Loading

அத்தியாயம் – 1

 

சூரியனை கவ்விபிடித்திருந்த கருமேகங்கள் அந்த பகல் நேரத்தினை இருளில் மூழ்கடித்திருக்க, மழைத் துளிகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டு சாலையின் மேல் சிதறி விழுந்து கொண்டிருந்தன, அந்த சாலையில் வாகனங்கள் அலைமோதும் கடல்போல கூட்டமாய் நின்று நகர முடியாமல் தவிக்க, பல ஹாரன்களின் சத்தம் காதுகளை பிளக்கும் வகையில் இருந்தது,..

 

அந்தக் கூட்ட நெரிசலுக்குள், கறுப்பு நிற ஆடி காரினுள்ளே அமர்ந்திருந்தவனின் முகத்திலோ கோபமும் கடுகடுப்பும் தெளிவாகவே புலப்பட்டன, கைகளை ஸ்டீயரிங் மீது அழுத்தமாக பற்றி,  ஹாரனை விடாது அழுத்தியபடி முன்னால் நகர முயன்று கொண்டிருந்தவனுக்கு  முயற்சி பயனில்லாமல் போகவும் அவனும் சிவந்த முகம் கருத்து போனது,..

அவன் காருக்கு முன் பல வாகனங்கள் அசையாமல் நின்றிருக்க, சற்று முன் வரை அடக்கிப் பிடித்திருந்த கோபம், கெட்ட வார்த்தைகளால் அவன் வாயிலிருந்து வெளிப்பட்டது….

“டேம் இட்… ஸ்கவுண்ட்ரல்… **** போய் தொலைங்களேன்டா”
அவனது ஆங்கிலக் கெட்ட வார்த்தைகள் மழைத்துளிகளோடு கலந்து சாளரத்தில் மோத, அவன் முகமோ மேலும் மேலும் இறுகி போனது,…

முன்னால் நின்றிருந்த வண்டிகள் கொஞ்சம் கொஞ்சமாக நகரத் தொடங்கவும் தான் அவன் எரிச்சல் கொஞ்சம் கட்டுப்பட்டுக் கொண்டு வந்தது, தன் ஆடியை மெதுவாக முன்னே செலுத்தி, அந்த நெரிசலை கடந்து சீரான வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தான், கார்க்கண்ணாடியில் பட்டுத் தெறித்த மழைத்துளிகள், காற்றின் வேகத்தால் பக்கவாட்டாகச் சிதறி, அந்த அமைதியான சாலையை வெட்டிக் கொண்டு சென்றது அந்த ஆடிகார்…

அவனது கவனம் வழியில் இருந்த வேகத்திலும் முன்னால் நகரும் வண்டிகளிலும் இருந்த நேரம் திடீரென்று ஒரு பெண் அவன் காரின் முன்னிலையில் வந்து நிற்கவும் அதிர்ச்சியில் சடன் பிரேக் அடித்து காரை நிறுத்தியவன் “வாட் த…….” காது கூசும் வார்த்தைகள் தான் அவன் வாயிலிருந்து வெளிவந்தது, கொஞ்சம் விட்டிருந்தால் அந்த பெண்ணை அவன் இடித்து தூக்கியிருப்பான், அந்த அதிர்ச்சியிலும் கோபத்திலும் வார்த்தைகள் வரம்பு மீறி வெளிவந்திருக்க, அந்த பெண்ணிற்கோ அந்த மழை சத்தத்திலும், காரின் கண்ணாடி முழுக்க மூடி இருந்ததினாலும் எதுவும் கேட்டிருக்க வாய்ப்பேல்லை,…

கொட்டும் மழையில் தொப்பலாக நனைந்து போயிருந்தவள்  வேகமாக அவனது காரின் கண்ணாடியை படப்பாக தட்டி,.. அவன்  கண்ணாடியை இறக்கிய நொடி,…”சார்… ப்லீஸ்… ஹெல்ப்…தயவு செய்து உதவி பண்ணுங்க ஸார்” அவனுக்கு பேச வாய்ப்பளிக்காமல் மூச்சு விடாமல் கெஞ்சினாள்,..

மழைத்துளிகளுடன் கரைந்து சென்ற அவளின் கண்ணீருடனும் நடுங்கிய தோற்றத்துடன், பாவமிகுந்த கண்ணோட்டத்தில் நின்றவளை ஒரு கணம் ஆழ்ந்து பார்த்தவன்,… “வாட் டூ யூ வான்ட்?” என்றான் இறுகிய குரலில்,…

அவளோ கண்ணீரோடு குரல் நடுங்க “என் அம்மாக்கு… உடம்பு முடியல சார்… ப்ளீஸ்… ஹாஸ்பிட்டல்ல விட முடியுமா…” என்றாள்

அவன் சற்றே அலட்சியமான தோரணையில்… “ஐ டோன்ட் ஹேவ் டைம்..” என்று சொல்லிவிட்டு கண்ணாடியை மூட, அதற்குள் அவள்.. “ப்லீஸ், சார்… எனக்கு இருக்கிறது என் அம்மா மட்டும் தான்… தயவு செய்து உதவி பண்ணுங்க… ப்ளீஸ் சார்,.. ப்ளீஸ்..” அவன் கண்ணாடியை மூடுவதை கண்டு இறைஞ்சலுடன் அவனிடம் சொல்ல,.. அவனோ முன்னால் செல்லும் வாகனங்களை கவனித்துக்கொண்டே…. “வேர் இஸ் யூர் மாம்?” என்றான்…

அவளோ அவனது காருக்கு முன்னே நின்ற ஆட்டோவை காட்டி,.. “அந்த ஆட்டோல இருக்காங்க சார்… ஆட்டோ பிரேக்டவுன் ஆகிடுச்சு. வேற ஆட்டோ கிடைக்கல, யாரும் வண்டியை நிறுத்தல… தெய்வம் மாதிரி நீங்க மட்டும் தான் வண்டியை நிறுத்துனீங்க” என்றாள் குரல் நடுக்கத்தோடு,..

அவனோ பற்களை கடித்தபடி..
“நான் நிறுத்தல, நீ தான் வண்டி முன்னாடி பாய்ஞ்சி நிற்க வச்ச, கொஞ்சம் விட்டிருந்தா இந்நேரம் நான் கொலை கேஸ்ல மாட்டி இருப்பேன்!” என்று கோபமாக மொழிந்தவன்,… “ஸாரி சார்,.. யாரும் நிறுத்த மாட்டேன்னுட்டாங்க, அதனால தான்… ப்ளீஸ் சார் கொஞ்சம் உதவி பண்ணுங்க சார்” என்று கண்ணீர் விட்டு கெஞ்சியவளின் கெஞ்சலில் மனம் இறங்கி,… “போய் உன் அம்மாவை அழைச்சிட்டு வா…” என்று சொல்லவும் தான் அவளுக்கு நிம்மதி மூச்சே வந்தது,…

“தேங்க்ஸ் சார், ரொம்ப தேங்க்ஸ் சார்” தொடர்ந்து நன்றிகளை  சொன்னவளோ… அந்த கொட்டும் மழையில் தாயிருக்கும் ஆட்டோவை நோக்கி ஓடியவள், ஆட்டோ டிரைவரின் உதவியுடன் மயங்கிய நிலையில் இருந்த தன் தாயை அவன் காரில் ஏற்றி இருந்தாள், அவனும் காரினை ஆட்டோவின் அருகில் கொண்டு வந்து நிறுத்தியதில் அவளுக்கு மிகவும் உதவியாக போனது,.. .

“விச் ஹாஸ்பிட்டல்?” கேட்டப்படி அவன் வண்டியை எடுக்க,… மூச்சு பேச்சில்லாமல் கிடந்த தாயை பார்த்து கண்ணீர் விட்டவளுக்கு பேச வார்த்தைகளே வரவில்லை, மூச்சை இழுத்துக்கொண்டே… “ப.. பக்கத்துல இருக்க ஹாஸ்பிட்டல் போங்க சார் ப்ளீஸ்” என்றாள் திக்கிய குரலில், அவளது குரலிலேயே அவளது வேதனை தெரிந்தது, ஆனாலும் அவன் ஒரு வார்த்தை கூட ஆறுதலாக பேசவில்லை, அவள் தாய்க்கு என்னவானது என்பதை பற்றியும் கேட்கவில்லை, ஒரு வித அலட்சிய தோரணையில் எந்தவித உணர்வையும் காட்டாமல் தான் வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தான்,…

ஓரிரு நிமிடங்களில் மருத்துவமனையும் வந்து விட,.. இறங்கி மருத்துவனையினுள் ஓடியவள், ஸ்ட்ரெச்சருடன் வார்ட் பாய் இருவரை அழைத்து வந்தாள், அவளது தாயை அவர்கள் ஸ்ட்ரெச்சரில் ஏற்றி விரைவாக சிகிச்சைக்காக கொண்டு செல்ல,.. அப்போது கூட இறங்காமல் காரினுள்ளேயே அமர்ந்திருந்தவனிடம்,.. “தேங்க்ஸ் சார், தேங்க் யூ சோ மச், உங்க உதவியை நான் என்னைக்கும் மறக்க மாட்டேன்” என்று பல நன்றிகளை கூறி விட்டு அவளும் மருத்துவனையினுள் ஓடி இருக்க, அவனோ ஒற்றை அலட்சிய தோள் குலுக்கலுடன் வண்டியை கிளப்பிக் கொண்டு அங்கிருந்து சென்றிருந்தான்,…

மீண்டும் சாலையில் உராய்ந்து சென்றிருந்தது அவனது ஆடிகார், அந்த நேரம் போன் திடீரென்று ஒலிக்க, ஸ்டியரிங்கை ஒற்றை கையால் பிடித்துக் கொண்டு, மறுகையால் போனை எடுத்தவனின் விழிகளில் அத்தனை நேரமிருந்த எரிச்சலும் அலட்சிய பார்வையும் மறைந்து பிரகாசத்தில் மினுமினுத்தது…, அடுத்த கணமே போனை ஏற்றவன்… “ஹெலோ ஹனி” என்று உருகும் குரலில் ஆரம்பிக்க,.. மறுபக்கத்தில் இருந்த பெண்ணவனளோ,… “எங்கே இருக்க பேபி, உனக்காக தான் ரொம்ப நேரமா வெயிட்டிங்” என்றாள் குழைந்த குரலில்,..

“ஆன் தி வே’ல இருக்கேன் ஹனி, இன்னும் ஹாஃபனவர்ல இருப்பேன்” என்று அவன் சொல்லவும்,.. “ஓகே பேபி, கம் குயிக், ஐம் ஈகர்லி வெயிட்டிங் ஒன்லி ஃபார் யூ” என்று சொல்ல, அவன் உள்ளம் மேலும் உருகி போனது,…

“ஐ வில் பி தர் ஷார்ப் இன் தர்ட்டி மினிட்ஸ் ஹனி” அவன் காதல் ததும்பும் குரலில் சொல்லவும்… “ஓகே பேபி.. லவ் யூ” என்று அவள் சொல்ல, அவனும் ஒரு கணம் கண்களை மூடி  “லவ் யூ டூ” என்று சொல்லிவிட்டு வைத்தவனின் முகமெல்லாம் அவ்வளவு பூரிப்பு, அவன் காதலிக்கும் பெண் தான் அவள், அவள் மீது கொள்ளை காதல் அவனுக்கு, அந்த காதல் எவ்வளவு ஆழமானதென்றால் அவளுக்காக எது செய்யவும் தயாராக இருப்பவன்…

அவளுடன் பேசிய பூரிப்பிலும் இதழ்களில் உறைந்த புன்னகையுடன் காரை வேகமாக செலுத்திக் கொண்டிருந்தவனுக்கு
சில நிமிடங்களில் மீண்டும் போன் ஒலிக்கும் ஓசை கேட்டது, ஆனால் அது அவன் போன் ரிங்டோன் அல்ல பின்சீட்டிலிருந்து புதிதான ஒரு ரிங்க்டோனாக இருந்தது, புருவம் சுருக்கி காரை ஓரமாக நிறுத்தியவன், பின்னால் திரும்பிப் பார்க்க சீட்டின் கீழே சத்தமாகக் கத்திக் கொண்டிருந்தது ஒரு கைப்பேசி….

புருவ முடிச்சுக்களுடன் குனிந்து அதை எடுத்துப் பார்த்தவனோ, குழப்பமாக வெறித்தான், போன் ஒலித்துக் கொண்டிருக்கவும் அட்டண்ட் செய்து காதில் வைத்தவனுக்கு, அது ஒரு கம்பெனி கால் என்பது புரிந்தது,..

சலிப்புடன் போனை அணைத்தவன்,.. ‘சரியான இம்சையை கார்ல ஏத்திட்டேன் போலிருக்கு… போனை இங்கேயே விட்டுட்டு போயிட்டா’ என்று மனதினுள் முணுமுணுத்தவனோ, எரிச்சலுடன் அந்த போனை தூக்கி கண்ணாடி வழியாக வெளியில் வீசத் தயாரான அந்த நேரம், அவளது கண்ணீர் வடிந்த முகம் திடீரென்று நினைவில் தோன்றவும், ஒரு பெருமூச்சுடன் போனை தூக்கி அருகில் இருந்த சீட்டில் போட்டவன், காரை மருத்துவமனையை நோக்கி திருப்பினான்,…

ஓரிரு நிமிடங்களில் மருத்துவமனை வந்து சேர்ந்தவன் வரவேற்பறை பெண்ணிடன் சற்று நேரத்திற்கு முன்பு வந்த பேசண்ட்டை பற்றி விசாரிக்க, அவரும் ஐசியூல இருப்பதாக தகவல் சொன்னார், தன்னியல்பாகவே  அவன் கால்கள் ஐசியூவை நோக்கி நடைபோட, அந்த நேரம் பாதி வழியிலேயே அவனின் கால்கள் தரையில் அமர்ந்து கதறிக் கொண்டிருந்தவளை கண்டு சட்டென்று நின்று விட்டது, அவன் விழிகள் கதறி கதறி அழுது கொண்டிருப்பவளை சில நொடிகள் அழுத்தமாய் பார்த்து விட்டு பின் அங்கே அவளை பாவமாக பார்த்து சென்ற ஒரு செவிலிபெண்ணை நிறுத்தி,.. “வாட்ஸ் ப்ராப்ளம்” என்று பார்வையால் அவளை காட்டி அவன் வினவ,…

“அந்த பொண்ணோட அம்மா மயங்கிட்டாங்கன்னு அந்த பொண்ணு இங்க வந்து அட்மிட் பண்ணிச்சி சார், டாக்டர் செக் பண்ணின பிறகு தான் தெரிந்தது அவ அம்மாக்கு இதயத்துல பிரட்சனை இருக்குனு, உடனே ஆபரேஷன் பண்ணனும் இல்லைனா பிழைக்க மாட்டாங்க அப்டின்ற நிலை தான், அந்த பொண்ணும் உடனே ட்ரீட்மெண்டை ஸ்டார்ட் பண்ணுங்க டாக்டர், என் அம்மாவை எப்படியாவது காப்பத்தி கொடுங்கன்னு கெஞ்சினுச்சு, டாக்டரும் சரிமான்னு சொல்லிட்டு ஆபரேஷன்னுக்கு நிறைய லட்சம் செலவாகும் அட்வான்ஸா இப்போ ரெண்டு லட்சம் மட்டும் கட்டிட சொன்னாரு, பாவம் அந்த பொண்ணுகிட்ட அவ்வளவு பணம் இல்லை போல, என் கைல இருபதாயிரம் தான் இருக்கு டாக்டர்னு சொல்ல, டாக்டரோ பணத்தை புரட்டிட்டு வாமா, ட்ரீட்மெண்ட்டை ஸ்டார்ட் பண்ணிடலாம்னு சொல்ல அந்த பொண்ணால அவ்வளவு பணத்தை புரட்டுற சக்தி இல்லை போல, அதான் இப்படி உட்கார்ந்து கதறிக்கிட்டு இருக்கு பாவம்” என்று மனசாட்சி மிக்க அந்த செவிலிபெண் சொல்லிவிட்டு நகர முயல, அந்த பெண்ணை அழுத்தமாய் சில நொடிகள் பார்த்தவனோ,… “இந்த ஹாஸ்ப்பிட்டலோட டீனை நான் பார்க்கணும்” என்று சிலஅடிகள் முன்னால் சென்ற அதே செவிலிப்பெண்ணிடம் அவன் சொல்ல, அவனது வலிமைமிக்க குரலில் திடுக்கிட்டு, அவனை குழப்பமாய் பார்த்த செவிலியோ.. “வாங்க சார்” என்று அவனை  அழைத்துச் சென்றார்,…

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
41
+1
3
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்