Loading

அடுத்து வந்த நாட்கள் அதை விட நரகமாகத் தான் கழிந்தன சகுந்தலாவிற்கு.

சகுந்தலா லண்டன் வந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆயிற்று.

ஆனால் அவளின் வாழ்வில் தான் எந்த மாற்றமும் வரவில்லை.

ரிஷிகேஷின் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றன.

ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாமல் வீட்டில் சொல்லி விடலாமா என முடிவு செய்தவள் தனது தாய்க்கு அழைத்தாள்.

“அம்மா… இங்க…” என சகுந்தலா ஆரம்பிக்கும் போதே அவளின் கையில் இருந்த கைப்பேசி பறிக்கப்பட்டது.

சகுந்தலா அதிர்ந்து திரும்ப, அவளுக்கு அருகில் கண்களில் கோபக் கனலுடன் நின்று இருந்தான் ரிஷிகேஷ்.

மறு நொடியே ரிஷிகேஷின் ஐந்து விரல்களும் சகுநத்லாவின் கன்னத்தில் ஆழமாகப் பதிந்தன.

நிலை தடுமாறி கீழே விழுந்தவளின் உதடு கிழிந்து இரத்தம் சிந்தியது.

என்ன செய்வானோ எனப் பயத்துடன் ரிஷிகேஷைப் பார்த்தாள் சகுந்தலா.

அவனோ எதுவும் பேசாது வேகமாக அங்கிருந்து கிளம்பினாள்.

சில மணித்தியாலங்கள் கழிந்து ரிஷிகேஷ் திரும்பி வந்த போது சகுந்தலா அதே இடத்திலேயே அசையாமல் படுத்து அழுது கொண்டு இருந்தாள்.

சகுந்தலாவின் கைப்பேசியை ரிஷிகேஷ் அவளின் அருகில் தூக்கிப் போட, அரவம் கேட்டு கண் விழித்தவள் பயத்துடன் தன் கைப்பேசியைக் கையில் எடுத்தாள்.

அதே நேரம் அவளின் கைப்பேசி ஒலி எழுப்பி தன் இருப்பைக் காட்டியது.

ரிஷிகேஷைப் பார்த்தபடியே அழைப்பை ஏற்று காதில் வைக்க, “அம்மாடி… உங்க அப்பா விடியக் காலைல போனவர் இன்னுமே வீட்டுக்கு வரலம்மா. நைட் ஆகிடுச்சு. ஒரு கால் கூட பண்ணல. அவர் மொபைல் கூட வர்க் ஆகுதில்ல. எனக்கு ரொம்பப் பயமா இருக்குமா. ஆஃபீஸுக்கு கால் பண்ணி கேட்டா அவர் இன்னைக்கு வரலன்னு சொல்றீங்க. எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல.” என மறு முனையில் அழுதார் சகுந்தலாவின் தாய் சரசு.

சகுந்தலா அதிர்ச்சியுடன் ரிஷிகேஷை நோக்க, அவனோ வன்மத்துடன் புன்னகைத்தான்.

“நா.. நான் பார்க்குறேன் மா. நீங்க பயப்படாதீங்க. அப்பா வந்துடுவார்.” என்று விட்டு அழைப்பைத் துண்டித்த சகுந்தலா ரிஷிகேஷை வெறித்தாள்.

அவளின் தாடையை அழுத்தமாகப் பற்றிய ரிஷிகேஷ், “இது வெறும் ட்ரெய்லர் தான். திரும்பவும் என்னை மீறி ஏதாவது செய்ய நினைச்சன்னா மொத்தமா தொலைச்சிடுவேன்.” என மிரட்டினான்.

சகுந்தலா பதில் ஏதும் கூறாமல் ரிஷிகேஷை வெறித்துப் பார்க்க, “சொல்லு… உன் அப்பா உயிரோட வேணுமா? அப்போ இனிமே இங்க இருந்து தப்பிக்கலாம்னு முயற்சி பண்ணுவியா?” எனக் கேட்ட ரிஷிகேஷிடம் கண்ணீருடன் மறுப்பாகத் தலை அசைத்தாள் சகுந்தலா.

“அந்தப் பயம் இருக்கணும்.” என்ற ரிஷிகேஷ் தன் கைப்பேசியை எடுத்து யாருக்கோ அழைத்து ஏதோ கூறினான்.

சற்று நேரத்தில்‌ சகுந்தலாவின் தாய் மீண்டும் அவளுக்கு அழைத்தார்.

ரிஷிகேஷ் கண் காட்டவும் சகுந்தலா அழைப்பை ஏற்க, “சகுந்தலா… உங்க அப்பா வந்துட்டார் மா. கொஞ்ச நேரத்துல உயிரே போயிடுச்சு. வேலை விஷயமா யாரையோ சந்திக்க போன இடத்துல அவர் கூட போனவருக்கு உடம்பு சரி இல்லாம போயிடுச்சாம். தெரியாத ஊர்ல என்ன செய்யன்னு தெரியாம நிற்கவும் அப்புறம் மாப்பிள்ளை தான் அவருக்கு தெரிஞ்சவர் மூலமா உதவி பண்ணி இருக்கார். வீட்டுக்கு தகவல் சொல்லணும்னு கூட இந்த மனுஷனுக்கு தெரியல. மொபைல்ல வேற சார்ஜ் இல்ல.” என்றார் சரசு.

பின் சகுந்தலாவின் தந்தை மாதவனும் சில நிமிடங்கள் பேசி விட்டு ரிஷிகேஷை வார்த்தைக்கு வார்த்தை நல்லவன் வல்லவன் என்று புகழ்ந்து விட்டே அழைப்பைத் துண்டித்தார்.

சகுந்தலாவோ அழைப்பு துண்டிக்கப்பட்டது கூட உணராமல் எங்கோ வெறித்துக் கொண்டு இருந்தாள்.

அவளின் தாடையைப் பற்றி தன் முகம் காண வைத்த ரிஷிகேஷ், “இப்போ புரிஞ்சிருக்குமே நான் சொன்னத செய்வேன்னு. ஆனாலும் எனக்கு இது போதாதே. ரொம்பப் பெரிய தப்பு பண்ணிட்ட நீ. இதுக்காக உனக்கு இன்னைக்கு பெரிய தண்டனை உண்டு.” என்ற ரிஷிகேஷ் அன்று இரவு சகுந்தலாவை மிருகத்தை விட மோசமாக வேட்டை ஆடினான்.

ஆனால் இவ்வளவு நடந்தும் சகுந்தலா உயிரோடு இருப்பது தான் அதிசயம்.

அன்று ரிஷிகேஷ் வேலைக்குச் சென்ற பின் தன் எதிர்காலத்தைப் பற்றி எண்ணியவாறு பால்கனியில் நின்று இருந்தாள் சகுந்தலா.

அந்தப் பிரச்சினைக்குப் பிறகு சகுந்தலாவிற்கு ரிஷிகேஷிற்கு எதிராக ஒரு துரும்பைக் கூட அசைக்கப் பயமாக இருந்தது.

மனதளவிலும் உடலளவிலும் முற்றாகச் சோர்ந்து விட்டாள்.

அப்போது பல நாட்கள் கழித்து அவளின் கைப்பேசிக்கு அழைத்து இருந்தாள் அவளது பள்ளித் தோழி கமலி.

சகுந்தலா யோசனையுடன் அழைப்பை ஏற்றுக் காதில் வைக்க, “சகுந்தலா… எப்படி இருக்க நீ?” எனக் கேட்டாள் கமலி எடுத்ததுமே.

“இருக்கேன்…” என மட்டும் சகுந்தலா பதில் அளிக்க, “உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.” என்றாள் கமலி.

“ம்ம்ம்… சொல்லு.” என்றாள் சகுந்தலா சோர்வாக.

“ஏன் நீ ஒரு மாதிரி இருக்க? ஏதாவது பிரச்சினையா?” எனக் கேட்ட கமலியின் குரலில் பதட்டம்.

ஆனால் சகுந்தலா தான் அதனை உணரும் நிலையில் இல்லை.

“இல்லடி. ஓக்கே தான். ஏதோ பேசணும்னு சொன்ன.” என்ற சகுந்தலாவிடம், “அது… இன்னைக்கு தான் உன் கல்யாண ஃபோட்டோஸ் கிடைச்சி பார்த்தேன்.” என இழுத்தாள் கமலி.

“ஓஹ்…” என்ற சகுந்தலாவிற்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை.

“நான் இப்போ இதை சொல்றது சரியான்னு தெரியல. ஆனா இனியும் சொல்லாம இருந்தா என் மனசாட்சியே என்னைக் கொல்லும்.” எனக் கமலி புதிர் போட்டாள்.

“முதல்ல என்ன விஷயம்னு சொல்லு.” எனக் கேட்டாள் சகுந்தலா குழப்பமாக.

“இதை நீ நம்புவியான்னு தெரியல. நான் உனக்கு கொஞ்சம் ஃபோட்டோஸ் அனுப்புறேன். அதைப் பாரு.” எனக் கமலி கூறவும் கமலி அனுப்பிய புகைப்படங்களைப் பார்த்த சகுந்தலாவிற்கு ஏகத்திற்கும் அதிர்ச்சி.

ஏனெனில் அப் புகைப்படங்களில் ரிஷிகேஷ் சில பெண்களுடன் திருமணக் கோலத்தில் இருந்தான்.

இன்னும் சில ஸ்க்ரீன் ஷாட்ஸும் இருந்தன.

அவற்றில் அப்பாவிப் பெண்களை மிரட்டியும் அவர்களுடன் எல்லை மீறிப் பேசியும் இருந்தான்.

“இ…இது…” என சகுந்தலா வார்த்தைகள் வராது தடுமாற, “ஹீ இஸ் அ சீட்டர். அவன் மட்டும் இல்ல. அவன் குடும்பமே ரொம்ப பெரிய சீட்டர்ஸ். பொண்ணுங்கள கல்யாணம் அப்படிங்குற பெயர்ல ஏமாத்துறதையே ஒரு வேலையா வெச்சிருக்காங்க. அவங்க மெய்ன் டார்கட் எல்லாம் அப்பாவிப் பொண்ணுங்களும் கடன் சுமையுள்ள குடும்பங்களும் தான். சமூகத்துல நல்லவன் வேஷத்துல சுத்துறவன் ப்ரைவேட் கெதரிங்ஸ் வெச்சு பொண்ணுங்கள அவங்களுக்கே தெரியாம வீடியோ எடுத்து அதை டார்க் வெப்ஸுக்கு விற்பான். பெரிய பிஸ்னஸ் பண்ணிட்டு லாஸ்ல, கடனோட இருக்குறவங்கள டார்கட் பண்ணி அவங்க கூட நல்லா பழகி கடன அடைக்க ஹெல்ப் பண்ணுறது போல அந்த பிஸ்னஸ் மேனோட பொண்ண கல்யாணம் பண்ணிப்பான். அவன் நல்லவன்னு நம்பி கண்ண மூடிட்டு அவங்க பொண்ணுங்கள கல்யாணம் பண்ணி வைப்பாங்க. அப்புறம் அந்த பொண்ண செக்ஸுவலா அபியூஸ் பண்ணி, மென்டலி டார்ச்சர் பண்ணி அதை எல்லாம் ரெக்கார்ட் பண்ணி டார்க் வெப்ஸுக்கு விற்பான். அந்த வீடியோஸ பல லட்சம் கொடுத்து ரசிச்சு பார்க்குற மிருகங்கள் எல்லா நாட்டுலயும் நல்லவன் வேஷத்துல சுத்திட்டு தான் இருக்காங்க. இவனால பல பொண்ணுங்க தற்கொலை பண்ணி இறந்து இருக்காங்க. ஆனா நீ கேட்கலாம் ஏன் யாருமே இவன போலீஸ்ல பிடிச்சு கொடுக்கலன்னு. போலீஸுக்கு போனா கூட ஒரு யூஸும் இல்ல. ஏன்னா இவன் தனி ஆள் இல்ல. இவன வெச்சு சம்பாதிக்க ஒரு கூட்டமே இருக்கு. இவன போலீஸ் பிடிச்சுட்டா அவங்களுக்கு லாஸ். அதனாலயே அவனுங்க இவன எந்த கேஸ்லயும் மாட்டாம காப்பாத்திடுறாங்க.” என்றாள் கமலி.

சகுந்தலாவிற்கு ரிஷிகேஷின் இந்தப் பரிமாணம் பயத்தை விளைவித்தது.

“நான் அன்னைக்கு உன் கிட்ட உன் ஃபியான்சி ஃபோட்டோ கேட்டதும் நீ காட்டி இருந்தன்னா நான் அப்போவே உன் கிட்ட சொல்லி இருப்பேன் சகுந்தலா. இப்போ கூட ஒன்னும் பிரச்சினை இல்ல. ஏதாவது காரணம் சொல்லி அவன விட்டு விலகி வந்துடு. ஆனா இதெல்லாம் உனக்கு தெரியும்னு அவனுக்கு காட்டிக்காதே. நிச்சயம் டிவோர்ஸ் தர மாட்டான். குறைஞ்ச பட்சம் அவன விட்டு விலகி இருக்குறது உன் வாழ்க்கைக்கு நல்லது.” எனக் கூறிய கமலி அறியவில்லை ஏற்கனவே அனைத்தும் கை மீறி சென்று விட்டது என்று.

“இதெல்லாம் எப்படி உனக்கு தெரியும்?” எனக் கேட்டாள் சகுந்தலா.

சில நொடிகள் மௌனம் காத்த கமலி, “என் அக்கா இறந்தது உனக்கு தெரியும் தானே.” எனக் கேட்டாள்.

“ஆ..ஆமா…” என்றாள் சகுந்தலா அச்சத்துடன்.

“இவனால பாதிக்கப்பட்டவங்கள்ல என் அக்காவும் ஒருத்தி. எங்க அப்பாவோட பிஸ்னஸ் பார்ட்னரா அறிமுகம் ஆகி எங்க அக்காவ கல்யாணம் பண்ணிக்கிட்டான். எந்தவொரு பொண்ணுக்கும் நடக்க கூடாத அநியாயம் எல்லாம் என் அக்காவுக்கு நடந்துச்சு. அவ வீட்டுல விஷயத்த சொன்னப்போ அப்பா, அம்மா யாருமே அவள நம்பல. அதனால கோவிச்சிக்கிட்டு எங்க கூட பேசுறதையே நிறுத்திட்டா. அப்போ நானும் சின்ன பொண்ணு. ஸ்கூல் தான் போய்ட்டு இருந்தேன். அப்பாவுக்கு பயந்தே நானும் அக்கா கூட பேசல. அவன் தொல்லை தாங்க முடியாம அக்கா போலீஸுக்கு போய் இருக்கா. ஆனா அங்க கூட அவன் ஆட்கள் தான் இருந்து இருக்காங்க. அக்கா கிட்ட நல்லவங்க மாதிரி பேசி அனுப்பி வெச்சிட்டு அந்த ரிஷிகேஷுக்கு கால் பண்ணி சொல்லி இருக்காங்க. அவ கொடுத்த கம்ப்ளைன கூட அவங்க ஃபைல் பண்ணல. வீட்டுக்கு வந்த அக்காவ இதைப் பத்தி கேட்டு ரொம்ப கொடுமை படுத்தி இருக்கான் அவன். அதுக்கு அப்புறம் யாரையுமே நம்ப மனசில்லாம எல்லாத்தையும் பொறுத்து போய் இருக்கா. ஆனா அவ அந்த ரிஷிகேஷுக்கே தெரியாம அவன் இல்லாத நேரமா பார்த்து அவன பத்தி தேடி இருக்கா. அப்போ தான் இந்த ஃபோட்டோஸ் எல்லாம் கிடைச்சிருக்கு. ஆனா என்ன யூஸ்? அவனுக்கு தான் ஆள் பலம் இருக்கே. இது நடந்து ரெண்டு மூணு நாள்ல அந்த ரிஷிகேஷும் அவன் ஃப்ரெண்ட்ஸும் சேர்ந்து அவள ரேப் பண்ணி இருக்காங்க. ஆல்ரெடி வாழவே விருப்பம் இல்லாம இருந்தவ அவனுக்கு பண்ண அநியாயம் தாங்காம அடுத்த நாளே சூசைட் பண்ணிக்கிட்டா. அதுக்கு முன்னாடியே அவ கலெக்ட் பண்ண எல்லாத்தையும் எங்களுக்கு போஸ்ட் பண்ணி இருக்கா. அவ மொபைல்ல இதெல்லாம் சொல்லி ரெக்கார்ட் பண்ணி இருந்தா. அப்போ என் அக்கா கர்ப்பமா வேற இருந்துருக்கா.” என்று கூறிக் கதறினாள் கமலி.

தன் தோழிக்கு ஆறுதல் கூற வேண்டும் என்பது கூட மறந்து அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தாள் சகுந்தலா.

“ஆனா அந்த ரிஷிகேஷ் அவ தற்கொலைய கூட இயற்கையா நடந்த மரணம்னு டாக்டர்ஸ் மூலமா சொல்ல வெச்சிட்டான். அவ ஆல்ரெடி ஃபிசிக்கலி அன்ஃபிட்டா இருந்தத மறைச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு வேற சொன்னான். இந்த ஆதாரம் எல்லாம் கிடைச்சதும் அப்பா போலீஸுக்கு போகத் தயார் ஆனார். ஆனா அம்மா தான் என்னைக் காரணம் காட்டி அவர தடுத்து ஊர காலி பண்ணிட்டு கிளம்புவோம்னு சொன்னாங்க. வேறு வழி இல்லாம நாங்களும் நைட்டோட நைட்டா ஊர விட்டுக் கிளம்பிட்டோம். இன்னைக்கு வரைக்கும் என் அக்காவ நினைச்சி என் அம்மாவும் அப்பாவும் நடைபிணமா சுத்திட்டு இருக்காங்க. ஆனா அவளோட மரணத்துக்கு காரணமானவங்க சந்தோஷமா இருக்காங்க. என் அக்கா நிலைமை உனக்கு வரக் கூடாதுன்னு தான் உடனடியா உனக்கு கால் பண்ணேன். நீயாவது அவன் கிட்ட இருந்து தப்பிச்சிக்க.” என்றாள் கமலி கோபமாக.

சகுந்தலா அவளுக்கு பதில் கூற வாய் திறக்க, அதற்குள் அவளின் காதில் வைத்திருந்த கைப்பேசி பறிக்கப்பட்டது.

சகுந்தலா அதிர்ந்து திரும்ப, அவளுக்கு அருகில் ருத்ரமூர்த்தியாய் நின்று இருந்தான் ரிஷிகேஷ்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
10
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்