Loading

தனா அழட்டும் என்று சிறிது நேரம் அவளைத் தன் நெஞ்சில் புதைத்துக் கொண்ட சரோ, சிறிது நேரத்துக்குப் பிறகு, “தனு மா…” என்று லேசாக அவளது காதில் அழைக்க,

அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டுச் சுற்றித் தன் கண்களைச் சுழல விடச் சுற்றித் தன் வீட்டு ஆள்கள் இருப்பதை உணர்ந்தவள் அவனிலிருந்து பிரிந்து நகர்ந்து நின்றாள்.

ருத்ரன் சிரித்துக்கொண்டே வந்து தன் தங்கையின் தோளில் கையைப் போட, காயத்ரி வேகமாக வந்து தனது தோழியின் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

“நீ கிளம்பு, நம்ம வெளியே போலாம்” என்றான் சரோ.

“இல்ல மாமா, அது அண்ணி…” என்று திக்கித் திணற “அகி கூப்பிட்டுப் போறா… நீ என் கூட வெளியே வரியா இல்லையா?”

தனது அண்ணியை நிமிர்ந்து பார்த்தாள் தனா.

தமிழ் அமைதியாகவே நிற்க, ருத்ரன் தான், “நீ போயிட்டு வா தனா” என்றான்.

தனது தாய் முறைப்பதைக் கூடக் காதில் வாங்காதவள், நேராகத் தனது அறைக்குச் சென்று கதவைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டுச் சரோ வாங்கிக் கொடுத்த புடவையைக் கட்டிக் கொண்டு வெளியில் வர,

தமிழ் ஃப்ரிட்ஜில் இருந்து பூ எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கத் தனது அண்ணியை ஒருமுறை திரும்பிப் பார்த்த தனா, பூவைத் தலையில் வைத்துக்கொண்டு தனது தாயைப் பார்த்தாள்.

அப்பொழுதும் பாக்கியம் அமைதியாக இருக்க, தனது அண்ணன், அம்மா வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டுச் சரவணன் உடன் வெளியில் வர, அகியும் வெளியில் வந்தாள்.

“அண்ணி தப்பா எடுத்துக்கிட்டிங்களா?” என்று கேட்க,

“உன்னை நான் ஏண்டி தப்பா எடுத்துக்கப் போறேன்” என்று தனாவின் தலையில் முட்டி விட்டுச் சிரித்து கொண்டே தனாவை, தங்கள் வீட்டிற்கு அழைத்து வர,

“அண்ணி நீங்க?” என்று கேட்கச் சிரித்த சரோ, “அவளும் நம்ம கூட தான் வரா…” என்றான்.

காரில் வெளியில் சென்றார்கள். ‘எங்க போறோம்?’ என்று வாய் வரை வந்த வார்த்தையை தனா அடக்கிக் கொள்ள,

அகி, சரோவுடன் கோவில் வந்து இறங்கினாள் தனா.

கோவிலுக்குச் சென்றவுடன் அங்கு மகியும் அமுதனும் இருக்க, “செல்லக்குட்டி” என்று அமுதனைத் தூக்கிக் கொள்ள,

“அத்தை…” என்று வேகமாகத் தாவினான். அவன் அத்தை என்று கூப்பிட, உடல் சிலிர்க்கத் தனது மாமாவைத் திரும்பிப் பார்த்துவிட்டு அவனைக் கொஞ்சச் செய்தாள்.

கோவிலுக்குள் சென்றவுடன் தனாவின் பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டது.

“எதுக்கு அண்ணி, என் பெயரில் அர்ச்சனை?” என்று கேட்டாள்.

“இன்னைக்கு உனக்குப் பிறந்தநாள், அதுவாச்சும் ஞாபகத்துல இருக்கா இல்லையா?” என்றாள்.

தனா தன்னையும் மீறிக் கண்கள் கலங்க,

“என்னோட பிறந்தநாள் யாருக்குமே ஞாபகத்தில் இல்லையா?” என்று கேட்டாள்.

சிரித்த மகி, “எல்லாருக்குமே ஞாபகத்துல இருக்கு சரியா? யாரும் மறக்கல, கல்யாண வேலையில ஓடிட்டு இருக்காங்க.”

மகியைப் பார்த்துச் சிரித்த தனா, “நீங்களும் இன்னைக்கு லீவா அண்ணா?” என்று கேட்க,

“ஆமாம்” என்ற தலை ஆட்டினான். பிறகு கோவிலில் சாமியைத் தரிசனம் செய்துவிட்டுக் கோயிலில் பிரசாதம் தருவதற்கு ஏற்ப அனைத்து ஏற்பாடுகளும் செய்திருக்க,

தனாவின் கையில் பிரசாதமும் கொடுத்துவிட்டுச் சிறிது நேரம் அங்கு உட்கார்ந்து வந்து விட்டு அடுத்தபடியாகத் துணிக் கடைக்குச் செல்ல,

“கல்யாணத்துக்குத் தேவையான துணி எல்லாம் எடுத்தாச்சே அண்ணி” என்றாள்.

“நீ வா…” என்று அவளது கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு சென்ற அகிலா, அவளுக்குத் தேவையான ஒரு சில உடைகளை எடுத்துக் கொடுக்க,

தனா ‘வேண்டாம்’ என்று சொல்வதற்கும் முன்பே சரோ ‘வாங்கிக்கொள்’ என்று கண்ணை மூடித் திறக்க அமைதியாக வாங்கிக் கொண்டாள் தனா.

பிறகு நகைக்கடைக்கு அழைத்துச் சென்று ஒரு சில பொருட்கள் வாங்கச் செய்தாள்.

அமைதியாக இருக்கச் சொல்லி சரோ ஆரம்பத்திலே சொல்லியிருந்ததால், ஒன்றும் புரியாமல் தனா அமைதியாக இருக்க,

மாலை 5 மணி போல் வீட்டில் கொண்டு வந்து விட்டார்கள்.

தமிழ் அப்போதுதான் பள்ளி முடிந்து வந்திருக்க, எதுவும் பேசாமல் தன் வேலையில் கவனமாக இருக்க, தன் தோழியைக் கட்டிக்கொண்டு, “ஏன் மேடம், மூஞ்சத் தூக்கி வச்சிட்டுச் சுத்துற?” என்றாள் அகி.

“அவ ஒன்னும் தப்பா பேசலையேடி” என்று அகி கேட்டாள்.

“நான் அவ தப்பாப் பேசினா என்று சொல்லவும் இல்ல, அவ விஷயத்தில் தலையிடவும் இல்லையே” என்றாள் தமிழ்.

“அண்ணி” என்று தனா சொல்ல,

“நான் ஒன்னும் சொல்லத் தேவையில்லை, நான் யாரு?” என்று தமிழ் கேட்க, ருத்ரன் அமைதியாகவே இருந்தான்.

சரவணன், “சரி தமிழ், எனக்கு வேலை இருக்கு” என்று விட்டுக் கிளம்ப,

“டீ குடிச்சிட்டுப் போ அண்ணா…” என்று சொல்ல,

“இல்ல தமிழ், நீ பாரு” என்று சொல்ல,

“மச்சான்…” என்றான் ருத்ரன்.

“இல்லடா எனக்கு வேலை இருக்கு. அப்பா தான் காலைல இருந்து காட்டில் இருக்காரு” என்று விட்டு எழுந்து செல்ல,

அவனது கையைப் பிடித்த தமிழ், “கோபமா அண்ணா?” என்று கேட்டாள்.

“உன் மீது கோபப்பட நான் யாரு தமிழ்?” என்று சொல்ல,

தமிழ் சரவணனையே பார்த்துக் கொண்டிருக்க, “இதே போல தான் அடுத்தவங்களுக்கும் வலிக்கும் என்ற உணர்வு, என் தமிழுக்கு எப்ப இருந்து போச்சு, என்று எனக்குத் தெரியல. நான் வரேன், உண்மையாவே எனக்கு வேலை இருக்கு” என்று விட்டு வெளியில் சென்று விட்டான்.

தமிழ் எதுவும் பேசாமல் தன்னுடைய ரூமுக்குள் சென்று விட, தாங்கள் வாங்கிய பொருட்கள் அனைத்தையும் தங்களது வண்டியிலேயே வைத்த அகி தனாவை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு, வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டுச் சென்று விட்டாள்.

தனா எதுவும் பேசாமல் ரூமுக்குள்ளே அடைந்து கிடக்க,

ருத்ரன் தான், “தனா, வெளிய வா” என்றான்.

தனா அழுது வடிந்த முகத்துடன் வெளியில் வர,

அப்பொழுதுதான் காலேஜ் முடிந்து வீட்டிற்குள் நுழைந்த காயத்ரி, தனது தோழியைக் கட்டிக்கொண்டு, “ஹாப்பி பர்த்டே, தனு குட்டி” என்று அவளது தாடையில் முத்தம் வைத்தாள்.

“அது கூட உங்க யாருக்கும் ஞாபகம் இல்லல” என்றாள் அழுகையுடன்.

“அப்படி இல்லடா” என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது, “கல்யாண வேலையில எல்லாருமே மறந்தாச்சு, இப்போ என்னடி அதுக்கு?” என்று தமிழ் கேட்டுக் கொண்டு வர,

“உங்களுக்கு கூட ஞாபகம் இல்லையா” என்று விட்டு அமைதியாகி விட,

“இங்க யாருக்கும் ஞாபகம் இல்லாம இல்லை சரியா? அண்ணா ஆசையா உனக்கு சர்ப்ரைஸ் பண்ணனும்னு நினைச்சு, உன்னை வெளியே கூப்பிட்டுப் போகணும்னு ஆசைப்பட்டு இருக்கு, அதனால் தான்” என்றாள்.

தமிழ் மனம் கேட்காமல், “உன்னைக் கேள்வி கேட்கிற உரிமை கூட எனக்கு இல்லையா தனா?” என்று கேட்க,

அவளைக் கட்டிக் கொண்டு அழுத தனா, “அண்ணி, நான் உங்களை எதுவுமே சொல்லலையே” என்றாள்.

காயு மண்டையைப் பிடித்துக் கொள்ளாத குறையாக, “இப்ப என்னதான் உங்க ரெண்டு பேத்துக்கும் பிரச்சனை?” என்று கேட்டாள்.

ருத்ரன் “ஒன்னும் இல்ல காயூ, உன் அண்ணனுக்கும், அக்காவுக்கும் வேற வேலையே இல்ல. என் தங்கச்சியைப் பிறந்தநாள் அதுவுமா அழ வச்சு வேடிக்கை பார்க்கிறாங்க” என்று விட்டு வெளியில் சென்றான்.

தமிழ் தனாவின் தாடையில் தட்டி விட்டு, “சும்மா…” என்று விட்டுச் சமையல் அறைக்குள் சென்று விட,

“இன்னிக்கி எங்கடி போயிட்டு வந்த அண்ணன் கூட” என்றாள் காயு.

தனா ஒன்று விடாமல் அனைத்தையும் சொல்ல,

இரவு அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட, தனா தன் தாயின் அருகில் சென்று, “உனக்கு என் மேல கோவமா மா?” என்று கேட்டாள்.

அவர் அமைதியாகவே இருக்க, “அப்போ யாருமே என்கிட்டப் பேச மாட்டீங்க அப்படித்தானே, நான் என்ன தப்பு பண்ணேன்? நான் அப்படிப் பேசினது தப்பா? மாமா எனக்கு முதன் முறையா புடவை எடுத்துக் கொடுத்து ஆசையா வெளிய கூப்பிட்டாரு. அப்ப வந்து அகி அண்ணி என்னைக் கூப்பிடும் போது எனக்கு என்ன பண்றதுன்னு தெரியாம தான் நான் அப்படிச் சொன்னேன்” என்று அழுகையுடனே சொல்ல,

வீட்டில் உள்ள அனைவரும் அவளைப் பார்த்துச் சிரித்து விட்டார்கள்.

அதன் பிறகு தான் தனா அனைவரையும் பார்க்க,

“சும்மா தனா, உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்க” என்று சொல்லி அனைவரும் சிரிக்க,

முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு, “எனக்கு ஒன்னும் சாப்பாடு வேண்டாம்” என்று எழுந்து கொள்ள,

ருத்ரன் சிரித்துக் கொண்டே தனது தங்கைக்கு இரண்டு மூன்று வாய் ஊட்டி விட்டான்.

“எனக்கு சாப்பிடத் தெரியும், நீ சாப்பிடு” என்று விட்டுச் சாப்பிட உட்கார்ந்தாள் தனா சிரித்த முகமாக.

ஒன்றாகச் சாப்பிட்டுவிட்டு அனைவரும் அவர்களது ரூமுக்குச் சென்று விட,

இங்கு அகி அவர்கள் வீட்டில் இரவு உணவு சாப்பிட்டு விட்டு அனைத்தையும் ஒதுங்க வைத்துவிட்டுத் தங்களது ரூமுக்குள் வர,

மகி அவளைப் பின்பக்கம் இருந்து கட்டிக்கொண்டு அவளது கழுத்து வளைவில் முத்தமிட,

“மகி, என்ன பண்றீங்க?” என்று கூச்சத்தில் நெளிந்தாள்.

“நான் என்னடி பண்றேன்? ஓவரா சீன் போடுற வரவர…”

“இன்னிக்குக் காலைல கட்டிருந்த புடவை எவ்ளோ அழகா இருந்தது தெரியுமா?” என்றான்.

“அதுக்கு அத்தனை பேர் இருக்கும் போது பப்ளிக்கா, அதுவும் அண்ணா இருக்காரு பக்கத்துல. அந்த நேரத்துல இடுப்புல கிள்ளுவாங்களா?” என்று அவனை முறைப்புடன் பார்த்துக் கொண்டே சிணுங்க,

“உனக்கு தாண்டி அண்ணன். எனக்கு மச்சான்டி” என்று சிரித்தான்.

“அது சரி” என்று சிணுங்கிக் கொண்டே அவன் கழுத்தில் தன் கையை மாலையாகப் போட்டாள்.

“என்ன, என் அகிக் குட்டி இன்னைக்கு சந்தோஷமா இருக்க போல” என்று அவளைத் தன் பக்கம் இழுத்து அவளது உதட்டை வருடிக் கொண்டே கேட்க,

“பின்ன சந்தோஷம் இல்லாமலா? என்று அவனது கையை லேசாகக் கடித்து விட்டுச் சொல்ல, “அதை இப்படியும் சொல்லலாம், செல்லம்” என்று விட்டு அவளது உதட்டில் கவிதை எழுது ஆரம்பித்தான்.

சிறிது நேரத்திற்குப் பிறகு அவளை விட்டு விலகியவன், அவளது நெற்றியில் இதழ் பதித்து விட்டு அவளது இடுப்பை வருட,

“மகி என்ன பண்றீங்க?” என்று நெளிந்தாள். “தம்பி இருக்கான்” என்றாள்.

“அவன் தூங்குறான்டி” என்று சிரித்த மகி, தன்னுடைய வேலைகளைக் காட்ட ஆரம்பித்தான்.

அவனிடம் மொத்தமாகக் கிறங்கி நின்றாள் அகி.

மறுநாள் பொழுது நன்றாக விடிந்தது. தூங்கி எழுந்தவுடன் காயத்ரி நேராகச் சரவணன் வீட்டிற்குச் செல்ல, சரவணன் வயல்வெளிக்குச் சென்று இருந்தான்.

முனுசாமி டீ குடித்துக்கொண்டு இருந்தார்.

“என்ன பெரியப்பா, காலையிலே ஒய்யாரமாக உட்கார்ந்து கொண்டு டீ குடிச்சிட்டு இருக்கீங்க போல… கல்யாண வேலை எல்லாம் எப்படி நடக்குது?” என்று கேட்டுக் கொண்டே வீட்டிற்குள் நுழைய,

“நீ வாடா காயுமா, உன் அக்கா இல்லாம பெரியப்பாவுக்குப் போரடிக்குது. எந்த நேரமும் படபட பட்டாசு மாதிரி பொரிஞ்சு கிட்டே இருப்பா. ஆத்தாளும், மகளும் பிச்சிகிட்டே இருப்பாங்க. வீட்ல சத்தமே இல்லாம உன் பெரியப்பனுக்கு போரடிக்குது” என்று சிரித்தார் முனுசாமி.

“அதுக்கு என்ன பெரியப்பா, இன்னும் கொஞ்ச நாள் போனா மாமியாரும், மருமகளும் செமையா குத்தாட்டம் போடுவாங்க, வெயிட் பண்ணுங்க. இன்னும் ஒரு பத்து நாள் தானே” என்று சிரித்தாள்.

அவளை முறைத்துக் கொண்டே வந்த இளவரசி, அவளது கையில் ஒரு டீ கிளாஸ் வைத்துவிட்டு, “நாங்க ஏன்டி பிச்சுக்குவோம்” என்று முறைத்தார்.

“இன்னும் கொஞ்ச நாள்ல நாங்களும் அதைப் பாக்க தானே போறோம்” என்று தனது பெரியப்பாவுடன் ஹைபை அடித்துக் கொண்டு சிரித்தாள் காயத்ரி.

அப்பொழுது அங்கு வந்த பாக்கியம்,

“அங்க உன்னைக் காணாமல் உன் அக்கா புலம்பிக்கிட்டு இருக்கா, நீ இங்க வந்து அண்ணிகிட்ட வாயாடிகிட்டு இருக்கியா?” என்று அவளது காதைப் பிடித்துத் திருக,

“பின்னாடியே மோப்பம் புடிச்சிட்டு வந்திருக்க பாத்தியா? உன் மருமக சொன்ன உடனே” என்று சிரித்தாள்.

“சரி சரி முனுசாமி, இளவரசி, வரேன். பாய் பாய்” என்று இருவருக்கும் டாட்டா காண்பித்து விட்டுத் தனது அத்தை உடன் வீட்டிற்குச் சென்றாள் காயு.

“அகிலா இல்லாத குறையே தெரியாம காயு தான் அப்பப்ப வந்துட்டுப் போறா” என்று சிரித்தார் முனுசாமி.

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்