Loading

திமிர் 16

 

“ம்ம்…” என்ற சத்தம் மீன்களுக்கு இரையாக, எச்சில் நிரம்பிய இதழ் சத்தம் சிறு சிறுப் பூச்சிகளுக்கு ரீங்காரமானது. துடிக்கும் உடல் முத்தத்திற்கு வழி விட, அவள் வெட்கம் அவனுக்கு இரையானது. அவன் ஆண்மை காதலிக்குச் சொந்தமானது. நீருக்குள் மீனாக இருவரும் துள்ளிக் குதித்தனர். இவர்கள் ஆட்டத்தில், தங்கள் ஆட்டத்தை முடித்து உறங்கிக் கொண்டிருந்த மீன்கள் குட்டையைக் காலி செய்தனர். மெல்ல நகர்ந்து உடைந்து கிடந்த பாலத்தின் மீது அவளைச் சாய்த்தவன் சிறிதும் நேரத்தை வீணடிக்காது மேல் சரிந்தான்.

 

குளிரும், கதகதப்பும் ஒன்று போல் அவளைச் சூழ்ந்தது. உணர்வுகளை அடக்க முடியாது அவனுக்கு விரும்பியே ஒத்துழைப்புக் கொடுத்தாள். நீண்ட முத்தமும், சின்ன இடைவெளி விட்டுக் கிடைத்த குட்டிக் குட்டி முத்தமும் மோகத்தைத் தூண்டியது. நனைந்த ஆடை எதற்கென்றுப் பெருந்தன்மையாக அதை வீசி அடித்தவன், தன் ஆடைகளை வேண்டா வெறுப்பாக உதறித் தள்ளினான்.

 

அவன் மேனியைத் தழுவி ஆக்கிரமித்தவளை, மொத்தமாகத் தனதாக்கிக் கொள்ள முழு முனைப்போடு செயல்பட்டவன் காதில், “ம்ஹூம்” என்ற ஓசை விழுந்தது.

 

அவளை விட்டுப் பிரியாமல் கழுத்து வளைவுக்குள் முகம் புதைத்து, “ப்ளீஸ்!” என்றிட, “குளிருது…” எனச் சிணுங்கி மீண்டும் மீண்டும் அவன் மோகத்தைத் தூண்டினாள்.

 

விலகி முகம் பார்த்தவன், உடலால் செய்ய வேண்டியதை விழிகளால் செய்து வெட்கத்தை வரவழைத்தான். அவன் மார்பில் முகம் புதைத்து, முகம் சிவந்து போனவளை அள்ளிக் கொண்டான்.

 

“ம்ஹூம்…”

 

“ப்ச்!”

 

“ஒரு கையால தூக்கிட்டுப் போடா.”

 

சத்தம் இல்லாமல் அவள் உதட்டோடு உதடு வைத்துச் சிரித்தவன், உள்ளே அழைத்துச் சென்று மெத்தையில் சரித்து ஆளத் தொடங்கினான். வெட்கமின்றி, வரையறையின்றி அள்ளிக் கொடுத்து உற்சாகப்படுத்தினாள். மீசை உரசலுக்குத் தேகம் கிழிய, அவள் ஓசைக்கு வேகம் அதிகரித்தது. ஆடை இல்லாத உடல், தட்டாமல் அவன் பேச்சைக் கேட்டது. அழகுக்குச் சொந்தக்காரியான உடல் அவனைத் தன் வசம் ஆக்கியது.

 

அழகாக நடந்தேறியது காதல் தாம்பத்தியம். எல்லாம் முடிந்த பின்னும் விலகாது, ஒருவரை ஒருவர் அணைத்தபடி படுத்துக் கொண்டிருந்தனர். இருவருக்கும் நம்ப முடியவில்லை. இருவரும் குணத்தால் எப்படியோ, தங்கள் வாழ்க்கைத் துணை விஷயத்தில் ஒன்றுபோல் ஒன்றும் செய்யாமல் இருந்தனர். துணை என்ற ஒன்றின் தேவையை உணராமல் இருந்தனர். அனைத்தையும் மாற்றி விட்டது இந்தச் சந்திப்பு.

 

அவளை அடைந்த மகிழ்வில், சீக்கிரம் உறங்கி விட்டான் அகம்பன் திவஜ். தன்னை இழந்த பின், நடந்த அனைத்தையும் நினைக்க ஆரம்பித்தாள்‌ அம்மு. படுத்திருந்தவள் கண்களில், அவள் அனுமதி இல்லாமல் நீர் வெளியேறியது. பக்கத்தில் இருந்தவனையும், தன் விதியையும் எண்ணி நொந்து போனவள்,

 

‘இவ்ளோ நாள் இல்லாம, இப்ப எதுக்காக போன் பண்ணி அகாக்கு கேன்சர்னு சொல்லணும். நேத்துச் சொன்ன மாதிரி நான் வரலைன்னு பண்ண வேலையா? இப்பச் சமாளிச்சுட்டோம். இதுக்கு மேல என்ன பண்ணப் போறோம்.’ தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தாள்.

 

‘நான் கூட இருந்தா இன்னும் பிரச்சினையாகும். உண்மை தெரிஞ்சதுக்கு அப்புறம் என்ன கோபப்பட்டாலும் தாங்கிக்கலாம். இனி என்னால ஒரு பிரச்சினை வந்துடக்கூடாது. அகாவத் திரும்ப அந்த மாதிரி ஒரு நிலைமையில பார்க்க எனக்குத் தைரியம் இல்லை.’

 

ஒரு முடிவெடுத்தவளாக, அவனை விட்டுப் பிரிந்தாள். காதலியின் மீதுள்ள நம்பிக்கையில், ஆழ்ந்த நித்திரையில் இருந்தவனைக் காணக் கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது. மனத்திற்குள் ஓராயிரம் முறை மன்னிப்பைத் தெரிவித்துவிட்டு, அவனது மடிக்கணினியை எடுத்துக்கொண்டு வெளியேறினாள். மரவீட்டைத் தாண்டி வெகுதூரம் வந்தவள் கால்கள் மெல்ல மெல்ல நடையை நிறுத்தியது. மனம் இங்கிருந்து வெளியேற மறுப்புத் தெரிவித்தது. அகம்பனைக் கேட்டு அடம் பிடித்தது காதல். தன்னை நம்பி உறங்கிக் கொண்டிருந்தவனைப் பாதியில் விட்டுச் செல்லத் தைரியம் இல்லை. நின்ற இடத்தில் முட்டி போட்டு அமர்ந்து கதறினாள்.

 

எவ்வளவு சமாதானங்கள் சொல்லியும் மனம் அவனை மட்டுமே தேடியது. ஒரே ஓட்டமாக ஓடினாள்.‌ நிம்மதியான உறக்கத்தில் இருந்தவனைக் கண்டு சத்தம் வராமல் அழுதவள், கண்களைத் துடைத்துக் கொண்டு அவன் பக்கத்தில் படுத்தாள். நெருங்கிச் சென்று மார்பில் முகம் புதைக்க, அதுவரை உணர்வில்லாது படுத்திருந்தவன் கைகள் அவளைச் சுற்றியது. அந்நொடி தான் நிம்மதியை உணர்ந்தாள். மனநிறைவாக அவனோடு ஒட்டிப் படுத்து மார்பில் முத்தமிட்டாள்.

 

“என்னடி?”

 

“ம்ஹூம்!”

 

“முத்தம் ஒரு மார்க்கமா இருக்கு?”

 

“ரொம்ப ஆசைதான்!”

 

“இருக்கக் கூடாதா?”

 

“சேட்டை எல்லாம் முடிச்சு ரொம்ப நேரம் ஆகுது.”

 

“திரும்ப ஆரம்பிக்கலாம்…”

 

“ஆள விடு சாமி!”

 

மென்மையாகச் சிரித்து, அவளை அணைத்துக் கொண்டு உறங்கத் தொடங்கியவன் செவியில், “நமக்குள்ள நடந்துச்சுல…” என்ற வார்த்தை விழ, “ம்ம்” ஓசை கொடுத்தான்.

 

“அது லவ்வா, லஸ்ட்டா?” என்றதும் அவன் கண்கள் பட்டென்று திறந்தது.

 

தீர்க்கமாகத் தன்னைப் பார்க்கும் அவள் விழியில் எதையோ தேடியவன், “தெரியல.” என்று விட்டுக் கண் மூடினான்.

 

ஏமாந்தவள், அசைந்து திரும்பிப் படுத்தாள். கண்ணில் துளிர்த்தது நீர். ஏமாற்றம் அடைந்த மனத்தை அமைதியான கண்ணீரில் வெளிக் காட்டியவளை நெருங்கி வந்தான். விலகாது அமைதியாகப் படுத்திருந்தவள் செவியில்,

 

“நான் தொட்ட முதல் பொண்ணு நீ தான். கடைசியும் நீயா தான்டி இருப்ப…” எனக் காதலோடு கூறியவனைத் தழுவிக் கொண்டாள்.

 

அவனும் இதமாக அணைப்பான் என்று எதிர்பார்க்க, அவன் செயல் வேறு எண்ணத்தை எதிர்நோக்கி இருந்தது. மிரண்டு விலகி முகம் பார்க்க, புருவம் உயர்த்தினான். மறுப்பாகத் தலையசைத்தவள் செவியில்,

 

“நமக்குள்ள நடந்தது லவ்வா, லஸ்ட்டா?” அவள் கேள்வியை அவளுக்கே மாற்றி விட்டான்.

 

இந்த முறை எவ்விதச் சலனமும் இல்லாமல், “தெரியல!” என்று விட்டு அவன் மூக்கை உரச, “தெரிய வச்சிடுறேன்.” எனச் செயலில் இறங்க, காதலில் கசிந்துருகிக் காதலை மட்டுமே இரவு முழுவதும் அனுபவித்தாள்.

 

***

 

விடியல் பிறந்து நான்கு மணி நேரம் ஆகியும் எழவில்லை அம்மு. அவன் கொடுத்த காதல் பரிசு, அத்தனை அசதியைக் கொடுத்திருந்தது. சூரியன் நடுவானத்தில் நிற்கும் வரை எழ இயலாதவள், கொட்டாவி விட்டுக்கொண்டு அவனைத் தேட, அகம்பன் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. புருவச் சுருக்கங்களோடு அவனைத் தேடி நேரத்தைக் கடந்தாள். மாலை நேரமாகியும் வராதவனை எண்ணிப் பயந்து நடுங்கினாள். ஏதேதோ சிந்தனை மனத்தை வாட்டியது. பயத்தில் அழவே ஆரம்பித்து விட்டாள்.

 

“ஓய்!” என்ற ஓசை கேட்டதும், தொலைந்த தன் உயிரைக் கண்டுவிட்ட நிம்மதியில் வேகமாக ஓடி அவனை அணைத்துக் கொண்டாள்.

 

ஆரத் தழுவி அவள் பயத்தை அறிந்து சமாதானம் செய்தவனைப் போட்டு அடி வெளுத்தவள், “எங்க போன?” கேட்க, “சொல்றேன் வா…” எனத் தோள் மீது கை போட்டான்.

 

“ப்ச்! போடா” தட்டி விட்டுக் கோபித்து ஓரமாக அமர்ந்து கொண்டாள். அவளை இடித்துக் கொண்டு அமர்ந்து தோளில் கை போட்ட அகம்பன்,

 

“என் செல்லத்துக்கு என்ன கோபம்?” கன்னம் கிள்ளி முத்தமிட்டான்.

 

“எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா?”

 

“நீ நல்லாத் தூங்கிட்டு இருந்தடா…”

 

“அதுக்குச் சொல்லாமல் போவியா?”

 

“சீக்கிரம் வந்துடலாம்னு போனேன், லேட் ஆயிடுச்சு.”

 

“ஒரு நாள் முழுக்க…”

 

“சாரி!”

 

“வேண்டாம் போ…”

 

“சாரிடி!”

 

“இனி இந்த மாதிரிப் பண்ணாத.” எனக் கண் கலங்கியவளை நெஞ்சில் சாய்த்துக் கொண்டவன், “நேத்து நீ பேசுனதுக்கு அப்புறம் ஒரு தெளிவு வந்துச்சு. பயந்துட்டே இருக்கறதுக்குப் பதிலா திரும்பவும் டெஸ்ட் பண்ணிப் பார்க்கலாம்னு ஹாஸ்பிடல் போனேன்.” என்றதும் பயத்தில் கை நடுங்கியது அம்முவிற்கு.

 

“ரிசல்ட் நாளைக்கு வந்துடும். எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்.”

 

மௌனமாக அவனோடு தஞ்சம் அடைந்தவள் இதயத்தில் திக்! திக்! ஓசை. தனக்குக் கட்டப்பட்ட கட்டம் நெருங்கி வருவதை உணர்ந்து அச்சம் கொண்டவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நாளை அறிக்கை வந்துவிட்டால், அனைத்து உண்மையும் தெரிந்துவிடும். அதன்பின் அகம்பன் எடுக்கப் போகும் அவதாரத்தில், தன் நிலை என்ன என்பதை அறிந்து கதி கலங்கிப் போனாள்.

 

அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க, என்னவென்று புருவம் உயர்த்தினான். மறுத்துத் தலையசைத்தவள், அவன் இதழோடு இதழ் பொருத்தினாள். சிரிப்போடு ஏற்றவனுக்கு, நேரம் செல்லச் செல்ல நெருடலாக இருந்தது. ஆசை மட்டும் இருப்பதாகத் தெரியவில்லை அந்த முத்தத்தில். ஏக்கமும், வலியும் நிறைந்திருப்பதை உணர்ந்து அவளை ஆறுதலாக அணைத்தான்.‌ அவன் கைகளைப் பின்னுக்குத் தள்ளி, மடி மீது ஏறி அமர்ந்தவள் முகம் எங்கும் முத்தத்தை ஒட்டி எடுத்தாள். அவளுக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்து அமைதியாக அமர்ந்திருந்தவனுக்கு பலத்த சிந்தனை.

 

தன்னவளுக்கு, மோகத்தைத் தாண்டித் தன் நெருக்கம் தேவை என்பதை உணர்ந்து, அவள் வசதிக்குத் தன்னை ஒப்படைத்தான். நேற்று இரவு காதலோடு அவன் கொடுத்த அனைத்தையும், அவளாகவே செய்ய ஆரம்பித்து முடித்தும் வைத்தாள். எந்தக் கேள்வியும் கேட்காமல் அரவணைத்துக் கொண்டு படுத்திருந்தவனிடம்,

 

“எந்த நிலைமை வந்தாலும், என்னை வெறுத்துடாத… என்னால அதைத் தாங்கிக்க முடியாது.” என்று விட்டு அவன் மார்புக்குள் புதைய, சந்தேகம் வெகுவாக வலுத்தது.

 

அன்றைய இரவு முழுவதும் அவள் அவளாக இல்லை. மீண்டும் அவன் துணையைத் தேடினாள். மாலை அவளுக்காக விட்டுக் கொடுத்தவன் ஏதோ ஒரு பயத்தில் இணைந்து சென்றான். இருவரும் காதலும், காமமும் அல்லாத ஒரு தாம்பத்தியத்தை நடத்தினார்கள். எல்லாம் முடிந்தபின் அவன் விழிகளைச் சந்தித்தவள், “ஐ லவ் யூ!” என்ற விட்டு உறங்க ஆரம்பித்தாள்.

 

வெகு நேரத்துக்குப் பிறகு உறங்கியவன், விடிந்து அவளைத் தேடினான். அம்மு என்றவள் எங்குத் தேடியும் கிடைக்கவில்லை.

 

கண்மூடி அவள் சிந்தனைகளை அசை போட்டவனுக்கு நேற்று அவள் நடந்து கொண்டதில் பெருத்த சந்தேகம் எழுந்தது. ஒன்றோடு ஒன்றை முடிச்சிட்டு அன்றைய இரவு தன்னை, “அகா…” என்றழைத்தது உச்சி மண்டையில் உதித்தது.

 

அப்போது இருந்த மனநிலைக்கு அதைப் பெரிது படுத்தாமல் இருந்தவன், ஒவ்வொன்றையும் சிந்திக்க ஆரம்பித்தான். அகம்பன் திவஜ் கம்பேக் கொடுத்தான். அரசியல்வாதியின் மகனாக, அனைத்தையும் நுணுக்கமாக ஆராய்ந்தவனுக்குத் தன் மடிக்கணினி அங்கு இல்லை என்பது தெரிந்தது.

 

கமலுக்கு அழைத்து, அவளுடன் எடுத்த புகைப்படத்தை அனுப்பியவன், “ஒன் ஹவர்ல டீடைல்ஸ் வேணும்.” என்றான்.

 

அவன் சொன்ன வேலையைக் கமல் சரியாகச் செய்து முடிக்க, அம்மு பற்றிய விபரத்தைக் கேட்டறிந்தவன் முகம் சிவந்தது.

 

எதற்காக இங்கு வந்தாள் என்ற காரணத்தை ஆராய்ந்தவனுக்கு எல்லாம் புலப்பட்டது.

 

நேற்று செய்த உடல் பரிசோதனை ரிப்போர்ட் கையில் இருக்க, “மதுணிகா…” பற்களைக் கடித்தான்.

 

***

பழைய நினைவில் சுழன்று கொண்டிருந்தவன் செவியில், “அம்மா ஆல்ரைட் சார்” என்ற வார்த்தை விழுந்து நிகழ்வுக்கு அழைத்து வந்தது.

 

“அம்மா…” எனத் தடுமாறும் அவனைப் புன்னகை முகமாக எதிர்கொண்ட மருத்துவர், “இனி அவங்களை ரொம்ப டென்ஷன் ஆக விடாமல் பார்த்துக்கோங்க. டெய்லி வாக்கிங் போகச் சொல்லி இருக்கேன். ரிலாக்ஸா வச்சுக்கோங்க.” என்று விட்டு அவர் செல்ல, ஓட்டமாக ஓடினான் தாயைக் காண.

 

அவனோடு சேர்ந்து ஆதியும், நவரத்தினமும் உள்ளே செல்ல, அன்னையைக் கட்டியணைத்து அமர்ந்திருந்தான் அகம்பன் திவஜ். அவருக்கோ கட்டுக்கடங்காத கண்ணீர். அன்னையை அரவணைத்துச் சமாதானம் செய்வதற்குப் பதில் தம்பியின் தோளைத் தட்டிச் சமாதானம் செய்தான் ஆதிகேஷ்.

 

“இப்ப எப்படி இருக்கு கற்பகம்…”

 

“எனக்கு என்னங்க?”

 

“உன் அளவுக்கு தான் எனக்கும் டென்ஷன். அதுக்காக நானும் நெஞ்சைப் பிடிச்சுகிட்டுப் படுத்துடவா… எப்பப் பாரு, எங்களைப் பயமுறுத்துறதையே வேலையா வச்சிருக்க.”

 

“உங்க அளவுக்குத் தைரியம் இல்லைங்க எனக்கு. என் பிள்ளைக்கு என்னவோ ஏதோன்னு மனசு பதறுது. இப்பக் கூட, எல்லாரும் சேர்ந்து என்கிட்டப் பொய் சொல்றீங்கன்னு தோணுது.”

 

“அம்மா…” என அவர் கைப்பிடித்து மெதுவாக வருடிய அகம்பன், “உங்களுக்கு நம்பிக்கை இல்லனா என் கூட வாங்க, டெஸ்ட் பண்ணிக்கலாம். அவனுங்க சொன்னதெல்லாம் உண்மைதான். நான் சாகப் போறேன் என்ற பயத்துல தான், உங்க யாரையும் பார்க்கக் கூடாதுன்னு தனியா இருந்தேன். அதெல்லாம் முடிஞ்சு போன கதை. எனக்கு எதுவும் இல்லைன்னு உறுதியா தெரிஞ்சிடுச்சு. தேவை இல்லாமல் பயப்படாதீங்க.” என்றவனை அன்பு பொங்கப் பார்த்தவரின் பக்கத்தில் அமர்ந்தான் ஆதிகேஷ்.

 

“அவன் சொல்றது உண்மை ம்மா. உங்க புள்ளைக்கு எதுவும் இல்ல.”

 

“எனக்கு உங்களைத் தாண்டி எதுவுமே தேவையில்லை. நீங்க மூணு பேரும் நல்லா இருந்தாலே போதும் எனக்கு.”

 

இரு பிள்ளைகளும் இருபுறமும் அன்னையை அரவணைத்துக் கொண்டு அமர, தள்ளி நின்றாலும் கண்களால் அரவணைத்துச் சமாதானம் செய்தார் நவரத்தினம்.

 

“ஆன்ட்டி!”

 

கண்கள் சிவந்து, பரிதவிப்புடன் நின்ற அனுவைப் புன்னகை முகமாக வரவேற்க, “ரொம்ப ரொம்பப் பயந்துட்டேன் ஆன்ட்டி. எதுக்கு உடம்பைக் கெடுத்துக்குறீங்க.” அகம்பனை உரசிக்கொண்டு பேச வந்தவளை, நாசூக்காக நிராகரித்தான் நகர்ந்துவிட்டு.

 

அதை அறியாதது போல் கற்பகத்தின் கைப்பிடித்து, “அப்படியே உங்க மகனுக்கு எது இருந்தாலும் நான் இருக்கேன். நான் உங்க பையனை நல்லாப் பார்த்துப்பேன் ஆன்ட்டி. நீங்க அகம்பனை நினைச்சுக் கவலைப்படாதீங்க.” என்றவளின் நடிப்பை நம்பியவர்,

 

“இது போதும் அனு எனக்கு. உன்ன மாதிரி ஒரு மருமகள் கிடைக்கக் கொடுத்து வச்சிருக்கணும்.” என்றார்.‌

 

அவரை அணைத்துக் கொண்டு, “எங்கேஜ்மென்ட் நின்னுடுச்சுன்னு கவலைப்படாதீங்க. ஸ்ட்ரைட்டா கல்யாணத்தையே ஏற்பாடு பண்ணிடலாம்.” என்றிட, அங்கு நடப்பதற்கும், தனக்கும் சம்பந்தமில்லை என்பது போல் நின்று கொண்டிருந்தான் ஒருத்தன்.

 

“அகம்பா…”

 

“சொல்லுங்கம்மா?”

 

“உனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லன்னு சொன்னதை நம்புறேன். அந்தப் பொண்ணப் பத்திச் சொன்னது?”

 

“முதல்ல உடம்பு சரி ஆகி வீட்டுக்கு வாங்கம்மா…” என அங்கிருந்து உடனே வெளியேறி விட்டான்.

 

நின்றிருந்த கணவனை அர்த்தமாகப் பார்க்க, அவரின் பார்வை ஆதிகேஷ் மீது சென்றது.

 

“அந்தப் பொண்ணு திரும்பவும் ஏதோ பிளான் பண்ணி, அகம்பன் மனசை மாத்தி வச்சிருக்கான்னு நினைக்கிறேன். அவளைச் சும்மா விடக்கூடாது ஆன்ட்டி. இவ்ளோத்துக்கும் மெயின் காரணம் அவதான்.”

 

“அதை நாங்க பார்த்துக்கிறோம். அந்தப் பொண்ணால உங்க லைப்க்கு எந்தப் பிரச்சினையும் வராது.”

 

ஆதிகேஷைக் கண்டு சிரித்தவள், “உடனே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க. எல்லார் முன்னாடியும் அகம்பனுக்கு ரொம்ப அசிங்கமாகிடுச்சு. எங்க கல்யாணத்தை நடத்தித்தான் அதைத் துடைக்கணும்.” எனச் சாதுரியமாக மூவரையும் மூளைச்சலவை செய்தாள்.

 

“அனு சொல்றது தான் சரி. அவளை இங்க இருந்து அனுப்பிட்டுக் கல்யாணத்துக்கான ஏற்பாட்டைப் பண்ணுங்க. ஆதி கல்யாணம் முடிஞ்ச அடுத்த நாள் கூட அகம்பன் கல்யாணம் நடக்கட்டும்.”

 

“நீ ரெஸ்ட் எடு கற்பகம். எங்களுக்குக் கொஞ்சம் வேலை இருக்கு, முடிச்சிட்டு வரோம்.” என்றதற்குச் சம்பந்தப்பட்டவர் தலையசைப்பதற்கு முன்னால் அனுசியாவின் தலை ஆடியது.

 

தனியாக இருந்தால்தான் அவரைத் தன் வழிக்குக் கொண்டு வர முடியும் என்பதால், கிடைத்த சந்தர்ப்பத்தை உபயோகித்துக் கொண்டாள். அதை அறியாத கற்பகம், மதுணிகாமீது தேவையில்லாத வன்மத்தை வளர்த்துக் கொண்டார்.

 

***

 

வந்த இருவருக்கும் சலாம் வைத்த அடியாள்கள் கதவைத் திறந்து விட, இருட்டு அறையில் அமர்ந்திருந்த தந்தை, மகன் இருவரும் பயம் சூழத் தலை உயர்த்தினர். அகம்பன் வருகிறான் என்ற ஆர்வத்தில் மதுணிகா திரும்ப, ஆதிகேஷ் பார்வையால் சுட்டெரித்து நின்றிருந்தான். அவனைக் கண்டதும் உடல் நடுங்க ஆரம்பித்தது. அழுத்தமாக ஒவ்வொரு நடையை எடுத்து வைத்து அவள் முன்பு நின்றவன்,

 

“உன்கிட்ட என்னடி சொன்னேன்? என் தம்பி லைஃப்குள்ள வரக்கூடாதுன்னு சொன்னனா இல்லையா… அதையும் மீறி ஜோடி போட்டு என் முன்னாடி வந்து நிக்குற.” பற்களைக் கடித்தான்.

 

“அகா…”

 

“வாய மூடு!” அதட்டினார் நவரத்தினம்.

 

“என்னடி பண்ணி வச்சிருக்க என் பையனை. ஒத்த ஹாஸ்பிடல்ல வச்சு என் வாரிசை அழிக்கப் பார்த்திருக்க. அவனுக்கு மட்டும் ஏதாச்சும் ஆகி இருந்துச்சு, பிணம் கூட யார் கைக்கும் கிடைச்சு இருக்காது.”

 

“எங்களை எதுக்குக் கட்டி வச்சிருக்கீங்க, அவுத்து விடுங்க.” என்ற கிஷோரின் கன்னத்தில் ‘பளார்’ என்று அறை விழுந்தது.

 

காதலித்தவன் அண்ணனை மதுணிகா மிரண்டு பார்க்க, “சத்தம் வரக்கூடாது.” என்றவன் முரளியிடம் நகரக் கிளி பறந்தது அவருக்கு.

 

மகன் வாங்கிய அடியை வைத்து அவன் பலத்தை அறிந்து கொண்டவர், பம்மிக் கொண்டு பார்க்க, “ஏன்டா நாரப் பயலே! அத்தனைப் பேர் பார்க்க அவ்ளோ நக்கலாப் பேசுற. என் தம்பிய வார்த்தைக்கு வார்த்தை அவன் இவன்னு பேசுற. இந்த வாய் தான அவனை மரியாதை இல்லாமல் பேசிச்சு.” என வார்த்தையை நரநரத்தவன் ஓங்கி உதட்டில் குத்தினான். ரத்தம் அவன் ஆடையில் தெறித்தது.

 

“அப்பா…” கிஷோருக்கு முன் ஒலித்தது மதுணிகாவின் குரல்.

 

“அவன் பேரை அனாவசியமா நாங்க யாரும் சொல்லக் கூட மாட்டோம். நீ என்னடான்னா, அவ்ளோ பேரு பார்க்க வேலைக்காரனைப் பேசற மாதிரிப் பேசுற…”

 

“அவன்கிட்ட என்னடா பேச்சு? அந்த நாய்ங்களைத் தூக்குல போடு. இவளை அவ்ளோ சீக்கிரம் கொன்னுடாத. துடிக்க வச்சுக் கொஞ்சம் கொஞ்சமா உசுர எடு…”

 

“என்னை என்ன வேணா பண்ணுங்க, தயவுசெஞ்சு அவங்களை விட்டுடுங்க. எனக்காகப் பண்றேன்னு தப்புப் பண்ணிட்டாங்க. அகாவ அசிங்கப் படுத்தனும்னு எங்கயும் நான் நினைச்சதில்ல.”

 

முரளியிடம் இருந்தவன், தகிக்கும் கோபத்தோடு அவளை நோக்கி நகர, அவன் பார்வை உயிர் பயத்தைக் கொடுத்தது. ரத்தநாளங்கள் அச்சத்தில் உறைந்து போனது. உடல் முழுவதும் வேர்வைத் துளிகள். பயத்தில் அசாதாரண மூச்சு அவளுக்குள் சுழல, “நீ சொன்னா விட்டிடுவேனா? தொடக்கூடாத இடத்தைத் தொட்டுட்டீங்க. மூணு பேரும் இங்க இருந்து உசுரோட போக வாய்ப்பே இல்லை.” என்றதும் கெஞ்சிக் கதறினாள்.

 

எதற்கும் மசியாது தன் ஆள்களிடம் கண்ணைக் காட்ட, இருவரையும் அவிழ்த்து விட்டனர். கட்டப்பட்ட கயிறு விலகியதும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இருவரும் ஓட, சத்தமிட்டுச் சிரித்தனர் தந்தையும் மகனும். உயிர்ப் பிச்சை கேட்டு ஓடும் இருவரையும், அடியாள்கள் பிடித்து வந்து ஆதிகேஷின் காலடியில் போட, முரளியின் நெஞ்சின் மீது கால் வைத்துக் கழுத்தை நசுக்கினான்.

 

“அவரை விட்டுடுங்க…” என்ற மதுணிகாவின் கதறல் அனைத்தும் வீணானது.

 

உடல் நடுங்க நின்றிருந்த கிஷோரின் சட்டையைப் பிடித்து இழுத்துக் கன்னத்தில் மாறி மாறி அடித்தான். வலி பொறுக்க முடியாது கதறிக் கொண்டிருக்கும் தம்பியைக் காப்பாற்றவும் கெஞ்சினாள்.‌

 

“இந்த ரெண்டு நாய்ங்க காலையும் வெட்டிப் போடுங்கடா.”

 

நவரத்தினத்தின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு அடியாள்கள் முன்னே வர, “ப்ளீஸ், ரெண்டு பேரையும் விட்டிடுங்க. நீங்க என்ன சொன்னாலும் நாங்க செய்றோம்.‌ தயவுசெஞ்சு அவங்களை எதுவும் பண்ணிடாதீங்க.” என்ற வார்த்தைக்குக் கொந்தளித்த நவரத்தினம்,

 

“வாய மூடிட்டு உட்காருடி!” அதட்டினார்.‌

 

முரளியைப் பிடித்தவர்கள், காலை வெட்டக் கூர்மையான அருவாளைக் கையில் எடுத்தனர். தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, நவரத்தினம் காலைப் பிடித்துக் கெஞ்ச ஆரம்பித்தார். இரக்கமின்றி எட்டி உதைத்தவர்,

 

“என் புள்ளைக்கா உயிர் பயத்தைக் காட்டுற? கண்ணு முன்னாடி பாருடா…” என்றார்.

 

கெஞ்சிக் கொண்டிருந்தவள் தன் தந்தையும், தம்பியும் படும் பாட்டைப் பார்க்க முடியாது, “டேய்! மரியாதையா அவங்களை விடுங்க. இல்லன்னா, என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.‌” அடியாள்களிடம் கத்தினாள்.

 

“என்னடி மிரட்டிப் பார்க்கிறியா”

 

“என் அப்பாவுக்கும், தம்பிக்கும் ஏதாச்சும் ஒன்னு ஆச்சுன்னா சொன்னதைச் செய்வேன்.”

 

ஏளனமாக இதழ் வளைத்து, அருவாளைக் கையில் வாங்கிய ஆதிகேஷ் காலை வெட்ட ஓங்க, “விடுடா அவங்களை…” தொண்டை கிழியச் சத்தமிட்டாள்.

 

ஓங்கிய அருவாளைக் கீழ் இறக்கிய ஆதிகேஷ், “என்ன ஆணவம் இருந்தா, என்னையே மரியாதை இல்லாமல் பேசுவ…” மதுணிகாவை அடிக்கக் கை ஓங்கினான்.

 

பயத்தில் கண்களை மூடிக் கொண்டாள். ஓங்கிய கைவிரல் அவள் கன்னத்தில் பதிவதற்கு முன், “ஆதீதீதீ…” என்ற கர்ஜனை தெறித்தது.

 

இருள் சூழ, மங்கலான வெளிச்சத்தில், உடல் புடைக்க நின்றிருந்தான் அகம்பன் திவஜ். கண்ணில் அனல் கொழுந்து விட்டு எரிந்தது. பற்களை நரநரக்கத் தாடை இறுகியது. கை இரண்டையும், பேன்ட் பாக்கெட்டில் நுழைத்துக் கொண்டு நின்றிருந்தவன் குரலைக் கேட்டு வெடுக்கென்று விழி திறந்தவள், “அகா…” என்றழைக்க, அண்ணன் மீதான பார்வையை மாற்றாமல் அடி மீது அடி எடுத்து வைத்தான்.

 

பூகம்பத்தின் அதிர்வைக் கொடுத்தது அவன் நடை. தம்பியின் பார்வையில் முகம் வேர்த்தது ஆதிகேஷ் திவஜ்க்கு. சீற்ற நடையில் உடன் பிறந்தவனை நெருங்கி நின்றவன் உஷ்ண மூச்சை வெளியிட்டான். உடன் பிறந்தவனின் கண்ணில் தென்படும் ஜுவாலையில் மூச்சு முட்டியது. கிட்டத்தட்ட எச்சரித்தான் ஆதிகேஷை.

 

தன்னால் ஆதியின் பார்வை மதுணிகாவின் மீது திரும்ப, அவளது பார்வை அகம்பன் மீது நிலை குத்தியது. அவளைப் பார்த்துவிட்டுத் தன் உடன்பிறப்பின் மீது பார்வையை மாற்றியவன், “அ…அ…” எனப் பேச முடியாமல் தடுமாறத் தீயை விழியில் அள்ளி வீசியவன், அவள் புறம் திரும்பினான்.

 

பதட்டமான சூழ்நிலையிலும், அவன் வரவு அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுத்தது அவளுக்கு. அவன் உடன் இருந்தால் எதற்கும் அஞ்சமாட்டாள். பெரிய பாதுகாப்புப் படையே தன்னைச் சூழ்ந்ததாக எண்ணியள் முன்பு அமர்ந்தான்.

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
7
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்