Loading

அத்தியாயம் 8

“நீங்க ரெண்டு பேரும் சாப்டீங்களா இல்லையா?…” இருவரிடமும் இலகுவாக பேச முயற்சித்தான்.

“சாப்பிட்டோம் ப்பா, குளோரி ஊட்டி விட்டா…” என குந்தவி சொல்ல.. சோழா ஆமென்பதைப் போல் தலையசைத்தான்.

சோழாவின் வீங்கிய நெற்றியை வருடி விட்டவன் “டூ ஆர் திரீ டேஸ்ல சரியாகிடும் குட்டி…” எனக் கூறவும் வீங்கிய இதழ்களை மெல்ல விரித்து சிரிக்க முயற்சித்தான் சோழன்.

அதற்கு மேல் அவர்களிடம் என்ன பேசுவது என்பதே அவனுக்கு தெரியவில்லை. ஸ்கூல் இருந்தாலாவது அதை பற்றி விசாரிப்பான். இப்போது என்ன கேட்பது? என்ன பேசுவது என்று புரியவில்லை. அவனின் எண்ணம் குந்தவிக்கு புரிந்ததோ என்னவோ “நாங்க போயி விளையாடறோம்…” எனக் கூறியவள் சோழவையும் தன்னுடன் அழைத்து சென்றாள்.

செல்லும் மகளையும், மகனையும்

இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தவனின் மதியோ ‘இன்னும் எத்தனை நாளைக்கு உன் பசங்களை அடுத்தவங்கள நம்பி வளர விட போற…’ எனக் கேள்வி எழுப்பியது.

“நான் ஒரு ஸ்டேஜ் வர வரைக்கும்…” என்று மூன்று ஆண்டுகளாக பாடிய பல்லவியை இப்போதும் பாடினான்.

  ‘எவ்வளவு நாள் தான் இந்த நொண்டி சாக்கயே சொல்லப் போறன்னு நானும் பார்க்கறேன்…’ எனக் கேலி செய்து சிரித்தது அவனது மனம்.

அதில் எரிச்சலடைந்தவன்

‘இது எனக்கு போதாது…’ என வார்த்தைகளை பற்களுக்கிடையில் கடித்துத் துப்பினான்.

‘மாசம் முத்தாயிரம் சம்பளம் வாங்கிட்டு இருந்தவன் இப்ப முன்னூறு பேருக்கு மேல் வேலை கொடுத்துட்டிருக்க, இது போதாதா உனக்கு…’ அத்தனை எள்ளலாகக் கேட்டது அவனின் மதி.

பெருமூச்சுடன் “நான் என்ன பண்ண வேணும்னு நினைக்கிற நீ…” எனக் கேட்கவும்

‘ நான் என்ன சொல்லறேன்னு கூட உனக்கு புரியல..’ கேலியாக கேட்டது. அதற்கு பதில் கூறாமல் சட்டென எழுந்தவன் பிள்ளைகள் சென்ற திசையை நோக்கி நடந்தான்.

வெளியில் பிள்ளைகள் இல்லாமல் இருக்க, நிச்சியம் வீட்டிற்கு பின்னாலிருக்கும் கார்டனில் தான் இருப்பார்கள் என நினைத்தவன் அங்கே சென்றான்.

வீடு சிறியதாக இருந்தாலும் வீட்டிற்கு பின்னால் இருந்த கார்டன் ஏரியா குழந்தைகள் விளையாடும் அளவிற்கு சற்றே பெரியதாக தான் இருந்தது… அந்த வீட்டிலேயே அம்முவிற்கு பிடித்த இடம் என்றால் அது பின்னாலிருக்கும் சிறிய தோட்டம் தான்.

கார்டனிலுள் நடந்து சென்று கொண்டிருந்தவனின் கண்கள் தன்னாலேயே தூரத்திலிருந்த கல் பெஞ்சில் பதிந்து மீண்டது. அன்று தனிமையின் பொழுது அவள் சிணுங்கிய சிணுங்கல் இன்றும் கண்களின் முன் நிழற் படம் போல் விரிந்தது.

———

“பசங்க எழுந்துடுவாங்க அச்சு ப்பா…” வீட்டைப் பார்த்தபடிக் கூறினாள்

“கொஞ்சமே கொஞ்சம் பட்டும் படாம கொடுத்துட்டு போடி…” என்றவனின் பார்வை அவளின் இதழ்களில் தான் நிலைத்திருந்தது.

“யாராவது பார்த்துட்டா…” அருகிலிருந்த பெரியக் கட்டிடத்தை பார்த்தப்படி கேட்டாள்.

“அதெல்லாம் இந்த இருட்டுல யாரும் பார்த்துட்டிருக்க மாட்டாங்க…” என்றவன் அடுத்த நொடி அவளின் கன்னத்தை அழுத்திப் பிடித்துக் குவிந்த இதழ்களை தன் இதழ்கள் கொண்டு மெல்ல உரசினான்…

இத்தனை நேரம் சுற்றும் முற்றும் பார்த்தவள் அவனின் செய்கையில் விழி விரித்து பின் மெல்ல இமை முடிக் கொண்டாள். அவளின் செய்கையில் உள்ளம் குத்தாட்டம் போட மென்மையாக தீண்ட நினைத்த இதழ் முத்தத்தை வன்மையாக மாற்றினான்.

நீண்ட நெடிய முத்தம் சில்லென்ற காற்று பட்டு இருவரும் பிரிந்து அமர்ந்தனர். “கொஞ்சமே தான்னு சொன்ன…” இதழ்களைப் பிதுக்கி சிணுங்கலாகக் கேட்டவளைப் பார்த்து அழகாய் சிரித்தான் அபி…

கணவனின் சிரிப்பில் வெட்கம் கொண்டவள் சட்டென அங்கிருந்து விலகி ஓடிட, தன்னை விட்டு விலகி ஓடியவளின் பின் செல்லாமல் அங்கிருந்த கல் பெஞ்சில் கையூன்றி அமர்ந்தவனின் இதழ்களிலும் வெட்க புன்னகை பூத்தது…

உயிராலும், உடலாலும் கலந்து விட்டவளின் சுவாசத்தை காற்றில் தேடி தேடி தோற்று போனவனின் கண்களில் சட்டென நீர் சூழ்ந்துக் கொண்டது…

கண்களில் சூழ்ந்த நீரைத் துடைக்க மனமில்லாமல் அப்படியே நின்றவனின் காதில்

“கொஞ்சமே கொஞ்சம்…” என்ற ஆனந்தியின் குரலில் தன்னிலைக்கு வந்தவன் தலையாட்டி,முகத்தை அழுத்தித் துடைத்து கொண்டே முன்னேறி செல்ல, சட்டென இடையிட்டது அவனின் மதி

‘இன்னும் எத்தனை நாளைக்கு பாஸ்ட்டை நினைச்சுட்டு ப்ரசெண்ட்ல இருக்கறவங்களை விட போற…’ எனக் கேள்வி எழுப்பியது…

“என்னோட மூச்சு இருக்கிற வரைக்கும்”என பதில் கூறியப்படி நடந்தான்.

‘அப்ப, இல்லாத அம்முவை நினைச்சுட்டு இருக்கறவங்களை உயிரோட கொல்ல போற அப்படி தானே…’ என்றதும் சட்டென தன் நடையை நிறுத்தியவன் மீண்டும் நடந்தான்.

அவனுக்கும் மதியின் கேள்விகள் புரிய தான் செய்கிறது. ஆனால் அவனின் காதல் மனம் அதை ஏற்க முடியாமல் தவிக்கிறது. எத்தனை முறை தன்னவளுக்கு எதிராக அவனது மதி பேசினாலும் அவனின் காதல் மனம் அவளை விட்டு கொடுத்ததே இல்லை.

நீ என்னவோ கூறிக்கொள் “நான், என்னவள், என் மனம்”என்ற வட்டத்திற்குள் மட்டுமே நின்று கொண்டான். அதற்குள் அவன் தாய் மட்டுமல்ல அவன் உயிரணுவில் உருவானக் குழந்தைகளைக் கூட விடவில்லை…

“என்னப்பா…” தங்களை நோக்கி வந்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து கேட்டார் சீதா…

“ஒன்னுமில்லை மா…” என்றவனின் பார்வை பனிக் கூழை ரசித்து ருசித்துக் கொண்டிருந்த குழந்தைகளின் மீதும் அவர்களிடம் கொஞ்சி கெஞ்சி வாங்கி சாப்பிடும் ஆனந்தியின் மீதும் விழுந்தது.

அவன் பார்வையை புரிந்து கொண்ட சீதாவோ “நான் தான் ப்பா வேலுவை வாங்கிட்டு வர சொன்னேன்…” என்றார். எப்போதும் இலகுவாக பேசும் தாய் இன்று சற்று காட்டமாக பேசுவது போல் தோன்றியது அபிக்கு.

அதை பெரிதாக கண்டுக் கொள்ளாமல் “சரி மா…” என்றவனின் பார்வை முழுவதும் ஆனந்தியின் மீது தான் இருந்தது. அபியின் பார்வையை உணர்ந்தாலும் அவள்,அவன் புறம் திரும்பவே இல்லை…

அவள் வேண்டுமென்றே தன் புறம் திரும்பாமல் இருக்கிறாள் என நினைத்தவனின் முகத்தில் அப்பட்டமான எரிச்சல் வந்தமர்ந்தது. மனதின் எரிச்சலை வெளிக்காட்டிட இது சரியான நேரமில்லை என நினைத்தவன் பெருமூச்சுடன் “ம்ம் மிஸ்…” என நெற்றியை கீறி கொண்டே ஆனந்தியின் பெயரை யோசித்தான்.

அதற்குள் சீதாவே “ஆனந்தி ப்பா,..” என்றவர் பக்கவாட்டில் திரும்பி “ஆனந்தி, அபி கூப்படறான் பாரு…” என்றார்.

அபி அழைத்ததை கண்டுக் கொள்ளாமல் இருந்தவளால் சீதாவின் அழைப்பை தவிர்க்க முடியவில்லை. சட்டென நிமிர்ந்து எதிரில் நின்றவனை தீர்க்கமாகப் பார்த்தாள். அவளின் பார்வையில் வழமை போலவே எரிச்சலடைந்தாலும் அதை முகத்தில் காட்டாமல்

“குந்தவி ஐஸ் க்ரீம் கேட்டான்னு என்கிட்டேயே சொல்லிருந்தா நானே வாங்கி கொடுத்து இருப்பேன். இனிமே அவங்க என்ன கேட்டாலும் சுத்தி வளைக்காம என்கிட்டேயே கேளுங்க…”என்க,அதற்கு அவளிடம் வெறும் தலையசைப்பு மட்டுமே.

 அவளின் செய்கை இன்னுமின்னும் எரிச்சலை கொடுத்தது அபிக்கு

“பதில் வருதா பாரேன்?வொர்ஸ்ட் பிகேவியர்…’ என நினைத்து கொண்டவன் தலையாட்டி கேசத்தை அழுத்திக் கோதிக் கொண்டான்.

மனதின் எரிச்சலை முகத்தில் வெளிக்காட்டினாலும் குழந்தைகளின் முன் பேசக் கூடாது என நினைத்தவன் முகத்தை அழுத்திக் தேய்த்துக் கொண்டே வீட்டை நோக்கி நடந்தான். பின் என்ன நினைத்தானோ மீண்டும் வந்து சீதாவின் அருகில் அமர்ந்துக் கொண்டான்.

அபியை பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தவர் எதுவும் பேசவில்லை மெளனமாகவே அவனை பார்த்தார். சீதாவின் மெளனமே கூறியது அபியின் மீதானக் கோபத்தின் அளவை…

அபியின் பேச்சு அவருக்கு அப்படியொரு கோபத்தைக் கொடுத்திருந்தது. மூன்று வருடங்களுக்கு முன் சாதாரண வீட்டு வேலைக்கு சென்ற பெண்மணி தான் சீதாவும். வீடு வீடாக சமையல் வேலைக்கு சென்றாலும் ஒரு போதும் தன் சுயமரியாதையை விட்டு கொடுத்ததில்லை. இப்போது ஆனந்தி இருப்பது போல, அவள் இங்கு வந்த அன்றே அவளின் பார்வையிலும், துணிவானப் பேச்சிலும் தன்னைக் கண்டார் சீதா.

அதனாலேயே தன் திட்டத்தை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு அவளை வேலைக்கு எடுக்க கூறினார். அவர் நினைத்தது போலவே ஆனந்தியின் ஒவ்வொரு பேச்சும்,செயலும் இருந்தது. குழந்தைகள் இருக்கும் வரை அவர்களுடன் மட்டுமே இருப்பவள் அவர்கள் சென்றதும் புத்தகங்களுடன் பேசிக் கொண்டிருப்பாள்.

 அரசு வேலைக்காக முயற்சித்துக் கொண்டிருக்கிறாள் என தெளிவாக புரிந்தது சிதாவுக்கு. ஏனோ படிக்கும் பெண்களை, வீட்டின் நலனிற்காக ஓடும் பெண்களை அத்தனை பிடிக்கும் சீதாவிற்கு. அதனாலேயே இதை செய்,அதை செய் என்று வேறு வேலைகளை அவளுக்கு கொடுத்ததில்லை. அது இன்றைக்கு வரைக்கும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

அதே நேரம், சீதாவையும், அபியையும் மாறி மாறி பார்த்த ஆனந்தி என்ன நினைத்தாளோ குழந்தைகளிடம் திரும்பி “வீட்டுக்கு போயி ஹேன்ட் வாஷ் பண்ணிட்டு வரலாம் வாங்க…” என்றது மட்டுமல்லாமல் கையோடு இருவரையும் அழைத்து சென்றாள்.

தவறு மகன் மீதே இருந்தாலும் ஆனந்தியின் முன் மகனை விட்டுக் கொடுக்க முடியவில்லை சீதாவாள். அதானலயே அவனிடம் எதுவும் பேசாது அமைதியாக இருந்தார். அவரை புரிந்து கொண்டது போல் ஆனந்தி அவ்விடம் விட்டு நகர,சீதா பேச ஆரம்பித்தார்.

“ஆனந்திக் கிட்ட நீ பேசனது ரொம்ப தப்பு அபி, அதென்ன நான் ஒன்னும் உன் புருஷனில்லை வேலைக்காரிங்கிற லிமிட்குள்ள இருன்னு சொல்ற? மூணு வருஷத்துக்கு முன்னாடி நானும் இன்னொருத்தர் வீட்டுக்கு வேலைக்காரியா தான் போனேன்னு ஞாபகம் இல்லையா உனக்கு?இப்ப நம்ம நல்ல நிலையில இருக்கோமுங்கறதுக்காக வீட்டுக்கு வேலைக்கு வந்தவங்க கிட்ட எல்லாம் உன் முதலாளி திமிரைக் காட்டக் கூடாது…”கண்டிக்கும் குரலில் கூறினார்.

“உன் புருஷனில்லை வேலைக்காரிங்கிற லிமிட்குள்ள இருன்னு, சொன்ன வார்த்தை உங்களுக்கு பெருசா போச்சா மா, அதை எதுக்காக சொன்னேன்னு உங்களுக்கு புரியலையா?”

“சோழவை அவளோட பையன்னு சொன்னதில எனக்கு பெருசா தப்பா தோணலை ப்பா”

“அது தப்பு தான் மா. ஆனந்தி சொன்னது தப்பு தான்.. அதுக்கு தூபம் போடற மாதிரி நீங்களும் அனு இருந்தா கூட இப்படி துடிச்சு போக மாட்டான்னு சொல்றீங்க? என்ன நினைச்சிட்டு இப்படி பேசிட்டு இருக்கீங்க மா? என்ன ப்ரூஃப் பண்ண நினைக்கிறீங்க? பத்து மாசம் சுமந்து பெத்தவளும், பத்து நாள் பார்த்துக்கிட்டாவளும் ஒண்ணா?” எனக் கேட்டவனுக்கு பதில் சொல்லாமல் அமைதியாக பார்த்தார் சீதா. அந்த பார்வையே ‘நான் சொன்னதில எந்த தப்புமில்லை போடா’ என்ற செய்தியை கூறுவது போலிருந்தது.

தாயின் பார்வையில் கேசத்தை அழுத்திக் கோதிக் கொண்டே

“அவ குற்ற உணர்ச்சி தாங்க முடியாம அழறா, அதைப் பெருசா பேசறீங்க பேசறீங்க. சொல்லப்போனால் நீங்க குடுக்கிற இடம் தான் அவ இன்னைக்கு இந்தளவுக்கு பேச காரணமே… ஒரு பாஸ் கிட்டப் பேசற மாதிரியா பேசறா? ஏதோ புருசன் கிட்ட ஆர்டர் போடற மாதிரி பேசறா. சம்பளம் தர முதலாளின்னு கொஞ்சம் கூட பயமில்லை…” என்றான் இன்னும் குறையாத எரிச்சலுடன்.

“என்ன பேசற அபி, சம்பளம் தர முதலாளியா இருந்தா பயந்து இருக்கணும்னு ஏதாவது இருக்கா? எப்ப இருந்து இந்த எண்ணம் உனக்கு வந்துச்சு. இங்க பாரு அபி, அவ செஞ்சு தர வேலைக்கு தான் நீ சம்பளம் தர தட்ஸ் இட்…” அவன் பேசிய மற்ற அனைத்தையும் டீலில் விட்டு விட்டு கடைசியாக பேசிய வார்த்தைகளை பிடித்து பேச, தலையில் அடித்துக் கொள்ளலாம் போலிருந்தது அபிக்கு..

அதே நேரம் அவர் பேச்சை திசைத் திருப்புகிறார் என்பது தெளிவாக புரிந்தது அவனுக்கு. ‘அம்மு இறந்தும் கூட தாயிற்கு அவள் மீதிருக்கும் பிடித்தின்மை போகவில்லை’ என நினைத்தவனுக்கு நீண்ட நெடிய பெருமூச்சொன்று அடிவயிற்றிலிருந்து கிளம்பியது.

“எதுக்கு இப்படி பெருமூச்சு விடற? இவக்கிட்ட பேசி ஜெயிக்க முடியாதுன்னு நினைக்கிறியா?” கோபமாக கேட்டார் சீதா.

“ஐயோ” என்றானது அவனுக்கு… மனதின் கடுப்பை வெளிக் காட்டிக் கொள்ளாமல் “நீங்க எப்பவும் போல இருந்திருந்தா அவளை நான் வேலைக்கு எடுத்து இருக்கவே மாட்டேன்னு நினைச்சேன்” என்றவன் பல்லை கடித்தபடி

“என்னோட கல்யாணத்துக்கு நீங்க போட்ட டிராமா தான் இப்படி வந்து தொல்லையா நிக்குது,…” என்றான்.

“ஆமா டிராமா தான் போட்டேன். அதுல எந்த தப்பும் இல்லையே.நீ வேணும்னா பொண்டாட்டி இல்லாம, அவளோட நினைப்பிலேயே வாழ்ந்துட்டு இருக்கலாம். ஆனா என் பேர பசங்க எதுக்கு அம்மா இல்லாம வளரனும். இரண்டு பேரும் அம்மா, அப்பா பாசம் கிடைக்காம ஏங்கி போறாங்க.அம்மா உயிரோட இல்லைன்னா அப்பன் இருந்தும் இல்லாத நிலமை தான்…” என்றவரை அதிர்ந்து பார்த்தான் அபிநயன்.

அவரோ மகனின் பார்வையை கண்டுக் கொள்ளாமல் “உனக்காவது ஒரு வயசு வரைக்கும் தாய், தகப்பன்னு இருந்தோம். ஆனா என் பேர பசங்களுக்கு எங்களைத் தவிர யாரும் இல்லையே டா. நாங்களும் இனி எத்தனை நாளைக்கு இருப்போம்னு தெரியல. அதனால தான் உனக்கு கல்யாணம் பண்ணிக்க வைக்க இப்படி பண்ணேன். ஆனா நடந்தது எல்லாமே வேற” என்றவர் நொடி நேர அமைதிக்கு பிறகு

* நானும் பாக்க தானே போறேன் இன்னும் எத்தனை நாளைக்கு வேலைக்காறங்களை வைச்சு உன் பசங்களை பாத்துக்க போறேன்னு…” என்றவர் அவனின் பதிலுக்கு காத்திராமல் அங்கிருந்து நகர்ந்தார்.

சற்று முன் பேசிய அனைத்தும் பின்னுக்கு சென்று விட, தற்பொழுது சீதா கூறியது மட்டும் ரீங்காரம் போல் காதில் கேட்டுக் கொண்டே இருந்தது. கண்களை இறுக மூடி அமர்ந்து விட்டான்.

நொடிகள் மௌனமாக கடந்தது. இனி கொஞ்சம் கொஞ்சமாக பிள்ளைகளோடு இருக்க வேண்டுமென்று முடிவெடுத்த பின்னரே அவனது மனம் சற்றே சமன் பட்டது.

 அன்றிலிருந்து அவனிடம் சிறிது சிறிதாக மாற்றம் தெரிந்தது. தினமும் மாலையில் சற்று நேரமாகவே வீட்டிற்கு வர ஆரம்பித்தவன் முடிந்த மட்டும் குழந்தைகளுடன் நேரத்தை செலழித்தான்.

அவனின் இந்த மாற்றம் யாருக்கு எரிச்சலாக இருந்ததோ இல்லையோ ஆனந்திக்கு படு எரிச்சலாக இருந்தது… அன்று கார்டனில் வைத்து பேசியது தான் அதற்கு பின்னான நாட்கள் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. அதற்கான நாளும் இனிதே வந்தது…

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
11
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்