Loading

அத்தியாயம் – 5

 

மதுநந்தினி வேலைக்கு சேர்ந்து ஒரு வாரம் கடந்திருந்தது, இப்போது அவளுக்குப் பணிகள் எல்லாம் ஓரளவு தெரிந்து விட்டன, ப்ராஜெக்ட் ட்ராக்கிங் டூலை நன்கு கையாளத் தெரிந்து கொண்டிருந்தாள்….

அன்று மதிய வேளையில், அவள் டீம் மேட்களான சுபா, விக்னேஷ், ஹரிணி மூவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்…

“ஏய், உங்களுக்கு விஷயம் தெரியுமா? நாளைக்கு நம்ம CEO தீரஜ் சார் வராராம், அவரை பார்த்து எவ்வளவு நாளாச்சு தெரியுமா?” என்றாள் சுபா உற்சாகத்துடனும் சிறு ஏக்கத்துடனும்…

“ஹும்… லாஸ்ட் டைம் அவர் வந்தது நான் ஜாயின் பண்ணுறதுக்கு முன்னாடிதான்” என்று சொன்னான் விக்னேஷ்,…

“ஆமா, முன்னாடியெல்லாம் அவர் ஃபாரிங் ட்ரிப், பிசினஸ் சம்மிட்ஸ்ல தான் பிஸி… ஆனா இப்போ?” என்று வருத்தமான பெருமூச்சோடு நிறுத்திய ஹரிணி… “இப்படியெல்லாம் ஆகும்னு நான் நினைக்கவே இல்ல” என்றாள்,…

“நாங்களும் தான், சரி நாளைக்கு அவர் கண்ஃபார்மா வருவாரா?” என்றான் விக்னேஷ்,…

“மேனேஜர் கண்ஃபார்ம் பண்ணிட்டாரு நாளைக்கு ஷ்யூரா நம்ம டீம் மீட்டிங் அட்டன்ட்  பண்ணுவார்னு” என்று சுபா சொல்ல, மற்றவர்கள் தலையசைத்துக் கொண்டனர்,..

இவர்கள் பேசியது எல்லாம் அருகில் லேப்டாப்பில் டைப்பிங் செய்து கொண்டு இருந்த மதுநந்தினியின் காதுகளில் விழுந்தது…

‘தீரஜ் சார்?’ அந்த பெயரை மனதில் உச்சரித்தவுடனே அவளது மனதில் ஒரு வித்தியாசமான சுவாரஸ்யம் தோன்றியது, அவள் கம்பெனியில் சேர்ந்த நாளிலிருந்து எல்லோருமே “தீரஜ் சார் தான் இந்த நிறுவனத்துக்கு உயிர், அவருடைய விஷன்-ஐ தான் நாம ஃபாலோ பண்ணுறோம்” என்று புகழ்ந்து பேசுவதை கேட்டு இருக்கிறாள்,.. ஆனால் அவர் முகத்தை இதுவரை நேரில் பார்த்ததில்லை…

‘என்னென்னமோ சொல்றாங்க, சஸ்பென்ஸா இருக்கு, ஃபைனலா நாளைக்கு அவரை நானும் பார்க்க போறேன்’ என்ற எண்ணம் வந்ததும், அவளது இதயம் உற்சாகத்தில் வேகமாகத் துடித்தது,..

‘அவர் எப்படி இருப்பார்? கம்பீரமா இருப்பாரோ? ஹரிணி அவருக்கு வயது வெறும் 27 டூ 28 தான் இருக்கும்னு சொல்லி இருக்கா, செம ஹேண்ட்ஸம்னு சொல்லி ஒரே புகழ் தான், நல்லவர்னு சொல்லி இருக்கா பார்ப்போம்’ என்று மனதில் நினைத்தவளுக்கு அவளையும் மீறி ஒருவித சுவாரஸ்யம் அவனை பார்க்க போகிறோம் என்று,…

அன்று காலை வழக்கம்போல் அலுவலகத்திற்க்குள் நுழைந்த மதுநந்தினி, ரிஷப்ஷனில் சென்று அட்டன்டன்ஸ் பதிவு செய்துவிட்டு, லிஃப்ட் நோக்கி நடந்தாள், இன்று தீரஜை பார்க்க போகிறோம் என்ற உற்சாகமும் அவள் முகத்தில் தெரிந்தது,…

அதை பற்றி யோசித்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தவள், அந்த நேரத்தில், மேல்தளத்துக்கு செல்லும் லிஃப்ட் கதவு மூடப் போவதை கண்டதும்,…
‘அச்சோ,.., லிஃப்ட் மேலே போயிட்டா டூ மினிட்ஸ் கிட்ட நிற்கணுமே’ என்று அவள் சற்றே ஓடிவந்து, வேகமாக உள்ளே நுழைந்துவிட்டாள்….

ஓடி வந்ததில் மூச்சு வாங்க, நெஞ்சில கரம் வைத்துக் கொண்டவளின் பார்வையில் புதிய ஒரு இளைஞன் பார்வையில் படவும்,.. ‘யார் இவர்’ என்ற கண்ணோட்டத்துடன் பார்க்க,.. அவனோ,.. மெல்லிய புன்னகையை மட்டும் சிந்தினான்,..

அவளும் பதிலுக்கு லேசாக புன்னகைத்தவள், பார்வையை கீழ் நோக்கி திருப்பியதும் தான் அங்கிருந்த இன்னொரு நபரை கவனித்தாள், பார்த்த கணம் சட்டென்று அவள் விழிகள் பெரிதாக விரிந்தது,..

அதே முகம்… அதே பார்வை…
அவளால் மறக்க முடியாத ஒருவன் இப்போது அவள் எதிரில்..

‘இவர் தான்…’ அவளது மனம் குலுங்கியது…

அவள் தாயின் மருத்துவச் செலவுக்காக, திடீரென தோன்றி, முழுவதையும் செலுத்திவிட்டு மறைந்துபோன அந்த இளைஞன்! அவள் பல நாட்களாகத் தேடியும், எங்கும் கண்டுபிடிக்க முடியாதவன்
இப்போது அவளது கண்முன்னே!

அவள் வாயைத் திறந்து ஏதோ பேசப்போகும் முன்னர் தான் அவனை முழுமையாக கவனித்தாள், அவள் விழிகள் மேலும் அதிர்ந்து பெரிதானது,..

அவன் நிற்கவில்லை,
வீல் சேரில் அமர்ந்திருந்தான்…

அவள் உள்ளம் அதிர்ந்தது…
‘இது என்ன? அன்னைக்கு நல்லா தானே இருந்தாரு, இன்னைக்கு வீல் சேர்ல இருக்கார்?’ அவள் பேச வந்த வார்த்தைகள் கல்லெறிந்தது போலாகியது அவனின் நிலை கண்டு,..

அதிர்ச்சி, குழப்பம், சந்தோஷம் அனைத்தும் கலந்து ஒரே உணர்ச்சியாக அவளது முகத்தில் தெரிந்தது…

‘இவர் தான் அவரா? இல்லைனா வேறொருவரா? ஆனா முகம்… பார்வை… எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கு…’ கண்களை அவனை விட்டு பிரிக்க முடியாமல் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்..

லிஃப்ட் மேலேறிக் கொண்டிருந்தது, ஆனால் மதுநந்தினியின் உள்ளம் மட்டும் கீழே விழுந்தது போல இருந்தது…

அவளது பார்வை அவனின் மீதே உறைந்து போனது, அவனோ வீல் சேரில் அமைதியாக அமர்ந்திருந்தான், முகத்தில் ஓர் கடுமையான அமைதி, அவன் கண்கள் நேராக முன்பக்கம் பார்த்துகொண்டிருந்தன…

மதுநந்தினி உள்ளுக்குள் அலைமோதினாள்..  ‘அவரே தான் இவர், சந்தேகமே இல்ல… ஆனா எப்படி இப்படியானது? இவருக்கு என்னவானது? இப்போது நான் பேசலாமா?’ அவளது உதடுகள் சற்று நடுங்கின, சொல்ல வார்த்தைகள் இருந்தும், வெளியில் வரவில்லை… அவள் மனதில் இருந்த ஆயிரம் கேள்விகள், அந்தச் சில வினாடிகளில் குழப்பமாக மாறின….

அதே நேரத்தில் அவன் கண்கள் சற்று அவள் பக்கம் திரும்பின….

அவள் விழிகளும் அவனைச் சந்தித்தன, மின்னல் போல ஓர் அதிர்வு இருவரிடமும் பாய்ந்தது…

ஆனால் அவன் முகத்தில் மாற்றமே இல்லை, ஒரு உணர்ச்சியற்ற முகமாக இருக்க, அது அவளுக்குப் புதிராகவே தோன்றியது…

லிஃப்ட் மணி ஒலித்தது..
கதவு திறந்ததும், அவன் அமர்ந்திருந்த வீல் சேரைத் தள்ளிச் சென்றான் அவர்களோடு லிஃப்டிலிருந்த அவனின் உதவியாளன் ராமு,..

மதுநந்தினி அங்கேயே நிற்க, அவளது கண்கள் அவனைத் தொடர்ந்து சென்றன, இதயம் முழுவதும் ஒரு கேள்வி மட்டுமே ஒலித்தது ‘இவர் உண்மையிலேயே அன்னைக்கு எனக்கு உதவியர் தானா? இல்லைனா நான் தவறாக நினைக்கிறேனா?’ என்ற குழப்பம் அவளை போட்டு அலைக்கழித்தது…

“ஹேய் நந்தினி, என்ன இங்கேயே நிக்கிற” ஹரிணியின் குரலில் தான் நடப்பிற்கு வந்தாள்,.. “ஹாங் ஒன்னுமில்ல” என்றவளோ அவளோடு நடந்தாள்,…

மதுநந்தினியின் மனதில் நீங்காமல் அந்த சந்தேகம் சுழன்றுக் கொண்டே இருந்தது… ‘அவர் தானா? ஆம் நிச்சயம் அவர் தான் ஆனா வீல் சேர் எப்படி சாத்தியமாகும்?’

அந்தக் கணம்  பக்கத்தில் இருந்த சக ஊழியர் ஒருவன்.. “நம்ம தீரஜ் சார் வந்துட்டாராம், ரெடியா இருங்க”  என்றான்..

அந்த வார்த்தைகள் அவளது காதில் பட்டு, நெஞ்சுக்குள் ஒரு மின்னல் பாய்ந்தது போல் இருந்தது,.. ‘தீரஜ் சாரா? அப்படினா அவரா தான் இருக்குமோ, அவர் தான் தீரஜ் சாரா?’ அதிர்ச்சியாக இருந்தாலும், அவள் வாயால் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை,  அவள் சிந்தனை முழுவதும் அந்த ஒரே முகத்தில் மட்டுமே சிக்கிக் கொண்டிருந்தது….

சிறிது நேரத்தில் அந்த பெரிய மீட்டிங் ஹாலில் அனைவரும் இருக்கைகளில் அமர்ந்து, பாஸின் வருகைக்காக காத்திருந்தனர், அனைவரையும் காட்டிலும் நந்தினி தான் மிக ஆர்வமாக காத்திருந்தாள்,..

மீட்டிங் ஹாலின் கதவு திறக்க, அங்கிருந்த எல்லாரின் பார்வையும் ஒரே திசையில் திரும்பியது. சக்கர நாற்காலியில் மெதுவாக நுழைந்து வந்தான் தீரஜ், தீரஜ் அரவிந்தன், அவனின் கண்களில் இருந்த கம்பீரம், பேச்சு இல்லாமலேயே அனைவரையும் சற்று பதற வைத்தது…

ஆனால் மதுநந்தினிக்கோ அவனை கண்ட அந்த நொடியே மனம் உறைந்து போய், அவள் மூச்சே அடைபட்ட உணர்வு தான்…

இப்போது இன்னும் தெளிவாகவே பார்த்தாள்.. ‘இவர் அவர்தான்! சந்தேகமே இல்ல, அன்னைக்கு என் அம்மாவை காப்பாற்றியவர் இவர் தான்… ஆனா  இவர் தான் இந்த கம்பெனியின் CEOவா? அதோட இவர் காலுக்கு என்னாச்சு?’ அதிர்ச்சி, ஆச்சரியம், நன்றி, குழப்பம் என்று
எல்லா உணர்ச்சிகளும் ஒரே நேரத்தில் அவளை ஆட்கொண்டது….

“குட் மார்னிங் எவ்ரிவன்,” என்று உறுதியான குரலில் சொல்லியவனின் வார்த்தைகள் ஹாலையே நிறைத்திருக்க,
மற்றவர்களோ ஒரே சுருதியில், “குட் மார்னிங் சார்” என்று சொல்லினர்,..

பார்வையால் ஒருகணம்
ஹாலில் உள்ளவர்களை ஆராய்ந்துவிட்டு நேரடியாக உரையாடலைத் தொடங்கினான்..

“ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல், ஐம் கிளாட் டூ சீ யூ ஆல் ஆப்டர் அ லாங் டைம்,
இந்த நிறுவனம் எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்பதை உங்களோட ஹார்ட் வொர்க் தான் நிரூபிக்குது, லெட்ஸ் கீப் திஸ் மோமென்டம் கோயிங்” அவனது வார்த்தைகள் ஊழியர்களின் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தியது….

பின் சற்றே இடைவெளி எடுத்துக் கொண்டு, “திஸ் வீக் நமக்கு சில புதிய கேண்டிடேட்ஸ் சேர்ந்திருப்பதாக கேட்டேன், யார் யார்?” என்று கேள்வி எழுப்ப, முன்னிருப்பில் அமர்ந்திருந்த HR மேனேஜர் எழுந்து, “யெஸ் சார், நான்கு பேர் சேர்ந்திருக்காங்க. அவங்களும் இங்கே இருக்காங்க” என்று சொல்லி பெயர் சொல்லிக் காட்டினார்….

மதுநந்தினியின் பெயரும் அழைக்கப்பட்டது அவள் திடுக்கிட்டு எழுந்தாள், தீரஜின் பார்வை அழுத்தமாக அவள்மீது விழ, அவளுக்கு அந்த நொடியில் மூச்சே மந்தமாகிப் போன உணர்வு…

“வெல்கம் டூ த டீம்” என்ற தீரஜ்  சின்ன புன்னகையோடு,.. “ஹோப் யூ ஆல் கான்ட்ரிப்யூட் வித் யூர் பெஸ்ட் போட்டென்ஷியல் ரிமெம்பர், திஸ் கம்பனி கிவ்ஸ் யூ அ பிளாட்ஃபார்ம், பட் யோர் க்ரோத் டிபெண்ட்ஸ் ஆன் யோர் கமிட்மென்ட்”  அவனது வார்த்தைகள் ஒரு சாதாரண ஃபார்மல் வெல்கமாக இருக்காமல் ஊக்கமும் சவாலும் கலந்திருந்தது…

மதுநந்தினியோ உள்ளுக்குள் மீண்டும் இவர் தான் அவரா? என்பதை பற்றி தான் நினைத்துக் கொண்டிருந்தாள், ‘இவ்வளவு பவர்ஃபுல் மனிதர் தான் எனக்கு உதவியதா?’ என்று ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது,.. ஆனால் வெளியில் அவள் முகத்தை இலகுவாக தான் வைத்துக் கொண்டிருந்தாள், அவனது வெல்கம் ஸ்பீச்க்கு மற்ற நால்வரை போல, அவளும் மெதுவாக, “தேங்க் யூ சார்” என்று கூறி அமர்ந்து கொண்டாள்…

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
32
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்