Loading

அத்தியாயம் 10

 

ஆனால் இவன் ஏற்கனவே “நா எங்கேஜ்ட்” ௭ன சொல்லி வைத்திருந்த பெண்கள் இவர்களின் செய்கையை கண்டு விட்டு, ‘இந்த பெண்தான் ப்ரகலத்தனின் லவ்வர். அதனால்தான் இங்கேயே சேர்ந்து இருக்கிறாள்’ என முடிவு செய்து, தெரிந்தவர்களுக்கெல்லாம் அதை ஒரு குரூப் மெசேஜ்ஜாக பார்வேர்ட் செய்து விட்டிருந்தனர். இது எதுவும் அறியாமலேயே இருவரும் அன்று கல்லூரி முடித்து, யோசனையுடன் ப்ரகலத்தனும், கவலையுடன் ஆறெழிலும் கிளம்பினர்.

 

மறுநாள் , சற்று சீக்கிரமாக கல்லூரி கிளம்பி வந்தாள் ஆறெழில். அவள் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் தானும் சீக்கிரம் வந்து ஒரு பெஞ்சில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தான் ப்ரகலத்தன். அவனை கண்டதும், வேகமாக ஓடி, இழைக்க இழைக்க அவன் முன் சென்று நின்றாள்.

 

“என்ன நாய் தொறத்துதா?” என்றான் அவன், அவள் பின்னாடி ௭ட்டி பார்த்து, 

“நக்கலா” என பேக்கை கழட்டிவிட்டு, அவன் அருகில் சற்று தள்ளி அமர்ந்தாள்.

 

“எனக்குத்தான் ரெண்டு வருஷமா பாக்காததுனால அப்படித் தோணுதா? இல்ல காலேஜ் போறதுக்காக பட்டிங், டிங்கரிங்லா பண்ணி அழகாகிட்டியா?” என்றான் சைடாகத் திரும்பி பார்த்து.

 

“ஹலோ நா எப்பவுமே அழகுதான். அப்ப நீங்க பாத்த பார்வை வேற, இப்ப பாக்குற பார்வ வேறயா இருக்கலாம்?” ௭ன்றாள் அவன் கண்ணையே பார்த்து.

 

“ஓ!! அத அப்படியும் சொல்லலாமோ? ஆனா எந்த வித்தியாசமும் என்கிட்ட வந்த மாதிரி இல்லயே” என்க.

 

“ஆமாவா? வரலியா? அப்ப எதுக்காக இவ்வளவு சீக்கிரமா வந்து உக்காந்திருங்கீங்க?”. 

“நா தினமும் இப்டி இந்த டைமுக்கு தான் வருவேன்” என்றான் சிரிப்பை வெளிக்காட்டாமல், தனக்காக வந்திருக்கிறான் என சந்தோஷத்திலேயே அரக்கப் பறக்க ஓடி வந்து அவன் முன் நின்றாள். இப்போது அது சப்பென்று ஆகிவிட, அமைதியாக குனிந்து கொண்டாள்.

 

“இந்த பிளாக் டிரஸ்ல நீ சிரிச்ச முகமா இருந்தா தான் ரொம்ப அழகா தெரியுற” என்றான். 

“ரொம்ப பிலிர்ட் பண்ணுறீங்க. குறைச்சுக்கோங்க” ௭ன்றாள் அவனை பழிவாங்கும் ௭ண்ணத்தில்.

 

“அடிப்பாவி அழகா இருக்கன்னு சொன்னதுக்கா?”. 

“ம்ம், அத திரும்பத் திரும்ப சொல்றதுக்கு” என சிரிக்க.

 

“பாத்தியா இப்பத்தான் ரொம்ப அம்சமா இருக்க. சரி சொல்லு நேத்து என்ன சொன்ன?. ஏன் சோகமா கிளம்பி போன? க்ளாஸ்ல யாரும் ஏதும் சொன்னாங்களா?” என்க.

 

“என்ன யாரு என்ன ப்ரெசிடெண்ட் சொல்லப் போறாங்க. உங்கள தான் தேடுனே. காலைலயும் பாக்க முடியல, லஞ்ச்சுலயும் பாக்க முடியல, உங்க ப்ளாக் ௭ங்கன்னு யார்டயும் விசாரிக்க யோசனையா இருந்தது. யாரும் யாரமா பாக்கணும்ன்னு கேட்டா, அதான் கேக்கல. பாக்க முடியலன்னு கஷ்டமா இருந்துச்சு” என வெளிப்படையாகவே சொல்ல.

 

“இங்க தானே இருக்கப் போற, நேத்து ஒரு நாள் தான ஆகியிருக்கு. ஓவர் ரியாக்ட் பண்ணி படிப்ப கெடுத்துக்காம இரு. உன் அம்மா ரொம்ப ஹோப் வச்சிருக்காங்க உன் மேல, அத நீ எந்த வகையிலும் ஸ்பாயில் பண்றத நா அல்லோவ்  பண்ண மாட்டேன். உனக்கு இன்னமும் நிறைய டைம் இருக்கு. இப்டி சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் பெருசா ரியாக்ட் பண்ணாத புரியுதா?” என்றான்.

 

“சரிங்க ப்ரெசிடெண்ட்” ௭ன்றவள், பின் தயக்கத்துடன்  “என் டிசிஷன் பத்தியே பேசறீங்க நீங்க என்ன டிசைட் பண்ணி இருக்கீங்க” ௭ன்றாள்.

 

“எனக்குமே இன்னும் டைம் இருக்கு பீ ஃபிராங்க், உன்ன திரும்ப இங்க பாத்ததுல எனக்கு ரொம்பவே சந்தோசமா இருந்தது. அதுக்கு மேல மத்தத நாம இப்ப யோசிக்க வேண்டாம். கெரியர் நோக்கி மூவ் பண்ணுவோம் மத்தது தன்னால நடக்கும் பாத்துக்லாம்” என்றான்.

 

“பாத்துக்லாமே” என ராகம் பாடியவள், “அப்புறம்” என்க. 

“அப்புறம் நீ உன் கிளாசுக்கு போற, நா என் கிளாஸ்க்கு போறேன், கெட்டப்” என்றான்.

 

“அவ்வளவு தானா? ” ௭ன்றாள், ” 

“ஆமா அவ்வளவே தான்” ௭ன அவனும் எழுந்து அவளையும் கைப்பற்றியே ௭ழுப்பிவிட, சிரித்துக் கொண்டே தானும் எழுந்தாள்.  அவள் பிளாக் வரை வந்து விட்டுவிட்டே தனது பிளாக் நோக்கி சென்றான்.

 

இவள் கிளாஸினுள் நுழைய அந்த வைரம் என்பவன் முன்னரே வந்து அமர்ந்திருக்க, அன்று அவன் வெக்கப்பட்டு கொண்டே முன் சென்றது, அவன் அப்பா பேசியது நியாபகம் வர, அவனைப் பார்த்து சிரித்தவாறே “குட் மார்னிங் வைரம்” என்றாள்.

 

“குட் மார்னிங்” என்றவன், நேம் தெரியாமல் முழிக்க. அவள் இடத்தில் அமர்ந்தவாறு “ஆறெழில்”  என எடுத்துக்கொடுக்க. 

“சாரி மறந்துட்டு”, 

“நோ ப்ரோப்ளம், நேட்டிவ் சென்னை தானா? உன் அப்பா சூப்பரா பேசுனாங்க அன்னைக்கு”.

 

“எங்க ஊரு நாட்டரசம்பட்டி, திருநெல்வேலி டிஸ்ட்ரிக்ட், அவரு ௭ப்பவுமே அப்டி தான், அதுலயும் ௭ன்ன கோர்த்து விடறதுன்னா அவருக்கு அல்வா சாப்புடுற மாறி” என்றான்.

 

சிரித்து கொண்டு “என்ன குரூப்?” ௭ன்க. 

“ஏரோனாட்டிகள், நீ?”, 

“நா இசிஇ”. 

“ஓஹ்” என மேலும் என்ன பேச என நிறுத்த.

 

ஆறெழிலே ஆரம்பித்தாள், “நல்லா ஆடுன. என்ன ஸ்கோர் 12த்ல. விஜய் ஃபிலிம் எல்லாமே பாத்துருவியா?” என அவள் ப்ரண்ட்ஸ் வரும் வரை அவனை வைத்து டைம் பாஸ் பண்ணி விட்டாள். பஸ்ட் இயரில் எல்லா டிபார்ட்மெண்டும் கலந்தே இருப்பர்.    

 

அடுத்து வந்த நாட்களும் ஜாலியாகவே சென்றது அவளுக்கு. ப்ரகலத்தனுக்கு அவன் வகுப்பில், டிபார்ட்மெண்டில் வித்தியாசம் தெரிந்தது. அது அவன் லவ்வரை கண்டுபிடித்ததால் வந்தது ௭ன்று அவனுக்கு விளங்கவில்லை, அவன் ப்ரண்ட்ஸ், விஷயம் தெரிந்தும், அதை அவர்களே பெரிதாக கண்டு கொள்ளாததால், அவனிடமும் சொல்லவில்லை.

 

அந்த வாரத்தில் ஒரு நாள், அவன் வகுப்புத் தோழி முன்பு அவனிடம் நேரடியாக ப்ரொபோஸ் செய்தவள், “அந்த ஜூனியர் பொண்ணு தான் உன் லவ்வரா?” என இப்பவும் நேரடியாகவே கேட்டாள்.

 

கிளாஸ் மொத்தமும் அவர்களைப் பார்க்க, “நா இல்லன்னு சொன்னா நம்பவா போற” என்றான். 

“அப்ப இந்த பொண்ணு இல்லயா?”, 

“நா எப்ப அப்டி சொன்னேன்”. 

“அப்ப யாரதா லவ் பண்ற நீ?”. 

“கண்டிப்பா ஒன்ன இல்ல”. 

“ரொம்ப குழப்புற நீ”. 

“தெரிஞ்சா சரி. ஸ்டாஃப் வர்ற நேரம் ஆயிடுச்சு, ஒன் பிளேஷ்க்கு போ” என்றுவிட்டு அவன் பாட்டிற்கு நோட்ஸ் எடுக்க ஆரம்பித்தான்.

 

ஆனால் அது காட்டுத்தீயாக மொத்த டிபார்ட்மெண்ட்க்கும் பரவியது. வந்த ஒரு வாரத்தில் ஏரோநாட்டிக்கல் டிபார்ட்மென்ட் பேமஸ் ஆகியிருந்தாள் ஆறெழில். ப்ரகலத்தன் என்ற ஒருவனுக்காக பரப்பப்பட்டது. அங்கு காதலிப்பவர்களே இல்லையென சொல்லிவிட முடியாதே, ப்ரகலத்தன் ஸ்டாஃப்ஸின் பேவரிட், எல்லாவகையிலும் குட் ஆட்டிடுயூட் கொண்டவனை அனைவருக்கும் பிடிக்குமே. அதனால் அவன் விஷயம் ஸ்பீடாக பரவியது.

 

இது ஒரு பக்கம் இருக்க, ப்ரெஷர்ஸ் பார்ட்டி ஏற்பாடாகியது. எல்லாமே ஸ்டுடென்ட்ஸ் ஏற்பாடே, பண்ட் அவர்களது, கெஸ்ட்டும் அவர்கள் ஏற்பாடு, பங்க்ஷன் ப்ராம்ப்ட் முதல், செலிப்ரஷன் எல்லாமே அவர்கள் இஷ்டமே. இதில் பிரெஷர்ஸ்ஸும் கலந்து கொள்ளலாம். எல்லா டிபார்ட்மென்ட்டிலும் இன்ச்சார்ஜில் இருக்கும் அந்த மூவரே டீம் ரெடி செய்து, வேலையை பகிர்ந்து செய்வர்.

 

ஆறெழில் வகுப்பில் ரெப்பாக லட்சுவும், வைரமுமே இருந்தனர். 

கேர்ள்ஸ் சைடு ரெப் வாலன்டியர் என ௭ஃப்.எ(FA- Faculty Advisor) கேட்டபோது, ஆறெழிலே லட்சு கையை, மிஸ் ௭ன கூவி கொண்டு, தூக்கி விட்டுவிட, “எரும எரும” எனத் திட்டிக்கொண்டே தான் முன் சென்று நின்றாள்.

 

அந்தப் பக்கம் வைரம் வாலெண்டீயராகவே முன் வந்திருந்தான். அன்று மாலை, ஆறெழில் வீடு கிளம்புகையில், ப்ரகலத்தன் கேன்டீன் வாசலில் இருந்தவன், அவள் வருவதை பார்த்துவிட்டு தன் பக்கம் திரும்புவாளா என பார்க்க, அவர்கள் நேராக சென்றதே கேன்டீனை நோக்கி தான் என்பதால் நண்பர்களுடன் அமர்ந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

 

லட்சுவயும், அந்த வைரத்தையும் ரெப் ஆனதிற்காக ட்ரீட் வைக்க சொல்லி அழைத்து வந்திருந்தாள். வைரம் அவன் நண்பனாக அவர்கள் வகுப்பு தானுவையும் அழைத்து வந்திருக்க, 6 பேரும் வட்ட மாநாடு போட்டு அமர்ந்தனர்.

 

லட்சு முறைத்தவாறே ஆறெழிலிடம் “என்ன வேணும்” எனக்கேட்க. 

“சிரிச்சிட்டே கேளுடி, அப்பதான் வயித்துல ஒட்டும்” ௭ன்றாள் ஆறு கெத்தாக.

 

பின்னர், “மேடம் என்ன சாப்பிடுறீங்க” என எழுந்து ஈ என இழித்தவாறு கேட்க. 

“இது கொஞ்சம் ஓவரா இருக்கு இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன். ப்ரெட் பஜ்ஜி, ஒரு கோக் போதும்” என்க. மற்றவர்களிடமும் கேட்டு சென்று மொத்தத்திற்கும் டோக்கன் வாங்கி, அமௌன்ட்டை சரிபாதியாக பிரித்துக்கொண்டனர் வைரமும், லட்சுவும்.

 

அங்கு செல்ப் சர்வீஸ் தான் என்பதால் தாங்களே டோக்கன் கொடுத்து வாங்கி வந்து “இந்த பஜ்ஜிக்கு ஆசப்பட்டாடி, ரெப் பதவில கோர்த்துவிட்ட” ௭ன காண்டுடனே கோக்கை வைத்தாள் லட்சு.

 

“சும்மா கேட்டா வாங்கி தருவியா நீ? கஞ்ச பிஸ்னாரி”. 

“இந்த பஜ்ஜி உனக்கு டைஜஸ்ட்டே ஆகாதுடி. இது என் சாபம்”. 

“பரவால்ல இப்ப வயித்துக்குள்ள டிஸ்டபன்ஸ் இல்லாம போனா போதும்” என மொக்கிக் கொண்டிருக்க.

 

“நீ தின்றத பாத்து ப்ரெசிடெண்ட் அண்ணா, இந்த புள்ளயே வேணாம்னு மறுபடியும் ஓடிறப் போறங்கடி, அடக்கி வாசி” என்க.

 

“ப்ரெசிடெண்ட்டா எங்க?” என பஜ்ஜியோடு எழுந்து சுற்றி தேட. 

“அடுத்த டேபிள்ல இருக்கவங்கள எங்க பாத்து தேடுற எரும, இங்க பாரு” என் அவளை இடது பக்கம் திருப்பி காட்ட. வலது கையில் உள்ள பஜ்ஜியை வாயில் வைத்தவாறு இடது கையால் “ஹாய்” என கையாட்ட, 

“இங்க வா” என்றான் அவன்.

 

கோக் பாட்டிலை கையோடு எடுத்துச் சென்றவள், அவனிடம் கோக்கை நீட்ட, மறுக்காமல் வாங்கி ஒரு சிப் பருகிவிட்டு திருப்பி தந்தான்.

 

“ஹாய் சீனியர்ஸ், நீங்கெல்லாம் ப்ரெசிடெண்ட் ப்ரண்ட்டா?” என்க. 

“எஸ் சிஸ்டர், எங்க இன்னைக்கும் ௭ங்கள பாக்காமலே போயிடுவீங்கன்னு பாத்தோம்” அகத்தியன் சொல்ல.

 

“அதெப்படி ப்ரெசிடெண்ட் ப்ரண்ட்ஸ பாத்துட்டு இன்ட்ரோ ஆகாம போவேன். நா ஆறெழில்”. 

“அது தெரியும்மா, உன் ப்ரெசிடெண்ட்டுக்கும் உனக்கும் எப்டி மீட்டிங்ன்றத மட்டும் சொல்லேன்” மூர்த்தி கேக்க. 

“டேய்” என ப்ரகலத்தன் அரட்ட. 

“ப்ரெசிடெண்ட் சொல்லலயா?” என்றாள்.

 

“ரெண்டு பேர் சொல்லுறதும் சிங்க் ஆகணும்ல, நீ சொல்லு” அகத்தியன் கேக்க. 

“நா ப்ரெசிடெண்ட்ட ப்ரப்போஸ் பண்ணேன், ஆனா ப்ரெசிடெண்ட், இப்ப என்ன அவசரம். இன்னும் டைம் இருக்கு, யோசிச்சு சொல்றேன்னு சொல்லிட்டாங்க” ௭ன்றாள்.

 

“அவேன் அப்டி சொன்னது உனக்கு வருத்தமா இல்லயா?”. 

“இல்லயே, அது அவங்களோட விஷ்” ௭ன அவள் முடிக்கும் முன்  “ஆறு” ௭ன லட்சு அழைக்க.

 

அதுவரை அவள் கூறுவதை சிரித்தவாறு பார்த்திருந்தவன். “சரி கிளம்பு லேட்டாச்சு. நாளைக்கு மார்னிங்க் சீக்கிரம் வா” என்க. 

“ஓகே ப்ரஸிடெண்ட். பை” என மற்றவர்களிடமும் விடைபெற்றுக் கிளம்பினாள்.

 

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 28

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
27
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்