Loading

காலைக் கதிரவனின் வெப்பக் கதிர்கள் பெண்ணின் முகத்தை ஊடுருவ, கண்ணைச் சுருக்கித் துயில் கலைந்தாள் இதயாம்ரிதா.

தனது அறை போல இல்லையே என்ற குழப்பம் மிக கண்ணைச் சுழற்றியவளின் கண்ணில் விழுந்தான் அவன்.
கட்டிலுக்கு நேர் எதிரே போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்து, டேபிளின் மீது காலை நீட்டி, கண்ணாடி ஜன்னலின் வழியே தெரிந்த தோட்டத்தை வெறித்திருந்தான் சத்ய யுகாத்ரன்.

வெடுக்கென படுக்கையில் இருந்து எழுந்த இதயாம்ரிதா, அவனைத் தீயாக முறைத்தாள்.

“நான் எப்டி இங்க வந்தேன்?” எனத் தன்னைக் குனிந்து அவசரமாக ஆராய்ந்து கொண்டவளின் மீது ஆடவனின் சினம் சீறிப்பாய்ந்தது.

“இப்ப வரை ஒன்னும் செய்யல… தூக்க மாத்திரையைப் போட்டுட்டு கல்லு மாதிரி தூங்கிற பொண்ணு கூட லவ் மேக் பண்ணுனா, இண்டரஸ்டிங்கா இருக்காது இதயா” என்றான் நக்கலாக.

“நான் என் ரூம்ல தான தூங்கிட்டு இருந்தேன்?” சிவந்த விழிகளுடன் அவள் சீற,

“ரூம திறந்து வச்சுட்டுத் தூங்குனதுனால பொழச்ச. இல்லன்னா காலைல உன்னை சாம்பலா தான் பாத்து இருக்கணும்” எனக் காதைக் குடைந்தபடி கூறியவனைப் புரியாது ஏறிட்டாள்.

சத்யா நடந்ததை விவரித்ததும், அவளிடம் சிறு புருவ முடிச்சு.

“நான் கதவை உள்ள லாக் பண்ணிட்டு தான தூங்குனேன். அப்பறம் எப்டி திறந்து இருக்க முடியும்?” அவள் வினவியதில், “அப்போ பேய் பிசாசு ஏதாவது வந்து திறந்து இருக்குமோ?” என்றான் யோசனையுடன்.

அவனை முறைத்து வைத்தவள், நேற்று அணிந்து பைஜாமா கட்டிலின் வீற்றிருந்ததின் மீது பார்வையை செலுத்தி விட்டு அவனைக் காட்டத்துடன் ஏறிட,

“நத்திங் சீரியஸ்! நீ தூங்குறது பார்த்து கொஞ்சம் இரிடேட் ஆகிட்டேன். அதுனால மூஞ்சில தண்ணியை ஊத்தி எழுப்பி விட ட்ரை பண்ணுனேன். பட் நீ எப்பவும் எந்திரிக்கலையா… அப்பறம் தான் தூக்க மாத்திரை போட்டு தூங்குறது புருஞ்சு மனசுல ஒரு சின்ன நிம்மதி!

அப்பறம் ஈரத்தோட தூங்கி ஜன்னி வந்து பட்டுன்னு செத்துட்டா, என் டிசையர யார் தீர்த்து வைக்கிறது? அதுவும் இல்லாம, மேரேஜ் ஆகி ஒரே நாள்ல உனக்கு ஏதாவது ஆனா, பலி என் மேல வருமே. நீயே ஆவியா வந்து வாக்குமூலம் குடுத்தாலும் குடுப்ப! மறுபடியும் ஜெயிலுக்குப் போக எனக்கு என்ன பைத்தியமா மிஸஸ் பொண்டாட்டி! அதான் அக்கறையா ட்ரெஸ் சேஞ்ச் பண்ணி விட்டேன்” என்றதும் அவள் கட்டுக்கடங்காத ஆத்திரத்துடன் அவனை உறுத்து விழித்தாள்.

“ஹே! நான் தூங்குற பொண்ணுக்கிட்ட எல்லாம் வச்சுக்குறது இல்ல இதயா. கண்ணை மூடிக்கிட்டே தான் டிரஸ் பண்ணேன். உன் கழுத்துக்கும் நெஞ்சுக்கும் நடுவுல இருக்குற மச்சத்தைக் கூட நான் பார்க்கல. வெரி டீசண்ட் பெலோ!” என்றான் ஏளனப்புன்னகையுடன்.

“பெர்வர்ட்!” வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டவள், போர்வையை தூக்கி எறிந்து விட்டு எழ, “ஏய் என்ன சொன்ன இப்போ?” என சட்டென அவனும் எழுந்தான்.

“நத்திங் சீரியஸ்!” அவனைப் போல தோள் குலுக்கிக் கொள்ள, இதயாவின் கையைப் பிடித்தவன், “என்னமோ சொன்ன நீ. வாட் இஸ் தட்…?” என அவளது இதழ்களை ஊடுருவியன், “பெர்வர்ட்னு சொன்ன ரைட்?” என்றான் அவளது மேனியைத் தன் நெஞ்சோடு இறுக்கி வைத்து.

“லீவ் மி சத்யா!” அவள் கண்டிப்பாய் கூற,

“பெர்வர்ட்னு இதுவரை உங்கிட்ட நான் ப்ரூவ் பண்ணவே இல்லைல… ப்ரூவ் பண்ணட்டா?” உதட்டைக் குவித்து யோசனையாய் அவன் கேட்ட விதம், அவளுள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

நேரம் சரியாக ஒன்பதைத் தொட, ஆடவனின் உதடுகள் இளிவாய் வளைந்தது.

அவளோ அவனது விழிகளைக் கூர்மையாய் ஏறிட்டு, “என்ன பர்போஸ்க்காக இங்க திரும்பி வந்த சத்யா? ரிவெஞ்ச்?” நிதானமாய் வினவினாள்.

“ரொம்ப லேட் குவெஸ்ட்டின் பாஸ்” என்றபடி அவளது கன்னத்தை அவன் கன்னத்தால் தேய்த்தான்.

“ரிவெஞ்ச் எதுக்குன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” இதயாம்ரிதாவின் கேள்வியில் மெல்ல விலகியவன்,

“ஓ! உனக்கு மெமரி லாஸ் எதுவும் ஆகலை தான? பழசை பத்தி பேச கூடாதுன்னு ரூல்ஸ் போட்டுட்டு இப்ப ஒன்னும் தெரியாத மாதிரி எதுக்கு ரிவெஞ்சுன்னு கேக்குறது நாட் பேர் இதயா. ரிவெஞ்ச் தான். பட் என் மாடலிங்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை. பியூர்லி, எனக்கும் உனக்கும் மட்டும் தான்!” என்றான் அடக்கமாக.

அவளோ அவனைச் சந்தேகமாகப் பார்க்க, “ஹே… உனக்கு பிசினஸ் பத்தி லெக்ச்சரர் எல்லாம் எடுத்துட்டு அதுக்கு துரோகம் பண்ணுவேனா. ச்சே மாட்டேன் இதயா. யூ கேன் ட்ரஸ்ட் மீ இன் திஸ்!” என்றதில், புருவம் நெறித்தாள்.

தற்போதைக்கு அவனை ப்ராண்ட் மாடலாக அறிவித்தபிறகு, அதனை மாற்றுவது அத்தனை எளிதல்ல.

வியாபார ரீதியில் அவள் ஜெய்த்தே ஆகவேண்டும். குறைந்தபட்சம் மற்றவர்களுக்கு போட்டியாளராகவாவது அவள் இருத்தல் அவசியம்! பொதுவாக, டெஸ்ட் ஷூட்டில் எடுக்கப்படும் புகைப்படங்கள், மீடியாக்களில் ரிஜெக்ட் செய்யப்படுவதே வழமை. ஆனால், முதன்முறையே இவனது புகைப்படங்கள் அப்ரூவ் செய்யப்பட்டது. தனது ஒளிரா பிராண்டின் கீழ் வரும் அனைத்து க்ரீம்களும் அவனுக்கு அழகாய் பொருந்திப் போகிறது. அவளது ப்ராண்டை உலக அளவில் எடுத்துச் செல்லும் திறமை அவனுக்கு இருக்கிறது.

தற்போதைக்கு அதனைக் கெடுத்துக்கொள்ள அவள் விரும்பவில்லை. அதற்காக இவன் பேசும் பேச்சுகளை எல்லாம் பொறுத்துப்போவதும் பிடிக்கவில்லை.

தவறை அவன் செய்து விட்டு தன்னைப் பழிவாங்க வந்திருக்கிறானாம்! வாய்வரை வந்த வார்த்தையை விழுங்கிக்கொண்டவளுக்கு, அவனது நெருக்கம் வேறு தகிப்பைக் கொடுத்தது.

அவளுக்குப் பிடித்த நெருக்கமெல்லவா அவன்!!! தவறே செய்திருந்தாலும் அவனுக்காகவே தவமிருந்தவல்லவோ அவள்! இன்று தெரிந்தோ தெரியாமலோ பிடித்தோ பிடிக்காமலோ திட்டமிட்டோ விதியின் செயலாகவோ தனது கணவனாக இருக்கிறான். அவனிடம் மீண்டுமொரு முறை நழுவ முற்படும் இந்த மனதிற்கு என்ன தான் வேண்டுமாம்?

விஷால் சொன்னது போல, இவனென்று வந்து விட்டால்… கண்மூடித்தனமாய் நம்பிக்கையும் நேசமும் மரமாய் வளர்ந்து விடுகிறதே. இத்தனை நடந்தும் கூட, இவன் பின்னாலேயே அலையும் மனதை எந்த செருப்பால் அடிப்பது? இவனது தீண்டல்களை ருசிக்க எண்ணும் தேகத்தை சமன்செய்வதா, அல்லது வாழ்வில் ஒரு முறை, சில காலமெனும் என்றோ ஒரு நாள் தனக்கு யாவுமானவனாய் இருந்தனின் தீண்டலில் சுகித்து விடலாம் என்று அறிவுரை கூறும் மூளையை அடக்குவதா… புரியவில்லை அவளுக்கு!

அலைபேசி அழைப்பில் தான் அவள் தன்னிலை மீண்டாள். அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்த சத்ய யுகாத்ரனின் அலைபேசி சத்தம் அவனையும் கலைக்க, அவளை விடுவித்து விட்டு வெளியில் சென்றவன் அலைபேசி அழைப்பைத் துண்டித்து விட்டு, சோபாவில் தொம்மென அமர்ந்தான்.

அவளிடம் வெறுப்பை உமிழ்ந்து விட்டு வந்தாலும், அவள் உட்கொள்ளும் தூக்க மாத்திரையின் பழக்கம் அவனது அடிமனதை வருத்தியது.

தானாய், கல்லூரி நினைவொன்று கண்முன்னே விரிந்தது.

அவனது வெப்ப மூச்சின் விலகல் உணர்ந்ததும், கண்ணை இறுக்கி மூடிக் கொண்டவளின் நாசியில் நிறைந்திருந்தது ஆடவனின் வாசம். கலைந்த மேகங்களாய் அவனின் நினைவுகளும் ஆக்கிரமித்தது.

—-

“அங்கிள்… நீங்களாவது இவள்கிட்ட சொல்லுங்க. எம். பி. ஏ படிக்க தி பெஸ்ட் ஹை க்ளாஸ் காலேஜ் ஊர்ல எவ்வளவோ இருக்கு. அதுவும் உங்களை மாதிரி வி. ஐ. பி’ஸ்க்கு எல்லாம் அந்த காலேஜ் சுத்தமா செட் ஆகாது…” ராம்குமாரிடம் பொரிந்து தள்ளினான் விஷால்.

இதயாம்ரிதாவோ யாருக்கு வந்த கேடோ என்பது போல உமா கொடுத்த வடையைப் பதம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“நான் என்னப்பா செய்றது? யூஜி முடிச்சதோட வந்து பிசினஸை பார்த்துக்கோன்னு சொன்னேன். எனக்கு இன்டரஸ்ட் இல்லைன்னு சொல்லிட்டா. சரி படிக்கிறியான்னு கேட்டேன். அதுவும் முடியாதுன்னு சொல்லிட்டா. வேற என்ன தான் செய்யப்போறன்னு கேட்டதுக்கு, ட்ரஸ்ட் ஒன்னு ஸ்டார்ட் பண்ண போறேன்னு சொன்னா…” என்றதும், விஷால் அவளை நிமிர்ந்து முறைத்தான்.

“அங்கிள்… நீங்க சொன்னது மாதிரி நான் கரெக்ட்டா யூஜி முடிச்சதும் உங்க ஆபிஸ்க்கு வந்தேன் தான? உங்க மேல எனக்கு இருக்குற மரியாதைல கொஞ்சம் கூட உங்க பொண்ணுக்கு இல்லையா?” எனக் கேட்டு கோர்த்து விட,

இம்முறை வடைக்கு வாழ்க்கைக் கொடுப்பதை நிறுத்தி விட்டு விஷாலை எரித்தாள்.

“டேய்… நீ போய் பிசினஸ் பாரு… பிச்சை கூட எடு. என்னை எதுக்குடா இழுக்குற?”

“பிசினஸ் பார்த்தாலும் பிச்சை எடுத்தாலும் சேர்ந்து தான் எடுக்கணும்… ஏன்னா நீ என் நண்பிடி” என்று அவளை பற்களைக் காட்டியவனிடம், “ஒரு மண்ணும் இல்ல. நான் தனியா போய் எவனையும் சைட் அடிச்சுட கூடாது. கும்பலா வந்துடுவீங்க என் பின்னாடியே அப்படி தான?” என்றாள் முறைப்பாய்.

“இப்ப படிக்க போறியா இல்ல சைட் அடிக்க போறியா?” விஷால் அவளைச் சந்தேகமாய் பார்க்க, “படிக்க தான்… என்னை நான் சொன்ன காலேஜ்ல சேர்த்து விட்டா, நான் படிக்கிறேன். என்னோட ட்ரஸ்ட் ட்ரீம ரெண்டு வருஷம் ஒத்தி வைக்கிறேன். இல்லன்னா பிஸினஸ்ல ஹெல்ப் பண்ணிட்டே, அதுல வர்ற ரெவெனியூவை இதுக்கு யூஸ் பண்ணிக்கிறேன். பட், இப்ப நான் சொன்ன காலேஜ் வேணாம்னு சொன்னா, அந்த ஹெல்ப் கூட நான் பண்ண மாட்டேன் டாடி. நீங்க வேணும்னா உங்க சொத்தை இந்த பிசாசு பேர்கூட எழுதி வச்சுக்கோங்க…” என்று அவனைப் பார்த்து நாக்கைத் துருக்கினாள்.

ராம்குமாரோ பொறுமையாக, “அப்படி ஒன்னும் அது ஹை – ஃபையான காலேஜ் இல்லையேம்மா. அதுவும் இல்லாம, நம்ம தொழில் எதிரிகள் கண்ணுல நீ பட்டுட்டா கஷ்டம். சொன்னா புரிஞ்சுக்கோடா” என்றார் அவள் தலையைத் தடவிக் கொடுத்து.

“என்ன டாடி… இப்படி சொல்லியே கேஜில இருந்து யூஜி வரைக்கும், இந்தப் பஞ்சப் பரதேசங்களோட சுத்த விட்டுட்டீங்க…” என்று கன்னத்தில் கை வைத்து ஒரே சோபாவில் இடித்துக்கொண்டு அமர்ந்திருந்த, ஷ்யாம், யாமினி, நிலோபர், பத்மப்பிரியாவைக் கண்டு பொங்க, அவர்களோ தீயாக முறைத்தனர்.

“ப்ளீஸ் டாடி… எனக்கு அந்த காலேஜ்ல தான் படிக்கணும். அங்க நிறைய சோஷியல் ஆக்டிவிடீஸ்க்கு இம்பார்ட்டண்ட் தருவாங்களாம். நான் நிறைய விசாரிச்சுட்டு தான் சொல்றேன்” எனப் பேசி பேசி தந்தையை ஆக வைக்க, யாமினியோ “சரிடி… அந்த காலேஜ்ல தான் குப்பை கொட்டணும்னு தலையில எழுதி இருந்தா அதை யாரால மாத்த முடியும்… போய் தொலையலாம்” என்று வெகுவாய் சலித்துக் கொண்டாள்.

“ஏய் இரு இரு… இப்ப உங்களை எல்லாம் யாரு எம்.பி.ஏ படிக்க கூப்பிட்டது” என்றதும் ஷ்யாம் இருக்கையை விட்டே எழுந்து விட்டான்.

“உனக்கு அவ்ளோ தான் மரியாத… எங்களை விட்டுட்டு நீ சுடுகாட்டுக்கு கூட தனியா போக முடியாது. இதுல இவள் மட்டும் தனியா போய் பிஜி படிக்கிறாளாமே…”

“டேய் விஷால் இப்ப தான்டா ஆபிஸ்ல ஜாயின் பண்ணிருக்கான். நீங்களும் அவனோட சேர்ந்து ஹெல்ப் பண்றேன்னு உருட்டுனீங்களே” என்றதும், விஷால் “அது பரவாயில்ல. நான் பார்ட் டைமா ஆபிஸ் போய்க்கிறேன். வேர்எவர் யூ கோ. வி ஃபாலோ யூ!” என்றதில் தலையில் அடித்துக் கொண்டாள் இதயாம்ரிதா.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 49

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
61
+1
5
+1
3

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்