வரம்-1
“ஷ்யாம் கண்ணா அம்மா உனக்காக ஒரு விஷயம் பண்ணியிருக்கேன், அதுக்கு நீ ஓகே சொல்லனும் ” என்று நிபந்தனை வைத்தார் பாவனி .( வரம் நாயகனின் அம்மா).
“என்ன மிஸ்டர் அன்பு உங்க மனைவி ஏதோ புதிர போடுறாங்க?? என்ன விஷயம்??” என்று புருவம் உயர்த்தினான் ஷ்யாம் யூதன் ( வரம் தரும் நாயகன் ).
தன் முன்னால் ஆறு அடி உயரமும், உடற்பயிற்சியினால் கட்டுக்கோப்பான உடலையும், நேர்த்தியான நெற்றியும், மற்றவர்களை கவர்ந்து காந்தம் போல இழுக்கும் கண்களையும், கூர்மையான நாசியும், அடக்கமான அழகான மீசையும், எப்போதுமே சிரிப்புடன் இருக்கும் உதட்டையும் கொண்டு தன் முன் அமர்ந்து பேசும் தன் மகன் என்று கர்வத்தோடு பார்த்தனர் அன்பு செல்வன் மற்றும் பவானி தம்பதியினர்.
“என்ன ரெண்டு பேரும் இப்படி பார்க்கிறீங்க?? மிஸ்டர் அன்பு நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரல??” என்றான் கிண்டலாக சிரித்துக்கொண்டே.
“அது வாடா கண்ணா உன் அம்மா உனக்கு கல்யாணம் பண்ணி பார்க்கானும்னு ஆசப் படுறா” என்றார் அன்பு செல்வன் (ஷ்யாமின் அப்பா) சிரித்துக்கொண்டே.
“அம்மா என்னம்மா?? பொண்ணு ஏதும் பாத்துட்டியா இல்ல, நான் பார்க்கட்டுமா?? ” என்று கண்ணடித்தான்.
“நீ பார்த்திருந்தா தான் எனக்கு வேல மிச்சமாயிருக்குமே , ஒரு பொண்ணு எனக்கு பிடிச்சிருக்கு, ஜாதகம் பார்த்தோம் பொருத்தமா இருக்கு, நீ போட்டோவப் பார்த்துட்டு ஓகே சொன்னா பொண்ணு பார்க்க சண்டே போகலாம்” என்றார் எதிர்பார்ப்புடன்.
“பொண்ணு என்ன பண்றாங்க?? உனக்கு பிடிச்சிருக்காமா???” என்றான் விளையாட்டுதனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு.
“எனக்கு பிடிக்கிறது முக்கியம் இல்ல, உனக்கு பிடிக்கணும் நீதான் வாழ போற நா இல்ல , பொண்ணு பேரு பூர்ண வர்ஷினி, எம்பிஏ முடிச்சுருக்கா, ஒரு பிரைவேட் கம்பெனியில்ல வொர்க் பண்றா, அவகூட பொறந்தது ஒரே ஒரு தங்கச்சி, அப்பா பிசினஸ்மேன்” என்று விவரம் சொன்னார்.
“ஷ்யாம் நோட் பண்ணிக்கோ மச்சினிச்சி இருக்கலாம் ” என்றார் அன்பு கிண்டலாக.
“அட சும்மா இருங்க, போட்டோவ முதல்ல பாரு டா ” என்று ஷ்யாமிடம் போட்டோவை கொடுத்தார்.
“ம்ம்.. பொண்ணு நல்லா தான் இருக்காங்க, எங்க இருக்காங்க?? எந்த ஊர்??” என்று போட்டோவின் பின்னால் திருப்பி அட்ரஸ் டீடைல்ஸ் பார்த்தான்.
“போலாமாடா??” என்றார் பவானி எதிர்பார்ப்புடன்
“அம்மா நிதிக்கு கல்யாணம் முடியட்டும், அப்பறம் எனக்கு பண்ணலாம் ” என்றான்.
“ம்ம்.. அவள என்னமோ வெளிநாட்டுக்கு அனுப்புற மாதிரி நிதி கல்யாணம் முடியாட்டும்னு சொல்ற, உன் ஃப்ரெண்ட் அரவிந்த தானே கல்யாணம் பண்ணப் போறா, அவ கல்யாணத்துக்கும் உன் கல்யாணத்துக்கும் என்னடா சம்பந்தம்??” என்றார் கேள்வியாக.
“நல்ல கேள்வி, ஷ்யாம் இப்ப என்ன பண்ணுவ?? இப்ப என்ன பண்ணுவ??” என்றார் கிண்டலாக.
“அப்பா கொஞ்சம் அமைதியா இருங்க பா, சரி மா போலாம் சண்டே எனக்கு ஓகே”.
“அப்பா…. இப்ப தான்டா எனக்கு சந்தோஷமா இருக்கு ” என்று பெருமூச்சு விட்டுக் கொண்டு உள்ளே சென்றார் பவானி.
“ஷ்யாம் அம்மா தனியா இருக்க ரொம்ப பீல் பண்றா டா, அதுக்குதான் உன்னைய கல்யாணம் பண்ண சொல்றா, வர பொண்ணு அவளுக்கு மகளாமாம்” என்றார் சிரிப்புடன்.
“அதான் நிதி இருக்காளே பா” என்றான் கிண்டலாக.
“அவ அவங்க வீட்டுல இருக்கா டா, நம்ம ரெண்டு பேரும் ஆபீஸ் போயிருவோம் இவ்ளோ பெரிய வீட்ல தனியா இருக்க, தனிமையா இருக்கிற மாதிரி அவ ஃபீல் பண்றா டா” என்றார் பொறுமையாக.
“அப்பா எனக்கு புரியுது அதான் ஓகே சொல்லிட்டேன், சரிப்பா நான் கிளம்புறேன் வேல இருக்கு, பாய்ப்பா பாய் மா ” என்று பவானியை கட்டி பிடித்து கன்னத்தில் முத்தமிட்டு சிரிப்புடன் சென்றான்.
அன்புச்செல்வன் மற்றும் பவானி இருவரின் ஒரே புதல்வன் தான் ஷ்யாம் யூதன், எம்.பி.ஏ லண்டனில் முடித்தான். இவன், நிதர்சன் மற்றும் அரவிந்த் மூவரும் சேர்ந்து கம்பெனி வைத்து நடத்துகின்றனர்.அரவிந்த் இவர்களின் பள்ளியில் இருந்தே நண்பன். நிதர்சன் நிதிலா உடன்பிறந்தவர்கள். நிதிலா மற்றும் அரவிந்த் இருவரும் காதலித்ததால் வீட்டில் அனைவரின் சம்மதத்தோடு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
அன்பு செல்வன் மற்றும் கணேஷ்(நிதர் அப்பா) உடன் பிறந்த சகோதரர்கள் இல்லை. இவர்களின் இரு தாத்தாவும் உடன்பிறந்தவர்கள். காலப்போக்கில் குடும்பம் பிரிந்து தனித்தனி ஆனது .எந்த விசேஷம் நடந்தாலும் இருவரும் ஒன்றாகவே செல்வார்கள். உடன் பிறந்த சகோதரர் போலவே நடந்துகொள்வார்கள் இரு வீட்டினரும்.
‘ஒரு கிளையண்ட் பார்த்துட்டு வரதுக்குள்ள மணி பன்னிரெண்டு ஆச்சு, சரியான அறுவ புடிச்சவன இருக்கான், இதனால தான் இந்த நிதரும், அரவிந்தும் என்கிட்ட தள்ளிடானுங்க போல’, என்று ஷ்யாம் மனதிலே புலம்பிக் கொண்டே காரை ஓட்டி வந்தான்.
‘இந்த ஏரியா தானே காலையில அம்மா காட்டின பொண்ணு ஏரியா, அம்மாவுக்கு அந்த பொண்ணு ரொம்ப பிடிச்சு இருக்கு போல’ என்று நினைத்தான்.
‘ஏன் உனக்கு பிடிக்கலையா??’ என்றது மனசாட்சி.
‘பிடிச்சிருக்கு ஆனா எனக்கு வேற எந்த ஃபீலிங்கும் வரல, அழகா இருக்காங்க, படிச்சிருக்காங்க மே பி பார்க்க பார்க்க தோண்ணலாம்’ என்று நினைத்துக் கொண்டே ஓட்டினான்.
’19 ஆம் நம்பர் தானே அந்த பொண்ணு வீடு’, என்று மூன்று வீடு தள்ளி இருக்கும் போதே யோசித்தான். அப்பொழுது 19 ஆம் நம்பர் வீட்டின் காம்பவுண்ட் சுவரிலிருந்து ஒருவன் கீழே இறங்க முயற்சி செய்வது தெரிந்தது.
‘ஓ மை காட்.. திருடன்.. மணி பன்னிரெண்டு தான் ஆகுது, இந்த வீட்டு பொண்ண கல்யாணம் பண்றனோ!! இல்லையோ!!, இவன புடிச்சு கொடுக்கணும் ‘ என்று வண்டியை அங்கேயே நிப்பாட்டி விட்டு மெதுவாக பக்கத்தில் வந்தான். திருடன் கீழே குதித்தான். பின்னாலிருந்து இருக்கமாக திருடனை பிடித்து,” திருடன்.. திருடன்..”, என்று சத்தம் போட்டான்.
“ஐயோ! நா திருடனில்ல” என்றாள் ஓர் பெண்.
அப்பொழுதுதான் அவன் நிற்கும் நிலையும் அவள் சருமத்தையும் உணர்ந்து வேகமாக கையை எடுத்து, “திருடியா? ” என்று நக்கலாக கேட்டுக்கொண்டே அவள் ஓடாமல் இருக்க அவள் கையை இறுக்கமாக பிடித்தான்.
“இல்ல இல்ல நா திருடியும் இல்ல” என்றாள் வேகமாக.
அந்த இடம் லேசான வெளிச்சம் மட்டும் இருந்ததால் அவள் முகம் அவனுக்கு தெளிவாக தெரியவில்லை, அந்த வீட்டிலிருந்து ஒரு நாய் வெளியே வந்தது. இவன் அவள் கையை பிடித்து இருப்பதை பார்த்து, “லொள்… லொள்..”, என்று குறைக்க ஆரம்பித்தது.
“ஏய்! ஸ்கூபி குறைக்காத வீட்ல இருக்க எல்லாரையும் எழுப்பிடாத, இவர் என் ஃப்ரெண்ட் தான்” என்றாள் பொறுமையாக. நாய் அவன் முகத்தை உற்றுப் பார்த்தது.
“ஓ… நாயக் கூட கரெக்ட் பண்ணி திருடுறியா, இது என்ன புது டெக்னிக்கா… ?? உன்ன என்ன பண்றேன் பாரு?” என்றான் காட்டமாக.
“லொள்… லொள்”என்று குறைத்தது.
“ஸ்கூபி ப்ளீஸ் அப்பாவ எழுப்பிடாத, அந்த கிழவிக்கு உன் சத்தம் கேட்டா உடனே எழுந்து வந்துரும்” என்றாள் கெஞ்சலாக. ஸ்கூபி அமைதியானது. ஷ்யாம் வித்தியாசமான பார்வை இருவர் மேல் செலுத்தினான்.
“நா இந்த வீட்டு பொண்ணு தான், திருடியா இருந்தா பெரிய பேக் எடுத்துட்டு வருவாங்க, இங்க பாருங்க என்கிட்ட சின்ன சைட் பேக் மட்டும் தான் இருக்கு வேற எதுவும் இல்ல” என்று காட்டினாள்.
“நீ சொல்றத நான் எப்படி நம்புறது??”.
“நா உண்மையைதான் சொல்றேன், இது இந்த வீட்டு நாய் தான் என் பாதுகாப்புக்காக வந்திருக்கு” என்றாள் உண்மையாக.
“சரி இந்த வீட்டு பொண்ணுன்னே வச்சுக்கலாம், இந்த நேரத்துல எங்க போற??” என்றான் விடாமல்.
“இன்னைக்கு தலைவர் படம் ரிலீஸ் நைட்டு சோ டிக்கெட் தான் கிடைச்சது, என் ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரு தெருமுனையில நிப்பாங்க, ஸ்கூபி தெருமுனையில என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட விட்டுட்டு போக தான் வந்து இருக்கு, உங்களுக்கு சந்தேகம் இருந்தா வாங்க என் ஃப்ரெண்ட்ஸ இன்ரோ பண்றேன்” என்றாள் உறுதியாக.
“சரி வா நா உன் கூட வரேன்”என்று அவள் கையை விட்டுவிட்டு அவளுடன் நடந்தான்.
“ஸ்கூபி நா சொன்னல்ல இவர் என் ஃப்ரெண்டுன்னு , நீ இன்னும் சத்தம் போட்டு இருந்த எல்லாரும் வந்திருப்பாங்க ,நா வசமா மாட்டி இருப்பேன்” என்று புலம்பினாள். ஸ்கூபி அவன் முகத்தையே பார்த்துக்கொண்டு அவளுடன் நடந்து வந்தது.
“ஆமா இந்த நேரத்துல இப்படி போறது சேவ்ஃப் இல்லைல்ல அப்புறம் ஏன் போற??” என்றான் அக்கறையாக.
“மார்னிங் காலேஜ், ஈவினிங் வீட்டுக்குள்ள வந்துட்டா வெளிய எங்கேயும் போகமுடியாது, நைட் சோ மூவி போகணும்னு ரொம்ப நாள் ஆசை, சொல்ல மறந்துட்டேன் என் பெயர் அபூர்வ வர்ஷினி(வரம் நாயகி), எல்லாரும் அபுன்னு கூப்பிடுவாங்க, நீயும் அப்படியே கூப்பிடலாம் ஃப்ரெண்ட்ஸ் ” என்று திரும்பி நின்று சிரிப்புடன் கை நீட்டினாள்.
அந்த இடத்தில் வெளிச்சம் நன்றாக இருந்ததால் அவள் முகத்தை அப்போது தான் பார்த்தான். அகன்ற நெற்றியும், பேசும் கண்களும் அதில் தெரியும் சோகமும், அளவான நாசியும், சிரிக்கும்போது குழி விழும் குண்டு கணமும், செவ்விதழும் , காதில் குட்டி வளையமும், வீட்டில் இருப்பது போல் கொண்டை போடுட்டு கேச்சரில் முடியை தலை சிவாமல் அடக்கி வைத்திருந்தாள், தன் அழகை உணராமல் இருப்பவளை கூர்மையுடன் பார்த்தான்.
“நீ என் ஃபிரண்ட் இல்லையா??” என்றாள் சோகமாக.
“ஏய்! அப்படி எல்லாம் இல்ல ஃப்ரெண்ட்ஸ்”, என்று கை குலுக்கினான்.
சிரிப்புடன் கையை விலக்கினாள். தெருமுனையில் இவர்கள் நண்பர் கௌதம் மற்றும் தீபன் நின்றனர். “அவங்க தான் என் ஃபிரண்ட்ஸ்” என்று கை தூக்கி காட்டினாள்.
“ஏய்! நாயே வராத வராதன்னு சொன்னா கேக்காம வந்து நிற்கிற, டிக்கெட் கிடைக்கலைன்னு சொல்றதுக்குள்ள ஏன்டி போன்ன வச்ச?”, என்று சத்தம் போட்டு கொண்டு நெருங்கி வந்தனர் இருவரும்.
“என்னது டிக்கெட்டு கிடைக்கலையா?? பிரியா சொன்னாலே!!” என்றாள் பாவமாக.
“அவ ஒரு லூசு, டிக்கெட் கிடைக்கவே இல்லை, போன் எங்க??” என்றான் தீபன் கோபமாக.
“பேக்ல சைலன்ட்ல இருக்குடா” என்று முழித்தாள்.
“ஏய்! ரெண்டு பேரும் இருங்க, ஆமா இவரு யாரு??”, என்றான் கௌதம்.
“என் புது ப்ரெண்ட் உன் பெயரென்ன??”, என்றாள் அவனிடம்.
“ஷ்யாம் யூதன்”.
“லொள்… லொள்..” என்று குறைக்க ஆரம்பித்தது.
“ஸ்கூபி ஷட்டப் டா”, நாய் குறைத்தில் முற்பாதி பெயர் அவள் காதில் விழாமல் பிற்பாதி மட்டுமே விழுந்தது, “யூதன் இவன் கௌதம், இவன் தீபன்” என்று அறிமுகம் செய்தாள்.
“சார் இவ ஒரு லூசு தப்பா எடுத்துக்காதீங்க, இவ இப்படித்தான் ஃப்ரெண்ட் பிடிச்சிட்டா மரியாத இல்லாமல் பேசுவா , உரிம எடுத்து பேசுவா தப்பா எடுத்துக்காதீங்க” என்றான் கௌதம் தயங்கியபடி.
“நோ ப்ராப்ளம் எனக்கு இவ கிட்ட பேசுற அப்பவே புரிஞ்சு போச்சு, எனக்கு இப்படி பேசுறது பிடிச்சுருக்கு தப்பா தெரியல,இதான் என் விசிட்டிங் கார்டு ஏதாவது ஹெல்ப் வேணும்னா கால் பண்ணுங்க” என்று இருவரிடமும் தன் கார்டை கொடுத்தான்.
“தேங்க்ஸ் சார் “, என்றனர்.
“ஏய்! லூசு இனிமே போன் எடுத்த எங்கள கொஞ்ச பேச விடு, நீ வருவேன்னு தான் வேஸ்டா இந்த தெருவுக்கு வாட்ச்மேன் மாதிரி நிக்கிறோம் டி ” என்றான் தீபன் பொய்யான கோபத்துடன்.
“ஓ.. அப்ப என் வீட்டு முன்னாடி வந்து நிக்க வேண்டியது தானே!!!” என்றாள் குத்தலாக.
“யாரு உங்க அப்பா விருமாண்டி கிட்ட திட்டு வாங்குறது??? நீ எங்கள பார்த்தா ஏழு ஊருக்கு கேக்குற மாதிரி கத்தி பேசுவ, அப்ப உங்க அப்பா எங்களை பிடிச்சுக்கவா அதுக்கு வேற ஆள பாரு மா”, என்று தூசி தட்டுவது போல் செய்தான் கௌதம்.
“ம்ம்… இது எல்லாம் தெரிஞ்சு தானே உங்கள தெருமுனையில நிற்க சொன்னேன், சரி ஓகே டைமாச்சு போய் தூங்குங்க நானும் வீட்டுக்கு போறேன், ஸ்கூபி நாம போலாமா” என்றாள். உடனே அது மண்டையை ஆட்டியது. “ஸ்வீட் பாய்”, என்று குனிந்து அணைத்து முத்தமிட்டாள். அபுவின் ஒவ்வொரு அசைவும் ஷ்யாம் அறியாமல் அவன் மனது உள்வாங்கியது.
“ஏய்! கொஞ்சுனது போதும்டி நீ கிளம்பு “, என்றான் தீபன்.
“நீங்க ரெண்டு பேரும் கூட வரலயா??” என்றாள் வேண்டுமென்றே.
“உன் அப்பன் விருமாண்டி கிட்ட யாரு மாட்டிகிறது?? எப்படி வந்தியோ அப்படியே போயிடு”, என்றான் கௌதம் விளையாட்டாக. அபு முறைத்தாள்.
“இவ வீட்டு பக்கத்துல தான் என் கார் நிப்பாட்டி வச்சிருக்கேன், நா விட்டுட்டு போறேன் ” என்றான் ஷ்யாம்.
“தேங்க்ஸ் சார் ஆமா இந்த அர்த்த ராத்திரியில்ல இவர எப்படி ஃப்ரெண்டு பிடிச்ச”, என்றான் தீபன் கிண்டலாக. ஷ்யாம் நடந்ததை சொன்னான் .கௌதம் மற்றும் தீபன் விழுந்து விழுந்து சிரித்தனர்.
“இது ஒன்னும் அவ்ளோ பெரிய காமெடி இல்லையே!!” என்றாள் பொய்யான முறைப்புடன்.
“எங்களுக்கு தெரியும் என்னைக்காச்சும் நீ இப்படி வந்து நிப்பேன்னு, நீ சொல்ரத சார் நம்பினதுனால தப்பிச்ச இல்லனா”,
என்றான் கௌதம்.
“இல்லன்னா என்ன போலீஸ்கிட்ட மாட்டியிருப்பா, போலீஸ் கிட்ட மாட்டுனா கூட கவலைப்பட மாட்டா அவங்க அப்பா விருமாண்டி கிட்ட மாட்டினா அவ்ளோ தான், இனிமே இப்படி வராத அபு, உன் நல்லதுக்கு தான் சொல்றேன்”, என்றான் தீபன் விளையாட்டுத்தனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு.
“ம்ம்.. புரியுது போன் அட்டென்ட் பண்ணி பேசிட்டு வரேன்” என்றாள் குறும்புடன்.
“உன்ன…”, என்றனர் இருவரும் கோபமாக.
“ஓகே.. ஓகே.. இனிமே இப்படி பண்ணமாட்டேன், யூது வா போலாம் ” என்றாள் சாதாரணமாக.
“பாய் மறுபடியும் ஒரு நாள் மீட் பண்ணலாம்” என்று அவளுடன் சென்றான்.
“உன் மேல உன் ஃப்ரெண்ட்ஸ்கு ரொம்ப பாசம் அபு, எப்படி தெரு முனையில நின்னு நம்மள பாக்கிறாங்க பாரு, உன்னைய கடத்திட்டு போயிடுவேன்னு பார்க்குறாங்களோ!!” என்றான் சிரிப்புடன்.
“என்னைய கடத்திட்டு போனா உன் நிலைமை கவலைக்கிடமா மாறிடும் ,அதுக்குதான் உன்ன காப்பாத்த நின்னு பார்க்கிறாங்க” என்றாள் கிண்டலாக. ஷ்யாம் சிரிப்புடன் அவளை பார்த்தான்.
நண்பர்களையும் விட்டுக்கொடுக்காமல் தன்னையும் விட்டு கொடுக்காமல் பேசும் அவளின் எண்ணம் அவன் மனதில் அவள் மேல் நல்ல மதிப்பை உருவாக்கியது.
“ஓகே! யூது நாம மறுபடியும் பார்க்கலாம்”, என்று சுவர்மேல் இவள் ஏறுவதற்காக ஓர் பெரிய கல்லை போட்டு வைத்திருந்தாள். அந்த கல் மேல் ஏறினாள்.
“எப்ப பாக்கலாம்??, என்னைய மறந்துட்டானா??” என்றான் விளையாட்டாக.
அபு சிரித்துக்கொண்டே , “இவ்ளோ! ஹேன்ட்சம் பாய்ய யாராச்சும் மறப்பாங்களா?? ம்ம்.. “,என்று புருவம் உயர்த்தி இறக்கினாள்.
ஷ்யாம் சிரிப்புடன்,” உன்னைய பார்த்ததுல எனக்கு ரொம்ப ஹேப்பி” என்றான் உண்மையான சந்தோஷத்துடன்.
“எனக்கும் தான் யூது” என்று காம்பவுண்ட் சுவரின் மேல் ஏறி உட்கார்ந்து அவனை பார்த்தாள்.
“பத்திரமா வீட்டுக்கு போ யூது, ஸ்கூபி கேட் இன் டா ” என்றாள் சிரிப்புடன்.
ஸ்கூபி ஷ்யாமை ஒர் பார்வை பார்த்து அவன் கால் பக்கத்தில் வந்து நின்றது. ஷ்யாம் குனிந்து,”
என்ன ஸ்கூபி குட் நைட் ” என்று லேசாக அணைத்து அதன் தலையை தடவி விட்டு எழுந்தான்.
“ஸ்கூபிக்கு உன்னைய ரொம்ப பிடிச்சு இருக்கு அதான் இப்படி பண்ணுது யூது, டைம் ஆச்சு ஸ்கூபி கேட் இன்” என்றாள்.
ஸ்கூபி கேட்டை தாண்டி உள்ளே வேகமாக சென்றது.
“பாய் பாய் யூது பத்திரமா போயிட்டு வா, குட்நைட்” என்று உள்ளே மெதுவாக இறங்கி சென்றாள்.
ஷ்யாம் உதட்டில் சிரிப்பு உறைந்து நின்றது. வண்டியை எடுத்துக்கொண்டு வீடு நோக்கி சென்றான்.’என்னைய இவ யூதன்னு கூப்பிட்ட, அப்பறம் யூதன் யூதுவா மாறி போச்சு, காலேஜ் படிக்கிறவ இப்படி என் பேர சொல்லி கூப்பிடுடான்னு என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சொன்னா, என்னைய ஓட்டி தள்ளிடுவான்னுங்க’ என்று நினைத்துக் கொண்டான்.
மறுநாள் காலையில்,”அம்மா பூர்ணா இங்க வாடா”, என்று பாசமாக அழைத்தார் சந்திரமோகன்.( அபுவின் அப்பா, நம்ம பாஷைல சொல்லணும்னா விருமாண்டி)
“என்னப்பா??”, என்று பக்கத்தில் உட்கார்ந்தாள் பூர்ண வர்ஷினி (அபுவின் அக்கா).
“இந்த போட்டோல இருக்க பையன பாரு” என்று தந்தார்.
“ம்ம்.. பையன் அழகா இருக்கான், யாருப்பா??”.
“உனக்கு பார்த்து இருக்க மாப்பிள்ளை, ஃப்ரெண்ட்ஸ் மூணு பேரு சேர்ந்து சொந்தமா கம்பெனி வச்சி இருக்காங்க, பெரிய பணக்கார குடும்பம் மொத்த சொத்துக்கும் இவன்தான் வாரிசு, கூட பிறந்தவங்க யாரும் இல்ல, ஊட்டி, கொடைக்கானல்ல எஸ்டேட், கெஸ்ட் ஹவுஸ் இப்படி இன்னும் நிறைய இருக்கு, பையன் லண்டன்ல எம்பிஏ படிச்சுருக்கான், விசாரிச்ச வரைக்கும் ரொம்ப நல்ல பையன்னு தான் சொன்னாங்க, பவானி குரூப் ஆப் கம்பெனி இவங்களோட தான், இவங்களுக்கு உன்னைய பிடிச்சிருக்கு, நீ ஓகே! சொன்னா சண்டே வர சொல்லலாம்” என்றார்.
ஒரு நிமிடம் யோசித்து விட்டு,”எங்க அப்பாவுக்கு என்ன இஷ்டமோ அதான் என் இஷ்டம், வர சொல்லுங்க பா” என்றாள் சிரிப்புடன்.
“டேய்! மோகன் நா சொன்னேன்ல பூர்ணா ஒத்துப்பான்னு பார்த்தியா” என்றார் ராஜாத்தி பாட்டி(அபுவின் பாட்டி) சந்தோஷமாக.
“என் பொண்ணுல்ல அப்படிதான் இருப்பா” என்றார் பெருமையாக. இதனை இரு ஜோடி கண்கள் பார்த்தது. ஒன்று ஏக்கமாகவும் இன்னொன்று சலிப்புடனும் பார்த்தது.
அபுவின் ஞாபகம் அடிக்கடி ஷ்யாமுக்கு வந்தது. அவன் நண்பர்களிடம் கூட அபுவை பற்றி சொல்லாமல் மறைதான். இப்படியே ஞாயிற்றுக்கிழமை வந்தது.
பொண்ணு பார்க்க அன்பு செல்வன், பவானி, நிதிலா மற்றும் ஷ்யாம் சென்றனர் .சந்திரமோகன் மேகலா மற்றும் ராஜாத்தி வரவேற்றனர். மேகலா அனைவருக்கும் பலகாரம் பரிமாறிவிட்டு பூர்ணாவை அழைத்து வந்தார்.
“உட்காருமா இந்த பார்மாலிட்டி எல்லாம் வேண்டாம் ” என்றார் பவானி.
பூர்ணா லேசான சிரிப்புடன் அவர்களுக்கு எதிர் சோபாவில் உட்கார்ந்தாள். ஷ்யாமின் கண்கள் அவ்வபோது வீட்டை நோட்டமிட்டது.
“இவ என் அண்ணேன் பொண்ணு, என் பொண்ணு மாதிரி தான், அண்ணனுக்கு பொண்ணு பார்க்க போறோம்னு தெரிஞ்சதும் நானும் வருவேன்னு வந்துட்டா” என்றார் அன்பு சிரிப்புடன்.
“இப்படி தான் தம்பி இருக்கணும் அக்கறையா” என்றார் ராஜாத்தி பாட்டி சிரிப்புடன்.
“ரெண்டு பேரும் தனியா பேசணும்னா பேசுங்க, நீங்க தான் வாழ போறீங்க, என்னமா நா சொல்றது ” என்றார் அன்பு தன் கருத்தை நடக்க வைப்பது போல்.
“ம்ம்.. சரி தான் பா பூர்ணா தம்பிய அழைச்சிட்டு போய் பேசுமா”, என்றார் பாட்டி.
“சரி பாட்டி வாங்க”, என்று கீழே இருந்த ரூமிற்கு அழைத்து சென்றாள்.
“ஹாய்!! என் பேர் ஷ்யாம் யூதன், என் ஃபிரண்ட்ஸ் கூட சேர்ந்து எஸ்ஏஎன் கம்பெனி வச்சிருக்கோம் ” என்றான் சிரிப்புடன்.
“ஹாய்! ஷ்யாம் நா பூர்ண வர்ஷினி ,எம்பிஏ இங்க தான் படிச்சேன், இப்போ ஒரு பிரைவேட் கம்பெனில ஹச் ஆர்ரா ஒர்க் பண்றேன்”, என்றாள் லேசான சிரிப்புடன்.
“குட் பூர்ணா உங்களுக்கு என் கிட்ட ஏதாச்சும் கேட்கணுமா கேளுங்க” என்றான் அதே சிரிப்புடன்.
“கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்கு போக விடுவீங்களா??” என்றாள் கூர்மையான பார்வையுடன்.
“அது உங்க இஷ்டம் அது உங்களோட சுதந்திரம் அதுல நா தலையிட மாட்டேன் ” என்றான் உண்மையாக.
“தேங்க்யூ.. என்னைய உங்களுக்கு பிடிச்சிருக்கா??” என்றாள் எதிர்பார்ப்புடன்.
“தேங்க்யூ… எதுக்கு உங்க சுதந்திரத்தை பறிக்க எனக்கு எந்த உரிமையும் இல்லை, நைட் பத்து மணிக்குள்ள வீட்ல இருக்கணும் ஏன்னா உங்க சேப்டிகாக மட்டும் தான், அப்புறம் ம்ம்… யா உங்களுக்கு??” என்றான்.
சேப்டிகாக என்று அவன் சொன்னதில் உள்ள அக்கறையை அவள் மனம் உணர்ந்தது.” ம்ம்.. பிடிச்சிருக்கு” என்றாள் சிரிப்புடன்.
“வேற ஏதாச்சும் கேட்கனுமா??” என்றான்.
“இப்போதைக்கு எதுவும் இல்லை, உங்களுக்கு??”.
“அப்ப சரி எனக்கு எதுவும் இல்லை, வாங்க வெளிய போலாம்” என்று சிரித்த முகத்துடன் வெளியே வந்தனர். இவர்கள் முகத்தை பார்த்து பெரியவர்கள் புரிந்து கொண்டனர். ஷ்யாம் மற்றும் பூர்ணா அவரவர் இடத்திலேயே வந்து உட்கார்ந்தனர். இருவரும் தன் சம்மதத்தை சொன்னார்கள்.
“நிதிலா கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் இவங்க கல்யாணத்த வச்சிக்கலாம் சம்மந்தி ” என்றார் அன்பு.
“சரிங்க சம்மந்தி ” என்றார் மோகன் சந்தோஷமாக.
ஸ்கூபி உள்ளே வந்து பூர்ணாவின் காலடியில் நின்றது. ஸ்கூபிய பார்த்ததும்,’ இது கன்ஃபார்மா அபு வீடு தான் அவ எங்கே??’ என்று ஷ்யாம் நினைத்தான்.
“இந்த டாக் உன் பெட்டா மா, உனக்கு பெட்னா ரொம்ப பிடிக்குமாடா” என்றார் பவானி அன்பாக.
“ஆமா ஆன்ட்டி இது சின்ன வயசுல இருந்தே என் கூட தான் இருக்கு, ஸ்கூபி சிட் டவுன்”.
அது அவளின் காலடியில் உட்கார்ந்து, சமையலறையை அவ்வபோது பார்த்துக் கொண்டு இருந்தது. அதை பார்த்த ஷ்யாம் விக்கல் எடுப்பது போல் நடித்தான்.
“ஏய்! அபு மாப்பிள்ளைக்கு விக்கல் வருது பாரு தண்ணி கொண்டு வா” என்றார் பாட்டி.
கையில் டிரேவில் தண்ணி தம்லரும் லாங் ஸ்காட் மேலே ஓர் சுடிதார் டாப் போட்டு, தலைமுடியை ஒரே கேச்சரில் அடைந்து, முகத்தில் சிறிய கருப்பு நிற பொட்டில் அவனுக்கு தேவதையாக தெரிந்தாள். தண்ணீரை அவனிடம் தந்துவிட்டு அவர்களுக்கு எதிரே இருந்த சோபாவின் பின்னால் சென்று நின்றாள்.
“இவ என் ரெண்டாவது பொண்ணு பேரு அபூர்வ வர்ஷினி, பைனல் இயர் படிக்கிறா” என்று அறிமுகப்படுத்தினார் மோகன்.அபு லேசாக அனைவரையும் பார்த்து சிரித்தாள். அவள் சிரிக்கும்போது அவள் கன்னக்குழி அழகாக தெரிந்தது.
“என்ன அண்ணி உங்க சிஸ்டர் ரொம்ப சைலன்டா பேச மாட்டாங்களா??” என்றாள் நிதி. ஷ்யாம் தண்ணீரைக் குடித்தான்.
“அவ யார்கிட்டயும் பேசமாட்டா, ரொம்ப சைலன்ட், எங்க கூட எங்கேயும் வெளியே வரமாட்டா, சரியான தனிமை விரும்பி” என்றாள் லேசான கடுப்பை மறைத்துக் கொண்டு.
ஷ்யாமிக்கு புரை ஏறியது,” பார்த்து.. பார்த்து..”, என்றனர்.
ஷ்யாம் அவளை பார்த்தான். அவள் மற்றவரை பார்த்தாள் அவரவர் பேசிக்கொண்டு இருந்தனர். ஷ்யாமை பார்த்து நாக்கை நீட்டி பழிப்பு காட்டிவிட்டு சத்தம் வராமல் பேசுவதுபோல் சைகை செய்து சிரித்தாள். ஷ்யாமின் முகத்தில் சிரிப்பு பரவியது. இதனை நிதிலா கவனித்துவிட்டு ஷ்யாமையும் அபுவையும் மாறி மாறிப் பார்த்தாள்.
“அண்ணா..” என்றாள் மெதுவாக.
ஷ்யாம் அவன் உதட்டின் மேல் கை வைத்து யாரும் அறியாமல், “அமைதியாய் இரு” என்றான் மெதுவாக. ஸ்கூபி எழுந்து அபுவை பார்த்தது.
“என்ன ஸ்கூபி ஏன் எழுந்துட்ட??” என்றாள் பூர்ணா. அபு ஸ்கூபி உட்காரு என்று சைகை செய்தாள். அவளை அது ஏக்கமாக பார்த்தது.
“ஓ.. இவ நிக்கிறான்னு பார்க்கிறியா??, இவளுக்கு தான் உன்னைய பிடிக்காதுல்ல அப்புறம் ஏன் அவள பார்க்குற?? சிட் டவுன்” என்றாள் கண்டிப்பான குரலில்.
அபு கெஞ்சுவது போல் ஸ்கூபி பார்த்தாள் ஸ்கூபி அங்கேயே உட்கார்ந்தது.
“பூர்ணா..” என்றார் பாட்டி கண்டிப்புடன். “அது ஒன்னும் இல்ல சம்மந்தி சின்ன குட்டிக்கு நாயே பிடிக்காது ஆனா பாருங்க இந்த நாய் அவ கிட்ட தான் போகணும்னு அவளையே ஏக்கமா பார்க்குது அதான் இப்படி சொன்னா” என்று பாட்டி சமாளித்தார்.
“சாரி..” என்றாள் பூர்ணா பொதுவாக.
“அட என்னமா இதுல என்ன இருக்கு பிடிச்சவங்க கிட்ட தானே கோவத்த காட்டமுடியும், நாங்க தப்பா எடுத்துக்கல, என்ன பவானி??” என்றார் அன்பு.
“ஆமா பூர்ணா அதுகிட்ட எல்லா உரிமையும் உனக்கு இருக்கு” என்றார் பெருந்தன்மையாக.
ஷ்யாமிருக்கு குழப்பமாக இருந்தது. முதலில் பார்த்த அபுவிற்கும் இப்பொழுது பார்க்கும் அபுவிற்கும் மொத்தமாக மாறி இருந்தாள் அவளை உற்று பார்த்தான். அவள் முகத்தில் லேசான சோகம் வந்து நொடியில் மறைந்து சாதாரணமாக மாறியது. ஆனால் அவள் கண்களில் மட்டும் அந்த சோகம் இருந்தது. ‘முன்னாடி பார்க்குறப்ப இவ கண்ல ஏதோ சோகம் தெறிர மாதிரி இருந்தது அது என் பிரம்மன்னு நினைச்சேன், அது உண்மைன்னு இப்ப புரியுது’ என்று மனதில் நினைத்துக் கொண்டான்.
“அப்ப நாங்க கிளம்புறோம் சம்மந்தி நிதிலா நிச்சயத்துக்கு அண்ணனோட அழைக்க வரோம்”, என்றார் அன்பு.
“சரிங்க சம்மந்தி “, என்றார் மோகன் சிரிப்புடன். அனைவரும் கிளம்பி செல்ல போகும் போது அவளை யாரும் அறியாமல் பார்த்து ஷ்யாம் லேசாக தலை அசைத்தான். யாரும் அறியா வண்ணம்.” பாய்”, என்று கையை தூக்கி காட்டினாள்.
இந்த வீட்டிற்கு வரும்போது லேசா மனதுடன் வந்தவன் இப்பொழுது பல கேள்விகளுடன் சுமையோடு சென்றான்.
அந்த இரு ஜோடி கண்கள் யார்???? எதனால் அபு இப்படி வெளியே ஒரு மாதிரியும் உள்ளே ஒரு மாதிரியும் இருக்கிறாள்??? ஷ்யாம் எதனால் அபு இப்படி இருக்கிறாள் என்பதை கண்டுபிடிப்பானா??? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்……..
💗வரமாய் வருவேனடி💗….
சூப்பர்