Loading

மெல்லினம் 35:

தன் முன்னே நின்றிருந்த முல்லையை, உறுத்து விழித்தவன் “இப்போ முடிவா நீ என்ன தான் சொல்லுற முல்லை??” என்க,

“நீங்க எத்தனை தடவை கேட்டாலும், அதே பதில் தான் கதிர்” என அவள் கூற,

“ஓஹோ..! அப்புடி என்கூட ஊருக்கு வராம, உங்க அம்மா வீட்டுக்கு போற அளவுக்கு என்ன நடந்திடுச்சு இப்போ??” என அவன் முறைக்க,

“கதிர் ப்ளீஸ், எனக்கு கொஞ்சம் டைம் வேணும், நான் ரொம்ப குழப்பத்துல இருக்கேன். எனக்கு ஒரு தெளிவு வேணும், நம்ம வாழ்க்கைய பத்தி, மனசளவுல நான் ரொம்ப போரடிக்கிட்டு இருக்கேன்ங்க, இப்போ நான் இருக்குற நிலைமையில ஐ நீட் சம் ஸ்பேஸ்” என அவள் சலிக்க,

“இந்த டைம்‌ எதுக்காக முல்லை? என்‌ வாழ்க்கைகுள்ள வர்றதுக்கா? இல்லை விட்டு போறதுக்கா?” என அவனின் காதல் தெரிந்த பின்னும், இப்படி அவனுடன் வீடு வரமாட்டேன், என அடம்பிடிப்பவளை கண்டு அவன் இறுகிய குரலில் கூற,

எத்தனை தடவை காரணத்தையும் கூறியும், தன்னை புரிந்து கொள்ளாமல் இப்புடி பேசுகிறானே என ஆற்றாமை பொங்க, “அப்புடியும் கூட இருக்கலாம் கதிர்..” என ஒரு வேகத்தில் அவள் வார்த்தைகளை விட்டு விட,

அதனை கேட்டு கோபத்தில் மேலும் இறுகியவன், ” ஓஹோ, அப்புடி போறதுன்னா நீ மட்டும் போ டி! அத்வியையும் ஏன் கூட கூப்பிட்டுட்டு போற, அவன் என் பிள்ளை உன்கூட எல்லாம் அனுப்ப முடியாது!!

உனக்கு வேணும்னா நீ போ டி, இதோ பார் நீ என்ன வேணும்னாலும் முடிவு எடுத்துக்க, உன் முட்டாள்தனமான முடிவால எதையும் மாத்த முடியாது. என்னைக்கும் அத்வி என் பிள்ளை மட்டும் தான், கொடு டி அத்விய” என கத்தியவன் அவளிடம் இருந்து அத்வியை கிட்டதட்ட பறித்து கொண்டு சென்றான்.

தான் சொல்ல வருவதை புரிந்து கொள்ளாமல், வீம்பு பிடிப்பவனை கண்டு தலையில் அடித்து கொள்ளலாம் போல் இருந்தது முல்லைக்கு.

அவனின் உணர்வுகளை புரிந்ததவளிற்கு சிரிப்பு தான் வந்தது.

அவன் நினைப்பது போல் அவனை விட்டு பிரிவது எல்லாம் இவளால் இந்த ஜென்மத்தில் நடவாது காரியம்.

அவளிற்கு இப்போது தனிமை தேவை. அவனின் கடந்த கால கதையை ஜீரணித்து கொள்ள கொஞ்சம் அவகாசம் தேவைப்பட்டது.

குழப்பத்தில் இருந்த அவளின் மனதை தெளிய வைக்க வேண்டும். ஆனால் அது கதிரின் அருகே இருந்தால், சுத்தமாக அவள் நினைத்தது நடக்காது.

இப்போது அவளிற்கு தேவை யாரின் இடையூறும் இல்லாத தனிமையே. இதனை கதிரிடம் கூறினால், நிச்சயம் அவளை விட மாட்டான் என்பதை உறுதியாக அவள் கூறுவாள்.

அவன் அருகினில் இருந்தால் அவளால் மனதினை அமைதியாக்க முடியாது. முக்கியமாக அவள் நினைத்த தனிமை கிடைக்கவே கிடைக்காது அவனிடம்.

முன்பு கூட அவளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சற்றே தள்ளி நின்றவன், நேற்றைய இரவுக்கு பின் அவனின் கடந்த கால காதலை அவளிற்கு தெரியப்படுத்திய பின், நிச்சயம் அவன் தள்ளி எல்லாம் இருக்க மாட்டான். அவளிடம் தயக்கங்களை எல்லாம் உடைத்து எந்நேரமும் கரை கடந்து அவள் மேல் அவனின் உணர்வுகளை கொட்டி விடுவான்.

அதற்காக தான் அவனிடம் இருந்து அவள் சற்றே தள்ளி செல்ல நினைப்பது, அதுவும் தற்காலிகமாக தானே தவிர அவன் நினைப்பது போல் நிரந்தரமாக அல்ல.

அவளின் குழப்பங்களை எல்லாம் கலைந்து நேர்வழியில் சிந்திக்க முயன்று கொண்டிருக்கிறாள்.

இதை எல்லாம் விட முக்கிய காரணம் கதிரின் மேல் அவளிக்கிருந்த கோபம்.

நேற்றைய இரவில் அவன் கடந்த கால காதலை கூறிய நொடி அவன் சட்டையை பிடித்து “ஏண்டா ஏன் நீ அப்பவே வந்து உன் காதலை சொல்லலை. அட்லீஸ்ட் என் முன்னாடியாவது வந்திருக்கலாமே, அப்புடி மட்டும் வந்திருந்தா நான் அந்த பரதேசி நாயை கல்யாணம் பண்ணிருக்கவும் மாட்டேன். இப்புடி என் வாழ்க்கை அவனோட சீரழிஞ்சும் போய்ருக்காதுல.

இது எல்லாம் உன்னோட தப்பு தான, நீ உன் லவ்வ சொல்லாமா போனதால தானே நடந்தது” என உலுக்கும் வேகம் வந்தது.

இருந்தும் கட்டுப்படுத்தி கொண்டாள். இதில் அவன் தவறு எதுவும் இல்லை என அறிவு கூறினாலும், காதல் கொண்ட மனம் அதை ஏற்க மறுத்தது.

எங்கே தன்னையும் மீறி அவனிடம் கோபத்தை காட்டி விடுவோமோ என அஞ்சி, தான் அவனை விட்டு சிறிது நாட்கள் தள்ளி இருக்க முடிவெடுத்திருந்தாள்.

சத்யமூர்த்தி ஊருக்கு செல்வதற்காக வாடகை காரை ஏற்பாடு செய்திருந்தார். கதிர் குடும்பம் வந்த வேனில் சற்றே இடப்பற்றாக்குறை ஏற்பட்டிருந்தது. காரின் அருகே அத்வியை தூக்கி வைத்து கொண்டு இறுகி போய் இருந்தவனை கண்டு, அவள் மனம் இளக, இருந்தும் தன்னை கட்டுப்படுத்தி அனைவரிடமும் சொல்லி கொண்டவள், இறுதியாக கதிரின் முன் வந்து நிற்க அவளை பார்க்காது முகத்தை திருப்பி கொண்ட கதிர், அத்வியிடம்,

“அதி குட்டி போய் கொஞ்ச நாள் தாத்தா பாட்டி கூட இருந்துட்டு வாங்க, சமத்தா இருக்கணும்” என பேசியவாறு முல்லையை பார்க்காது அவன் பேச அவளிடம் சிறு புன்னகை.

அவளிற்கு தெரியும் அத்வியை அவன் அனுப்பி வைப்பான் என.

அவளின் புன்னகையை ஓரப்பார்வையில் கண்டு கடுப்புற்றவன்,

“அதி குட்டி உங்கம்மா கிட்ட சொல்லு, அவ எடுக்குற முட்டாள்தனமான முடிவுக்கு எல்லாம் நான் ஒத்து போக மாட்டேன்னு. அங்க இருக்குற வரைக்கும் சந்தோஷமா இருந்துட்டு வீடு வந்து சேருற வழியை பாக்க சொல்லு” என்க,

“ஏனாம் இவரு வந்து கூப்புட மாட்டாராமா??” என‌ முல்லை சிரிக்க

அதில் மேலும் கடுப்புற்றவன் அத்வியிடம்,

“நானாடா இவளை போக சொன்னேன்? துவைக்க துணி வேணும், யோசிக்க டைம் வேணும்னு, இவளா தான போறா அப்போ அவளே தான் திரும்பி வரணும். சத்தியமா நான் வந்து கூப்பிடவே மாட்டேன். நேத்து அவ்வளவு தெரிஞ்சும் என்னை விட்டு போறேன்னு சொல்லுறாள” என்றவனின் முகம் கசங்க அடுத்த நொடி, 

“உங்கம்மா, திரும்ப அவளா நம்ம வீட்டுக்கு வர்ற வரைக்கும் நான் வாயவே தொறக்க மாட்டேன் டா அத்வி குட்டி. எவ்வளவு நாளு வேணும்னாலும் அவுங்க அப்பா வீட்டுல சீராடட்டும். நல்லா டைம் எடுத்துக்கட்டும். கண்டதையும் யோசிக்காம அவ குழப்பத்தை எல்லாம் போக்கிட்டு வர சொல்லு, அப்புடி வந்துட்டா அடுத்து என்ன நடந்தாலும் அவளை நான் விட மாட்டேன்.

திரும்பவும் எங்கேயும் அனுப்பவும் மாட்டேன். இதை மனசுல வச்சுக்க சொல்லு” என அத்வியிடம் பேசியவாறே அவன் காரின் கதவை திறந்து விட, எதுவும் பேசாமல் அமர்ந்தவள் அத்விக்காக கைகளை நீட்ட,

அதுவரை இருவரது பேச்சினையும் புரியாது தன் போக்கில் விளையாடி கொண்டிருந்த அத்வி “நோ..நோ…ம்மா அங்கி கூட” என அவள் கழுத்தை இறுக கட்டி போக மறுக்க கதிரின் கண்கள் கலங்குவது போல் இருந்தது.

“நெஜமா நீ போனுமா முல்லை என்கூடவே வந்திடேன்” என அவன் கடைசி முறையாக இறைஞ்ச பதில் பேசாது அமைதியானாள்.

அவளின் அமைதியில் கோபம் அடைந்தவன் “அங்கி பின்னாடியே வர்றேன்டா ” என அத்வியை தன்னிடம் இருந்து பிரித்து அவளின் மடியில் உட்கார வைத்து கதவை பூட்டியவன்,

“இனி நீயா வர்ற வரைக்கும் உன்கிட்ட பேசுனேன்னா என்னன்னு கேளுடி! ஆனா என் புள்ளைகிட்ட பேசுவேன், அதுக்கும் ஏதாச்சும் கோல்மால் பண்ண, நேரா வந்து தூக்கிட்டு வந்துடுவேன்” என கூறியவன் காரின் ஜன்னலின் வழியே தனது தலையை உள் நுழைத்து அத்வியின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டவன்,

அடுத்த நொடி, தன்னையே பார்த்திருந்த முல்லையை அவள் என்ன ஏது உணரும் முன்பே அவளது இதழ்களில் தனது உதடுகளை ஆழப் புதைந்திருந்தான்.

இருவரது முதல் இதழ் முத்தம். அவனின் காதலை அறிந்த பின் அவள் வாங்கும் முதல் முத்தம். அவளின் பெயரினை போலவே தித்தித்த முத்தத்தினை, அவள் முழுதாக உள்வாங்கும் முன் “சீக்கிரம் வந்துடு டி” என கூறி சட்டென விலகி சென்று அங்கிருந்த வேனில் ஏறி விட்டான்.

அதுவரை அவர்கள் பேசி கொள்ளட்டும் என நினைத்து கதிரின் பெற்றோரிடம் பேசி கொண்டிருந்த சத்யமூர்த்தியும் மங்கையும் கதிர் வந்து விட்டதை அறிந்து அவர்களிடம் இருந்து விடைபெற்று கொண்டனர்.

வேனும் காரும் ஒரே நேரத்தில் கிளம்ப நான் அமர்ந்திருந்த ஜன்னல் இருக்கையில் இருந்து அத்விதனுக்கு டாட்டா காட்டிய கதிர், முல்லையின் முகத்தை பார்க்காது திரும்பி கொள்ள இரு வாகனங்களும் கோவையை நோக்கி சென்றன.

*********************

ஊருக்கு சென்று திரும்பியதில் இருந்து சுரபியின் மனநிலை மேலும் மேலும் மோசமாகியது.

எந்நேரமும் கதிர் முல்லை பற்றியே நினைவுகளே அவளை ஆக்ரமித்திருந்தன. அவர்கள் இருவரது நெருக்கமும் சந்தோஷமும் இவளிற்கு நெருப்பாய் சுட்டது.

மருத்துவர் கூறிய அறிவுரைகளை எல்லாம், காற்றில் பறக்க விட்டவள் அனுதினமும் கதிர் முல்லையை நினைத்து அவளது மன அழுத்தத்தை அதிகமாக்கி கொண்டே சென்றாள்.

இரவு வீடு திரும்பிய ஹரிஷை இருள் நிறைந்த இடமே வரவேற்றது. இது சுரபி கதிர் ஊருக்கு சென்று வந்ததில் இருந்து ஒரு வார காலமாக நடக்கும் கூத்து ஆதலால், அலட்டி கொள்ளாதவன் லைட்டை போட்டு விட்டு ப்ரஷ்ஷாகி வந்தவன் இரவு சமையலை பார்க்க ஆரம்பித்து விட்டான்.

அரை மணி நேரத்தில் சமையலை முடித்தவன் அதனை டேபிளில் எடுத்து வைக்க, கதவினை திறந்து கொண்டு தூக்க கலக்கத்தில் வந்தமர்ந்தாள் சுரபி.

அவளை முறைத்தவன் “டேப்லட் போட்டியா??” என,

“சாரி ஹரிஷ்! அந்த கதிரும் முல்லையும் என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுறாங்க, பயங்கர ஸ்ட்ரஷ்ஷா இருந்திச்சு அதான் அதை மறக்குறதுக்கு ஒரே ஒரு டேப்லட் தான் போட்டேன் இனி போட மாட்டேன் ப்ராமிஷ்” என்க எதுவும் பேசாது அவளிற்கு உணவினை நீட்டியவனின் முகம் அநியாயத்திற்கு இறுகி இருந்தது.

இந்த இரண்டு நாட்களாக தான் இந்த பழக்கத்தினை பழகி கொண்டிருக்கிறாள். கிட்டதட்ட ஒரு நாளிற்கு இரண்டு வேளை தூக்க மாத்திரையை எடுத்து கொண்டிருக்கிறாள். இப்படியே விட்டால் அவளின் உடல்நிலை மோசமாகும் என புரிய அவளிடம் அமைதியாக பேச வேண்டும் என முடிவெடுத்தான்.

உண்டதும் படுக்க சென்றவளை அதட்டி ஷோபாவில் அமர வைத்து டி.வியை போட்டு விட்டவன் சிங்கில் நிறைந்திருந்த பாத்திரங்களை கழுவ ஆரம்பித்தான்.

கால் மணி நேரத்தில் கிச்சனை சுத்தம் செய்து விட்டு அவன் வர ஷோபாவிலேயே படுத்து உறங்கியிருந்தாள்.

பெருமூச்சு விட்டவன் அவளை தூக்கி சென்று கட்டிலில் கிடத்தி தானும் அருகே இருந்து கொண்டான்.

ஓய்ந்து போய் இருந்தவளை காண காண பாவமாக இருந்தது. இதற்கு தான் அவன் அன்றே தடுத்தான் கதிரின் ஊருக்கு செல்ல வேண்டாம் என, ஆனால் பிடிவாதம் பிடித்து சென்று விட்டு இப்போது இவள் தான் அல்லாடிகிறாள்.

ஹரிஷிற்கு புரிந்து விட்டிருந்தது இனி முல்லையில் வாழ்க்கை வேறு, அவனின் வாழ்க்கை வேறு என்று. கையில் கிடைத்த அருமையான பொக்கிஷத்தை தவர விட்டுவிட்டான், இனி அவன் நினைத்தாலும் முல்லையின் வாழ்க்கைக்குள் அவனால் செல்ல இயலாது கதிர் அதற்கும் விடவும் மாட்டான்.

ஹரிஷீம் அதனை விரும்பவில்லை. இப்போது எல்லாம் அத்வியை மனம் அதிகமாக நாடுகிறது. அவனின் சொர்க்கமாய் இருந்தவன் இன்று கதிரின்‌ சொத்தாய், சொந்தமாய் மாறியிருந்தான். அத்வியை கண்ணால் கூட அவன் காண்பானா என்பதே சந்தேகம் தான். முல்லை அவள் வாழ்க்கையை கதிருடன் அமைத்து வளமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

ஆரம்பத்தில் அதனை ஏற்க அவன் தடுமாறினாலும், போக போக அவன் மனம் முல்லையை பற்றின நினைவுகளை மொத்தமாக அழித்து விட்டிருந்தது.

இப்போது அவனின் நினைவில் இருப்பது எல்லாம் சுரபியும் அவளுடனான வாழ்க்கை மட்டுமே.

ஏற்கனவே தொலைத்தை போல இவளையும் தொலைத்து விட கூடாது, என அவன் மனம் அடித்து கொண்டது. கதிர் முல்லையை போல் சுரபியுடனான ஒரு அழகான வாழ்வினை வாழ ஆசை கொண்டது மனம்.

ஆனால் அவன் நினைத்த வாழ்க்கை நிச்சயம் இங்கேயே இருந்தால் கிடைக்காது. கதிர் முல்லையை விட்டு தள்ளி அவர்களின் பார்வைகள் கூட படாது தூரத்திற்கு சுரபியை அழைத்து கொண்டு சென்று விட வேண்டும் என தீர்மானித்திருந்தவன், அதற்கான முயற்சியிலும் இறங்கியிருந்த வேளை சுரபியின் இந்த தீடீர் மாற்றம் அவனை அச்சம் கொள்ள வைத்தது.

டேபிளில் இருந்த மாத்திரை டப்பாவினை எடுத்து முழுதையும் டாய்லெட்டில் கொட்டி ப்ளஷ் செய்தவனுக்கு மனம் சற்றே நிம்மதி கொண்டாலும், அதற்கு ஆயுள் கம்மி என்று அவனிற்கு தெரியும்.

நாளை சுரபியை மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும் என நினைத்தவாறு உறங்கியவனின் மன கண்ணில் அத்வி வந்து போக‌ அவனின் கண்கள் கலங்கின.

இனி அத்வி அவனிற்கு சொந்தமில்லை, அவனுடன் இருந்த உறவு அனைத்தும் முறித்து போயிற்று, என நினைக்கையில் அவள் மனதில் “சுருக்” என்று வலி

ஏற்பட, இருந்தும் அதனை தாங்கி கடக்க பழகி கொண்டவனின் எதிர்காலம் எல்லாம் சுரபி மட்டுமே என்றதில் உறுதியாக இருந்தான்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
12
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. உனக்கு முல்லைன்னு பேர் வச்சதுக்கு பதிலா தொல்லைன்னு பேர் வச்சிருக்கலாம். எப்போ பார்த்தாலும் என் செல்லக்குட்டியை தொல்லை பண்ற. துவைக்க துணி வேணும். யோசிக்க டைம் வேணுமா 😆😆😆😆😆😆😆 என் செல்லக்குட்டி பாவம் கோபமா பேசக் கூடத் தெரியல.

    ஆனாலும் கதிரழகா உன்னோட காதல் மொழி வித்தியாசமா இருக்குப்பா. எனக்கு இருக்கிற ஒரே வருத்தம் முல்லை அவளைப் பத்தியே யோசிக்கிறா. ஆனா அவன் இடத்துல இருந்து யோசிக்கலாமே. இத்தனை வருட காத்திருப்பும் காதலும் அவன் அவளுக்குத் தர தயாரா இருக்கும்போது, அவன் கேட்கிற காதலை உடனே தரலாமே.