியர், என்ன என்கேஜ் பண்ணுனா என் வுட்பியும் சேந்துல சொல்லணும்னு சொன்னேன். அப்பவும் உனக்கு ஓகேன்னா சொல்லு யார்ட்ட வேணாலும் நா பேசுறேன்னு சொன்னான். இதுக்கு பதில் நா அவர்ட்ட சொல்லிட்டேன், நீங்க அவர்ட்டயே கேட்டுக்கோங்க. நேம் ப்ரகலத்தன், ஏரோ பிளாக் போய் யார்ட்ட கேட்டாலும் சொல்லுவாங்க. ஏன்னா இப்ப அந்த டிபார்ட்மெண்ட் பிரசிடென்ட் அவங்க தான்னு சொல்லிவிட்டேனே. ஏன் வரல??” இவள் சிரிக்காமல் சொல்ல.

 

பலமாக சிரித்தவன், “உன்னயெல்லாம் வச்சுக்கிட்டு, சரியான ஆள் தான் நீ. அங்க வந்து யார்ட்ட கேட்டுருந்தாலும் நம்ம மேட்டர சொல்லிருப்பாங்க, அதுதான் என் வரைக்கும் வரலன்னு நினைக்கிறேன். சேட்டடி உனக்கு” என அவள் கன்னத்தை கிள்ளி சொன்னான். 

 

“ஸ்ஸ் வலிக்குது ப்ரெசிடெண்ட்” இவள் கத்த, 

“அய்யோ கத்தாத ஆண்ட்டி வந்து….” இவன் முடிக்கும் முன் வந்திருந்தார் அவர். 

 

“என்னாச்சு?” என்ற டீச்சர் குரலில் கேட்டுக்கொண்டு. 

 

“சும்மா பேசிட்டு இருந்தோம் ஆண்ட்டி” என இவன் சமாளிக்க, தயக்கத்துடன் சொல்ல, அவர் மேலும் முறைக்க, ஆறெழில் கலகலத்து சிரித்தாள். 

 

அதன்பின் அவன் கிளம்ப போக, “இருப்பா நேரம் ஆனதே ஆச்சு சாப்பிட்டு போலாம்” என்க. 

 

“இருக்கட்டும் ஆண்ட்டி”.

 

“அட இருப்பா, நாலு நாளா இவ மூஞ்சிய பாக்க சகிக்காம ஏனோ தானோன்னு சாப்பிட்டு நாக்கு செத்துப் போச்சு, இன்னைக்கு தான் நல்லதா ஏதாவது செஞ்சு சாப்பிடணும். சோ இரு சேத்து செய்றேன், சாப்பிட்டு போ”. 

 

அவன் ஒத்துக் கொள்ள, அவனுக்கு டிவியை போட்டுவிட்டு ஆறெழிலையும் உடன் இழுத்துக்கொண்டு அடுப்படி சென்றார். 

 

“அம்மா நா என்னம்மா செய்ய போறேன். நீயே செய் அப்பதான் அது சாப்டுற மாறி நல்லா வரும்” என்றாள் சிணுங்கிக்கொண்டே. 

 

“கெஸ்ட் இல்லன்னு மட்டும் சொல்ல தெரிஞ்சதுல்ல, ஒழுங்கா எனக்கு ஹெல்ப் பண்ணு, வீட்டு ஆளுக்கு சாப்பாடு செய்ய. பஸ்ட் டைம் சாப்பாடு செய்ற அதனால ஏதாவது ஸ்வீட் செய்”. 

 

“எனக்கு எந்த ஸ்வீட் செய்ய தெரியும்னு என்ன செய்ய சொல்லுற?”.

 

“திங்க தெரியுமா? வாய் பேசாம நா சொல்றத செய். பஸ்ட் அடுப்ப பத்த வச்சு, வட சட்டியில் தண்ணி புடிச்சு அடுப்புல வை, கொதிக்கவும் அதுல கொஞ்சம் அளந்து சீனி போட்டு, அது கரைஞ்சதும் இந்த சேமியாவ கிண்டி இறக்கு. அந்த கைக் கரண்டியில் நெய் விட்டு முந்திரி, கிறிஸ்மஸ் வறுத்தெடுத்து அது கூட தட்டு முடிஞ்சிடும்”. 

 

“நா இப்பதான் அடுப்பே பத்த வைக்க போறேன், நீ முடிச்சுட்ட” என்றாள், அதையும் பற்ற வைக்காமல். 

 

“சரி உடனே நின்னு கத பேசாத, ஒன்னொன்னா சொல்றேன் செய்” என செய்ய வைத்தவர். 

 

வெங்காயம் வதக்கி, சட்னி அரைத்து தோசை ஊற்றி எடுத்தார். ஆளுக்கு ஒரு முட்டை தோசை வேறு, பின்பு மூவருமாக சாப்பிட அமர, “கேசரி எப்டி இருக்கு?” என்றாள் முந்திக்கொண்டு ௭ழில். 

 

“முதத் தடவ நம்ம வீட்ல சாப்பிடுதான் நல்லா இல்லன்னு எப்டி சொல்ல முடியும், என்ன தம்பி?” என்றார் ஜெயந்தி. 

 

“இல்ல ஆண்ட்டி, நிஜமாவே சூப்பரா இருக்கு எல்லாமே. எதுக்கு ஆண்ட்டி முட்டை தோசையெல்லாம்” என்க. 

 

“மகாராணி கேப்பாளே. தோசன்னா கண்டிப்பா மேடமுக்கு முட்டை தோச வேணுமே, அவளுக்கு மட்டும்தான் போட்டு தருவேன். சரி ரொம்ப நாள் ஆச்சுன்னு இன்னைக்கு எனக்கும் சேத்து போட்டுகிட்டேன்”. 

 

“ஓ! சூப்பர் ஆண்ட்டி. உங்க கை பக்குவம் தான் அங்கிள்ல வெளில சாப்பிட விடாம கட்டி வச்சுருந்துச்சுன்னு நினைக்கிறேன்” என்க. 

 

“கேசரி நா செஞ்சேன்” நடுவில் ஆறு சொல்ல. 

 

“பென்டெஸ்டிக் எழில், செமையா இருக்கு”. 

 

“ஆமா எனக்கும் ரொம்ப புடிச்சிருக்கு, நா கூட நல்லா சமைக்க ஆரம்பிச்சுட்டேன். நீ பாராட்ட மாட்டியே பொறாம புடிச்ச மம்மி” என வாயை அவரைப்பார்த்து குணட்டி விட்டு சாப்பிட்டாள். 

 

மூவரும் சாப்பிட்டு முடிக்கவும் பால் எடுத்து வந்து தந்தார், அதை குடிக்க ஆறெழில் செய்த அழிச்சாட்டியமும், பின் அவர் 4 திட்டு திட்டியே குடிக்க வைத்தார். எல்லாவற்றையும் பார்த்து சிரித்துக் கொண்டு இருந்துவிட்டு விடைபெற ௭ழுந்தான்.

 

 

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
10
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்