Loading

புயல் 2

“நல்லா தூங்கிட்ட தங்கம். அதான் நானே நம்ம ரூம்ல கொண்டு வந்து படுக்க வைக்க வேண்டியதா போச்சு. இரு சாப்பாடு எடுத்துட்டு வர்றேன்” அவன் சொல்லவும் அவனுக்கு முன்னதாக அறையை விட்டு வெளியேறப் போனாள்.

அவளது கையைப் பிடித்து தடுத்தவன் “எங்க போற? நான்தான் எடுத்துட்டு வர்றேன்னு சொல்லுறேன்ல. அப்பறம் என்ன? நீ போய் ரெஸ்ட் எடு. இனி மாமாதான் உனக்கான எல்லா வேலையும் பார்ப்பேன்” என்றான் ருத்ரா.

பிடித்திருந்த கையினை வெடுக்கென உதறிவிட்டு “தொடாத.. பர்ஸ்ட் தள்ளி நில்லு. யாரு நீ? எதுக்காக என்னைத் தொட்டுட்டு இருக்க” என்று கத்தினாள்.

“கர்ப்பமா இருக்கும் போது இப்படித்தான் அடிக்கடி பேய் மாதிரி கத்துவாங்களாம் சரவணன் சொன்னான்.. அதுக்கு பேர் என்னமோ சொன்னானே.. மூடு சுவிங்க் தான. இழவு இங்கிலிசு வாய்லயே வரமாட்டேங்குது.. அதுக்குன்னு இப்படியா நீ கத்துவ. பாரு மாமா காதுல இருந்து இரத்தமே வருது..” காதினைத் தொட்டு அவன் அவளிடம் சுட்டிக் காட்டினான்.

“உளராமல் விலகிப் போ. நான் எங்க வீட்டுக்குப் போறேன். எங்க வரக் கூடாதுன்னு நினைச்சேனோ அங்கேயே என்னை கூட்டிட்டு வந்துட்டலே.. நெருப்புல நிக்குறது மாதிரி இருக்கு” திட்டியவள் படிக்கட்டில் இறங்கப்போக அவளை அப்படியேத் தூக்கிக் கொண்டான்.

“அறிவிருக்கா படியில போய் குடுகுடுன்னு இறங்குற.. அப்படியெல்லாம் நீ  இறங்கக் கூடாதுன்னு சரவணன் சொல்லியிருக்கான். இனி நீ கவனமா இருக்கணும். இந்த ரூமை விட்டு நீ வெளியே வரத் தேவையே இல்லை. நானே உனக்குத் தேவையானது எல்லாமே செஞ்சுடுவேன் சரியா?” பேசிக் கொண்டே உள்ளே கட்டிலில் படுக்க வைத்தான்.

அவளுக்குக் கோபம்தான் வந்தது. “என்னைத் தொடுற வேலை எல்லாம் வேண்டாம்னு சொன்னேன்ல இன்னொரு தடவை கையை வச்ச.. அப்பறம் நான் என்ன செய்வேன்னு எனக்கேத் தெரியாது” அவள் கத்த “ஷ்ஷ் இப்படியெல்லாம் கத்தாத டி. பட்டு லட்டு பயந்துக்கும்” என்றான் மெல்ல.

அவ்வளவுதான்.. இன்னும் ஆங்காரம் ஏறியது அவளுள்.

“பட்டு லட்டுன்னு இனியும் என் வயித்துல வளர்ற பிள்ளைங்களை கொஞ்சுனால் நான் மனுஷியா இருக்க மாட்டேன். இந்த குழந்தைங்களால உறவு புதுப்பிக்க நினைச்சால் நான் இதை இழக்கவும் தயாராத்தான் இருக்கேன். அதை ஏற்கனவே சொல்லிட்டேன்” அவளின் கோபம் இப்போது அவனுக்குள் வந்துவிட்டது.

“நானும் ஏற்கனவே அதுக்கான பதிலை சொல்லிட்டேன். சும்மா பேச்சுக்கு கூட நீ இனியொரு தடவை சொல்லாத. அப்பறம் இந்த ருத்ர தாண்டவனோட ஆட்டத்தைப் பார்ப்ப” அவன் அவளைத் தீண்டவில்லை. ஆனால் அவன் குரலில் இருந்த அழுத்தம் அவளை அசைத்துப் பார்த்தது. இருந்தும் சமாளித்தவள்

“உன்னோட ஆட்டத்தைத்தான் நான் பார்த்துட்டேனே. இனியும் புதுசா பார்க்க என்ன இருக்கு? ச்சே உன் முகத்தைப் பார்த்தாலே நீ எனக்குப் பண்ணுன பச்சைத் துரோகம்தான் ஞாபகம் வருது. என்னை விட்டுடு. நான் என் வழியிலே போய்க்கிறேன். நீ பண்ண காரியத்துக்கு ஸ்டேஷன்ல கம்ப்ளையிண்ட் பண்ணி முட்டியைப் பேர்த்துருக்கணும். அப்படிப் பண்ணாதது தான் உனக்கு குளிர் விட்டுப் போயிடுச்சுப் போல. இனி என்கிட்ட உன் திமிருத்தனத்தைக் காட்டினால் அதையும் நான் செய்வேன். ச்சே உன்கிட்ட என்ன பேச்சு” என விலகி நடந்தாள்.

“அப்படியெல்லாம் போக முடியாதே தங்கம்” வழியை மறித்து வில்லன் போல சிரித்தான் அவன்.

அவள் முகத்தினைத் தாங்கி  கண்களுக்குள் பார்த்தான். அவனது பார்வை அவளை என்னவோ செய்தது. பட்டென்று கண்ணாடியினை அவள் கழட்டிவிட அவன் சிரித்துக் கொண்டான்.

“தங்கம்..” குரல் மோகமாய் ஒலித்தது.

“டோண்ட் கால் மீ லைக் தேட்..”

“அப்படின்னா? என்ன அர்த்தம் தங்கம்” இதழ் உரசாது கேட்டான்.

“ம்ம் என்னை அப்படிக் கூப்பிடாதன்னு அர்த்தம்.. இவனுக்கு எக்ஸ்பிளையின் வேற பண்ணனும்” எரிச்சல்தான் வந்தது அவளுக்கு.

“அப்போ அப்படித்தான் கூப்பிடுவேன்.. தங்கம் தங்கம் செல்லத் தங்கம் தங்கம்.. பாட்டாகவே அவன் பாடிவிட பாவம் மசக்கையில் அவதியுறுபவளுக்கு அதுவேறு மேலும் அவஸ்தையாக இருந்தது.

“பாடுறது ரொம்ப மோசமா இருக்குல.. பட்டு லட்டு பயந்துக்குவாங்க.. வேண்டாம்” என நல்ல பிள்ளையாய் அவன் மாறிவிட்டு “இங்க பாரு தங்கம்.. மாமன் ரொம்ப நல்ல பையனாம். மாமன் சொன்னதை நீங்க கேட்டால் மட்டும். இல்லைன்னா இந்த மாமன் விவகாரமா ஏதாவது பண்ணுவான். அது உனக்குமே நல்லாத் தெரியும். மாசமா இருக்குற இந்த நேரத்துல உன்னைக் கஷ்டப்படுத்திப் பார்க்கக் கூடாதுன்னு தான் நினைக்கிறேன் தங்கம். அந்த வேலையைச் செய்ய வச்சுடாத..” கண்கள் அழுத்தமாக அவளில் பதிய குரல் செவியினை அதைவிட அழுத்தமாக மோதியது.

“உன் உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் பயப்பட வேற ஆளைப் பாரு. அது ஒன்னும் உனக்குப் புதுசு இல்லையே.. பொம்பளை பொறுக்கி” அவள் முகம் அருவெருப்பினைத் தாங்கி இருந்தது.

அவள் கையில் இருந்த அவனது கண்ணாடியை அணிந்துக் கொண்டவன் “சாப்பாடு எடுத்துட்டு வர்றேன்.. சாப்பிட்டு நிம்மதியாய் தூங்கு” கடுப்புடன் சொல்லிவிட்டு கீழே இறங்கிவிட்டான்.

ஏனோ அந்த வார்த்தை மட்டும் அவனை அப்படியே உயிரோடு கொன்றது. அப்படியே அவள் கழுத்தைத் நெறித்துவிடும் அளவுக்கு அவனுக்குள் ஆத்திரம் இருந்த போதும் வயிற்றுக்குள் இருக்கும் அவனது பட்டு லட்டு தான் தற்போது அந்த கோபத்தினைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இவன் சொல்லுவதை நானென்ன கேக்குறது என்று நினைத்தவள் கதவைத் திறக்க வர கதவு வெளிப்பக்கமாக பூட்டியிருந்தது.

கைப்பையை தேடினாள். அதையும் காணவில்லை. போன் அதனுள் தான் இருந்தது.

கீழே கிச்சனில் சாப்பாடை எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் போது மணியம்மாள் உள்ளே எட்டிப் பார்த்தார்.

“என்ன பண்ணுற ருத்ரா?”

“உமாவுக்கு பசிக்குதாம். அதான் சாப்பாடு எடுத்துட்டு இருக்கேன் ம்மா” என்று சொல்ல “உமாவா? அவதான் நம்மளோட ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம்னு வீட்டை விட்டே போயிட்டாளே.. அவ எதுக்கு இங்க வர்றா?” என்று கேட்க கூர்பார்வை பார்த்தவன் “உமா மாசமா இருக்கா.. நம்ம வீட்டுக்கு இரண்டு பேரப் புள்ளைங்க வரப் போகுது. இதுக்கும் மேலயும் அவளை அங்க விட்டு வைக்குறது சரியா சொல்லுங்க” எனச் சொல்ல தலை இப்படியும் அப்படியுமாக ஆடியது.

“அப்போ வந்துட்டாளா?” குரலில் சுருதி குறைந்தது பெற்றவளுக்கு.

“நான்தான் கூட்டிட்டு வந்தேன். அது சரி.. என்ன குரல்ல சந்தோஷத்தையே காணோம்.. இந்நேரம் நீங்க மாடிக்குப் போய் உமாவைப் பார்த்து மருமகளேன்னு கொஞ்சியிருக்க வேண்டாமா” என்று சொல்ல அவரோ “ஆஹ் சந்தோஷம்தான் ருத்ரா. நான் இதோ போறேன்” என்று ஓடியேவிட்டார்.

அவரையேப் பார்த்தவன் இதுதான் ஆரம்பம் என்பது போல் சிரித்துக் கொண்டான்.

கதவு திறக்கும் சத்தம் கேட்டது..

திரும்பிப் பார்த்தாள். ச்சே இந்த லேடியா? முகத்தினைத் திருப்பிக் கொண்டாள். அவன் அம்மாவின் முகத்தைப் பார்க்கக் கூட மனம் ஒப்பவில்லை. தான் தோற்றுப் போனது மீண்டும் கண்முன்னே வர அவள் இப்போது மனதளவில் நொறுங்கிப் போயிருந்தாள்.

“மாசமா இருக்குறதா ருத்ரன் சொன்னான்” சம்பிரதாய விசாரிப்பு அவரிடம் இருந்து வந்தது.

“ஆமா.. இன்னைக்குத்தான் செக்கப் போனேன். அங்க இருந்தே கூட்டிட்டு வந்துட்டாங்க” பேசவே பிடிக்கவில்லை. இருந்தும் வாய் பதில் சொன்னது.

“நீ கோபப்பட்டு உங்க வீட்டுக்குப் போனதும் நான் திரும்பி இங்க வரவே மாட்டேன்னு நினைச்சுட்டேன் உமா” மணியம்மா பேசிட அதில் கிளர்ந்தவள்

“நானும் ஒன்னும் இங்க வரணும்னு ஆசைப்படலை” வெடுக்கென்று அவள் பதில் சொல்லிவிட்டாள்.

“அதானே நீ ஆசைப்பட மாட்டேன்னு தெரியும். ஆனால் இவன் என்ன நினைப்புல இருக்கான்னு தெரியலையே” என்றார் கதவுப் பக்கம் பார்த்தபடியே வெகு ஜாக்கிரதையாக.

“அந்தாளு என்ன நினைப்புல இருந்தால் எனக்கென்ன. நான் இப்போ எங்க வீட்டுக்குப் போயிடுவேன். யாரும் என்னைத் தடுக்க முடியாது”

“எங்க கிளம்பப் போறாளாம் உங்க மருமகள்” என்றபடியே உள்ளே வரவும் முகத்தினை மாற்றிக் கொண்டார் மணியம்மாள்.

“எனக்கென்ன போறதுக்கு இடமா இல்லை. எங்க வீடு இருக்கு. ஸ்டேட்டஸ்ல உங்களுக்கு நாங்க ஈக்குவல் இல்லைதான்.. ஆனால் ஒழுக்கத்துல எங்ககிட்ட உன்னால வரவே முடியாது. இங்க இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் அப்படியே மூச்சடைக்குது. இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் செத்துடுவேன் போல” என்று சொல்லவும்

“அது ஒன்னும் இல்லை தங்கம் எல்லாம் பசி மயக்கம்.. சாப்பாடு எடுத்துட்டு வந்துட்டேன் சாப்பிடு. எல்லாம் சரியாகிடும்”

“எனக்கொன்னும் வேண்டாம்”

“அம்மா நீங்க கீழ போங்க” அவரை அனுப்பி வைத்தவன்

“தங்கம். சரவணன் இருக்கான்ல அவன் சொல்லியிருக்கான் வயித்துக்குள்ள பட்டு லட்டு இருக்குறதால உனக்கு நிறைய பசிக்கும்னு. நீ சாப்பிட்டு தூங்கு. பசிக்கும் போது மாமனை மனசுக்குள்ள நினை உடனே சாப்பாடோட ஓடி வந்துடுறேன்” என்றான் பாசமாய்.

“உனக்கு வெளியில வேலை இல்லையா?” அழுத்திக் கேட்டாள். அவள் சொன்ன டோனிலேயே அவனுக்குப் புரிந்துப் போனது அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று.

“உன்னைப் பார்த்துக்கிறதுதான் என்னோட வேலையே..சாப்பிடு” என்றான்.

“இந்த சாப்பாடை சாப்பிடுறதுக்கு நான் ரோஷம் கெட்டுப் போய் திரியலை. நான் சாப்பிடணும்னு நினைச்சால் என்னை வீட்டுக்கு விடு. இல்லைன்னு வை நான் பட்டினியாவே கிடந்துக்கிறேன்..”

“சாப்பிடு உமா”

வாயை இறுக மூடி அவள் அசையாமல் இருந்தாள்.

“உன்னைத்தான் சொல்லுறேன் சாப்பிடு.. “

“மாட்டேன்”

“என்னை கோபப்படுத்திப் பார்க்காத உமா.. சாப்பிடு”

“என்னை வீட்டுக்கு போக விடு. நான் அங்க போய் சாப்பிட்டுக்கிறேன். இல்லைன்னா என்னோடு சேர்ந்து உன் பட்டு லட்டுவும் பட்டினியா கிடக்கட்டும்”

“ஆக, நீங்க இப்ப என்னோட சம்பாத்தியத்துல சாப்பிட மாட்டீங்க அப்படியா?”

“ஆமா..”

“இங்க இருக்குறவரைக்கும் இந்த உண்ணாவிரத போராட்டம் தொடரும் அப்படியா?”

“அப்படித்தான்”

“இதுதான் உன்னோட முடிவா உமா”

“ஆ….மா ம் ஆஹ்…” அவள் திணறத் தொடங்கிவிட்டாள்.

அவனது மீசையின் முடிகள் முழுக்க அவளது வயிற்றினை இம்சித்துக் கொண்டிருந்தது.

இந்த திடீர் தாக்குதல் அவளே எதிர்பாராதது.

அவனது உச்சி முடிகளை இறுக்கமாகப் பிடித்து இழுத்து தலையை நிமிர்த்தப் பார்க்க அது முடியவே இல்லை. அவன் தலை இப்படியும் அப்படியுமாக வயிற்றில் பதித்து திரும்ப இதழ்கள் அவளது இடை முழுக்க இச் பதித்துக் கொண்டே இருந்தது.

இந்த தருணத்தில் இந்த நெருக்கம் தேவைப்படும் ஒன்றுதான். ஆனால் இருவருக்கும் இடையே இருக்கும் பிரச்சனை ருத்ரன் செய்த நம்பிக்கை துரோகம் அவளை இயல்பாக இருக்க விடாமல் செய்தது.

அவன் ஸ்பரிசம் இடையைத் தொட தொட மூடிய இமைகளுக்குள் வேறு சில காட்சி..

அவ்வளவுதான் “ப்ச் பொறுக்கி நாயே” என்றபடி அவனது முடியினை கொத்தாக பிடித்துக் கொண்டு நிமிர்த்தி அவன் கன்னத்தில் ஓங்கி ஓர் அறைவிட்டாள்.

இப்போது அவள் சாந்தம் தவளும் முகத்தோடு திரியும் உமா மகேஸ்வரி இல்லை.. அவளில் இருந்து உதித்த காளியாய் ருத்ரனின் கண்களுக்குத் தெரிந்தாள்.

“இப்படியெல்லாம் பண்ணால் மயங்கி இங்கேயே இருந்துடுவேன்னு நினைச்சுட்டயா? உனக்கு கேவலமா இல்லை. என்னைத் தொடுறதுக்கு முதல்ல உனக்குத் தகுதி இருக்கா.‌ விலகிப் போ.. உனக்கு தேவையானது வெளியில கிடைக்கும். இனியும் என்கிட்ட நெருங்கினால்..”

“என்ன பண்ணுவ?” எனக் கேட்ட அவன் முகத்தில் நிச்சயம் கோபமும் இல்லை.. எந்தவித குற்ற உணர்வும் இல்லை. மொத்தத்தில் அங்கு என்ன இருந்தது என்பதை அவளால் உணர முடியவில்லை.

இதற்கு என்ன பதில் சொல்ல? அவள் விட்டம் பார்த்தாள்.

“சொல்லு உமா என்ன பண்ணுவ? அடிச்சே சாகடிக்கப் போறயா? அதைச் செய்.. விட்டுட்டுப் போறதை விட அது எனக்கு நீ செய்யுற நல்லதுதான்” குரல் லேசாக கரகரத்தது.

அப்போது அறைக்கதவு தட்டும் சத்தம் கேட்டது. கூடவே அக்கா என்ற அழைப்பும்..

அதில் தெம்பு வரப் பெற்றவள்.. “என் தம்பி வந்துட்டான். நான் கிளம்புறேன். தேவையில்லாமல் என் பின்னாடி வர்ற வேலை எல்லாம் வேண்டாம்” எனச் சொல்லி அவள் கதவை நோக்கிச் சென்றாள்.

“ஒரு நிமிஷம்” அவன் பின் இருந்து அழைக்க அவள் திரும்பிய போது அவன் இதழ் அவள் இதழ்களுக்கு வெகு அருகே வந்திருந்தது.

அந்த கண்ணாடி அவள் கண்களை முட்டிக் கொண்டிருக்க அதை கழட்டியவன் இதழ்களை அசைத்தபடியே நொடியில் அவள் இதழ்களை சுவைத்திருந்தான்.

வெளியே இருந்துக் கேட்ட அக்கா அக்கா என்று கேட்ட குரலில் அவனைத் தள்ளிவிட்டவள் புறங்கையால் உதடுகளை அழுந்த துடைக்க “சாப்பாடு உள்ள போயிடுச்சே தங்கம்” என்றான் சிரிப்புடன்.

அவள் கொடூரமாக முறைக்க “ஒரு வாய்ன்னாலும் உன் வாய்க்குள்ள போனது போனதுதானே தங்கம்..” என்றான் விஷமச் சிரிப்புடன்‌.

சற்று முன்னர் அடியையும் வாங்கிவிட்டு எப்படி அவனால் சிரிக்க முடிகிறது

எரிச்சல் எக்கச்சக்கமாக அவளுள் உற்பத்தி ஆக.. “அது இப்பவே வாந்தியா வெளிய வந்துடும்” என்று சொன்னாள்.

“வராது.. என் பட்டு லட்டு இரண்டும் அப்பா செல்லம். முதன் முதலா அவங்களுக்காக அப்பா ஊட்டுன ஒரு வாய் சாப்பாட்டை வெளியேவே விடாது பாரு.. சரி வா உன் தம்பிகிட்ட பஞ்சாயத்து பேசுவோம்” என அவள் தோளில் கைபோட்டு கதவைத் திறக்க அங்கே நின்றிருந்தான் அவளின் தம்பி ஆத்விக் கோபத்துடனே..

புயல் தாக்கும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
21
+1
1
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. Mr.visham enna bayangaramana aala irukinga?? Ivanuku pinna periya kathaiye irukum polaiye🙄 enna sir posukunu ippadi pannitinga patharuma patharatha😂🙈 writer ji episode super😍 intha maniyamma ku avala pudikalaiya ??

      1. Author

        😊😊😊 சொல்ல சொல்லக் கேட்காமல் போனால் இப்படித்தான் பண்ணுவான் போல🫢