Loading

அத்தியாயம் 11

 

“ஏண்டா அந்த பொண்ணா வந்து லவ் சொல்லியும் அக்ஸப்ட் பண்ணலையா நீ”. 

 

“அது நடந்து ரெண்டு வருஷம் இருக்கும்டா. ஆனா அவள எனக்கு ரொம்ப பிடிக்கும்னு இங்க வந்தப்றம் புரிஞ்சுக்கிட்டேன், மறுபடியும் நா அவள இங்க பாப்பேன்னு நினைக்கல.”

 

“ஏன்டா குழப்புற?”.

 

“நா தெளிவா தான் இருக்கேன். உங்களுக்கு தான் புரியல. எனக்கு அவள புடிச்சிருக்கு, லைஃப் லாங் அவ கூட இருக்க தோணுது. அத இப்பவே அவகிட்ட ஒத்துக்கிட்டு அவள டைவர்ட் பண்ண வேணாம்னு இருக்கேன்”.

 

“என்னவோ அதுக்குள்ள அந்தப் பொண்ணு இவன் சரிப்பட்டு வர மாட்டான்னு முடிவ மாத்திக்காம இருந்தா சரி”. 

“இனி அவ மாத்திகரதா இருந்தாலும் விட்டுக் கொடுக்கிற ஐடியா எனக்கு இல்லை. கைக்குள்ளேயே வச்சு பத்திரமா பாத்துப்பேன்” என்றான் சீரியஸாகவே.

 

“என்ன ட்ரீட் வையின்னு கூட்டிட்டு வந்துட்டு, நீ பாட்டுக்கு கடல போட போய்ட்ட” லட்சு சொல்ல.

 

“ஹே அப்டி சொல்லாத அவ எல்லாத்துட்டயும் சோசியலா பழகுறா, தப்பா பேசாத” வைரம் சப்போட்டிற்கு வர. 

“உனக்கு தெரியுமா நீ பாத்தியா? அவ என்ன பாடு படுத்துவான்னு உனக்கு என்ன தெரியும்” லட்சு எகிறிக் கொண்டு அவனிடம் சண்டைக்கு கிளம்ப. அவன் திருதிருவென முழிக்க. கலகலவென சிரித்தாள் ஆறெழில்.

 

“பயந்துட்டியா?? ட்ரீட் வச்ச டென்ஷன்ல கத்துது பக்கி. நா ப்ரெசிடெண்ட்டுட்ட ப்ரொபோஸ் பண்ணிருக்கேன், ரிப்ளைக்காக வெயிட்டிங்” ௭ன்றாள் அவன் நண்பர்களிடம் சொன்னதயே இங்கயும்.

 

“ப்ரொபோஸ்லா” என நால்வரும் வாயை பிளக்க. 

“இதுக்கே வாய பிளந்தா எப்டி? 8த்ல சைட் அடிச்சு, 10த்ல ப்ரொபோஸ் பண்ணி, ரெண்டு வருஷம் தவமிருந்து இங்கேயும் அந்த அண்ணன பாலோவ் பண்ணி வந்துருக்கா” என்றாள் லட்சு.

 

எல்லோரும் ஆச்சரியமாய் பாக்க. “எப்டியும் உங்களுக்கு தெரிய தானே போகுதுன்னு இப்பவே சொல்லிட்டேன்” என்றாள் சேர்த்து மறுபடியும். 

“ரெம்ப தைரியம்தான் போ நம்பவே முடியல” என்றான் வைரம்.

 

“ஏது என்னைய பாத்தா பொய் சொல்றவாளாட்டம் தெரியுதா உனக்கு” ௭ன லட்சு மறுபடியும் டென்ஷனாக. 

“இல்ல, இல்ல, நா பொதுவா சொன்னேன்” ௭ன பம்மினான் வைரம்.

 

பேசியவாறே கேட் வரை வந்திருந்தனர்.

 

“சரி அவ ஒரு காரணமா வந்தா. நீ என்ன காரணமா கூடவே வந்த” நிலா கேட்க. 

“அது என் தலையெழுத்து” ௭ன்றாள் லட்சு. 

“அப்டி சுருக்கமா சொன்னா எப்டி, என் லவ்வுக்கு பிள்ளையார் சுழியே லட்சு தானே” என ஆறு ஆரம்பிக்க. 

“எனக்கு ஆட்டோ வந்துருச்சு நா கிளம்புறேன்” என டாட்டா காமித்து ஏறிவிட்டிருந்தாள் லட்சு. 

சிரித்துக்கொண்டே “நாளைக்கு வந்து சொல்றேன்” என தானும் அவளுடன் கிளம்பினாள் ஆறெழில்.

 

மறுநாளும் சீக்கிரமே வந்தாள், பைக் ஸ்டாண்டில் காத்திருந்தான் ப்ரகலத்தன். “குட் மார்னிங் ப்ரெசிடெண்ட்”, 

“குட் மார்னிங் மேடம். சாப்டியா? சீக்கிரம் கிளம்பியிருப்பியே?”.

 

“ஆச்சு, அம்மா இட்லி ஊட்டி விட்டுட்டாங்க”. 

“என்ன சொல்லி சீக்கிரமா கிளம்புன?”. 

“ப்ரெசிடெண்ட் வர சொன்னாங்கம்மா. என்ன விஷயம்ன்னு தெரியலன்னு சொன்னேன்”. 

“ஆண்ட்டி ஒன்னுமே சொல்லலையா?” ௭ன சிரித்தவாறு கேட்க.

 

“நல்ல புள்ளையாட்டம் தெரியுது. துடுக்குத் தனமா ஏதாது பேசாம, ஹெல்ப் ஏதும் கேட்டா செஞ்சு குடுன்னு சொன்னாங்க”. 

“கண்டிப்பா அவுங்க நம்பிக்கையை காப்பாத்துவேன்ன்னு நா சொன்னதா சொல்லிடு”. 

“என்ன பாத்தா மெசேஜ் டிரன்ஸ்ஃபர் பண்ற போஸ்ட் மேனாட்டமா தெரியுது. 9xxxxxxxxx நம்பருக்கு கால் பண்ணி நீங்களே சொல்லிடுங்க” என்றாள்.

 

உடனே கால் செய்துவிட்டான் அந்த ௭ண்ணிற்கு. “ஹலோ ஆண்ட்டி எப்டி இருக்கீங்க. நா ஃபைன். பிரெஷர்ஸ் மீட்  இருக்கு அதப் பத்தி பேச தான் ௭ழில வர சொன்னேன்” ௭ன சொல்லி முடிக்க. அந்த பக்கம் என்ன சொல்லப்பட்டதோ, “தேங்க்ஸ் ஆண்ட்டி” என வைத்தான்.

 

“பிரெஷர்ஸ் மீட்ல நாங்க என்ன பண்ணனும்” என்றாள் நேராகவே. 

“எது வேணா பண்ணு, பட் டிஃபரன்டா பண்ணு லாஸ்ட் இயர் வரைக்கும் அப்பதான் உன் நேம் நிக்கும்”.

 

“என்ன பண்ணலாம்?” என அவள் யோசிக்க. 

“உனக்கு எது நல்லா வருமோ அதப் பண்ணு”.

 

சிறிது யோசனைக்கு பின், “ட்ராமா போடட்டுமா?” ௭ன்றாள். 

“ட்ராமாவா? ஓ.கே, பட் அதுக்கு டீம் வேணுமே?”.

 

“ஆமா அதான் நாங்க 5பேர் இருக்கமே”. 

“எல்லோருக்கும் நடிக்க வரணும், இன்டர்ஸ்ட் வேணும் ௭ழில்”.

 

“ப்ராக்டிஸ் பண்ணிக்கலாம் பிரசிடென்ட்”. 

“டைம் வேணும், 1 வீக் தான இருக்கு”. 

“அதெல்லாம் பண்ணிடலாம் ப்ரசிடென்ட்”.

 

“சரி எல்லார்டயும் கேளு டிராமா ஓ.கேயான்னு, ஏதாவது கான்சப்ட் யோசிச்சு முடிவு பண்ணிட்டு சொல்லுங்க”.

 

“அது மட்டும் நீங்க சொல்லுங்களேன்”. 

“சரி நீயும் யோசி, நானும் யோசிக்கிறேன். ஈவினிங் டிசைட் பண்ணலாம்” ௭ன முடிவுக்கு வந்தனர்.

 

“சரி அப்றம் நம்ம லைஃப் பத்தி என்ன டிசைட் பண்ணிருக்கீங்க?” என்க.

 

ஒரு புருவத்தை ஏற்றி பார்த்தான், “அதையும் நல்லா யோசிச்சுட்டு சொல்றேன். கிளம்பு கிளாசுக்கு டைம் ஆகிட்டு”. 

“ம்க்கும் அத மட்டும் சொல்லிடாதீங்க” என்றுவிட்டு எழுந்து செல்ல. சிரித்தவாறே தானும் எழுந்து சென்றான்.

 

இவளும் வகுப்பில் சென்று அவளுக்கு நெருக்கமான ஐவரிடமும் கேக்க, எல்லாருமே நாடகத்திற்கே ஆர்வமாக ஒத்துக்கொண்டனர். ஆளுக்கு ஒரு ஐடியா கூட சொன்னர். ஆனால் எதுவுமே திருப்தியாக இருக்கவில்லை. ஈவினிங் எல்லோருமாகவே ப்ரகலத்தனை காண வர, “யோசிச்சீங்களா? ஏதாவது ஐடியா கிடைச்சதா?” என்றான் அவன்.

 

அங்கேயும் அடுத்து டிஸ்கஷன் பண்ண ஆரம்பிக்க, “நல்லதங்கா ஸ்டோரி எடுத்து நடிக்கிறீங்களா?” ௭ன்றான் ப்ரகலத்தன்.

 

“ஹான் அது யாரு?” ௭ன்றனர் நால்வரும்.

 

“இப்டித்தான் நிறைய பேருக்கு அந்த கத தெரியாம இருக்கும். நீங்க சொல்றத/ நடிக்கிறத ஆர்வமா பாக்க வாய்ப்பிருக்கு” என்றான்.

 

“ப்ரெசிடெண்ட் என்னடி நம்மள சீரியஸா நடிக்க வச்சு ஆஸ்கார் வாங்கி கொடுக்க போற மாதிரி பேசுறாரு” லட்சு முணுமுணுக்க.

 

“என் ஆளு சொன்னா சரியா இருக்கும்டி. மூடிட்டு நில்லு” என ஆறு எகிற. 

“உன்ட்ட போய் கேட்டேன் பாரு” என அவள் திரும்பி கொள்ள.

 

“ஓகேவா? இல்லையா?” ப்ரகலத்தன் முடிவு கேட்க. 

“டேய் காமெடியா ஏதாவது பண்ணாம, என்னடா இது?” அவர்கள் முழிப்பதை பாத்து மூர்த்தி சொல்ல.

 

“காமெடியா நிறைய பேர் நிறையா பண்றாங்க”. 

“சரி விடு, நீ முடிவு பண்ணிட்ட, நடத்து” என்று விட்டான் அவனும்.

 

“நீங்க என்ன சொல்றீங்க” என அவர்களிடம்  மறுபடியும் கேட்க. 

“உங்க பேச்ச மீற முடியுமா சீனியர்? இல்ல மீறதான் விட்டுருவாளா?” என்றாள் லட்சு. 

“அப்போ ஓகே நாளைக்கு மார்னிங் 8க்கு வந்திடுங்க. ஸ்கிரிப்ட், டயலாக் எல்லாருமே எழுதி எடுத்துட்டு வாங்க. நம்ம தேவைக்கு ஸ்கிரிப்ட் ௭டிட் பண்ணிக்கலாம்” என்றான்.

 

“எட்டு மணிக்கேவா” என லட்சு வாயை பிளக்க. 

“ஏன் 9 மணிவர தூங்குவியோ?” என்றான் வைரம்.

 

“ஆமான்னு சொன்னா? நீ எழுப்பி விடுறேன்கிறியா?”. 

“கண்டிப்பா எழுப்பி விடுறேன். உங்க அப்பா நம்பர் மட்டும் குடு, போன் போட்டுறேன்” என்றான்.

 

“எங்க அப்பா அசிங்கசிங்கமா கேப்பார் பரவாயில்லயா?” என்க. 

“எங்கப்பாவ விடயா?” ௭ன பேசிக்கொண்டு அவர்கள் அப்படியே நடந்து விட, 

“இதுங்க போக்கே சரியில்ல ப்ரெசிடெண்ட்” என்றாள் ஆறெழிலில் சென்றவர்களை பார்த்து.

 

“புதுசா நீ ஏதாவது கிளப்பிவிடாம வந்து சேரு. நா ஆண்ட்டிக்கு போன் பண்ணிடுறேன்”. 

“சரிங்க ப்ரெசிடெண்ட்” என சிரித்தவாறே கிளம்பினாள்.

 

நல்லதங்காளாக ஆறெழில், நல்லதம்பியாக வைரம், அவர்களின் பெற்றோர்களாக மற்ற இருவரை, 2, 3 சீன் நடிக்க வைத்தனர். வைரத்தின் மனைவியாக லட்சு (மூழி அலங்காரி வில்லி), ஆறெழில் கணவனாக தாணுவும், 7 பிள்ளைகளாக நடிக்க இதர நண்பர்களை சேர்த்துக் கொண்டனர். டயலாக், ஸ்கிரிப்ட் எல்லாம் ரெடி செய்தனர். மேற்பார்வை மட்டுமே பார்த்தான் ப்ரகலத்தன். எல்லோருமே இஷ்டப்பட்டு, ஆர்வமாய் நடித்து பழகினர், டயலாக் மனப்பாடம் செய்தனர். 1 வாரம் அதில் தான் சென்றது.

 

லட்சு, “இதுல நா நடிக்க மாட்டேன், எனக்கு வேற கேரக்டர் குடுங்க” என அழுதவளை, பேசி பேசியே கரைத்து வழிக்கு கொண்டு வந்தனர். நாளை நிகழ்ச்சி என்ற நிலையில் அவர்கள் நடிப்பதற்காக ஏற்பாடாகியிருந்த ப்ராப்பர்டிஸ் அடங்கிய பையை காணவில்லை. ப்ரகலத்தனின் வகுப்பு தோழி, அதை எடுத்துச் சென்றிருந்தாள். அது மட்டுமில்லாமல்  ட்ராமாகாக அவர்கள் இருவரும் சேர்ந்து இருப்பதை, ஒர்க் பண்ணும் சமயங்களை பயன்படுத்தி போட்டோ எடுத்து ஃபஸ்ட் இயர் ஸ்டாப்ஸிற்கும் அனுப்பியிருந்தாள்.

 

பங்க்ஷன் அன்று காலையில் சீக்கிரமே ஆஜராகி ஆளாளுக்கு ப்ராபர்டீஸை தேடிக்கொண்டிருக்க “ஆக்சுவலா கடைசி நிமிஷம் வர அது வேணும், இது வேணும்னு தேடிட்டு இருக்க கூடாதுன்னு தான் நேத்தே மொத்த ப்ராபர்டிஸ்ஸயும் கொண்டு வந்து இங்க வைக்க சொன்னேன். நல்லா ஞாபகபடுத்தி பாருங்க இங்க கொண்டு வந்து வச்சப்புறம் யாரும் திரும்பி எடுத்தீங்களா?” என்றான் ப்ரகலத்தன்.

 

“இல்ல நேத்து ஈவினிங் ஒருக்கா பிராக்டிஸ் பண்ணிட்டு கழட்டி வச்சுட்டு போனது தான் அடுத்து இப்பதான் சீனியர் வறோம்” தாணு சொல்ல.

 

ப்ரகலத்தன் ஆறெழிலை நிமிடத்திற்கு ஒரு முறை பார்த்துக்கொண்டான், அழுது விடக்கூடாதே என்றெண்ணி.

 

ஆனால் அவள் நிதானமாகவே இருந்தாள். “சரி சீக்கிரம் தேடுங்க, ௭னக்கு ஸ்டேஜ் நியர் நிக்கணும், அங்க டெக்கரேஷன் முழுசா முடிக்கணும். டைம் போயிட்டுருக்கு வேற என்ன பண்ணலாம்னாது யோசிங்க?” என்க.

 

“அதே செட்டு, சேம் ப்ராப்பர்ட்டி தானே அல்ரெடி வாங்கின கடையில கேட்டு பாக்கலாமா??” நிலா சொல்ல.

 

“௭ன்ன விளையாடுறியா?.  தொலைச்சத வாண்டடா போய் சொன்னமாறி ஆகிடும். அவேன்கிட்ட மாட்டி, ப்ராப்பர்ட்டிக்கு இப்ப பதில் சொல்ல ஆரம்பிச்சாலும், அவன்ட்ட இருந்து தப்பிச்சு வாரதுகுள்ள பங்க்ஷனே முடிஞ்சிடும். வேற ஐடியா பண்ணி பங்க்ஷன் முடிச்சுட்டு, நிதானமா நேர்ல பாத்து பேசி சமாதான பண்ணி, தொலச்ச பொருளுக்கு டிஸ்கவுண்ட் கேட்டு பாக்கணும், பைசல் பண்ணனும்” ப்ரகலத்தன் சொல்ல.

 

“ஐயோ ௭க்ஸ்டரா காசா?? எவ்வளவு ஆகுமோ? எங்க அப்பா என்ன சொல்வாறோ?” லட்சு புலம்ப.

 

“அப்ப வேறன்ன பண்ண? பக்கத்துலயே வேற ப்ராப்பர்ட்டி கடைல கேட்டு பாக்கலாம், இங்கயே நின்னு டைம் வேஸ்ட் பண்ண வேணாம்” ௭ன ௭ல்லாருமாக ஒரு முடிவுக்கு வர.

 

அந்நேரம் இவர்களுக்கென மேக்கப் பண்ண அரேஞ்சு பண்ணியிருந்த பியூட்டிசியன் வந்துவிட, அவர்களை அழைத்து வந்த மூர்த்தி “சேல கட்ட ஆள் வந்தாச்சு, கட்டுறதுக்கு சேலை தான் இல்ல, இன்ன லட்சு” ௭ன்க.

 

“ம்க்கும்” ௭ன்றாள் லட்சு.

 

“சும்மா இருடா, இருக்க டென்சன்ல நீ வேற. நீ என்ன எழில் எதுவுமே சொல்லாம இருக்க” என்றான் ப்ரகலத்தன்.

 

“இப்பதான தெரியுது, உன் டென்ஷன் எதனாலன்னு?” மறுபடியும் மூர்த்தி சொல்ல. எல்லோரும் சிரித்து கொஞ்சம் இயல்பாகினர்.

 

“எனக்கும் தெரியல ப்ரெசிடெண்ட். ஈவினிங்குள்ள எல்லாம் கிடைக்கணும். இத யாரு எடுத்திருப்பா? எங்க போயிருக்கும்” ஆறு கேக்க.

 

“அத அப்புறமா கண்டுபிடிக்கலாம். இப்ப இதுக்கு என்ன வழி?” நிலா கேக்க.

 

“பேசிட்டு இருந்தா பேசிட்டே இருக்க வேண்டியதுதான். ஆல்ரெடி வாங்குன ப்ராபர்டீஸ் லிஸ்ட் என்கிட்ட இருக்கு. அவங்களாம் மேக்கப் பண்ணி ரெடி ஆகட்டும். நீங்க மூணு பேரும் இங்கப் பக்கத்துல கிடைக்குற ப்ராடைக்ட்ஸ முதல்ல வாங்கிட்டு வந்து குடுங்க. ஆளுக்கு பாதி வேலையா பிரிச்சு செய்ங்க. சீக்கிரம் முடிக்கணும்” என்ற ப்ரகலத்தன், நாது, மூர்த்தி, அகத்தியன் மூவரையும் ப்ராபர்டீஸ் தேட அனுப்பிவிட்டான்.

 

 

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 25

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
22
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்