Loading

திமிர் 19

 

“எதுக்குடா இவ்ளோ கோபப்படுற?”

 

“பேசாத ஆதி. உன் மேல செம கோபத்துல இருக்கேன். நீ அவகிட்ட என்ன பேசுனன்னு தெரியாதுன்னு நினைக்கறியா? என்னைச் சுத்தி இருக்கற யார் யார், என்ன பண்றீங்கன்னு எல்லாத்தையும் வாட்ச் பண்ணிட்டுத் தான் இருக்கேன். உன் தம்பியப் பத்தி உனக்குத் தெரியாதா? அவன் அமைதிக்குப் பின்னாடி ஒரு காரணம் இருக்கும்னு தெரியாதா?”

 

“உன் அமைதி எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்குன்னு நல்லாப் புரியுது. அனுவுக்கும், நம்ம வீட்டுக்கும் எப்படிச் சம்பந்தம் இல்லையோ, அதே மாதிரிதான் இவளுக்கும். இவ உன் வாழ்க்கையை அழிக்கப் பார்த்தவள். இவளை நாங்க ஏத்துப்போம்னு எப்படி நினைக்கிற? இப்பக் கூட உன்னை ஏமாத்திட்டுத் தான் இருக்காடா.”

 

“ஸ்டாப் இட் ஆதி! எதுக்குக் கூப்பிட்டீங்களோ, அதைப்பத்திப் பேசுங்க.”

 

“அகம்பா…”

 

அன்னையின் அழைப்பிற்கு அமைதியாக இருக்க, “நடந்த எல்லாம் எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சு. இப்ப இந்தப் பொண்ணு இங்க இருக்கற காரணத்தை நீ தான் சொல்லணும்.” தன்மையாகப் பேசினார் கற்பகம்.

 

“எதுக்கு இருக்கான்னு உங்களுக்குத் தெரியும்மா.”

 

“தெரிஞ்சாலும் உன் பக்கம் இருந்து கேட்கணும்னு நினைக்கிறேன்.”

 

மூச்சை இழுத்து விட்டு இருக்கையில் தளர்வாகச் சாய்ந்தவன், “அவளுக்கும் எனக்கும் என்ன உறவுன்னு தெரியும்ல.” கேட்க, “வெளிப்படையா சொல்லிக்க முடியாததால தான் உன் வாயில இருந்து வார்த்தை வர மாட்டேங்குது அகம்பா‌. அப்போ அது எந்த மாதிரி உறவுன்னு நீயே யோசிச்சுக்க.” என்றார்.

 

“வார்த்தை வராமல் இல்லம்மா. எப்படிக் கொண்டு போறதுன்னு தெரியலை.”

 

“ரொம்ப வேடிக்கையா இருக்கு.” என்ற ஆதிகேஷ் பக்கம் அவன் பார்வை திரும்ப, “முதல் தடவையா தடுமாறி நிக்கிற என் தம்பியைப் பார்க்க ரொம்ப வேடிக்கையா இருக்கு.” என்றான்.

 

“அண்ணியப் பார்த்ததுக்கு அப்புறம், கல்யாணம் பண்ணி வைங்கன்னு வெளிப்படையா சொல்ல முடியாம நீ எப்படித் தடுமாறுனியோ, அதே நிலைமைல தான் இப்ப நானும் இருக்கேன்.”

 

“எங்களால இதுக்குச் சம்மதிக்க முடியாது. இவ ஒரு பிராடு. ரிப்போர்ட்ட மாத்தி உன் வாழ்க்கையைக் கெடுத்தவள். இப்படிப்பட்ட ஒருத்திய நம்பி என் பிள்ளையைக் கொடுக்க என்னால முடியாது. எவ்ளோ அழகா நடிச்சு உன்னை ஏமாத்தி இருக்கான்னு கண்கூடாய் பார்த்தேன். இவ நடிப்புல மயங்கி அவனுங்களை அனுப்பி விட்டுட்ட. இவளை இங்க வச்சிருந்தோம், நம்ம எல்லாரும் காலி ஆயிடுவோம்.”

 

நவரத்தினம் பேச்சைக் கேட்டவளுக்கு மனம் கனத்தது. இக்கட்டான சூழ்நிலையில், தலை குனிந்து நின்றவளைப் பாவமாகப் பார்த்தான் கமல். தன்னவளைப் பார்க்காமலே அவள் மனஓட்டத்தைக் கணித்தவன்,

 

“மதுணி ரிப்போர்ட்டைக் கொடுக்கல. அதை எடுக்க மட்டும் தான் வந்தா.” என்றதும் அவன் தந்தை பேச வர, கைகாட்டித் தடுத்தான்.

 

“உங்களுக்கு ஒரு பிரச்சினைனா நானும் ஆதியும் வந்து நிற்கிற மாதிரி தான், இவளோட அப்பாக்கு இவளும் நின்னா… அதை நம்ம யாராலயும் தப்புச் சொல்ல முடியாது. என்னைக் கேட்காம என்னோட பர்மிஷன் இல்லாம நிச்சயதார்த்த ஏற்பாடு பண்ணது நீங்க. உங்களுக்காகத் தான் மேடை ஏறி நின்னனே தவிர, அவனுங்க வராம இருந்திருந்தாலும் இந்த நிச்சயதார்த்தம் நடந்திருக்காது.”

 

“முடிவா என்னதான்டா சொல்ற?”

 

“உங்க மருமகள் எனக்குப் பின்னாடி தான் நிற்கிறாம்மா.”

 

“என்னால இவளை ஏத்துக்க முடியாது. உனக்கும், அனுவுக்கும் தான் கல்யாணம் நடக்கணும்.”

 

“உங்களை மீறி எதுவும் பண்ண மாட்டேன்.” என எழுந்த அகம்பன் தன்னவளைத் தன் தோளோடு சேர்த்து நிறுத்தி, “ஐ லவ் மதுணிகா.” என்றான்.

 

ஜோடிப் பொருத்தம் நன்றாக இருப்பதாக எண்ணிய கமலின் கவனம், “இவ இங்க இருந்தா நான் இங்க இருக்க மாட்டேன்.” என்ற கற்பகத்தின் பேச்சிற்குத் திரும்பியது.

 

“அகா…”

 

“உஷ்?” வாயில் விரல் வைத்து அவள் பேச்சை நிறுத்தியவன், “நீங்க சம்மதிக்கிற வரைக்கும் இவளை உங்க மருமகளாய் பார்க்காதீங்க. என்னோட பிஏ வா பாருங்க. மதுணி கண்டிப்பா உங்க மனசை ஜெயிப்பா…” என்றவனை எரிச்சலோடு பார்த்தனர் அனைவரும்.

 

கண் கலங்கப் பார்த்தாள் தன்னவனை. வானமே அவள் வசமானது. மிகவும் பாதுகாப்பாய் நிற்பதாக உணர்ந்தவள் செவியில், “நீ எப்படி முடிவா இருக்கியோ, அதே மாதிரி நாங்களும் முடிவா இருக்கோம். அனு தான் இந்த வீட்டு மருமகள். அனு உன்னோட மனசை ஜெயிப்பா…” என்றார் கற்பகம்.

 

“அது ஒரு காலமும் நடக்காது.”

 

“அப்படிச் சொல்லாத அகம்பா. காலம் யாரை எப்படி வேணாலும் மாத்தும். இந்த மாதிரி ஒரு பொண்ணக் கூட்டிட்டு வந்து நிப்பன்னு நீ நினைச்சியா, இல்ல நாங்க நினைச்சோமா? இப்ப நீ மயக்கத்துல இருக்க. தெளிஞ்சு எங்க வழிக்கு வருவ பாரு.”

 

“பார்க்கலாம் அப்பா”

 

“எங்களையே எதிர்க்கிற அளவுக்கு உன்னை மயக்கி வச்சிருக்கா.”

 

கற்பகத்தின் வார்த்தை அவள் உணர்வுகளைச் சுட்டது. உடல் கூசத் தலை குனிந்தவள் செயலில் கோபம் துளிர்விட, “பார்த்துப் பேசுங்கம்மா. இவ மேல உங்களுக்குக் கோபம் இருக்குறதைத் தப்புன்னு சொல்லல. என் மேல இருக்க பாசத்துல தான் இப்படிப் பேசுறீங்க. ஆனா, எந்தத் தப்பும் செய்யாதவளைத் தண்டிக்க என்னால முடியாது.” என்றதும் நவரத்தினத்திற்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

 

“என்னடா, அம்மான்னு கூடப் பார்க்காம எவளோ ஒருத்திக்காகத் துள்ளுற. அம்மா சொன்னதுல என்ன தப்பு? பொண்ணுங்களைத் திரும்பிப் பார்க்காத உன்னை இப்படி மயக்கிக் கைக்குள்ள போட்டு, யாருக்குமே பிடிக்கலைன்னு தெரிஞ்சாலும் வீட்ல உட்கார்ந்து இருக்காளே…”

 

“அப்ப்ப்பாபாபா…”

 

அகம்பன் திவஜ் சத்தத்தில் அரண்டது வீடு. தாடைகள் புடைக்கத் தந்தையை முறைத்தவன், “இனி ஒரு வார்த்தை அவளைப் பத்தி யாரும் இங்க எதுவும் பேசக்கூடாது.” விரல் நீட்டிக் கர்ஜித்தான்.

 

“இவகிட்ட அப்படி என்னத்தடா பார்த்த? உன்னைக் கல்யாணம் பண்ணிக்கறதுக்கு என்ன தகுதி இருக்கு இவளுக்கு. ஒண்ணுமே இல்லைனாலும் கூடப் பரவால்ல. யாருமே இல்லாத அனாதைய மினிஸ்டர் வீட்டு மருமகள்னு சொல்லிக்க முடியாது. நீயா இவளை அனுப்பிடு.”

 

மீண்டும் மீண்டும் அவனைச் சீண்டியது நவரத்தினத்தின் பேச்சு. தன் உடன் நிற்பவளுக்காகப் பொறுத்திருந்தவன் கோபம் எல்லையைக் கடந்தது. தனக்கு முன்னால் இருந்த சோபாவை எட்டி உதைத்து நவரத்தினம் அமர்ந்திருந்த இருக்கையை அலற விட்டவன், “இன்னொரு தடவை அனாதைன்னு சொல்லாதீங்க.” அடித்தொண்டை அலறக் கத்தினான்.

 

“அனாதைய அனாதைன்னு தான்டா சொல்லணும்.” எகத்தாளமாகக் கூறினான் ஆதிகேஷ் திவஜ்.

 

“தாராளமா சொல்லு!” என்றதும் அங்கிருந்த அனைவரும் அகம்பனைப் பார்க்க, “நான் செத்ததுக்கு அப்புறம்!” என்றான்.

 

அவன் குடும்பம் திகைத்தது அந்த வார்த்தையில். எத்தனையோ கலவரங்களை நிகழ்த்தி இருக்கிறான். அத்தனைக்கும் பின்னால் அவன் குடும்பம் மட்டுமே இருந்திருக்கிறது. ஊரே அஞ்சினாலும் வீட்டிற்குத் தங்கமானவன். அண்ணனுக்குச் செல்லத் தம்பி. அன்னைக்கு ஆருயிர் மகன். தந்தைக்கு உற்ற தோழன். இந்தக் குடும்பத்தையே ஒற்றை ஆளாகத் தூக்கி நிறுத்திய ஒருத்தன், யார் என்று தெரியாத ஒருத்திக்காகத் தங்களைத் தூக்கிப் போடுவதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

 

கட்டுக்கடங்காத சீற்றத்தோடு நின்றிருந்தவன் உள்ளங்கையைப் பிடித்து அழுத்தம் கொடுத்தவள், அவன் முகம் தன்னை நோக்கியதும் ‘வேண்டாம்’ என்று மறுக்க, அடங்குவதாக இல்லை அவன் கோபம்.

 

“விடுங்கப்பா. இவ மேல இருக்கற மோகத்துல கண்டபடி பேசுறான்.‌ இவ பித்து ஒரு நாள் போகும். அப்ப இவனே அவளை விட்டு வந்துடுவான்.”

 

“என்னைத் தம்பியா மட்டும் தான் பார்த்திருக்க ஆதி. மத்தவங்க பார்க்குற அகம்பனைப் பார்க்கணும்னு நினைக்காத.”

 

“அகம்பா!”

 

“என்னை அடக்காதீங்கம்மா. ஒரு பொண்ணு கிட்ட எப்படி நாகரிகமாய் பேசணும்னு உங்க பிள்ளைக்குச் சொல்லிக் கொடுங்க.”

 

“முதல்ல அண்ணன்கிட்ட எப்படிப் பேசணும்னு நீ கத்துக்க. இத்தனை நாளா அவன் உனக்குக் கட்டுப்பட்டு நடந்தது உன் மேல இருக்கற பயத்துல இல்ல, பாசத்துல. அந்தப் பாசத்துல எல்லாத்தையும் விட்டுக் கொடுப்பான்னு நினைக்காத. அவன் தம்பிக்காக அவன் போராடுறான். இப்ப அது உனக்கு தப்பாத் தான் தெரியும். அவன் சொன்ன மாதிரி, ஒரு நாள் இல்ல ஒரு நாள் இவ யாருன்னு உனக்குத் தெரியும். அன்னைக்கு எங்க யாரு முகத்தையும் பார்க்க முடியாம முதல் முறையா தலை குனிஞ்சு நிக்கப் போற.”

 

“நீ என்ன பேசுனாலும் வேஸ்ட் கற்பகம். நம்ம முன்னாடி நிக்கறது நம்ம மகன் இல்லை. அதோ, கூட நிக்கிறா பாரு… அவளோட கைக்கூலி! அந்த அளவுக்குப் புத்தி கெட்டு இருக்கான். எவ்ளோ நாள் ஆடுறானோ ஆடட்டும். கூட இருக்கிறது கொடிய விஷம்னு தெரியும் போது நம்ம புள்ளையா நம்மகிட்ட வந்துடுவான்.”

 

“கண்டிப்பா நீங்க சொன்னது நடக்குங்க. ஆனா, நம்ம பையன் பேசுறதைப் பார்த்தா கொஞ்சம் லேட் ஆகும் போல. ஊரே பயந்தவனைப் பயந்து ஓட வச்ச சதிகாரி. அவ்ளோ சீக்கிரம் அவன் புத்தியைத் தெளிய விடமாட்டா.” என்ற கற்பகம் மதுணியைக் கண்டு பல்லைக் கடிக்க, அன்னை என்பதை மறந்து தன்னவளைத் தனக்குப் பின்னால் வைத்து, அவரைக் கடுமையாகப் பார்வையால் தாக்கினான்.

 

கண்ணீர் வடித்தாள் மதுணிகா. அவள் கண்ணீர் அவன் சட்டையில் பட்டுத் தெறிக்க, உயிர் வலியை அனுபவித்தது அவன் உள்ளம். ஆயிரம் தடை வந்தாலும், தாங்க நான் இருக்கிறேன் எனச் சொல்லாமல் சொன்னான் அவள் கைகளை அழுத்திப் பிடித்து.

 

“இவ எப்படி இங்க இருக்காளோ, அதே மாதிரி அனுவும் இங்கதான் இருப்பா. உனக்கு இங்க எந்த அளவுக்கு ரைட்ஸ் இருக்கோ, அதே ரைட்ஸ் எங்க மூணு பேருக்கும் இருக்கு. எங்களுக்குப் பிடிக்காத இவ என்னைக்கு இந்த வீட்டை விட்டுப் போறாளோ, அன்னைக்குத் தான் அனுவும் போவா…” என்ற ஆதிகேஷ் அவன் முன்பாகவே அனுவை அழைத்து வீட்டிற்கு வர உத்தரவிட்டான்.

 

சந்தோஷம் தாங்கவில்லை அவளுக்கு. வீட்டிற்குச் சென்றுத் தந்தையிடம் புலம்பியவள், இதுதான் சமயம் என்று உடனே கிளம்பி விட்டாள். தன் குடும்பம் தனக்கு எதிராக நிற்பதைக் கண்டு பற்களை நரநரத்த அகம்பன்,

 

“இந்த அகம்பன் கிட்டயே சேலஞ்சா? பார்த்துக்கலாம். யார் என்ன பண்ணுறீங்கன்னு. அகம்பன் இல்லாம இங்க ஒன்னும் நடக்காது. மதுணிக்கு ஒன்னுனா, உங்க எல்லாரையும் உயர்த்தி வச்ச நானே கீழ போட்டு நசுக்கியும் விடுவேன்.” வெளிப்படையாகப் பகிரங்கமாக மிரட்டினான்.

 

அவன் கோபம் எதிரில் இருந்த மூவருக்கும் பெரும் அச்சத்தைக் கொடுத்தாலும், இவன் வாழ்வைக் காப்பாற்றுவதாக எண்ணி எதிர்த்து நிற்கத் துணிந்தனர்.

 

“வா…” என அவள் கைப்பிடித்து அழைத்துச் சென்றவன் முதுகைத் துளைத்தது மூவரின் கோபம். உள்ளே வரும்வரை அவள் கையை விடாதவன் பட்டென்று உதறிவிட்டான். அவள் இருக்கும் மனநிலைக்கு அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. எவை நடக்கக்கூடாது என்று அவனை விட்டு விலகினாளோ, அதுவே கண் முன்னால் நடந்தேறியதை ஜீரணிக்க முடியாது மெத்தையில் அமர்ந்தாள்‌.

 

 

எரிச்சல் அடங்கவில்லை நம் நாயகனுக்கு. வீடு போர்க்களமாய் மாறும் என்று அறிந்தே அவளை இங்கு அழைத்து வந்தான். தந்தையிடம் இருந்து மட்டுமே எதிர்ப்பு வரும் என்ற நம்பிக்கையில் இந்த முயற்சியை எடுத்தவன், குடும்பமே எதிர்த்து நிற்கும் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

 

கோபத்தைத் தணிக்க, அவனால் முடிந்த அனைத்தையும் செய்து பார்த்து விட்டான். நிற்கிறான். நடக்கிறான். பின்னங்கழுத்தில் கை வைத்துக் கோபத்தைத் தணிக்கிறான். எதற்கும் அடங்கிப் போகவில்லை அவன் சினம். போதாக்குறைக்குப் பிரம்மை பிடித்தவள் போல் அமர்ந்திருந்தவள் உருவம் இம்சை செய்தது. அவள் மனவலியைப் போக்க வழியின்றி நின்றான்.

 

தான் உடனிருந்தும் அவள் மீது அள்ளி வீசிய வார்த்தைகளை, ஒன்றும் செய்ய முடியவில்லை என்ற ஆதங்கம் மண்டையைக் குடைந்தது.‌ பொறுத்துப் பார்த்தவன் தன்னிலை இழந்து குளியலறை சென்று விட்டான். ஆடையோடு ஷவரில் நின்று தன் கோபத்தைத் தணிக்க முயன்றான். கை இரண்டும் சுவரோடு ஒட்டி இருக்க, அவன் தலை தன்மேல் பட்டுச் சிதறித் தரையில் ஓடும் நீர் மீது இருந்தது.‌

 

முகம் வெளிறி அமர்ந்திருந்தவள் எண்ணத்தில் அவனே! ‘அனாதை’ என்ற வார்த்தையை விட அவன் குடும்ப ஆள்களே அவனுக்கு எதிராக நிற்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இத்தனைக்கும் அவள் தான் காரணம் என்று அவள் தலை மீது பாரத்தைப் போட்டுக் கொண்டாள்.

 

ஒரு மணி நேரம் அப்படியே இருந்தார்கள் இருவரும். அகம்பனின் அலைபேசி அவள் நினைவைக் கலைத்தது. சத்தம் கேட்கும் திசைக்குத் திரும்பியவள் அவன் இல்லாததை உணர்ந்தாள். போனை அட்டென்ட் செய்து, “தூங்கிட்டு இருக்காரு கமல்.” அழைத்தவனுக்கு உரிய பதில் கொடுத்துவிட்டு அழைப்பைத் துண்டித்தவள் அவனைத் தேடினாள்.

 

செவியை நிறைத்தது நீரின் சத்தம். பாதித் திறந்திருந்த குளியலறையை எட்டிப் பார்த்தாள். ஒன்றும் தெரியாமல் மெத்தையை விட்டு எழுந்தவள் முழுவதுமாகக் கதவைத் திறக்க, கரும் பாறை நீரில் நனைந்து கொண்டிருந்தது. தரைக்கு நோகாமல் அடி எடுத்து வைத்து உள்ளே நுழைந்தவள், சுவரைத் தாங்கி இருக்கும் அவன் இரு கைகளுக்கு நடுவில் வந்து நின்றாள்.‌

 

தலை உயர்த்தித் தன்னவளின் முகம் பார்த்தவன், அவள் நனையக்கூடாது என்று தள்ளி நிற்க வைக்க, மறுத்து அவனோடு நனைந்தபடி நின்றாள்.

 

இருவரின் விழி வழியே மனம் பேசிக்கொண்டது. சுவரில் ஒன்றி இருந்த இரு கைகளும், அவள் கன்னத்திற்கு இடம் மாறியது.‌ தன்னவன் கைமீது கை வைத்து இதமாகப் புன்னகைத்தாள். நெற்றி முட்டி விலகியவன் அவளைப் போல் இதமாகச் சிரிக்க, அவளைக் கவிழ்த்த அந்த விழிகள் உயிர் இல்லாமல் இருப்பதை உணர்ந்தாள்.

 

“அகா…”

 

“சாரி!”

 

“என்கிட்ட மட்டும் தான் கேட்கறன்னு எனக்குத் தெரியும். அதுக்காகச் சும்மா சும்மா கேட்காத.”

 

இதழுக்கு நோகாமல், அவர்கள் மேல் விழுந்துக் கொண்டிருந்த தண்ணீருக்கும் வலிக்காமல் சிரித்தவன், “நான் இருக்கேன்!” என்று மட்டும் கூற, “நீ மட்டும் போதும்!” என்றாள்.

 

“கஷ்டமா இருக்கா?”

 

“ம்ம்”

 

“சரியாகிடும்!”

 

“ம்ஹூம்! நீ என் முன்னாடி இப்படி இருக்கற வரைக்கும் சரி ஆகாது. எனக்கு என்னோட அகா எப்பவும் கம்பீரமா இருக்கணும். நான் அதிகமா நேசிச்ச இந்தக் கண்ணு, எதுக்கும் தளர்ந்து போகாம உயிர்ப்பா மின்னனும். என் ஆர்மி கோபப்பட்டா கூடத் தாங்கிப்பேன். இப்படி உடைஞ்சு நின்னா தாங்க மாட்டேன்.”

 

“கொல்லாதடி மனுசன…”

 

“இப்ப என்ன ஆச்சு?”

 

“நான் இருந்தும் உன்ன…”

 

அவன் கன்னத்தைப் பிடித்தவள், “அவங்க வார்த்தை உனக்குத் தப்பாய் தெரியலாம், எனக்கு உன் மேல இருக்க அன்பாத்தான் தெரியுது. அவங்க மேல எந்தத் தப்பும் இல்லை. உன்னத் தவிர சுத்தி இருக்க எல்லாரும் என்னை எப்படிப் பார்ப்பாங்களோ, அப்படித்தான் பார்க்கிறாங்க. ஏன்னா என்னால நடந்தது அப்படி. என்னை விட அனு உன்னை நல்லாப் பார்த்துப்பான்னு நம்புறாங்க. அவங்க நினைக்கிறது தப்புன்னு தெரிஞ்சுட்டா போதும். நீ என்னை எப்படித் தாங்குறியோ, அதே மாதிரி இவங்களும் தாங்குவாங்க.” என்று விட்டு அவன் விழிகளையே பார்த்துக் கொண்டிருக்க, என்ன நினைத்தானோ இதமாக அணைத்துக் கொண்டான்.

 

“கோபப்படாத அகா…”

 

“மேடம் பயந்துட்டீங்களா?”

 

“ம்ஹூம்” எனத் தலையசைத்தவளை தன்னிடமிருந்து பிரித்தவன், “ஹான்” என வக்கனையாகப் புருவம் உயர்த்த, “கொஞ்சம்…” ஒத்துக்கொண்டு அவன் மார்பில் சரணடைந்தாள்.

 

“இந்த அகாவைப் பிடிச்சிருக்கா?”

 

“எத்தனை அவதாரம் எடுத்தாலும் பிடிக்கும்.”

 

“ஏன்”

 

“எவ்ளோ கோபமா இருந்தாலும், ஒரே ஒரு செகண்ட் உன் கண்ணு என்னைப் பார்த்தா போதும். அது அப்படியே பனி மாதிரி உருகிடுது. பிடிக்காம என்ன செய்யும்.”

 

“அகாவப் பிடிக்குமா, ஆர்மியைப் பிடிக்குமா?”

 

“ம்ம்” என மூக்கைச் சுருக்கியவள், கைகளை அவன் தோள் மீது போட்டு, “அம்முக்கு ஆர்மியப் பிடிக்கும். மதுணிக்கு அகா, ஆர்மி ரெண்டு பேரும் எப்படி இருந்தாலும் பிடிக்கும்.” என்ற மதுணியின் நெற்றியில் அழுத்தமாகப் பதிந்தது அவன் முத்தம்.

 

“நான் இல்லாத நேரம் உன்கிட்ட யார் என்ன பேசுனாலும் மறைக்காம என்கிட்டச் சொல்லணும். என்னை மீறி எதுவும் நடக்காதுனாலும், உன் விஷயத்துல பார்த்துக்கலாம்னு இருக்க முடியல.‌ நான் கஷ்டப்படுவேன், மத்தவங்க கஷ்டப்படுவாங்கன்னு மறைச்சு வச்ச…”

 

“வச்சா…” குறும்போடு தலை சாய்த்துக் கேட்டாள்.

 

“கடிச்சு வச்சுருவேன்.”

 

“அச்சோ!”

 

“அச்சச்சோ…” என ஓசை கொடுத்த இதழை இதழோடு சேர்க்க, மகிழ்வாக அவனுக்கு ஒத்துழைப்புக் கொடுத்தாள்.

 

இருவருக்கும் நடுவில் நுழைந்த நீர், முத்தத்திற்குள் புகுந்து எச்சிலோடு கள்ளத்தனமாக உறவு வைக்க, அதையும் இதழுக்கு இதழ் பரிமாற்றிப் பழி வாங்கினார்கள். மென்மையான இதழைத் தனக்கு வாகாக இழுத்துக் கொண்டவன் வேகத்தை அதிகரித்தான். வழக்கத்திற்கு மாறாக, அவனுக்குச் சரிசமமாக ஈடு கொடுத்தாள் நனைந்த மீசை நடுங்கும் அளவிற்கு. இதழ் முத்தத்தில் அனாவசியமாக நொந்து போனது பற்கள்.

 

போட்டி போட்டு முத்தமிட்டவர்கள் ஏதோ ஒரு கட்டத்தில் தோல்வியைத் தழுவ, அதை ஒப்புக் கொள்ளாது பற்கள் எனும் ஆயுதம் இதழைக் கடித்தது. வலியில் இதழ் பிரிய முனைய, உடனே இதமான முத்தம் கவ்வி இழுத்தது. உள்ளுக்குள் சுழன்று கொண்ட நாக்குத் தப்பிக்க வழி இல்லாமல் எதிர் நாக்கோடு தந்தி அடித்தது.

 

மூச்சு முட்ட முத்தமிட்டவன் கைகள், நனைந்த ஆடைக்குப் பயம் காட்டியது. நீரின் கருணையால் அவனுக்கானவள் அங்கங்கள் வசதியாக வழிவிட்டது. முரடனுக்கு ஈடு கொடுக்க முடியாமல், தோள்களைப் பலமாகத் தாமரை விரல்கள் தழுவியது. அதையும் ஆட்டம் காணச் செய்தான் கொழுத்த இடைச் சதைகளைக் கிள்ளி. கன்னிப் போனது அவன் கைவிரல் வித்தையால். வெள்ளை நிற உடல் அங்கங்கே சிவப்பு நிறத்தைத் தத்தெடுத்துக் கொண்டது. அகம்பனின் இம்சையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தள்ளி விட்டவள்,

 

“பொறுக்கி!” என நொந்து போன இதழுக்குக் கைவிரலால் ஒத்தடம் கொடுத்தாள்.

 

“ஹா ஹா…” தன்னவள் கொடுத்த பட்டத்தில் நடந்ததை எல்லாம் மறந்து வாய்விட்டுச் சிரித்தவன், “அப்பவே தள்ளி விட வேண்டியது தான.‌ நல்லா அனுபவிச்சிட்டு, என்னைக் குத்தம் சொல்ல வேண்டியது.” கன்னத்தில் இடித்தான்.

 

“ச்சீ போடா…”

 

“வெட்கத்தைப் பாருங்கடா அம்முவுக்கு.”

 

“அகா…” சிணுங்கி அவன் மார்பில் முகம் புதைத்தாள்.

 

ஆசையாக அணைத்துக் கொண்டு உச்சந்தலையில் முத்தமிட்டவன், “உனக்கு என்னடி ஆசை?” கேட்டான்.

 

விலகும் முன் இறுக்கமாக அணைத்து விட்டு விலகியவள், “உன் கூட எப்பவும் இப்படி இருக்கணும். உன்னப் பார்த்துகிட்டு, உனக்குச் சமைச்சுப் போட்டுக்கிட்டு…” அவள் ஆசையை முழுதாகச் சொல்வதற்குள் தலையில் கொட்டினான்.

 

“ஸ்ஸ்ஹா…”

 

“அரை மெண்டல்!”

 

“ஏன்டா?”

 

“என்ன ஆசைன்னு கேட்டா, பைத்தியம் மாதிரி உளறிட்டு இருக்க. மூணு வேளையும் எனக்கு ஆக்கிப் போடுறதுலாம் ஒரு லட்சியமாடி. அவனவன் இமயமலையை வளைக்கனும், வானவில் மேல ஏறி நிற்கணும்னு சொல்லிட்டு இருக்கானுங்க.”

 

அலட்டிக் கொள்ளாமல் அவன் தோளோடு கை நுழைத்துத் தனக்கு வாகாக இழுத்து, “எனக்கு எது கிடைக்கலையோ, அது தான் என் லட்சியம். பதினேழு வயசுல சிஇஒ சீட்ல உட்கார்ந்தேன். அன்னையில இருந்து உன்னைப் பார்க்கிற வரைக்கும், என்னோட நல்லது கெட்டது எல்லாமே அந்த ஹாஸ்பிடல்ல தான். ஏதாச்சும் விசேஷம்னு வந்தா அந்த ஹாஸ்பிட்டலே காலியா இருக்கும். அப்பக் கூட நான் அங்க தான் இருப்பேன். வீட்ல இருக்கலாம்னு நினைச்சாலும், அப்பா எதையாவது சொல்லி ஹாஸ்பிடலுக்கு அனுப்பிடுவாரு.

 

சரின்னு எல்லாத்தையும் மறந்துட்டு வேலை பார்க்க ஆரம்பிக்கும் போது, கிஷோர் வைக்கிற ஸ்டேட்டஸ் கண்ணுல படும். நான் இல்லாமல் குடும்பமா, அழகா ஒவ்வொரு விழாவையும் கொண்டாடுவாங்க. என்னைச் சுத்திக் காசு இருந்துச்சு. பெரிய பதவி இருந்துச்சு. குடும்பமும், அன்பும் மட்டும் தான் இல்ல. எனக்கு அது வேணும் அகா…

 

எல்லா நாளும் இல்லனாலும் உலகமே குடும்பத்தோடு இருக்கற அந்த ஒரு சில செலப்ரேஷன்லயாது குடும்பத்தோட நான் இருக்கணும். உன் கூட அழகா ஒரு வாழ்க்கை. நமக்குன்னு குழந்தைங்க. உங்களைப் பார்த்துக்க நான். என்னைப் பார்த்துக்க நீங்க. உன் வீட்டுக்கு நல்ல மருமகளாக இருக்கணும். உங்க அம்மா உன் மேல காட்டுற அதே பாசத்தை என்கிட்டக் காட்டணும். என்னைப் பிடிக்கலைன்னு சொன்ன மாமனார், நான் என்ன செஞ்சுக் கொடுத்தாலும் வாயை மூடிக்கிட்டுச் சாப்பிடணும். உங்க அண்ணன் கூட எப்படியாவது ஃப்ரெண்ட் ஆகணும்.” அடுக்கிக் கொண்டே சென்றவளை மனம் வலிக்கப் பார்த்தான் அகம்பன் திவஜ்.

 

“போதும்டி, லிஸ்ட் பெருசாப் போகுது.”

 

“கேட்கவே கசக்குது. எங்க இருந்து நிறைவேத்துவ.”

 

முகத்தைச் சுருக்கிய தன்னவளின் நுனிமூக்கில் முத்தமிட்டு, “நிறைவேத்திட்டாப் போச்சு.” என்றான்.

 

“ம்க்கும், போ!”

 

“ரொம்பக் கொனட்டாதடி கடிச்சிருவேன்.” என்றதும் கை வைத்து வாயை மூடிக்கொண்டாள்.

 

“ஹா ஹா ஹா”

 

“காட்டுமிராண்டி!”

 

“சரி வா, உன் ஆசைய நிறைவேத்தலாம்.”

 

“இப்ப என்ன பண்ண முடியும்?”

 

“என்னை ஆசையாக் கொஞ்சிக்க…”

 

“ஆர்மி சார் எதுக்கோ அடி போடுறாரு. இதுக்கு மேல நான் இங்க இருந்தா என் உடம்புக்கு நல்லதில்ல. நீங்க இங்கயே குடும்பம் நடத்துங்க. நான் கிளம்புறேன்.”

 

நகர முயன்றவளைச் சுவரோடு தள்ளிச் சிறைப்பிடித்து, “ப்ச்! தனியா எங்க குடும்பம் நடத்த. சேர்ந்து நடத்தலாம். அப்பா அம்மா விளையாட்டுக் குடும்பத்துக்கு ரொம்ப முக்கியம்.” என்றவனின் கைகள் அவளுக்குள் ஒளிந்திருந்த ஆசையைத் தூண்டி விட முயற்சித்தது.

 

 

Click on a star to rate it!

Rating 4.4 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
7
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்