
பத்மபிரியா மட்டுமாக மருத்துவமனைக்கு விரைந்ததும், அழுது அழுது கண்கள் சிவந்திருந்த ஷ்யாமை சமன்செய்து கொண்டிருந்த விஷாலும் யாமினியும் அவளை நிமிர்ந்து பார்த்தனர்.
“என்ன நீ மட்டும் வந்துருக்க. அவ எங்க?” விஷால் கேட்க,
“அது… அவளுக்கு கொஞ்சம் ஒர்க் இருக்குடா. ஃபர்ஸ்ட் என்னை போக சொன்னா… இப்ப நிலோ எப்படி இருக்கா?” என்றாள் பதற்றமாக.
“என்னது ஒர்க் இருக்கா? அவளை பிளட் குடுக்க வர சொல்லிருந்தோம்ல? அங்க நிலோ உயிருக்குப் போராடிட்டு இருக்கா, சீரியஸ்னெஸ் தெரியாம பதில் சொல்லிட்டு இருக்க” என்று யாமினி பொங்கி விட்டாள்.
“அவளும் வர்றதா தான் இருந்துச்சு யாமினி. அவளுக்கும் சத்யாவுக்கும் என்ன பேச்சுவார்த்தை போச்சுன்னு தெரியல. என்னை முதல்ல போக சொல்லிட்டா…” என்றதும் மூவரின் முகமும் ஒரு கணம் இருண்டு பின் தெளிவுற்றது.
விஷாலுக்கோ கோபம் அடங்க மறுத்தது.
“என்ன விளையாடுறீங்களா? முதல்லயே சொல்லிருந்தா வேற எங்கயாவது அரேஞ்ச் பண்ணிருக்கலாம்ல…” என எரிச்சலாய் முகம் சுருக்கி விட்டு, “அந்த பொம்பளை பொறுக்கிக்கு மட்டும் நல்லா கூஜா தூக்குவா… இதே நம்மன்னா மட்டும் அவளுக்கு இளக்காரமா இருக்கும்!” என்று பொரிந்திட, பத்மபிரியாவிற்கு தொண்டை வரை வார்த்தை நின்றது விஷாலைக் கடிய.
ஆகினும் அது முடியாமல் இறுகியே நின்றாள்.
அவளை முறைத்து விட்டு விஷாலும் யாமினியும் அங்கிருந்து சென்று இரத்தத்திற்காக ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்.
யாமினி சற்றே சிந்தனையுடன், “டேய்… அந்த சத்யா அம்ரிட்ட எல்லாத்தையும் சொல்லிருப்பானோ? ஒருவேளை அவளுக்கு உண்மை தெரிஞ்சா…?” என்றாள் லேசான பயத்துடன்.
“சான்ஸே இல்ல. கேஸுக்கு பயந்து ஊரை விட்டு ஓடிப்போனவன், இப்ப பொழைக்க வழி இல்லாம இங்க வந்துருக்கான். அவனைப் பார்த்ததும் அவளுக்கு அப்படியே…” அசிங்கமாகப் பேச வந்தவன், வார்த்தையை விழுங்கி விட்டு
“வேணும்னே என்னை வெறுப்பேத்த தான் அவனைக் கல்யாணம் பண்ணிருப்பா. அவனைக் கல்யாணம் பண்ணாம அவளால பிசினஸ் நடத்த முடியாதாக்கும். ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல், அவள் என்ன தான் முக்குனாலும் இந்த ஃபீல்டுல அவளால சர்வைவ் கூட பண்ண முடியாது. என்ன தைரியத்துல தனியா ப்ராண்ட்னு பண்ணிட்டு இருக்காளோ. எப்படியும் அவன் மேல இருக்குற மயக்கம் தீரவும், பிசினஸ் லாஸ் ஆகவும் கரெக்ட்டா இருக்கும். அப்ப இங்க தான வந்தாகணும். அவளை மாதிரி ஒன்னும் நான் இல்ல யாமினி… யூ நோ அபவுட் மீ. அவள் எப்படி திரும்பி வந்தாலும் ஐ வில் பி தேர் ஃபார் ஹெர்” என்றான் மூச்சிரைக்க.
“எனக்குப் புரியுதுடா. நம்ம அவள் நல்லதுக்குன்னு மட்டும் தான் எல்லாம் செஞ்சோம். ஆனா அவ எதையும் புரிஞ்சுக்க மாட்டுறா. பட் நீ கொஞ்சம் அவளுக்கு லாயலா இருந்துருக்கலாம்…” என்று முணுமுணுக்க, விஷால் அவளைத் திரும்பி சீறலாய் பார்த்தான்.
சட்டென பேச்சை மாற்றியவள், “சரி அது உன் பெர்சனல். நீ அப்படி நடந்துக்கிட்டதுக்கும் எமோஷனல் ரீசன் இருக்கு. ஐ அண்டர்ஸ்டாண்ட். அவள் உன்னை ஹஸ்பண்டா நடத்திருந்தா நீ தப்பு பண்ணிருப்பியா என்ன… அதை விடு. நீ சொன்ன மாதிரி எப்படியும் அவள் நம்மகிட்ட திரும்பி வந்துடுவா” என்று தேற்றிய நேரம், தேவைப்பட்ட இரத்தமும் கிடைத்துவிட, நிலோஃபரின் அறுவை சிகிச்சையும் நன்முறையில் முடிந்தது.
ஆனால் விஷால் விடவில்லை. இதயாம்ரிதாவிற்கு விடாமல் அலைபேசி அழைப்புகளைக் கொடுத்துக்கொண்டே இருந்தான்.
இங்கோ “வேற மாடல் சூஸ் பண்ணிக்கலாம் சத்யா. எனக்கு இது பிடிக்கல” என்று விட்ட இதயாம்ரிதாவை நக்கலாய் ஏறிட்ட சத்யா,
“எனக்கு மட்டும் பிடிச்சா செய்றேன். உன் மூச்சு டச் ஆகுறது கூட எனக்கு அருவருப்பா தான் இருக்கு. பட் பிடிச்ச மாதிரியே இருக்கேனே. நடிச்சுக்கோ மிஸஸ் பொண்டாட்டி. நடிக்கவா கத்துக்குடுக்கணுமா உனக்கு…” என வெறுப்பை உமிழ்ந்தவனை,
“நீங்க என்கிட்ட கான்டராக்ட்கு ஒர்க் பண்ற மாதிரி இல்ல. நான் தான் உங்ககிட்ட ஒர்க் பண்ற மாதிரி இருக்கு மிஸ்டர் ஹஸ்பண்ட். உங்க சர்டிஃபிகேட்ஸ் எல்லாம் உங்களுக்கு ஜென்மத்துக்கும் கிடைக்காத மாதிரி செஞ்சுடுவேன் ஜாக்கிரதை…” என்று நெருப்பாய் தகித்து விட்டே உடைமாற்றும் அறைக்குச் சென்றாள்.
அவனிடம் ஏளன நகை. என்றோ விட்டுப்போன அவனது படிப்பும் எதிர்காலமும் அந்த சான்றிதழ்களுடனே மடிந்து போன பின் அதை பெறுவதற்கு எதற்காக இத்தனை நாடகம் செய்ய வேண்டும்? அவளைத் திருமணம் செய்து கொள்ள அவனுக்கும் ஒரு காரணமிருக்கிறது என அவளை இலாவகமாக நம்ப வைக்கத்தானே அவ்வப்பொழுது சான்றிதழைகளைக் கேட்டு தொல்லை செய்கிறான்.
ஃபோட்டோ டெஸ்ட் முடிந்த பிறகு, விளம்பரங்களை இயக்க வந்த இயக்குனர், உதவியாளர்கள் அனைவருமே அவளே இந்த விளம்பரங்களுக்கு சரியாக இருப்பாள் என அபிப்ராயம் வழங்க, “சரி ஓகே… இன்னைக்கு போட்டோஷுட் மட்டும் இருக்கட்டும். நாளைக்கு சின்னதா ஒரு ஆட் ஷுட் பண்ணலாம். ஆல்ரெடி பழைய மாடல் கூட எடுத்த விளம்பரத்தை யூஸ் பண்ண வேணாம்…” என்று விளக்கம் கொடுக்க, சத்யா இடைமறித்தான்.
“ஏன் இன்னைக்கு இன்னும் நிறைய டைம் இருக்கே. நீ தான் மாடல்னு ஃபிக்ஸ் ஆனதுக்கு அப்பறம் ஏன் தள்ளி வைக்கணும். இன்னைக்கு ஷுட் ஸ்டார்ட் பண்ணிடலாம்” என்று விட, அவனைத் தீயாக முறைத்தாள்.
“சத்யா நான் போகணும்…”
“போ! என் ஹஸ்பண்ட் டியூட்டி முடிஞ்சதும் தாராளமா போ!” என அழுத்தம் திருத்தமாய் உரைத்தவன், “அகில்…” என அவளை மிடுக்காய் ஏறிட்டபடியே அழைக்க, அகில் அவனிடம் ஓடி வந்தான்.
“உங்க மேடம்க்கு என்ன ட்ரெஸ் சூஸ் பண்ணலாம்…” என அவளை மேலிருந்து கீழ்வரை பார்வையால் உரித்தான்.
“மேடம்கு எல்லா வகையான ட்ரெஸ்ஸும் சூட்டாகும் சார். இருங்க நான் தேடிப்பார்த்துட்டு வரேன்” என்று அந்த ஸ்டூடியோவில் அமைந்திருந்த உடைகள் வைத்திருக்கும் அறைக்குச் சென்றான்.
சிறிது நேரத்தில் உடையும் தேர்வு செய்யப்பட்டிருக்க, அதி நவீன கவுன் ஒன்றை அணிந்து வந்த இதயாம்ரிதா மிதுனாவின் கை வண்ணத்தில் மாடல் போலவே மிளிர்ந்தாள்.
“மேம்… இந்த காஸ்ட்டியூம் உங்களுக்கு செம்மயா சூட் ஆகுது” பூமிகா புகழ,
“ப்ராடக்ட் விக்குதோ இல்லையோ… நீங்களும் சாரும் செம்மயா ரீச் ஆக போறீங்க. உங்க ஜோடிப்பொருத்தம் பக்கா. பியூச்சர்ல சினிமா சான்ஸ் வந்தாலும் வரும்… அப்பவும் நானே காஸ்டியூம் சூஸ் பண்றேன் மேம்…” அகில் அசட்டுபுன்னகையுடன் ஆஜரானான்.
“அப்ப நான் தான் உங்களுக்கு பெர்சனல் மேக்கப்” மிதுனா வேகமாக கையைத் தூக்க, “ஆக மொத்தம் நீங்க படிச்ச படிப்புக்கு வேலை பாக்க வரல. அதை தவிர வேற எந்த வேலை குடுத்தாலும் பெர்ஃபக்ட்டா பண்றீங்க…” என இடுப்பில் கை வைத்து முறைத்தாள் இதயாம்ரிதா.
மூவரும் அசடு வழிந்திட, விதுரனுக்கு அடிவயிறு காந்தியது.
‘ஜோடிப்பொருத்தமாம்… கேட்கவே சகிக்கல!’ என உள்ளுக்குள் புகைந்து கொண்டான்.
விளம்பரப் படப்பிடிப்பு தொடங்கிய முதல் நொடியிலேயே, விளம்பர இயக்குனர் கூறியதைப் போல சத்யா நடிக்கத் தொடங்க, இதயாம்ரிதாவின் அலைபேசி அலறிக்கொண்டே இருந்தது.
நிலோஃபரின் நிலை தெரியாமல் அவளுக்கு ஒன்றுமே ஓடவில்லை. அலைபேசியையும் அவளையும் மாறி மாறி பார்த்த சத்யா, அதனைப் பிடுங்கி தூர எறிந்து விட்டு அவளது இடை பற்றி அருகில் இழுத்தான். ஒரு கணம் சுற்றி இருந்த அனைவருமே உறைந்தனர்.
இதற்கு முன் எடுக்கப்பட்ட படப்பிடிப்பில், எத்தனையோ முறை விளம்பர இயக்குனர் பெண் மாடலின் கையைப் பிடிக்கச் சொல்லி வற்புறுத்தி இருந்தார்.
சத்யா அதனைக் காதில் வாங்காமல் அரையடி இடைவெளி விட்டே வேண்டிய போஸ்களை கொடுத்து விடுவான், நெருக்கமான காட்சிகளென்றால் தனியே நடித்து அதனை கிராபிக்ஸ் செய்ய சொல்லி விடுவான்.
லிப்ஸ்டிக் விளம்பரங்களில் பெண் மாடல் அவனது கன்னத்தில் முத்தமிட வேண்டுமென இயக்குனர் தெரிவித்தபோது, அதையும் கிராபிக்ஸ் செய்ய சொல்லி விட, அவருக்கு தலையைப் பிய்த்துக் கொள்ளாத குறை தான்.
இந்த விஷயம் இதயாம்ரிதாவின் காதுக்கும் எட்டியிருந்தது.
அவளோ அதில் நக்கல் நகை கலந்து, “சாருக்கு 20+ காலேஜ் பொண்ணுங்கன்னா மட்டும் தான் ரொமான்ஸ் வரும். நமக்கு மாடலிங் வந்த பொண்ணுக்கு 25 + இருக்கும்ல. சோ அவர் டேஸ்ட்கு செட் ஆகலையா இருக்கும்” என்று குத்திக்காட்டி, சத்யாவின் முகம் கன்றிப்போனதை திருப்தியாய் பார்த்து ரசித்திருந்தாள்.
விளம்பர இயக்குனர் ஒன்றும் புரியாமல் விழித்ததும் தன்னை பார்த்த பார்வையும், தற்போது நினைவிலாடியது சத்யாவிற்கு.
“இந்த சீன் சீக்குவன்ஸ்லயே இல்ல சத்யா” இடையில் அழுந்த பதிந்திருந்த ஆடவனின் கரத்தை எடுக்க முயன்றபடி இதயா சிடுசிடுக்க, “க்ளோஸ்ஸா நடிக்க வேண்டிய விளம்பரமாமே! எனக்கு 25+ பொண்ணுங்க கூடவும் ரொமான்ஸ் வரும்னு காட்டணுமே இதயா” என்றான் விஷமமாய்.
லிப்ஸ்டிக்கின் வண்ணம் அவன் கன்னத்தில் அழுந்தப் படிவது போலான காட்சி. அதன்பிறகும் அவளது இதழ்களில் உதட்டுச்சாயம் மிச்சமிருக்க, சத்யா அவளை இதழில் முத்தமிடுவது போல தூரத்து காட்சியாய் மறையும். ஆனால் அதன்பிறகும் கூட, ஒளிரா மூலமாய் தயாரித்த லிப்ஸ்டிக்கின் நிறம் மங்கிப்போகாது ஜொலிக்கும், வாட்டர் ப்ரூஃப், கிஸ் ப்ரூஃப் என நிரூபிக்கும் விளம்பரம் அது.
இதற்கு ஐடியா கொடுத்தது என்னவோ இதயாம்ரிதா தான். ஆனால் அதில் அவளே வந்து மாட்டுவாள் என்று அறிந்திருக்கவில்லை.
எப்போதும் கண்ணுக்கே தெரியாத இதழின் நிறத்திலேயே உதட்டுச்சாயம் பூசி இருப்பாள். இன்றோ அதிகப்படியான சாயம் அவளது உதடுகளைத் தனித்துக் காட்ட, அவனது பார்வை அவள் மீது தானாய் படிந்தது.
இயக்குனரின் எவ்வித அறிவுரையும் தேவைப்படாது என்பது போல இயல்பாகவே அக்காட்சியில், அவளை ரசிப்பதும் யாரிடமோ பேசிக்கொண்டு நிற்பவளை நாள் முழுதும் கண்ணால் விழுங்குவதும் என அவன் கதாப்பாத்திரத்தில் மூழ்க, அவளோ நாள் முழுதும் அவனை சுற்றலில் விட்டு விட்டு, பின் சிறிது சிறிதாய் ரசிப்பதும் ரசிக்க வைப்பதுமாக நடித்தாள்.
இதுநாள் வரை அவன் பின்னே அவள் சுற்றி இருக்கிறாள் தான். அவனோ இவளை நிமிர்ந்தும் பார்த்ததில்லை. இப்போதோ நடிப்பு என்றாலும், அவன் தன்மீது கொண்ட தனித்த பார்வை உள்ளுக்குள் மடிந்து போன கல்லூரிப் பெண்ணின் சிறகை மெல்ல மெல்ல சீண்டிப்பார்த்தது.
அந்த சிறகுகள் ஒடிந்து சிதறி வருடங்கள் சில கடந்தும் விட்டதே! ஆகினும் சிறகு மீள துடிக்கும் முயற்சி அவளுக்கே வெறுப்பாய்!
அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட வேண்டிய தருணத்தில் தடுமாறிப்போனாள்.
இந்த பெண் மாடல் கழன்று கொண்டதால், தான் இவனுடன் இழைய வேண்டியதாக இருக்கிறது என நொந்து போனவளுக்கு, மற்றொரு ஆளை தேர்ந்தெடுக்க போதிய நேரமில்லை.
இன்னும் இரண்டே வாரத்தில் பிரான்சில் நடைபெறும் உலகத்தரமிக்க காஸ்மெட்டிக் கண்காட்சியில் அவளது ஒளிராவின் அத்தனை உற்பத்திகளையும் பங்கேற்க வைக்க வேண்டும். டாப் க்ளாஸ் காஸ்மெட்டிக்ஸ் மட்டுமே பங்கு கொள்ளும் அந்த கண்காட்சியில் இடம்பெறாது போனால், அடுத்த ஒரு வருடத்திற்கு பெரும் போராட்டமாகவே இருக்கும். மீண்டும் அந்த கண்காட்சியில் இணைவது குதிரைக்கொம்பு தான்.
இரு முறை லேசாய் அவன் கன்னத்தில் இதழொற்றி விட்டு விலகியவளிடம் மூன்றாவது டேக் எடுக்கும்படி இயக்குனர் வற்புறுத்த, பற்களை நறநறவென கடித்தாள்.
“என்னை கிஸ் பண்ணிட்டே இருக்கணும் போல இருக்கோ!” விஷமப்புன்னகையுடன் அவள் காதோரம் முணுமுணுத்த சத்யாவை நிமிர்ந்து முறைத்தவள், இம்முறை அவன் கன்னம் பற்றி அழுத்தத்தை அதிகரித்து கன்னத்தில் சின்னம் வைக்க, விதுரனுக்கு இந்தக் காட்சிகளெல்லாம் தலைவலியையே கொடுத்தது.
“ப்பா… ரொமான்டிக் கபில்ல?” மிதுனா அவனருகில் நின்று சிலாகிக்க,
“இதுல என்ன ரொமான்ஸ் இருக்கு? செகண்ட் மேரேஜ் பண்ணிட்டு, புருஷனை மாடலாக்கி, பிசினஸ சக்ஸஸ் ஆகணும்னு இப்ப தானே மாடல் ஆகிக்கிட்டு எல்லார் முன்னாடியும் உரசிட்டு நிக்கிறதுக்கு பேர் ரொமான்ஸா. வெரி ஃபன்னி… இந்த பணக்காரங்களுக்கு மனசுலயும் உணர்ச்சி இருக்காது. உடம்புலயும் உணர்ச்சி இருக்காது போல…” என்றதும் மிதுனா கோபத்துடன் “விதுரா…” என்று கத்தியே விட்டாள்.
அதில் “கட் கட்” என இயக்குனர் கத்தரித்து விட, மற்றவர்களின் பார்வை மிதுனாவின் மீது படிந்தது.
விதுரனை காட்டத்துடன் முறைத்தவள், “சாரி மேம். சாரி சார்” என இருவரிடமும் மன்னிப்பு கேட்டு விட்டு வெளியில் செல்ல, புகைப்படம் எடுக்க அவசியம் இல்லாததால் விதுரனும் அவள் பின்னே சென்றான்.
“இப்ப நீ எதுக்கு கோபப்படுற?” பின்னாலேயே வந்தவனின் கேள்வியில்,
“யாரோட கேரக்டர் பத்தியும் தப்பா பேசுற உரிமை நமக்கு இல்ல விது” என்றாள் சினத்தை அடக்கிக்கொண்டு.
“தப்பா இருக்கறதை தப்புன்னு தான சொல்ல முடியும்…” விதுரன் பிடிவாதமாக நிற்க,
“உங்கிட்ட பேசுறது வேஸ்ட்” என்று அங்கிருந்து நகரப்போனவளின் கையைப் பிடித்து நிறுத்த எத்தனித்தான்.
அந்நேரம் அவனை மீண்டும் ஏதோ திட்டுவதற்காக அவளாக திரும்பி விட்டதில், இருவரின் இதழ்களும் எதேச்சியாய் முட்டிக்கொண்டது.
நொடிப்பொழுதில் அவளது கோபமெல்லாம் மாயமாய் மறைந்து போக, நெஞ்சில் படபடவென சத்தம்.
ஒரு கணம் இருவரிடமும் மின்னல்கள் பளிச்சிட்டது.
இதற்கு முன்னும் பல முறை வாதங்களும் சண்டைகளும் நிகழ்ந்திருக்கிறது தான். ஆனால், இம்முறை மட்டும் வித்தியாசமாய்! அதற்காக நண்பர்களாக மட்டுமே பழகினார்கள் என்று சொல்ல முடியாது தான். அவ்வப்பொழுது ஒருவருக்குத் தெரியாமல் மற்றவர்கள் ரசித்துக்கொள்வது உண்டு.
“நா… நான்… பேச தான்…” அவள் தடுமாற, அவனிடம் அத்தனை நேரமும் வீற்றிருந்த கோபங்கள் யாவும் கரைந்து ரசனையைக் கொடுத்தது.
“நானும் பேச தான் கையைப் பிடிச்சேன்!” அவனும் மென்புன்னகையுடன் கூறிட, அவனை ஏறிட இயலாமல் தவித்துப் போனாள் மிதுனா.
—–
கன்னத்தில் முத்தமிட்ட பாவையின் நறுமணம் எப்போதும் போலவே சத்யாவின் உள்ளுணர்வுகளில் கலவரம் புரிந்தது.
இப்போது அவன் அவளுக்கு இதழ் முத்தம் கொடுக்க விழைய, எப்போதும் அவன் கொடுப்பது தானே என அவளே பழக்கம் கொண்டவள் போல நின்று கொண்டாள்.
அவனோ பலமுறை கொடுத்த முத்தம் போலல்லாது, மிக மிக மென்மையாய், ஆழமாய், சிறு துளியளவில் ரசனை கலந்து அவளுள் மூழ்கிட, இதனை எதிர்பாராதவளின் கண்கள் தானாய் மூடிக்கொண்டது. கால்கள் மொத்தமாய் தொய்யத் தொடங்க, அவன் விட்டுவிட்டால் அவள் கீழே விழுந்து விடுவாளென்ற நிலை!
ஒன்றும் யோசிக்கத் தோன்றவில்லை. சுற்றுப்புறத்தை கடுகளவும் மதியாது, இருவரும் முத்தத்தில் முத்துக்குளித்தனர்.
“கட் கட்” என இயக்குனர் பல முறை கத்தி விட்டார்.
அகிலும் பூமிகாவும் அவர்களையே ‘பே’ வென பார்த்திருக்க, “என்ன பூமி வசனமே புரியல” என அகில் திருதிருவென விழித்தான்.
“வசனமா முக்கியம். படத்தை பாருடா…” என்ற பூமிகாவைத் திரும்பி பார்த்தவன், “அடிப்பாவி… மத்த நேரம் மட்டும் டென்ஷனாகி படபடப்பா இருப்ப. இப்ப எந்த டென்ஷனும் இல்லையா?” எனக் கேட்டதில்,
“இந்த கிஸ் சீன் நானா பண்ணிட்டு இருக்கேன் டென்ஷன் ஆக. ஓசி சீன் தான” என அசடு வழிந்ததில், கேவலமாய் பார்த்தவன் அவளையும் இழுத்துக்கொண்டு வெளியில் வந்து விட்டான்.
மற்றவர்களும் தானாய் கலைந்து சென்று விட, போர்க்களமாகி குருதி கண்ட இரு இதயங்களில் மட்டும் பல முறை வீர மரணங்கள் பெற்ற தழும்புகள் தாண்டவமாடியது.
——
“ஹையோ ஜாலி… பிரொஃபி கூட டூருக்கு வந்தாச்சு. வந்த இடத்துல வசமா என்கிட்ட சிக்க வச்சுட வேண்டியது தான்” எனக் கனவு கண்டு கொண்டு வந்தவளுக்கு ‘புஷ்’ என்று ஆனது.
கன்னியாகுமரி அருகில் இருக்கும் கிராமத்திற்கு அழைத்துச் சென்றவர்களை கிராமத்தில் இருந்த வீட்டிலேயே தங்க வைத்தனர். பெண்களை பேராசிரியை சுஜாதாவின் தலைமையில் தனியே வெளியில் அழைத்துச் செல்ல, மாணவர்களை சத்யா வழிநடத்தினான். தனி தனியாய் பிரிந்ததில் கடுப்பாகி விட்டாள்.
அதற்காக வேண்டுமென்றே அவனிடம் பேசவும் முயலவில்லை. தானாக சென்று வழிந்து நின்றால், அவனுக்குத் தான் கெட்ட பெயர் வருமென்ற எண்ணத்தில், கல்லூரியில் குழைவது போல இங்கு நடந்து கொள்ளாமல் அமைதியாக இருந்து கொண்டாள்.
நல்லவேளையாக, ஒரே வீட்டின் இரு பகுதிகளைப் பிரித்து மாணவ மாணவிகளுக்கு தனித்தனியாய் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. மீதி இருந்த இரு அறைகளில் சத்யாவும் சுஜாதாவும் தங்கி கொள்ள, அனைவருமே ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விட்டனர்.
இதயாம்ரிதா தான் உறக்கம் வராமல் அங்கும் இங்குமாக புரண்டு கொண்டிருந்தாள். அவர்கள் தங்கி இருந்த வீட்டிற்கு அருகிலேயே அரசாங்க ஆள்கள் தரையைத் தோண்டி வேலை செய்து கொண்டிருந்தனர். மற்றவர்கள் சிணுங்கினாலும் அசதியில் உறங்கி விட, இதயாவிற்கு துளியும் தூக்கம் அண்டவில்லை.
அதற்கு மேல் படுக்க இயலாமல் வெளியில் வந்து வராண்டாவில் உலாவினாள். மழை நீரை சேமிக்கவென்றே நடுவில் பரந்த இடம் கொண்ட அந்த காலத்து வீடு. அதனைச் சுற்றிப்பார்த்துக்கொண்டே சத்யாவின் அறைப்பக்கமும் எட்டிப்பார்க்க அங்கு விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
‘நம்மாளு தூங்காம என்ன செஞ்சுட்டு இருக்காரு’ என எண்ணியடி அவனைத் தேடிச் சென்றவள் வாயில் கை வைத்தாள்.
கட்டிலில் அமர்ந்து தீவிரமாய் படித்துக்கொண்டிருந்தான். அதிலும் அவனைச் சுற்றியும் தூக்கவே இயலாத அளவிற்கு பெரிய பெரிய புத்தகங்கள்.
“அவ்வ்வா… இந்த ரெண்டு நாளைக்காக இவ்ளோ புக்ஸ் தூக்கிட்டு வந்தீங்களா?”
இதயாவின் குரலில் திடுக்கிட்டவன், “நீ இங்க என்ன பண்ற இந்த நேரத்துல போய் தூங்கு” என அதட்டினான்.
“உங்களுக்கு கம்பெனிக்கு…” அவள் குறும்பாய் கேட்டதில் சத்யா திகைக்க, “ஐ மீன், படிக்க ஹெல்ப் பண்ணவான்னு கேட்டேன்” என்றாள் சிரிப்பை அடக்கிக்கொண்டு.
“ஒன்னும் தேவ இல்ல. முதல்ல ரூம்க்கு போ” கண்டிப்பாய் கூறியவனிடம்,
“ப்ச், நானும் தூங்க தான் ட்ரை பண்றேன். வெளில ஏதோ வேலை பாக்குறாங்க. சுத்தமா தூங்க முடியல” என்றாள் பரிதாபமாக.
“ஜன்னலை எல்லாம் க்ளோஸ் பண்ணிட்டா கேட்காது. மத்த எல்லாரும் தூங்குறாங்க தான?” சத்யா முறைக்க,
“ஐயோ எனக்குலாம் சின்னதா சத்தம் வந்தா கூட தூக்கம் வராது. பேன் கூட போட மாட்டேன் தெரியுமா! பட் சீரியஸ்லி ஐ ஆம் ஸ்லீப்பி. பட் தூங்க முடியல” என உதட்டைக் குவித்தாள்.
“அப்படின்னா நீ டூர்க்கே வந்துருக்க கூடாது. வந்த இடத்துல ஏசி ரூம் எல்லாம் போடுறதுக்கு இது நீ எப்பவும் போற லக்ச்சுவரி டூர் இல்ல. எல்லாம் தெரிஞ்சு தான வந்த?”
“தெரிஞ்சு தான் வந்தேன். இதான ஃபர்ஸ்ட் டைம். போக போக பழகிடும்…”
“ம்ம்ஹும் பெட்டர் இந்த மாதிரி ட்ரிப் அவாய்ட் பண்ணிடு. உனக்கும் கஷ்டம் உன்னை கம்ஃபர்ட்டா வச்சுக்கணும்னு நினைக்கிறவங்களுக்கும் கஷ்டம்.”
“என்னை கம்ஃபர்ட்டா வச்சுக்கணும்னு இப்ப யார் நினைக்கிறாங்க?” இரு புருவமும் உயர்த்தி இதயா கேட்டதில், “ஸ்டூடண்ட்டை பத்திரமா கூட்டிட்டுப் போறது இன்சார்ஜ்ஜா வந்த என் வேலை தான?” சாமர்த்தியமாக சமாளித்தான்.
“வெரி பேட் பிரொஃபி. இத்துனூண்டு கூட உங்களுக்கு என்மேல பீலிங்ஸ் இல்ல?” இடுப்பில் கை வைத்து அவள் கேட்டதில்,
“இல்ல” என்றான் பட்டென.
“பரவாயில்ல. இனிமே வரலாம்…” என மூக்கைச் சுளித்தவளைக் கடுமையாய் முறைத்தவன், “முதல்ல நீ எதுக்கு இங்க வந்த?” என்றான்.
“எனக்கும் ட்ரஸ்ட் ஸ்டார்ட் பண்ணனும்னு தான் ஆசை. அதான் இது எனக்கு யூஸ்புல்லா இருக்கும்னு நினைச்சேன்!”
“ரொம்ப நல்லது. ஆனா அதை பிஸினஸா நினைக்காம சேவையா செய்யணும்னு நினைச்சா, இந்த மாதிரி ஊர்ல இறங்கி வேலை பார்க்கணும். ஃபீல்டு ஒர்க் பண்ணனும். அப்போ தான், ரியாலிட்டில சொசைட்டிக்கு என்ன தேவைன்னு தெரிஞ்சுக்க முடியும்…” என்றவனின் கூற்றில் வேகமாக தலையசைத்தவள், “நீங்க வேணும்னா இதுக்கும் க்ளாஸ் எடுங்களேன். தெரிஞ்சுக்குறேன்” என்றதில், “நீ இந்த ஜென்மத்துல உருப்பட மாட்ட” என்றான் கடுப்பாக.
“தேங்க்ஸ் ஃபார் யுவர் காம்ப்ளிமெண்ட்!” லேசாய் குனிந்து பாராட்டை ஏற்றுக்கொண்டவளைக் கண்டு மெலிதாய் புன்னகைக்க முயன்ற்து அவன் இதழ்கள்.
சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டவன், “இங்க அந்த அளவு சவுண்ட் இல்ல. நீ இங்க தூங்கு” என்றதும்,
“அச்சோ அப்ப நீங்க?” என்றாள்.
“பரவாயில்ல. நான் பசங்க ரூம்ல படுத்துக்குறேன். படிக்க தான் தனி ரூம் கேட்டேன்.”
“ஓ! கபிளா வந்துருந்தா இந்தப் பிரச்சினை இல்லைல?” மீண்டும் ஒரு குறும்பு நகை அவளிடம்.
அவனோ நெற்றிக்கண்ணை திறந்திருக்க, “சரி சரி… பொங்காதீங்க!” எனக் கட்டிலில் அவள் அமர்ந்ததும் அவன் துரிதமாகப் புத்தங்களை எடுத்துக்கொண்டு வெளியேறினான்.
‘இவருகிட்ட ரொமான்ஸ் எதிர்பாக்குறது கஷ்டம் போலயே…’ என சலித்துக்கொண்டவளுக்கோ, அவன் இருந்த அறையில் தானிருப்பது சிலிர்த்தது.
உயிர் வரை ஊடுருவிய சிலிர்ப்பின் அர்த்தம் புரியாது, அந்த நொடியை ரசித்து ருசித்தாள்.
அந்த அறையில் சத்தம் குறைவாகவே கேட்டதில் அறையினுள் சுற்றிக்கொண்டிருந்த ஆடவனின் வாசத்தை சுவாசித்தபடி கண்ணை மூடி துயில் கொண்டாள்.
மாணவர்களின் அறைக்கு வந்தபிறகே தனது அலைபேசியை இதயா இருக்கும் அறையிலேயே வைத்து விட்டு வந்தது நினைவு வந்தவனாக தலையில் அடித்துக்கொண்டான்.
வீட்டினர் வேறு எப்போது வேண்டுமானாலும் அழைப்பார்கள். அது அவளுக்கு தொந்தரவாகி விடுமே! பிறகு மீண்டும் உறக்கம் வராமல் என்னை தொல்லை செய்வாள் என்று எண்ணும்போதே அவனுள் சின்னதாய் ஒரு பரவசம் இறங்கிற்று!
வேகமாக அதே நேரம் சிறு தயக்கத்துடனே அவளது அறைக்குச் சென்றவன் அவள் உறங்குவதைக் கண்டு நிம்மதியுற்று துரிதமாக அலைபேசியை எடுத்துக்கொண்டான். சரியாக வெளியில் வரும்நேரம் அவள் மீது ஓர் கணம் பார்வையை செலுத்தியவன், திறந்திருந்த ஜன்னலையும் கண்டான்.
மென்காற்று அவள் முகத்தில் மோதிட, குளிரில் லேசாய் உடலைக் குறுக்கினாள்.
அதில் ஒரு போர்வையை எடுத்து அவளுக்கு போர்த்தி விட்டவன் நகர எத்தனிக்க, “தேங்க்ஸ் ஃபார் தி பெட்ஷீட் ப்ரொஃபி. போறப்ப அந்தக் கதவை அடைச்சுட்டுப் போய்டுங்க. குட் நைட் லவ் யூ” என்று கண்ணை மூடி சொல்லிக்கொண்டே மீதி உறக்கத்தைத் தொடர, சில கணங்கள் உறைந்து போனவன், பின் தலையாட்டிப் புன்னகைத்துக் கொண்டான்.
புது காதல் மலரும்
மேகா
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
92
+1
2
+1
2
⬅ Prev Episode
16 – புதுக்காதல் புனைந்திடவா (9 to 9 husband)
Next Episode ➡
18 – 🦋💋 புதுக்காதல் புனைந்திடவா (9 to 9 husband)
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

நைஸ் 💕💕💕💕
Thank you sooo much sis 😍😍
Super ipadilam iruntha ah ithaya ah yepadi maruna ah🤔🤔🤔🤔🤔🤔
நட்பு டூ மச். சத்யா ரிதா கியூட்.