Loading

அத்தியாயம் 33

 

🚨few minutes edit pannathu m padunga pls””

 

அதுவொரு சந்தியாக் காலப் பொழுது… சூரியன் மெல்ல அடிவானை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.

 

அந்த நேரத்திலும் அத்தனை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த தொழிற்சாலை.

 

அங்கே, ஏ ஸ்கொயரின் கிளை அலுவலகத்தில் மடிக்கணினியோடு அமர்ந்திருந்தான் அபி… பார்வை மடிக்கணினியில் இருந்தாலும் பேச்சு அருகில் அமர்ந்திருந்த ராமிடம் தான் இருந்தது…

 

“ஓகே ராம் முக்கியமான மீட்டிங்கெல்லாம் ஒன்ஸ் ரீமெண்ட் பண்ணிடுங்க. பர்சேஸ் மேனேஜர் கிட்ட சேலத்தில ஏலத்துக்கு எடுத்த பருத்தி பில்லெல்லாம் வாங்கிட்டீங்களா? அந்த பில்லெல்லாம் ரீ செக் பண்ணிட்டு எனக்கு அனுப்புங்க ராம்…அப்பறம்” என ஆரம்பித்தவன் அடுத்தடுத்த வேலைகளை கூறினான்…

 

அபி சொல்ல சொல்ல அனைத்தும் குறித்துக் கொண்டவன் “சார் எனக்கொரு டூ டேஸ் லீவ் வேணும்” தயங்கியபடி கேட்டான்..

 

“ஏன்” என்பதை போல் புருவத்தை உயர்த்தி பார்த்தவனிடம்

 

“கொஞ்சம் பெர்சனல் ஒர்க் சார்” என்றதும் நீண்ட நெடிய பெருமூச்சுடன் “எது பண்ணாலும் கொஞ்சம் யோசிச்சு பண்ணுங்க ராம். இது உங்க இரண்டு பேர் வாழ்க்கை மட்டுமில்லை, பசங்க வாழ்க்கையும் இருக்கு ” என்றான்…

 

அபியின் பேச்சில் விழிகள் தன்னாலேயே விரிய “சார் உங்களுக்கு ” அதற்கு மேல் கேட்க முடியாமல் தடுமாறினான் ராமன்.

 

அவனை அழுத்தமாக பார்த்தபடி “நம்ம வக்கில் தான் சொன்னாரு” என்றான்.

 

நீண்ட நெடிய பெருமூச்சுடன் தன் முதலாளியை பார்த்தவன்

“என்னால அவளை மன்னிக்க முடியல சார்…” என்றான்.

 

 

“நீங்க அவங்களை மன்னிக்க வேண்டாம்…மறந்துடுங்க ராம்…” என்றதற்கு பதில் பேசாமல் அமைதியாக நின்றான்.

 

மறக்க கூடிய விஷயமா அது? தன்னை அவமானப்படுத்தி பேசி இருந்தால் கூட இத்தனை தூரம் சென்றிருக்க மாட்டானோ என்னவோ… ஆனால் அவள் அவமானப்படுத்தியது அவனது தங்கையை அல்லவா? தாய், தந்தையில்லா பெண்ணை ஒரு தாயை போல் பார்த்துக் கொள்வாள் என்று தானே அவளை மணம் முடித்து அழைத்து வந்தான்.

 

ஆனால் அவள் செய்தது என்ன? என் தங்கையை ஊரார் முன் அவமானப்படுத்தியது மட்டுமல்லாமல் அவளது நடத்தையை பரிசோதிக்க மருத்துவமனைக்கு அழைத்தது எல்லாம் எப்படி அவனால் ஏற்றுக் கொள்ள முடியும்.

 

உண்மையை சொல்லப்போனால் இன்றைக்கு வரைக்கும் அந்த நாளின் இரவை அவனால் மறக்க முடியவில்லை… கண்களை இறுக மூடித் திறந்தான்.

 

 

அதே நேரம், ராமனின் அமைதியில் மேலும் தொடர்ந்தான் அபிநயன் “அன்னைக்கு அவங்க நடந்துக்கிட்டது தப்பு தான் இல்லைன்னு சொல்லல… அதுக்காக அவங்களுக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்க வேண்டாம்…”

 

“ அப்படியே அவங்களுக்கு தண்டனை கொடுக்க நினைச்சா? கொஞ்ச நாள் பேசாம இருங்க… இல்லையா கோபம் போற வரைக்கும் சண்டை போடுங்க அதை விட்டுட்டு டைவர்ஸ் வரைக்கும் போறது சரியா தோணலை…” என்றதற்கு துளியும் பதில் பேசவில்லை ராமன்…

 

அவனது பதிலை இவனும் எதிர்பார்க்கவில்லை என்பதை போல, மடிக்கணினியில் பார்வையை திருப்பிக் கொண்டான்…

 

“சரிங்க சார், நான் மணிக்கு கால் பண்ணி பில் டீடெயில்ஸ் மொத்தமா அனுப்ப சொல்றேன்” என்று விட்டு அங்கிருந்து நகர, செல்லும் ராமை ஒரு பார்வை பார்த்தவன்

“அண்ணனும், தங்கச்சியும் என் பேச்சை கேட்கவே கூடாதுன்னு இருப்பாங்க போல” என முனகி கொண்டே எழுந்தவன் அங்கிருந்து நகர்ந்தான்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்