Loading

நின்ற இடத்திலேயே வெகுநேரம் அதிர்ச்சியில் வேர் ஊன்றி நின்றிருந்த சகுந்தலா தன்னிலை அடைந்தது பரத்தின் அழுகைக் குரலில் தான்.

“பரத்…” எனக் கத்திக் கொண்டு சிறுவர்கள் விளையாடும் இடத்துக்கு ஓடி வந்தவள் கண்டது என்னவோ பரத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்த ரிஷிகேஷ் தான்.

ரிஷிகேஷ் என்னவோ சொல்லி பரத்தை சமாதானம் செய்ய முயன்று கொண்டிருக்க, அவனை கால்களையும் கைகளையும் அடித்து அடித்து இறக்கி விடும்படி அழுது கொண்டிருந்தான்.

சகுந்தலாவைக் கண்ட பரத் அவளை நோக்கி கரங்கள் இரண்டையும் நீட்டியவாறு பெரும் குரல் எடுத்து அழவும் அவர்களை நெருங்கிய சகுந்தலா ரிஷிகேஷின் பிடியில் இருந்த மகனை இழுத்து எடுத்து அணைத்துக் கொண்டாள்.

“ஷ்ஷ்… அழக் கூடாது. பரத் குட் போய் தானே. அம்மா வந்துட்டேன் கண்ணா. அம்மா வந்துட்டேன். இங்க பாருங்க.” என்றவாறு அழும் சிறுவனை சமாதானப்படுத்த முயன்றாள்.

பரத்தோ சகுந்தலாவின் தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு வீரிட்டு அழுது கொண்டிருந்தான்.

பரத்தின் தொடர் அழுகையில் சகுந்தலாவை பதட்டம் தொற்றிக் கொண்டது.

இதற்கு மேல் இங்கு இருந்தால்‌ பரத்தின் அழுகை மேலும் அதிகமாகும் என்பதால் ரிஷிகேஷை பார்வையாலேயே எரித்து விட்டு அங்கிருந்து கிளம்பினாள் சகுந்தலா.

ரிஷிகேஷோ ஒரு விஷமச் சிரிப்புடன் அவர்களை வெறித்து நோக்கினான்.

டாக்சி பிடித்து வீட்டுக்கு வந்த சகுந்தலா பரத்தை சமாதானம் செய்து உறங்க வைக்கவே போதும் போதும் என்று ஆகி விட்டது.

சகுந்தலாவின் இதயம் வேகமாக அடித்துக் கொண்டு இருந்தது.

அவளது பெற்றோரை சந்தித்தது, அவர்கள் தன்னைப் பேசிய பேச்சுகள் என அனைத்துமே பின் செல்ல, ரிஷிகேஷை பரத்துடன் சேர்த்து வைத்துப் பார்த்து தான் சகுந்தலாவிற்கு மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்தது.

எங்கே ரிஷிகேஷ் தன் மகனைத் தன்னை விட்டுப் பிரிந்து விடுவானோ என அத் தாயுள்ளம் பரிதவித்தது.

சகுந்தலா ஏதேதோ யோசனைகளில் மூழ்கி இருக்க, வீட்டு அழைப்பு மணி ஓசை கேட்கவும் எழுந்து சென்று கதவைத் திறந்தவள் அங்கு ரிஷிகேஷை சுத்தமாக எதிர்ப்பார்க்கவில்லை.

கதவை வேகமாக அடித்துச் சாத்தப் போனவளைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்த ரிஷிகேஷ் தன் பார்வையை சுற்றியும் அலை பாய விட்டான்.

“நீ எதுக்கு இங்க வந்த? மரியாதையே இங்க இருந்து கிளம்பிப் போ. இல்லன்னா போலீஸ கூப்பிடுவேன்.” என்றாள் சகுந்தலா கோபமாக.

அங்கிருந்த இருக்கை ஒன்றில் வாகாக அமர்ந்து கொண்ட ரிஷிகேஷோ, “தாராளமா போலீஸ கூப்பிடு. நானும் சொல்லுவேன் என் பையன பத்தி நீ என் கிட்ட இருந்து மறைச்சி அவன என் கிட்ட இருந்து பிரிச்சி கூட்டிட்டு வந்துட்டேன்னு. இன்னும் சொல்லுவேன் என் பையன் கிட்ட நீ அவன் அப்பா யாருன்னு கூட சொல்லாம அவன அப்பா பாசத்துக்காக தவிக்க விடுறன்னு. அப்புறம் உடம்பு சரியில்லாத பையனுக்கு ஃபினான்ஷியலி அன்ஸ்டபிளான நீ அவனுக்கு சரியான ட்ரீட்மென்ட் கொடுக்க மாட்டேங்குறன்னு. இப்படி சொல்லிட்டே போவேன்.” என்றான் வன்மத்துடன்.

சகுந்தலாவிற்கு அதிர்ச்சியில் சில நொடிகளுக்கு பேச்சே வரவில்லை.

சில நொடிகள் கழித்து தன்னிலை அடைந்தவள், “அது தான் உன் கிட்ட இருந்து டிவோர்ஸ் வாங்கிட்டு மொத்தமா நான் விலகி வந்துட்டேனே. உனக்கு இன்னும் என்ன தான் வேணும்? ஏன் என்னை நிம்மதியா இருக்க விடுறல்ல?” எனக் கேட்டாள் சகுந்தலா கோபமாக.

“ஹஹா… டிவோர்ஸ் வாங்கிட்டா உன்ன அவ்வளவு ஈஸியா விட்டுருவேன்னு நினைச்சியா? நான் வந்ததே என் பையனுக்காகத் தான். அவன என் கூட கூட்டிட்டுப் போகாம நான் இங்ங இருந்து கிளம்பிப் போக மாட்டேன். என்னை எல்லார் முன்னாடியும் அசிங்கப்படுத்தின உன்னையும் சும்மா விட மாட்டேன்.” என மிரட்டினான்.

“உன்னால என் பையன என் கிட்ட இருந்து பிரிக்கவே முடியாது. நான் கோர்ட்டுக்கு போனா கூட சட்டம் என் பக்கத்துக்கு தான் நிற்கும்.” என்றாள் சகுந்தலா சவாலாக.

எவ்வளவு தான் அவளும் ஓடுவாள்? அதனால் தான் பிரிச்சினையை தானே நேராக முகம் கொடுப்பது என முடிவு செய்து விட்டாள் அவள்.

சகுந்தலா கூறியதைக் கேட்டு ஏதோ நகைச்சுவை கேட்டது போல அவ் அறையே அதிரச் சிரித்தான் ரிஷிகேஷ்.

சகுந்தலா அவனைக் குழப்பமாக நோக்க, ரிஷிகேஷ் தன் பாக்கெட்டில் இருந்து எடுத்துக் காட்டிய விடயத்தில் சகுந்தலாவின் தலையில் இடியே விழுந்தது போல் இருந்தது.

தொப்பென தரையில் சரிந்து அமர்ந்து விட்டாள் பெண்ணவள்.

சகுந்தலா திக் பிரமை பிடித்தது போல் அமர்ந்திருக்க, “என்ன என் எக்ஸ் பொண்டாட்டி? அப்படியே வாய் அடைச்சி போய்ட்ட. இப்போ நம்புறியா நான் சொன்னத நிச்சயம் செஞ்சி காட்டேவேன்னு?” எனக் கேட்டான் ரிஷிகேஷ் வன்மமாக.

ரிஷிகேஷின் வார்த்தைகளில் ஆவேசம் கொண்டவளாய் எழுந்து நின்ற சகுந்தலா நொடியும் தாமதிக்காது ரிஷிகேஷின் சட்டையைப் பற்றினாள்.

“ஏன் டா இப்படி பண்ண? ஏன் இப்படி பண்ண? என்னை நிம்மதியாவே இருக்க விட மாட்டியா நீ? ஐயோ… ஏன் தான் எனக்கு மட்டும் இப்படி நடக்குதோ? பாவி பாவி… இப்படி பண்ணிட்டியே. எவ்வளவு பெரிய துரோகம். உனக்கெல்லாம் ஆம்பளன்னு சொல்லிக்க வெட்கமா இல்லையா?” என ஆவேசமாகக் கேட்டவாறு அவனின் கன்னத்தில் மாறி மாறி அறைந்தாள் சகுந்தலா.

ரிஷிகேஷ் சகுந்தலாவின் தோளைப் பிடித்து அவளைத் தள்ளி விட, நிலைதடுமாறி கீழே விழுந்தவளோ தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுதாள்.

கண்கள் மின்ன, வன்மத்துடன் அதனைப் பார்த்து ரசித்தான் ரிஷிகேஷ்.

“ஐயோ… இப்படி ஒரு பாவத்த எனக்கு செஞ்சதுக்கு பதிலா நீ என்னைக் கொன்னே போட்டு இருக்கலாமே. நீ எல்லாம் நல்லா இருப்பியா? நாசமா தான் டா போவ. ஐயோ… நான் இப்போ என்ன பண்ணுவேன்?” எனக் கதறிய சகுந்தலாவிற்கு தன் மீதே கழிவிரக்கம்.

“ஒழுங்கு மரியாதையா பரத் கிட்ட நான் தான் அவன் அப்பான்னு சொல்ற. இனிமே நான் இங்க தான் இருப்பேன். ஆனா இங்க நடக்குற எதுவும் வெளிய தெரியக் கூடாது. ஏதாவது திருட்டுத்தனம் பண்ணி எனக்கு தெரிஞ்சா எப்பவோ போக வேண்டிய உன் புள்ளயோட உசுரு என் கையால போக வேண்டி வரும். அதுவும் உன் கண்ணு முன்னாடி.” என்றான் ரிஷிகேஷ் வாய் கூசாமல்.

“நோ…” எனக் காதை மூடிக்கொண்டு அலறினாள் சகுந்தலா.

அதே நேரம், “மம்மி…” என கண்களைக் கசக்கிக் கொண்டு சிணுங்கிக் கொண்டு உறக்கம் கலைந்து எழுந்து வந்த பரத் முதலில் ரிஷிகேஷைக் கவனிக்கவில்லை.

கீழே விழுந்து கிடந்தவாறே அழுது கொண்டு இருந்த சகுந்தலாவின் மணி மீது ஏறி அமர்ந்தவன், “ஏன் மம்மி க்ரை பண்ணுறீங்க? பரத் ஏதாவது தப்பு பண்ணிட்டேனா?” எனக் கேட்டான் சோகமாக.

அழுது கொண்டிருந்த தாயின் கண்ணீரைத் தன் பிஞ்சு விரல்களால் பரத் துடைத்து விட, துக்கம் தாளாமல் பரத்தை வாரி அணைத்துக் கொண்டு கதறினாள் சகுந்தலா.

“இல்லடா தங்கம். என் பரத் எந்தத் தப்பும் பண்ணல. எல்லாத் தப்பும் அம்மா தான் பண்ணிட்டேன். நான் தான் துரதிஷ்டசாலி.” எனக் கண்ணீர் வடித்த தாயைப் பார்த்து பரத்தும் அழத் தயார் ஆனான்.

அதற்குள் ரிஷிகேஷ் பரத்தைத் தூக்கி எடுக்க, அப்போது தான் அவனைக் கவனித்த சிறுவனோ பயத்தில் கத்தத் தொடங்கினான்.

“மம்மி… மம்மி…” என பரத் அழ, “ஐயோ என் பையன்…” எனக் கத்தியவாறு சகுந்தலா பரத்தை ரிஷிகேஷிடம் இருந்து பறிக்கப் போனாள்.

அவளைப் பார்வையாலேயே மிரட்டிய ரிஷிகேஷ், “பரத் கண்ணா… நான் தான் உன் அப்பா டா. அப்பா வந்து இருக்கேன்.” என்று பரத்தை சமாதானப்படுத்த முயன்றான்.

பரத்தோ அதனைக் காதில் வாங்காது அழுகையைத் தொடர, “ப்ளீஸ் என் கிட்ட கொடுங்க பையன. ரொம்ப அழுறான். அது அவன் ஹெல்த்துக்கு நல்லதில்ல.” என்றாள் சகுந்தலா கெஞ்சலாக.

அவளை சுட்டெரிக்கும் பார்வை பார்த்த ரிஷிகேஷ் கண்களால் பரத்தைக் காட்ட, அவன் சொல்ல வருவதைப் புரிந்து கொண்ட சகுந்தலாவிற்கு அதனைச் செய்யத் தான் மனம் வரவில்லை.

ஆனால் வேறு வழியின்றி, “பரத் கண்ணா… அவர் தான் உன் அப்பா. குட் போய் தானே. அழக் கூடாது.” என்றாள் சகுந்தலா கஷ்டப்பட்டு வார்த்தைகளைக் கோர்த்து.

அதனைக் கேட்டு பரத்தின் அழுகை ஓரளவு குறைந்தது.

இருந்தும் நம்பிக்கை இன்றி ரிஷிகேஷின் முகத்தைப் பார்ப்பதும் சகுந்தலாவைப் பார்த்து அழுவதுமாக இருக்க, “இங்க பாருடா கண்ணா அப்பா உனக்காக நிறைய டாய்ஸ் எல்லாம் வாங்கிட்டு வந்து இருக்கேன்.” என்றான் ரிஷிகேஷ் தான் கொண்டு வந்திருந்த பையைக் காட்டி.

அதனைப் பார்த்து விட்டு பரத் சகுந்தலாவைக் கேள்வியுடன் நோக்க, சகுந்தலா ஆம் எனத் தலை அசைக்கவும் தன் அழுகையை மெதுவாக நிறுத்தினான்.

தயங்கித் தயங்கி ரிஷிகேஷின் முகம் பார்த்த பரத்தைப் பார்த்து ரிஷிகேஷ் புன்னகைக்க, “நிஜமா அப்பாவா?” எனக் கேட்டான் சிறுவன்.

“ஆமா…” எனப் பதிலளித்த ரிஷிகேஷிடம், “அப்போ ஏன் இவ்வளவு நாளா பரத்த பார்க்க வரல நீங்க? பரத் அப்பாவ ரொம்ப மிஸ் பண்ணேன்.” என்றான் பரத்.

பரத்தின் வார்த்தைகளில் சகுந்தலாவிற்கு தன் அழுகையை அடக்க முடியவில்லை.

பரத்தின் தந்தைக்கான ஏக்கம் புரிந்தது அவளுக்கு.

ஆனால் இப்படி ஒரு கேடு கெட்டவனை பரத்தின் தந்தையாக நெருங்கிப் பழக விட நிஜமாகவே அச்சமாக இருந்தது.

“அப்பா ஃபாரின்ல இருந்தேன் டா கண்ணா. அதனால தான் அப்பாவால பரத்த பார்க்க வர முடியல. அது தான் இப்போ வந்துட்டேனே. இனிமே என் பையன விட்டு எங்கேயும் போக மாட்டேன்.” என ரிஷிகேஷ் கூறவும் பரத்தின் கண்கள் சந்தோஷத்தில் மின்னின.

“அப்போ இனிமே பரத்துக்கும் அப்பா இருக்காரா மம்மி? என் ஃப்ரெண்ட்ஸ் போல என்னை பைக்ல எல்லாம் கூட்டிட்டுப் போவாறா? என்னை ஸ்கூல்ல டெய்லி ட்ராப் பண்ணுவாரா?” எனத் தன் ஆசைகளை எல்லாம் அடுக்கினான் சிறுவன்.

சகுந்தலாவால் அதற்கு மேல் தாள முடியாமல் வேகமாக அங்கிருந்து அகன்றாள்.

ஆரம்பத்தில் பரத் அவ்வளவாக ரிஷிகேஷுடன் பழகா விட்டாலும் அதன் பின் வந்த நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கம் ஆகி விட்டான்.

ரிஷிகேஷ் அடிக்கடி விளையாட்டுப் பொருட்கள் கொண்டு வந்தும் பரத் விரும்புவதை எல்லாம் செய்தும் பரத்தின் மனதில் இடம் பிடித்தான்.

ஆனால் சோகம் என்ன என்றால் ரிஷிகேஷ் வந்த பிறகு பரத் முக்கால்வாசி நேரம் அவனுடன் தான் இருந்தான்.

சகுந்தாவுடன் நேரம் செலவிடுவது வெகுவாகக் குறைந்தது.

தாயுள்ளமோ மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் மௌனமாய் கண்ணீர் வடித்தது.

அவளால் துஷ்யந்திடம் கூட எதையும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை.

இப்போது தான் துஷ்யந்திற்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது.

அது தன்னால் கெட வேண்டாம் என நினைத்தாள்.

பரத் தான் இடைக்கிடையே துஷ்யந்திற்கு அழைத்துப் பேசுவான்.

ரிஷிகேஷ் அதனை சந்தேகக் கண்ணுடன் நோக்க, ஏதேதோ கூறி பேச்சை மாற்றினாள் சகுந்தலா.

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்