
அத்தியாயம் 36
“திமிரு உடம்பு முழுக்க திமிரு…” என முனகி கொண்டே தனது அறையிலிருந்து வெளியே வந்தவன் தனக்கு முன்னால் சென்றவளை தாண்டி வேகமாக கீழே இறங்கினான்…
அவனது வேகத்தில் இதழ்களை சுழித்து “இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை…” என்றவள் அவனது பின்னாலேயே சென்றாள்…
**
அங்கே, முற்றத்தில் அமர்ந்திருந்த புதியவரை புருவங்கள் சுருங்க பார்த்தவன், அவருக்கு எதிர் அமர்ந்திருந்த தாயை கேள்வியோடு பார்த்தான்.
மகனின் கேள்வி நிறைந்த பார்வைக்கு பதில் சொல்லாமல் “வா தம்பி இப்படி வந்து உட்காரு” தனது அருகே இருந்த இருக்கையை கைக் கட்டினார்…
தாயை அழுத்தமாக பார்த்துவிட்டு அவருக்கு அருகில் அமர்ந்துக் கொண்டான்.. அதே நேரம் மேல் தளத்திலிருந்து கீழே இறங்கி வந்த ஆனந்தியை அழைத்தார் சீதா.
“நீயும் வா மா ஆனந்தி” என அழைத்ததும் மறுக்க தோன்றாமல் அவரது அருகில் வந்து நின்றாள் ஆனந்தி.
“இவரு தான் சார் என் பையன் அபிநயன். இவங்க என்னோட மருமக ஆனந்தி…” இருவரையும் முறையாக அறிமுகம் செய்து வைத்தவர் மகனிடம் திரும்பி “தம்பி, இவரு ரிஜிஸ்டர் ஆபிஸ்ல இருந்து வந்திருக்காரு” என்றார். அவரைப் புருவங்கள் சுருங்க புரியாமல் பார்த்தான் அபி…
அவனது பார்வையில் “என்ன ப்பா மறந்துட்டியா? உங்க இரண்டு பேர் மேரேஜையும் இன்னும் ரெஜிஸ்டர் பண்ணல தானே. அதுக்காக தான் வந்திருக்காரு” என்றதும் சட்டென அபியின் பார்வை ஆனந்தியை தான் பார்த்தது. ஆனந்தியும் இவனைத் தான் தவிப்போடு பார்த்தாள்…
மங்கையின் தவிப்பை கசப்போடு உள் வாங்கிக் கொண்டவன் “இல்லை மா, இதை பத்தி இப்ப பேச வேண்டாம்…” சீதாவிற்கு மட்டுமே கேட்கும் குரலில் கூறினான். மகனின் பேச்சில் அதிர்ந்து பார்த்தார் சீதா…
அந்த அதிர்வு கூட நொடி மட்டும் தான் அடுத்த நொடி குரலை செருமியவர் மகனுக்கு மட்டும் கேட்கும் குரலில் “இல்லை அபி, இதுவே லேட்… இன்னும் இரண்டு மாசம் போனா பைன் கட்டணும்” எனக் கூற கூறவே இடையிட்டார் ரெஜிஸ்டர் ஆபீஸர்.
“சார் உங்களுக்கு இது செகண்ட் மேரேஜ் தானே?” தனது மூக்கு கண்ணாடியை சரி செய்து கொண்டே கேட்டார் வந்தவர்…
தாயை முறைத்துக் கொண்டே “ஆமாம்” என்று தலையாட்டினான்.
“அப்ப உங்க முதல் மனைவியோட டெத் சர்டிஃபிகேட் வேணும் சார். அப்பறம் உங்க இரண்டு பேரோட ஆதார் கார்ட், ஸ்கூல் மார்க் சீட், இல்லைன்னா பர்த் சர்டிஃபிகேட் வேணும். உங்க கல்யாண போட்டோஸ் அண்ட் இன்விடேசன் வேணும். அப்பறம் சாட்சி கையெழுத்து போட மூணு பேரும்ம்,அவங்களோட ஐடி ப்ரூஃப் பும் வேணும்” என ஆரம்பித்தவர் பேச்சு மேலும் சில நிமிடங்களுக்கு தொடர்ந்தது…
அவர் பேசிய அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டவன் தாயிடம் திரும்பி “அப்பறம் பார்த்துக்கலாம்”என்பதைப் போல் கண் காட்டினான்.
மகனின் பார்வையை புரிந்து கொண்டவர் நீண்ட நெடிய பெருமூச்சுடன் “சரிங்க சார்…நாங்க இதெல்லாம் ரெடி பண்ணிட்டு உங்களை கூப்பிடுறோம்…” என்றார்.
“நல்லது மேடம்…நீங்க ரெடி பண்ணிட்டு சொல்லுங்க… நானே வந்து மேரேஜை ரிஜிஸ்டர் பண்ணிட்டு போயிடறேன்” என்றவர் எழுந்து கொள்ள, சீதாவும், அபியும் உடன் எழுந்து கொண்டனர்…
“அப்பறம் நான் கிளம்பறேன் சார்” கையெடுத்து கும்பிட்டு விட்டு நகர்ந்தவரிடம் “நான் அவரை வழியனுப்பி விட்டுட்டு வரேன் ப்பா” என்ற சீதா ரிஜிஸ்டர் ஆபிஸரோடு பேசியபடி நடந்தார்…
செல்லும் தாயை ஒரு பார்வை பார்த்தவன் பக்கவாட்டில் திரும்பி ஆனந்தியை பார்த்தான். அவளோ அவளது அறைக்குள் நுழைந்திருந்தாள்.
“ப்ச்…” சலிப்போடு கேசத்தை அழுத்திக் கோதிக் கொண்டவன் ஆனந்தியின் அறையை நோக்கி நடந்தான்…
அதே நேரம் அறைக்குள் நுழைந்த ஆனந்தியின் எண்ணம் முழுவதும் திருமணத்தை பதிவு செய்வதில் தான் இருந்தது… வேண்டும், வேண்டாம் என்ற இரண்டு மனநிலைகளில் இருந்தாள்.
இதுவே திருமணமான புதியதில் கேட்டிருந்தால் நிச்சியம் வேண்டாமென்று ஒத்தக் காலில் நின்று இருப்பாள்.
ஆனால் இன்று வேண்டாமென்று சொல்லவே வாய் வரவில்லை அவளுக்கு.
ஒரு பக்க மனம் வேறு ‘இதை விட்டா உனக்கு நல்ல வாய்ப்பு அமையாது. வேண்டாம்னு சொல்லிடு…’ என்றது.
மனதின் பேச்சிற்கு செவி சாய்த்த நொடி, அவளையும் அறியாமல் ஆடவனின் சிரிப்பும், கன்னக் குழியும்,அன்றைக்கு அவன் பேசிய வார்த்தைகளும், அதற்கு பின்னான இறுகிய அணைப்பும் நினைவு வந்தது.
அக்கணம் அவளது இதயம் வேகமாக துடித்தது. நெஞ்சை அழுத்தி தடவிக் கொண்டே நின்றவளின் காதில் “குளோரி” என்ற அபியின் குரல் கேட்டது. சட்டென திரும்பி பார்த்தாள். அறைக் கதவின் முன் நின்றிருந்தான் அபி..
“வாங்க சார்” என்று உள்ளே அழைத்தாள்.
“இல்லை பரவாயில்லை…” என்றவன் குரலை செருமியப்படி
“இந்த கல்யாணத்தை வேண்டாம்னு உதறிட்டு போக உனக்கு மறுபடியும் ஒரு வாய்ப்பு கிடைச்சு இருக்கு ஆனந்தி. அதை யூஸ் பண்ணிக்க…” என்றான் முகத்தில் எவ்வித உணர்வுகளையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல்…
அவனது பேச்சில் அதிர்ந்து நின்றாள் பெண். அவனோ அவளது பார்வையை பொருட்படுத்தாமல் மேலும் தொடர்ந்தான்.
“இந்த கல்யாணத்துல உனக்கு துளியும் விருப்பமில்லைன்னு எனக்குத் தெரியும்… ஊர் முன்னாடி கல்யாணம் ஆயிடுச்சுங்கற கட்டாயத்துல தான் நீ இங்க இருக்கன்னு புரியுது…” என்றதும் கண்களை இறுக மூடித் திறந்தாள்.
“ஆனால் இனிமே அப்படி இருக்கணும்னு அவசியமே இல்லை. நீ தாராளமா இங்கிருந்து போலாம்… அப்பறம் இந்த சோசியல் மீடியா, ஊர் உலகம் என்ன சொல்லும்னு யோசிக்காத. எவனும் உனக்காக வாழ மாட்டான். உன் வாழ்க்கையை நீ தான் வாழணும். சோ யார் என்ன சொன்னாலும் கண்டுக்காத.. யார் என்ன கேட்டாலும் அன்னைக்கு இருந்த சூழ்நிலையில வேற வழியில்லாம கல்யாணம் பண்ணிட்டோம்ன்னு சொல்லு…” என்றவன் இரு விரல்களால் நெற்றியை தட்டியப்படி
“ஹான், அப்பறம் இந்த கவர்மென்ட் ஆபிஸர் பேசிட்டு போனதை நினைச்சு பயப்படாத அதை நான் பார்த்துக்கிறேன்…” எனக் கூறியவனை பார்த்தது பார்த்தபடி நின்றாள்…
“என்ன ஓகே தானே?” அவளது முகத்திற்கு நேராக கையை ஆட்டியபடி கேட்டான்.
“ம்ம்…” என்றாள்.
அவளது ‘ம்ம்’மில் சிரித்தவன் “நான், ராம் கிட்ட பேசறேன்…” என்று விட்டு திரும்ப, அவனையே இமைக்காமல் பார்த்தவளுக்கு நெஞ்சம் விம்மி துடித்தது.
இனி ‘உன் வாழ்க்கையில நான் இல்லை’ என்பதை போல் பேசியதை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
அக்கணம் அவளது மொத்த உணர்வுகளும் வெடித்து சிதற “அப்ப உன்னை கட்டிக்க தோணுதுன்னு சொன்னதெல்லாம் சும்மாவா” உயிர் உருகும் குரலில் கேட்டாள்.
அவளது கேள்வியில் அலட்சியமாக தோள்களை குலுக்கி முன்னால் நகர்ந்தவனிடம் “அப்ப முத்தம் கொடுக்க தோணுதுன்னு சொன்னதும் சும்மாவா” எனக் கேட்க,அதற்கும் அவனிடத்தில் வெறும் தோள் குலுக்கல் மட்டுமே பதிலாக வந்தது.
“அப்ப கூடவே வைச்சுக்க தோணுதுன்னு சொன்னதும் சும்மாவா” மெல்லிய விசும்பலோடு கேட்டவளை சட்டென நின்று திரும்பி பார்த்தான்..
கண்கள் கண்ணீரை பொழிய, இதழ்கள் அழுகையில் துடிக்க, முகம் முழுக்க சிவந்து நின்றவள் இவனுக்கு கவிதையாய் தெரிந்தாள். உள் கன்னத்தை நாவல் வருடிக் கொண்டே “ஓய்… முட்டைகோஸ்” என்றழைத்தான்.
அவனது அழைப்பில் கண்களில் கண்ணீரோடு நிமிர்ந்து பார்த்தாள். மெல்லிய புன்னகையோடு
“வா…” என்பதை போல் கைகளை விரிக்க, மெல்லிய விசும்பலோடு ஓடி சென்று குரங்கு மரம் ஏறுவது போல் அவன் மேல் ஏறிக் கொண்டாள்.
“ஹேய்…” என்று தடுமாறியவன் பின் நன்றாக கால்களை ஊன்றி நின்று கொண்டான்… அவளோ, அவனது கழுத்தில் முகம் புதைத்து அழ, அபியின் இதழ்களில் சந்தோஷ புன்னகை…
“உனக்காக வெயிட் பண்றேன்னு சொல்லிட்டு இப்ப போன்னு சொல்றீங்க” அழுகையோடு வந்து விழுந்த வார்த்தைகளில் சத்தமிட்டு சிரித்தவன் “இந்த ஒரு வாரமா வெயிட் பண்ணேன்ல்ல” என்றான் குறும்பாக
“ஒரு வாரம் போதுமா” இப்பொழுது அழுகை குறைந்து கோபம் தலைத்தூக்கியது…
“போதாது தான்… ஆனால் ஒரு வாரமா நீ பேசாம இருக்கவும் ‘நான் உனக்கு வேண்டாம் போல’ன்னு நினைச்சேன். அதுவும் இல்லாம நான் வேற செகண்ட் ஹேன்ட், ” எனக் கூற கூறவே அவனை இன்னும் இறுக்கி அணைத்தாள். அந்த அணைப்பு அவளது மன மாற்றத்தை கூறுவதாய் இருந்தது…
நொடிகள் நிமிடங்களாக கரைய “அன்னைக்கு என்ன நினைச்ச” மங்கையின் செவியில் இதழ்கள் உரச கேட்டான். சட்டென நிமிர்ந்து அவனைப் பார்த்தவளின் விழிகள் அகலத்திற்கும் விரிந்து கொண்டது.
“முட்டை கண்ணை விரிச்சு விரிச்சு பார்க்காம அன்னைக்கு என்ன நினைச்சேன் மட்டும் சொல்லு” குரலில் குறும்பு மின்ன கேட்டான்..
அவனது குறும்பில் இத்தனை நேரம் அவளை சூழ்ந்திருந்த மொத்த உணர்வுகளும் அறுபட்டு போக, ஒன்றுமில்லை என்று தலையாட்டியவள் “கீழே இறக்கி விடுங்க சார்” என்றாள் அவனது முகத்தைப் பார்க்காமல்.
“எகிறி குதிச்சு மேலே ஏற தெரிஞ்சவளுக்கு இறங்க தெரியாதா? புருவத்தை உயர்த்தி கேள்வியாக கேட்டவனிடம் பதில் சொல்லாமல் கீழே குனிந்து பார்த்தாள்… அவனது உயரத்திற்கு தரை ஏதோ பள்ளம் போல் தெரிந்தது.
“சார் பிளீஸ்…” கெஞ்சலாக வந்த வார்த்தையில், இதழ்களை அழுத்திக் கடித்து சிரிப்பை அடக்கியவன் “அன்னைக்கு என்ன நினைச்சு பயந்தேன்னு சொல்லு உடனே இறக்கி விடறேன்…” என்றான்..
ஆடவனின் சீண்டலில் “இப்ப நீங்க என்னை இறக்கி விடல… என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” சிலிர்த்து கொண்டு கூறியது சில்வண்டு…
“நான் என்ன இறக்கி விட மாட்டேன்னா சொல்றேன்…நீ சொன்னதும் நான் பாட்டுக்கு இறக்கி விட்டுட்டு போயிட்டே இருப்பேன்”
“அது பெருசா ஒன்னும் நினைக்கல.. நீங்க எனக்கு கிஸ் தர மாதிரி தோணுச்சு…” என்றவள் முகம் ஆடவனின் கழுத்தில் ஆழப் புதைந்தது.
“இதுக்கா பயந்த?”
“ம்ம்…” என்றாள்
“ஆனால் முட்டைகோஸ் லிப் லாக்கை விட, நெக்ல தர கிஸ்க்கு தான் கிக்கு அதிகம் தெரியுமா? இதோ இப்ப நீ எனக்கு குடுத்துட்டு இருக்கிற மாதிரி” என்றதும் சட்டென அவன் கழுத்திலிருந்து முகத்தை நிமிர்த்தினாள்.
“நீ ஃபீல் பண்ணியிருக்க மாட்டேன்னு நினைக்கிறேன். நான் வேணும்ன்னா ட்ரைல் காட்டவா?” எனக் கேட்டதும் தான் தாமதம் பட்டென அவனிலிருந்து கீழே இறங்கியவள் ஒரே ஓட்டமாக அறைக்குள் நுழைய, சத்தமிட்டு சிரித்தான் ஆடவன்.
அதே நேரம் ரிஜிஸ்டர் ஆபிஸரை வழியனுப்பி விட்டு உள்ளே நுழைந்த சீதா, இளையவர்கள் நிலையை கண்டு இன்பமாக அதிர்ந்து உடனே அங்கிருந்து நகர்ந்தார்…
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
16
+1
56
+1
3
+1
2

