Loading

நர்மதாவையும் முத்தரசியையும் அழைத்து வந்து விட்டனர் சம்பூர்ணாவும் மித்ரனும். நர்மதா சமைக்க கிளம்ப மித்ரன் மறுத்தான்.

“சமைக்க தான் ஆள் இருக்கேமா.. எல்லா நேரமும் நீங்களே செய்யனும்னு நினைக்காதீங்க.. அவங்க செய்யுறத கூட இருந்து பாருங்க போதும்..” என்று விட்டான்.

சம்பூர்ணா எப்போதும் போல் வேலையை பார்த்துக் கொண்டிருக்க, அடிக்கடி அபர்ணாவும் சுதாராணியும் வந்து சென்றனர்.

நாட்கள் அமைதியாக கடந்து கொண்டிருந்தது.

திருமணம் முடிந்து ஒரு மாதம் கடந்திருந்தது.

மித்ரன் வேலையில் இருக்க, சம்பூர்ணா அழைத்தாள்.

“எங்க இருக்க?”

“டிஸ்னி லேண்ட்ல டின்கர் பெல்லோட பறந்துட்டு இருக்கேன்” என்று நக்கலடித்தான்.

சம்பூர்ணா கோபப்பட நினைத்து முடியாமல் சிரித்து விட்டாள்.

“பறந்தது போதும் இறங்கி வா”

“முடியாது.. எதுக்கு கூப்பிடுற?”

“உன் கிட்ட பேசனும்.. ஆஃபிஸ்க்கு வா”

“ஆஃபிஸ்ல தான் இருக்கேன்”

“மெயின் பிரான்ச்க்கு வாடா”

“நீ முதலாளியா இருக்கலாம். அதுக்காக எல்லாம் வொர்க் ஹவர்ஸ்ல வர முடியாது..”

“உனக்கு கொழுப்பு வர வர அதிகமாகுதுடா”

“என் பொண்டாட்டி சம்பாதிச்சு போட்டு சாப்பிடுற திமிரு தான்..”

“வர வர ரொம்ப பேசுற நீ”

“இதுக்கு முன்னாடி பேசுனதே இல்லையா?”

“ஆமா.. முன்னாடி லூசுத்தனமா பேசுவ.. இப்ப பைத்தியக்காரத்தனமா பேசுற”

“ரெண்டும் ஒன்னு தான்.. இப்ப எதுக்கு கூப்பிட்ட? ரொம்ப அவசரம்னா நீ வேணா இங்க வா.. நான் வர முடியாது..”

“உன் பாஸுக்கே ஆர்டர் போடுறல? உனக்கு இருக்கு.. சரி வொர்க் ஹவர் முடிஞ்சதும் வந்து தொலை” என்று விட்டு வைத்து விட்டாள்.

கைபேசியை போட்டு விட்டு அவன் வேலையை தொடர, மற்றவர்கள் அவனை பொறாமையாக பார்த்து வைத்தனர்.

சம்பூர்ணாவிடம் எவ்வளவு சாதாரணமாக பேசுகிறான்? இவர்கள் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்களாம். கேட்ட போது பலருக்கு வயிறு எரிந்தது.

எவ்வளவு பொறாமையாக இருந்தாலும் அதை அவனிடம் காட்டிக் கொள்ளவும் முடிந்தது இல்லை.

இதையெல்லாம் மித்ரன் கவனித்தாலும் கண்டு கொள்வதே இல்லை. வேலையை முடித்த உடன் இடத்தை காலி செய்வது தான் அவனது பழக்கம்.

இன்றும் முடித்ததும் எழுந்து கிளம்பி விட்டான். பைக்கை எடுக்கும் முன்பு சம்பூர்ணாவை அழைத்தான்.

“என்ன?”

“இன்னும் ஆஃபிஸ்ல தான் இருக்கியா? வரனுமானு கேட்டேன்”

“வா.. இருக்கேன்” என்று வைத்து விட்டாள்.

மித்ரன் அங்கு செல்ல, அவனை பார்த்ததும் ஆளாளுக்கு புன்னகைத்தனர். சம்பூர்ணாவின் கணவன் அல்லவா?

கதவை தட்டி விட்டு உள்ளே செல்ல, சம்பூர்ணா திரும்பிப்பார்த்து விட்டு, “இவ்வளவு நேரமா?” என்று கேட்டாள்.

“ட்ராஃபிக் மேடம்..” என்று போலியான பவ்யத்துடன் சொல்ல, முறைத்து வைத்தாள்.

“இன்னொரு தடவ லேட்டா வந்தா சீட்ட கிழிச்சுடுவேன்”

“அத ஏன் மேடம் கிழிக்கிறீங்க? பார்க்குறவங்க பைத்தியம்னு நினைச்சுருவாங்க.. இருந்துட்டு போகட்டுமே”

சம்பூர்ணா கடுப்பாகி பேப்பர் வெயிட்டை தூக்கி எறிய, உடனே பிடித்து விட்டான்.

“உன் கூட அப்புறம் சண்டை போடுறேன்.. இப்ப விசயத்துக்கு வா..”

“சொல்லு” என்று விட்டு நாற்காலியில் அமர்ந்தான்.

“உன் அண்ணனுக்கு புரமோஷன் கொடுத்து வேற பிரான்ச்க்கு அனுப்பிட்டேன்” என்றாள் சாதாரணமாக.

“சரி அதுக்கு?” என்றவன் புரிந்ததும் சட்டென கண்கள் விரிய, “என்ன சொன்ன ப்ரமோஷனா?” என்று ஆச்சரியமாக கேட்டான்.

“ஆமா”

“அவன் சொல்லவே இல்ல?”

“இன்னைக்கு தான் மெயிலே போட்டேன்”

“ஓ.. சரி சரி.. ஏன் இந்த திடீர் முடிவு?”

“காரணமா தான்.. நீ இனிமே இங்க வேலை பார்க்கனும்”

மித்ரன் சந்தேகத்தோடு, “உனக்கு பிஏ வா இருக்க சொன்ன பிச்சுடுவேன்” என்றான்.

“உன்னை நாள் முழுக்க பார்க்குறது மகாக் கொடுமை.. அதெல்லாம் நான் செய்ய மாட்டேன்” என்று நக்கலடித்தாள்.

“ரொம்ப சந்தோசம்.. மேல சொல்லு”

“ஒரு பொஷிஷன் காலியாகிடுச்சு.. அதுக்கு தான் உன்னை கூப்பிடுறேன்”

இதுக்காகத்தான் புவனனை அனுப்பிளா? அவன் ஏற்கனவே இருக்கும் போது மித்ரனை இங்கு வர வைத்தால் குடும்பத்தில் பிரச்சனைகள் வரலாம்.

“ஏன்?”

“என்ன வேலைனு கேட்க மாட்டியா?” என்று முறைத்தாள்.

“முதல்ல ஏன்னு சொல்லு..”

“நீ செய்வனு ஒரு நம்பிக்கை அவ்வளவு தான்” என்று தோளை குலுக்கினாள்.

“என்ன வேலை?” என்று கேட்டு விவரம் வாங்கியவன் அவளை கிண்டலாக பார்த்தான்.

“உன் புருஷன்ங்குறதால தான இத கொடுக்குற?” என்று நக்கலாக கேட்டான்.

“ஆமா.. இதுல என்ன டவுட்?” என்றவள் அலட்டிக் கொள்ளவே இல்லை.

“இப்படி அட்வான்டேஜ்ல வேலை கொடுக்குறியே.. தப்பா தெரியல?”

“இல்ல.. முதல் விசயம்.. இது முழுக்க முழுக்க பணம் சம்பந்தப்பட்டது.. நானே நேரடியா தான் பார்ப்பேன். அடுத்தது.. வேற யாரையும் நம்ப நான் தயாரா இல்ல. நீ வந்தா சேஃபா இருக்கும். வேலை ஈசியா முடியும். அவ்வளவு தான் விசயம்”

“இத நான் ஏத்துக்கிட்டா எத்தனை பிரச்சனைய சமாளிக்கனும் தெரியுமா? இதே பிரான்ச்ல இந்த வேலைக்கு தகுதியா இருக்கவன் முதல்ல எனக்கு எதிரியாவான். அட்வான்டேஜ்ல வேலை வாங்கிருக்கேன்னு.”

“அதுக்காக? அவன் கோபத்துக்காக நான் பிஸ்னஸ் பண்ண முடியாதுல? அடுத்தவங்க நினைப்ப பத்தி யோசிக்கிறத எப்ப நீ விடப்போற? நல்லவனாவே எல்லாருக்கும் இருக்க முடியாது மித்ரு.. சிலருக்கு நாம வில்லனாத்தான் ஆகனும்.”

மித்ரன் யோசனையில் புருவம் சுருங்க அமர்ந்திருக்க, “எனக்கு வில்லனாகும் போது மட்டும் நீ இவ்வளவு யோசிக்கலயே? நான் என்ன நினைப்பேன்னு யோசிக்காம வார்த்தைய அள்ளி கொட்டுன.. உனக்கும் எனக்கும் சம்பந்தமில்லனு தெரிஞ்சும் என்னை தப்பா பேசுறதையோ சண்டை போடுறதையோ நீ நிறுத்தவே இல்லையே.. மத்தவங்க கிட்ட கெட்டவனாக மட்டும் ரொம்ப கஷ்டமா இருக்கா என்ன?” என்று கேட்டாள்.

கோபம் ஒவ்வொரு வார்த்தையில் மறைந்து கிடக்க, அவள் முகம் மட்டும் சாதாரணமாக இருந்தது.

“ப்ச்ச்.. இப்ப என்னங்குற? அதுக்கு தான் இந்த கல்யாணம் வரை கொண்டு வந்து பண்ணிட்டல.. இதுக்கு மேல என்ன வேணும்?”

“இல்ல ஊர்ல இருக்க எல்லாருக்கும் நல்லவனா இருக்கியே.. எனக்கு மட்டும் ஏன் வில்லனா இருக்கனு கேட்டேன்.. ஜஸ்ட் ஆர்வம் அவ்வளவு தான்”

“பொண்ணுங்களுக்கு வில்லன தான் பிடிக்கும்னு கேள்விப்பட்டேன்.. உனக்கு என்னை பிடிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டல? அதுக்கு தான்”

“வாட்?” என்று சிரித்தாள்.

“எனக்கு உன்னை பிடிக்குமா? யார் சொன்னது?”

“அப்புறம் எதுக்கு இந்த வேலைய தர்ர?”

“இது பிஸ்னஸ்.. நீ இல்லனா வேற யார நான் நம்ப முடியுமோ அவங்கள உட்கார வச்சுப்பேன் அவ்வளவு தான்”

“அப்போ நீ என்னை நம்புற?”

“ஆமா.. நீ வில்லன் தான்.. திருடன் இல்ல..”

“நம்புறனா உனக்கு என்னை பிடிச்சுருக்கு”

“உனக்கு தான் இப்ப பைத்தியம் பிடிச்சுருக்கு.. வந்த வேலைய மட்டும் கவனி.. நாளைக்கு இங்க வந்து ஜாயின் பண்ணிக்க அவ்வளவு தான்”

“நான் முடியாதுனு சொன்னா?”

“சொல்ல மாட்ட. சொல்ல விடவும் மாட்டேன்”

“ரியலி? என்ன மேடம் செய்வீங்க?” என்று சிரிப்போடு கேட்டான்.

“வீட்டுக்கு போய் எல்லாரு கிட்டயும் இத சொல்லி.. உங்க புள்ளை வளரவே கூடாதுனு நினைக்கிறான்.. நானும் பண விசயத்துல புருஷன நம்பலாம்னு நினைச்சா ஒத்துக்க மாட்டேங்குறான்.. என்னனு நீங்களே கேளுங்கனு போட்டு கொடுத்துடுவேன். அத்தையும் பாட்டியும்.. ஏன் உன் மாமியாரும் அவங்க மாமியாரும் பேசிப் பேசி உன்னை சாகடிச்சுடுவாங்க. செய்வாங்க தான?”

அவள் குறும்புச் சிரிப்போடு கேட்க, மித்ரன் தலையை தேய்த்தான்.

இதைச் சொன்னால் நிச்சயமாக அவனுக்குத்தான் திட்டு விழும். அவளுக்கு உதவ மாட்டேன் என்று அடம் பிடிக்கிறான் என்று பெயரோடு வீட்டில் நிம்மதியாக மூச்சு கூட விட விடமாட்டார் நர்மதா.

“என்ன மேன்? தலை வலிக்குதா?”

“உனக்கு தாலி கட்டுனதுக்கு அது தான்டி என் கூடவே இருக்கு” என்று கடுப்பானான்.

“பரவாயில்ல.. அத பக்கத்துலயே வச்சுக்க.. நாளைக்கு வந்து ஜாயின் பண்ணலனா.. என்ன நடக்கும்னு உனக்கே தெரியும்..”

மித்ரன் பெருமூச்சு விட்டான்.

“எல்லாம் உன் முடிவு தான்ல?”

சம்பூர்ணா கெத்தாக ஒரு பார்வை பார்த்து வைத்தாள்.

“ஃபைன்… நான் இங்க வர்ரேன். ஆனா.. எனக்கு ஒரு கண்டீஷன் இருக்கு”

புருவம் உயர்த்தினாள்.

“இன்னைக்கு என் கூட.. என் பைக்ல நான் கூப்பிடுற இடத்துக்கு நீ வரனும்.. வருவியா?”

உடனே கடிகாரத்தை திருப்பிப் பார்த்தாள்.

“போகலாமே.. எனக்கு வேலை முடிஞ்சது” என்று சாதாரணமாக ஒத்துக் கொண்டாள்.

அதைக்கண்டு மித்ரன் அதிர, “என்னை என்ன உன்னை மாதிரினு நினைச்சியா? சில்லியா அடம் பிடிக்கிறதுக்கு? எந்திரி.. போகலாம்..” என்று நக்கலடித்து விட்டு, கணினியை அணைத்து விட்டு பர்ஸை எடுத்துக் கொண்டாள்.

மித்ரன் அவளை மேலும் கீழும் பார்த்தான்.

“இந்த ட்ரஸ் சரி வராது.. வேற மாத்திட்டு போகலாம்”

“எங்க போறோம்?”

“போகும் போது தெரியும்.. முதல்ல வீட்டுக்கு போகலாம்.. உன் கார அங்க விட்டுட்டு பைக்ல போகலாம்”

சம்பூர்ணா தோளை குலுக்கி விட்டு உடன் நடந்தாள்.

•••

சாதனா ஆச்சரியமாக கணவனை பார்த்தாள்.

“சாலரி கூடுதா? அப்போ வாடகை கட்டுறதுல பிரச்சனை இருக்காதுல?” என்று அவள் சந்தோசமாக கேட்க, புவனன் தலையாட்டினான்.

“அது மட்டுமில்ல.. இங்க இருந்து ரொம்ப தூரம் ஆஃபிஸ் போகனுமேனு இருந்துச்சு. இனி பக்கத்துலயே போயிக்கலாம்.”

“வாழ்த்துக்கள் புருஷரே வாழ்த்துக்கள்” என்று சாதனா கையை கொடுக்க, கையை விடாமல் பிடித்து இடித்து அணைத்துக் கொண்டான்.

“புருஷனுக்கு வாழ்த்தை இப்படி சொல்லக்கூடாது தெரியுமா?” என்க சிரித்து வைத்தாள்.

“யாருமே இல்லாம வீட்டுல இருக்கது கூட ரொமான்ஸ்க்கு நல்ல வசதியா இருக்குல?”

“இருக்கும் இருக்கும்.. எனக்கு தான் ஒன்னு ஒன்னையும் நானே பார்க்கும் போது கை கால் எல்லாம் வலிக்குது. அத்தை பாதி வேலை நான் பாதி வேலைனு பார்த்தோம். இப்போ எல்லாத்தையும் நானே எடுத்து அடுக்கிட்டு இருக்கேன்”

“அம்மாவ வேணா கூப்பிடவா?”

“வேணாம் வேணாம்.. அத்தை இருந்தா நடு வீட்டுல இப்படி கட்டிப்பிடுச்சுட்டு நிக்க முடியுமா?அதோட அங்க சமையலுக்கு வீட்ட சுத்தம் பண்ண சம்பூர்ணா ஆள் வச்சுருக்கா. அத்த நல்லா தூங்கி எந்திரிச்சு ரெஸ்ட் எடுக்குறாங்களாம். இங்க வரும் போது வரட்டும்”

“எல்லாத்தையும் நீயே முடிவு பண்ணா வீட்டுத்தலைவன் நான் எதுக்கு?”

“இதுக்கு தான்” என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டு சிரித்தாள்.

எல்லாருக்கும் நல்லவனாக நினைப்பது மிகவும் முட்டாள்தனம். சிலரல்ல பலருக்கு வில்லனாகாமல் வாழ்வதாக நினைத்தால் அது போலியான வாழ்க்கை அல்லவா?

வாசம் வீசும்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்