Loading

பிறை -17

 

அம்மனின் முன்பு அமைதியாக அமர்ந்திருந்தாள் பிறைநிலா.

 

” என்ன மா நல்லா சாப்பிட்டியா ” பின்னால் கேட்ட குரலில் திரும்பியவள்.. திவாகர் நிற்பதை பார்த்து.. எழுந்து நின்றாள்.

 

” ஹான் அதெல்லாம் சாப்பிட்டேன் அங்கில் ”

 

” நீ மட்டும் இருக்க.. கூட வந்தவங்க எங்க ”

 

” எல்லாரும் சாப்பிட்டுட்டு இருக்காங்க.. அதான் நான் கொஞ்சம் நேரம் சாமி பக்கத்துல இருக்கலாம்னு வந்தேன் ”

 

” ஓ சரி மா.. நீ உட்காரு.. ” என அவர் விலகி சென்று விட.. படபடவென மீனாட்சி உள்ளே வந்தார்.

 

” அடியே பாரு.. இங்கதானே டி உன்ன வைக்க சொன்னேன். எங்க வச்சான்னு தெரியலையே ” என அவர் பதற..

 

” என்னாச்சு ஆண்டி ” என அவரது படபடப்பை பார்த்து அருகில் சென்றாள் பிறை.

 

” இல்ல மா வந்தவங்களுக்கு எல்லாம் ரிட்டர்ன் கிஃப்ட் வாங்கி வச்சேன்.. அதையெல்லாம் இங்க கொண்டு வந்து வைக்க சொன்னேன். என் மகள் அவ ரூம்ல வச்சுட்டா போல.. இந்த முட்டி வலியோட ஒரு நாளைக்கு எத்தனை முறை தான் ஏறி இறங்குறது” என சலித்து கொண்டவர்.. ” இரு மா நான் போய் எடுத்துட்டு வரேன்.. உனக்கும் இருக்கு” என மேலே செல்லப் போனவரை தடுத்தவள்..

 

” ஆண்டி நீங்க தப்பா நினைக்கலேனா நான் போய் எடுத்துட்டு வரவா.. நீங்க ரெஸ்ட் எடுங்க.. ”

 

” தங்கம் டா நீ.. மேலே உள்ள ரூம்ல தான் பாக்ஸ்ல வச்சிருக்கேன்.. ” என்றதும் தலையாட்டி வைத்து மேலே சென்றாள் பிறை.

 

மேலே இருந்த முதல் அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்று விட்டாள் பிறை. பளிச்சென்று இருந்தது அந்த அறை. அத்தனை சுத்தமாக இருந்த அறையை கண் இமைக்காமல் பார்த்தவள், கீழே மீனாட்சி கூறிய பொருளை தான் தேடிப் பார்த்தாள்.

 

நல்ல விசாலமான அறை. அறையின் நடுநயமாக மூவர் படுக்க கூடிய பஞ்சு மெத்தையும்.. அதான் அருகில் பெரிய கப்போர்டும்.. அதன் அருகே குளியலறை மற்றும் பால்கனி. இடப்பக்கம் பெரிய கண்ணாடி ஸ்டாண்டில் போலீஸ் சம்மந்தப்பட்ட புத்தகங்கள் இருந்தது.

 

டேபிளில் கூட அநாவசியமாக ஒரு பொருள் இல்லை. அனைத்தும் அதன் இடத்தில் கச்சிதமாக இருந்தது. அப்படியே விழிகளை, அனைத்து பக்கமும் சுழற்றிக் கொண்டிருந்தாள் பிறை.

 

அப்படி அவள் பார்க்கும் பொழுது தான் அந்த  விசாலமான படமும் அவளது கண்ணில் பட்டது.

 

மெத்தைக்கு எதிரே இருந்த சுவற்றில், பெரிய படத்தில் அழகாக சிரித்துக் கொண்டிருந்தான் ஆதிதேவ் ஆருத்ரன்.

 

படத்தை பார்த்ததுமே அவளது விழிகள் சாசராக விரிந்தது. போலீஸ் கட்டிங், போலீஸ் உடை என யூனிபார்மில் இருந்தாலும்.. புதிதாக அவன் முகத்தில் இருந்த புன்னகையை கண் இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தாள் பிறை.

 

இதுவரை எத்தனை முறை அவனை சந்தித்து இருக்கிறாள். ஆனால் ஒரு முறை கூட அவனது முகம் சாந்தமாக இருப்பதை பார்த்ததில்லை. இதில் எங்கிருந்து சிரிப்பை பார்ப்பது.

 

ஆனால் இந்த புகைப்படத்தில் அத்தனை அழகாக காட்சி கொடுத்தான். கேமரா இல்லாமலே மனதிற்குள் அவனை படம் பிடித்துக் கொண்டாள் பிறைநிலா.

 

எத்தனை நேரம் ஆனதோ அந்த இடத்தை விட்டு அவள் இம்மியும் நகரவில்லை. அதற்குள் பார்கவியே மாடிக்கு வந்து அவள் அறையில் இருந்த பெட்டிகளை எடுத்து கொண்டு சென்று  விட்டாள். பிறை மேலே வந்து அவளது அண்ணன் அறைக்குள் சென்றது எல்லாம் அவளுக்கு தெரியவில்லை.

 

வெகு நேரமாக புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தவளின் தோளில் சூடான மூச்சுக்காற்றை உணர்ந்தவள்.. அதிர்ந்து அடுத்த நொடி சட்டென திரும்பியவள்.. நிலை தடுமாறி அவன் மீதே விழுந்திருந்தாள் பிறை.

 

அத்தனை நெருக்கத்தில் அவள் பின்னே நின்று கொண்டிருந்தான் ஆதி. அவள் திடீரென திரும்பவும் பிடிமானம் இல்லாமல் அவன் மீது விழ வேண்டிய சூழல்.

 

பூக்குவியலாய் அவன் மீது விழுந்தவளை இடை பிடித்து தன்னோடு இறுக்கிக் கொள்ள.. அவனது இத்தனை தூர நெருக்கத்தை பார்த்து மிரண்டு போனவள்.. அவனிடம் இருந்து விடுபட முயற்சிக்க.. அவனது பிடி இரும்புப் பிடியாக இருந்தது.

 

அதுவரை அவனது முகத்தை பார்க்காதவள்.. அவனிடம் இருந்து விடு பட முடியாமல் மெல்ல மேல்நோக்கி அவனது முகத்தை பார்க்க.. அவனும் அவளைத்தான் இமை வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

” வி… வி.. விடுங்க.. ” வார்த்தைகள் எல்லாம் தொண்டைக்குள் புதைந்து கொண்டது.

 

அவளையே அழுத்தமாக பார்த்தவன்… ” என் கண்ணு முன்னாடி இனிமே உன்ன வரக் கூடாதுன்னு சொன்னேன்ல ” புருவம் உயர்த்தி அவன் கேட்டதில்.. அவளது உடம்பு ஜில்லிட்டு போனது.

 

அவனது கேள்விக்கு பதில் அளிக்காமல், எப்படியாவது அவனிடம் இருந்து தப்பிப்பதில் குறியாக இருந்தாள்.

 

ஆனால் பலன் என்னமோ பூஜ்ஜியம் தான். ஒரு அடி கூட அவளால் நகர முடியவில்லை. காவல்காரன் அவளை சிறைப்பிடித்து இருக்க.. அதில் மாட்டிக் கொண்டவளோ.. விடுதலை ஆக வழி அறியாது நின்று கொண்டிருந்தாள்.

 

” பதில் வரல.. பயமா.. அதுசரி  கண்ணு முன்னாடியே வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன்.. இதுல என் வீட்டுக்கு வந்ததும் இல்லாம.. என் ரூமுக்கே வந்து என்னைய சைட் அடிச்சிட்டு இருக்க .. தைரியம் தான்” என்றவன் இரு விரல்களால் தாடையை தேய்த்தவன்.. அவள் முகத்தில் இருந்த பார்வையை சற்றே கீழ் நோக்கி இறக்க.. அவனது பார்வை மாற்றத்தை அறிந்தவள்.. வேகமாக அவளும் அவளை கீழ் நோக்கி பார்க்க.. அவள் விழப் போனதில் எக்கு தப்பாக விலகி இருந்த சேலையை கண்டு அவசரமாக அதை சரி படுத்த எண்ணி கைகளை உயர்த்த.. அவளது இரு கைகளும் அவனது ஒற்றை கைக்குள் அடங்கி இருக்க.. தன் நிலையை நினைத்து கண் கலக்கியவளை கண்டு.. அவனது கைகள் அவளது கரங்களுக்கு விடுதலை கொடுத்தது..

 

வேகமாக தனது மாராப்பு சேலையை சரி செய்தாள் பிறை.

 

” பிளீஸ்… போறேன்.. பிளீஸ்… விடுங்க ” என  கெஞ்சியவளை கொஞ்சமும் அவன் சட்டை செய்யவில்லை.

 

” உனக்கு ஏற்கனவே வார்ன் பண்ணேன்.. என் முன்னாடி வரக்கூடாதுன்னு.. ஆனால் அதையும் மீறி நீ வந்திருக்க.. என்ன பண்ணலாம் ” மேலும் அவனோடு இறுக்கிக் கொண்டு கேட்க..

 

அதில் சினம் கொண்டு.. ” போலீஸ் மாதிரி … நடந்துக்கோங்க சார்.. பொறுக்கி மாதிரி நடக்காதீங்க..” என பட்டென்று கேட்டு விட.. அவளை புருவம் உயர்த்தி பார்த்தவன்…

 

” முன்னாடி அந்த யூனிபார்ம் பார்த்து நீ என்னைய போலீஸ்ன்னு நினைச்சா அதுக்கு நான் பொறுப்பு இல்ல மூன்.. நான் பக்கா பொறுக்கி ” என்றதும் அவனை  அரண்டு பார்த்தவள்..

 

” நான்… மீனாட்சி அம்மா .. கிட்ட சொல்லுவேன் ” சிறுபிள்ளை போல அவனை மிரட்டி பார்க்க..

 

” தாராளமா சொல்லு.. எங்க அம்மா இந்த பங்க்ஷன் வைக்க காரணமே எனக்கு கல்யாணம் ஆகத்தான்.. நீயே போய் சொல்லிட்டா உடனே உனக்கு எனக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிற வேலையை ஸ்டார்ட் பண்ணிடுவாங்க.. ” என நக்கலாக சிரித்தவன்..

 

” ஆனால் உனக்கு என்னைய கல்யாணம் பண்ணிக்க ஓகே வா மூன் ” முகத்தில் இருந்த முடிகளை கோதி காதிற்கு பின்னால் சொருகி வைத்தவன்.. அவளது கன்னத்தை பிடித்து கேட்க.. பதில் கூற முடியாமல் உச்ச கட்ட அதிர்ச்சியில் இருந்தாள் பிறை.

 

அதை விட அவனது வித்தியாசமான அழைப்பும் அவளை கவர்ந்திருக்க..  அசையாது நின்று விட்டாள் அவனது மூன்.

 

” நாளைக்கு ஈவ்னிங்  கம்பெனி முடிஞ்சதும் ஷார்ப்பா ஆறு மணிக்கு உன் கம்பெனி பக்கத்துல இருக்குற டீ ஷாப்பிக்கு நீ வரனும்.. அப்படி நீ வரலைன்னா உன் பிரெண்ட் வீட்ல வந்து உன்ன தூக்குவேன்.. அண்டர்ஸ்டான்ட் ” என கன்னத்தில் தட்டியவனை வாயை பிளக்காத குறையாக பார்த்து வைத்தாள் பிறை.

 

” அம்மா… திட்டுவாங்க.. ” பயத்தில் எச்சிலை விழுங்கினாள்.

 

” அப்போ உங்க அம்மாக்கு ஒகேன்னா உனக்கு ஓகே வா ” புருவம் உயர்த்தி அவன் கேட்டதில் .. எங்காவது தலையில் முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது.

 

” இன்னைக்கு இது போதும் ” என அவனது பிடியை தளர்த்த.. அடுத்த நொடி அவனிடம் இருந்து விலகி இருந்தாள் பிறைநிலா.

 

சட்டென ஓடி கதவு வரை சென்றவளை.. ” ஹே மூன்.. ஒரு நிமிஷம் ”  என நிறுத்த.. கதவை திறந்து தயார் நிலையில் வைத்து, நின்று கொண்டு அவனை திரும்பிப் பார்த்தாள்.

 

” அது.. சேரி காட்டாத ஓகே வா.. ” என்றவனுக்கு ‘ ஏன் ‘ என்னும் விதமாக பார்வையை வீச..

 

” காட்டாத டி.. தப்பாகிடும்…” என்றவனை விழி விரித்து பார்த்தவள்.. அடுத்த நொடி அங்கிருந்து பறந்திருந்தாள்.

 

வேகமாக கீழ் இறங்கி சென்றவள்… அங்கே இவளை தேடிக் கொண்டிருந்த சுஷ்மிதாவை பார்த்து அவளருகில் சென்று நின்றாள்.

 

” எங்க டி போய் தொலைஞ்ச.. எவ்வளவு நேரமா உன்ன தேடுறது”

 

” அது மீனாட்சி அம்மா ஒரு திங்க்ஸ் எடுக்க சொன்னாங்க.. நான் ரூம் மாறி போயிட்டேன் டி ” என முகத்தில் பூத்த வேர்வையை துடைத்து கொண்டு கூறியவளை சந்தேகமாக பார்த்தவள்..

 

” அதுக்கு ஏன் டி இப்படி மூச்சு வாங்குது.. வேர்த்து போய் ஒரு மாதிரி இருக்க ”

 

“ஹான்.. அது.. அது வந்து அதெல்லாம் ஒன்னும் இல்ல டி.. ” என சமாளித்தவளை அழைத்தார் மீனாட்சி.

 

” எங்க மா போன.. உன்ன காணோம்னு தேடிட்டு இருந்தோம்.. சரி இந்தா வாங்கிக்கோ ” என ஒரு தட்டில் ஒரு பட்டு சேலையும்.. கண்ணாடி வளையலும், மஞ்சள் கயிறு , குங்குமம், மஞ்சள் தூள், வெற்றிலை , பாக்கு, பிரசாதம் என அனைத்தையும் கொடுக்க.. அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டவள் அவரிடம் இருந்து தட்டை வாங்கிக் கொண்டாள்.

 

அதே போல சுஷ்மிதாவிற்கும் கொடுத்தார். இருவரையும் அழைத்து கொண்டு ரஞ்சினி விடைபெற்று செல்ல.. போகும் வரையில் மாடியை பார்த்துக் கொண்டே சென்றாள் பிறை.

 

இவை அனைத்தையும் அறையில் இருந்த வண்ணம் சிசிடிவியில் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு உதட்டோரம் புன்முறுவல் பூத்தது.

 

நாளை மாலை ஆறு மணிக்கு அவர்களது வாழ்க்கையே தலை கீழாக மாறப் போவதை அவன் அறியவில்லை.

 

சனா💖

 

Click on a star to rate it!

Rating 4.3 / 5. Vote count: 30

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
20
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்