Loading

வரம்-4

“வாங்க…. வாங்க..” என்று வரவேற்றனர் ஷ்யாம் மற்றும் நிதர் குடும்பத்தினர். அரவிந்த் பெற்றோரிடம் இவர்களை அறிமுகம் செய்தனர். ஷ்யாம் அபுவை அப்பொழுது தான் கவனித்தான். கன்னக்குழி சிரிப்பு இல்லாமல் மௌன தேவதையாக நின்றுகொண்டு இருந்தாள். நிதரின் பெற்றோர்கள் நிதரை அழைத்தனர்.

நிதர் மற்றும் பூர்ணா ஒருவரை ஒருவர் பார்த்ததும் லேசாக அதிர்ந்தனர். “இந்த பொண்ணு தான் ஷ்யாம்கு பார்த்திருக்க பொண்ணு டா, பேரு பூர்ணா” என்றார் பவானி மகிழ்ச்சியாக.

“சரி சித்தி, ஏய்! அபு உனக்கு இந்த டிரஸ் சூப்பரா இருக்கு ” என்று உண்மையாக பாராட்டினான்.

“தேங்க்ஸ் ” என்றாள் பொய்யான சிரிப்புடன். பூர்ணாவுக்கு நிதர் பாராட்டை கேட்டு கோபமாக வந்தது.

“அபுவ உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா” என்றார் விருமாண்டி.

“தெரியும் இவங்க காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்கு தான் ஹெல்ப் பண்ண  நா, ஷ்யாம், அரவிந்த் போறோம்”.

“அபு நீ மாப்பிள்ளைய பார்த்தது ஏன் சொல்லல??” என்றார் பாட்டி உள்ளடக்கிய கோபத்தில்.

“இதுல என்ன பாட்டி இருக்கு, அது காலேஜ் அங்க உறவு கொண்டால்லாம் முடியாது, அதனால தான் அவ சொல்லல” என்றான் ஷ்யாம் வேகமாக. அபுவின் கன்னத்தில் லேசாக குழி விழுந்தது.

“ஓ.. சரி சரி ” என்றார்.  ‘நல்ல வேல உறவு கொண்டாட முடியாதுன்னு மாப்பிள்ளையே சொல்லிட்டாரு அது போதும் ‘ என்று நினைத்துக்கொண்டார். பின்னர்  நிச்சயதார்த்த வேலையை பார்க்க கலைந்து சென்றனர்.

பூர்ணாவின் குடும்பத்தினர் நடுவில் போடப்பட்டிருந்த டேபிளில் உட்கார்ந்திருந்தனர். “அம்மா தல வலிக்குது நா ஓரமா இருக்க டேபிள்ல உக்காந்து இருக்கேன்” என்றாள்.

“சரி சரி நீ போய் உட்காரு அபு” என்றார் பாட்டி.

“இல்ல வேணா இங்கேயே இரு” என்றார் மேகலா.

“அவளுக்குதான் தல வலிக்குதுன்னு சொல்லுறல்ல அப்புறம் என்ன, நீ போ சின்ன குட்டி” என்றார் பாட்டி.

அபு எழுந்து கடைசியில் ஓரமாக இருந்த டேபிளில் அதை சுற்றி இருந்த நாற்காலியில் ஓர் நாற்காலியில் உட்கார்ந்து தலையை டேபிள் மேல் வைத்து படுத்துக் கொண்டாள்.

“ஏய்! பூர்ணா அவ தான் போயிட்டாள, அப்பறம் எதுக்கு நீ மூஞ்ச இப்படி வச்சுருக்க??”என்றார் மெதுவாக.

“ஒண்ணுமில்ல பாட்டி” என்று முகத்தை மாற்றிக் கொண்டாள்.

“போய் மாப்பிள்ளை கிட்ட பேசு, அவங்களுக்கு ஏதாச்சும் உதவி தேவைனா பண்ணு, இப்படி  உட்கார்ந்து இருக்காதா” என்று கண்டித்தார்.

“சரி பாட்டி” என்று எழுந்து  ஷ்யாம் பக்கத்தில் வந்து,” நா ஏதாச்சும் ஹெல்ப் பண்ணுட்டா ஷ்யாம்” என்றாள் சிரிப்புடன்.

“வேணா பூர்ணா நீ போய் உட்காரு, எந்த ஓர்க்கும் இல்ல” என்றான் சிரிப்புடன்.

“சரி..”என்று மீண்டும் பாட்டியின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.

“ஏய்! உன்னைய பேசிப் பழகச் சொன்னா மறுபடியும் வந்துட்ட” என்றார் கோபமாக.

“பாட்டி எந்த வேலையும் இல்லையாம்” என்றாள் சலிப்புடன்.

“ஆண்டவா இவள வச்சுக்கிட்டு நா என்ன பண்ணப் போறானோ!!” என்று புலம்பினார். மேகலா அனைத்தையும் கேட்டுக்கொண்டு அமைதியாக இருந்தார். பவானி மற்றும் மல்லிகா, மேகலா, பூர்ணா பாட்டியை மேடைக்கு அழைத்து சென்று பக்கத்தில் நிற்க வைத்துக்கொண்டனர். விருமாண்டியை அன்பு மற்றும் கணேஷ்  அழைத்து சென்று நிற்க வைத்துக்கொண்டனர். அரவிந்த் மற்றும் நிதி நிச்சயதார்த்தம் சந்தோஷமாக முடிந்தது. இதை எதையும் அறியாமல் அபு நன்றாக தூங்கி கொண்டு இருந்தாள்.

ஷ்யாம் மற்றும் நிதர் வேலை இருந்ததால் அபுவை கவனிக்க வில்லை. பின்னர் மேகலா, பூர்ணா, மோகன் சாப்பிட அழைத்து சென்றனர். சாப்பிட்டு முடித்ததும் மீண்டும் ஹாலுக்கு  வந்தனர்.

ஷ்யாம்கு அப்பொழுதுதான் அபு ஞாபகம் வந்தது, “அபு எங்க??” என்றான் நான்கு பேரிடம். மேகலாவிற்கு அப்பொழுதுதான் தன்னோடு அபு வந்தது  நினைவு வந்தது.

“இங்கதான் எங்கேயாச்சும் இருப்பா” என்றாள் பூர்ணா அக்கறையே இல்லாமல்.

“அவளுக்கு  கால் பண்ணு பூர்ணா”.

“இல்ல ஷ்யாம் அவ கிட்ட போன் இல்ல”.

“வாட்???” என்றான் அதிர்ச்சியாக.

“படிக்கிற பொண்ணுக்கு எதுக்கு போனு அதான் வாங்கி தரல ” என்றார் பாட்டி.

“ஓ.. கரெக்ட் பாட்டி, மிஸ். பூர்ணா நீங்க எப்ப  முதமுதல  போன் வாங்குனீங்க” என்றான் நிதர் நக்கலாக.

பூர்ணா முறைப்புடன்,” என் அப்பா பிளஸ் டூல  நல்ல மார்க் வாங்குனதுக்கு வாங்கி கொடுத்தாங்க”என்றாள்.

ஷ்யாம் நான்கு பேரையும் முறைத்துக் கொண்டே, “நிதர் நீ அந்தப் பக்கம் போய் தேடு, நா இந்த பக்கம் தேடுறேன்” என்றான் உள்ளடக்கிய கோவத்தில்.

ஷ்யாமின் பெற்றோருக்கு அவன் கோவம் லேசாக புரிந்தது. அபு கடைசி டேபிலில்  படுத்து இருப்பது மேடையில் இருந்து பார்த்ததும் தெரிந்தது, ஷ்யாம் வேகமாக அவளிடம் சென்றான். அபு உறங்குவதை பார்த்ததும் அவன் கைகள் அவள் தலைமுடியை கோத பரபரத்தது கட்டுப்படுத்திக்கொண்டு,” அபு… அபு..”, என்றான்.

பெற்றோர்கள் அனைவரும் ஷ்யாமின் பக்கத்தில் வந்தனர். அவன் எழுப்புவதை பார்த்ததும் நிதர் வந்தான்.” இங்கே வந்துட்டு உனக்கு தூக்கம் கேக்குதா??” என்றார் பாட்டி அதட்டலாக.

அபுவிற்கு சத்தம் கேட்டு எழுந்து அனைவரையும் பார்த்து முழித்தாள்.” இங்கே வந்து யாராச்சும் இப்படி தூங்குவாங்களா?? டி” என்றாள் பூர்ணா எரிச்சலாக.

“தல வலிக்குது நா வரலைன்னு சொன்னேன், நீங்க தானே கூட்டிட்டு வந்தீங்க, என்னையே அறியாம தூங்கிட்டேன்”என்றாள் பொறுமையாக.

“பரவால்ல டா ஒன்னும் பிரச்சனை இல்ல” என்று பவானி பாசமாக அவள் தலை முடியை கோதினார்.

“சரி சம்மந்தி அப்ப நாங்க கிளம்புறோம்” என்றார் மோகன்.

“எல்லாரும் சாப்பிட்டீங்களா??” என்றான் ஷ்யாம் வெற்று குரலில்.

“ம்ம்.. சாப்பிட்டோம் மாப்ள”என்றார் சிரிப்புடன்.

“அப்ப ஏன் அபுவ எழுப்பி சாப்பிட அழச்சிட்டு போகணும்னு உங்க யாருக்கும் தோணல” என்றான் மீண்டும் வெற்று குரலில்.

அபுவின் கண்கள் லேசாக கலங்க ஆரம்பித்தது.” அவ எங்க கூட எந்த பங்ஷனுக்கு வர மாட்டா, அவ வந்தத நாங்கள் மறந்துட்டோம் ஷ்யாம்” என்றாள் பூர்ணா.

“சூப்பர் பூர்ணா, கூட வந்த தங்கச்சியே  மறந்துட்டீங்க அப்படித்தானே, எல்லாரும் மறக்கலாம் ஆன்ட்டி நீங்க எப்படி பெத்த பொண்ண  சாப்பிட  கூப்பிடாம போனீங்க ” என்றான் மேகலாவிடம். மேகலா லேசாக கலங்கிய கண்களுடன் தலைகுனிந்தார். அபுக்கு அழுகை வந்தது.

“ஏய்!! இப்ப எதுக்கு அழுது சீன் போடுற” என்றாள் கோபமாக.

“பூர்ணா அவள விட்டுட்டு சாப்பிட்டோம், அவளுக்கு அழுகை வராத, சரி வா அபு வீட்ல போய் சாப்பிட்டுகலாம், டைமாச்சு” என்றார் பாட்டி பொறுமையாக.

“ஏன் அங்க போய் சாப்பிடணும் , அபு வா சாப்பிடலாம்” என்றான் நிதர்.

“ஆமா நீ சாப்பிட்டுதான் போகணும், எல்லாரும் நீ சாப்பிட்டு வர வரைக்கும் வெயிட் பண்ணுவாங்க, என்ன பாட்டி ” என்றான் ஷ்யாம்.

“ஆமா மாப்பிள்ளை வெயிட் பண்ணுவோம்”.

“எனக்கு வேணா” என்றாள் உள்ளடக்கிய கோவத்தில்.

“இப்படி சொன்னா நாங்க விட்டுடுவோமா, நாங்க ரெண்டு பேரும் இன்னும் சாப்பிடல கம்பெனி கொடு, என்ன டா நிதர் “.

“ஆமா டா ஷ்யாம், நாங்க ரெண்டு பேரும் குண்டுக் கட்டையா டைனிங் ஹாலுக்கு தூக்கிட்டு போய்டுவோம்” என்று பொய்யாக மிரட்டினான்.

“ஆமா. டேய்! நீ அந்த பக்கம் பிடி, நா இந்த பக்கம் பிடிக்கிறேன்” என்றான் ஷ்யாம் விளையாட்டாக.

“சரி சரி வரேன் ” என்றாள் சலிப்புடன்.

“மேடம் நாங்க ரெண்டு பேரும் தான் இப்ப உங்க படிகாட்” என்று ஒரு பக்க கையை பிடித்தான் நிதர். மறுபக்கம் ஷ்யாம் பிடித்து இழுத்து சென்றான். பூர்ணாவிற்கு நிதர் அபுவின் கையை பிடித்ததை பார்த்ததும் கோபம் உச்சத்துக்கு சென்றது.

அபுவின் வலது பக்கம் ஷ்யாமும், இடது பக்கம் நிதரும் உக்கார்ந்தனர். சாப்பாடு இலையில் வைக்கப்பட்டது.” எனக்கு வேணா நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க, எனக்கு பசிக்கல” என்றாள் ஊரென்று  முகத்தை வைத்துக் கொண்டு.

“பசிக்கலையா, சரி அப்ப நாங்க ரெண்டு பேரும் சாப்பிடுறோம், நீ நல்லா வேடிக்கை பாரு ” என்றான் நிதர் கிண்டலாக. அவனை முறைத்தாள்.

நிதர் தன் இலையில் இருந்த ஸ்வீடை அபுவின் இலையில் வைத்தான். அதை பார்த்த ஷ்யாம், “நீ மட்டும் தான் வைப்பியா நானும் வைப்பேன்” என்று பதிலுக்கு வைத்தான்.

“நான் அவளுக்கு சப்பாத்தி தருவேன்” என்றான்.

“நான் பிரியாணியே தருவேன், அபு நீ சாப்பிடாம இருந்தா நாங்க உனக்கு ஊட்டி விட்டுருவோம்” என்று மிரட்டினான்.

“இப்ப எதுக்கு என் இலையில்ல..” என்று சொல்லிக் கொண்டே இருக்கும் போதே, ஷ்யாம் அவளுக்கு ஊட்டிவிட்டான். அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள். லேசாக கண்கள் கலங்கியது. விவரம் தெரிந்த நாளில் இருந்து அவளுக்கு யாரும் ஊட்டி விட்டதில்லை ஷ்யாம் ஊட்டியதும் அவளுக்கு அழுகை வந்தது.

“என்னடா காரமா இருக்கா?? தண்ணி குடிக்கிறியா??” என்றான் அன்பாக.  வேணா என்பது போல் தலையை ஆட்டினாள்.

“நீ மட்டும் தான் ஊட்டுவியா, நானும் ஊட்டுவேன்” என்று ஸ்வீடை அவளுக்கு ஊட்டினான். அபு சிரிப்புடன்  வாங்கிக் கொண்டாள். மீண்டும் இருவரும் அபுவின் இலையில் தன் பங்கு என்று வைக்க வந்தனர்.

“டேய்! எனக்கு சாப்பிட தெரியும், உங்க இலைய பாத்து சாப்பிடுங்க டா ” என்று சாப்பிட ஆரம்பித்தாள்.

“என்னது டேய்யா டாவா” என்றனர் இருவரும்.

“ஆமாடா டால்டா, பசிக்குது வேற சாப்பிட விடுங்க டா, எனக்கு என்ன வேணுமோ நானே கேட்டு வாங்கிறேன்” என்றாள் சாப்பிட்டுக்கொண்டே.

“யாரோ பசி இல்லன்னு சொன்னாங்க ஷ்யாம் உனக்கு யாருன்னு தெரியுமா” என்றான் நிதர் கிண்டலாக.

“அவங்க எப்பயோ பறந்து போய்ட்டாங்க டா” என்றான் கிண்டலாக.

“ஆமா.. ஆமா..” என்றாள் சிரிப்புடன்.

அபு சாப்பிட ஆரம்பித்ததும் இருவரும் கட்டை விரலை தூக்கி காட்டிக் கொண்டனர். பூர்ணா இதை அனைத்தையும்  ஜன்னல் பக்கத்தில் நின்று பார்த்துக் கொண்டே இருந்தாள். மூவரும் சாப்பிட்டு ஹாலுக்கு வந்தனர்.

“அப்ப நாங்க கிளம்புறோம் சம்மந்தி, எப்ப  வச்சுக்கலாம்னு பார்த்து சொல்றேன்” என்றார் மோகன்.

அபு, ஷ்யாம், நிதர்  மூவரும் இவர்களை விட்டு தள்ளி நின்று பேசிக்கொண்டு இருந்தனர்.” என்ன விஷயம் பாட்டி? ” என்றாள் பூர்ணா மெதுவாக.

“அது ஒன்னுமில்ல பூர்ணா, அபுவ நிதர்கு பொண்ணு கேட்டு இருக்கோம், அபு படிச்சு முடிச்சதும் எப்ப  வச்சுக்கலாம்னு பார்த்து சொல்றேன்னு அப்பா சொன்னாங்க “என்றார் பவானி அன்பாக.

“என்ன??” என்றாள் அதிர்ச்சியில்.

“ரெண்டு பொண்ணும் ஒரே வீட்ல இருந்தா நல்லது தானே, அபுக்கும் நிதருக்கும் ஜோடி பொருத்தம் நல்லா இருக்கு” என்றார் மல்லிகா சிரிப்புடன்.

“அபு படிப்பு முடியட்டும் எல்லாம் பேசி முடிவு பண்ணிடலாம், நாங்க கிளம்புறோம் நேரமாச்சு” என்றார் மோகன்.

“சரிங்க சம்பந்தி” என்றனர்.

“அபு வாடா வீட்டுக்கு போகலாம்” என்றார் மேகலா.

“பாட்டி , அங்கிள், ஆன்ட்டி ஒரு நிமிஷம் அபு இங்க தூங்கினதுக்கு வீட்ல போய் யாரும் திட்டாதீங்க” என்றான் நிதர் அக்கறையாக.

“அவங்க எதுக்கு டா திட்ட போறாங்க, அவள தலைவழியோட அழைச்சுட்டு வந்தது இவங்க, அவள சாப்பிட கூப்பிடம விட்டுட்டு  போனது இவங்க, திட்டு மட்டும் அபுக்கா, பாட்டி ரொம்ப நல்லவங்க டா அவங்க மேல தப்ப வச்சுக்கிட்டு இவள திட்ட மாட்டாங்க, என்ன பாட்டி??” என்றான் ஷ்யாம் ஏற்ற இறக்கத்துடன்.

“ஆமா மாப்ள நாங்க தான் கவனக்குறைவா விட்டுட்டோம், அவ வீட்டுக்கு போனதும் மேகலாவ மாத்திர கொடுத்து அத போட்டுட்டு தூங்கினா எல்லாம் சரியாயிடும், சின்னக்குட்டி போலாம் ” என்றார்  பொறுமையாக.

“ஷ்யாம் நீ சொன்னது கரெக்ட்டா பாட்டி சூப்பர் பாட்டில” என்றான் வஞ்சப் புகழ்ச்சியாக.

“ஆமாடா சூப்பர் பாட்டி” என்றான் பொய்யான சிரிப்புடன்.

“எதுக்கு தம்பி இந்த பாராட்டுலா, நேரமாச்சு நாங்க கிளம்புறோம்” என்று கிளம்பினார். அபு இருவருக்கும் டாடா காட்டினாள் சிரிப்புடன். இருவரும் சிரிப்புடன் அவளை வழி அனுப்பினார்.

“நிதர் தீபன் சொன்னால்ல , அபுவ கஷ்டப் படுத்துற யாரும் எங்களுக்கு ஒரு நாளும் தேவை இல்லைன்னு, அவள கஷ்டப்படுத்துறது அவ ஃபேமிலியா இருக்கும்னு  நினைக்கிறேன் டா” என்றான் யோசனையுடன்.

“ஆமா டா ஷ்யாம் நானும் அதான் நினைக்கிறேன்”, என்றான் யோசனையுடன்.

“இவள அந்த கஷ்டத்தில் இருந்து வெளிய கொண்டு வரனும் டா, எப்படின்னு தெரியல ஆனா கொண்டு வருவேன்” என்றான் உறுதியாக.

“அதுக்கு நா உனக்கு எப்போதுமே உறுதுணையாக இருப்பேன்” என்று ஷாமின் தோளில் கை போட்டு உள்ளே அழைத்து சென்றான்.

வீட்டுக்கு வந்ததும் மேகலா அபுக்கு மாத்திரை கொடுத்தார் அதை வாங்கிப் போட்டுக்கொண்டு அவள் அறைக்கு சென்றாள்.” இந்த சின்னக்குட்டினால எப்போதுமே தொல்லை  தான் , மாப்பிள இவ கிட்ட ரொம்ப நெருங்கி பழகுனாரு, இதெல்லாம் நீ கண்டுக்கவே மாட்டியா பூர்ணா” என்றார் கோவமாக.

“அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்யா தெரியுமாம், அது மாதிரி இருக்கு அத்த நீங்க பேசறது, மாப்பிள மட்டுமா அபு கூட  தனியா  இருந்தாரு??? கூட நிதர் மாப்பிள்ளையும் தானே இருந்தாரு, அவருக்கு அபுவ கட்டித்தர  முடிவு பண்ணியாச்சு, அவரோட விருப்பம் இல்லாமலா அவங்க அம்மா, அப்பா அபுவ பொண்ணு கேட்பாங்க, மச்சினிச்சிங்குற முறையில் பேசி இருப்பாரு, அதுவும் இல்லாம நீங்க இப்படி பேசுறத பூர்ணா தப்ப நினைச்சு அவருக்கு போன் பண்ணி சண்டை போட்டா என்ன பண்ணுவீங்க, ஷ்யாம் மாப்பிள்ளைக்கு இன்னைக்கு சட்டு சட்டுன்னு கோவம் வந்தது, ஏன் தெரியுமா அபுவ நாம விட்டுட்டு போனனால, நம்ம குடும்பத்து ஆள நாம மறந்தனால, அபுவ இங்க எப்படி நடத்துறோம்னு தெரிஞ்சது இந்த கல்யாணத்த நிறுத்தினாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல, அபுக்காக பண்ணுறாருன்னு நினைச்சுகாதீங்க, நியாயத்துக்காக பண்ணுவாரு”, என்றார்  ஏற்ற இறக்கத்துடன்.

“ஆமா அம்மா மேகலா சொல்றது கரெக்ட் தான், நம்ம நிதர் மாப்பிள்ள மாதிரி ஷ்யாம் மாப்பிள்ள இல்ல” என்றார் மோகன்.

“ம்ம்.. இன்னைக்கு தான் உன் பொண்டாட்டி பூர்ணா வாழ்க்கைக்காக அறிவாளியா பேசியிருக்க, இப்படியே பேச சொல்லு, நா போய் படுக்குறேன், பூர்ணா போய் தூங்கு”,  என்று விரட்டி விட்டு அவர் அறைக்குள் சென்றார். அனைவரும் படுக்கச் சென்றனர்.

பூர்ணாவுக்கு நிதர் அபுவை கல்யாணம் செய்வதை ஏற்க முடியாமல் தவித்தாள். அவருக்கு விருப்பம் இல்லாமல அபுவ பொண்ணு கேட்பாங்கன்னு மேகலா  சொன்னது காதில் கேட்டுக்கொண்டே இருந்தது. ‘எப்படி நிதர் உன்னால என்னைய மறக்க முடிஞ்சது, நா உன்னைய மறந்துட்டேன்னு நினைச்சேன் ஆனா உன்னை பார்த்ததும் தான் புரிஞ்சது மறந்துட்டேன்னு பொய்யா எனக்கு நானே சொல்லிக் கிட்டேன்னு ‘, என்று அழுது கொண்டே பழைய நினைவுகளில் மூழ்கினாள்.

(பிளாஷ்பேக் ஸ்டார்ட்)

“ஏய்! பொண்ணு” என்று சத்தம் கேட்டது. அங்கு ஓர் இளைஞன் லக்சரர் மாதிரி நின்று கொண்டு இருந்தான். அவன் கழுத்தில் ஐடி கார்ட் இருந்தது.

“என்னையா கூப்பிடிங்க” என்றாள் பூர்ணா  மரியாதையாக.

“ஆமாமா இங்க வா ” என்றான். பூர்ணா பக்கத்தில் வந்தாள். “எந்த கிளாஸ் மா?? என்ன டிபார்ட்மெண்ட்??.

“தர்டு இயர் இன்ஜினியரிங், ஐடி டிபார்ட்மெண்ட் சார்” .

“உன் பேர் என்ன??”.

“பூர்ண வர்ஷினி சார்”.

“அப்பா என்ன பண்றாங்க??”.

‘இதெல்லாம் தெரிஞ்சி இவர் என்ன பண்ண போறாரு’ என்று மனதில் நினைத்துக்கொண்டே, “பிசினஸ்மேன்” என்றாள்.

“மிஸ் பூர்ணா, மிஸ் தானே” என்றான் சந்தேகமாக.

“ஆமா சார்” என்றாள் பயத்துடன்.

“என்னைய பார்த்து ஏம்மா பயப்படுற, நா இந்த காலேஜ்ல எம்.பி.ஏ டிபார்ட்மென்ட் ஹச்.ஓ.டி, என் பேரு சோலமுத்து”.

பூர்ணாவிற்கு அவன் பெயரை கேட்டதும் லேசாக சிரிப்பு வந்தது அடக்கிக்கொண்டு  நின்றாள். “என் தாத்தா பேரு மா ,இப்படி டிரஸ் பண்ணிக்கிட்டு எனக்கு இப்படி ஒரு பெயரு, என் பெயரோட வரலாறு அப்புறம் தெரிஞ்சுக்கலாம், எனக்கு ஒரு உதவி செய்யணுமே நீ” என்றான் சிரிப்புடன்.

“நானா என்ன உதவி சார்” என்றாள் ஆச்சரியமாக.

“இந்த ரெக்கார்ட் நோட்டா  ஃபைனல் இயர் ஸ்டூடன்ட் நிதர்சன் கிட்ட கொடுத்துடு, அவன் உடனே இத சப்மிட்  பண்ணனும், எனக்கு அவசர வேல இருக்கு”.

“சார் அது வந்து அது அந்த ப்ளாக்ல இருக்கு” என்றாள் தயங்கியபடி.

“ஆமாமா அந்த ப்ளாக்ல தான் செகண்ட் ப்ளோர்ல, செகண்ட் ரூம் தான், கொஞ்சம் தந்துரு மா, வேற எந்த ஸ்டூடண்டும் இந்த பக்கம் வரல அதான் உன்கிட்ட தரேன்”.

அப்பொழுதுதான் பூர்ணா கவனித்தாள். அந்த வராண்டாவில் இவர்கள் இருவர் மட்டுமே இருப்பதை.” சரி சார் ” என்று வாங்கிக் கொண்டாள்.

“தேங்க்ஸ் மா”.

“பரவால்ல சார்” என்று அந்த பிளாக்கிற்கு செல்லும் வழியில் இறங்கிப் போக போனாள்.

“பூர்ணா உன் போன் நம்பர் சொல்லுமா”.

“சார் போன் நம்பர் எதுக்கு??” என்றாள் பயத்துடன்.

“அட என்னமா உன்கிட்ட எவ்ளோ! இம்பார்ட்டெண்ட் ஒர்க்கு கொடுத்து இருக்கேன், நீ பாட்டுக்கு மிஸ் பண்ணிட்டா அதுக்கு தான், உனக்கு சந்தேகமா இருந்த என் ஐடி கார்ட பாரு” என்று போட்டோவை மறைத்து சாதாரணமாக பிடிப்பது போல் காட்டினான். அதில் சோலமுத்து, ஹச்.ஓ.டி ஆப் எம்.பி.ஏ டிபார்ட்மெண்ட் என்று இவர்கள் காலேஜ் பெயர் போட்டு இருந்தது. பூர்ணா அவனிடம் தன் நம்பரை கொடுத்துவிட்டு அந்த பிளாக்கிற்கு  போகும் வழியில் இறங்கி போனாள்.

“டேய்! மச்சி பிடிச்சவங்கள விட்டுட்டு வாங்கடா அவ  போறா” என்று சத்தம் போட்டான். அவன் நண்பர்கள் நான்கு பேரும் மாணவர்களை அந்த பக்கம் போக விடாமல் தடுத்து நிறுத்தி வைத்திருந்தனர், அவர்களை விட்டுவிட்டு ஓடி வந்தனர்.

“டேய்! அவ இந்த வழியா போற நம்ம மாடி வழியா போயிடலாம் , வாங்கடா” என்று ஓடிக்கொண்டே போட்டிருந்த டையை கலட்டி நண்பர்களிடம் கொடுத்தான்.

“டேய்! வேகமா டிரஸ் மாத்திட்டு வாடா , ரெஸ்ட் ரூம் போ” என்று சட்டையை கொடுத்தான் ஹரி. அதை  வாங்கி மாற்றிக் கொண்டு ஐந்து பேரும் கிளாசுக்கு ஓடி சென்று இரண்டாவது பெஞ்சில் உட்கார்ந்தனர்.

“எங்கடா போயிட்டு வரீங்க இப்படி மூச்சு வாங்குது இந்த தண்ணிய குடிங்க” என்று தண்ணீரை கொடுத்தாள் கிளாஸ்மேட் ஒருவள்.

ஐந்துபேரும் தண்ணீரை வாங்கி குடித்து மூச்சை சீராக விட்டனர்.  அப்பொழுது பூர்ணா கிளாஸ் முன்னாடி வந்து நின்றாள். நிதர்சன்  நண்பர்களிடம் பேசிக் கொண்டே இருப்பது போல் காட்டிக் கொண்டான்.

“எக்ஸ்க்யூஸ் மீ இங்க நிதர்சன்னு” என்றாள் தயங்கியபடி.

“அந்த சைடு செகண்ட் பென்சில் இருக்கான்”, என்றான் ஒருவன்.

“தேங்க்யூ” என்று உள்ளே சென்று, ‘யாரு நிதர்சன்னு தெரியலையே’, என நினைத்துக்கொண்டே, ” இங்க நிதர்சன் யாரு??” என்றாள் தயங்கியபடி.

“நா தான்  யாரு நீங்க??”.

அவனை பார்த்ததும் பூர்ணாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இவளிடம் நோட் கொடுத்தவனும் இவனும் ஒரே மாதிரி இருந்தனர். “நீங்க நீங்கதானே என்கிட்ட இந்த ரெக்கார்ட் நோட் கொடுத்து உங்க கிட்ட கொடுக்க சொன்னது” என்றாள் சந்தேகமாக.

“நானே எதுக்கு என் ரெக்கார்டு நோட்டை  உங்க கிட்ட கொடுத்து என்கிட்ட ஏன் கொடுக்க சொல்லணும், நா  இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் உங்கள பார்க்கிறேன், ஆ… இப்ப புரியுது, நீங்க என் அண்ணாவ பார்த்து இருப்பீங்க, நானும் என் அண்ணாவும் ஒரே மாதிரி தான் இருப்போம்” என்றான் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு.

“அப்படியா என்னால நம்பவே முடியல உங்க அண்ணா உங்க கிட்ட ரெகார்ட் நோட்ட தரச் சொன்னாங்க இந்தாங்க” என்று தர போனாள். அப்பொழுது,

“என்ன சத்தம் இங்க??” என்று கேட்டுக்கொண்டே ஓர் ஆசிரியர் வந்தார்.

“ஏய்!! வந்து உட்காரு இல்லனா நீ அந்த ப்ளாக்ல இருந்து இந்த பிளாக் வந்ததுக்கு, சஸ்பெண்ட் பண்ணிடுவாங்க” என்று இழுத்து பக்கத்தில் உட்கார வைத்தான். பூர்ணாவிற்கு பயத்தில் கை கால்கள் லேசாக நடுங்கியது. நிதர் சிரிப்புடன் அவள் கையை லேசாக பிடித்து அழுத்தினான்.

நிதர்சனின் இந்த கண்ணாமூச்சி விளையாட்டை பூர்ணா  கண்டுபிடிப்பாளா??? ஷ்யாம் அபுவை கஷ்டத்தில் இருந்து காப்பாற்றுவானா??? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்……….

💗வரமாய் வருவேனடி💗…..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்