அத்தியாயம் – 6
“ஓகே… லெட்’ஸ் பிகின் தி மீட்டிங்,” என்று அதிகாரமாய் ஆரம்பித்த அவனை தான் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மதுநந்தினி, தன் சக்கர நாற்காலியை சற்று முன்னே நகர்த்தி, கோப்புகளைத் திறந்தவாறு பேசத் தொடங்கினான்,
“லாஸ்ட் க்வார்டர்ல நம்ம க்ரோத் ரொம்ப ஸ்ட்ராங்கா இருந்தது, ஆனா இந்த க்வார்டர்ல நாம இன்னும் அக்ரசிவா வேலை செய்யணும், க்ளைன்ட் சேடிஸ்ஃபேக்ஷன் தான் நம்ம ஃபர்ஸ்ட் ப்ரையாரிட்டி” அவன் பேசும்போது, ஹாலில் இருந்த அனைவரும் அசையாமல் கவனித்துக் கொண்டிருந்தனர், ஒவ்வொரு வார்த்தையும் கனமாக இருந்தது…
நந்தினிக்கு அவன் சொல்லும் விஷயங்கள் காதுகளில் நுழைந்தாலும், மனம் முழுக்க வேறு சிந்தனையில் மூழ்கியிருந்தது,
‘இவர்தான் என் அம்மாவுக்கு உயிர் கொடுத்தவர், ஆனா இப்போ வீல்சேர்ல இருக்காரு… என்ன நடந்தது இவருக்கு?’ என்ற கேள்வி அவள் மனதைக் கிழித்தது….
அவள் அவனை ஒவ்வொரு நொடிக்கும் பார்த்துக் கொண்டிருந்தாள், அவன் முகத்தில் கம்பீரம் இருந்தாலும், உள்ளே எதோ வலியை மறைத்து வைத்திருப்பது அவள் கண்களுக்கு புலப்பட்டுவிட்டது…
“எனி குவஸ்டின்” என்று தீரஜ் கேட்டதும், அனைவருமே அமைதியாக தான் இருந்தார்கள், யாருக்கும் பேசத் துணிவில்லை..
“ஓகே தென், மீட்டுங் இஸ் ஃபினிஷ்ட், ஈச் டீம் லீட் தங்களோட ரிப்போர்ட்ஸை ஈவ்னிக்குள்ள சப்மிட் பண்ணணும், நம்ம next step based on that இருக்கும்,” என்று சொல்லி, தனது லேப்டாப்பை மூடினான்….
மீட்டிங் முடிந்து எல்லோரும் வெளியேற, நந்தினி மட்டும் அவனிடம் பேச வேண்டும் எனும் ஆசையுடன் நின்றாள், ஆனால் அவள் உதடுகள் அசையவில்லை, அவள் உள்ளத்தில் ‘இப்போ பேசலாமா? இல்லை வெயிட் பண்ணலாமா?’ என்ற குழப்பம்.
அவன் சக்கர நாற்காலியை திருப்பி மெதுவாக வெளியே செல்ல, அவள் பார்வையோ அவனைவிட்டு அகலாமல் தான் இருந்தது,…
அன்றைய இரவு நந்தினிக்கு உறக்கமே வரவில்லை, கண்களை மூடினாலே அவன் முகம் தான் வந்து நின்றது, ஆயிரம் கேள்விகள் அவளது உள்ளத்தில் எழுந்தன…
திரும்பித் திரும்பிப் படுத்துக்கொண்டிருந்தவளுக்கு சீலிங்கை பார்த்தவாறே இரவு கழிந்தது,..
அடுத்த நாள் காலை அவள் அலுவலகம் வந்தவுடனே, நேற்றைய காட்சிகள் அவள் நினைவில் மீண்டும் மீண்டும் தோன்றின, இரவு சரியாக உறங்காததால் சற்று சோர்வாக இருந்தாலும் வேலையில் கவனம் செலுத்தத் தன்னைத் தானே கட்டாயப்படுத்திக் கொண்டாள்…
மதிய நேரம் வரை ரிப்போர்ட்ஸ், மெயில்ஸ், க்ளைன்ட் கால்ஸ் என்று பிஸியாக போனாலும் அவளுள்ளே குழப்பங்கள் இன்னும் தீராமல் தான் இருந்தது,…
“தீரஜ் சார் இன்னைக்கும் வந்திருக்காராம்,” என்று டீம் மெம்பர் ஒருவன் கேசுவலாக பேச, நந்தினியின் விழிகள் உடனே விரிந்தது.. ‘வந்திருக்காரா? இன்னைக்கு பார்க்க முடியுமா என்னால’ என்ற கேள்வி மனதில் உதிர்த்தது,..
ஆனால் அந்த நாளில் அவனை பார்க்கும் வாய்ப்பு அவளுக்கு அமையவே இல்லை, அந்த நாளும், ‘ஒரு தடவை அவரிடம் பேசவேண்டும், அவரிடம் நன்றி சொல்லவேண்டும்’ என்ற ஆசையோடவே முடிந்தது….
அடுத்த இரண்டு நாட்கள் வேகமாகவே கடந்தது, அந்த நாட்களில் நந்தினி ஏதோ சரியில்லை என்பதை கவனித்துக் கொண்டிருந்த ஹரிணி,… “என்னடியாச்சு? உன் முகம் ரெண்டு நாட்களாகவே ஏதோ சரியில்லாம இருக்கே… எதுவும் பிராப்ளமா?” அன்று அடக்க முடியாமல் மெதுவாக விசாரித்தாள் ஹரிணி…
“அதெல்லாம் ஒன்னுமில்ல ஹரிணி” என்று முகத்தை இலகுவாக்கிக் கொண்டு சமாளிக்க,
ஹரிணியோ,.. “ஹூம்… என்னவோ இருக்கு, ஆனா சொல்ல மாட்டேங்கிற, சரி வா, கேன்டீனுக்காச்சும் போலாம், கொஞ்சமா எதாச்சும் சாப்பிட்டா மனசு லைட் ஆகிடும்” என்று கைபிடித்து எழுப்பினாள் அவளை…
இருவரும் கேன்டீனுக்குச் சென்றனர், காஃபி வாங்கி கொண்டு அமர்ந்தனர்,.. “எப்போதுமோ சீரியஸா இருக்காம சின்ன சின்ன விஷயத்துல ஜாலியா இருக்கணும், இல்லேன்னா இந்த ஆபீஸ் வாழ்க்கை ரொம்ப கஷ்டமா தெரியும்” என்று சொன்னாள் ஹரிணி…
அவளது பேச்சில் இயல்பான பாசம் இருந்ததால், நந்தினியின் மனமும் மெதுவாக இதமாகியது, “உன்கிட்ட பேசுறப்போ நல்ல ஃபீல் தருது ஹரிணி, ரொம்ப நாள் கழிச்சு நான் சிரிச்சு பேசுரதுக்கு காரணமும் நீ தான்” புன்னகையோடு சொன்னாள் நந்தினி,…
அதன் பிறகு இருவரும் குடும்பக் கதைகள், கல்லூரி நாட்கள், ஃபியூச்சர் பிளான்ஸ் என்று எல்லாவற்றை பற்றியும் சிரித்து பகிர்ந்து கொண்டார்கள், அந்தப் பேச்சுக்கள் நந்தினிக்குள் ஒரு சின்ன சாந்தியையும் நட்பின் வலிமையையும் ஊட்டியது,…
அந்த நேரம் கேன்டீன் கதவை தள்ளிக்கொண்டு HR அசோக் உள்ளே வந்தான், கையில் காபி கப்பை எடுத்துகொண்டு சுற்றி பார்த்தவனின் கண்களில் நந்தினியும் ஹரிணியும் ஒரு டேபிளில் அமர்ந்திருப்பது தெரிய, அங்கு விரைந்தவன்…
“ஹாய்… காய்ஸ், இங்க என்ன சின்ன காசிப் (Gossip) பண்ணிட்டு இருக்கீங்களா?” என்று சிரித்தபடி வந்து அவர்களோடு அமர்ந்தான்…
“அதெல்லாம் இல்ல அசோக், நந்தினி ஏதோ சீரியஸா இருந்தா, அதனால தான் நான் இங்க கூட்டிட்டு வந்தேன்” என்று ஹரிணி விளக்கினாள்…
“அப்படியா? சீரியஸா இருந்தா, அதுக்கு சொல்யூஷன் என்ன தெரியுமா? காஃபி குடிச்சிகிட்டே கடலை போடுறது தான்! கரெக்ட்டா தான் பண்ணி இருக்க” என்று சொன்ன அசோக் நந்தினியை நேராக பார்த்து புன்னகைத்தான்…
அந்த பார்வையில் ஒருமாதிரி உணர்ந்தவள், சற்றே பார்வையை திருப்பிக் கொண்டாள்,
அசோக்கிற்க்கோ நந்தினியை பார்த்த முதல் சந்திப்பிலிருந்தே இனம்புரியா உணர்வு மனதிற்க்குள், ஒருவிதமான ஈர்ப்பும் சொல்ல தெரியாத பாசமும் அவனை இழுத்தது…
அந்த உணர்வு கூட அழகாக இருந்தது, அவளை பார்க்க பார்க்க பிடித்தது, பேச்சு அனைத்தும் சாதாரண விஷயங்களாக இருந்தாலும், அவன் மனம் மட்டும் ஒவ்வொரு நொடியும் நந்தினியிலேயே தங்கியிருந்தது,
ஹரிணியோ, “நீங்க HR மாதிரி இல்ல, கிளாஸ்மேட் மாதிரி தான் இருக்கீங்க,” என்று கிண்டல் அடித்து அந்த சூழ்நிலையை சிரிப்பாக மட்டுமே மாற்றி வைத்திருந்தாள்,..
அடுத்தடுத்த நாட்களும் சுமூகமாக நகர, அன்று மதுநந்தினி தீரஜின் கேபினுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை வந்தது, அவளுக்கோ ஒரே உற்சாகம், கையில் ஃபைலினை எடுத்துக் கொண்டு
முதலாம் மாடியில் இருந்த அவனது அறையின் முன்பு தான் நின்றாள், மனதிற்க்குள் ஒருவித துடிப்பு,…
அந்த துடிப்புடனே “மே ஐ கம் ஐம் சார்?” என்று அனுமதி கேட்டு நின்றாள்,.. “கம் இன்” உள்ளே இருந்து கண்ணீரென்று அவன் குரல் வர, மெல்ல உள்ளே நுழைந்தாள்…
டேபிளுக்கு எதிரே தனக்கே உரிய நாற்காலியில் மிடுக்காக அமர்ந்திருந்தான் தீரஜ் அரவிந்தன், டேபிளின் மீது சில கோப்புகள், லேப்டாப், மானிட்டர் என அனைத்தும் நேர்த்தியாக வைக்கப்பட்டிருந்தது, நந்தினி சிறிது தயக்கத்துடன், தன் கையில் இருந்த ப்ராஜக்ட் ஃபைலை நீட்டி..
“சார்… எஸ்டர்டே க்ளைன்ட் மீட்டிங்ல டிஸ்கஸ் பண்ண பாயின்ட்ஸ் எல்லாம் ஃபைனலைஸ் பண்ணிருக்கோம், அதைப் பற்றிய ரிப்போர்ட்டை அப்டேட் பண்ணிட்டேன், இதுல UI design section மட்டும் பென்டிங் இருக்கு, அதற்கான அப்ரூப்வல் வேணும்” என்று மெதுவாகக் கூறினாள்….
தீரஜ் ஃபைலை வாங்கி புரட்டிப் பார்த்தான், அவன் பார்வை அவளிடம் விழாமல், நேராகப் பக்கங்களை மட்டும் ஸ்கேன் செய்தது… “டேட்டாபேஸ் இன்டிக்ரேஷன் முடிச்சீங்களா?” என்று கேட்டான்…
“யெஸ் சார், API டெஸ்டிங் நடந்துட்டு இருக்கு, நாளைக்குள்ள முடிஞ்சிடும்” என்றாள் அவள்…
“குட்,.. க்ளைன்ட் ஃபீட்பேக் செக்ஷ்னன்ல க்ராமர் மிஸ்டேக்ஸ் அவாய்ட் பண்ணுங்க, டாக்குமெண்ட் நீட்டா இருக்கணும்,
அடுத்த வாரத்துக்குள் ஃபைனல் ப்ரெசன்டேஷன்க்கு நான் ரிவியூ பண்ணணும்” என்றான் அமைதியான குரலில்….
“ஓகே சார்” என்று குறித்துக் கொண்டாள் நந்தினி…
அதன் பின் அவன் ஃபைலை மூடி, “தட்ஸ் இட், யூ மே லீவ்” என்றான்
அவள் எழுந்து பின்னால் நடக்கத் தொடங்கினாள், ஆனாலும் மனம் தாங்காமல் ஒரு கணம் திரும்பி அவனை பார்க்க,… அவனும் விழிகளை உயர்த்தி அவளை பார்த்தவன்,.. “வாட்” என்றான்,…
தொண்டையை செருமிக் கொண்டவளோ,… “ஆஃபிஸ் டைம்ல பர்சனல் ஸ்பீச் இருக்க கூடாதுன்னு தெரியும், பட் என்னால அமைதியா போக முடியல சார்” என்று சொன்னவளோ,… “என்னை மறந்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன், என் அம்மா இப்போ நல்லா இருக்காங்க சார், அவங்க இப்போ நல்லபடியா இருக்காங்கன்னா அதுக்கு ரீஷன் நீங்க மட்டும் தான், தேங்க் யூ ஸோ மச் சார்” மனதிலிருந்து நன்றி சொன்னவள்,.. “அப்புறம் சீக்கிரமே உங்க பணத்தை நான் திருப்பி கொடுத்துடுவேன்” என்றதும், அவ்வளவு நேரம் சுருங்கும் நெற்றியுடன் கேட்டுக் கொண்டிருந்தவனின் முகம் கடுமையாக மாறியது,…
அதே கடுமையுடனே… “அன்னைக்கே உன்கிட்ட சொன்னேன்ல… நான் இதை கடனுக்காக பண்ணல, மறுபடியும் இதைப் பற்றி என்கிட்ட ஒரு வார்த்தை பேசாத” என்றான் எச்சரிக்கும் தொனியில்…
“இல்ல சார்… நீங்க கொடுத்தது ஆயிரகணக்குல இல்ல லட்சகணக்குல, அதை கொடுக்க எனக்கு பல மாதங்கள் ஆகும் தான், ஆனா எப்படியும் நான் கொடுத்துடுவேன், தயவு செய்து வேண்டாம்னு மட்டும் சொல்லாதீங்க ப்ளீஸ்” அவள் வற்புறுத்தலைக் கேட்டு தீரஜின் முகம் மேலும் இறுகியது,
இவளிடம் இதைப் பற்றி மேலும் பேசுவது வீண் என்று நினைத்தவனோ… “கெட் லாஸ்ட்!” என்று கடுமையாக சொல்ல,.. அவளோ சொல்ல வேண்டியதை சொல்லி விட்டோம் என்ற திருப்தியுடன் அமைதியாக வெளியேறி விட்டாள்,..
*****************
அலுவலகத்திலிருந்து கிளம்பிய தீரஜ், வழக்கம்போல் தன் உதவியாளனின் உதவியுடன் வீல் சேரிலிருந்து காருக்குள் அமர வைக்கப்பட்டான், அமைதியாக கடந்த அந்த சிறு பயணத்தின் பின்
வீட்டிற்கு வந்து சேர்ந்ததும், காரிலிருந்து வீல் சேருக்குள் மீண்டும் மாற்றப்பட்டு, அந்த எலக்ட்ரிக் வீல்சேரின் கட்டுப்பாட்டுக் கருவி மூலம், மற்றயவரின் உதவி இல்லாமல் தானே நகர்த்திக் கொண்டு மாளிகை போன்ற தன் பிரமாண்டமான இல்லத்திற்க்குள் நுழைந்தான்..
வீட்டில் நுழைந்த கணமே காற்றை பிளந்த சிரிப்பு சத்தம் அவன் காதைத் தொட்டது, அந்த சிரிப்பு யாருடையது என்று கேட்க வேண்டியதில்லை, அவனுக்கு தெரியாததுமில்லையே, அவள் மனிஷா, அவனின் அத்தை மகள்,…
ஒரு காலத்தில் அவளின் அந்த சிரிப்பு அவன் உயிரின் இசை, இப்போது அந்த சிரிப்பு அவன் இதயத்தை கிழிக்கும் கூர்மையான கத்தியாய் மட்டுமே இருந்தது…
‘முன்னாடி அந்த சிரிப்பு எனக்காகத்தான் ஒலித்தது… இப்போது வேறொருவனுக்காகவா?’
என்ற எண்ணமே அவன் மனதைக் துண்டாக்கியது…
மனிஷாவின் மீது உயிரையே வைத்திருந்தான் தீரஜ், அவளும் அவனை காதலித்தாள், இனிமையான வார்த்தைகளால் அவனை உருக வைத்தாள்,
ஆனால், அந்த இனிமை எல்லாம் அவனுக்கு நடந்த அந்த விபத்திற்கு பிறகு ஒரே கணத்தில் கரைந்து போனது,..
அவனது வாழ்க்கை வீல் சேருக்குள் முடங்கி போன தருணம் அவள் முகமூடி கிழிந்தது… ‘என்னால கால் நடக்க முடியாதவனுடலாம் வாழ முடியாது’ என்று மனசாட்சியில்லாமல் சொல்லிவிட்டு, வேறு ஒருவனுடன் திருமணத்திற்கு சம்மதித்துவிட்டாள்….
அந்த நிமிஷத்தில், அந்த ஆறடி ஆண்மகனின் உள்ளம் உடைந்தது, ஒரு குழந்தை போல கண்ணீர் சிந்தினான் தீரஜ், அதுவே அவனுக்கு அவளை பற்றிய உண்மை தெரியும் நேரமாக மாறியது, அவள் தன்னை உண்மையாய் நேசிக்கவில்லை என்பதும் புரிய வந்தது,…
ஆனால் உண்மையாய் நேசித்த அவனுக்கு அவளது நிராகரிப்பு உயிரையே கிழித்த வலியை தந்தது,
அவள் சிரிப்பு சத்தம் இன்றும் அவனது மனதுக்குள் மின்னல் போல அவனை வெட்டி சென்றது,.…