
ருத்ரன் அவளது உதட்டில் சிறிது நேரம் இளைப்பாறி விட்டு, அவளது பின்னங் கழுத்தைத் தன்னை நோக்கி நகர்த்தி இழுத்தான்.
தமிழ் அவனுக்கு இயைந்து கொடுத்துச் சிணுங்கிக் கொண்டே இருக்க,
“சிணுங்காமக் கொஞ்ச நேரம் அமைதியா இருடி” என்று விட்டு அவளது கழுத்து வளைவில் தனது முகத்தைப் புதைக்க, “மாமா எனக்கு ஒரு மாதிரி இருக்கு, நகரு” என்றாள்.
“ஏன், மேடம் நேத்து ராத்திரி ஏதோ கேட்ட மாதிரி இருந்துச்சு… இப்போ, கூட உன்னோட ஃப்ரெண்டுகிட்ட மூஞ்சியைத் தூக்கி வைத்துவிட்டு, உதட்டைப் பிதுக்கின மாதிரி இருந்துச்சு. அப்புறம் என்னவாம்?” என்று கேட்டான்.
“அதுக்கு?” என்று அவன் தோளில் இரண்டு அடி போட்டுக் கேட்க,
“அதற்கான ப்ராசஸ்ல இறங்கிடலாம் என்று முடிவு பண்ணிட்டேன்” என்று சொல்ல, அவனை வேகமாக நிமிர்ந்து பார்த்தாள்.
“என்னடி?” என்று கேட்க,
“உண்மையாவா?” என்று திக்கித் திணறிக் கேட்க, “ஆமா…” என்று கண்ணடித்துச் சிரிக்க,
“போடா” என்று சிணுங்கினாள்.
“எது?” என்று அவன் அவளையே பார்க்க, அவனை டா போட்டு அழைத்ததை எண்ணி நாக்கைக் கடித்துக் கொள்ள, அவளது உதட்டைக் கை விரல்களால் வருடியவன், “என் விழிமா என்னை டா போட்டுக் கூப்பிடுறது கூட நல்லா தான் இருக்கு” என்று சிரித்தான்.
“மாமா, அமைதியா எழுந்திரிச்சு வா… குளிச்சுட்டு வெளியே போகலாம்” என்று சொன்னாள்.
“வெளியே போக வா டி அங்கிருந்து இவ்வளவு தூரம் வந்தோம்?” என்று கேட்டான்.
“பின்ன இல்லையா? இப்படி ரூம்குள்ளயே அடைந்து இருக்கவா ஊரிலிருந்து செலவு பண்ணி உன் மாமன் மகள் நம்மளைச் சிம்லா அனுப்பி இருக்கா?” என்று தமிழும் வாய்க்கு வாய் வாதாட,
“உனக்கு வாயாடச் சொல்லியா தரணும்?” என்று அவளது உதட்டைப் பிடித்து இழுத்து, அவளது கண்களையே உற்றுப் பார்த்துக் கொண்டு இருக்க,
“மாமா உன் பேச்சும் சரியில்ல, ஆளும் சரியில்லை. என்ன விடு” என்றாள்.
“எதுவும் சரியில்லாட்டிப் போது, இன்னைக்கு எங்கேயும் வெளியே போகல இங்கே தான்” என்றான்.
அவனை பார்த்துத் திருதிருவென முழித்துக் கொண்டு இருக்க அவளது கண்ணில் முத்தமிட்டவன் “கேடி” என்றான்.
“மாமா…” என்று அவனையே பார்த்துக் கொண்டிருக்க,
கண்ணை மூடித் திறந்தான்.
அவள் லேசான சிணுங்கலுடன் “இப்பவா?” என்று கண்ணை அலைபாய விட,
“ஏன் மேடம், ஃபர்ஸ்ட் நைட் தான் வேணுமோ? ஃபர்ஸ்ட் பகல் எல்லாம் வேண்டாமோ?” என்று சிரித்தான்.
“உன்ன…” என்று அவனது நெஞ்சில் குத்தியவள், “இப்படியா பேசுவாங்க?”.
“நான் என் பொண்டாட்டி கிட்ட தான் பேசுறேன், உனக்கு என்னடி வந்துச்சு. இந்த அளவுக்கு கூட வெளிப்படையா பேசலனா எப்படி சேர்ந்து வாழ” என்று சிரித்தான்.
“அது சரி” என்று அவனது நெஞ்சில் இருக்கும் ரோமங்களைப் பிடித்து இழுத்துக் கொண்டு இருந்தாள்.
அவளது கைவிரல் மேல் தனது கைகளை வைத்து, “விழி மா, உனக்கு ஓகேவா?” என்றான்.
அவனது கண்களை நேருக்கு நேர் பார்த்துக் கொண்டே, “உனக்கு ஓகேவா மாமா” என்றாள்.
“விடிய விடிய யோசிச்சு இருக்கேன்டி” என்று சிரித்தான்.
“எதை யோசிச்ச எப்படி என் கூட வாழ்றது என்றா யோசிச்ச?” என்று சிரித்துக் கொண்டே கேட்க,
“உன்னை எல்லாம் வச்சுக்கிட்டு” என்று அவளது நெற்றியில் முட்டிவிட்டு அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
ருத்ரனின் விழியானவள் தனது விழிகளைத் தாழ்த்திக் கொள்ள, அவளைப் பார்த்து லேசாக விசில் அடித்தான்.
“என்ன பண்ற மாமா?” என்று அவனது நெஞ்சிலே அடித்தாள்.
“நம்ம மட்டும்தான் விழிமா இருக்கோம், வேற யாரும் இல்லை” என்று அவளைத் தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.
“நைட் என்ன யோசிச்ச, இது மட்டும் தான் யோசிச்சியா?” என்று ஒரு எதிர்பார்ப்போடு கேட்க,
அவளைத் தன்னோடு புதைத்துக் கொண்டவன் அவளது தலையைக் கோதிக் கொண்டே, தான் நைட் யோசித்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூற ஆரம்பித்தான்.
“என் விழி மா ஃபர்ஸ்ட் இயர் படிக்கும்போது சைக்கிள்ல போயிட்டு இருக்கும்போது, கீழே விழுந்து அடிபட்டு வீட்ல அவங்க அத்தைகிட்ட புகார் பத்திரம் வாசிச்சுட்டு இருந்தா…
அப்போதான் காலேஜ் முடிச்சு வந்த நான் அவ காயத்தைப் பார்த்துப் பொறுக்க முடியாம மருந்து வச்சிட்டு அவளுக்கு எரியும் என்று என் வாயால ஊதிவிட்டுட்டு இருந்தேன். ரொம்ப நேரம் அழுதுட்டு இருந்தா என்று அவங்க அத்தைகிட்ட சாப்பாடு கேட்க, அவங்க கொண்டு வந்து அவ கையில கொடுக்க,
கையில தான் குடுப்பியானு கேட்ட நான் அத வாங்கி அவளுக்கு ஊட்டி விட, அப்பதான் என்னோட அத்தை வேற அவ அடிப்பட்டு இருக்கிறதப் பார்த்து அவளைத் திட்டிட்டு அவளை அடிக்கக் கை ஓங்கிக் கொண்டு வர, அவங்களத் தடுத்த நான் அவங்களைச் சமாதானப்படுத்தி, அந்தப் பக்கம் நகர்த்தி விட அழுதுட்டு இருந்த என் விழிமா ஓட கண்ணைத் தொடைச்சு அவளது நெத்தியில என்னோட முதல் முத்திரையைப் பதிக்க,
மாமாகிட்ட நான் பேசுறேன். நான் இந்த மாமா, உன்ன நாளைக்கு காலேஜ் கூட்டிட்டுப் போயிட்டு வருகிறேன். அதுக்கப்புறம் நீ எப்பவும் போல சைக்கிள்ல போகலாம், என்று சமாதானப் படுத்தினேன்” என்று சிரிக்க,
“இவ்வளவுதானா மாமா?” என்று அதே எதிர்பார்ப்போடு தமிழ் கேட்க,
இப்பொழுது அவளது நெற்றியில் இதழ் பதித்த ருத்ரன்,
“என் விழிமா என்கிட்ட என்ன எதிர்பார்க்கிறா?” என்று அவளைப் பார்க்க,
அவள் கண் மூடி இருந்த உடன் அவளது கண்ணில் இதழ் பதித்தவன், “அப்போதாண்டி, நீ எனக்குள்ள நுழைஞ்சி இருக்க… அதை அப்போ, அந்த நிமிஷம் நான் உணரவில்லை என்றது தான் உண்மையும் கூட… என்னையும் மீறி என் விழிகிட்ட நான் அவ்வளவு நெருங்கி உரிமை எடுத்து இருந்து இருக்கேன்.
என்னோட சின்னச் சின்ன விஷயத்தையும் அவகிட்டப் பகிர்ந்து இருக்கேன். அவளப் பத்தின ஒவ்வொரு விஷயத்தையும் அவ்ளோ கவனிக்க ஆரம்பித்து இருக்கிறேன். இது எல்லாத்தையுமே நான் உணர்ந்தது நேத்து தான்.
முக்கியமா, நீயும் உன் அண்ணனும், என்னையவே யோசிக்கச் சொன்னதுக்கான காரணமும் என்னன்னு இப்போதான் புரியுது. நீங்க சொல்லி நான் புரிஞ்சுகிட்டா கூட, இந்த அளவுக்கு என் மனசுக்குள்ள எதுவும் தோணி இருக்காது விழி மா…
நானா யோசிச்ச பிறகு தான் நீ எனக்குள்ள எந்த அளவுக்கு நுழைந்து இருக்க என்பதை உணர்வுப் பூர்வமாக உணர்கிறேன். இன்னும் சொல்லப் போனால், உண்மையா இந்த நிமிஷம் என் மனசு முழுக்க நீ மட்டும் தாண்டி நெறஞ்சு இருக்க…
உன்னை விட என்னை யாராலும் புரிஞ்சுக்க முடியாது, என்னை எனக்குப் புரிய வைக்கவும் முடியாது. உன்னை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கவும் மாட்டேன். உன்னைப் புரிஞ்சுக்காம போனது என்னோட தப்பு தான். சாரி விழி மா…” என்று விட்டு அவளது நெற்றியில் தன் மொத்தக் காதலையும் திரட்டி முத்தமிட்டான்.
“இந்த மாமாவோட வாழ்க்கை முழுக்க, நீ இப்படியே என் நெஞ்சோட ஒட்டிக்கிட்டே இருக்கணும்டி” என்று இறுக்கி அணைத்தான்.
“அப்போ படத்துல வர மாதிரி இந்த ஐ லவ் யூ எல்லாம் சொல்ல மாட்டியா?” என்று தமிழ் லேசான சிரிப்புடன் கேட்க,
இவ்வளவு நேரம் உணர்வுப் பிடியில் இருந்தவன், அவளது தலையில் கொட்டி விட்டு, “கேடி புத்தி போகுது பாரு எங்கெங்கோ…”
“எங்க போகுது? ஐ லவ் யூ சொல்ல மாட்டியா தானே கேட்டேன்”
“அப்புறம், இவ்ளோ நேரம் நான் பேசின எதுவும் உன் மண்டையில ஏறல, அந்த ஒத்த வார்த்தை மட்டும் தான் உன் மண்டைக்குள்ள இருக்கு அப்படி தான?” என்றான்.
“அதுதானே எனக்கு வேணும்” என்றாள்.
“90’s கிட்ஸ்டி நான். என் வாயிலிருந்து எல்லாம் ஐ லவ் யூ என்ற வார்த்தை வராது” என்று சிரித்தான்.
“அப்ப நாங்க மட்டும் என்ன, 2k கிட்ஸா?” என்று சிரித்தாள்.
“அப்புறம் எதுக்குடி எதிர்பார்க்கிற?” என்று அவளது நெற்றியில் முட்டி விட்டு அவள் காதில் சமரசம் பேச,
அதன் பிறகு சிறிதாகக் கீழே இறங்கி அவளது கழுத்து வளைவில் உணர்வுப் பிடியில் முத்தமிட்டவன், அவளது கண்ணையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்க,
விழி கண்ணை மூடி திறக்க, அடுத்த நொடி அவளில் புதைய ஆரம்பித்திருந்தான் விழியின் ருத்ரன்.
விழியுமே தனது மாமாவின் பிடியில் தன்னை மொத்தமாகத் தொலைத்து அவனுள் தொலைய ஆரம்பித்து இருந்தாள். கிட்டத்தட்ட இருவரும் ஈருடல் ஓருயிர் ஆகி இருந்தனர் என்று தான் சொல்ல வேண்டும்.
4 மணி நேரங்களுக்குப் பிறகு இருவரும் ஒருவரை விட்டு ஒருவரைப் பிரிந்து இருக்க, இருவருக்கும் பசி எடுக்க, “மாமா சாப்பிடலாமா?” என்று கேட்டாள்.
அவளைப் பார்த்துச் சிரித்தவன், “இப்படியே போலாமா செல்லம்” என்று கொஞ்ச, அவனது நெஞ்சில் குத்தியவள், “கொன்றுவேன். உனக்கு எவ்வளவு திமிரு இருக்கும்” என்று சிரித்தாள்.
“பின்ன?” என்று விட்டு, “நேத்துக் கேட்ட, இன்னைக்கு ஒண்ணா குளிக்கலாமா?” என்று சிரித்தான்.
“ஒன்னும் வேணாம்” என்று சிணுங்கினாள்.
“ஒன்னும் பண்ண மாட்டேன், நம்பி வாடி” என்று அவளைப் போர்வையோடு குளியல் அறைக்குள் தூக்கிச் சென்று சிறிது நேரம் தன்னுடைய வேலைகளைக் காட்டியவன்,
ஒரு மணி நேரத்திற்குப் பின்பு அவளை வெளியில் அழைத்துக் கொண்டு வர,
இருவரும் தங்களைச் சுத்தப்படுத்திக் கொண்டு கீழே இறங்கி வர, மணி மதியம் ஒன்றைத் தொட்டிருந்தது.
இருவருக்குமே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது போல் தோன்ற,
சாப்பிட்டுவிட்டுத் திரும்பவும் ரூமுக்குச் சென்று விட்டார்கள்.
வெளியே செல்லலாமா? என்று ருத்ரனும் கேட்கவில்லை. எங்கேயாவது போகலாம் மாமா என்று தமிழும் கேட்கவில்லை.
தங்களுக்குள் காதல் மொழிகளைப் பரிமாறிக் கொண்டார்கள்.
இருவரும் மாலை 5 மணி போல் ஒருவருடன் ஒருவர் பின்னிக் கொண்டும், பிணைந்து கொண்டும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்க,
சரவணன் போனில் இருந்து போன் வந்தது ருத்ரனுக்கு.
தனது மச்சான் தானே என்று எண்ணி போனை அட்டென்ட் செய்தான் ருத்ரன்.
அடுத்த நொடி அது வீடியோ காலாக மாறி இருக்க,
“என்ன மச்சான் சௌக்கியமா?” என்று கேட்டான் அந்தப் பக்கம் சரவணன்.
“அட நாதாரிப் பயலே… எதுக்கு இப்ப வீடியோ காலில் வந்திருக்க. நார்மல் கால்ல தான வந்த” என்று கேட்க,
“நார்மல் கால்ல வந்ததால தான போன் எடுத்த, இதுவே வீடியோ கால் போட்டு இருந்தா எடுத்து இருக்க மாட்டியோ, என்னவோ? என் மச்சான் எப்படி இருக்கான்னு பாக்கணும் இல்ல” என்று சிரிக்க,
“அப்படியே உன் தங்கச்சி கூட எல்லாம் சேர்ந்து சேர்ந்து உனக்கும் கொழுப்பு கூடிப்போச்சு என்று நினைக்கிறேன். ஒன்னும் சரி வரலடி மாப்ள, உனக்கு நாலு மிதிச்சா சரியாயிடும்” என்றான் ருத்ரன்.
வீடியோ கால் என்றவுடன் வேகமாக அவனது அருகில் நெருங்கி வந்த தமிழ் “அண்ணா எப்படி இருக்க?” என்று கேட்க,
“ரொம்ப தான் பாசம், போய் முழுசா ரெண்டு நாள் ஆகப் போது, ஒரு போன் கால் இல்ல… உன் தங்கச்சியும், தோழியும் போன் பண்ணி டிஸ்டர்ப் பண்ணாதீங்கன்னு சொல்றாங்க” என்று சிரிக்க,
“அதான், இப்ப போன் பண்ணி டிஸ்டர்ப் பண்ணிட்டியே அண்ணா” என்று தமிழ் சிரிக்க,
“எதே டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என்றான் கண்கள் மின்ன.
“நீ அத விடு மச்சான், உனக்கும் உன் தங்கச்சிங்களுக்கும் ஓவர் குசும்பு தான். வேற என்ன?” என்று சிரித்தான் ருத்ரன்.
“மச்சி என்ன டா உன் முகத்தில் ஒரு ஒளிவட்டம் தெரியுது. வரவர அழகாயிட்டே போற” என்று சரோ கேட்க,
“டேய் நாதாரி, பக்கத்துல உன்னோட எந்தத் தங்கச்சி இருக்கா? என் வாயில ஏதாவது வந்திடப் போது. அப்புறம் இப்படிப் பேசிட்டேன், அப்படிப் பேசிட்டேன் என்று என்னைச் சொல்லக் கூடாது” என்று ருத்ரன் சிரிக்க,
சரோவின் ஆளுக்கு ஒரு பக்கம் இருந்து காயத்ரியும், அகிலாவும் எட்டிப் பார்த்துச் சிரிக்க,
“எனக்குத் தெரியும்டி கேடிங்களா… நீங்க இல்லன்னா என் மச்சான் இப்படிப் பேசவும் மாட்டான். அதுவும் எடுத்த எடுப்பிலே வீடியோ காலும் வரமாட்டான்” என்று பல்லைக் கடித்துக் கொண்டு ருத்ரன் சொல்ல,
இங்கு அகிலாவும், காயத்ரியும் ருத்ரனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு இருந்தார்கள்.

