Loading

அத்தியாயம் – 2

 

“ச்சே! நம்ம ப்ராஜெக்ட் டாபிக் இன்னும் ஃபைனல் பண்ணலை சுருதி… டீன் மீனாட்சி மேம் நாளைக்கே லிஸ்ட் சப்மிட் பண்ணுங்கன்னு சொன்னாங்க…” என்று புலம்பிக் கொண்டிருக்க,

 

கேன்டீனில் அமர்ந்திருந்த சுருதி, தன் கையில் இருந்த ஹாட் காஃபி கப்பை மெதுவாக வைத்துவிட்டு, அமுதினியை ஏறிட்டுப் பார்த்தாள். 

 

“நீ இன்னைக்கு ஏன் இப்படி இருக்க? உன் மூஞ்சிய பார்த்தா கொஞ்சம் வித்தியாசமா தெரியுது டி…”

 

அமுதினி சட்டென்று அவளைப் பார்த்து, “என்ன சொல்ற? நான் நார்மலா தான் இருக்கேன்.” என்று உடனே கூறவும்,

 

“இல்லடி… நேத்து ஃபர்ஸ்ட் கிளாஸ் முடிஞ்சு இன்னைக்கு வரைக்கும், நீ எங்கயோ இருக்க மாதிரி இருக்கு. டென்ஷன் ஆகாதடி, நாம நம்ம ப்ராஜெக்ட் நிச்சயம் முடிச்சிடுவோம். நீ எவ்ளோ ஸ்மார்ட்-ஆ அசைன்மென்ட்ஸ் பண்றன்னு எனக்கு தான் தெரியுமே… சோ, பீ கூல்…”

 

அமுதினி புன்னகைத்தாள். ஆனால் உண்மையில், அவள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது, நேற்றைய அந்த ஒரு நொடி.

 

ஆரவ் கிருஷ்ணாவின் பார்வை.

 

அவள் எத்தனை முறை முயன்றாலும், அந்தக் கண்களை மறக்க முடியவில்லை. அந்தக் கண்களில் இருந்த ஆழம்… அந்தப் பார்வையில் இருந்த ஒரு சொல்ல முடியாத வலி… அது அவளை ஒருமாதிரியாக ஆக்கிவிட்டிருந்தது.

 

சுருதியோ, “அமுது! ஹலோ! நீ இங்க தானே இருக்க?” எனக் கத்தி அவளது கைகளை அசைத்தாள்.

 

அமுதினியும் நடப்புக்கு வந்து, “சாரி சாரி… நான் வேற எதையோ யோசிச்சிட்டு இருந்தேன்…” என்கவும்,

 

“ஏய்! ஆரவ் சார் பத்திதானே யோசிச்சிட்டு இருந்த?”

 

அமுதினியின் இதயம் ஒரு கணம் நின்றது போல் உணர்ந்தாள். “என்… என்ன சொல்ற?”

 

சுருதி சிரித்தாள். “ஏம்மா, நீயேன் பயந்துப் போற? நேற்று அவர் நம்மள பார்த்த விதம் வேறு மாதிரிதான் இருந்துச்சு… அவர் எடுக்கும் கிளாஸ் செம இன்ட்ரெஸ்ட்டிங் தான்… ஆனா, எதுவுமே எமோஷனல்-ஆ இல்ல… மனசை தொடல, பெயின்ட் மாதிரி எல்லாம் ஃப்ளாட்-ஆ இருக்கு…”

 

அமுதினி ஆமோதிக்கும் விதமாக மெதுவாகத் தலையசைத்தாள். 

 

“ஆமா… நானும் அதை நோட்டிஸ் பண்ணேன்… அவர் பேசுற விஷயம் எல்லாம் ரொம்ப லாஜிக்கல், அட்டாச்மென்ட், ட்ரஸ்ட், ரிலேஷன்ஷிப்னு எல்லாம் சொல்றார். ஆனா அவரே அட்டாச்மென்ட் இல்லாம இருக்குற மாதிரி தெரியுது…”

 

சுருதி கவனமாக அமுதினியைப் பார்த்தாள். “நீ அவரைப் பத்தி நிறைய யோசிக்கிறியா அமுது?”

 

அமுதினி கொஞ்சம் தயங்கினாள். பிறகு, “சுருதி, உனக்கு எப்படித் தெரியும் டி?”

 

“தெரியுமே! ஏன்னா, நான் உன் பெஸ்ட் ஃப்ரெண்ட்… நீ என்ன நினைக்கிறன்னு உன்னோட கண்ணைப் பார்த்தாலே எனக்குத் தெரியும்… சொல்லு, என்னாச்சு?”

 

அமுதினி ஆழமாகச் சுவாசித்து, “ஆரவ் சார் மேல ஒரு வித்தியாசமான ஈர்ப்பு… அதை கிரஷ் அட்ராக்ஷன்னு சொல்ல எனக்கு விருப்பமில்ல, கியூரியாசிட்டி மாதிரி… அவர் ஏன் இப்படி இருக்காரு? ஏன் அவர் கண்ணுல ஒரு ஷாடோ இருக்கு? நேற்று அவர் என்னைப் பார்த்த விதம் சுருதி… அது வெறும் பார்வை இல்ல… அவர் எதையோ தேடுறார் மாதிரி தெரிஞ்சுது…”

 

சுருதி அமைதியாக இருந்தவள், பிறகு மெதுவாக, “அமுது, அவர் நம்ம ப்ரொஃபசர்… புரியுதா? இது உனக்கு ரொம்ப கம்ப்ளிகேட்டட்-ஆ ஆகலாம்…” என்று கூறுவும்,

 

“எனக்குத் தெரியும் சுருதி… என்னோட இந்தப் பீலிங் எனக்கே சரியா புரியல… ஆனா, நான் அவரிடம் எதுவும் சொல்ல போறது இல்ல… நான் சும்மா… அவரை புரிஞ்சிக்க ட்ரை பண்ணுறேன்… அவ்ளோதான்…”

 

சுருதி அவள் தோளைத் தட்டினாள். “கேர்ஃபுல்-ஆ இருடி…. இது கடைசி வருஷம், அதுலயுமீ முக்கால்வாசி நேரம் ப்ராஜெக்ட், இன்டர்ன்ஷிப் அப்படின்னு போய்டும், மீதி கொஞ்ச நேரத்தில் ஹேப்பியா, டென்ஷன் இல்லாம மட்டும்தான் இருக்கணும்… இந்த ஃபைனல் இயரை மிஸ் பண்ணிடக் கூடாது…”

 

அமுதினி தலையசைத்தாள். ஆனால் அவள் மனதில், ஆரவ் கிருஷ்ணாவின் உருவம் தன்னையும் அறியாமல் பதிந்துவிட்டது.

 

***

 

பிற்பகல் இரண்டு மணி.

 

மீண்டும் சைக்காலஜி கிளாஸ். இன்றைய டாபிக்: “அட்டாச்மென்ட் தியரி.

 

அமுதினி ஏற்கனவே வகுப்பில் தான் இருந்தாள். அவளது புத்தகம் திறந்திருக்க, பேனாவும் கையில் இருந்தது. ஆனால், அவளது கவனம் எல்லாம் கதவையே பார்த்துக்கொண்டிருந்தது.

 

சரியாக இரண்டு மணிக்கு, கதவு திறந்தது.

 

ஆரவ் கிருஷ்ணா உள்ளே நுழைந்தான்.

 

இன்றைக்கு அவர் வெள்ளை நிற ஃபார்மல் ஷர்ட் அணிந்திருந்தார். 

 

அதே கம்போஸ்ட், அதே மிஸ்டீரியஸ் ஆரவ் தான். அவன் உள்ளே வந்ததும், வழக்கம்போல் வகுப்பறை நிசப்தமானது.

 

அவன் தன் மேஜையின் மீது புத்தகங்களை வைத்தார். பிறகு மாணவர்களைப் பார்த்தார். அவனது பார்வை ஒரு வினாடி அமுதினியின் மீது பதிந்தது. 

 

அவள் தன் பார்வையை விலக்கிக்கொள்ள நினைத்தாள் ஆனால் முடியவில்லை. ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத கயிறு அவர்கள் இருவரையும் இணைத்தது போல இருந்தது.

 

அவன் பார்வையை அடுத்த கணமே விலக்கிக்கொண்டு பேச ஆரம்பித்தார்.

 

“குட் ஆஃப்டர்நூன். இன்னைக்கு நாம பார்க்கப் போறது அட்டாச்மென்ட் தியரி… இது மிக முக்கியமான ஒரு சைக்காலஜிகல் கான்செப்ட்… ஜான் பௌல்பி என்பவர், இந்தத் தத்துவத்தை ஃபார்முலேட் பண்ணினார்… அவர் சொன்னது ஒண்ணுதான் – நாம ஒரு குழந்தையா இருக்கும்போது, நம்ம கேர்கிவர்ஸ்-ஓட எப்படி பாண்டை கிரியேட் பண்றமோ, அதுதான் நம்மோட எதிர்கால ரிலேஷன்ஷிப் எல்லாத்தையும் டிஸைட் பண்ணும்.”

 

அவன் தன் குரலில் எந்த வித உணர்ச்சியும் இல்லாமல் தொடர்ந்தான்.

 

“ஃபார் எக்சாம்பிள், ஒரு பேபி அழுதா, அதோட அம்மா உடனே வந்து அதை கன்சோல் பண்ணா, அந்த பேபிக்கு ஒரு செக்யூர் அட்டாச்மென்ட் ஃபார்ம் ஆகும்… அந்தக் குழந்தைக்கு ‘யாராவது என்னைப் பார்த்துக்குவாங்க, நான் தனியா இல்ல’ன்னு தெரிஞ்சிருக்கும். அது பெரிசானதும், அந்தக் குழந்தை நம்பிக்கையோட ஒரு ரிலேஷன்ஷிப் பில்ட் பண்ணும்…”

 

அவன் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், அமுதினியின் காதில் விழுந்தது. ஆனால் அவளுக்கு ஒரு விஷயம் உறுத்தியது. அவர் எல்லாவற்றையும் எவ்வளவு தெளிவாக விளக்குகிறார், ஆனால் அவரது குரலில் அன்பு இல்லை, எவ்வித உணர்வும் இல்லவே இல்லை.

 

“அதே சமயம், ஒரு குழந்தை அழுதா, அதோட பெற்றோர் இக்னோர் பண்ணினா அல்லது கோபமா ரியாக்ட் பண்ணினா, அந்தக் குழந்தைக்கு இன்செக்யூர் அட்டாச்மென்ட் டெவலப் ஆகும்… அதுவும் மூணு டைப்ஸ்: ஆன்க்ஷியஸ், அவாய்டன்ட், டிஸ்ஆர்கனைஸ்ட்… அதுல டிஸ்ஆர்கனைஸ்ட் அட்டாச்மென்ட் ரொம்ப டேஞ்சரஸ், குறிப்பா சைல்ட்ஹுட் ட்ராமா கேஸ்லயும், அப்யூஸ் கேஸ்லயும்…” எனறு என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

 

திடீரென அவனது கண்களில் ஒரு மாற்றம் தெரிந்தது. அது ஒரு வினாடி மட்டுமே. ஆனால் அமுதினியால் அதை உணர முடிந்தது. ஏதோ ஒரு பழைய நினைவு அவரை துளைத்தெடுத்தது போல் இருந்தது.

 

அவன் தன்னை உடனடியாக சமாளித்துக்கொண்டு, விரிவுரையை தொடர்ந்தான். 

 

“ட்ராமா-வால பாதிக்கப்பட்ட ஒருத்தர் எப்படி அட்டாச்மென்ட் ஃபார்ம் பண்ணுவாங்க? அவங்க எதையும் பிலீவ் பண்ண மாட்டாங்க…. யாரையும் ட்ரஸ்ட் பண்ண மாட்டாங்க… காரணம், அவங்க ட்ரஸ்ட்ட ஒருத்தர் சுக்குநூறாக உடைச்சிருப்பாங்க… அது அவங்களோட பிரெயின்ல ஒரு ஸ்கார் மாதிரி ஆயிடுது… அந்த ஸ்கார் எப்பவும் அவங்களுக்கு நினைவுபடுத்திக்கிட்டே இருக்கும் – ‘யாரையுமே நம்பாத, எல்லாரும் உன்னை விட்டுடுவாங்க’…”

 

அமுதினிக்கு திடீரென்று புரிந்தது. ‘அவர் தன் அனுபவத்திலிருந்து பேசுகிறார். அவருக்கு ஏதோ ஒரு ட்ராமா இருந்திருக்கிறது.’

 

அவனது குரல் தொடர்ந்தது. “சோ, ஒருத்தர் அட்டாச்மென்ட் இல்லாம, எமோஷனல் கனெக்ஷன் இல்லாம வாழ்றாங்கன்னா, அது அவங்க சாய்ஸ் இல்ல. அது அவங்களோட சர்வைவல் மெகானிசம். அவங்க மறுபடியும் ஒரு பெயினை அனுபவிக்காமல் இருக்க, எல்லாரையும் தள்ளி வச்சிடுவாங்க…”

 

அவர் வார்த்தைகள் அமுதினியின் இதயத்தில் ஆழமாகப் பதிந்தன. ‘ஆரவ் சார் தன்னைப் பற்றியே சொல்கிறார்.’

 

சட்டென்று ஒரு மாணவி கையை உயர்த்தினாள். “சார், அப்படிப்பட்டவங்க மீண்டும் யாரையாவது ட்ரஸ்ட் பண்ண முடியுமா?”

 

ஆரவ் ஒரு நிமிடம் மௌனமாக இருக்க, அந்த மௌனம் கனமாக இருந்தது.

 

பிறகு, ஆரவ்வும், “தியரட்டிகலா, ஆமாம். ஆனா ப்ராக்டிகலா, ரொம்ப கஷ்டம். சம்பாடி ஹூ இஸ் டீப்லி ஹர்ட் கான்ட் ஈசிலி ஓபன் அப்… (ஆழமாக காயமடைந்த ஒருவர் எளிதில் மனம் திறந்து பேச முடியாது..) 

 

அவங்களுக்கு ட்ரஸ்ட் ரிபில்ட் பண்ண நெறைய டைம் தேவைப்படும். ஒரு பேஷன்ட்க்கு எம்பதெடிக், ஜட்ஜ்மென்ட் இல்லாத ஒருத்தர் வேணும். ஆனாலும், சில காயங்களை யாராலும் ஹீல் பண்ண முடியாது… அது அவங்களுக்கொரு வடுவா உருவாகிடும்… 

 

‘ஸ்கார்ஸ் ரிமைன்ட் யூ தட் யூ சர்வைவ்ட்… பட் தே ஆல்சோ ரிமைன்ட் யூ ஆஃப் தி பெயின்…’ (வடுக்கள் நீங்கள் உயிர் பிழைத்ததை நினைவூட்டுகின்றன… ஆனால் அவை வலியையும் சேர்த்தே நினைவூட்டுகின்றன…)”

 

அந்த வார்த்தைகளில் இருந்த வலி, அறையில் உள்ள ஒவ்வொருவராலும் உணர முடிந்தது.

 

அமுதினி அவனை உற்றுப் பார்த்தாள். அந்த முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், அவனது கண்களில்… ஏதோ ஒரு உணர்வு மறைந்திருந்தது.

 

வகுப்பு தொடர்ந்தது. 

 

ஆரவ் பல்வேறு ரிசர்ச் பேப்பர்களை எடுத்துக்காட்டுக்காகச் சொன்னான். ஆனால், அவனது குரலில் எப்போதும் அதே தட்டையான, உணர்ச்சியற்ற தன்மை இருந்தது. 

 

அவர் “லவ்”, “கேர்”, “ட்ரஸ்ட்” என்று பலவற்றை விளக்கமாக பேசினார், ஆனால் அந்த வார்த்தைகள் அவரிடமிருந்து மரத்துப் போயிருந்தன.

 

ஒரு மணி நேரம் பறந்தது.

 

வகுப்பு முடியும் நேரம் வந்தபோது, ஆரவ் கடைசியாக, “ஒரு முக்கியமான விஷயம் – நீங்க சைக்காலஜி ஸ்டூடன்ட்ஸ், ஃப்யூச்சர் தெரபிஸ்ட்ஸ் அல்லது கவுன்சலர்ஸ் ஆகப் போறீங்க…

 

உங்களுக்கு மக்களோட பெயினை புரிஞ்சிக்க வேணும். ஆனா அதே சமயம், யுவர் ஓன் பெயின் ஷூட் நாட் கம் இன் தி வே… (உங்கள் சொந்த வலி உங்களுக்கு இடையூறாக இருக்கக்கூடாது…) 

 

ஒருத்தர் ஹீல் ஆகணும்னா, அவங்களோட ஹீலரும் ஹீல்ட் ஆயிருக்கணும். எல்ஸ், இட்ஸ் லைக் எ பிளைண்ட் பர்சன் லீடிங் அநதர் பிளைண்ட் பர்சன்…(இல்லையென்றால், அது ஒரு பார்வையற்ற நபர் இன்னொரு பார்வையற்ற நபரை வழிநடத்துவது போன்றது…)” 

 

அந்த வார்த்தைகள், மொத்த வகுப்பையுமே யோசிக்க வைத்தன.

 

“ஓகே, சீ யூ நெக்ஸ்ட் கிளாஸ்,” என்று சொல்லிவிட்டு, அவன் தன் புத்தகங்களை எடுத்துக்கொண்டு வெளியேறினான்.

 

மாணவர்கள் மெதுவாகக் கலைய ஆரம்பித்தார்கள். ஆனால், அமுதினி அங்கேயே அமர்ந்திருந்தாள், அவரது வார்த்தைகளை மீண்டும் மீண்டும் நினைத்துக்கொண்டிருந்தாள்.

 

சுருதி அவள் தோளைத் தட்டினாள். “அமுது, கிளம்பலாமா?”

 

“ம்ம்… நீ போ சுருதி. எனக்கு லைப்ரரிக்குப் போகணும். கொஞ்சம் ரெஃபரன்ஸ் வொர்க் பண்ணணும்.”

 

“ஓகே பை, கேர்ஃபுல்…”

 

அமுதினி வெளியேறினாள். ஆனால் அவள் நேராக லைப்ரரிக்குப் போகவில்லை. எதோ ஒரு உள்ளுணர்வு அவளை வழிநடத்தியது. அவள் சைக்காலஜி டிபார்ட்மென்ட்டின் காரிடாரில் நடந்தாள்.

 

அங்கு, ஒரு சின்ன சிட்டிங் ஏரியா இருந்தது. பொதுவாக யாரும் அதிகம் வரமாட்டார்கள். அமுதினி அங்கே போனபோது, ஒரு உருவத்தைப் பார்த்தாள்.

 

ஆரவ் கிருஷ்ணா.

 

அவன் ஒரு பெஞ்சில் தனியாக அமர்ந்திருந்தார். அவனது கைகளில் ஒரு பழைய புகைப்படம் இருக்க, அதை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனது முகத்தில்… அமுதினி அதுவரை பார்க்காத ஒரு வலி தெரிந்தது.

 

அவன் தனியாக இருப்பதாக நினைத்தார். ஆனால், அமுதினி, தூரத்தில் இருந்து, அவனை மெதுவாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

ஆரவின் கண்களில் கண்ணீர் தெரிந்தது. அவன் அழவில்லை. ஆனால், அவனது கண்கள் ஈரமாக இருந்தன. அவன் அந்தப் புகைப்படத்தை மெதுவாகத் தொட விரல்கள் நடுங்கின.

 

அதைக்கண்ட அமுதினியின் இதயம் ஒரு கணம் சுருங்கியது. ‘அவர் எவ்வளவு வலியில் இருக்கிறார்!’

 

அவள் அங்கிருந்து செல்ல நினைத்தாள். அவருக்கு தனிமை தேவைப்படலாம். ஆனால், அவள் நகர்ந்தபோது, அவள் காலில் இருந்த கொலுசு ஒலித்தது.

 

ஆரவ் தி

டீரென்று திரும்பிப் பார்க்கவும்,

 

அதில் அமுதினியும் பயத்துடன் நின்றுவிட்டாள். 

 

அவர்கள் இருவரது பார்வைகளும் ஒன்றோடு ஒன்றாக மோதிக் கொண்டன.

 

********

 

கதை எப்படி இருக்குன்னு கமெண்ட் பண்ணுங்க செல்லங்களா!

 

அப்பறம் இந்த கதையில கொஞ்சம் ஆங்கில வார்த்தைகள் நிறையவே வரும், ஏன்னா கதைக்கு தேவை தான்… ரொம்ப அதிகப்படியா தெரிஞ்சா சொல்லுங்க… மாத்த முயற்சி செய்யறேன்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
10
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்