Loading

அத்தியாயம் – 28

 

நந்தினி சொன்ன ஆசைகளை கேட்டு,.. “ஹேய் இதெல்லாம் ஒரு ஆசையா மது, நான் பெருசா எக்ஸ்பெக்ட் பண்ணேன்” என்றான் அவன் உதட்டை சுழித்து,…

“எனக்கு இதெல்லாம் தான் ஆசை அதை நிறைவேத்தி வைக்கிறது உங்க பொறுப்பு” அவள் சொல்ல,.. “நைட்ல டைம்ல ஒன்னா கைகோர்த்துகிட்டு குல்பி சாப்பிட்டுகிட்டே நடக்குறது ஓகே, என் கூட பைக்ல ஒன்னா போகனும்னு சொல்றதும் ஓகே, தினமும் காலையில என்கூட ஒன்னா வாக் போறதும் கூட ஓகே தான், பட் உன்னை கையில தூக்கி சுமந்துகிட்டே கிரவுண்ட் ஃப்ளோர்ல இருந்து நம்ம ரூம் வரைக்கும் வர சொல்றது தான் யோசனையா இருக்கு” அவன் தாடையை தடவியபடி சொல்ல.. “என்ன யோசனை” சந்தேகத்தோடு கேட்டாள் நந்தினி…

தீரஜ் குறும்பு புன்னகையுடன்.. “ம்ம்… உன்னை என்னால தூக்க முடியுமாங்கிற யோசனை தான், நீயும் கொஞ்சம் பப்ளியா இருக்க, எவ்ளோ வெயிட் இருக்கேன்னு தெரியல…” அவனது கிண்டலில் இடுப்பில் கரங்களை ஊன்றி முறைத்தவள்…

“ஹலோ… என்னை பார்த்தா உங்களுக்கு குண்டா தெரியுதா? ஐம் ஜஸ்ட் 50 kg தான்!” என்று அவசரமாகச் சொன்னாள்…

“ஓஹோ அப்படியா? அதை நான் தூக்கிப் பார்த்தே தெரிஞ்சிக்கிறேன்” என்றவன் சிரித்தபடியே, அவள் எதிர்பார்க்கும் முன்பே கரங்களில் தூக்கி கொண்டான்,…

சற்றும் இதை எதிர்பார்க்காதவளோ… “ஐயோ… ஏன் தூக்குனீங்க? உங்க கால்ல இன்னும் ஸ்ட்ரெங்க்த் வந்திருக்காது, ப்ளீஸ் இறக்குங்க” அவள் பயந்து சொல்ல, அவனோ… “அதெல்லாம் ஒன்னும் பிராப்ளம் இல்லை, நீ ஃபிப்ட்டி கேஜி கூட இல்ல போல தான் தோணுது,” என்று மெதுவாக நடந்துவந்து, அவளை படுக்கையில் அமர வைத்துவிட்டு, அவனும் அவள் அருகிலேயே நெருங்கி அமர்ந்து கொண்டு, அவளது கரத்தைத் தன் கரங்களில் சுருட்டிக்கொள்ள,..

அவளோ… “நீங்க எழுந்து நின்றதை நான் ரெண்டு தடவை பார்த்தேன், அந்த ரெண்டு தடவையும் என்னோட மனபிரம்மையா? இல்ல என் கண்ணுல தான் கோளாறான்னு நினைச்சு எவ்வளவு குழம்பி போனேன் தெரியுமா?” என்றாள்,..

“ஆஹான் அப்படியா?” அவன் கிண்டலாய் சொல்ல,.. “என்ன நொப்படியா உங்க மேல செம கோபம் வருது, இருந்தாலும் காட்ட வேணாம்னு அடக்கி வச்சிட்டுருக்கேன்” என்றாள்,…

“தயவு செய்து இதை விடுமா,.. நாம ரொமான்டிக்கா ஏதாவது பேசலாமே” அவன் புன்னகையுடன் சொல்ல… “ரொமான்டிக்கா பேச என்ன இருக்கு” என்றாள் அவள் சலிப்புடன்…

“ஏய், நாம ஹஸ்பண்ட் அண்ட் வைஃப்’மா… இப்படிச் சொல்றது உனக்கே நல்லா இருக்கா?” அவன் பாவம் போல் வினவ,.. “ஆமா, ஆமா… அது ஒன்னுதான் குறைச்சல்” என்று அழுத்துக் கொண்டவளிடம்,.. “இப்போ என்ன உனக்கு குறைச்சலா இருக்கு?” என்றான் நளிந்த குரலில்,..

“எனக்கே தெரியல… ஆனா ஒரு மாதிரி நெருடலா இருக்கு” என்று நந்தினி மெலிதாய் பதிலளிக்க,
அவன் புருவம் சுருக்கிக்கொண்டு,
“நான் மறைச்சது தான் உன்னை இப்படியெல்லாம் யோசிக்க வைக்குதா மது?” என்று கவலையுடன் கேட்டான்…

அவள் தலையை அசைத்து, “இல்ல அரவிந்த்… மைண்ட் கொஞ்சம் டிஸ்டர்பன்ஸா இருக்கு, தூங்கி எழுந்தா சரியாகிடும், நான் தூங்கட்டுமா?” என்று களைப்போடு சொன்னவளிடம்,.. அவளது மனநிலை புரிந்தவனும்,..
“சரி வா” என்று அவளைத் தன் மார்பில் சாய்த்துக்கொண்டு, அவளோடு படுத்துக் கொண்டான்..

அந்த கணம், அவன் மார்பில் சாய்ந்திருந்த நந்தினிக்கு, அவன் இதயத் துடிப்பு தெளிவாக காதில் ஒலித்தது, அந்த ஒலிக்குள் ஒரு ஆழமான நிம்மதியை உணர்ந்தாள், கண்களை மெதுவாக மூடியவளுக்கு மனமும் கொஞ்சம் சாந்தமடைந்தது, அவன் அருகாமையில் கிடைத்த அந்த உஷ்ணம், அவளுக்கு இதமாய் இருக்க, அந்த உணர்வோடு, மெதுவாக கண்ணுறங்கிப் போனாள்…..

அடுத்த நாள் காலை அழகாக விடிய,.. உறக்கத்திலிருந்து கண்விழித்த நந்தினிக்கு,… “குட் மார்னிங்” என்ற தீரஜின் உற்சாக குரலில், அவள் இதழ்களும் விரிந்தது,…

தன் முழு உயரத்திற்கு அவள் முன்னிலையில் நின்றிருந்தவன்,.. “மார்னிங் வாக் போலாமா” என்றிட,.. விழிகளை விரித்தவளோ,… “நிஜமாவா?” என்றாள்,..

அவன் “ம்ம்” என்று சொல்ல, அவளோ,.. “மாமா பார்த்துடுவாறே, அப்புறம் சர்பிரைஸ் பண்ண முடியாதே” என்றாள் யோசனையாய்,..

“நாம் டெரர்ஸ்ல தானே வாக் பண்ண போறோம், அங்கே அப்பா வர மாட்டாரு” அவன் கண்சிமிட்டி சொல்ல,.. “ஓஹோ… சரி ஃபைவ் மினிட்ஸ்” என்றவள் குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்,..

அவள் வந்ததும் இருவரும் சேர்ந்து மொட்டை மாடிக்கு சென்றனர்,…

அந்த மாடி, தோட்டம் போல பசுமையால் சூழ்ந்திருந்தது, இரு பக்கங்களிலும் அடர்ந்த செடிகள், இடையிடையே மலர்களின் மணம் காற்றோடு கலந்து வந்து தொற்றியது, அகன்ற அந்த வெளியில் வீசிக் கொண்டிருந்த தென்றல், இருவரின் உடலையும் வருடிச்செல்ல, அந்த குளிர்ச்சியோடு ஒரு புதுவித சுகம் மனதிலும் பரவியது…

வீல்சேரை மெதுவாக ஓரமாக நிறுத்தி விட்டு, தீரஜ் அவளை நோக்கி புன்னகையுடன் கரத்தை நீட்டிட, விரிந்த புன்னகையுடன் அவன் கரத்தை பற்றிக் கொண்டாள், அவள் கரத்தை அவனது கரத்தில் பிணைத்தவுடன், அவன் சற்றும் தயக்கமின்றி மெதுவாக எழுந்தான்…

செடிகளுக்கிடையே அமைத்திருந்த நீண்ட பாதையில் இருவரும் கைகோர்த்துக் கொண்டு நடந்தார்கள், அந்தக் கணம்… நந்தினியின் மனதில் அத்தனை நாள் புதைந்திருந்த ஆசை நிறைவேறியது, அவள் கண்களில் தெரிந்த அந்த சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது…

மலர்களின் மணம் மட்டுமல்ல, அவள் உள்ளமெல்லாம் மணமாகி, அவள் அருகில் எடுத்த ஒவ்வொரு அடியும் அவளுக்கு சொர்க்கப் பயணமாகவே தோன்றியது…

இருவரும் சில நிமிடங்கள் எதுவும் பேசவில்லை, அந்த அமைதியும் அந்தச் சூழலும், அவர்கள் இருவருக்கும் ஏகாந்தமாகி விட்டது.

“உன்னோட ஒரு ஆசையை நிறைவேத்திட்டேன்” அவன் தான் முதலில் அந்த மௌனத்தை கலைத்தான்…

அவள் பக்கவாட்டாக திரும்பி அவனை நோக்க, மெல்ல புன்னகைத்தவன்,.. “என்கூட கைகோர்த்து நடக்கணும்னு ஆசைப்பட்ட தானே?” என்று கேட்டான்…

“ம்ம்…” என்று  தலையசைத்தவளின் பார்வை அதன்பின் சிறிது தொலைவுக்குச் சென்றது, ஏதோ ஆழமான யோசனை அவளை ஆட்கொண்டது…

அதைக் கவனித்தவன், “என்ன யோசனை?” என்று மெல்லக் கேட்க,.. அவள் சற்று நெகிழ்ந்து புன்னகைத்துவிட்டு.. “இல்ல… எனக்கு இப்படியெல்லாம் ஒரு லைஃப் பார்ட்னர் கிடைப்பாருன்னு நினைச்சுக் கூட பார்க்கல, நமக்கு ஒருத்தருக்கொருத்தரை யாருன்னே தெரியாது, திடீர்னு என் கண்ணு முன்னாடி வந்து நின்னீங்க, என் அம்மாவை எனக்கு மீட்டு கொடுத்துட்டு அப்புறம் மறைஞ்சு போயிட்டீங்க, அப்புறம் திரும்பவும் என் கண்ணுல பட்டீங்க, சர்ப்ரைஸிங்கா கல்யாணம் நடந்துச்சு, உங்க வாழ்க்கைக்குள்ள நுழைஞ்சேன், இப்போ உங்க கைய பிடிச்சிக்கிட்டு நிக்கிறேன்,

நான் ஹேப்பியா இருக்கேன்னு சொல்லி முடிச்சிட முடியல, என்னால வார்த்தையால விவரிக்கவே முடியல அரவிந்த், நீங்க நடக்கணும் ரொம்ப ஆசை பட்டேன், இப்போ அதுவும் நடந்துடுச்சு, நிஜமா சொல்றேன் யு ஆர் அ ப்ளெஸ்ஸிங் இன் மை லைஃப்…”  அவள் குரல் சற்றே நடுங்கியது, அவளது பார்வை, அவன் முகத்தில் அடங்கியிருந்த அந்த சிரிப்போடு இணைந்தது…

அந்தச் சொற்களைக் கேட்டவனுக்கோ உடலே சிலிர்த்து போய்விட, அவள் கையை இன்னும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டான்…

தன்னால் அவள் பல மடங்கு சந்தோஷத்தை அனுபவித்திருக்கிறாள் என்பதை அவளது வாயால் கேட்கும் போது… அவன் உள்ளம் கர்வப்பட்டது,
ஒரு ஆணுக்கு இதை விட பெருமை வேறு என்ன இருக்க முடியும் என்று அவன் எண்ணினான்…

அவளின் ஒவ்வொரு வார்த்தையும் அவன் இதயத்தில் பதிய, தன்னுடைய வாழ்க்கையோடு இணைந்திருக்கும் அவளை நேசத்துடன் நோக்கியவன்… ‘என்  பொக்கிஷமே  நீ தான், இதை விட இன்னும் ஆழமான அதிகமான அன்பை உனக்கு தந்துகிட்டே தான் இருப்பேன்’ என்று சொல்லிக் கொண்டான் மனதுக்குள்…

அந்தக் கணத்தில், அந்த மாடி, அந்தத் தென்றல், அந்தப் பொழுது இருவருக்கும் மட்டும் உரிய உலகமாகி விட்டது….

இருவரும் வெகுநேரம் மாடியில் இருந்து விட்டு தான் அறைக்கு திரும்பினர், சிரிப்பும் பேச்சுமாக ஒன்றாய் வந்து கொண்டிருந்தவர்களை கண்ட மனிஷாவிற்கோ மனம் எரிந்தது..

அவளது அறையும் முதல் தளத்திலேயே தான் இருந்தது, ஒவ்வொரு நாளும் பார்க்க தானே செய்கிறாள் அவர்களுக்குள் இருக்கும் அன்பையும் நெருக்கத்தையும்..

ஷ்யாமோ இப்போது மனிஷாவை கண்டு கொள்வதே இல்லை, “நாம எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் ஷ்யாம்?” என்று ஆர்வமாக கேட்டவளிடம்,.. “எனக்கு நீ செட்டாக மாட்டேனு தோணுது பேபி… உன்னையெல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது,” என்று அவள் தலையில் குண்டை தூக்கி போட்டிருந்தான் அவன்,..

மனிஷாவுக்கோ அதிர்ச்சியும் ஏமாற்றமும், அவனை விடவும் முடியாதே அவனை விட்டால் தான் ஆசை பட்ட கோடீஸ்வர வாழ்க்கை தனக்கு கிடைக்காகமலேயே போய்விடுமே என்ற பயத்தில் அவனிடம் கெஞ்சினாள், கதறினாள்…

ஆனால் அவனோ பனிமலை போல அசையாமல், “வேணும்னா கீப்பா இருந்துட்டு போ,” என்ற கசப்பான வார்த்தையை எறிந்தான்…

அந்தச் சொல் மனிஷாவின் மார்பைக் கிழித்தது, கோபம் எரிமலையாய் பொங்க அவனை திட்டிவிட்டு வந்து விட்டாள், தாயிடமும் அனைத்தையும் கூறி அழுதாள், அவரோ,.. “நீ தீரஜை விட்டு விலகாமலேயே இருந்திருக்கலாம் மனிஷா” என்றார்,…

இப்போதும் அவள்,.. “கால் நடக்க முடியாதவனுக்கு பொண்டாட்டியா இருக்கிறதை விட, அந்த ஷ்யாமுக்கு வப்பாட்டியாகவே இருந்துவேன்” என்று விஷமாய் கூறி இருக்க, அவள் தாயே வாயடைத்து போய் விட்டார்,..

தான் இங்கு கவலையில் மனம் எரிந்து கிடக்கையில்… தீரஜும் நந்தினியும் சிரிப்பும் சந்தோஷமும் கலந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே மனிஷாவின் வயிற்றெரிச்சலை இன்னும் பெரிதாக்கியது…

அவள் உள்ளுக்குள், ‘ஏன் அவர்களுக்கு மட்டும் எல்லாம் நல்லதா நடக்குது… ஏதாவது கெட்டது நடந்தா ரொம்ப நல்லா இருக்கும்’ என்ற பொறாமையின் நஞ்சு ஒவ்வொரு நாளும் அவள் மனதில் பரவிக் கொண்டே இருந்தது…

இந்நிலையில் தான் ஒருநாள் அவள் அந்த அதிர்ச்சியான காட்சியை பார்த்தாள், ஆம் தீரஜ் எழுந்து நடப்பதை தான் பார்த்தாள்… பார்த்த கணம் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அவளுக்கு…

அவர்களின் அறையை தாண்டிச் சென்று கொண்டிருந்தவள், உள்ளிருந்து வந்த சிரிப்பு சத்தம் காதில் விழ, எரிச்சலுடன் திரும்பினாள், கதவு சற்றே திறந்திருந்தது, அதன் வழியாகப் பார்த்தபோது நந்தினியுடன் கைகோர்த்து நின்று, சிரித்தபடி வாக்குவாதம் செய்து கொண்டிருந்த தீரஜின் உருவம் அவள் கண்களில் பட்டது…

அடுத்த நொடி அவள் கண்கள் பேராசையில் மின்னின… ‘ஓ மை காட்… நிஜமாவே இது நல்ல விஷயமாச்சே! அவனால நடக்க முடியும்னா, அவனோட  சேர்ந்து வாழ்ந்துடுவேனே, என்னோட ஆசை, என்னோட கனவெல்லாம் நிறைவேறிடுமே! கோடிக்கணக்கான சொத்துக்கு நானே ராணியாகிடுவேனே…’
அந்தக் கனவு அவளது மனதை கொள்ளை கொண்டது…

‘ஆனா இப்போ அவன் கூட அவனோட மனைவி இருக்கா? என் ஆசை எப்படி நிறைவேறும்’

அவளது பார்வை கடுகடுவெனக் கறாரானது…

‘இல்ல… இந்த வாய்ப்பை நான் நழுவ விட மாட்டேன், கல்யாணம் ஆச்சுனா என்ன… அது எனக்கு தடையா வராது, அந்த நந்தினியை அவனிடமிருந்து பிரிச்சுட்டு நான் தீரஜின் மனைவியா வருவேன், என் அடுத்த கட்ட நடவடிக்கை அவளை இந்த வீட்டை விட்டு விரட்டுவது தான்…’ அவளது கண்களில் பொறாமையும் பேராசையும் கலந்த விஷக்கனல் பளிச்சென எரிய, திட்டத்தை தீட்ட ஆரம்பித்திருந்தாள்,…

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
12
+1
29
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment