
கணவனாகப்பட்டவன் இவ்வளவு நாட்களுக்கும் முதல் தடவை அவளது முகம் பார்த்து அப்போது தான் பேசி இருக்க, அதனை ரசிக்க வேண்டிய பெண் மனமோ அவனின் அழுத்தமான, கட்டளை போன்ற அடக்குமுறையான பேச்சில் பெரிதும் ஏமாற்றம் அடைந்தது.
கட்டிய பரையை அடித்துத் தானே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் அவனுடன் தான் இனிமேல் தன் வாழ்வு என ரிஷிகேஷின் கரத்தால் தாலியை வாங்கிய மறு நொடியே முடிவெடுத்து இருந்ததால் நீண்ட பெருமூச்சுடன் அறையைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவளுக்கு அறையின் அலங்காரம் நெஞ்சில் பயப்பந்தை உருளச் செய்தது.
என்ன தான் இத் திருமணத்தை முழு மனதாக ஏற்றுக்கொண்டு இருந்தாலும் திருமணமான முதல் நாளே கணவனுடனான உடலளவு நெருக்கத்தை சகுந்தலாவால் ஏற்க முடியவில்லை.
ரிஷிகேஷ் வந்தவுடன் அவனுடன் மனம் விட்டுப் பேசி தனக்கு இவ் வாழ்வை ஏற்க சற்று அவகாசம் கேட்க வேண்டும் என முடிவெடுத்த பின்னர் தான் அவளால் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.
அதன் பின் தான் அறையில் செய்யப்பட்டு இருந்த அலங்காரங்களை அவளது ரசிக மனதால் ரசிக்க முடிந்தது.
அது பிரத்தியேகமான ஹனிமூன் சூட் என்பதால் புதுமணத் தம்பதிகளுக்கு ஏற்ற விதத்தில் முழு அலங்காரங்களுடனும் அனைத்து வசதிகளுடனும் பளிச்சென இருந்தது அவ் அறை.
பல அடுக்குமாடிகளைக் கொண்ட அவ் ஹோட்டலில் பால்கனி வேறு இருக்க, இயற்கை காற்றை நுரையீரலினுள் உட்சுவாசித்தவாறு வண்ண விளக்குகளால் மின்னிக் கொண்டிருந்த வெளி அழகை ரசித்தாள் சகுந்தாள்.
சற்று நேரம் கழித்து அறைக் கதவு திறக்கப்பட, ரிஷிகேஷ் வந்து விட்டதை உணர்ந்த சகுந்தலா அவனிடம் பேசி ஆக வேண்டும் என்பதால் அவனை நோக்கி நடக்க, உள்ளே வந்த ரிஷிகேஷும் சகுந்தலாவின் முகத்திலிருந்து பார்வையை அகற்றாமல் அழுத்தமான காலடிகளுடன் அவளை நோக்கித் தான் வந்து கொண்டிருந்தான்.
“அது வந்துங்க எனக்கு…” என்ற வார்த்தைகள் மட்டும் தான் சகுந்தலாவின் வாயிலிருந்து வெளி வந்தது.
மறு நொடியே சகுந்தலாவின் முகத்தைப் பற்றி அவளின் வார்த்தைகளைத் தனக்குள் விழுங்கிக் கொண்டான் ரிஷிகேஷ்.
இதனை எதிர்ப்பார்க்காத சகுந்தலா ரிஷிகேஷின் மார்பில் கை வைத்து அவனை விலக்கப் போராடினாள்.
போதாக்குறைக்கு அவனிடம் இருந்து வந்த மது வாடை வேறு அவளை குமட்டச் செய்தது.
சகுந்தலாவின் முயற்சிகள் எல்லாமே விழலுக்கு இறைத்த நீர் போலானது.
ஆடவன் பலத்திற்கு முன்னால் பெண்ணவளின் போராட்டம் எல்லாம் பலமிழந்து போயின.
சகுந்தலாவின் போராட்டம் புரிந்த ரிஷிகேஷ் அவளை மேலும் தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டான்.
நடக்கவிருக்கும் அசம்பாவிதத்தை உணர்ந்த சகுந்தலா எப்பாடுபட்டாவது ரிஷிகேஷிடமிருந்து தப்பிக்க, தன் இரு கரங்களாலும் அவனின் மார்பில் ஓங்கிக் குத்தத் தொடங்கினாள்.
போதையின் பிடியில் இருந்தவனுக்கு சகுந்தலாவின் முயற்சிகள் எரிச்சலூட்டவும் அவளின் இதழ்களுக்கு ஒரு நொடி சட்டென விடுதலை கொடுக்க, மறு நொடியே சகுந்தலாவின் ஐந்து விரல்களும் அவனின் கன்னத்தில் அழுத்தமாகப் பதிந்தது.
ரிஷிகேஷின் உண்மை முகத்தை அறியாத சகுந்தலாவோ பெரும் தவறு செய்து விட, போதை முற்றாக வடிந்து விட, கன்னத்தில் கை வைத்தவாறு அவளை பார்வையாலேயே சுட்டெரித்தான் ரிஷிகேஷ்.
ரிஷிகேஷ் முத்தமிட்டதில் அருவருப்பில் நெளிந்த சகுந்தலா தன் இதழ்களை அழுந்தத் துடைத்தவாறு, “ச்சீ… என்ன மாதிரியான மனுஷன் நீங்க? பொண்டாட்டியா இருந்தாலும் அவ அனுமதி இல்லாம அவ மேல கை வைக்கக் கூடாது. அதுவும் குடிச்சிட்டு வந்து இப்படி நடந்துக்குறீங்க. உங்களுக்கே இது அசிங்கமா இல்லையா?” எனக் கேட்டாள் ஆவேசமாக.
ரிஷிகேஷோ பதிலேதும் கூறாமல் தன் மோக வலைகள் அறுபட்ட கடுப்பில் இன்னுமே அவளை அழுத்தமாகப் பார்த்துக் கொண்டிருக்க, “என் முழு சம்மதத்தோட தான் இந்தக் கல்யாணம் நடந்தது. ஆனா எனக்கு இந்த வாழ்க்கைக்கு தயாராக கொஞ்சம் டைம் வேணும். உடலால நெருங்க முன்னாடி ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சிக்கிட்டு மனசால ரெண்டு பேரும் நெருங்கணும்னு நினைக்கிறேன் நான்.” என்றாள் சகுந்தலா.
அதனைக் கேட்டதும் அவ் அறையே அதிரச் சிரித்த ரிஷிகேஷ், “என்ன டி? பேசி முடிச்சிட்டியா? இப்போ நம்ம வேலையப் பார்க்கலாமா?” என ஒரு மாதிரி குரலில் கேட்கவும், “நான் இவ்வளவு சொல்லியும் திரும்ப அதுக்கே வரீங்க. ச்சே…” எனக் கோபமாகக் கூறியவாறு சகுந்தலா அங்கிருந்து நகர முயல, சட்டென அவளின் கரத்தைப் பற்றி தன்னை நோக்கி இழுத்து அவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் ரிஷிகேஷ்.
அதில் கீழே விழுந்த சகுந்தலாவின் உதடு கிழிந்து இரத்தம் கசிய, ரிஷிகேஷை அதிர்ச்சியாக நோக்கினாள்.
சகுந்தலாவின் அருகே குனிந்து அவளின் தலைமுடியை கொத்தாகப் பற்றிய ரிஷிகேஷ் வலியில் துடித்தவளைக் கண்டுகொள்ளாது, “என்ன டி நானும் பார்க்குறேன் ரொம்பத் தான் பேசுற? உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டது பூஜையறைல வெச்சி சாம்பிராணி பிடிக்கன்னு நினைச்சியா? மனுஷனோட ஆத்திர அவசரம் புரியாம நொய் நொய்னு பேசிட்டு… ச்சே… நானும் கொஞ்சம் நாளைக்கு நல்லவனா நடிக்கலாம்னு தான் பார்த்தேன். ஆனா உன் கிட்ட அதெல்லாம் சரிப்பட்டு வராது போல. ரொம்பத் தான் துள்ளுற. ஆனா உன்ன போல அழகான பொண்ணுங்க இப்படி எல்லாம் சீன் போடலன்னா தான் அதிசயம். இதுவும் நல்லா தான் இருக்கு. ரொம்பத் திமிருற குதிரைய அடக்குறதுல தானே கிக்கே இருக்கு.” என்றான் நக்கலாக.
“விடுடா…” எனக் கத்தியவாறு சகுந்தலா ரிஷிகேஷின் பிடியை விலக்கப் போராட, அவளின் முடியைப் பற்றியவாறு இழுத்துச் சென்று அங்கிருந்த கதிரை ஒன்றில் அவளை அமர்த்திய ரிஷிகேஷ் கட்டிலில் இருந்த போர்வையை இழுத்து சகுந்தலா நகர முடியாதவாறு கதிரையுடன் சேர்த்து அவளை இறுக்கக் கட்டி வைத்தான்.
“ஏய்… விடுடா… என்னப் பண்ணுற?” எனக் கோபமாகக் கேட்ட சகுந்தலா தன்னை விடுவிக்கப் போராட, “என்ன அவசரம் பேபி? கொஞ்சம் வெய்ட் பண்ணு. நீ அடிச்சதுல மொத்தப் போதையும் இறங்கிடுச்சு. சோ நான் போய் ரெண்டு பாட்டில கவுத்திட்டு வரேன். அப்போ தானே ஜாலியா இருக்கும்.” என விஷமமாகப் புன்னகைத்தபடி கூறிய ரிஷிகேஷ் தன் சூட்கேஸில் இருந்து இரண்டு வெளிநாட்டு சரக்கு போத்தல்களை எடுத்து சகுந்தலாவைப் பார்த்துக் கொண்டே அவற்றை மொத்தமாகக் காலி செய்தான்.
ரிஷிகேஷிற்கு போதை தலைக்கேறி உச்சத்தைத் தொட, அடி மேல் அடி எடுத்து வைத்து சகுந்தலாவை நெருங்கினான்.
அவனின் பார்வையில் சகுந்தலாவின் நெஞ்சாங்கூட்டில் நீர் வற்றிப் போனது.
சகுந்தலாவை நெருங்கிய ரிஷிகேஷ் அவளின் கட்டுக்கள் ஒவ்வொன்றாக அவிழ்க்க, அவன் விரல்களோ கட்டுகளை அவிழ்க்கும் சாக்கில் அவள் உடலை நன்றாகவே தீண்டின.
தன் கட்டுக்கள் அவிழ்க்கப்படும் வரை பொறுமை காத்த சகுந்தலா மறு நொடியே ரிஷிகேஷை அறைய ஆவேசமாகக் கரம் நீட்ட, அதனை வாகாகத் தடுத்தவனோ அவளின் கரங்களை முதுகோடு சேர்த்து வளைத்து அசைய முடியாதவாறு தன்னுடன் இறுக்கிக் கொண்டான்.
“வேண்டாம் ரிஷி… விடுங்க… இது ரொம்ப தப்பு…” எனக் கெஞ்சிய சகுந்தலா அவனின் பிடியில் இருந்து விலகப் போராட, போதையில் இருந்தவனின் பிடியோ உடும்புப் பிடியாக இருந்தது.
திமிறியவளின் இதழ்களை தன் இதழ்களைக் கொண்டு அடைத்தவன் ஒரு கரத்தால் சகுந்தலாவின் கரங்களை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டு மறு கரத்தால் அவளின் மாராப்பை விலக்க, சகுந்தலாவோ ரிஷிகேஷைத் தடுக்க முடியாத தன் நிலையை எண்ணி மௌனமாகக் கண்ணீர் வடித்தாள்.
சகுந்தலாவின் இதழ்களை இரத்தம் வரும் அளவுக்கு காயப்படுத்திய ரிஷிகேஷ் சில நிமிடங்கள் கழித்து தான் அவளின் இதழ்களுக்கு விடுதலை கொடுத்தான்.
ரிஷிகேஷ் விட்டதும் நீண்ட பெருமூச்சுக்களை இழுத்து விட்டவள் இன்னுமே ரிஷிகேஷின் பிடியில் தான் இருந்தாள்.
“ப்ளீஸ் ரிஷி… என்னை விட்டுடுங்க.” எனக் கெஞ்சிய சகுந்தலாவை ஏளனமாகப் பார்த்த ரிஷிகேஷோ, “உன்ன சும்மா விடவா கல்யாணம் பண்ணேன். இதுக்கே இப்படி துள்ளுற. இன்னும் நீ பார்க்க வேண்டியது நிறைய இருக்கு.” எனக் குளறலாகக் கூறிய ரிஷிகேஷ் அவளை இழுத்துக் கொண்டு மேசை அருகே சென்றான்.
அவன் குடித்து விட்டு மிச்சம் வைத்திருந்த மதுக் கிண்ணத்தைக் கையில் எடுத்த ரிஷிகேஷ் அதனை ஒரு பார்வை பார்த்து விட்டு சகுந்தலாவை விஷமமாகப் பார்த்தான்.
ஏதோ அசம்பாவிதம் நடக்க இருப்பதை உணர்ந்த சகுந்தலாம் அதிர்ச்சியில் கண்களை அகல விரித்துக் கொண்டு, “வேணாம் ரிஷி… விடுங்க…” என வாயைத் திறந்த மறு நொடியே அவளின் கரங்களை விடுவித்து விட்டு தாடையை இறுகப் பற்றி சகுந்தலாவின் வாய்க்குள் மதுவை சரித்தான்.
ரிஷிகேஷின் நெஞ்சில் கை வைத்து தள்ளி விட முயன்ற சகுந்தலாவோ ரிஷிகேஷ் பருக்கிய மதுவைத் துப்பப் போராட, ஆனால் சகுந்தலாவின் தொண்ணையைத் தாண்டி மது கீழிறங்கும் வரை ரிஷிகேஷ் அவளை விடவே இல்லை.
முதல் முறை அதுவும் பழக்கமே இல்லாத மது உள்ளே சென்றதும் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களால் துவண்டு போயிருந்த சகுந்தலாவிற்கோ தலை எல்லாம் கிறுகிறுத்தது.
இருந்த கொஞ்சம் பலத்தையும் மொத்தமாக இழந்து விட்டவள் ரிஷிகேஷின் கரங்களிலேயே துவண்டு சரிய, ஒரு விஷமப் புன்னகையுடன் அவளை கைகளில் ஏந்திச் சென்று மஞ்சத்தில் கிடத்தியவன் மறு நொடியே சகுந்தலாவின் மானம் போக்க உடுத்தி இருந்த சேலையை வெறி கொண்ட வேங்கையாய் கிழித்து வீசினான்.
கணவனாகப்பட்டவனின் ஈனச் செயலைத் தடுக்கக் கூடத் திராணியற்று அரை மயக்கத்தில் இருந்த சகுந்தலாவோ, “ப்….ளீஸ்… வேணாம்... விட்டுரு…” எனக் கெஞ்சினாள் கண்களில் நீர் வழிய.
அதனைக் கிஞ்சித்தும் கண்டுகொள்ளாத ரிஷிகேஷோ சகுந்தலாவின் இதழ்களை வன்மையாகக் கொய்து அவளின் பெண்மையை முரட்டுத்தனமாக கையாண்டு வென்றான்.
“வ…லிக்கிது… விட்டுரு… ப்…ளீஸ்…” என சகுந்தலா ஒவ்வொரு முறையும் கெஞ்சியது எல்லாம் ரிஷிகேஷின் முரட்டு இதழ்களுக்குள் தான் அடங்கிப் போயின.
மென்மையாகக் கையாள வேண்டிய பெண்மையை வன்மையாக, முரட்டுத்தனமாக, சகுந்தலாவின் மேனி எங்கும் தன் மோக வெறி அடங்கும் வரை அவள் கதறக் கதற தடம் பதித்து விட்டு விடிந்த பின் தான் பெண்ணவளுக்கு விடுதலை அளித்தான் ரிஷிகேஷ்.
விடிய விடிய ரிஷிகேஷ் ஆட்கொண்டதில் சகுந்தலா எப்போதோ முற்றாக சுய நினைவை இழந்திருக்க, அது கூடத் தெரியாது போதையில் இருந்தவன் தன் உடற் பசியைத் தீர்த்துக் கொண்டான்.
மறுநாள் சகுந்தலாவுக்கு நினைவு திரும்பிய போது வலியில் உயிர் போவது போல் இருந்தது.
விடிய விடிய பலமுறை அவளை வன்புணர்வு செய்திருந்தான் ரிஷிகேஷ்.
இமைகளைப் பிரிப்பதே வெகு சிரமமாக இருந்தது.
உடல் முழுவதும் பற் தடங்களும் நகக் கீறல்களும் ஆங்காங்கே இரத்தம் கட்டி நீல நிறத்தில் இருந்தது.
அதன் பின் தான் இரவு நடந்தவைகள் சகுந்தலாவின் மூளையை எட்ட, விட்டத்தை வெறித்துப் பார்த்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது.


மின்னலே என் நெஞ்சிலே - பிரியதர்ஷினி S