Loading

சாரி போர் தி டிலே நண்பர்களே…. கொஞ்சம் தவிர்க்க முடியாத காரணத்தால் காணாமல் போய்ட்டேன். இன்னும் மூன்று நாட்கள் இருக்கு .  பார்க்கலாம்  அதுக்குள்ள முடிக்க முடியுதா என்று .  சின்ன கதை தான் முடியும்னு நம்பறேன் .

 

பிரபஞ்சம் 4

 

வாழ்க்கை ஏனோ இப்பொழுது எல்லாம் வாழ பிடிக்கிறது. ஆம் வாழ பிடிக்கிறது. இதற்கு முன் அவளின் கடந்த கால கசப்புகள் மட்டுமே அவளை தினமும் துரத்திக்   கொண்டு இருந்தது. தினமும் நரகத்தில் வாழ்வதற்கு பதிலாக சாவதே மேல் என்று பல நாள் நினைத்தது உண்டு. ஆனால் இப்பொழுது அதை கடக்க நினைக்கிறாள். இன்னும் பிரச்சனைகள் அப்படியே தான் இருக்கிறது இருந்தும் மனதில் ஒரு நிம்மதி தைரியம். எதனால் தாம் இப்படி மாறினோம் என்று அந்த காரிருள் முழுகிய இரவில் வெளி திண்ணையில் அமர்ந்து யோசித்துக்கொண்டு இருந்தவள் பார்வை தன்னை போல எதிர்த்த வீட்டை பார்த்தது.

 

பால்கனியில் ஒரு உருவம் நின்று கொண்டு இருப்பது அவளின் கூரிய விழிகளில் விழுந்தது.

 

அங்கே குரு பிரசாத் தன் நண்பர்களுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான். அவனுக்கும் அவள் அங்கே அமர்ந்து இருப்பது மங்கிய மஞ்சள் ஒளியில் தெரிந்தது.  ஆனால் ஏனோ முன்பை போல் அவனால் அவளுடன் பேச முடியவில்லை. கடந்து வந்த பாதையின் தூரமோ அல்ல அவளுக்கே ஆசிரியராக இருக்கும் தன்னிலையோ ஏதோ ஒன்று அவனை தடுத்தது.  

 

பெருமூச்சு ஒன்றை விடுத்தவன் “சாரி ஆரா என்னோ இந்த கண்ணுக்கே தெரியாத கோட்டை தாண்டி என்னால முன்னாடி ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியல. நீயாச்சும் முன்ன மாதிரி என் கூட பேசேன். அப்பயாவது என்னால உன் கிட்ட பேச முடியுதானு பார்க்கணும். பேசிடு ஆரா இந்த குட்டி பட்டாசை ரொம்ப மிஸ் பண்றேன்” என்று இருளில் தெரிந்த அவளிடம் மானசீகமாக பேசிவிட்டு உள்ளே சென்றான்.

 

“இப்ப கூட உங்களுக்கு என் கிட்ட பேச இஷ்டம் இல்ல போல. தினமும் உங்களை பார்க்கிறேன் ஒரே ஒரு நாள் கூட என்னை தெரிந்த மாதிரி நீங்க என்னை பார்த்தது இல்லை. அவ்வளவு தூரம் போயிட்டோம் போல. ஆனாலும் என்னோட பெரிய பலம் நீங்க தான். அதுவே இப்ப தான் இங்க வந்த அப்பறமா உங்களை பார்த்த பின்ன தானே என்னால தெரியுது. உங்க வார்த்தை தான் என்னை இவ்வளவு நாள் நடமாட வெச்சி இருக்கு. நீங்க என் கண்ணு முன்ன இல்லாத அப்பவே உங்க பெயரை சொல்லிட்டே அவ்வளவு பிரச்சனையை கடந்து வந்தவ, இப்ப நீங்க என் முன்னாடியே இருக்கீங்க. இனி பூகம்பமே வந்தாலும் இந்த ஆரா தங்கிப்பா” என்று சிறிய புன்னகையுடன் நினைத்து கொண்டாள். எத்தனை வருடங்கள் கழித்து புன்னகையை காண்கிறது அவளின் இதழ்கள்.

 

அதே நிம்மதியான மனநிலையோடு தூங்க சென்றவள், நள்ளிரவில் பதறி அடித்து எழுந்தாள்.

 

அவளின் சத்தத்தில் அருகே உறங்கி கொண்டு இருந்த பேச்சி “யதே…  என்ன புள்ள என்ன ஆச்சு” என்று பதட்டமாக கேட்க,

 

அதற்குள் தன்னை ஒருவராக சமாளித்து கொண்டு, “ஒன்னும் இல்ல ஆத்தா எதோ கெட்ட கனவு. நீ தூங்கு நான் கொஞ்ச நேரம் வெளியே இருக்கேன்” என 

 

நேரத்தை காண அதுவோ மணி மூன்று என்று காட்ட “இந்த நேரத்தில் தனியாவா,  இரு புள்ள நானும் வரேன்” என 

 

“நீ தூங்கு ஆத்தா நான் பார்த்துகிறேன். கொஞ்ச நேரம் நடந்தா அசதியில் தூக்கம் வரும். உனக்கு என்ன சின்ன வயசுன்னு நினைப்பா தூங்கு நான் பார்த்துகிறேன்” என்று வெளியே வந்தாள்.

 

ஏனோ வந்த கனவை சாதாரணமாக எண்ண தோன்றவில்லை. மறக்க நினைக்கும் முகம், மறக்க துடிக்கும் நினைவுகள் எல்லாமே ஒரு நொடியில் கண் முன்னே நிழல் ஆட,  எதுவும் நினைக்காத ஆதினி,  தப்பாக எதுவும் நினைக்காத, நம்ம எண்ணங்களுக்கு தான் பவர் அதிகம் நல்லதே நினை என்று திரும்பத் திரும்ப அவருக்கே சொல்லிக் கொண்டிருந்தாள்.

 

முன் இரவு தான் அவளிடம் கொஞ்சம் சந்தோசத்தை கொடுத்தது விதி, அதுவே கனவாக வந்து முற்றிலும் வாங்கிக் கொண்டது. அவள் செய்த பிழை தான் என்னவோ???

 

____

 

“என்ன பிரசாத் என்னை மறந்துட்ட போல. இப்ப எல்லாம் நான் உன் நியாபகத்தில் வருவதே இல்ல தானே. எல்லாம் இவளால் தானே. இவ இங்க இருந்து போகணுமா? இல்ல மொத்தமா போகணுமா என்று நீ தான் முடிவு பண்ணனும். இவ தானே உனக்கு முதலில். இவ வேண்டாமே இந்த உலகத்துக்கே இவ வேண்டாம்” என்று ஒரு பெண் ஆணவமாக சொல்ல,

 

“அப்படி எல்லாம் இல்ல” என்று அவன் மறுக்கும் போதே சில அடியாள்கள் ஆதனியை இழுத்துக்கொண்டு சென்றனர், அவள் திமிரளும் மீறி.

 

“குரு… பிளீஸ் ஹெல்ப் மீ” என்று அவள் கதறி கொண்டே இருளில் மறந்து போனாள்.

 

“அம்மா” என்ற விளிப்புடன் அலறி எழுந்தான் குரு பிரசாத்.

 

இதுவரை இப்படி ஒரு கனவு வந்தது இல்லை. அவன் முன்னாள் காதலியை மறந்து வருடங்கள் பல ஆகிறது. இருந்தும் எப்படி, அதுவும் ஆதனிக்கு எதோ பிரச்சனை என்று அதுவரை அவன் கனவை யோசித்து கொண்டு இருந்தவன் பட் என்று படுக்கையை விட்டு எழுந்தான். நேரமோ மூன்று ஐம்பது.

 

வேகமாக பால்கனி கதவை திறந்து வெளியே பார்க்க, அங்கே தான் இன்னும் சோகமாக தன் கால்களை கட்டிக்கொண்டு அமர்ந்து அதில் தன் தலையை சாய்த்து அமர்ந்து இருந்தாள்.

 

அவள் அருகே செல்ல மனம் துண்டினாலும் என்னவோ அப்படி செல்வது சரியில்லை, அதுவும் இந்த நேரத்தில் என்று முளை எடுத்துரைக்க அங்கையே நின்று அவளை பார்த்தவன், அவள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்த பின்னர் தன் உள்ளே உறங்க சென்றான்.

 

இருந்தாலும் உனக்கு இப்படி ஒரு கனவு வந்து இருக்க வேண்டாம் டா. இப்ப எங்க அடியாள் எல்லாம் இருக்காங்க. லாஜிக் இல்லாத கனவு என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டு படுக்க சென்றான்.

 

செமஸ்டர் பரீச்சை தொடங்கி கல்லூரியே பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது.  இன்னும் இரண்டு பரீச்சை தான் பாக்கி.  எதோ நாளை நடக்கும் பரீச்சையில் பல சந்தேகங்கள். கல்லூரியும் செல்லவில்லை. தோழிகள் என்று யாரும் தான் பெரிதாக இல்லையே. பின் அவர்கள் தொலைபேசி எண் மட்டும் எப்படி இருக்கும் அவளிடம்.

 

நேரத்தை பார்த்தாள், அது இன்னும் சிறிது நேரத்தில் தான் ஐந்து ஆக போகிறேன் என்று சொல்லியது. உடனே வெளியே வந்தவள்,

 

“ஆத்தா கொஞ்சம் பாடத்தில் சந்தேகம் இருக்கு. நான் சார் வீட்டில் இருந்தா கேட்டுட்டு வாரேன். கூட வரிய” என

 

“இங்கன இருக்கிற வீடு தானே போய்ட்டு வா புள்ள” என்று இரவு இவளுக்கு பிடிக்கும் என்று அயிர மீன்னை செய்ய சுத்தம் செய்து கொண்டு இருந்தார்.

 

பெரும் தயக்கத்துடன் தான் அந்த வீட்டின் கதவை திறந்தாள். அவர்கள் வீட்டின் பானி அவளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. வெளியே பெரிய கேட். உள்ளே நுழைந்த உடனே ஒரு புறம் கார் போன்ற வண்டிகளை நிறுத்த பார்க்கிங் எரியா அதன் எதிரே முழுவதும் பூ செடிகள்.  பெரிய தோட்டம் இல்லை தான் ஆனால் நேர்த்தியாக கண்ணை கவரும் வகையில் இருக்கும். அதனை கண்களால் வருடிக் கொண்டே உள்ளே வந்தாள்.

 

மாதவி “வா மா” என்றவர் அவள் கையில் இருந்த புத்தகத்தை பார்த்து “இதோ மேல தான் இருக்கான் போய் பாரு” என

 

அவளோ அவரை தயங்கி பார்த்து கொண்டே “இல்ல இங்கவே படிக்கிறேன்” என்று ஹாலில் இருந்த சோஃபாவை காட்ட,

 

“சரி மா. இரு அவனை வர சொல்றேன்” என்று உள்ளே சென்றார். அவர் சொன்ன மாதிரியே சிறிய நிமிடத்திலேயே அவனும் வந்தான்.

 

“சொல்லு ஆரா ஏதாவது சந்தேகமா” என்று அவளின் கையில் இருந்த புத்தகத்தை வாங்க,

 

அவளும் முதலில் தயங்கினாலும் பின் தன் சந்தேகங்களை கேட்டு கொண்டே இருந்தாள்.

 

ஒரு கட்டத்தில் “ஹே பட்டாசே… எப்ப இருந்து இப்படி படிப்பஸ் ஆன. ஒரே கேள்வியா கேட்டு தள்ளுற. கிளாஸில் மட்டும் ஏன் அமைதி” என

 

அதுக்கு பதில் அவளிடம் இருந்து வரவில்லை. அவளை சில நிமிடம் பார்த்தவன் “இரு வாரேன்” என்று வேகமாக தன் அறைக்கு சென்று கையில் எதையோ எடுத்து வந்தான்.

 

பெரிய பெட்டியாக இருக்க அவனை கேள்வியாக பார்த்துக் கொண்டே “என்ன இது” என

 

“இதை எப்படி உன் கிட்ட சொல்றதுன்னு ரொம்ப நாள் யோசிச்சேன். இப்ப சொல்றேன். உனக்கு இதுக்கு அப்பறமா என்ன பண்றது என்ற யோசனை இருக்க” என 

 

அவளோ இல்லை என்று தலையை ஆட்ட, அதை கண்டவன் பெருமூச்சு விட்டு “நீ சிவில் எக்ஸாமிற்கு படுக்க தொடங்கு. உனக்கு அதான் கரெக்ட். இது உனக்காக நான் வாங்குன லேப்டாப். பிரிச்சு பாரு. உன் கிட்ட போன் கூட இல்ல தானே. இதில் படி. இங்க நம்ம வீட்டில் நெட் இருக்கு நீ இங்க வந்து வைஃபை யூஸ் பண்ணிக்கோ. வேற ஏதாவது வேண்டுமா?” என்ற கேள்வியுடன் அவளை பார்க்க,

 

அவளோ அவனையே தான் அதிர்ந்து பார்த்தாள். உண்மையாலுமே அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை தான் அவளுக்கு.  குரு அவர்கள் வீட்டில் இருந்த வரை அவளுக்கு முழு ஆசானே அவன் தான். இப்பொழுது கூட அவள் சொல்லாமலே  அவளின் நிலையை கண்டுக்கொண்டான்.

 

“ஏ புள்ள எழுந்துக்கோ நேரம் ஆச்சு” என்ற பேச்சியின் குரலில் தான் அந்த நாள் விடிந்தது ஆதனிக்கு.

 

“என்ன ஆத்தா இப்ப வந்து எழுப்பற, கொஞ்சம் முன்ன எழுப்பி இருக்க கூடாதா?” என்று வேக வேகமாக கிலம்பிக்கொண்டு இருந்தாள்.

 

எதையோ எடுக்க அலமாரியை திறந்தவள் கை அருகே இருந்த கண்ணாடியில் பட்டு அந்த கண்ணாடி கீழே விழுந்து துள் துள்ளகாக சிதறியது.

 

ஒரு நிமிடம் என்ன நடந்தது என்றே புரியாமல் விழிக்க, பேச்சி தான் “அது தெரியாம விழுந்து கிடக்குது. நீ கிளம்பு புள்ள” என

 

எதையோ யோசித்துக்கொண்டே இருக்க கேட் திறக்கும் சத்தம் கேட்டது. இருவருமே வெளிய வர ஒரு நிமிடம் இருவருக்கும் உலகமே நின்றுவிட்ட அதிர்ச்சி தான்.

 

அங்கே கோணல் சிரிப்புடன் “என்ன கண்ணு ஜெயிலுக்கு போயிருக்கான், இவனுக்கு எங்க தெரிய போகுதுனு நினைச்சியா” என்று சிரிப்புடன் கணேஷ் கேட்க,

 

அவனை சுற்றி நான்கு பேர் நின்று இருந்தார்கள். நால்வரும் அடியார்களைப் போலவே நல்ல உடம்பை வளர்த்து வைத்திருந்தார்கள். 

 

அவர்களைக் கண்ட ஒரு நிமிடத்தில் சித்தம் கலங்கி நின்ற ஆதனி தன் பக்கத்திலிருந்து பாட்டியின் கைகளைப் பற்றிக் கொண்டு  “ஆத்தா…. பயமா இருக்கு எங்கனா போயிடலாமா” என்று  மெதுவாக கேட்க.

 

“என்ன கண்ணு மறுபடியும் என்கிட்ட இருந்து  தப்பிக்க பிளான் போடுகிற மாதிரி இருக்கு, இந்த முறை எந்த பிளானும் செல்லுபடி ஆகாது.  நம்ம வீட்ட பார்த்துக்கொண்டு போலாமா” இன்று அவள் அருகே வந்து அவளின் கைகளை வலுக்கட்டாயமாக பிடித்து அவளின் மறுப்புகளையும் மீறி  இழுத்துச் சென்றான்.

 

“நான் வரமாட்டேன் விடு விடு என்னை நான் வரமாட்டேன்” என்று அவளோ அவன் கைகளை தட்டிக் கொண்டே இருக்க அவனும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இழுத்துக் கொண்டு சென்றான். 

 

“ஐயோ படுபாவி பையன் என் பேத்தி இந்த பாடு படுத்துறானே. யாராவது வாங்கல பக்கத்துல யாராவது இருக்கீங்களா” என்று பதத்துக்கு ஓடு பேச்சு கத்தி கொண்டு இருக்க, 

 

அப்பொழுது தான் கல்லூரி செல்ல தன் வண்டியை வெளியே தள்ளிக் கொண்டு வந்த குரு பிரசாத் கண்கள் இந்த விஷயம் புலப்பட்டது. 

 

“ஹேய்” என்ற சத்தத்துடன் அவன் தன் வண்டியை விட்டு இறங்கி வேகமாக அந்த வீட்டிற்குள் சென்றான். 

 

ஒரு நிமிடம் தான் அவனைக் கண்டவுடன் எங்கிருந்துதான் ஆதனுக்கு அத்தனை பலம் வந்ததோ, தன் கையை பற்றி கொண்டிருந்த கணேஷின் கைகளை உதறி விட்டு குருவின் பின்னே நின்று தன்னை மறைத்துக் கொண்டாள். 

 

ஏய் யார் நீங்கல்லாம் இங்க இருந்து எதுக்கு கலாட்டா பண்ணிட்டு இருக்கீங்க போலீசுக்கு போன் போட்டுமா” என்று குரு அவர்களைப் பார்த்து கோபத்தில் கத்த, 

 

“தோடா ஹீரோ சார் வந்துட்டாரு,  சார்  நீங்க நினைக்கிற மாதிரி அடி தடி பிரச்சனை எல்லாம் இல்ல குடும்ப பிரச்சினை தான் நாங்க பாத்துக்குறோம்” என்று தெனாவட்டாகவே பதில் சொன்னான்.

 

“எதுவா இருந்தாலும் என்ன,  நீங்க இப்படி ஒரு பொண்ணோட கையை பிடிக்கலாம்” என்ற குருவால் இன்னும் தன்  பின்னே பதட்டத்துடன் இன்னும் நடுங்கிக்கொண்டு இருந்தவளை  உணர முடிந்தது.

 

“நீங்க சொல்றதெல்லாம் சரிதான். ஏதோ ஒரு பொண்ணு கையை  புடிச்சா தானே பிரச்சனை. என்  பொண்டாட்டி கையை தானே  நான் பிடிச்சேன். எவன் வந்து என்னை கேட்பான்” என்ற பதிலில் பெரிதும் அதிர்ந்து போனான் குரு பிரசாத்.

 

அதே அதிர்ச்சியுடன் தன் பின்னிருந்த ஆதினியை காண அவளோ  தன் கண் முன்னே நடக்கும் எதையும் கவனிக்காமல்,   எதிலிருந்தோ தன்னைக் காத்துக் கொள்வது போல் காதுகளை இரு கைகளால் இறுக்கமாக மூடிக்கொண்டு இருந்தாள்.

 

குரு பிரசாத் கண்களை இருக்க முடி ஒரு பெருமூச்சு விட்டு கணேசிடம் திரும்பி “சரி உன் பொண்டாட்டியாகவே இருந்துட்டு போகட்டும் இருந்தாலும் ஒரு பொண்ணோட விருப்பம் இல்லாம அவ கையை பிடிக்கிறது ரொம்ப தப்பு இடத்தை காலி பண்றியா இல்ல நான் போலீஸ்க்கு போன் போட்டு உன்னை பிடிச்சி ஜெயில்ல போடட்டுமா”

 

“உனக்கு பயந்து கிட்ட நான் இப்ப கிளம்பல,  இத்தனை நாள் எனக்கு தண்ணி காட்டினாலே, இனி  நான் என்ன பண்ணுவேன்னு பயந்துக்கிட்டே இருக்கட்டும், எதிர் பார்க்காத நேரத்தில் பெருசா பண்றேன் அவரே என்கிட்ட வருவா” என்று திமிராக சொல்லிவிட்டு தன் அடியாட்களை கூட்டிக் கொண்டு சென்றான்.

 

அவன் கிளம்பியதும்,  தன் கைகடிகாரத்தில் நேரத்தை பார்த்தவன் உடனே ஆதனியிடம்  திரும்பி “இதை பத்தி அப்பறமா யோசிக்கலாம். இப்ப நேரம் இல்லை சீக்கிரம் கிளம்பு. இப்ப கிளம்பினால் தான் எக்ஸாம் நடக்கும் முன்னை அங்க  போய்  ரீச் ஆக முடியும். எக்ஸாம் எழுதணும் தானே சீக்கிரம் கிளம்பு” என்று அவளை கிளப்புவதிலே குறியாக  இருக்க, எக்ஸாம் என்ற ஒரு வார்த்தையை அவளை இங்கு நடந்த அனைத்தையும் மறக்கடிக்க வேகமாக எடுத்து வைத்த  கை பையை எடுத்துக்கொண்டு வெளியேறினாள்.

 

“ஆதனி! ஒரு நிமிஷம், இல்லை இப்ப நீ ஆட்டோ பஸ் எதுல போனாலும் லேட் ஆகும். ஒரு நாள் தானே நான் உன்னை காலேஜில் ட்ராப் பண்றேன்.  பாட்டிமா நான் பத்திரமா கூட்டிட்டு போயிட்டு வரேன்.  வந்து என்ன பிரச்சனைனு பார்த்துக்கலாம்” என

 

தன் பாட்டியின் முகத்தை பார்த்தவள், அவரோ கண்களால் சம்மதம் அளித்தவுடன் குருவின் வண்டியில் ஏறி அமர்த்துக் கொண்டாள், சரியான நேரத்திற்கு கல்லூரிக்கும் வந்து விட்டனர்.

 

பதட்டத்துடனே தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு வினாவை எழுதிக் கொண்டிருந்தால் ஆதனி. 

 

இத்தனை தேர்வுகளுக்கு வராத ஃபிளையிங் ஸ்குவாட் இந்த தேர்வுக்கு வந்து, ஒவ்வொரு அறையாக சென்று பரிசோதனை செய்து கொண்டு இருந்தனர்.

 

அவர்கள் அறைக்கும் வந்து ஒவ்வொருவராக பரிசோதனை செய்து கொண்டிருந்தவர்கள் ஆதனியின் அருகே இருந்த ஒரு துண்டு சீட்டை எடுத்து பார்க்க,  அதனைக் கண்டதும் பதறியை விட்டாள்.

 

“சார் இது என்னோடுது இல்லை. நா.. நான் இப்படி எல்லாம் பண்ண மாட்டேன்” இன்று கண்களில் உனக்கு என்று தோன்றிய கண்ணீருடன் சொல்ல, 

 

அதைப் பிரித்துப் பார்த்த ஒரு ஆய்வாளர் “இது எப்படிமா உன்னோடது இல்லாமல் போகும். பாரு ஒரு டென்மார்க் கொஸ்டின் உடைய ஃபுல் ஆன்சர் இருக்கு. எழுந்திரு” என்று அவளின் வினாத்தாளையும் பறித்துக் கொண்டு வேகமாக முதல்வரின் அறையை நோக்கிச் செல்ல,

 

அவர்கள் பின்னே  தான் இதை செய்யவில்லை என்று கெஞ்சிக் கொண்டே சென்றாள் ஆதனி. 

 

அவளை டிபார்ட் செய்வது பற்றிய விவாதங்கள் முதல்வர் அறையில் சென்று கொண்டிருக்க,  எப்பொழுது ஒருவன் கதுவை தட்டி விட்டு உள்ளே வந்தான்.

 

உள்ளே வந்தது வேறு யாருமில்லை குரு பிரசாத் தான். 

 

“இங்க என்ன பிரச்சனை சார்” இன்று அந்த அறையில் இருந்த அனைவரையும் ஒரு முறை பார்த்துவிட்டு,  ஆதனியை ஒரு நொடிக்கும்  சற்று அதிகமாகவே பார்த்துவிட்டு நின்றான்.

 

அவனுக்கு அங்கு நடந்த நிகழ்வுகளை விளக்கப் பட,

 

“எங்க குடுங்க அந்த துண்டுச் சீட்டை” என்று வாங்கிப் பார்த்தவன், பின் ஆதனி எழுதிய விடைத்தாளையும் வாங்கி சற்று நேரம் புரட்டி பார்த்துக் கொண்டிருந்தவன் பின் அங்கிருந்த அவர்களை நோக்கி, 

 

“இது கண்டிப்பா ஆதனியோடது இல்லை” என்று சற்று அழுத்தமாகவே சொன்னான். அந்த அழுத்தத்தில்தான் அத்தனை நம்பிக்கை அவள் மீது. 

 

முதல்வர் “அதை எப்படி குரு நீ இவ்வளவு நம்பிக்கையா சொல்ற” என்றதும்,

 

“இதோ பாருங்க, அவ அல்மோஸ்ட் எல்லா டென்மார்க்ஸ் கொஸ்டினையும் எழுதி முடிச்சுட்டு இருக்கா. இந்த சீட்டில் இருக்கிற ஆன்சர் அவள்  பேப்பரில் இல்ல. சொல்ல போன இதுல இருக்குற கையெழுத்து கூட அவளோட மேட்ச் ஆகல. இதை கூட செக் பண்ணாம ஒருத்தவங்கள எந்த அளவுக்கு இழுத்துட்டு வர கூடாது சார். வேணும் என்றால் நீங்களே செக் பண்ணுங்க” என்றதும் அவர்களும் பலமுறை செக் செய்த பின்னரே அவளை விட்டனர். 

 

தேர்வு முடிந்த பின் அங்கே இருந்த கேண்டினில் குருவிற்கு முன் அமர்ந்திருந்தால் ஆதனி.

 

சற்று கோபமாகவே “உனக்கு பக்கத்துல என்ன இருக்குன்னு கூட பார்க்காம எக்ஸாம் எழுதிட்டு இருந்திருக்க,  கவனத்த எங்க வச்சுக்கிட்டு எழுதுற நான் வந்து பேசலைன்னா மூணு வருஷம் டீபார் ஆகி இருப்ப. உனக்கான ஒரு கஷ்டம் வரும்போது கூட எதிர்த்து பேச முடியாதா” என்று அவளை திட்டிக் கொண்டிருக்கும் அவனையே  பாவமாக பார்த்துக் கொண்டிருந்தாள். 

 

“அது இன்னைக்கு காலைல நடந்த அந்த பிரச்சனைல இருந்து எதையும் யோசிக்க முடியல,  இல்லன்னா நான் பேசி இருப்பேன்” என்றும் மெதுவாக அவனுக்கு கேட்குமா என்று கூடத் தெரியாத அளவுக்கு சொன்னாள்.

 

“எனக்கு கண்டிப்பா தெரிஞ்சாகணும், உனக்கு என்ன பிரச்சனை என்று. ஆனா அது இன்னைக்கு தெரிய வேண்டாம், போய் படி நாளைக்கு தான் கடைசி எக்ஸாம். முடிஞ்ச உடனே நீயே வந்து என்கிட்ட சொல்லு, என் மேல நம்பிக்கை இருந்தா சொல்லு. கண்டிப்பா நான் உனக்கு ஹெல்ப் பண்ணுவேன்” என்று சொல்லிவிட்டு அவன் எழுந்து சென்று விட்டான். 

 

செல்லும் அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவர்களின் மனதில் இருப்பது தான் என்னவோ?

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
8
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்