
திமிர் 15
வந்த முதல் நாள் இருக்கையோடு இருந்து கொள்ள வேண்டும் என்றவன், தன் மெத்தையில் அவளோடு இரவெல்லாம் உறங்கினான். தொடுதல் இல்லாத உறவு இரவைச் சுகமாக்கியது. ஆடைகள் மட்டும் உரசிக் கொண்டது. உறக்கம் என்பது நள்ளிரவைத் தாண்டியும் வர மறுத்தது. அழகாக ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு விழிகளால் கதை பேசி விடியற்காலைப் பொழுது உறங்கத் தொடங்கினர்.
வற்றிய மழையும், ஓரளவிற்குத் தேங்கிய சேர் மட்டுமே அவர்கள் நினைவைச் சுமந்து கொண்டிருந்தது. மலையும், நீரும் சூழ்ந்த இடத்தில் ஐந்தறிவு ஜீவன்களுக்கா பஞ்சம்! அழகாக ஒலி எழுப்பி இருவரையும் கண் விழிக்கச் செய்தது. முதலில் கண் விழித்தது அம்மு. தன்மேல் வயிற்றோடு கை சுற்றித் தோளோடு முகம் உரசப் படுத்துக் கொண்டிருந்தவன் முகத்தில் விழித்தவள் அவனை விட்டு நகர மறுத்தாள்.
தன்னவளிடம் காதல் அம்பை எய்துத் தூக்கம் கலைந்தவன், தூங்குவது போல் நடித்துக் கொண்டிருந்தான். தூக்கம் கலையாமல் அவன் பக்கம் திரும்பிப் படுத்தவள், இதமான காற்றில் தள்ளாடும் முடியை மெதுவாக வருடினாள். ஆயிரம் முத்தம் கொடுத்த சுகத்தைக் கொடுத்தது அவன் கேச வருடல். மனதுக்குள் மகிழ்ந்தவள், இதுவரை ரசிக்காத அந்த மீசை மீது பார்வையை மாற்றினாள். அவனைப் போல் கூர்மையாக இருந்தது. தொட்டால் கிழித்து விடுமோ! என்ற அச்சத்தில் கண் சிமிட்டியவள் உணர்வுகள் தொட்டுவிடு என்றது.
மெல்ல விரலை மீசை மீது வைத்தவள், மின்சாரத்தில் கை வைத்தது போல் உதறி எடுத்து விட்டாள். அவள் செய்கையில், இதழ் விரியத் துடித்தாலும் கட்டுப்படுத்திப் படுத்திருந்தான் அகம்பன் திவஜ். ஆசை துளிர, மீண்டும் கை வைத்தவளுக்குத் தீராத ஆசை வந்துவிட்டது அதன் மீது. அடர்ந்த காட்டிற்குள் கீழ் உதடு ஒளிந்து இருப்பதைக் கண்டுபிடித்துப் பெருமிதம் கொண்டவள்,
“இவ்ளோ அழகா இருந்து கொல்லுறியே!” என அவன் காதுபடப் பேசி முகம் சிவக்க வைத்தாள். சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் கட்டுப்படுத்தியவன் கைகள் பரபரத்தது அவளைத் தீண்ட. அவனோடு ஒட்டி உடலை உரசியவள் மார்பில் கை போட்டு,
“எனக்கு ஏன் உன்னைப் பிடிக்குது? ஒரு மாதிரி உடம்பெல்லாம் சில்லுனு இருக்கு. ஞாயமா உன்னை மாதிரி ஒருத்தனைக் கண்டா ஓடித்தான ஒளியனும். எனக்கு ஆசை தீரக் கொஞ்சனும்னு தோணுது. எனக்கு மட்டுமே உன்னை உரிமையாக்கனும்னு தோணுது. உன்ன மாதிரி யாரும் என்கிட்ட இவ்ளோ உரிமையைக் காட்டுனது இல்லை. நீ கோபப்பட்டா கூடப் பிடிக்குது. முறைச்சிகிட்டு நின்னா ஆசை வருது. முரட்டுத்தனமா பிடிச்சா சிரிக்கத் தோணுது. நான் உங்கிட்ட ரொம்பப் புதுசா இருக்கேன். எனக்குள்ள இவ்ளோ குறும்புத்தனம் இருக்கும்னு உன்னைப் பார்த்ததுக்கு அப்புறம் தான் தெரியுது. தூங்கும்போது கூட ஏன்டா இவ்ளோ அழகா இருக்க. அப்படியே அள்ளி மென்னு திண்ணனும் போலத் தோணுது.” பேசிக்கொண்டு கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டாள்.
அவனை இந்த அளவிற்கு யாரும் நெருங்கியதும் இல்லை. இத்தனைச் சிலிர்ப்பைக் கொடுத்ததும் இல்லை. வறட்சியான பாலைவனத்தில் பூத்த முதல் பூ அம்மு. அவனுக்கு இந்தப் பூவைப் பறித்துக் கொள்ள ஆசை. தனக்கு மட்டுமே சொந்தமாக்கிக் கொள்ளப் பேராசை. அவனுடைய நோய், வாழ்க்கை, வசதி என்று எதுவும் நினைவில் இல்லை. அவனுக்கு வேண்டியதெல்லாம் அம்முவின் இந்த நெருக்கம் மட்டுமே. இத்தனை நாள்களாக இறக்கப் போகிறோம் எனத் தனிமையைத் தேடியவன், இவளை நொடியும் பிரியக்கூடாது என்று உளமாற நினைக்கிறான்.
“உன்கிட்ட ஒன்னு சொல்லணும். அதைக் கேட்டதுக்கு அப்புறம் எப்படி ரியாக்ட் பண்ணுவேன்னு தெரியல. பட், ஒன்னு மட்டும் என் மனசு நம்புது. நீ என்னை விட்டு விலக மாட்ட. உனக்கும் எனக்குமான இந்த உறவுல, எத்தனை விரிசல் வந்தாலும் பிரிய மாட்டோம். என் வாழ்க்கையில எனக்கே எனக்குன்னு வந்த முதல் உறவு நீதான். நீ இல்லாத நாளை நினைக்க முடியல. என்ன ஆனாலும் சரி, நான் உன் கூட தான் இருக்கப் போறேன்.” என்றதற்கு மேல் நடிக்க முடியவில்லை அகம்பனால்.
அள்ளி எடுத்துத் தன்மீது போட்டுக் கொண்டவன், அவளுக்கு யோசிக்க இடமே கொடுக்காமல் இதழைப் பிடித்தான். இதற்கு முன் முத்தமிட்ட பொழுது மென்மையை உணர்த்தியவன், இந்த முறை வேகத்தை உணர்த்தினான். நெருக்கம் உடலைக் கூசியது. உடல் துள்ள, உணர்வுகளை விரல் கொண்டு தீண்டினான். முத்தத்தின் வேகம் கட்டுப்பாட்டை இழக்க வைத்தது. அள்ளிச் சுருட்டி மேலே போட்டவன், புயலாகக் கீழே சரித்து உடல் கனத்தை அவள் மீது போட்டு முத்தத்தைத் தொடர்ந்தான்.
மூச்சு முட்டத் தொடங்கியது. இருந்தும் அவன் நெருக்கத்தைத் தள்ளி வைக்க முடியாது முதுகில் கை நுழைத்துத் தன்னோடு இறுக்கிக் கொண்டாள். அவள் ஒத்துழைப்பில் கட்டுப்பாட்டை இழந்தவன், அங்கங்களின் அளவைக் கை கொண்டு அளந்தான். மோகத்திற்கு, அளவு தூண்டுகோல் ஆனது. பட்டென்று இதழை விட்டு, நெற்றியில் ஆரம்பித்துப் பாதம் வரை ஒவ்வொரு இடத்திலும் முத்தமிட்டு அவளைச் சிலிர்க்க வைத்தவன் மீண்டும் உதட்டைக் கவ்விக் கொண்டான்.
இந்த முறை இதமாக இழுத்து அவளுக்கு மூச்சைக் கொடுத்தவன், கைகளை ஆடைக்குள் நுழைத்தான். அதுவரை அவனுக்கு ஒத்துழைப்புக் கொடுத்தவள் கண்களை விரித்திட, மூடிய கண்களைப் பார்த்துக் கொண்டே முத்தமிட்டவன் விரிந்த கண்களைச் சொக்க வைத்தான் இடைச் சதையை இறுக்கிப் பிடித்து. அவன் விரல்பட்ட உடல் கூசி விறைத்தது. முதுகைச் சுற்றிக் கொண்டிருந்த கையை விலக்கி அவன் கைக்குத் தடை போட்டவள், “ம்ஹூம்!” என முனகல் எழுப்ப, அவன் ஆண்மைக்கு அது தீனியானது.
ஆடையை மேல்வரை ஏற்றிவிட்டு வயிற்றில் முத்தமிட, அவன் தலை முடியை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள் அம்மு. நான்கு பேர் கட்டிப் போட்டாலும் அடங்காத உடல், அவள் ஐவிரல்களுக்கு அடங்கி முத்தத்தை முடித்தது. இழுத்த மூச்சை வெளியிட்டுத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள் முகத்தை ரசித்துக் கொண்டே, ஆங்காங்கே குட்டிக் குட்டி முத்தமிட்டு, “கிஸ் பண்ணுடி.” கேட்டான் கிறங்கி.
அவன் மட்டுமே கொடுத்துக் கொண்டு அவள் அனுபவித்துக் கொண்டிருந்தாள். அந்தப் போதை பிடித்திருந்தாலும், அவள் கொடுக்கும் போதை தேவைப்பட்டது அகம்பனுக்கு. வெட்கத்தோடு மறுத்து அவனைத் தள்ளிவிட்டு மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள்.
ஆண் கெஞ்சிச் சிணுங்கினான். வெட்கம் தாங்காது பெண் கொஞ்சினாள். ஆண்மை துடித்தது அவளை எடுத்துக்கொள்ள. பெண்மை தடை போட்டது நாணத்தில். கெஞ்சிப் பார்த்தவன் மிஞ்சினான் விரல் தீண்டி. புழுவாய் துடித்தாள் அவன் மேல் படர்ந்து. கீழே சரித்து மேல் படர்ந்தவன், முத்தம் கேட்டு முத்தமிட்டு மிரட்டினான். பயந்து உதட்டை இழுத்து எச்சிலால் நனைத்தாள். மனம் நிறைந்து போனது அகம்பனுக்கு.
கட்டுப்பாட்டை மீறிக் கட்டில் சுகம் கண்டனர். அவளது மேல் ஆடையைக் கழற்றியவன், தன் ஆடையைத் துறந்து வேர்வையில் நனைந்தான். முரட்டுத்தனமும், மென்மையும் நாணத்தைத் தள்ளி வைத்து அவனைச் சொந்தமாக்கியது. முழு வேகத்தில் சுழன்று கொண்டிருந்தவன் உணர்வுகள் ஆண்மைக்குத் தயாரானதை உணர்த்தியது. அதுவரை அவளை ஆட்சி செய்து கொண்டிருந்தவன், செய்கையை நிறுத்தித் தன்னைக் கட்டுப்படுத்த முயன்றான். அந்தப் போராட்டத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதைப் புத்தி உரைத்தது. தவறென்று மனம் சொல்லியது. சுடுநீரை மேலே ஊற்றியது போல் அவளை விட்டு விலகியவன், படபடவென்று அடியெடுத்து வீட்டை விட்டு ஓடினான்.
மதி மயங்கிக் கண் மூடிப் படுத்திருந்தவள், விழி திறந்து அவனைத் தேட, வெறுமையாக இருந்த மேல் உடல் நடந்ததை உணர்த்தியது. எம்மாதிரியான எண்ணங்களுக்குள் சிக்கியிருக்கிறோம் என்பதை அறியாது எழுந்தமர்ந்தவள், தன் ஆடை தூரமாக இருந்ததால், கை எட்டும் தூரத்தில் இருந்த அவன் ஆடையை எடுத்து உடுத்தினாள்.
வந்த நோக்கத்தை மனம் உரைத்தது. நேற்று இரவு வந்த எச்சரிக்கை ஞாபகத்திற்கு வந்தது. அதை மீறி அவனோடு இரவைக் கழித்ததற்கான பின் விளைவுகளை அறியாது, இரண்டும் கெட்டான் நிலையில் நின்றாள். போன வேகத்தில் உள்ளே நுழைந்தவன், அவளைச் சுவரில் மேதி நிற்க வைத்தான். திகைப்பில் அவன் விழியைப் பார்த்துக் கொண்டிருக்க, தன் கழுத்திலிருந்த சங்கிலியை அவள் கழுத்தில் போட்டு, முகம் எங்கும் விடாது முத்தமிட்டுத் தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டான்.
எதற்காக அதை அணிவித்தானோ, எதற்காக முத்தமிட்டுக் கட்டியணைத்தானோ, அவன் மட்டுமே அறிந்தது. சம்பந்தப்பட்டவளுக்குக் கண்கள் கலங்கியது. மானசீகமாக மனத்தோடு அவனிடம் மன்னிப்புக் கேட்டு விலகியவள், நெற்றியில் முத்தமிட்டு,
“நான் உனக்கு உரிமையானவ. நீ தொட்டா மறுக்காது இந்த உடம்பு. நீ எனக்கு எதையும் நிரூபிக்க வேண்டாம். உன்னை விரும்பித்தான் உன்கூட இருக்கேன். உலகத்துக்கு இது எப்படித் தெரிஞ்சாலும், உன்னோட காதல் மொழி எனக்குப் புரியும். உன்னோட முத்தம் என் மேல இருக்க நேசத்தை உணர்த்தும்.” எனத் தன் கழுத்தில் அணிவித்த செயினை உயர்த்திக் காட்டி,
“இது எனக்குத் தாலி தான்!” என்றிட, இதமாக அணைத்துக் கொண்டவனுக்கு உள் எழுந்த குற்ற உணர்வு மறைந்தது.
கட்டியணைத்துத் தங்கள் காதலைப் பரிமாறிக் கொண்டவர்கள், வெகு நேரத்திற்குப் பின்பு இயல்புக்குத் திரும்பினார்கள். அன்றைய நாள் முழுவதும் காதல் பறவைகளாக, அந்த ஆளில்லாத மலைப்பிரதேசத்தைச் சுற்றி வந்தனர். ஆண் பறவை, தன் பெண் பறவையை விடாது கிடைக்கும் நேரத்தில் எல்லாம் காதல் செய்ய, பெண் பறவைக்கு அளவில்லாத மகிழ்ச்சி. உரிமையோடு அவன் கைப்பற்றிக் கதை அளந்தது.
கமல் தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருந்த மின்னஞ்சல் எதையுமே பார்க்கவில்லை அகம்பன் திவஜ். மாலை நேரம் வரை, தன் அன்னையின் நிலை அறியாது காதல் செய்து கொண்டிருந்தவனிடம்,
“நம்ம ரெண்டு பேரும் ஒரு செல்பி எடுத்துக்கலாமா?” கேட்டுக் கைபேசியை உயிர்ப்பிக்க வைத்தாள், தன் உயிர் தொலையப் போவதை அறியாது.
செல்போனை ஆன் செய்ததும், வரிசையாக அனைவரின் எண்ணில் இருந்தும் அழைப்பு வந்திருந்தது. அதன் தீவிரம் உணராது, தன்னவளைத் தன்னோடு இறுக்கமாக வைத்துக்கொண்டு வகைவகையாகப் புகைப்படம் எடுத்துத் தள்ளியவன், “அம்மா ஹாஸ்பிடல்ல இருக்காங்க சார்…” என்ற புலனக் குறுஞ்செய்தியின் அறிக்கையைப் பார்த்ததும் அவசரமாக அழைத்தான் கமலுக்கு.
“அம்மாக்கு என்னடா ஆச்சு?”
“எவ்ளோ நேரம் உங்களை காண்டாக்ட் பண்றது, எத்தனை மெயில் பண்றது சார்.”
சுற்றி எங்கெங்கும் இருந்த இருட்டைக் கிழித்தது, “அம்மாக்கு என்னன்னு சொல்லுடா” என்றவன் குரல்.
பக்கத்தில் இருந்தவள் பதறி எழ, “யாரோ ஒருத்தன் போன் பண்ணி உங்களுக்கு கேன்சர்னு மேடம்கிட்டச் சொல்லி இருக்கான். அதைக் கேட்டு அழுது துடிச்சவங்க மயங்கி விழுந்துட்டாங்க சார். மதியம் கொண்டு வந்து ஹாஸ்பிடல்ல சேர்த்தோம். பத்து நிமிஷத்துக்கு முன்னாடி தான் கண்ணு முழிச்சாங்க. முழிச்சதும் உங்களைக் கேட்டு ரொம்ப ஆர்ப்பாட்டம் பண்றாங்க. யாருக்கு என்ன பண்றதுன்னு தெரியல. உங்களுக்கு கேன்சரா?” என்றதைக் கேட்ட அகம்பனுக்குப் பித்துப் பிடித்தது.
“ஆஆஆஆஆ…” ஆங்காரமாகக் கத்தி ஃபோனை வீசி அடித்தவன், “அம்மா…” தொண்டை கிழியப் பைத்தியக்காரன் போல் அலைந்தான்.
“ஆர்மி…” என அவனை நெருங்கியவள் தள்ளி விடப்பட்டாள்.
முட்டி அடிபடக் கீழே விழுந்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை. பித்துப் பிடித்து உளற ஆரம்பித்தவன், என்ன செய்கிறோம் என்று தெரியாமல் தன்னைத் தானே தாக்கிக்கொள்ள ஆரம்பித்தான். தடுக்கச் சென்றவளை மூர்க்கத்தனமாகத் தள்ளிவிட்டு,
“இப்படி ஆகக் கூடாதுன்னு தான இங்க வந்து இருந்தேன். எப்படி எங்க அம்மாக்குத் தெரிஞ்சது. எங்கம்மாக்கு ஏதாச்சும் ஒன்னு ஆகுறதுக்குள்ள நான் செத்துடனும். இந்த அகம்பன் உயிர் போயிடணும். எங்க அம்மா துடிக்கிறது தெரியாம சந்தோஷமா இருந்திருக்கனே. எங்க அம்மாவை இப்படி ஒரு நிலைமைக்கு ஆளாக்குன நான் இருக்கக் கூடாது. எனக்கு எதுக்கு இப்படி ஒரு நோய் வந்துச்சு. நான் என்ன பண்ணேன்? எங்க அம்மாவ இவ்ளோ கஷ்டப்படுத்துறேனே. என்னை நேசிக்கிற உயிரை நானே நோகடிச்சுட்டேனே. இல்ல… இல்ல… எங்க அம்மா அழக்கூடாது.” எனப் புலம்பியவன், என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அந்தப் பாலத்தை உடைத்தான்.
அவன் ஆக்ரோசத்திற்கு அடங்கிப் போனது தூள் தூளாகி. பாலத்தின் மீது நின்றிருந்த இருவரும் நீரில் விழுந்தனர். அந்த அதிர்வு சிறிதும் இல்லாமல் நீரைக் குத்திக் கிழிக்கத் தண்ணீர் எல்லாம் சிதறியது அவன் கோபத்தைத் தாங்க முடியாது. முழுவதும் நனைந்து அவனைக் கண்டு அஞ்சியவள் முடிந்தவரை சமாதானம் செய்து தோற்றுப் போனாள்.
“ஏய் போடி! நான் சாகப் போறேன். எதுக்காக என் கூட இருக்க. எங்க அம்மா மாதிரி உன்னையும் கஷ்டப்படுத்துவேன். நீயும் எனக்காக அழுவ. எங்க அம்மாவுக்கு அப்புறம் நான் மனசார நேசிச்ச பொண்ணு நீதான். உன்னையும் கஷ்டப்படுத்த விரும்பல. போயிடு. இங்க இருந்துப் போயிடு. இப்படி ஒருத்தன் இருந்ததை மறந்துடு. எங்க அம்மாக்கு ஏதாச்சும் ஒன்னு ஆகுறதுக்குள்ள நான் செத்துப் போறேன்.”
“அகா… அகா, நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளு. உனக்கு ஒன்னும் இல்ல. உங்க அம்மாக்கு எதுவும் ஆகாது. கொஞ்சம் நிதானமா நான் சொல்றதைக் கேளு.”
“போடி!”
விழுந்து எழுந்தவள் அவனை நெருங்கி, “சத்தியமா உனக்கு ஒன்னும் இல்லடா, உங்க அம்மாக்கு எடுத்துச் சொல்லிப் புரிய வைக்கலாம். உன்ன நினைச்சு அழறவங்களுக்கு நீ தான் இப்போ ஒரே ஆறுதல். நீயே இப்படி இருந்தின்னா அவங்களை எப்படித் தேத்த முடியும்.”
“சாகப் போறவன் எப்படிடி எங்க அம்மாவைத் தேத்த முடியும்? எல்லா உண்மையும் எங்க அம்மாக்குத் தெரிஞ்சிருச்சு. எங்க அம்மாக்கு மட்டும் இல்ல, மொத்தக் குடும்பத்துக்கும் தெரிஞ்சிருச்சு. அப்படியே சுத்தி இருக்க எல்லாருக்கும் தெரியும். நோய் பிடிச்சவன்னு ஒதுக்கி வைப்பாங்க. சாகப் போறவன்னு கேலி பண்ணுவாங்க. என்னால அதை எல்லாம் பார்க்க முடியாதுடி.”
அவள் சொல்லிய எதுவும் அகம்பன் காதில் விழவில்லை. முரண்டு பிடித்துத் தன்னைத்தானே தாக்கிக் கொண்டவன் உடைந்த பாலத்தின் பாகத்தை எடுத்துத் தன் வயிற்றில் குத்திக் கொள்ள முயல, எதிரில் இருந்தவள் அடித்த அடியில் நீருக்குள் குப்புற விழுந்தான்.
அவன் அருகில் அமர்ந்து எட்டிச் சட்டையைப் பிடித்தவள், “உனக்கு ஒன்னும் இல்லடா. நீ சாக மாட்டடா. பைத்தியக்காரன் மாதிரி உளறிட்டு இருக்க. நான்தான் சொல்றேன்ல, உனக்கு எதுவும் இல்லைன்னு. படிச்சவன் தான நீ. உன் உடம்பு எப்படி இருக்குன்னு உன்னால புரிஞ்சுக்க முடியாதா? சாகப் போறவன் மாதிரியாடா நீ இருக்க… புத்தி தான் வேலை பார்க்கல, உன்னோட உணர்வு கூடவா வேலை பார்க்கல. சாகப் போறவனுக்கு இவ்ளோ வலு இருக்காதுடா. கொஞ்சம் உன் மூளையக் கேட்டுப் பாரு. உடம்புல ஏதாச்சும் மாற்றம் வருதா இல்லையானு தெரியும். கேன்சர் நீ நினைக்கிற மாதிரி ஜுரம் இல்ல. அதோட கடைசிக் கட்டத்துல இருக்கும்போது நீ இவ்ளோ நல்லா இருக்க மாட்டடா.” என்றவளைத்தான் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
படபடவென்று மனத்தில் இருக்கும் கோபத்தை எல்லாம் கொட்டியவள், அவன் பார்வையில் குற்ற உணர்வு கூடிக் கன்னத்தைப் பிடித்தாள். அகம்பன், கண்கள் கலங்கி நிற்காமல் கண்ணீரை வெளியேற்ற, “உனக்கு ஒன்னும் இல்ல அகா… நான் சொல்லறதை நம்பு. உன் அம்மு உன்கிட்டப் பொய் சொல்லல. கடவுள் சத்தியமா உனக்கு எந்த நோயும் இல்ல. நீ ரொம்ப நல்லா இருக்கடா. இவ்ளோ துடிக்காத அகா… சத்தியமா என்னால பார்க்க முடியல. உன்ன விட எனக்கு ரொம்ப வலிக்குது. நூறு வயசுக்கு நல்லா இருப்படா. ஒரு பேப்பரை நம்புற, உன்னை நம்ப மாட்டியா? அது உன்னோட தலையெழுத்து இல்ல. கண்ணை மூடி உன் மனசாட்சிகிட்டப் பேசிப் பாரு, எல்லாமே புரியும். இப்படி இருக்காதடா. என்னால தாங்க முடியல. நான் செத்துருவேன்.” என்று அவனை இறுக்கமாக அணைத்து கொண்டு கதறினாள்.
திக்பிரம்மையில் அசையாது அமர்ந்திருந்தான். தன் நெஞ்சோடு அவனை அள்ளிப் போட்டு, “நிதானமா இருந்தால் மட்டும்தான், உண்மை எது பொய் எதுன்னு தெரியும். நீ கொஞ்சம் நீயா இருந்திருந்தாலே எதுவும் இல்லைன்னு தெரிஞ்சிருப்ப. என் வார்த்தையை நம்பி எந்திரி அகா. உன் அம்மாகிட்டப் பேசு. எனக்கு எதுவும் இல்லன்னு தைரியமா சொல்லு. அவங்களும் சரியாவாங்க, நீயும் சரியாகிடுவ…” என முகத்தை விலக்கி நடு நெற்றியில் முத்தமிட்டாள்.
அப்போதும் சிலையாக அமர்ந்திருந்தவனைச் சில நொடி அமைதிக்குப் பின் தட்டி எழுப்பினாள். அவள் போக்கிற்கு எழுந்து நின்றவனை உள்ளே அழைத்துச் சென்று ஈரம் முழுவதையும் துடைத்து விட்டாள். அப்படியே நின்றிருந்தவன் தலை கோதி, “தண்ணி குடி!” எனப் பருக வைத்து நிதானத்திற்குக் கொண்டு வந்தவள், ஆடையை மாற்றி விட்டுக் கைபேசியை நீட்டினாள்.
கண்மூடி இரு நொடி தியானம் செய்துவிட்டு, ஃபோனை வாங்கியவனை நிம்மதியோடு பார்த்தாள். கமலுக்கு அழைத்து அன்னையிடம் கொடுக்கச் சொல்ல, “அகம்பா…” கத்திக் கூச்சலிட்டார் கற்பகம்.
வரவழைத்த தைரியம் வடிந்து போய், மருகி நின்றவனை அணைத்துத் தைரியப்படுத்தியவள், “உனக்கு எதுவும் இல்ல ஆர்மி.” என்றிட, “யாரோ என்னமோ சொன்னா அதை நம்பி அழுவீங்களா? நீங்க கேள்விப்பட்ட மாதிரி எனக்கு எதுவும் இல்லை. உங்க மகன் ரொம்ப நல்லா இருக்கேன். ப்ராக்டிஸ் பண்றதுக்காகத் தான் இவ்ளோ தூரம் வந்தனே தவிர, நோய்க்குப் பயந்து இல்லை. தேவை இல்லாம அழுது ஹாஸ்பிடல் வரைக்கும் போயிருக்கீங்க. உங்களால அப்பாவும், அண்ணனும் எவ்ளோ பயந்திருப்பாங்க. கேள்விப்பட்டு நான் எவ்ளோ துடிச்சேன், தெரியுமாம்மா… எனக்கு உங்க மேல செம கோவம். ஒழுங்கா எந்திரிச்சி வீட்டுக்குப் போங்க.” தைரியமாகப் பேசினான்.
“இல்லடா… உனக்கு…”
“வாய மூடுங்கம்மா. ஒரு பேச்சுக்குக் கூட எனக்கு நோய் இருக்குன்னு சொல்றது பிடிக்கல. முதல்ல அந்த போன் பண்ணது யாருன்னு கண்டுபிடிக்கச் சொல்லுங்க.”
“நல்லா இருக்கியாடா. அம்மாவுக்காக எதுவும் பொய் சொல்லலையே.”
“உங்க மேல சத்தியமா நான் நல்லா இருக்கேன்.”
“இது போதும்டா அம்மாக்கு. விஷயம் கேட்டதுல இருந்து துடிச்சுப் போயிட்டேன். இப்பதான் என் உசுரு என்கிட்ட வந்த மாதிரி இருக்கு.”
அன்னையின் பேச்சில் மனம் கலங்கியவன், காதலியின் ஆறுதலில் திடமாகச் சமாளிக்க, உடனே பார்க்க வேண்டும் என்று அடம் பிடித்தார் கற்பகம். அன்னையைச் சமாதானம் செய்ய வீடியோ காலில் அழைத்தான். பிள்ளையின் முகம் பார்த்து, அந்தத் தாயின் கதறல்கள் குறைந்தது. தந்தை, அண்ணன், உட்பட அனைவரிடமும் பேசிய பின் மனம் இலகுவானது.
“இதுக்கு மேல எந்த ப்ராக்டிசும் வேண்டாம். உடனே வீட்டுக்கு வா…”
“ம்ம்…” என அழைப்பைத் துண்டித்ததும், அவனை அழைத்துக்கொண்டு வெளியே வந்தவள், உடைந்த பாலத்தில் அமர்ந்து அவனைத் தன் மடியில் சாய்த்துக் கொண்டாள்.
இதமாகக் கண் மூடினான் அகம்பன் திவஜ். தலைகோதி, பட்டும் படாமலும் முத்தமிட்டு அவன் மீது தலை சாய்த்துக் கொண்டாள். அம்முவின் கால்கள் நீரில் நனைந்து கொண்டிருந்தது. அவளின் பாதி உடல் அதே நீரில் தான் ஊறிப் போயிருந்தது. இயற்கைக் காற்றும், குளிர்ந்த நீரும் இதத்தைக் கொடுத்தது இருவருக்கும். புயல் அடித்து ஓய்ந்தபின் பெரும் அமைதி நிலவியது.
எல்லாம் மறந்து, இயல்புக்கு மாறியவனைத் தன்னிடமிருந்து பிரித்துச் சிரித்தவளை ரசித்தான். மென்மையான காற்றாக அவன் இதயத்தைத் தொட்டவள், பேரழகியாகத் தெரிந்தாள் அவனுக்கு. இழுத்து முத்தமிட்டவன், “தேங்க்ஸ்” என்றிட, முகம் அரும்பியது காதலோடு.
புன்னகை சிந்தும் காதலியை விழியால் காதலித்தது போதாது என்று உடல் மொழியால் காதலிக்க விரும்பினான். எழுந்து கட்டியணைக்க முயன்றவன் பலத்தை உடைந்த பாலத்தால் தாங்க முடியவில்லை. உடைந்து நீரில் தள்ளியது அவனை.
“ஹா ஹா…” எனக் காற்றைக் கிழிக்கும் காதலியின் சிரிப்பில் சீற்றம் வருவதற்குப் பதில் ஆசை வந்தது. கைநீட்டி அவளை இழுத்து நீருக்குள் தள்ளியவன், உறங்கிக் கொண்டிருந்த மீன்கள் அனைத்திற்கும் காதலைக் கற்றுக் கொடுத்தான். விழிகள் சொல்லியது தீவிரத்தை. அதை அறிந்து சிரிப்பைக் கை விட்டவள், உரசும் அவன் விரலில் சொக்கி விழ, குளிர்ந்த நீரில் அனலைக் கூட்டினான் முத்தமிட்டு.
அவள் உடலில் இருந்த சிறு சிறு முடிகள் சிலிர்த்து நிற்க, சின்னச் சின்ன முத்தங்கள் அவளை வசப்படுத்தியது. கழுத்தை வருடிக் கொண்டிருந்த கை தன் வேலையைக் கீழ் இறக்கிக் கொண்டே செல்ல, உடல் கூச அவனோடு ஒட்டி நின்றாள். நீருக்குள் இருந்த இருவரின் கால்களும் பின்னிப் பிணைந்தது. தன் தொடுதலைத் தாங்க முடியாது சரியும் காதலியைத் தூக்கிப் பிடிக்க, அம்முவின் கால்கள் அவன் பின் முதுகைப் பிணைத்துக் கொண்டது.
ஆடை துடிக்க உரசி அவளைத் துடிக்க விட்டவன், அவன் துடிப்பைத் தீண்டலால் உணர்த்தினான். அவன் கை அழுத்தத்தைக் கையாளத் தெரியாமல் துவண்டு போனவளின் பெண்மையைத் தீண்டி எழுப்பினான், ஆடைக்குள் கை நுழைத்து. அகம்பனின் சட்டையை இறுக்கிப் பிடித்து பட்டன்களைத் தெறிக்க விட்டவள், மார்பு முடிகளைப் பற்களால் கடித்து இழுத்துச் சோதித்தாள்.
உசுப்பி விட்டவள் நொந்து போனாள் அவன் முரட்டுத் தனத்தில். பொறுமைக்கு நேரமில்லை. அள்ளிச் சுருட்டித் தனக்குள் இறுக்கிக் கொண்டு முத்தத்தை அளவில்லாது தொடர்ந்தான்.

