
எஸ் இதுவும் டீஸர் தான்… காலையில 10 மணிக்கு பாருங்க… Full ah poduven தான் நினைக்கிற
அத்தியாயம் 38
குளியலறையிலிருந்து வெளியே வந்தவள் இதழ்களில் கை வைத்து சிரித்துக் கொண்டிருந்தவனை விசித்திரமாக பார்த்தப்படி “பாலை குடிச்சிட்டு… அந்த தேங்காய் எண்ணெயை தொப்புள்ளுக்கும், பெரு விரலுக்கு வைச்சிட்டு படுங்க” என்றவள் அவனது பதிலை எதிர்பார்க்காமல் படுக்கையில் விழுந்தாள்…
“தொப்புளுக்கும், பெரிய விரலுக்குமா? அது சரி” என்றவனுக்கு இன்னும் சிரிப்பு வந்தது…
“எதுக்கு இப்படி சிரிச்சிட்டே இருக்கீங்க?” பின்னால் திரும்பி பார்த்தபடி கேட்டாள்.
“அதை விடு… இந்த தேங்காய் எண்ணெயை உங்கிட்ட குடுத்து விட்டது யாரு?” புருவத்தை பெருவிரலால் கிறீக் கொண்டே கேட்டவனின் முகம் சிவந்திருந்ததோ?
“அதுவா… ஒரு பாட்டி கொடுத்துட்டு விட்டாங்க…” என்றாள்.
“என்னனு சொல்லி குடுத்தாங்க” அடுத்த கேள்வி அவனிடத்தில்.
“எதுவும் சொல்லலயே ஏன்?…”
“ம்ம் ஒன்னுமில்லை…” என்றவன் அப்பொழுது தான் அவள் உடை மாற்றாமல் அமர்ந்திருப்பது தெரிந்தது.
“ஆமா நீ டிரஸ் சேஞ்ச் பண்ணலையா?”
“அதை எதுக்கு பண்ணிக்கிட்டு…” அசட்டையாக கூறியவளைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டவன் குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.
அடுத்த சில நிமிடங்களில் உடைமாற்றி வெளியில் வர, மெல்லிய குறட்டை சத்தத்தோடு உறங்கிக் கொண்டிருந்தாள் இவனது மனைவி…
“புளிமூட்டை” என்று தலையாட்டி சிரித்தவன் சீதாவிற்கு அழைத்து பிள்ளைகள் உறங்கி விட்டனரா? என்று விசாரித்தான். இருவரும் உறங்கி விட்டனர் என்றதும் அழைப்பை துண்டித்தவன்
சொம்பிலிருந்த பாலைக் குடித்துவிட்டு மேசையில் வைத்தான். அதற்கு அருகில் சில்வர் டம்ளரிலிருந்த தேங்காய் எண்ணெய் இவனைப் பார்த்து சிரிக்க, நெற்றியை நீவி சன்னமாய் சிரித்தவன் ஆனந்தியின் அருகில் சென்று படுத்துக் கொண்டான்… அடுத்த சில நிமிடங்களில் உறங்கியும் போனான்…
அதிகாலையில் ஆரம்பித்த ஓட்டம் இரவு வரைக்குமே தொடர்ந்ததில் அதீத அலைச்சல் இருவருக்கும்… அதன்விளைவு படுக்கையில் விழுந்தவர்கள் உடனே
உறங்கியும் போனார்கள்.

