Loading

 

அத்தியாயம் 10

 

“குட் கேரெக்டர். ஃபேமிலி மெம்பர்ஸும் நல்லங்கதான்னு சொன்னாங்க!” என சரணைப் பற்றி தான் அறிந்ததை ஆறே வார்த்தைகளில் சொல்லி முடித்தாள் மௌனிகா.

மெலிதாய்ப் புன்னகைத்த ஆடவன், “இவ்வளவு போதுமா, ஒருத்தரை பத்தின முடிவுக்கு வர?”

“இட்ஸ் ஜெஸ்ட் நாட் எனெஃப். பட், அதைச் சொன்னது என்னோட ஆச்சி. நான் அவங்களோட அனுபவத்தையும் கணிப்பையும் நம்புறேன்.”

“ம்ம்..” எனத் தலை அசைத்தவன், “இப்ப நான் சொல்லுறேன் என்னை பத்தி..”

அவள் புரியாது பார்க்க, “எனக்குச் சட்டுனு கோபம் வந்திடும் மௌனிகா. மரியாதைக் குறைவான ஒரு சின்ன வார்த்தையைக் கூட பொறுத்துக்க முடியாது!”

“ஓகே..”

“உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும், என்னோட அப்பா இப்ப இல்ல. நான் காலேஜ் செகண்ட் இயர்ல இருக்கும் போது, ஜாண்டீஸ் வந்து இறந்துட்டாரு. தப்பு எங்க மேல தான். ஆரம்பத்துலயே டெஸ்ட் பண்ணி பார்த்து, கரெக்டான டிரீட்மெண்ட் கொடுத்திருந்தா நிச்சயம் காப்பாத்தி இருக்கலாம். ஆனா ஃபைனல் ஸ்டேஜ்ல தான் கண்டுபிடிச்சோம்.

அப்பா போன பின்னாடி, அம்மா தான் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டாங்க. ஆனா, அவங்களுக்கு வெளி உலகத்தைப் பத்தின புரிதல் அவ்வளவா கிடையாது. உரியவன் இருந்து பார்க்கலேனா எதுவும் மிஞ்சாதுனு சொல்லுவாங்க. சோ.. அப்பா இடத்துல இருந்து நானே எல்லாத்தையும் பார்க்க ஆரம்பிச்சேன்.

அம்மா, தம்பி, தங்கச்சி எல்லாரும் இப்ப என்னைச் சார்ந்து தான் இருக்காங்க. சோ.. என் ஃபேமிலி சுச்சுவேஷன் என்னனு புரியும்னு நினைக்கிறேன்.”

தலை அசைத்தாள் அவள்.

“கல்யாணம்ங்கிறது சாதாரண விஷயம் இல்ல. வாழ்க்கையோட புது அத்தியாயம். அது சரியான விதத்துல அமையலேனா, கஷ்டம் தான். நான் அந்த கஷ்டத்தை அனுபவிக்க தயாரா இல்ல.

நான் முதல்ல ஓகே சொல்ல அம்மா தான் காரணம். எனக்கு ஸ்டார்ட்டிங்ல இருந்தே லாவண்யாவைக் கல்யாணம் செஞ்சுக்கிறதுல அவ்வளவா உடன்பாடு இல்ல. பெருசா காரணம்னு இல்ல. பார்த்துப் பேசுன வரைக்கும், மெச்சூரிட்டி இல்ல அந்தப் பொண்ணுக்கிட்ட. சரி, பின்னாடி சரி பண்ணிக்கலாம்னு நினைச்சிருந்தேன். ஆனா, அதுக்குள்ள என் சிஸ்டரைப் பேசி, என்னோட எண்ணத்தை மாத்த வச்சிட்டாங்க.”

அவள் இடையே நுழைந்து எதுவும் கேட்காது சொல்லாது, சரண் பேசுவதற்கான நேரத்தை வழங்கினாள்.

“உஃப்..’ என வாய் வழியாய் ஒரு நீண்ட மூச்சை வெளிவிட்டவன், என் தங்கச்சி ரோகிணியைப் பத்தி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரியும்னு தெரியல. அவளால கேட்க முடியாது. பிறந்ததுல இருந்தே அப்படித்தான். டிரீட்மெண்ட் கொடுத்துப் பார்த்தோம். பட், அவளோட காது நரம்புகள் ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கு. இனி கேட்கிறதுக்கு வாய்ப்பே இல்லனு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க. தம்பி விமல். காலேஜ் போறான்.

ரொம்ப பெருசா இல்லனாலும், சொல்லிக்கிற அளவுக்கு கொஞ்சம் வசதியான ஃபேமிலி தான்.”

மெலிதாய்ப் புன்னகைத்தவள், “இவ்வளவு டீட்டெயிலா சொல்லுறீங்கனா, உங்களுக்கு இந்த மேரேஜ்ல இண்ட்ரெஸ்ட் இருக்குனு தான் அர்த்தம். ஆம் ஐ கரெக்ட்.?”

“எஸ்..”

“நான் ஒரு விஷயம் கேட்கலாமா.?”

“ஸுயர்.”

“வொய் மீ.?”

“மொபைல்ல நீங்க என்னோட அம்மாக்கிட்டயும் சித்திக்கிட்டயும் பேசினதை கேட்டேன். ஐ ஃபீல் யூ ஆர் ஸ்ட்ராங் அண்ட் போல்ட் பர்ஷன். சைல்டிஸா பிகேவ் பண்ணல. சோ..”

“ஓகே.. இப்ப நான் என்னைப் பத்திச் சொல்லுறேன்.”

அவன் தலை அசைக்க, “எனக்குப் பத்து வயசு இருக்கும் போது அம்மா அப்பா ரெண்டு பேருமே ஆக்ஸிடெண்ட்ல இறந்துட்டாங்க. அப்பா சென்னையில ஒர்க் பண்ணதால, அங்கதான் இருந்தோம். அவங்களுக்குப் பின்னாடி, ஆச்சி என்னைக் கோவில் பட்டிக்குக் கூட்டிட்டு வந்தாங்க. இங்க என்னால கம்ஃபர்டபுளா இருக்க முடியல. சோ, அம்மாவோட பேரண்ட்ஸ் கூட கிளம்பிப் போயிட்டேன். ஆச்சி மட்டும் அப்பப்ப வந்து பார்ப்பாங்க. எப்பவுமே அவங்க எனக்கு ஸ்பெஷல் தான். ஆச்சிக்காக மட்டும் தான், இங்க வந்து போறேன். அம்மாவோட பேரண்ட்ஸும் வயசாகிட்டதால ஒருத்தருக்கு அடுத்து ஒருத்தர்னு..” என வலிந்து புன்னகைத்தாள்.

சரண் அமைதியாய் பார்த்திருக்க, “ஃபோர் இயர்ஸா நான் தனியா தான் இருக்கேன். சில ஃப்ரெண்ட்ஸ், ஹொலிக்ஸ், என்னோட வேலைனு லைஃப் போகுது.”

“வேற எதுவும் சொல்லணுமா மௌனிகா.?”

“இல்ல..” என நொடி இடைவெளி விட்டவள், “ஒருவேளை நமக்கு கல்யாணம் ஆனா, என்னால இங்க வந்து வீட்டுக்குள்ள உட்கார்ந்து இருக்க முடியாது.”

“லாங் டிஸ்டண்ஸ் ரிலேஷன்ஸிப் பத்தி என்ன நினைக்கிறீங்க?”

அவள் விழித்து, “ஹான்.?”

“எனக்கு என்னமோ பெட்டரா இருக்கும்னு தோணுது. நாம ரெண்டு பேருமே கொஞ்சம் ஸ்ட்ரைட் ஃபார்வேர்ட் பர்ஷனா இருக்கிறதால, கூடவே இருந்தா பிரச்சனைகள் வர வாய்ப்பு இருக்கு.”

காரணம் இன்றி புன்னகை மலர்ந்தது பாவையின் இதழ்களில்.

“வொய் டூ யூ திங்க் தேட்.?”

“தெரியல. தோணுச்சு. நீயா நானானு ஆர்க்யூ வரலாம். நான் நினைக்கிறது தான் சரினு, ரெண்டு பேருமே அதை நிரூபிக்க முயற்சி செஞ்சா.?”

“ஸுயரா பிராப்ளம் வரும்.” என அவன் பாதியில் நிறுத்தியதை, முழுதாய் உரைத்து முடித்தாள் மௌனிகா.

“லாங் டிஸ்டண்ஸ் ரிலேஷன்ஸிப்ல ஆர்கியூ பண்ணுறதுக்கான சான்ஸ் கம்மி. அண்ட்.. சரியான இடைவெளியும் காத்திருப்பும் எப்பவும் உறவை நல்ல விதமா கொண்டு போக ஹெல்ப் பண்ணும்.”

“ம்ம்.. பட், ஒருத்தர் என்ன செய்யிறாங்கனு மத்தவங்களுக்குத் தெரியாதே? நீங்கதான சொன்னீங்க, ஃபோன்ல எவ்வளவு பேசினாலும் அந்த குரலுக்கு பின்னாடி இருக்கிற உண்மை என்னனு முழுசா தெரிஞ்சுக்க முடியாதுனு. அப்படி இருக்கும் போது எப்படி..?”

“எந்த ஒரு உறவுக்கும் நம்பிக்கை ரொம்ப முக்கியம். அந்த அஸ்திவாரத்தை ஸ்ட்ராங்கா போட்டுட்டா, அதுக்கு மேல பில்ட் பண்ணுறது ரொம்ப ஈஸி. ஒருத்தருக்கு ஒருத்தர் உண்மையா இருந்தா போதும். உங்களால முடியுமா.?”

‘தன் வரையில், தான் சரி!’ என்ற உறுதியோடு அவன் பேசுவது மௌனியை வெகுவாய் ஈர்க்க, “பதிலை சொல்லுறதுக்கு முன்னாடி, எனக்கு ஒரு விஷயம் செய்யணுமே?”

“என்ன மௌனிகா?”

“உங்க வீட்டைப் பார்க்கணும்.”

வியப்புடன் நோக்கியவன், “வாட்.?”

“ஏன்? முடியாதா?”

“நோ.. நோ.. நான் அப்படிச் சொல்லல. பொதுவா, மேரேஜுக்கு முன்னாடி பொண்ணை மாப்பிள்ளை வீட்டுக்கு விட மாட்டாங்க. அதான் யோசிச்சேன்.”

“இன்னும் முடிவாகலயே மிஸ்டர் சரண். ஜெஸ்ட், ஃப்ரெண்ட்லி மீட்டிங்கா.?”

தான் உரைத்ததை தன்னிடமே அவள் மீண்டும் சொல்வதை கேட்டு, லேசான புன்னகை மலர்ந்தது. ஆனால் அவனின் உணர்விற்கு அப்படியே நேர் எதிராய் குழப்பத்தை சுமந்து இருந்தது பாவையின் உடல்மொழி.

என்னவென்று சொல்ல இயலாத சுழலிற்குள் சிக்கித் தவிப்பது போலான அவளின் முகத்தைக் கண்டவன், “ஓகே. போகலாம்.”

புரியாது நோக்கியவள், “இப்பவா.?”

“எஸ்.. எதுக்குத் தள்ளிப் போடணும்.?”

புன்னகைத்துத் தலை அசைத்தவள் இருக்கையில் இருந்து எழ, அழைத்துச் சென்றான் சரண்.

அவனது நான்கு சக்கர வாகனத்தில் இருவரும் கிளம்பினர்.

திறவுகோலை பொருத்தி இயக்கியவனிடம், “வீட்டுல யார்க்கிட்டயும் சொல்ல வேண்டாம்.” என்றாள் மௌனி.

முன்பே தெரிந்தால் குடும்பத்தார் மறுப்பு சொல்லக்கூடும் என்று, அவனுமே அதே எண்ணத்தில் தான் இருந்தான்.

“ஓகே.” என்றவன் சாலையில் கவனத்தைப் பதிக்க, அடுத்த முப்பத்திரண்டு நிமிடங்களில் இருவரும் அவனது இல்லத்தின் முன்பு நின்றிருந்தனர்.

“வாங்க..” என அவள் இறங்கி வரும் வரை நின்று, உடன் இணைந்து அழைத்துச் சென்றான்.

“வசந்தி என்ன ஆச்சு.?” எனக் கூடத்தில் அமர்ந்து காய்களை வெட்டிக் கொண்டிருந்த பாகீரதி குரல் கொடுக்க, “என்ன குக்கர் வச்சிருக்க? புஸ்ஸு புஸ்ஸுனு இன்னும் சத்தம் போட்டுக்கிட்டு இருக்கு.” என்றபடி வந்தார் அவர்.

“சரி சரி, கொஞ்சம் பொறுமையா தான் இரேன். நீ பாட்டுக்கு திறந்துடாத, எல்லாம் மேல சிதறிடும்.”

“அம்மாடி நான் அப்படிச் செய்வேனா? அப்புறம் யாரு அந்த வேதனையை அனுபவிக்கிறது?”

மூத்தவர் சிரிக்க, “குக்கரோட இரப்பர் சரியில்லனு நினைக்கிறேன் அக்கா. மாத்திப் பாரு.”

“ம்ம்.. சரணுக்கு ஃபோன் போடு. வர்றப்ப வாங்கிட்டு வந்துடுவான்!” என்றிட, தமக்கை மகனிற்கு அழைத்தார் வசந்தி.

வாயிலில் கேட்ட ஒலியில் சகோதரிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அத்திசையில் திரும்ப, கைப்பேசியை கையில் எடுத்தபடி உள்ளே வந்தான் அவன்.

“என்ன சரண், இந்நேரத்துக்கு வந்திருக்க?” என வினவிய வசந்தி, அவனிற்குப் பின்னால் இருந்து வெளிப்பட்ட பெண்ணைப் புரியாது பார்த்தார்.

அனிச்சையாய் எழுந்தவர் அவர்களை நோக்கி கால்களை எட்டு வைத்தவாறே, “யாரு இது.?” என்று வினவிட,  “நீ என்னம்மா இங்க?” எனப் புன்னகையுடன் கேட்டபடி அவர்களின் அருகே வந்தார் பாகீரதி.

தமக்கையின் வார்த்தையில் நிதானித்த வசந்தி, “யாரு அக்கா இந்த பொண்ணு?”

“மௌனிகா, நேத்து ஃபோன்ல பேசுனோமே?”

தலை முதல் கால் வரை பார்த்தவர், “அந்தப் பொண்ணா.? நீ சொன்னதை வச்சு, நான் என்னென்னமோ நினைச்சு இருந்தேனே அக்கா.?”

“நீ நினைச்சதை விட, என்ன குறைவா இருக்கு.?”

“குறைவுனு நான் சொல்லலையே? பையன் மாதிரி பேண்ட் சட்டை போடாம, வேற ஏதாவது துணி போட்டு இருக்கலாம்ல ம்மா.?” என மனதில் தோன்றியதை மறைக்காது அவளிடமே கேட்டு விட்டார் வசந்தி.

மௌனி பதில் சொல்லாது புன்னகைக்க, “இது அநாகரீகம் சித்தி!” என்றான் சரண்.

“ஏண்டா, இப்ப என்ன நான் தப்பா சொல்லிட்டேன்? அநியாயம், அநாகரீகம்னு பாடம் சொல்லுற?”

“டிரஸ் போடுறது அவங்கவங்க தனிப்பட்ட விஷயம். அதுல தலையிடுறது சரியில்ல. கண்ணை உறுத்தாம எந்த டிரஸ் போட்டாலும் ஓகேதான்.”

“போடா.. பெரிசா கருத்து சொல்ல வந்துட்டான்.”

“அதுசரி! நீங்க முதல்ல, வீட்டுக்கு வந்த பொண்ணை முறையா வானு கூப்பிட்டீங்களா? அதை விட்டுட்டு வாசல்லயே வச்சு கதை அளந்துக்கிட்டு இருக்கீங்க?”

“ச்சோ.. மறந்துட்டேன் பாரு. வாம்மா..” என்றவர் தமக்கையின் பக்கம் திரும்பி, “என்னக்கா நீயும் எனக்கு என்னனு அப்படியே நிக்கிற.?”

தெளிவில்லாத முகத்துடன், “வாம்மா.” என்று வரவேற்ற பாகீரதி, விடைக்காக மகனை நோக்கினார்.

“ஜெஸ்ட் ஃப்ரெண்ட்லியா வீட்டுக்கு இன்வைட் பண்ணேன். நீங்களா எந்த முடிவுக்கும் வராதீங்க, என்ன?” என்று சற்று கண்டிப்புடனே உரைத்தவன், “ரோகியும் விமலும் எங்க?”

“சின்னவ ரூம்ல இருக்கா. உன் தம்பிக்காரன் தான், ஏதோ ஃப்ரெண்ட்ஸைப் பார்க்கிறேன்னு வெளிய போயிட்டான்.”

“சரி சித்தி.. ரோகியைக் கூட்டிட்டு வாங்க.” என்றுவிட்டு, “வாங்க மௌனிகா.” என வீட்டிற்குள் அழைத்துச் சென்றான்.

சுற்றிலும் ஒருமுறை பார்த்தவளின் கண்கள் மாடிப்படியின் மீது பதிய, சிற்றன்னையிடம் பேசிய படியே  கீழே இறங்கி வந்தாள் ரோகிணி.

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 20

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
19
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment