Loading

இனிதாய் நாள்கள் நகர்ந்திட, பரிட்சைக்கு படிப்பதை விட நீதிமன்றத்தில் லீகல் தாள்களை பெற பெரும் போராட வேண்டியிருந்தது சத்யாவிற்கு.

சிலநேரம் அனைத்தையும் தூக்கிப் போட்டு விடலாமா என்று கூட இருந்தது.

இதயாம்ரிதா தான், “ப்ளீஸ் சத்யா… ரொம்ப வலிக்குது தான். ஆனாலும் சென்ட்ரல் கவர்மெண்ட் ரொம்ப கிடுக்குப் பிடி. பொறுமையா இருங்க… பேக் கிரவுண்ட் வெரிஃபிகேஷன் நல்லபடியா முடியும்” என அவ்வப்பொழுது அவனுக்கு முத்தமிட்டு ஆறுதலுரைப்பாள்.

பின்புல சோதனைகளுக்கு எல்லாம் அவனைக் குற்றவாளி போல பல கேள்வி கேட்கப்பட்டதில் அவனும் தளர்ந்து தான் போனான். ஆகினும், “ஏய் இதெல்லாம் ஒன்னும் இல்லடி. உன்கூட டைம் ஸ்பென்ட் பண்ண முடியலைல அந்தக் கடுப்பு தான்” என சமாளித்துக் கொள்பவனை அவளுக்குப் புரியாதா என்ன?

ஒருவாறாக கடினப்பட்டு பரீட்சைகளும் எழுதி முடித்தான்.

இதை முடிப்பதற்குள்ளவே வெகுவாய் துவண்டு விட்டான் என்று தான் சொல்லவேண்டும். இதற்கு அனுமதிக்கவே அத்தனை கேள்விகள் எனும்போது இனி தான் அதிக அளவில் பின்புல சோதனைகளை செய்வார்கள் என்றறிந்திருந்தவனுக்கு உள்ளம் வெதும்பிப் போனது.

அதனையும் தன்னவளின் மடியில் புதைத்துக் கொள்வான்.

“இன்னும் கொஞ்ச நாள் தான் சத்யா எல்லாம் சரியாகிடும்!” மடியில் படுத்திருப்பவனின் தலை மீது தன் தலையை வைத்துக் கொண்டாள் இதயாம்ரிதா.

அதன்பிறகு நேர்முகத் தேர்வுகளும் முடிந்து ஆசுவாசமாக அமர்ந்தான். இதயாம்ரிதாவிற்கு அடுத்த வருடத்திற்கான பாரிஸ் கண்காட்சி நெருங்கி வர, அவளும் கடுமையாய் உழைத்துக் கொண்டிருந்தாள்.

மற்றவர்களும் இந்த வருடம் எப்படியேனும் அதில் இடம்பெற்று விடவேண்டுமென்ற ஆவலில் தங்களது சுக துக்கங்களை மறந்து முழு மூச்சாக வேலை செய்தனர்.

ஸ்ரீராமிற்கும் தொழில் நன்கு சூடு பிடிக்க, சத்ய யுகாத்ரனுக்கு தேர்வெல்லாம் முடிந்ததும் ஸ்ரீராமைப் பார்க்கச் சென்றான்.

“நீ கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானடா?” என்றான் சத்யா.

“முதல்ல நீங்க ஃப்ரீ ஆகுங்க. உன் பிலவ்ட் பொண்டாட்டி பிசியா சுத்திட்டு இருக்கா…” என்றதும்,

“ம்ம்… எனக்கு இன்னும் ரிசல்ட் வர டைம் இருக்கு. சோ நாளைல இருந்து நானும் ஆபிஸ்கு போகலாம்னு இருக்கேன். உனக்கு இங்க எல்லாம் ஓகேவா? அந்த டெல்லி கிளையண்ட், ஏதோ இஸ்யூ ரைஸ் பண்ணிருந்தான்னு மெயில் வந்துச்சே. அது கரெக்ட் பண்ணிட்டியா” என்றவனை விழி விரித்து பார்த்தான்.

“நீ படிச்சுட்டு தானடா இருந்த. இதையெல்லாம் எப்ப பார்த்த?” ஸ்ரீராம் கேட்க,

“என் கண்ணு உங்க ரெண்டு பேர் மேலயும் இருந்துச்சு” என அமர்த்தலாய் உரைத்தவனிடம், “ம்ம் ஒன்னும் பிரச்சினை இல்ல… ஆனா அப்பா தான்…” என யோசனையாய் இழுத்தான்.

“என்னவாம் அவருக்கு?”

“இப்போ அவரோட பிசினஸ் டல்லு போலருக்கு. போற வர இடத்துல எல்லாம் உன்னை தப்பா பேசுறதையே தொழிலா பார்த்துட்டு இருக்காரு. அவருக்கு பைத்தியம் முத்திருச்சுன்னு நினைக்கிறேன்…” என்றதும்,
“விடுடா பாத்துக்கலாம்” என்றான் சத்யா.

“இல்லடா, அவர் இதயாவோட பிசினஸை அடிக்கவும் பிளான் போடுறாரு!” என்றதும் புரட்டிக்கொண்டிருந்த கோப்பை ஒரு நொடி நிறுத்தியவன் பின் மீண்டும் தொடர்ந்து, “பிளான் மட்டும் தான் போட முடியும். எனக்கு அவர்மேல் ரொம்பவே மரியாதை இருக்கு. ஆனா இதயான்னு வரும்போது அந்த மரியாதை இருக்குமான்னு தெரியல. என்னோட கஷ்டமான நேரத்துல தோள் குடுத்துட்டு இப்ப முதுகுல குத்த நினைக்கிறது கஷ்டமா இருக்குடா…” என்று வருத்தமாய் உரைத்தான் சத்ய யுகாத்ரன்.

ஆனால் மறுநொடி, “பட் அவரோட லிமிட் என்கிட்ட வரை மட்டும் தான். இதயா மேல சின்னத் துரும்பு பட்டாலும், நான் பார்த்துட்டு இருக்க மாட்டேன்” என அழுத்தம் திருத்தமாய் உரைத்தான்.

சத்யா கிளம்பியதும், தந்தை விஷயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த ஸ்ரீராமிடம் வந்தாள் பத்மபிரியா.

“ராம் நான் ஒன்னு சொல்லவா?” என ஆரம்பிக்க, “ம்ம் ப்ரியா” என்றான்.

“இப்படி எல்லாத்துக்கும் நீ பெருசா நான் பெருசான்னு இருக்காம, நீ அவர்கிட்ட பொறுமையா பேசு ராம். எந்த பின்புலமும் இல்லாம, ஜெயில் தண்டனை வாங்கிட்டு வந்த சத்யா அண்ணாவை கூட உன் அப்பா பாரபட்சம் பார்க்காம நடத்துனாருன்னு தான சொன்ன. அவர் உள்குத்தோட செஞ்சாரோ என்னவோ, ஆனாலும் பாசம் காட்டுனது நிஜம் தான. விஷயம் கைமீறி போறதுக்குள்ள நீ பேசு ராம்.”

“என்ன பேச சொல்ற பிரியா. எவ்ளோ பேசியும் அவர் புருஞ்சுக்கல… என்னை ஒன்னுக்கும் உதவாதவன்னு அனுப்பி விட்டாரு…” அவன் விழிகள் கலங்கியது.

பத்மபிரியா, அவன் மடியில் அமர்ந்து அவனது கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.

“உன் அப்பா உன்னைத் திட்டுனதே இல்லையா ராம். உன் அப்பா தான பேசுனாரு. அவருக்கு என்ன கோபமோ? நம்ம இவ்ளோ நம்புனோம், நம்ம பையன் நம்ம எதிரி பொண்ணோட உறவாடுறான்ற ஈகோவா இருக்கலாம்ல. ஒரு சிலருக்கு தேவையானது சின்ன புரிதலும் ஆறுதலும் தான். ஒருவேளை அந்தச் சின்னது கூட அவருக்கு தேவைப்படலாம் ராம். இந்த விஷயத்தை காம்ப்ளிகேட் பண்ணுனா உனக்கும் கஷ்டம் சத்யா அண்ணாவுக்கும் கஷ்டம்…

நம்ம மேரேஜ் பண்ணிக்க போறோம்னா, அதுக்கு மாமாவோட சம்மதமும் வேணும் ராம். ஒரு தடவை எனக்காக ட்ரை பண்ணு. அப்படியும் அவர் எந்த தண்ணிலையும் வேகலைன்னா, அவர் விதி அதான்னு விட்டுடலாம்!” என்றதும், “இப்ப என்ன செய்ய சொல்ற என்னை?” என்றான்.

“நம்ம கல்யாண விஷயமா பேசுற மாதிரி போ ராம். அவர் தான் உனக்கு முக்கியம் மாதிரி பேசு. அவர் எதிர்பார்க்கிறது அதுவா கூட இருக்கலாம்ல…” என்றதும், “சரி உனக்காக போறேன்…” என சற்றே இளகினான்.

“ம்ம் இப்ப தான் மூஞ்சி பார்க்கவே நல்லாருக்கு” அவன் கன்னம் கிள்ளிச் சிரித்தவள், “நானும் உன்கூட வரவா ராம்?” எனக் கேட்டாள்.

“வேணாம் பிரியா. அவர் ஏதாவது பேசிட்டா கஷ்டம் ஆகிடும்…” என மறுத்திட,

“அதெல்லாம் ஒன்னும் ஆகாது. என் மாமனார் தான… பேசுனா பேசட்டும். எவன் எவனோ பேசுறதெல்லாம் கேட்டேன். அவர்கிட்ட அவமானப்படுறதுல எனக்கு ஒன்னும் கிரீடம் கழண்டு விழுந்துடாது” என்றவளை இறுக்கி அணைத்துக் கொண்டான் ஸ்ரீராம்.

உடனடியாய் ஒரு வாடிக்கையாளர் சந்திப்பு இருந்ததால், மாலை நேரத்தில் தான் இருவரும் ரவிச்சந்திரனைக் காண சென்றனர்.

எப்போதும் மிடுக்காய் இருப்பவர், அவன் செல்லும்நேரம் எங்கோ வெறித்தபடி சோபாவில் அமர்ந்திருந்தார். நெற்றியெல்லாம் வியர்த்திருந்தது.

அதில் மெல்லப் பதற்றம் எழ, “என்ன டாடி இப்படி உக்காந்துருக்கீங்க? ஆர் யூ ஓகே” என்றான் அவரருகில் சென்று.

“நீ தான் தனியே போறேன்னு போய்ட்டியே. இப்ப என்ன வந்துருக்க?” எப்போதும் இருக்கும் கண்ணுக்கெட்டாத சீறல் இல்லை அவரிடத்தில்.

“நானாவா போனேன். நீங்க தான என்னைத் தண்ணி தெளிச்சு விட்டீங்க?” எனக் கோபமாய் மொழிந்தவன், தன்னை அடக்கிக் கொண்டு, “நான் லவ் பண்றேன். எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க. பிஸினஸ்ல தான உதவாதவன்னு அனுப்பி விட்டீங்க. மகனுக்கு முறையா கல்யாணமாவாச்சு செஞ்சு வைப்பீங்களா?” எனக் கேட்டான் அதிகாரமாக.

அவன் காதலிப்பது அவருக்கு அரசல் புரசலாக தெரிந்தது தான்.

பத்மப்ரியாவை ஏறிட்டுப் பார்த்தவர், பின் “என்ன என்கிட்ட பெர்மிஷன் கேட்கவா வந்த? கல்யாணம் பண்ணிக்கிறேன்னு இன்ஃபார்ம் பண்ண தான வந்த?” என்றார் கண்ணைச் சுருக்கி.

“இன்ஃபார்ம் பண்ணனும்னா கையில பத்திரிக்கையோட வந்துருப்பேன் டாடி!”

அவரிடம் சற்றே தடுமாற்றம் எழுந்தாலும், “நான் முடியாதுன்னு சொன்னா…” என்றார்.

பத்மப்ரியா வேகமாக “வெய்ட் பண்றோம் அங்கிள். எனக்குன்னு யாரும் இல்ல. அட்லீஸ்ட் ராம்காவது அவனோட அப்பா கூட நிக்கணும். கல்யாணத்துல நாங்க ரெண்டு பேருமே அனாதையா இருக்குறதுல எங்களுக்கு விருப்பமில்லை…” என்றதில் அவரிடம் சிறு அதிர்வு.

“அதுக்காக ரெண்டு பேரும் பிரிஞ்சுடுவோம்னு அர்த்தம் இல்ல. அவனை விட்டு நான் போக மாட்டேன் எந்த சூழ்நிலையிலயும்… அதே நேரம் உங்க விருப்பமில்லாம எங்க கல்யாணமும் நடக்காது” என்றவள் தன்னவனையும் விட்டுக்கொடுக்கவில்லை.

அவளது பேச்சில் ஈர்க்கப்பட்ட ரவிச்சந்திரன், “உன்னைக் கல்யாணம் பண்ணி வைக்கிறதுல எனக்கு எந்த பிரச்சினையும் இல்ல. ஆனா அந்தக் கல்யாணத்துக்கு உன் ப்ரெண்டும் இவன் ப்ரெண்டும் வரக்கூடாது… ஓகேன்னா சொல்லுங்க நானே எல்லாம் ஏற்பாடு பண்றேன்” என்றார் அமைதியாக.

அதில் வெடுக்கென எழுந்து விட்ட ஸ்ரீராம், “நாங்க கடைசி வரை லவ்வர்ஸாவே இருந்துக்குறோம். நீங்க வேணும் தான், அதுக்காக அவங்களை இழக்க முடியாது டாடி” என்றான் தீர்மானமாக.

“ஓ! பெத்த அப்பன் வேணாம்னு அவன் பின்னாடி மட்டும் போக முடிஞ்சுது. அப்போ மட்டும் உனக்கு நான் முக்கியமா படலையா?” ரவிச்சந்திரனிடம் ஆதங்கம் மிகுந்தது.

“நீங்க செய்றது சரின்னு பட்டுருந்தா என்ன ஆனாலும் உங்ககூட நின்னுருப்பேன் டாடி… தப்ப அப்பாவே செஞ்சாலும் தட்டிக் கேட்குற மாதிரி தான் நீங்க என்னை வளர்த்துருக்கீங்க…” என்று பந்தை அவர் புறமே எறிந்திட, மகனின் நிதானப்பேச்சு அவரையும் அசைத்தது.

அவனை முறைத்து வைத்தவர், “எல்லாருக்கும் ஃப்ரீ டைம் பார்த்துட்டு சொல்லு. டேட் ஃபிக்ஸ் பண்ணலாம்…” என்றான் மெதுவாக.

அதனை எதிர்பாராதவனாக “டாடி?” என வியப்பாய் பார்த்தான் ஸ்ரீராம்.

“அப்பறம் உன் ப்ரெண்ட்ஸ்ட்ட சொல்லு, இது உனக்காக மட்டும் தான்… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்து என்கிட்ட நிவோராவை ஹாண்ட் ஓவர் பண்றேன்னு சொன்னவங்களுக்காக இல்ல” என்று ஈகோ காட்டினார்.

இருவரும் ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“நிவோராவை ஹேண்ட் ஓவர் பண்றாங்களா யாரு?” ஸ்ரீராம் கேட்க, “கொஞ்ச நேரம் முன்னாடி சத்யாவும் இதயாம்ரிதாவும் வந்தாங்க” என்றார்.

அதில் திகைத்த ஸ்ரீராம் “எதுக்கு?” எனக் கேட்க, “என்னைக் காப்பாத்த” என்றார் மெதுவாக.

சில நிமிடங்களுக்கு முன்னால் நிகந்தது அவரது மனக்கண்ணில் காட்சியானது.

—–

ஸ்ரீராமின் அலுவலகத்தில் இருந்து ஒளிராவிற்கு வந்த சத்ய யுகாத்ரனின் முகத்தில் யோசனை படர்ந்திருந்தது.

“ஹாய் பிரொஃபி” என்ற இதயாம்ரிதாவின் குரல் கூட அவன் செவியைத் தீண்டவில்லை போலும்!

அதற்கு பதில் உரைக்காமல் இருந்ததில், அவனைப் பின்னிருந்து கட்டிக்கொண்டவள், “என்ன இன்னும் எக்ஸாம் மோட் முடியலையா சாருக்கு” என்றாள் கிண்டலாய்.

அதில் சுயநினைவுக்கு வந்தவன், குறுநகை சிந்தியபடி அவளை முன்னிழுத்து தனது கைப்பிடிக்குள் வைத்துக் கொண்டான்.

“என்னாச்சு பிரொஃபி?” அவனிடம் வாகாய் அடங்கியபடி கேட்டாள்.

“ராம் பத்தி தான் யோசிச்சுட்டு இருக்கேன். எனக்காக அவனோட அப்பாவை எதிர்த்து வந்துட்டான். என்ன திட்டினாலும் அவரோட கைப்பிடிக்குள்ள இருந்து பழகுனவன்… அவனுக்காக இந்த பிரச்சினையை ஸ்மூத்தா முடிக்கணும்னு தோணுது இதயா…” என்றான்.

“ம்ம்ம்… புரியுது. நம்ம வேணும்னா பேசிக்கலாமா பிரொஃபி?”

“உனக்கு ஓகே வா?”

“உங்களை அட்டாக் பண்ண ட்ரை பண்ணதுல தான் எனக்கு கோபம். மத்தபடி எனக்கு அவர்மேல் பெர்சனலா எந்த அபிப்ராயமும் இல்ல. பேசிப்பாக்குறதுல எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்ல சத்யா. ஆனா சும்மா போய் பேசுனா சரியாகுற விஷயம் இல்ல. நிவோரா அவரால தான் உருவாச்சுன்னு பினாத்திட்டு இருக்காருல… வேணும்னா அந்த கருமத்தை அவரே வச்சுக்கட்டும். நான் வேணும்னா அதை ஹேண்ட் ஓவர் பண்றேன்… அதை வச்சு அவர் தலையை உருட்டட்டும். நீங்க என்ன சொல்றீங்க?” எனக் கேட்டாள்.

“எப்படியோ அவர் பிரச்சினை முடிஞ்சா சரி தான்…” என்று இருவருமே அவரைப் பார்க்கச் சென்றனர்.

பையனும் விட்டுச் சென்றபின், தொழிலும் சரியத் தொடங்க அதீத அழுத்தத்தில் இருந்தார் ரவிச்சந்திரன்.

போக்கிடம் இல்லாம தன்னையே சுத்தி வந்தவனுங்க, இப்ப என்னையே தூக்கி எறிஞ்சுட்டானுங்க என்ற சீறல் அதிகமாய் இருந்தது.

அந்நேரம் தான் சத்ய யுகாத்ரனும் இதயாம்ரிதாவும் அவரைப் பார்க்க வந்தனர்.

அவர்களைக் கண்டதும் கொந்தளித்த ரவிச்சந்திரனுக்கு ஏற்கனவே தலை சுற்றிக்கொண்டு இருந்தது.

“உன்னை யாருடா உள்ள விட்டது. டேய் வாட்ச்மேன்” என்று கத்த, அவனோ சாவகாசமாய் உள்ளே வந்து சோபாவில் அமர்ந்து கொண்டான்.

“இப்ப எதுக்குப்பா இப்படி கத்திட்டு இருக்கீங்க? பிபி கூடிட போகுது” என்றான் நக்கலாய்.

“எந்திரிடா முதல்ல” அவரது கட்டளைகளை எல்லாம் கணக்கில் எடுக்காமல் தன்னருகில் நின்று கொண்டிருந்த தன்னவளைக் கண்டு “நீ ஏன் நிக்கிற இதயா. ஒருவகைல இதுவும் உனக்கு ஒரு புகுந்த வீடு தான். இல்லப்பா” என்றவனின் பேச்சில் மீண்டும் ஒரு கேலி இழையோடியது.

அதில் திகைத்து விழித்தவருக்கு அதற்கு மேலும் தாக்குப் பிடிக்க இயலாமல் நெஞ்சைப் பிடித்துக்கொள்ள,

“என்னப்பா ஆச்சு?” என வேகமாய் அவரருகில் அமர்ந்து கொண்டான்.

அவருக்கு வியர்த்து வழிந்து கண்கள் சொருக ஆரம்பிக்க, இதயாவிற்கு அவளது தந்தையின் நினைவு வந்து விட்டது.

கண்முன் அவர் உயிர் பிரிந்தது அவளுக்கு ஆழமாய் பதிந்திருக்க, சத்யா பதற்றமாக “இதயா இவரைப்பிடி” என்று விட்டு வேகமாய் அவரது அறைக்கு ஓடினான்.

அவருக்கு தேவையான மாத்திரையை எடுத்து அவருக்குப் புகட்டி விட, “இதயா தண்ணி” என்றதும் அவள் அவசரமாய் நீரைக் கொணர்ந்து கொடுத்தாள்.

“ப்பா… டீப் ப்ரீத் எடுங்க” என்று அவரை மெல்ல ஆசுவாசப்படுத்தியவன்,

“உங்களுக்கு அறிவு இருக்கா இல்லையா… உங்க ஈகோவைப் பிடிச்சு தொங்கிட்டு டேப்லட் எடுக்காம இருக்கீங்க? உங்க பையன் கல்யாணத்தை எல்லாம் பார்க்க வேணாமா? தன் பசங்களோட நல்லத பாக்குற பாக்கியம் எல்லாருக்கும் கிடைக்கிறது இல்லப்பா. இப்ப என்ன உங்களுக்கு நான் விட்டுப்போனது தான கோபம். அதுக்கு என்னை என்ன வேணா பண்ணுங்க. நான் அக்செப்ட் பண்ணிக்கிறேன். அதுக்காக நீங்க உங்களையும் வருத்தி ராமையும் வருத்தாதீங்க…” என்று அதட்டினான்.

இதயாம்ரிதாவும் தான் நிவோராவை அவனுக்கு கொடுப்பதாய் கூற, அவருக்கு ஒன்றுமே விளங்கவில்லை.

அதன்பிறகே தனது மகனின் மனநிம்மதிக்காக இருவரும் தன்முன் வந்து நிற்பது புரிந்தது.

அது அவரை அதிகம் பாதித்ததும் கூட!

இதயாம்ரிதாவோ, “அப்பறம் நீங்க சாகுறதுன்னா… நாங்க வந்த தடையத்தை எல்லாம் அழிச்சுட்டு சாகுங்க. நாங்க வந்த நேரம் நீங்க பாட்டுக்கு போய் சேர்ந்துட்டா, இருக்குற வேலைல கோர்ட்டு கேஸுன்னு மறுபடியும் மொதோ இருந்து அலைய முடியாது” என்று நக்கலாய் கூற, அதில் அவளை முறைத்தார் ரவிச்சந்திரன்.

“சும்மா இருடி” சத்யா சிரிப்பை அடக்கிக்கொண்டு, “வாங்க முதல்ல ஹாஸ்பிடலுக்குப் போகலாம்…” என அவரை எழுப்ப, :தேவையில்லை. என்னை நான் பாத்துப்பேன்…” என்று அமைதியாய் மறுத்தார்.

முன்பிருந்த வெறுப்பு அவரிடம் தற்போது இல்லை. ஒருவித குழப்பத்தில் இருந்தவரை அதற்கு மேலும் வற்புறுத்தாது,” உங்க ஈகோவை ஒதுக்கி தள்ளிட்டு யோசிச்சு பாருங்க… இப்ப வரை நான் உங்களை என் அப்பாவா தான் பாக்குறேன். ஆனா நீங்க என்னை பிளாட்பாரம்ல இருந்து வந்தவனா மட்டும் தான் பாக்குறீங்க” என கசப்பாய் முறுவலித்தவன், இதயாவை அழைத்துக்கொண்டு கிளம்பி விட்டான்.

அவர்கள் மட்டும் சரியான நேரத்திற்கு வரவில்லை என்றால், இந்நேரம் அனாதை பிணமாக வீட்டிலேயே மடிந்திருப்போமென அவருக்கும் புரிந்தது.

ஸ்ரீராம் தான் திகைத்து விட்டான். தனக்கான முயற்சியாக இருவரும் இறங்கி வந்து பேசியதும், நிவோராவை தருவதாக இதயாம்ரிதா கூறியது அவனை நெகிழ்த்தியது.

அதன்பிறகு, ஸ்ரீராம் தந்தையுடன் இருந்து கொண்டான்.

பாரிஸ் எக்ஸ்போ முடிந்ததும் திருமணம் வைத்துக்கொள்ளலாம் எனப் பத்மபிரியா கூறிட, அவனும் ஆமோதித்தான்.

அவர்களை அமைதியாய் ஏறிட்ட இதயாம்ரிதா, “பாரிஸ் எக்ஸ்போவுக்கும் உங்க கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம். இந்த வருஷம் அங்க ரீச் ஆகுறது கஷ்டம் தான். ஆல்ரெடி நான் அனுப்புன ப்ராடக்ட்ஸ், ஆட் எல்லாம் டிஸ்குவாலிஃபைட் பண்ணிட்டாங்க…” என்றதும் சத்யா நிமிர்ந்தான்.

“நீ திரும்ப அனுப்ப வேண்டியது தான?”

“அனுப்புனாலும் ரிஜெக்ட் பண்ணுவாங்க… கொஞ்ச மாசம் முன்னாடி தான நம்ம ப்ரொடக்ஷன் ஆரம்பிச்சோம். மார்க்கெட்ல இன்னும் முழுசா ரீச் ஆகல. சோ, வாய்ப்பு கம்மி தான். நெக்ஸ்ட் டைம் பாத்துக்கலாம் சத்யா” என்றாள்.

“ம்ம்! இன்னும் எவ்ளோ நாள் இருக்கு?”

“த்ரீ மந்த்ஸ்… ஏன்?” இதயா கேட்டதும், “ஜஸ்ட் கேட்டேன். எனக்கும் ரிசல்ட் வர டூ மந்த்ஸ் ஆகும்…” என்றவன், பின் தினந்தோறும் அவளுடன் அலுவலகம் வரத் துவங்கினான்.

“ஏன் பிரொஃபி நீங்களே இப்ப தான் பல எக்ஸாம்ஸ், இன்டெர்வியூவை எல்லாம் முடிச்சு ஃப்ரீ ஆனீங்க. கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்கலாம்ல. அப்பறம் போஸ்டிங் அது இதுன்னு திரும்ப ஓடணும்” என்றாள்.

“ரெஸ்ட் எடுக்க ஒரு லவர் வேணுமே!” குறுநகையுடன் உரைத்தவனை போலியாய் முறைத்தாள்.

அவளுக்கு நின்று பேச கூட நேரம் இல்லை எனப் புரிந்தது. கண்காட்சிக்காக இல்லையென்றாலும், உற்பத்தியை பெருக்கியே ஆக வேண்டிய கட்டாயத்தில் ஓடிக்கொண்டிருந்தாள்.

“நீ முதல்ல ஃபேஸ் வேல்யூக்கு இம்பார்ட்டன்ஸ் தர்றதை நிறுத்து இதயா. நம்ம குவாலிட்டி தான் ரீச் ஆகனும். அது தான் அந்த பிராண்டை ரொம்ப வருஷம் நீடிக்க உதவும்” என்றவன், “மத்த கடைகளுக்கு ப்ராடக்ட்ஸ் கொண்டு போறது ஓகே தான். பட் ஏன் நம்ம சொந்த ப்ராடக்ட்ட விக்கிறதுக்கு ஒரு ஷோ ரூம் ஸ்டார்ட் பண்ண கூடாது?” என வினவினான்.

“ஷோ ரூம் நல்ல ஐடியா தான். ஆனா இப்போ இருக்குற நிலைமைக்கு அது இன்னும் கொஞ்சம் ஸ்ட்ரெஸ் ஆகிடுமே! நிவோராவுக்கே பெரிய அளவுல ஷோ ரூம் தனிப்பட்டு இல்ல. அதுக்குன்னு தனிப்பட்டு தேடி வரவேணாம். கஸ்டமர்ஸ் எந்த பிராண்டட் ஷோ ரூம்ல தேடுனாலும் நம்ம ப்ராடக்ட் கிடைக்கணும்னு என்ன பெத்த ஜென்மம் சொன்னதா ஞாபகம்” என்றாள்.

“ப்ச், அதெல்லாம் அவங்க மெத்தட் ஆஃப் பிசினஸ். அவங்க முழுக்க முழுக்க மார்க்கெட்டிங் நம்பி இருந்துட்டாங்க. நம்ம பொருளை கஸ்டமர்கிட்ட சேக்குறதுல எந்த அளவு இன்டரஸ்ட் காட்டுறோமோ, அதே மாதிரி நம்ம பொருளை தேடி நம்ம இடத்துக்கு வரவைக்கிறதுக்கும் நம்ம இன்டரஸ்ட் காட்டணும் இதயா.

ஒரே வழில தான் போகணும்னு அவசியம் இல்ல.

இப்போ ஜுடியோவே எடுத்துக்கோ. அதுக்குன்னு எங்கயாவது தனிப்பட்டு விளம்பரம் குடுத்தோ, மார்க்கெட்டிங் செஞ்சோ பாத்துருக்கியா? எல்லாமே மக்களையோட எக்ஸ்பீரியன்ஸ். நீ தரத்துல குறைவில்லாம, அதே நேரம் எல்லா டைப் ஆஃப் மக்களும் ஈஸியா வாங்குற மாதிரி ப்ரைஸ் ஃபிக்ஸ் பண்றது ஓகே… அந்த விலை ஓகேன்னு நீ மக்களை ஃபீல் பண்ண வைக்கணும்.”

ஜூடியோ அதை தான் பண்றாங்க. மிடில் க்ளாஸ் மக்களுக்கும் ஒரு ஹை ஃபை ஃபீலிங் தர்ற என்விரான்மெண்ட். ஆனா எங்ககிட்ட சீப்பான ட்ரெஸும் இருக்குனு காட்டுறாங்க.

பத்து ப்ராண்ட் இருக்குற இடத்துல நீ கம்மி விலைக்கு உன் ப்ராடக்ட்டை வச்சா, அது மார்க்கெட்டிங் இல்ல. இது தரம் குறைவா இருக்குறனால தான் கம்மி விலைன்னு மக்கள் நினைப்பாங்க. ப்ராடக்ட்ஸ் வாங்க வர்றவங்க ஒன்னும் கஷ்டத்துல இருக்குறவங்க இல்ல. ஓரளவு ஸ்டேபிளா இருக்குற ஆள்கள் தான். அவங்க விலையை விட, காஸ்ட்லீ ப்ளஸ் பிரீமியம் ஃபீல் தான் எக்ஸ்பெக்ட் பண்ணுவாங்க.

மத்த ப்ராண்ட் ஷோ ரூம்ல நீ ப்ரைஸ அதிகமா வை. உன்னோட ஓன் ஷோ ரூம்ல நீ நினைக்கிற ப்ரைஸ் வை. ஒரு ஹை ஃபை எக்ஸ்பீரியன்ஸ்ல, பொருள் வாங்க மக்கள் ரொம்பவே ஆர்வமா வருவாங்க… ஒரு இடத்துல இல்லாம ஒரே நாள்ல சென்னைல முக்கியமான நாலஞ்சு இடத்துல கடை ஓபன் ஆகணும்” எனப் பேசி முடித்தவனை கண்ணிமைக்க மறந்து பார்த்திருந்தாள்.

“ஆனால் இதெல்லாம் மூணு மாசத்துல நடக்குற காரியம் இல்லைல?”

“வாட் மூணு மாசமா? ஆர் யூ ஜோக்கிங்” என்றதும் அசடு வழிந்தவளிடம், “ஒரு வாரத்துல நடக்கணும்” என்றான் தடாலடியாக.

“என்னது ஒரு வாரமா? இப்ப நீங்க தான் ஜோக் பண்றீங்க” என்றாள் முறைப்பாக.

அதில் மென்னகை புரிந்தவன், “இது ஒன்னும் எனக்கு சட்டுன்னு வந்த ஐடியா இல்ல இதயாம்மா. நான் எக்ஸாம்ஸ்கு படிக்கும்போதே மைண்டுக்குள்ள ஓடிட்டு இருந்துச்சு. அண்ட், நான் படிக்க ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி இருந்தே அகில் கூட வெளில வேலையா அலைஞ்சுட்டு இருந்தேன்ல… அப்பவே, சென்னைல இருக்குற மெய்ன் இடங்கள்ல, ஆல்ரெடி கமெர்ஷியல் ஸ்பேஸ் ரெடியா இருக்குற இடமா தான் தேடிட்டு இருந்தேன்.

ஒரு சில ஷோ ரூம்ல இடம் சேஞ்ச் பண்ண போறதால ஆறு மாசத்துல வேற கடைகளுக்கு ஹேண்ட் ஓவர் பண்ண போறதா சொல்லிருந்தாங்க. அந்த டைம்ல கண்டிப்பா என்னை காண்டாக்ட் பண்ணுங்கன்னு சொல்லி, நான் டோக்கன் அட்வான்ஸ் குடுத்து வச்சுருந்தேன். உங்கிட்ட ஃபண்ட் இருக்கா எதுவும்?” எனக் கேட்டான்.

திருதிருவென விழித்தவள் “இருக்கு… இல்லைனா லோன் அரேஞ்சு பண்ணலாம்!” என்றாள்.

“அதெல்லாம் வேணாம்… நான் கொட்டேஷன் தரேன். நீ ஃபண்ட் ரிலீஸ் பண்ணு. எவ்ளோ இருக்கோ அதுக்குள்ள முடிக்கலாம். தேவைப்பட்டா பாத்துக்கலாம்! இல்லன்னா மினிஸ்டர உள்ள இழுத்து விட்டுடலாம்” என்றான் கண்சிமிட்டி.

“எனக்கு தலை கிர்றுன்னு இருக்கு. இதெல்லாம் ஒர்க் அவுட் ஆகுமா யோசிச்சாலே மண்டை காயிதே” எனப் பாவமாக உரைக்க, “நீ இங்க ஒர்க்க பாரு. ஷோ ரூம் வேலையை நான் பாத்துக்குறேன்” என எழுந்தான்.

“ஆனா சத்யா, ஆல்ரெடி மத்த டீலர்கிட்ட நம்ம மார்க்கெட் ப்ரைஸ் கம்மியா தான் தர்றோம். திடீர்னு விலையை அதிகம் வச்சா கொலாப்ஸ் ஆகாதா?” ஐயமாய் வினவியவளிடம், கண்ணோரம் சுருங்கப் புன்னகைத்தான்.

“சிம்பிள்… இதுவரை செஞ்ச காஸ்மெடிக்ஸ் பேக்கேஜிங்கை ஸ்டாப் பண்ணிட்டு, பிரீமியம் கலர்ல, 25 பெர்ஸன்ட் எஸ்ட்ரான்னு ஒரு டேக் போட்டு, பிளேவர்ஸ் ஆட் செஞ்சு அதே காஸ்மெடிக்கு ஹை ப்ரைஸ் வை! நியூ ரிலீஸ்னு டீலர்ஸும் சைலண்டா வாங்குவாங்க” என்றவனை ‘பே’ வென பார்த்தாள்.

“எங்க சாமி இருந்தீங்க நீங்க?” எனக் கும்பிடு போட்டவளைக் கண்டு அழகாய் புன்னகைத்தவன், “மூணு மாசத்துல பாரிஸ் போறோம்” என்று திட்டவட்டமாகக் கூறி விட்டுச் சென்றதில் அவளுக்கு தலையைப் பிய்த்துக் கொள்ளாத குறை தான்.

 

aduttha epi final dears…

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 67

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
87
+1
1
+1
5

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment