Loading

தனது தங்கையின் தொடுகையில் தூக்கத்திலிருந்து லேசாகக் கண் விழித்த ருத்ரன் அவளைத் திரும்பிப் பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் படுத்துக்கொள்ள,

தனாவின் போன் ரூமில் அடித்துக் கொண்டே இருந்தது. அவள் கதவைச் சாற்றி விட்டு வந்ததால், போன் அடித்த சத்தம் வெளியில் கேட்காமல் போக, பத்து நிமிடம் கழித்து சரோ ருத்ரனுக்கு அழைத்திருந்தான்.

தன்னுடைய போன் அடிக்க எடுத்துப் பார்த்த ருத்ரன், தனது நண்பனாக இருக்கத் தங்கையை ஒரு நிமிடம் திரும்பிப் பார்த்து விட்டு, “சொல்லு மச்சான்” என்று சொல்ல,

எடுத்து எடுப்பிலே “உன் தங்கச்சிகிட்ட போன குடுடா” என்றான்.

ருத்ரன் சில நொடிகள் தனது யோசனையில் இருந்தான்.

“கேக்குதா? இல்லையாடா நாயே… உன் தங்கச்சிகிட்ட போன குடுடா” என்று கத்த,

அவன் கத்திய கத்தில் தனது காதில் கையை வைத்துத் தேய்த்துக் கொண்டு “தனா…” என்று கூப்பிட,

“என்ன அண்ணா?” என்றாள்.

“போன்!” என்றான். ஒன்றும் புரியாமல் தனா ருத்ரனையே பார்க்க,

“உனக்கு தான் போன்” என்றான்.

தனா போனை வாங்கிக் கொண்டு தனது அண்ணனையே பார்த்துக் கொண்டிருக்க,

“பேசிட்டு வா” என்று விட்டு அமைதியாகப் படுத்துக் கொண்டான்.

அவள் எதுவும் பேசாமல் காதில் வைத்துக் கொண்டு இருக்க,

“ஓவரா போறடி, அவ்வளவு தான் உனக்கு மரியாதை. நான் உன்கிட்ட வந்து ஏதாச்சும் சொன்னேனா? நீயா எதையாச்சும் யோசிக்க வேண்டியது. இல்லையா? யோசிச்சு இல்ல, அதையும் வாய் விட்டுக் கேட்க வேண்டியது தானே. உன் அண்ணனோட தங்கச்சியா மட்டும் இருந்திருந்தால், நீ என் மனசுக்குள்ளயே வந்திருக்க மாட்டடி. வேண்டாம் என் வாயிலிருந்து ஏதாச்சும் வந்திடப் போது” என்று விட்டு சரோ அமைதியாக இருக்க,

இங்கு அழுது கொண்டிருந்தாள் தனா.

“பேசிட்டு இருக்கேன் இல்ல, வாயத் தொறந்து பேச முடியுமா? முடியாதாடி” என்று பல்லைக் கடித்துக் கொண்டு சரவணன் கேட்க, அப்பொழுதும் அமைதியாக இருந்தாள் தனா.

“சரிங்க மேடம், நீங்க உங்க வேலையப் பாருங்க. எனக்கு தான் வேலை வெட்டி இல்லாம, பொழப்பு மயிறு இல்லாம உனக்கு போன் போட்டு இந்த அர்த்தராத்திரி டார்ச்சர் பண்ணிட்டு இருக்கேன்.

படிக்கிற பிள்ளையோட மனசையும் படிப்பையும் கெடுத்தது என் தப்புதான்” என்று சரவணன் பட்டென்று போனை வைத்து விட, தனாவிற்குத் தன்னை மீறி அழுகை வந்தது. போனையே பார்த்துக் கொண்டு அழுதாள்.

சரவணன் பட்டென்று ஃபோனையும் வைத்திருக்க, தான் வைக்கும் போது வலியை உணராத தனா, சரவணன் வைத்த நொடி வலியை உணர்ந்தாள்.

ஒரு சில நொடி போனையே பார்த்துக் கொண்டிருக்க,

அண்ணன் போனில் இருந்து போன் செய்ய விருப்பம் இல்லாமல், அதை  வைத்துவிட்டு, தனது போனைத் தேடி எடுக்க, கிட்டத்தட்ட 30, 40 மிஸ்டு கால்கள் இருப்பதைப் பார்த்தவள், தன் தலையிலேயே தட்டிக்கொண்டு சரவணனுக்கு அழைக்க, அவன் போன் எடுக்கவில்லை.

இங்கு என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்த தனா, தைரியம் வந்து தனது அண்ணனின் போனை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தாள்.

திரும்ப வந்து அண்ணனை எழுப்ப எழுந்து உட்கார்ந்த ருத்ரன்  தங்கையையே பார்த்துக் கொண்டிருந்தான்.

தங்கை அறையில் பேசிவிட்டு வந்து தன் அருகே படுத்த போது கூட எதையும் உணராத ருத்ரன், தனது நண்பன் தனக்கு போன் செய்து கத்தியவுடன் இருவருக்கும் ஏதோ பிரச்சனை என்பதை உணர்ந்தான். அவள் வரும் வரை தூங்காமல், சாதாரணமாக தான் படுத்திருந்தான்.

தனது அண்ணனின் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட தனா, “அ..அண்ணா, நான் மாமாவைப் பாக்கணும்” என்று ஒருவிதத் தவிப்புடன் அவனது கண்ணைப் பார்த்துக் கொண்டு கேட்டாள்.

ருத்ரன் நேரத்தைp பார்த்தான். தனது தாயையும், தமிழையும் பார்த்தான். இருவருமே தூக்கத்தில் இருப்பதை உணர்ந்தவன், “சரி” என்று விட்டு எழுந்து நிற்க,

தனா “அண்ணா…” என்று அடுத்த வார்த்தை பேசுவதற்கு முன்பே எதுவும் இல்லை என்று அவள் கையைத் தட்டிக் கொடுத்துவிட்டு கையோடு அழைத்துக் கொண்டு மெதுவாகக் கதவைத் திறந்து வெளியில் வந்தான்.

சுற்றி முற்றிப் பார்க்க, ஒரு சில பெரியவர்கள் மட்டும் கயிற்றுக் கட்டில் வெளியே போட்டுப் படுத்து இருக்க, தங்கையின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு பெரிய மாமாவின் வீட்டிற்கு அருகில் வந்தான்.

சரவணன் கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து தலையில் கை வைத்துக் கொண்டிருக்க,

நண்பனின் அந்த நிலையைப் பார்த்த ருத்ரனுக்கு ஒரு மாதிரியாக இருந்தாலும், எதுவும் பேசாமல் தங்கையின் கையில் இறுக்கம் கூடுவதை உணராதவன், அவளை அழைத்துக் கொண்டு சரவணன் அருகில் வர,

இப்போது தனா அண்ணனின் கையை வேகமாகப் பிடித்தாள்.

ருத்ரன் கண்கள் சிவக்க அவளைப் பார்க்க,

“சாரி அண்ணா, அதுவந்து…” என்று பேச வர,

எதுவும் பேசாமல் தங்கையின் கையை மெதுவாக விட்ட ருத்ரன் அவளது கையைப் பார்க்க சிவந்திருந்தது.

அதிலேயே தனது தங்கைக்கு எந்த அளவிற்கு வலித்து இருக்கும் என்பதை உணர்ந்து அமைதியாக இருக்க, நண்பனின் தோளில் கை வைத்தான்.

நிமிர்ந்து பார்த்த சரவணன் ருத்ரனைப் பார்த்துவிட்டு அமைதியாகக் கீழே குனிந்து கொள்ள,

“மாமா…” என்று அழைத்தாள் தனா.

அவளை ஒரு நிமிடம் நிமிர்ந்து முறைத்துப் பார்த்துவிட்டுக் கீழே குனிந்து கொள்ள,

“இந்த நேரத்தில் எதுக்குடா கூப்பிட்டு வந்திருக்க?” என்று தனது நண்பனிடம் சரவணன் கேட்க, எதுவும் பேசாமல் அமைதியாக நின்றான் ருத்ரன்.

சரவணனுக்கு இப்பொழுது என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை.

இப்படி இந்த நேரத்தில் வந்து நிற்பது சரியும் இல்லை. இரு வீட்டுப் பெரியவர்களின் பேரும் கெட்டுவிடும் என்பதை உணர்ந்த சரவணன் எதுவும் பேசாமல் வீட்டுக்குள் எழுந்து செல்ல, வேகமாகத் தனா வீட்டிற்குள் சென்றாள்.

ருத்ரன் வெளியே இவ்வளவு நேரம் சரவணன் உட்கார்ந்திருந்த கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து கொள்ள,

சரவணன் நேராக அவனுடைய ரூமுக்குச் செல்ல, அவனது பின்னாடியே போன தனா அவனது ரூமுக்குள் சென்று கதவைத் தாழ்ப்பாள் போட, அவளைத் திரும்பிப் பார்த்த சரோ, “யாரை கேட்டுடி ரூமுக்குள்ள வர?” என்று கேட்க.

எங்கேயோ அடி வாங்கிய உணர்வை உணர்ந்த தனா லேசான அழுகையுடன் சரவணனைப் பார்க்க,

அவளை அப்படிப் பார்க்க முடியாத சரவணன் வேகமாக இழுத்துத் தனது நெஞ்சோடு அணைத்துக் கொண்டு,

“லூசு, அழுது தொலையாத. அமைதியா இருடி” என்றான்.

அவள் லேசான விம்மலுடன் தன்னை மீறி சரோவை அணைத்துக் கொண்டு நெஞ்சில் அடித்துக் கொண்டே அழுதாள்.

அவனது “தனுமா…” என்ற ஒற்றை வார்த்தையில் விம்மலுடன் அவனை நிமிர்ந்து பார்க்க,

“ஏண்டி இப்படி மனுஷனைச் சாகடிக்கிற?” என்றான்.

அவனது கண்ணையே தனா உற்றுப் பார்த்துக் கொண்டு இருக்க அவளது நெற்றியில் தனது முதல் முத்திரையைப் பதித்த சரோ,

“தனுமா… எதா இருந்தாலும் நாளைக்குப் பேசலாம். வீட்டுக்குப் போடி, இது ரெண்டு குடும்பத்துக்கும் நல்லது இல்ல. இன்னும் பத்து நாள்தான் இருக்கு, கல்யாணத்துக்கு ப்ளீஸ்டி என்று சொல்ல,

அமைதியாக அவனது கண்ணையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“தனா…” என்று அழைக்க,

அவனில் இருந்து பார்வையை விலக்கியவள் அவனிடம் ஒன்றிக் கொண்டிருப்பதை அப்போது தான் உணர்ந்தாள்.

அடுத்த நொடி அவனிலிருந்து விலகி நின்று கீழே குனிந்து கொண்டாள்.

“வீட்டுக்குப் போடா, நாளைக்குப் பேசலாம். நாளைக்கு நீ காலேஜ் முடிச்சு வரும்போது நான் வரேன்” என்றான்.

“உண்மையா வருவியா?” என்பது போல் அவனை நிமிர்ந்து பார்க்க,

“வருவேன்டி கொஞ்சமாவது என் மீது நம்பிக்கை வைடி. அன்றைக்கு இருந்த நிலைமை வேற, இப்ப இருக்க நிலமை வேற” என்று சொல்ல,

“சரி” என்று எதுவும் பேசாமல் அவனது ரூமை விட்டு வெளியே செல்லத் தாழ்ப்பாளில் கையை வைக்க, வேகமாக அவளைப் பிடித்து இழுத்துத் தன்னில் புதைத்துக் கொண்ட சரோ, “ஃபர்ஸ்ட் டைம் ரூமுக்குள்ள வந்து இருக்கடி” என்றான்.

“நீ வந்து பார்த்தியா” என்று அவனுடன் வாதாட,

“ஆயிரம் முறை நீ இந்த வீட்டுக்குள்ளவும், ரூமுக்குள்ளவும் வந்து இருக்கலாம். ஆனாலும், இப்போ இந்த நிமிஷம்” என்று அவன் அடுத்த வார்த்தை சொல்ல வருவதற்குள், அவனது வாயில் கையை வைத்து எதுவும் பேசாமல், “போலாம் மாமா” என்றாள்.

சரவணன் தனது நண்பன் வெளியே உட்கார்ந்து இருப்பதை உணர்ந்தவன் கதவைத் திறந்து விட,

எட்டிப் பார்த்த தனா யாரும் இல்லை என்பதை உணர்ந்து ரூமை விட்டு வெளியில் வர அதன் பிறகு சரவணன் வெளியில் வந்தான்.

முனுசாமி, “சரோ…” என்று அழைக்க, இங்குத் தனாவிற்கு தான் கை கால்கள் உதற ஆரம்பித்தது.

சரவணன் அமைதியாகத் தனது தந்தையைத் திரும்பிப் பார்க்க,

தனா “நீ வீட்டுக்குப் போடா” என்றார்.

“இல்ல மாமா, அது…” என்று பேச வருகையில், “எனக்கு என் பையனப் பத்தியும் தெரியும். உன்னைப் பத்தியும் தெரியும். வெளியே எப்படியும் உன் அண்ணன் நின்னுட்டு இருப்பான். நீ போ, இந்த நேரத்தில் இங்கு நிக்க வேணாம்” என்றார்.

எதுவும் பேசாமல் ஒரு சில நொடி சரவணனைப் பார்த்துவிட்டு வேகமாக வெளியில் சென்றுவிட்டாள்.

ருத்ரன் எதுவும் பேசாமல் தனது தங்கையை அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்று விட்டான்.

இருவரும் வீட்டிற்குள் நுழைந்து கதவைத் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு படுக்கைக்கு வர,

தமிழ் இருவரையும் முறைத்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள்.

இருவரும் தங்களின் திருட்டுத்தனம் தெரிந்து விட்டதை எண்ணித் திருதிருவென முழிக்க,

“அப்பப்போ கொஞ்சம் அண்ணனாவும் நடந்துக்க வேணும்” என்று விட்டு எதுவும் பேசாமல் படுத்துக் கொண்டாள்.

ருத்ரன் தனது தங்கையைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் படுத்து விட்டான்.

இங்கு முனுசாமி தான் தனது மகனைப் பார்க்க சரவணன் அமைதியாகவே இருந்தான்.

“நாளைக்குப் போய் சாயங்காலமா புள்ளையைஒ பார்த்துப் பேசிட்டு வந்துடு பா…” என்று விட்டு முனுசாமி அவருடைய ரூமுக்குச் சென்று விட்டார்.

அவருக்குத் தெரியும். தனது மகன் எப்போதும் எந்த ஒரு தவறான செயலையும் செய்ய மாட்டான்.

‘இத்தனை வருடங்களாகத் தனாவை நேசித்திருந்தும், அவளிடமே தன்னுடைய விருப்பத்தைச் சொல்லாதவன்.

திருமணம் என்று வந்து நிற்கும் நிலையில் கூடத் தனக்கு இவளைக் கட்டி வையுங்கள் என்று உரிமையாகக் கேட்க யோசித்த தனது மகனா, தப்பான செயலில் ஈடுபடுவான்?’ என்று யோசித்த முனுசாமி, ‘ஏதோ ஒன்று இருவருக்குள்ளும் ஊடல் மனஸ்தாபம் ஏற்பட்டு இருக்கும்.

ஆகையால்தான்’ என்று எண்ணியவர், நாளைக்கு தனாவைப் பார்த்துப் பேசி விடு” என்று விட்டு தன்னுடைய ரூமுக்குள் சென்று விட்டார்.

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்