Loading

அத்தியாயம் – 21

அமுதினியின் சிறிய வீட்டில், பலத்த அமைதி நிலவியது. ஆரவும் அமுதினியும் பக்கத்து பக்கத்திலிருந்த நாற்காலியில் தான் அமர்ந்திருந்தார்கள். அவர்களது கண்களில் இன்னும் கண்ணீர் தடயங்கள்.

ஆரவ் தன் கைகளைப் பார்த்து, “அமுதினி, நான்… நான் இன்னைக்கு இங்க வந்ததுக்கு காரணம், உன்கிட்ட மன்னிப்பு கேக்கறதோட நிறுத்திக்காம, உனக்கு ஒண்ணு சொல்லணும். நான் கவுன்சிலிங் எடுக்கப்போறேன்… ப்ராப்பர் புரொபஷனல் ஹெல்ப் தேட போறேன்…” 

அமுதினி ஆச்சரியமாகப் பார்த்துவிட்டு, “உண்மையாவா சார்?” என்றாள் நம்பாமல்!

“ஆமா… சரண்யா மேம் சொன்னது சரிதான்… நான் என் மேலுள்ள கோபத்துல தான் என் ட்ராமாவை ஹீல் பண்ணாம இருந்தேன்… அதனால்தான் நான் மத்தவங்களை ஹர்ட் பண்ற மாதிரி சிட்டியேஷன்… நான் இனி அப்படி இருக்க விரும்பல. நான்… நான் மாற விரும்புறேன்… அந்த மாற்றம் எனக்கு வாழுவதற்கான ஒரு நம்பிக்கையை தரும்னு நினைக்கிறேன்…”

அமுதினி மெதுவாகச் சொன்னாள், “அது… அது ரொம்ப பெரிய குட் டெசிஷன் சார்… நீங்க ஃபேஸ் பண்ண ட்ராமா, ரொம்ப கொடுமையானது… இத்தனை வருஷம் கழிச்சு மூன் ஆன் ஆக நினைச்சது… நான் உங்களை நினைச்சு பெருமைப்படுறேன் சார்… ஆனா நீங்க ஒண்ணு தெரிஞ்சிக்கங்க… சாரி… உங்களுக்கு தெரியாதது எதுவும் கிடையாது… ஹீலிங் எளிதான பயணம் இல்ல… அது நீண்ட, பெயின்ஃபுல் ப்ராசஸ்… ஆனா, நீங்க இப்ப தனியா இல்ல… நான் உங்க கூடவே இருப்பேன்… இருக்கலாமா சார்?”

ஆரவ் அவளைப் பார்க்க, அவனது கண்களில் ஒருவித சொல்ல முடியாத உணர்வு. 

“நீ என் கூட எப்பவும் இருப்பீயா அமுதினி? ஐ மீன் நீ எனக்கு உதவி பண்ணுவியா? நான் உன்னை நிறைய ஹர்ட் பண்ணி இருக்கேன்?” 

“சார், நான் கவுன்சிலிங் சைக்காலஜி படிக்குறேன்… ஏன்னா, மக்களுக்கு உதவணும்னு… நீங்க என்னை ஹர்ட் பண்ணினீங்க, அது உண்மை தான். பட், இப்போ எனக்கு புரியுது – அதுக்கு காரணம் உங்க ட்ராமா… நீங்க வேணும்னு எதுவும் பண்ணல… நான் உங்களுக்கு சப்போட்டா இருப்பேன்… நம்ம ரிசர்ச் ப்ராஜெக்ட் கண்டினியூ… ஆனா, ஒரு கண்டிஷன் இருக்கு!”

“என்ன?”

“நாம புரொபஷனல் கவுண்டரில் மெயின்டெயின் பண்ணணும்… நீங்க என் மெண்டர். நான் உங்க ஸ்டூடண்ட். நாம அதை எப்பவும் ரெஸ்பெக்ட் பண்ணணும்… நீங்க ஒரு புரொபஷனல் தெரபிஸ்ட்-கிட்ட போங்க…‌நான் உங்க தெரபிஸ்ட் இல்ல… நான் உங்க… ஃப்ரண்ட் ஆகலாம்… சப்போர்ட் சிஸ்டம் ஆகலாம்… ஆனா உங்க தெரபிஸ்ட் இல்ல…”

ஆரவ் ஆமோதித்து,”நீ சொல்றது சரி தான்… நான் புரிஞ்சுக்குறேன்… நான் நம்ம கேம்பஸ் கவுன்சிலிங் சர்வீஸ்-ல அப்பாயின்மெண்ட் எடுக்கிறேன். இல்லன்னா வெளியில ஒரு பெஸ்ட் ட்ராமா ஸ்பெஷலிஸ்ட் கிட்ட போறேன்…” என்கவும்,

“பர்ஃபெக்ட் சார்…” அமுதினி பெற்றதை புரிந்தாள்.

*******

சிறிது அமைதிக்கு பிறகு, 

அமுதினி, “சார், உங்க ரிசர்ச் ப்ராஜெக்ட்… நான் கோபத்துல வித்ட்ரா பண்ணிட்டேன்… ஆனா, நீங்க விரும்பினா, நான் மறுபடியும் ஜாயின் பண்ணலாம்… ஆனா, இந்தமுறை, நாம கிளியரா, ரொம்ப புரொபஷனலா இருக்கணும்…”

ஆரவ் யோசித்து,”அமுதினி, நீ வேணாம்னா வித்ட்ராவை கண்டினியூ பண்ணலாம்… நான் உன்னை ஃபோர்ஸ் பண்ண விரும்பல… உன்னோட மெண்டல் ஹெல்த் ரொம்ப முக்கியம்… சோ, டெசிஷன் இஸ் யோர்ஸ்…”

“சார், நான் நல்லா யோசிச்சிட்டேன். அது ஒரு குட் ஆப்பர்ச்சுனிட்டி… நான் அதுல திரும்ப ஜாயின் பண்ண நினைக்கிறேன்… ஆனா, நாம கொஞ்சம் rules வெச்சுக்கலாம். வீக்லி மீட்டிங்ஸ், ஸ்ட்ரிக்ட்லி ப்ராஜெக்ட் டிஸ்கஷன், நோ பர்சனல் கான்வேர்சேஷன்ஸ்… நாம இதை புரொபஷனலா வெச்சுக்குவோம்… நம்மால் முடியுமா சார்?”

“முடியும்… நான் உனக்கு ப்ராமிஸ் பண்றேன்…”

“சூப்பர்… அப்போ நான் சரண்யா மேம் கிட்ட பேசறேன்…. நாம மறுபடியும் ஃப்ரெஷ்ஷா ஆரம்பிக்கலாம்…” என்று புத்துணர்ச்சியுடன் சொன்னாள் அமுதினி.

ஆரவும் அதிசயமான புன்னகைத்து, “எஸ்… ஃப்ரெஷ் ஸ்டார்ட்… ஐ ரியலி லைக் தட் அமுதினி…” என்றான்.

*******

அவர்கள் கொஞ்ச நேரம் பொதுவாக பேசிக்கொண்டிருந்தார்கள். 

அமுதினி, ஏற்கனவே அவளது பெற்றோரின் இழப்பை பற்றி பேசியிருந்தாலும், இன்று அவளது பெற்றோரை பற்றிய பால்ய காலத்து நினைவுகளை பகிர்ந்து கொண்டாள். பின்னர், அவர்கள் இறந்த பின்னர், அவள் அனுபவித்த அதீத தனிமை, பயம், வலி. அவள் எப்படி உளவியல் துறைக்கு வந்தாள் என்பதையும் சொன்னாள்.

அப்போதுதான் இருவருமே உணர்ந்தார்கள் – இருவரும் ஒரே மாதிரியான வலி அனுபவத்தை தான் பெற்றிருந்தார்கள். இழப்பு, தனிமை, அதிர்ச்சி. ஆனால், அவர்கள் அதை வித்தியாசமாக கையாண்டுள்ளனர். அமுதினி குணமடைவதை நோக்கி நகர, ஆரவோ தன்னை தானே தனிமையில் ஆழத்தி, வேதனை கொண்டான்.

“சார், நீங்க இப்போ ஹீலிங்-க்கு ரெடியா இருக்கீங்க… அதுவே ஒரு முன்னேற்றம் தான் சார்…”

“ஆனா, எனக்கு பயமா இருக்கு அமுதினி…‌ என்னால முழுசா மாற முடியுமான்னு தெரியல…. என்னால என் கடந்த காலத்தை விட்டு வெளியே வந்து சந்தோஷமா வாழ முடியுமா?”

“சார், நம்ம குணமாகுறது அப்படின்னா பாஸ்ட்டை முழுசா மறப்பதுனு அர்த்தமில்ல… அந்த கடந்த காலத்தை ஏத்துக்கிட்டு, மன அமைதியோட சந்தோஷமா வாழணும்… ரியா உங்களுக்கு செய்ததை நீங்க மறக்க வேண்டிய அவசியமில்ல… ஆனா, அதை தூக்கி சுமந்துட்டு, இப்ப வாழ்ந்துட்டு இருக்கும் வாழ்க்கையை அழிச்சிக்க கூடாது… ஃபர்ஸ்ட், உங்களை நீங்க மன்னிக்கணும்… அப்பறம் ரியாவையும் மன்னிக்கணும்… அப்போதான் உங்களால முன்னேற முடியும்…” என்று தன் கருத்தை சொன்னாள் அமுதினி.

ஆரவ் அமைதியாக இருந்தான். அவளது வார்த்தைகள் அவனை ஆழமாகத் தாக்கின.

“நான் எப்படி ரியாவை மன்னிப்பது? அவள் என்னை… அவள் என் நம்பிக்கை உடைச்சு… ஏமாத்திட்டு போய்ட்டா…” 

“அவள் ஒரு தப்பு பண்ணிட்டா தான் சார்… ஒரு பெரிய தப்புதான்… ஆனா, அவளும் அதுக்காக கஷ்டப்பட்டாள்… குற்ற உணர்ச்சியில் தற்கொலை பண்ணிக்கிட்ட..‌. சொல்லப்போனால், அவளும் ஒரு விக்டம் தான்… ஐரா-வால் அவளும் துரோகத்தை ஃபேஸ் பண்ணியிருக்கா… உங்க மன அமைதிக்காக, சுதந்திரத்துக்காக நீங்க எல்லாத்தையும் அக்செப்ட் பண்ணி, மன்னிச்சு தான் ஆகணும்…‌” 

ஆரவின் கண்களில் மீண்டும் கண்ணீர், “நான்… நான் ட்ரை பண்றேன்… பட், எனக்கு கொஞ்சம் டைம் தேவைப்படும் அமுதினி…”

“உங்களுக்கு எவ்வளவு டைம் வேணும்னாலும் எடுத்துக்கங்க சார்… எதிலும் அவசரப்பட வேணாம்… டேக் யோர் ஓன் டைம்…” என்று நம்பிக்கையுடன் பேசினாள் அமுதினி.

******

இரவு 9 மணி ஆகிவிட்டிருந்தது.

ஆரவ் எழுந்து, “நான் கிளம்பறேன் அமுதினி…‌ உனக்கு ரொம்ப நன்றி. நீ என் பாஸ்ட்டை கேட்டது, என்னை புரிஞ்சுக்கிட்டு சப்போர்ட் பண்ணினது – எல்லாத்துக்கும் தாங்க்ஸ்…” என்று உளமார்ந்த நன்றியுடன் கூறினான்.

அமுதினியும், “சார், நீங்க தாங்க்ஸ் சொல்ல வேண்டாம்… நாம இதை சேர்ந்து ஃபேஸ் பண்றோம். நீங்க தனியா இல்ல… அதை மறக்காதீங்க…”

ஆரவ் கதவருகே நின்று, “அமுதினி, நான் நாளைக்கே கவுன்சிலிங் அப்பாயின்மெண்ட் புக் பண்றேன்… முடிச்சிட்டு நான் உன்னை அப்டேட் பண்றேன்…” சொல்லவும்,

“சரிங்க சார்… டேக் கேர்…” என்றாள் புன்னகையுடன்!

ஆரவ் வெளியேறியதும், அமுதினி கதவை மூடிவிட்டு சாய்ந்தாள். அவள் நிம்மதியாக உணர்ந்தாள். இன்று ஒரு மிகப்பெரிய திருப்புமுனை. ஆரவ் தன் சுவர்களை கீழே இறக்கிவிட்டான். அவன் உதவியை நாடத் தயாராக இருந்தான். அது ஒரு பெரிய விஷயம்.

ஆனால், அவளுக்குத் தெரியும் – இது வெறும் ஆரம்பம் தான். அதற்கு முன்னால், ஒரு நீண்ட பயணம் இருந்தது. ஆரவ் குணமடைய நேரம் எடுக்கும். அதில் அவனுக்கு சில பின்னடைவுகளும் ஏற்படும். ஆனால், இப்போது, அவன் தனியாக இல்லை. அவனுக்கு ஒரு ஆதரவாக அமுதினி துணை இருந்தாள்.

அவள் தன் நாட்குறிப்பை எடுத்து, 

“இன்னைக்கு ஆரவ் சார் என்கிட்ட வந்து, அவரோட பாஸ்ட்டை ஷேர் பண்ணினார். அந்த நம்பிக்கை துரோகம், அந்த வலி – எல்லாமே எனக்கு புரிஞ்சது… நான் அவரை மன்னிச்சிட்டேன்… ஏன்னா, அவரோட இந்த பிஹோவியர், ட்ராமா-வால் வந்துச்சு ன்னு இப்ப தெரியுது…

நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு புதிய பயணத்தை ஆரம்பிக்கிறோம். ஹீலிங்-ன் பயணம்… இது ஈஸியா இருக்காது… ஆனால், நாங்க ஒன்னா ட்ரை பண்ணுவோம்…

நான் இன்னமும் ஆர்வ சாரை லவ் பண்றேன்… அது மாறாது… ஆனா, நான் அதை அவரிடம் சொல்ல மாட்டேன்… ஏன்னா அவருக்கு ஹீலிங் டைம் தேவை… அவருக்கு ஸ்பேஸ் தேவை… நான் அவருக்கு ஒரு ஃப்ரண்ட்-ஆ மட்டும் இருந்து துணையா இருப்பேன்… அதுவரைக்கும் என் காதலை மறைக்கப் போறேன்…

ஃபியூச்சர்-ல அவர் குணமானதும், நான் என் காதலை சொல்றேன்… இல்ல, சொல்லாம போறேன்… அது எங்களோட சூழ்நிலையை பொறுத்து… எனக்கு அவர் ஹேப்பியா இருக்கணும்… அதுவே போதும்… லவ் யூ ஆரவ் சார்…” என்று நிலையான மனதுடன் எழுதி முடித்தாள் அமுதினி.

********

இதற்கிடையில், ஆரவ் தனது அடுக்குமாடிக் குடியிருப்புக்கு திரும்பினான்.‌ அவன் வீட்டிற்குள் நுழைந்ததும், விளக்கை கூட போடாமல், நேராக பால்கனிக்குச் சென்று, அந்த பரபரப்பான நகரத்தின் விளக்குகளைப் பார்த்தான்.

பல வருடத்திற்கு பிறகு, முதல் முறையாக, அவன் மனதில் சிறு நம்பிக்கை எனும் வெளிச்சத்தைக் கண்டார். அவனது இருள் சூழ்ந்த உலகில், ஒரு சிறிய நம்பிக்கை ஒளி வீசி பளிச்சிட்டது.

அமுதினி அவரை மன்னித்து, அவனை ஆதரிக்கத் தயாராக இருந்தாள். இப்பொழுது அவன் தனியாக இல்லை என்ற எண்ணமே அவனை மேலும் பலப்படுத்தியது.

ஆரவ் தனது கைபேசியை எடுத்து, கேம்பஸ் கவுன்சிலிங் சர்வீசஸ் வலைத்தளத்திற்குச் சென்றார். 

அப்பாயிண்ட்மென்ட் முன்பதிவு படிவத்தில் தனது விவரங்களை முழுமையாக நிரப்பினார். 

“விருப்பமான கவலை: அதிர்ச்சி, துக்கம், நம்பிக்கை சிக்கல்கள்.”

அனைத்தையும் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும், “உங்கள் முன்னேற்பாடு கோரிக்கை பெறப்பட்டது. 24 மணி நேரத்திற்குள் நாங்கள் உங்களைத் தொடர்புகொள்வோம்… நன்றி…” என உடனடியாக பதில் வந்தது.

ஆரவ் கைபேசியை வைத்து யோசித்துக் கொண்டிருந்தான்.‌ அவனுடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான முடிவை எடுத்திருந்தான். 

‘நான் ஹீல் ஆகப்போறேன்… நான் முழுசா மாறப்போறேன்… நான் என் கடந்த காலத்தை விட்டு வெளியே வரப்போறேன்… எல்லாரையும் போல ஒரு நார்மல் லைஃப்பை சந்தோஷமா வாழ போறேன்…’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான் ஆரவ் கிருஷ்ணா.

குணப்படுத்தும் பயணம் ஆரம்பமாகியது. ஆரவ் மற்றும் அமுதினி, இருவருமே கடந்த காலத்தில் துன்பத்தை சந்தித்தவர்கள். இப்போது அதிலிருந்து வெளியேற போராடுகிறார்கள். ஆனால், இப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து ஒன்றாக இருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் ஆதரவளித்து, ஒன்றாக குணப்படுத்தினர்.

இது ஒரு அழகான தொடக்கமாகும். ஒரு நீண்ட பயணத்தின் முதல் படி. ஆனால், இதுதான் மிக முக்கியமான படியும் கூட! இதை கடந்து விட்டாலே போதும்!

விதி அதன் வேலையைச் செய்துவிட்டது. இப்போது, எல்லாம் அவர்கள் கைகளில் இருந்தது. இந்தப் பயணத்தை அவர்கள் எவ்வாறு வழிநடத்துகிறார்கள் என்பது அவர்களின் தேர்வுகளைப் பொறுத்தது.

நாமும் பொறுத்திருந்து பார்ப்போம்…

Click on a star to rate it!

Rating 4 / 5. Vote count: 21

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
12
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்