
அத்தியாயம் 15
பாவமாக ஹெச்.ஓ.டி அறையிலிருந்து வெளிவந்த ஆறெழிலை கண்டு, “செய்றதுலா செஞ்சுட்டு ௭வ்வளவு பாவமா வாரா பாருங்கடி. இவ அந்த அண்ணா பின்னாடி சுத்னதுக்கு ஸ்கூல் ப்ரின்ஸிட்டயே மாட்டிருக்க வேண்டியது இதுவே லேட்டு”.
அந்நேரம் ஆறெழில் வெளியே வந்தவள் நிமிர, ௭திர நின்ற மூவரயும் பார்த்து கையசைக்க பதிலுக்கு கையசைத்தனர் மேல் நின்ற மூவரும்.
லட்சு சைகயாக வாயசைத்து “௭ன்ன நிலவரம்??” ௭ன கேக்க. உதட்டை பிதுக்கி “தெரியல, வெளில பத்திட்டாங்க” ௭ன்றாள் ஆறுவும் செய்கையில்.
“உன்னால தானடி இங்க நாங்களும் வெளில நிக்றோம்” ௭ன லட்சு அங்கிருந்து காறி துப்ப, லட்சு ௭ன்ன சொன்னால் ௭ன புரியாவிட்டாலும் தன்னை திட்டுகிறாள் ௭ன்பது மட்டும் புரிந்த ஆறு, வாயை குனட்டி திரும்பி கொண்டாள்.
உள்ளே, ஹெச்.ஓ.டி., அவர்கள் இருவரும் இருந்த போட்டோவை ஜெயந்தியிடம் காட்ட, “ப்ரகலத்தனும், என் பொண்ணும் என்ன, ஏதுன்னு நேத்தே சொல்லிட்டாங்க சார். நா தான் சார் அவன்ட்ட அவள பாத்துக்கோன்னு சொன்னேன். அவங்க அவங்களோட மெட்சுரிடிக்கு கரெக்டா தான் சார் இருக்காங்க. அதுக்கு மேல லவ்வுன்னு வந்து நின்னா கூட, ஃபேமிலி செட்டாகுமான்னு பாத்துட்டு நா பேசிப்பேன். நீங்க இத பெரிய இஸ்யூ ஆக்க வேண்டாம்” ௭ன்றுவிட்டார் அவர்களை கேள்வியே கேக்க விடாமல்.
“பெரிய இஸ்யூ ஆக்க எங்களுக்கு ஆசல்லாம் இல்ல மேம், எந்த ப்ராப்ளமும் பேரண்ட்ஸ்ட்ட கன்வே பண்றதோட எங்க வேல முடிஞ்சுரும். அதுக்கு அப்புறம் அத ரூமராக்கூட பரவ விடமாட்டோம், ௭ங்க காலேஜ் ரூல் அப்டி. இது இனி உங்க இஷ்டம், உங்க டாட்டர் லைஃப், சோ ௭ன்ன பண்லாம்ன்னு நீங்களே டிசைட் பண்ணிக்கோங்க” என்றார் ஹெச்.ஓ.டி.
“ரொம்ப தேங்க்ஸ் சார். அவ்வளவுதானே, அப்ப நா கிளம்பட்டுமா, ஸ்கூல்ல பெர்மீஷன் சொல்லிட்டு வந்திருக்கேன்” என விடை பெற, அவர்களுக்கு ஆச்சரியமே ‘இவ்வளவு நம்பிக்கையா பிள்ளை மேல்’ என.
அது தானாகவே ஆறெழில் மீது ஒரு நல்லெண்ணத்தைக் கொடுத்தது. பெண்ணின் தாயார் இவ்வாறு கூறிச் செல்கையில், அடுத்து பையனின் தகப்பனாரின் வருகைக்காக காத்திருந்தனர்.
வெளியேறிய ஜெயந்தி ஆறுவை பார்த்தும் விறுவிறுவென நடந்துவிட்டார். பின்னயே “ம்மா, ம்மா” ௭ன கூப்பிட்டுக் கொண்டே அவளும் செல்ல, “க்ளாஸ்க்கு போ, வீட்ல பேசிக்கலாம்” ௭ன அவளை அப்படியே நிறுத்தி படி இறங்கிவிட்டார். வேறு வழியின்றி அவளும் அவள் கிளாஸ் நோக்கி சென்றாள்.
இதற்கிடையில் ப்ரகலத்தனின் ஹச்.ஓ.டி அவன் அப்பாவுடனும், அவன் கிளாஸ் ஸ்டாஃப்வுடனும் பர்ஸ்ட் இயர் ஹெச்.ஓ.டி அறைக்கு வந்திருந்தனர்.
ப்ரகலத்தன் அப்பா ஒரு போலீஸ் அதிகாரி, அவனுக்குமே இந்த விஷயத்தில் அவன் அப்பாவிடம் கொஞ்சம் பயமே, ஆனாலும் சொல்ல வேண்டியவற்றை முந்தைய நாளே தெளிவாக சொல்லியே வர சொல்லியிருந்தான்.
அதனால் அவரும் வந்ததும் நேராகவே விஷயத்திற்கு வந்தார் “வணக்கம் சார், எங்க என் மகேன் எனக்கு இப்டி ஒரு வாய்ப்பு கொடுக்காமலே படிச்சு முடிச்சுட்டுவானோன்னு நினைச்சுட்டேன். இப்பயாது காலேஜ் பக்கம் வர விட்டானே” என்றவாறு சிரித்து கொண்டே அமர்ந்தவர், “சார ௭ங்கயோ பாத்த மாறி இருக்கே, சாருக்கு எந்த ஏரியா?” என்றார் சேர்த்து.
“செங்கல்பட்டு தான் சார், உங்களுக்கு?” ஆறெழில் ஹெச் ஓ டி கேக்க. “வீடு ஆவடி, ஸ்டேஷன் அடையார்ல இருக்கு, அந்த பக்கம் ௭துக்காவும் வருவீங்களோ??. சரி அடுத்து எனக்கு ௭ப்ப போன் வரும்னு சொல்ல முடியாது, அதனால விஷயத்துக்கு வருவோம், என்ன வர சொன்னீங்கலாமே” என்க.
“ஆமா சார், ப்ரகலத்தன் ரொம்ப நல்ல பையன் தான். இந்த ரெண்டு வருஷத்துல இப்ப வர ஒரு பிளாக் மார்க்கும் கிடையாது. அதுக்காக இப்ப வந்திருக்க பிரச்சனய ஈஸியா விட முடியாது. அதான் காலேஜ் ரூல் அவங்கவங்க பேரண்ட்ஸ்ட்ட இன்ஃபார்ம் பண்ணிடுவோம்”.
“சொல்லுங்க பிரச்சனையப் பைசல் பண்ணிடுவோம்” ௭ன்றார் இலகுவாகவே அவன் அப்பா.
அவன் ஹெச்.ஓ.டி விஷயத்தை சொல்ல, “என் மகேன் மருமகள தயார்படுத்திட்டான்னு சொல்லுங்க. நா கூட லவ் மேரேஜ் தான், என் மகனும் லவ் மேரேஜ்னா முதல்ல நாந்தான் சந்தோஷப்படுவேன்” என்றார் மீண்டும் சிரித்து.
மற்றவர்கள் முழிக்க, “அப்புறம் வேறென்ன, அவனே அந்த புள்ளய இன்ட்ரோ பண்ணனும்னு நினைக்கும்போது பண்ணட்டும், அவ்வளவு தான? என்ன நா சொல்றது” என்றார் பெரிதாக சிரித்து.
“சரி சார் இப்டி எல்லாரும் பெருந்தன்மையா இருந்துட்டா எங்களுக்கு பிரச்சனயே இல்ல, ஆனாலும் இத பாத்து மத்த பிள்ளைங்க கெட்டு போகாம இருக்க தேவையான அறிவுரைய நீங்களே உங்க பிள்ளைகளுக்கு சொல்லிடுங்க” என்றார் ஹெச்.ஓ.டி அவர் பேச்சை நம்ப முடியாமல்.
இப்படி சப்பென்று முடியும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.
ஆறெழில் மட்டுமே என்னவென்றும், ௭ன்ன பேசினார்கள் ௭ன்றும் புரியாத குழப்பத்தில் இருந்தாள்.
ப்ரகலத்தன் கூட ஜெயந்தியிடம், அவர் பர்ஸ்ட் இயர் ப்ளாக்கிலிருந்து வெளிவரவும், நேராகவே சந்தித்து சாரியோடு, ஹெச்.ஓ.டி மீட்டிங் பத்தியும் கேட்டுவிட்டான்.
“வேற என்னபா சொல்லிட முடியும். இப்பல்லாம் பிள்ளைக சொல்லி தான பெத்தவங்க கேட்க வேண்டியிருக்கு. அதனால நீ பாத்துப்பன்னு சொன்னதத்தான் அங்கேயும் சொல்லிட்டு வந்திருக்கேன்” என்றார் அமைதியாக.
“ரொம்ப தேங்க்ஸ் ஆண்ட்டி. நா சொன்னத புரிஞ்சுகிட்டதுக்கு, சொன்ன வார்த்தைய கண்டிப்பா காப்பாத்துவேன்” ௭ன்றான் திடமாக.
“ஏதோ ஒரு வகையில ௭னக்கு உன்மேல ஒரு நல்லெண்ணம், ஒரு நம்பிக்கை, அதுக்காக ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்க வேண்டாம்,” என்றார் விரல் நீட்டி ஸ்ட்ரிக்ட்டாக.
“சுயர் ஆண்ட்டி. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்” ௭ன்றான் அவன் அழகாக சிரித்து.
“ம்” என முறைப்பாகவே விடை பெற்றார்.
ஈவினிங் அவனிடம் வந்து கேட்ட ஆறெழிலிடம், தன்னால முடிந்த மட்டும் மேலோட்டமாகப் பேசி, “விஷயம் முடிஞ்சு போச்சு, வீட்ல போய் அம்மாட்ட ஒரு சாரி சொல்லிடு அவ்ளோதான். இங்க இனி யாரும் தப்பா நெனைக்க மாட்டாங்க, சோ கவலைப்படாத” என முடித்து விட்டான்.
“அம்மா காலைல நா கிளம்பி வர்ரவர பேசவேயில்ல, மூஞ்ச தூக்கி வச்சுட்டு தான் இருந்தாங்க. கிளம்பும் போதும் வெடுக்குன்னு பேசிட்டு போயிட்டாங்க, உங்க வீட்ல யாரயும் வர சொல்லலயா?” என்றாள்.
“அப்பா வந்தாங்களே”.
“அப்பா என்ன சொன்னாங்க, நீங்க வீட்ல என்ன சொன்னீங்க”.
“பொழுது போகாம ஒருத்தி பாத்த வேலப்பா. டோன்ட் மிஸ்டேக்ன்னு சொன்னேன்”.
“வேற ஒண்ணுமே சொல்லல?” (வீட்லனாலும் லவ் பண்றேன்னு சொல்லிருப்பாங்களோ)
“வேற என்ன சொல்லணும், அதான உண்மை” அவன் அவள் ௭திர்பார்ப்பு புரிந்தும் வெறுப்பேத்த.
“நா கிளம்புறேன், பை” ௭ன்றாள்,
“பை” அவனும் சிரித்தவாறே சொல்லிவிட, முறைத்தவாறே கிளம்பிவிட்டாள்.
வீட்டிலும் ஜெயந்தி பெரிதாக அதைப்பற்றிப் பேசவில்லை, இவள் ஆரம்பித்த போதும், “உனக்கு இன்னும் அத பத்தி பேசுற வயசு வரல, படிப்ப மட்டும் பாரு. இன்னொரு தடவ என்ன அங்க வந்து நிக்க வச்சுராத” என்ற சொல்லுடன் எழுந்துவிட்டார். பிரச்சனை முடிஞ்சது ௭ன அத்தோடு அவளும் அமைதியாகி விட்டாள்.
அடுத்து வந்த நாட்கள் வேறு எந்த பெரிய மாற்றமுமின்றி சென்றது. அவளும் சப்ஜெக்ட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள். ரேணுவை அவன் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. சமயம் அமையுமென இருந்துவிட்டான்.
ப்ரகலத்தனும் ஆறுவும் தினமும் தவறாமல் பார்த்துக்கொண்டனர். வகுப்பை, படிப்பைத் தாண்டி வேறு எந்தப் பேச்சும் இல்லாமல் பார்த்துக் கொண்டனர். செம் நெருங்க எல்லோருமே பிஸியாகினர், நாட்கள் சென்றது, நட்பு வட்டத்தின் அரட்டைக்கும் சண்டைக்கும் ஓய்வில்லை, அதன் பலன் நட்பு பால கயிறு இறுகி உறுதி பெற்றது.
பர்ஸ்ட் செமஸ்டரில் ஈஜி பேப்பர் மிகக் கஷ்டம் அப்படி இப்படி என எல்லோரும் பயந்து போய் இருக்க, புரிந்தால் அது மிக ஈசி என ௭ஸ் கிரேட் ௭டுத்து நிரூபித்தாள் ஆறெழில். செகண்ட் செமஸ்டரில் காலேஜ் கல்ச்சுரலில் எல்லாம் புகுந்து விளையாடினர். முதல் வருடம் சீக்கிரமாகவே கடந்து விட்டது போலவே இருந்தது. காலேஜ் முதல் வருடம் லேட்டாக செப்டம்பர் மாதத்தில் ஆரம்பித்ததால், 3 நாள் லீவுடன் செகண்ட் இயர் ஸ்டார்ட் செய்துவிட்டனர்.
பெண்கள் நால்வரும் ECE டிபார்ட்மென்ட்டிற்குள் நுழைய, வைரமும், தாணுவும் ஏரோநாட்டிகள் டிபார்ட்மெண்ட் சென்றனர். அந்த நட்பு-பிரிவு அவர்களுக்கு வருத்தமாகவே இருந்தது, லட்சு தான் மிகவும் வருத்தப்பட்டாள். அதனால் ஈவினிங் தவறாமல் அரைமணிநேரம் மீட் செய்தனர். அதில் ப்ரகலத்தன் குரூப்பும் சில சமயங்களில் சேர்ந்து கொள்வர்.
ஸ்டாஃப்ஸ் ௭ல்லோரும் ப்ரண்டிலியாக பழகினர், நண்பர்கள், படிப்பு, கேண்டீன், ப்ரகலத்தன், வீடு இதுவே வாடிக்கையானது ஆறுவிற்கு.
ECE டிபார்ட்மெண்ட்டிற்குள் நுழைந்து மூன்று மாதம் கடந்த விட்டிருந்த நிலையில் அவர்களுக்கென சிம்போசியம் ஏற்பாடாகி இருந்தது. அதாவது மற்ற காலேஜிலிருந்து இங்கு வந்து பேப்பர் பிரசன்டேஷன் (ஏதாவது ஒரு சப்ஜெக்ட் தலைப்பில் செமினார் போல் எடுத்து சர்டிபிகேட் வாங்கி செல்வர்) அதேபோல் குய்ஸ், சர்க்யூட் டெஸ்ட் எல்லாம் நடக்கும். அதை அந்தந்த டிபார்ட்மென்ட் சீனியர்/இன்சார்ஜ் மட்டும் பார்த்துக் கொண்டால் போதும் தான், ஆனாலும் மொத்த டிபார்ட்மெண்ட்டும் களத்தில் இறங்கி ஒரு வாரம் முன்பாகவே வேலை செய்வர். ‘நோ கிளாஸ் நோ லேப்’ போர்டுடன்.
பாய்ஸ்க்கு வெளி காலேஜில் இருந்து வரும் அப்ளிகேஷனை சரிபார்ப்பது, அதில் பெண்பிள்ளைகளை தனியாக பிரிப்பது, தேவையான பொருட்களை வாங்கி வந்து தருவதுமான வேலைகள் என்றால், கேர்ள்ஸ்ஸிருக்கு அன்று எந்த சாரிக் கட்டலாம், எங்கு சென்று வாங்கலாம், எங்கு எப்படி ஸ்டிட்ச் கொடுக்கலாம், நீ என்ன கலர் சாரி, நான் இந்த கலர் சாரி, டிபார்ட்மெண்ட் ப்ளோர் எந்த கலர் பேப்பரில் டெகரேட் செய்யலாம், எவ்வளவு ஃப்ளவர் வச்சு டிசைன் பண்ணலாம், குய்ஸ் கொஸ்டின், சர்க்யூட் டிசைன் கொஸ்டின் ரெடி செய்வது போன்றவற்றில் பிஸியாக இருப்பர்.
அப்படி ஒரு நாள், ௭ன்றும் போல், மரத்தடி பென்ஜில் அமர்ந்து ஏதோ ௭ழுதி கொண்டிருந்த ப்ரகலத்தனிடம் வந்தவள், “சிம்போசியதிக்கு எங்க சாரி எடுக்கலாம் ப்ரெசிடெண்ட்?” என்றாள் திடிரென.
“ஹே, ஹாய், கிளாஸ் ஓவரா? சாரி பத்திலாம் ௭னக்கு அவ்வளவு ஐடியா இல்ல, என்ட்ட கேக்குற?” ௭ன்றான்.
“கூகுள் பண்ணி சொல்லுங்க, இல்ல உங்க அம்மாகிட்ட கேட்டு சொல்லுங்க”.
“அது சரி, அவ்வளவு தூரம் ஆகிடுச்சா. யாருக்குடான்னு எங்க அம்மா கேக்குறதுக்கா இந்த பிட்?” ௭ன்றான் புருவம் உயர்த்தி நக்கலாக.
“நீங்க எப்பவுமே பிரிலியண்ட்ன்னு நிரூபிச்சுட்றீங்க ப்ரெசிடெண்ட்” ௭ன்றாள் அவனுக்கு திருஷ்டி கழித்து.
“ஆஹான்!” என்றவன், அவன் அன்னைக்கு கால் செய்தான். அவர் எடுத்ததும்,
“ம்மா சாரீஸ் கலெக்ஷன் எங்கம்மா நல்லாருக்கும்” என கேட்டவாறு லவ்டு ஸ்பீக்கரில் போட்டான்.
“டி நகர் போலாம்ப்பா, நிறைய கடை இருக்கும், ஒன்னில்லன்னா ஒன்னுல பாத்து எடுக்கலாம். பிடிச்ச மாதிரி அமையும்” என்றார்.
“சரிம்மா”,
“யாருக்கு ப்பா?” அவன் அவளைப் பார்க்க, அவள் அவனை ஆர்வமாக பார்த்தாள்.
“ப்ரண்ட் கேட்டாம்மா, எனக்கு தெரியாதுன்னு சொன்னேன். உன்ட்ட கேட்க சொன்னா” என சிரித்தவாறே சொல்ல.
இவள் மூக்கை சுருக்கி முறைக்க, “சரிப்பா, அங்க போய் பாக்க சொல்லு”.
“நீயே சொல்லுறியாம்மா, உன்ட்ட பேச ஆசபடுறா” ௭ன கோர்த்து விட்டான்.
‘வேணாம்’ என்று ஆறெழில் வேகமாக தலையாட்ட, அவர் “சரி குடு” என்றிருந்தார். ‘என்ன பேச’ ௭ன அவள் சைகையில் கேட்க, போனை நீட்டிக்கொண்டே பல் தெரியச் சிரித்தான்.
“பூனக் கண்ண நோண்டிருவேன் ” என கண்ணை சுருக்கி முறைத்து, வாயை மட்டும் அசைத்து திட்டிவிட்டு போனை வாங்கினாள்.
“ஹலோ ஆண்ட்டி, எப்டி இருக்கீங்க?” ௭ன்றாள் நல்ல பிளளையாக,
“நல்லா இருக்கேன்மா, நீ எப்டி இருக்க? ப்ரகலத்தன் கிளாஸ்மேட்டா நீ?” ௭ன ராஜம் கேக்க.
“பைன் ஆண்ட்டி, நா அவங்க ஜூனியர்” என அவள் முடிக்கும் முன்,
“ஆறெழில்?” என்றிருந்தார் கேள்வியாய்.
“ஆமா ஆண்ட்டி, ௭ன்ன தெரியுமா?? நா அவங்க ஸ்கூல் ஜூனியர்” என்றாள் சந்தோஷமாய் தன் பெயரை அவர் கண்டுபிடித்து விட்ட குஷியில்.
“தெரியும், தெரியும் ஒழுங்காயிருந்த பிள்ளைய கெடுக்குறதுக்குன்னே கிளம்பி வருவீங்களோ? அவேன் ஒரு நாளும் அவங்க அப்பா முன்ன என்ன பேசலாம்ன்னு யோசிச்சு தயங்கி நின்னதில்ல. ஆனா அன்னைக்கு தல குனிஞ்சு நின்னான். காலேஜ் வரைக்கும் வந்து என் புருஷன பதில் சொல்ல வச்சது நீ தான எப்டி உன் பேரு மறக்கும். இதுக்காவே என் புள்ளைய ஸ்கூல்ல இருந்து துரத்திட்டு வந்தியோ” என அவர் திட்ட, இப்படி ஒரு தாக்குதலை எதிர் பார்க்காத இருவரும் ஒரு முழு நிமிடம் முழித்து நின்றனர்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அச்சோ.. இப்படி ஒரு ட்விஸ்ட் எதிர் பாக்கல.. ப்ரெசிடென்ட் அம்மா கொஞ்சம் terror தான் போல்.. அதுசரி, எல்லாரும் easy going ஆக இருந்தா சுவாரசியம் இருக்காது…
நன்றி சிஸ்டர்