Loading

27. நீ நிழலானால் நின்மதுரம் நானாவேன்

மறுநாள் காலை,

“ஏய் கேட்… டைம் ஆகுது பாரு எந்திரி..”என்று கார்முகில் வர்ணன் அன்றைய நாளின் பத்தாவது  முறையாக எழுப்ப,

“ம்ம்ம்”என்ற சத்தத்துடன் திரும்பிப் படுத்தவள் நன்றாக இழுத்துப் போர்த்திக் கொண்டு தூக்கத்தை தொடர்ந்தாள். ‘சரியான பொம்பள கும்பகர்ணனா இருப்பா போல..’ என்று நினைத்தாலும்
திரும்பவும் அவளின் சயனத்தை எழுப்பும் பணியில் ஈடுபட்டான் அவன்… கடமையே கண்ணானவனாக…

“மதுரவாணி… இப்ப எழுந்துக்க போறியா இல்லையா? இல்லனா உன்ன குண்டு கட்டா தூக்கிட்டு போய் ஷவர்ல நிப்பாட்டிடுவேன்” என்றான் மிரட்டல் குரலில்.. இம்முறை அழுத்தமாகவே தான் எழுப்பினான் அவளை.. பின்னே எவ்வளவு நேரம் தான் பொறுமையாக இருக்க முடியும்?

ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவளுக்கோ  தான் இருக்கும் இடம் தெரியாத நிலை அல்லவா! தன்னை எழுப்பிக் கொண்டிருந்தவன் குரல் கேட்டாலும், “உயிர வாங்காத பிளாக்..” என்றவள்,
உலகத்தையே மறந்தவளாக, மெத்தையில் உருண்டாலும் கண்களை இன்னும் திறந்த பாடில்லை.

“உனக்காக ஜெகதீஷ் பிரகதீஷ் ரெண்டு பேரும் ரொம்ப நேரம் வெயிட் பண்றாங்கடா… விட்டா இன்னும் கொஞ்ச நேரத்துல ரூம்க்குள்ள வந்துடுவானுங்க” என்றான். இப்பவாவது விழித்து விட மாட்டாளா? என்றுதான்..

“எனக்கு யாரும் வேண்டாம் போங்கடா”என்றாள் தூக்க கலக்கத்தில்.

“நானுமா?”என்றவனின் குரலில் அப்படி ஒரு ஏக்கம்..

அவளோ தனது உறக்கத்திற்கு தொந்தரவாக தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்த அவனின் பேச்சுக் குரலில் குரலில், ‘பச்ச்’ என்று அதிர்ப்த்தியுடன், மீண்டும் மெத்தையில் அங்குட்டும் இங்குட்டும் உருண்டவள் அவள் அருகில் அமர்ந்திருந்தவனின் மடிக்கு தாவி தலையணை என்று நினைத்து தலைவனை கட்டிக்கொண்டாள்.

சுத்தமாக அவளின் இச்செயலை எதிர்பார்க்காதவன், திகைத்தான்
விழித்தான்… அவளின் நெருக்கமான அணைப்பு அவன் உயிர் வரை சிலிர்க்க வைத்தது.

உண்மையிலேயே நன்றாக தூங்கிக் கொண்டிருந்த மதுராவை அவனுக்கு எழுப்ப மனமில்லைதான்.. ஆனால் காலங்காத்தாலேயே அவளின் அண்ணன்கள் இருவரும் வந்ததோடு இல்லாமல்,
“எங்கடா மது?” என்று சட்டையை பிடிக்காத குறையாக கேட்டவர்களை, அவள் தூங்குகிறாள் என்று சமாளிப்பதற்கு படாத பாடுபட்டு விட்டான். இரண்டு பேரும் மதுராவின் மீது வைத்திருந்த பாசம் இவனின் மீது கோபமாக பாய்ந்தது.  நல்ல வேளையாக மாதேஷ் அங்கு வந்துவிட்டான்.
கூடவே ஷாலினியும்…
மாதேஷ் மூலமாக விஷயம் கேள்விப்பட்டு வந்து விட, அண்ணன் தம்பி இருவரும் ஓரளவிற்கு அடங்கி அமர்ந்தார்கள்.

அவர்கள் இருவரையும் அவர்களுடன் கோர்த்து விட்டு மதுராவை துயில் எழுப்பி வருவதாக சொல்லிவிட்டு வந்தவன் கிட்டத்தட்ட அரை மணி நேரமாக போராடிக் கொண்டிருக்கிறான்.
ஆனால் இவளோ, என்று கீழே குனிந்து பார்த்தான்.
அவனது இடுப்பை கட்டிக்கொண்டு மடியில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த மதுராவின் முகத்தில் சலனமில்லை.

ஒரு நீண்ட பெருமூச்சுடன் அவளின் முன்னெற்றி முடிகளை காதோரம் ஒதுக்கியவன்,
உணர்ச்சி மிகுதியால் அவளின் கன்னத்தில் முத்தமிட, அவன் மீசை குத்தியதில் கொசு கடித்தது போல் அவன் முத்தமிட்ட இடத்தை அடித்து லேசாக சொரிந்தாள். மறுக்கன்னத்தில் முத்தமிட்டால் அதேபோல செய்ய, கடுப்பாகி போனவன்,
‘இவள் சரிப்பட்டு வர மாட்டாள்’ என்ற முடிவுடன், அவளைத் தன் கைகளில் ஏந்தி அவ்வறையில் இருந்த குளியலறைக்குத் தூக்கி சென்றவன் அவளை தன் மீது சாய்ந்தது போல் நிற்க வைத்து ஷவரை திறந்து விட, குளிர் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப சில்லென்று தான் விழுந்தது நீர், அதுவும் சரியாக அவளின் முதுகில் இறங்க, பதறிப்போய் கண் விழித்தாள் மதுரா.

*********************

“இடியட் அவளை எதுக்கு வீட்ட விட்டு போக விட்டா?”என்று எதிர்முனையில் அழுத்தமாய் கேட்ட மாஹித்தின் குரலில் சர்வமும் அடங்கிப் போய் நின்ற வினோதாவின் உடல் வெளிப்படையாய் நடுங்கியது.

“இ‌.இல்..இல்ல சார் அவ இப்படி திடீர்னு முடிவெடுத்து போவான்னு எதிர்பார்க்கல”என்று அந்தப் பக்கம் வினோத அழுக,

“அடச்சீ.. நிப்பாட்டு டி உன்னோட கேவலமான ட்ராமாவ.. அந்த ****ச் மதுராவை கண்டுபிடிச்சு நான் சொல்ற இடத்துக்கு கூட்டிட்டு வா”என்று பல்லை கடித்துக் கொண்டு அவளுக்கு கட்டளையிட்டான் மார்டின் என்னும் மாஹித் மனோகரன்.

“சா..சார்… ஏற்கனவே என் தம்பிகளுக்கு என் மேல லேசா சந்தேகம் வந்துட்டு சார் நான் எ..எப்டி…அவள.. நீங்க எப்படியாவது..”

இந்தப் பக்கம் அதைக் கேட்டவனின் முகமோ கொடூரமாய் மாறியது.
“என்ன பயம் விட்டு போச்சா டி.. நான் நெனச்சா உன்னையும் உன்னோட கருவையும் உரு தெரியாம அழிச்சிடுவேன்! கட்டு கட்டா பணம் வாங்க தெரிஞ்சதுதானே? சொல்றத மட்டும் செய்”

அவன் தன் கருவை உருத்தெறியாமல் அழித்து விடுவேன் என்றதும்
‘ஐயோ என் பிள்ளை!’ என்று மனமும் உடலும் பதறிப்போய்
தனது மேடிட்ட வயிற்றை தடவிக் கொண்டவளோ,
“அவ எங்க இருக்கான்னு விசாரிச்சிட்டு உங்ககிட்ட அழச்சிட்டு வர்றேன் சார்.. எங்கள விட்ருங்க” என்றாள் அவசரமாய்.
“ம்ம்ம் சொன்னது செஞ்சுட்டு பேசு” என்று முணங்கியவன்,
அவளின் பயந்த குரலில் திருப்தியுற்று அழைப்பை துண்டித்தான்.

கை நடுக்கத்தினால் மொபைலை கீழே போட்ட வினோதாவிற்கு அழுகை தாங்கவில்லை.

வினோதாவின் கர்ப்பம் குறித்து தெரிந்ததும் ஆரம்பத்தில் அவளின் புகுந்த வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சிதான் என்றாலும், நாட்கள் போக போக குடும்பத்திற்குள் பல பிரச்சினைகள் ஆரம்பித்தது. மனக்கசப்புகள் மிகுந்தது

அதில் முக்கியமானது அவளின் கணவன் ரூபேஷ் பொறுப்பு இல்லாமல் தந்தை தமையன் உழைத்துக் கொட்டும் காசில் கூச்சம் நாற்றம் இன்றி தன் இஷ்டத்திற்கு எடுத்த செலவு செய்தது தான்.
அதில் வினோதா முழுதாய் நான்கு வருடங்களுக்குப் பிறகு உண்டாகி இருக்க, ரூபேஷ் அவளை தங்க வைர நகைகளால் மனைவியை அலங்கரித்து விட்டான். அதில் அவளுக்கும் சந்தோஷம்தான். ஆனால் தன் உழைப்பு இன்றி ஊர் சுற்றிக்கொண்டு கூட்டுக் குடும்பமாக இருந்த வீட்டில் தமயன் தந்தையின் உழைப்பிலிருந்து சுரண்டி அதை மனைவிக்கு செய்ததுதான் தவறாகி விட்டது. அதில் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கோபம் வார்த்தைகள் தடிக்க தந்தை தமயன் இருவரும் ரூபேஷை குத்திக்காட்டி பேசிவிட,
அவளின் கணவன் ரூபேஷ் தனியாக தொழில் தொடங்குகிறேன் என்று தன் பங்கு சொத்தை பிரித்துக் கொண்டு மனைவிக்கு தெரியாமல் அதை விற்று வேறு தொழிலை ஆரம்பித்து விட்டான்.

அந்த சமயம் வினோதா மசக்கையின் பாதிப்பால் முழுதாக பெட் ரெஸ்ட்டில் இருந்த சமயம் அது… எப்பொழுதும் தன்னிடம் ஒவ்வொன்றையும் கேட்டு செய்யும் கணவன் தொழில் தொடங்கியதை மட்டுமே சொல்லி இருக்க அவளால் எதிலும் தலையிட முடியாத நிலை. அவளைப் பார்ப்பதற்கு கூட மாமியார் தயாராக இல்லை. வினோதா ரொம்பவும் தம்பிகளை தேடிய நேரம் அது. மதுராவை கொல்லும் அளவிற்கு கொலை வெறியை ஏற்படுத்திய நேரமும் அது தான்… பின்ன தான் இங்கு சொந்தங்கள் இல்லாமல் கஷ்டப்படுகின்ற நேரத்தில் மதுரா தனது தம்பிகளுடன் இளவரசி போல் சந்தோஷமாக வாழ்வது அவளுக்கு எத்தனை ஆத்திரத்தை கொடுத்தது.

அதிலேயே பாதிக்கு பாதி கணவனிடம் புலம்பியவள், அவனின் தொழில் பற்றி விசாரிக்காமல் தவறு செய்துவிட்டாள். முழுதாய் மூன்றே மாதங்களில் நம்பியவர்கள் பணத்தை சுருட்டி கொண்டு ஏமாற்ற… முழுதாய் ஏமாற்றப்பட்ட பிறகு சுதாரித்தாலும் தொழிலில் முதலாக போட்ட பணத்தைக்  கூட எடுக்க முடியாமல் நஷ்டமாகி விட்டது.

வீட்டிற்கு தெரியாமல் நஷ்டத்தை சமாளிக்கிறேன் என்று பேர் வழியில் அதற்கு தனியாக பெரிய கைகளிடம் கடன் வாங்க சேராத இடத்தில் சேர்ந்து அதில் இன்னும் மோசமாய் ஏமாந்து கடைசியாக வேறு வழியின்றி வீட்டில் சொல்லும் பொழுது சில லட்சங்களாக இருந்த கடன் கோடிகளைத் தாண்டி போனது.

ரூபேஷ் தந்தையின் காலில் விழுந்து அழுது துடித்து கதறினாலும் அவர் இளகவே இல்லை. அதான் சொத்தை பிரித்துக் கொடுத்தாயிற்றே..! எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று கைவிட்டுவிட, வினோதாவோ கணவனின் முட்டாள் தனத்திலும், இக்கட்டான நேரத்தில் புகுந்த வீட்டினரின் புறக்கணிப்பிலும் மொத்தமாக துவண்டு போனாள்.

விஷயம் கை மீறி போன பிறகு, ஒரே வீட்டில் இருக்கக்கூட அவர்களுக்கு அனுமதி இல்லாமல் போனது.

நான்காவது மாதத்தில் இருந்த வினோதாவை வாடகை வீட்டில் குடியேற்றினான்.
வினோதாவின் நகைகளோடு, அவளின் பேரில் பேரில் அவளது தம்பிகள் எழுதி வைத்துவிட்டு போன சொத்துக்களை விற்றும் அவ்வளவு பணம் தேறவில்லை. கடனை அடைக்க தம்பிகளை கேட்கலாம் என்றாலும் தன்மானம் இடம் கொடுக்கவில்லை. இன்னும் வீட்டை விட்டு வந்ததை கூட தம்பிகளுக்கு அவள் தெரிவிக்கவில்லை. நாள்தோறும் வந்து செல்லும் அடியாட்களிடமும் கடன்காரன்களிடமும் போராட முடியவில்லை இருவராலும்…

எப்படி? எப்படி இவ்வளவு கடனை அடைப்பது என்று
மண்டையை பிய்த்துக்கொள்ளாத நிலையாக கணவன் மனைவி இருவரும் இருந்த போது தான், மாஹித் மனோகரனின் அறிமுகம் கிடைத்தது. அவர்களுக்கு தேவையான பணம் அவனிடமிருந்து ஆனால் அவனுக்கு தேவை? மதுராவாக இருந்தாள்.

நியாயமாக வினோதாவிற்கு அவன் ஏதோ ஒரு பொருளை கேட்பது போல் மதுராவை கேட்டதும் கோபம் தான் வந்திருக்க வேண்டும்.. ஆனால் அவளுக்கு தான் மதுராவின் மீது அத்தனை வெறுப்பும் வஞ்சமும் இருந்ததே!
அவனின் உடன்படிக்கைக்கு வினோத சம்மதிக்க,
ரூபேஷும் மனைவியை தடுக்கவில்லை.
அவர்கள் கேட்ட பணத்தில் பாதி முன் பணமாக கிடைத்தது. இன்னும் பணம் வேண்டுமானால் மதுராவை தனக்கு திருமணம் முடித்து வைக்க வேண்டும் என்று சொல்லிவிட அதற்காகவே திட்டம் போட்டு இங்கே வந்திருந்தார்கள்.

ஆனால் இங்கிருந்து நிலையோ, இருவருமே எதிர்பார்க்காதது. அண்ணன் தம்பி இருவரும் மதுராவை தாங்கு தாங்கென்று தாங்க வினோதாவிற்கு பொறுக்கவில்லை. ரூபேஷ் வெகு நாட்கள் அங்கேயே இருக்க முடியாது கடன்காரர்களிடம் பதில் சொல்ல வேண்டுமே.. இல்லையென்றால் அவர்கள் நீதிமன்றத்தில் அவர்களின் பெயரில் வழக்கு தொடர்வதாக சொல்லி இருக்க, அவர்களை சமாளிப்பதற்காக அவன் மீண்டும் ஊருக்கு கிளம்பி விட, வினோதா மட்டும் மதுராவை ஒப்படைக்கும் பொறுப்பில் இங்கேயே இருந்து கொண்டாள்.

மதுராவின் தாயால்தான் தன் தாயும் தன் குடும்பமும் கஷ்டப்பட்டார்கள் என்று நினைத்து வெறுப்பை வளர்த்துக் கொண்டவளுக்கு மதுரா என்ன தவறு செய்தால்? என்று யோசிக்க முடியவில்லை. தன்னலம் என்ற சுயநலம் மட்டுமே அவளிடம் இருக்க, காலம் அவளுக்கு பாடம் கற்பிக்க காத்திருந்தது.

இங்கோ தன் மேல் சடசடவென்று வேகமாய் மழை நீர் போல் சில்லென்ற நீர் பின்தலையில் விழுந்து முதுகில் இறங்கவும் அலறி அடித்துக் கொண்டு கண்களைத் திறந்த மதுராவிற்கு நேராக சிரித்த முகமாக நின்றான் கார்முகில் வர்ணன்.

“பிளாக்?” என்று  பின்னடைந்தவளுக்கு
உறங்குவதற்கு முன்னால் பின்னலிடாமல் முடிந்து வைத்திருந்த தலைமுடி நீரின் வேகத்தில் அவிழ்ந்து நெற்றியில் விழுந்து முகத்தை மறைக்க, மலங்க மலங்க விழித்தாள் மதுரா.

“தூக்கம் போச்சா?”என்று முன்னெற்றியில் விழுந்த முடியை அவன் காதோரம் ஒதுக்க,
அவளுக்கு ஒரு நொடி ஒன்றும் புரியாத நிலை தான்,

அதன் பிறகு நேற்று நடந்தது எல்லாம் வரிசைக் கட்டி நினைவுக்கு வர, சோர்வாய் விழி மூடித் திறந்தவள் தன் முன்னால் நின்றவனைத் தள்ளி விட்டாள்.

“ஏய்ய்ய்…”என்ற கூவலுடன் கீழே விழப் பார்த்தவன் சமாளித்து நின்று அவளை முறைத்தான்.

“அறிவு இருக்கா உங்களுக்கு இப்டி தான் என்ன நனைய வைப்பீங்களா?”

“இல்ல எனக்கு அறிவு இல்ல நீ தான் கொஞ்சம் கடன் கொடுக்கணும்..”

“ப்ச்ச்… நீ எந்திரி ன்னு சொன்னா எந்திருக்க மாட்டானா? இப்படித்தான் உங்க ஊர்ல எல்லாரையும் எழுப்புவாங்களா?” என்று எரிச்சல் பட்டவளின் தலை முதல் உடை வரை அனைத்தும் தொப்பலாக நனைந்து விட்டிருந்தது. ஷவரின் திருகாணியைத் திருக்கி வந்து கொண்டிருந்த நீரை நிறுத்தினாலும் உடலில் இருந்து வடிந்த நீர் சொட்டு சொட்டாக விழுந்தபடி தான் இருந்தது.

போதாத குறைக்கு உடையும்
இரவு ஆடையாக உடுத்திருந்த வெள்ளை வண்ண காட்டன்-ஷர்ட் முக்கா பேன்ட் சகிதம் தான் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தாள். உணர்ச்சிவசத்தில் இருந்தவளுக்கு உடை மாற்றுவதற்கு ஏது நேரம்?
அதிலேயே தூங்கியிருக்க, இப்பொழுது நனையவும் பளிங்குபோல் உடல் வளைவுகளை காட்ட, கண்ணை அங்கிருந்து பிரித்தெடுக்க முடியாமல் அவன் தான் திணறும்படி ஆகியது.

அவன் பார்வை மாற்றத்தை கவனித்ததும்,
அவனுக்கு புறமுதுகு காட்டி நின்று கொண்டவள்,
“அசிங்கமா பாத்தா கண்ண நோண்டிடுவேன் பிளாக்..”என்றாள் முகம் ஜிவ்வென்று சிவக்க,

“அப்போ என்னோட ப்ராப்பர்ட்டிய நான் பார்க்க கூடாதா?”

“அய்யோவ்வ் ச்சீ…டீசண்டா பேசுங்க … எப்படி எல்லாம் பேசுறீங்க?”

“சரி ஓகே.. நீ என்ன பாத்து திரும்பு.. டீசண்டா பேசுறேன்”

“இது சரிவராது நீங்க வெளியே போங்க ஃபர்ஸ்டு..”

“போக முடியாதுன்னு சொன்னா என்ன பண்ணுவ?”என்ற அவனும் வம்பு பண்ண,

“போயா யோவ்வ்..” என்றாள் திரும்பாமலே..

“ஏய் என்ன மரியாதை குறையுது..”என்ற கோபமாய் கேட்டவனுக்கும் அவளின் உரிமைப் பேச்சு ஏனோ பிடித்து தொலைய கோபமான குரலும் காரம் கம்மியாக தான் வந்தது.

“மரியாதை வேணும்னா அதுக்கேத்த மாதிரி மரியாதையா நடந்துக்கணும்.. இப்படி வில்லங்கம்மா பாக்க கூடாது”என்று அவளும் விடவில்லை..

“ஏன் எனக்கு பாக்க உரிமை இல்லையா?”

“நான் அந்த உரிமைய உங்களுக்கு கொடுக்கலயே”
மதுரா விடாமல் பதிலுக்கு பதில் பேச,

“உன்ன…”என்றவன் ஷவரை திறந்து விட்டான்.

“அச்சோ மீண்டும் மீண்டுமா?”என்று மீண்டும் நனைந்தவள், கோபம் கொண்டாலும் அவனை நோக்கி  திரும்பாமலேயே தன் ஒற்றை கையை நீட்டி நிறுத்த, அவனும் விடாமல் அவளின் தோள் பட்டையை பிடித்து தன் பக்கமாக திருப்ப பார்க்க, அவளோ திரும்பவே மாட்டேன் என்பது போல் சுவற்றில் பல்லி போல் ஒட்டிக்கொண்டாள்.

நீ திரும்பாமல் நானும் நிறுத்த மாட்டேன் என்பது போல் அவன் மீண்டும் ஷவரை  திறக்க, அவள் நிறுத்த என்று இருவரும் வெளியுலகை மறந்த நிலையில் சிறுபிள்ளைத்தனமாக தான் நடந்து கொண்டனர்.

கார்முகில் வர்ணன் தங்கையை அழைத்து வருகிறேன் என்று அறைக்குள் சென்று வெகு நேரம் ஆகியும் திரும்பி வராததால் மாதேஷ் தடுக்க தடுக்க ஜெகதீஷ் பிரகதீஷ் இருவரும்,
“டேய் வெளிய வாடா.. என்னடா பண்ற எங்க தங்கச்சிய..” என்று பிரச்சனை செய்து அந்த தேக்கு கதவை தட்டியே உடைத்து விடுவேன் என்பது போல் தட்டிக் கொண்டிருந்தனர்.

கதவை தட்டும் இல்லை இல்லை உடைக்கும் சத்தம் உள்ளே போர்களமாகிக் கொண்டிருந்த குளியலறை வரை கேட்டது. 

அதுவரை ஏய் மிஸ்டர் கருப்பு.. பிளாக்கு.. போயா வென்று..  என்று குடுமிப்பிடி சண்டை போட்டுக் கொண்டிருந்தவளும்,
“ஆத்தி யாரோ கதவ தட்ற மாதிரி இருக்கே… யாரா இருக்கும் பிளாக்?” என்று தன்னிலை மறந்து தங்களது சண்டையையும் மறந்து திரும்பி நின்றாள்.

கார்முகில் வர்ணனும் “இப்ப திரும்பிட்டியே?” ஒற்றைப் புருவத்தை தூக்கி அவளை மேலும் கீழும் கிண்டலாக பார்க்கவும்,

“ஐயோ ப்ளீஸ் எங்கிட்ட வம்பு பண்ணாம வெளிய போய் யாருன்னு பாருங்க பிளாக்…” என்று அவனின் தோள்பட்டையைப் பிடித்து கதவு நோக்கி தள்ளினாள்.

அப்பொழுது தான் வெளியே பஞ்சாயத்திற்காக நிற்பவர்களின் நினைவும் வர,

“சரி சரி..ரிலாக்ஸ்… நா வெளியே போய் பாக்குறேன்… நீ சீக்கிரம் பிரெஷ் ஆகிட்டு அப்டியே குளிச்சிட்டு வந்துடு… பேஸ்ட், பிரஸ், சோப், பாடி வாஷ், ஷாம்பூ ஃபேஸ் வாஷ் எல்லாமே உள்ளேயே இருக்கு யூஸ் பண்ணாதது தான்” என்றவன் வெளியே வந்து விட்டான்.

அவன் சென்றதும் குளியல் அறையை உள்பக்கமாக பூட்டிக் கொண்டவள், தன்னை சுத்தப்படுத்திக்கொள்ள, கார்முகில் கதவு தட்டுவதை பொருட்படுத்தாமல் மதுராவிற்கு தேவையான ஆடையை அவள் கொண்டு வந்திருந்த ட்ராலியில் இருந்து எடுத்து வைத்தான்.

இங்கோ எவ்வளவு தட்டியும் கதவு திறக்கப்படாததால், அறையின் கதவை உடைக்கும் நோக்கத்துடன் அலங்கார மேஜையில் இருந்த பூக்களை வைத்து நிரப்பி இருந்த பித்தளை ஜாடியை தூக்கிக்கொண்டு பிரகதீஷ் கதவை நோக்கி அடிக்க ஓங்க, ஜெகதீஷ் கூட இது அதிகப்படி என்று “டேய் வேணாண்டா பொறுடா..” என்று அவனை தடுக்க பார்க்க,
“மிஸ்டர் பிரகதீஷ் காம் டவுன் மேன்..” என்று மாதேஷ் பின்பக்கம்மாய் அவனைப் பிடித்து இழுக்க, “என்ன விடுங்கடா என்ன விடுங்க… நான் என் தங்கச்சிய பாக்கணும்” என்று திமிறிக் கொண்டிருந்தான்.

அதுவரை சோபாவில் அமைதியின் திரு உருவாய் அமர்ந்திருந்த  ஷாலினி, பிரகதீஷின் அட்டூழியத்தை பொறுக்க முடியாமல் அவனின் தோள்பட்டையில் தனது ஒற்றைக் கையை மடக்கி ஒரு குத்து குத்தி.. அவன் வலியில் பிடியை தளர்த்திய நேரத்தில் அவன் கையில் இருந்ததை தன் ஒற்றை கையால் பிடுங்கி வீசினாள் அதுவும் மின்னல் வேகத்தில்…

அது உருண்டு விழுந்த வேகத்தில் அவ்விடமே அதிர்ந்தது அவ்வளவு எடை கொண்டதை பிரகதீஷ் கூட இரண்டு கையால் தூக்க முடியாமல் தூக்கி இருக்க, அவளோ சர்வ சாதாரணமாக தன் ஒற்றை கையால் தூக்கி எறிந்திருந்தாள்.

பிரகதீஷ் இப்பொழுது என்ன நடந்தது? என்று யோசிப்பதற்கு முன்பு அத்தனையும் நடந்து முடிந்து இருக்க, ஜெகதீஷ் ஒரு சிறு பெண்ணிடம் இவ்வளவு வேகமா? இவ்வளவு பலமா? என்று ஆச்சரியமும் அதிர்ச்சியும் கலந்து அவளைப் பார்க்க, அவளோ, “ஹொவ் டார் யூ..டாமிட் எவ்வளவு தைரியம் இருந்தா என்னோட வீட்டுக்கு வந்து என்னோட பொருள் மேலேயே கை வைப்ப?”என்று கோபத்தில் பத்திரகாளியாய் கத்தியவள், கோபத்தில் அவனின் சட்டையை பிடிக்க போக,
‘அச்சோ பஞ்சாயத்து பேச வந்த இடத்துல இன்னொரு பஞ்சாயத்தை கூட்டாம இவ விட மாட்ட போலயே..’ என்று பீதியடைந்த
மாதேஷ் தான்,
“ஷாலுமா… பார்த்து பார்த்து பசங்க பதறுறாங்க ல்ல..”என்று அவளை அமைதியாக்க,

அதுவரை அவளை கவனித்துக் கூட பார்த்திடாத பிரகதீஷ், “யாருங்க நீங்க? இது உங்க வீடா?”என்று கேட்டிருந்தான்.

“இட்ஸ் நன் ஆப் யுவர் பிஸ்னஸ் மேன்..”என்று கடித்துக் குதறாத குறையாக பதில் சொன்ன ஷாலினி  முகத்தை திருப்பிக் கொண்டாள்.

மாதேஷும், “முகில் மெசேஜ் பண்ணி இருக்கான்… மதுரா ரெடியாயிட்டு இருக்காங்களாம்.. இன்னும் ஃபிப்டின் மினிட்ஸ்ல வெளியே வந்துடுவாங்களாம்…”

கேட்பதற்கு ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் ஜெகதீஷ் ஏதோ புரிந்தது போல் அமைதியாகி விட,
“மதுரா ரெடியாகிட்டு இருந்தா இவன் எதுக்கு இண்டீசன்டா உள்ளேயே இருக்கான்.. வெளியே வர வேண்டியதுதானே! எவ்வளவு தைரியம் இருந்தா உள்ளேயே இருப்பான் இடியட்” என்று பிரகதீஷ் தான் அவனுக்கும் சேர்த்து குதித்துக் கொண்டிருந்தான்.

“யூ ஷட்டப்..மேன்.. அவங்க ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் மறந்துட வேண்டாம்” என்று ஷாலினி சொன்னதும், வடிவேலு கிங்காங்கை மிரட்டியதும் அது அமைதியானது போல் பிரகதீஷ் அவனையும் மீறி “ம்ம்” என்று அமைதியாகி போனான்.

இங்கோ மதுராவோ குளித்த பிறகுதான் கவனித்தால் அவளுக்கு தேவையான ஆடைகள் எடுத்து வராததை.. டவலோடு அவளுக்கு பழக்கம் இல்லாத வித்தியாசமான பாத் ரோப் ஒன்று ஹேங்கரில் தொங்கிக் கொண்டிருக்க, டவலை எடுத்து மார்போடு கட்டிக் கொண்டவள், உள்ளே இருந்தே, “என்னோட டிரஸ எடுக்கணும் பிளாக்… நீங்க வெளியே போங்க” என்று குரல் கொடுக்க, சத்தமே இல்லை.. சரி வெளியே போய் விட்டான் போல.. என்று இவள் கதவை திறந்து வெளியே வர, மெத்தையில் எல்லாம் தயாராக எடுத்து வைக்கப்பட்டு இருந்தது.

அதைப் பார்த்து பல்லை கடித்தவள்,
“கூச்சமே இல்லாம எல்லாத்தையும் எடுத்து வச்சிருக்கான்‌ எரும பிளாக்”என்று முணுமுணுக்க,
“ஏன்‌ கேட் நா என்னோட வைஃப் டிரஸ்ஸ எடுத்து வைக்க கூடாதா?”என்று அவளின் பின்பக்கம் இருந்து அவனின் குரல் வர, “ஆஆஆ” என்று அலறி
துள்ளிக் குதிக்காத குறையாக மதுரா திரும்ப, பால்கனிக்கு அருகில் கையில் மொபைலுடன் யாருடனோ பேசி முடித்துவிட்டு அப்பொழுதுதான் உள்ளே வந்திருந்தவனின் கண்களும் அவள் நின்ற கோலத்தில் அதிர்ந்து விரிய,
ஏற்கனவே அவன் மீது வைத்திருந்த மரியாதை பாதியாய் குறைந்து போயா வாயாவாகி  இருக்க, இப்பொழுது மிச்சம் மீதம் இருந்ததும் அவளிடமிருந்து பறந்தது.

“ஆஆஆ‌..டேய் வெளியே போடா தடிமாடு.. எரும முட்டாள்.. மூஞ்சுறு.. மூளை கெட்டவனே”என்று கோபத்தில் காச் மூச்சென்று கத்தியவள், மெத்தையில் கிடந்த தனது துப்பட்டாவை விரித்து தனது மேனியை மூடி கொண்டாள்.

“ஹே சாரி சாரி கேட்.. நான் எக்ஸ்பெக்ட் பண்ணல..உள்ள பாத் ரோப் இருந்துச்சே அத கட்டிட்டு வந்து இருப்பேன்னு நினைச்சேன்.. அதனாலதான் வெளியே போகாம உள்ள இருந்தேன்.. அதோட ஒரு முக்கியமான கால் வந்துட்டு அதான் பால்கனியில போய் பேசிட்டு வந்தேன்”

அதற்குள் தன்னை அவன் இந்த கோலத்தில் பார்த்து விட்டானே என்ற அவமான உணர்வில் கண்ணெல்லாம் கலங்கி மூக்கின் நுனி சிவந்து விட,
“போயா உன் கிட்ட நான் பேசவே மாட்டேன்.. நீ வேணும்னே தான் பண்ணி இருக்க”என்றாள் மூக்கை உறிஞ்சி கொண்டே கோபமாய்.

“எப்பவும் பாத் ரோப் கட்டிட்டு டிரெஸ்ஸிங் ரூம்ல வச்சு தான் டிரஸ் சேஞ்ச் பண்ணுவோம்…அதான்..”என்று அவன் விளக்கம் கொடுக்க வர,

“நீ ஒன்னும் சொல்ல வேண்டாம் கருப்பு..”என்று கோபமாய் சொன்னவள் கட்டிலில் கிடந்த அவள் உடை அனைத்தையும் ஒருக்கையால் அள்ளிக்கொண்டு, குளியலறை அருகே இருந்த ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு ஓடிவிட்டாள்.

“எலி சைஸ்ல இருந்துகிட்டு என்னமா சவுண்ட் கொடுக்குறா…”என்று நினைத்தவனுக்கோ, அவளை அந்நிலையில் பார்த்த பாதிப்பாக மூச்சு முட்டியது.

இருந்தும் சூழ்நிலையை புரிந்து தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு, அவளுக்காக காத்திருக்க, மதுராவும் உர்ரென்ற முகத்துடன்  அடுத்த சண்டைக்கு தயாராகி உடைமாற்றும் அறையிலிருந்து வெளியே வந்தாள்.

“அம்மாடி தாயே..  திரும்ப ஃபஸ்ட்ல இருந்து ஆரம்பிக்காத.. என் மேல தான் தப்பு ஒத்துக்குறேன் தெரியாம பாத்துட்டேன்..போதுமா..படுத்தாத..முடியல..”

அப்போதும் அடங்காமல், இடுப்பில் கைவைத்து முறைப்போடு நிற்க,

“உன்னோட பாசமலர்கள் உன்ன பாக்க வந்திருக்காங்க இந்நேரத்துக்கு என்ன வெட்டவா குத்தவான்னு நிப்பானுங்க… வா போய் பாக்கலாம்.. அங்க போய் இதே முறைப்ப காட்டு..” என்று அவளை இழுத்துக் கொண்டு வெளியே வந்தான்.

அதற்குள் எப்படி நான் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து வந்தார்கள் என்று குழப்பத்தோடு அவன் பின்னாலேயே வந்தாள் மதுரா.

ஹாலின் சோபாவில் அமர்ந்திருந்தவர்கள்,
இருவரும் கையை பிடித்தபடி ஒன்றாய் வருவதைப் பார்த்ததும் மாதேஷ் கிண்டலாக கார்முகில் வர்ணனை பார்க்க, ஷாலினி முறைப்பாகத் தான் பார்த்தாள் இருவரையும்…

ஜெகதீஷ் பிரகதீஷ் இருவரும் கார்முகில் வர்ணனை இதற்கு தான் எங்களிடம் இருந்து இவளை அழைத்து வந்தாயா? என்பது போல் அவர்களும் ஒரு பக்கம் தீயாய் முறைக்க, அவனோ, ‘அட நீங்க வேற..போங்கடா’ என்பது போல் பார்த்து வைத்தான்.

மதுரா பிரகதீஷ் ஜெகதீஷ் பக்கம் திரும்பவே இல்லை.

நேற்று அவ்வளவு கேவலமாக பேசிவிட்டு இன்று எதற்கு இங்கே வந்திருக்கிறார்கள் தான் உயிருடன் இருக்கிறேனா? இல்லையா? என்று பார்ப்பதற்காக… என்று உடலும் மனமும் இறுக்கமாகிட முகத்தை திருப்பிக் கொண்டாள்.

ஜெகதீஷ் தான் முதலில் மதுராவிடம் சென்றது. அவளின் கையை பிடித்தவன்,
“ஏய் மது… கோவமா எங்க மேல… “

தன் கையை அவனிடமிருந்து பிடுங்கிக் கொண்டவள்,
“என்ன சார் யார் நீங்க? உங்க மேல கோபப்படறதுக்கு நான் யாரு?” என்று முகத்தை திருப்ப,
ஜெகதீஷ் சொல்லிவிடவா? என்பது போல் கார்முகில் வர்ணனை பார்த்தான். அவனோ வார்த்தைகளை விட்டது நீங்கள் தானே? உன்னுடைய இஷ்டம் என்பது போல் நிற்க,

அதற்குள்
பிரகதீஷ் மதுராவின் கையை பிடித்துக் கொண்டான்.
மதுரா ஜெகதீஷ் அளவிற்கு கூட பிரகதீஷிடம் வாயை திறக்கவில்லை முகத்தை கூட பார்க்காமல் திருப்பிக் கொண்டாள். அதை தாங்க முடியாதவனாய்,
“குட்ட இங்க பாரேன்… சாரி நான் அப்படி பேசி இருக்க கூடாது.. அந்த சிச்சுவேஷன்ல எனக்கு அவ்ளோ கோபம் வந்துட்டு… என் நாக்குல சனி வந்து உட்கார்ந்துட்டார்… உன்ன ரொம்ப ஹர்ட் பண்ற மாதிரி பேசிட்டேன்ல.. ப்ளீஸ் டா.. அதுக்கு நீ எவ்வளவு பெரிய தண்டனை வேணாலும் கொடு ஏத்துக்குறேன் பேசாம மட்டும் இருக்காத.. நான் பாவம்ல..நா உன் செல்ல பிரக்கு தான?” என்று அவளிடம் செல்லம் கொஞ்சி.. சிறுபிள்ளை போல் கெஞ்சலாக பேச,

கதவு திறக்கப்படவில்லை என்றதும் புலியாக பாய்ந்து கதவை உடைப்பதற்கு குண்டானை தூக்கியதையும், கொஞ்சம் கூட யோசிக்காமல் அனைவரின் முன்னிலையிலும்
தனி அறையில் இவன் எதற்கு என் தங்கையுடன்  இருக்கிறான்? என்று அருவாளை தூக்காத ஐயனாராக அவன் செய்த அத்தனை அட்டூழியத்தையும் பார்த்துக் கொண்டிருந்த ஷாலினியோ, அவனின் இந்த குழந்தைத்தனமான அவதாரத்தில், ‘அய்ய சகிக்கல..’ என்பது போல் கண்களை சுருக்கி ‘வ்வக்’ வாயைக் குவித்தாள் செய்கையாய்..

மாதேஷிற்கும் பிரகதீஷின் பாவப்பட்ட முகத்தைப் பார்த்து சிரிப்புதான் வந்தது.

ஆனால் பிரகதீஷ் எவ்வளவு கெஞ்சியும் மதுரா வாயைத் திறக்கவில்லை. அவளுக்கு மனம் எல்லாம் பொடு பொடுவென்று என்று வந்தது.
நேற்று அவர்கள் பேசிய வார்த்தைகள் உள்ளுக்குள் கனன்றது.
எப்படி எல்லாம் பேசி விட்டார்கள்?
இப்பொழுது வந்து கெஞ்சினால் இவளும் மன்னித்து விட வேண்டுமா?

ஜெகதீஷிற்கு அவளின் மனநிலை புரிந்தது.

“இங்க பாருடா மது
உன்ன அந்த வீட்ல இருந்து அனுப்புறதுக்கு.. எங்களோட சடன் பிளான் தான் அது.. சந்தேக வராம உன்ன வெளில அனுப்பனும்னு தான் பிரகதீஷ் கிட்ட கூட நான் எதுவும் சொல்லல.. நானும் அவன் கூட சேர்ந்து பேச வேண்டியதா போச்சு..”

“ஏன்?”என்ற கேள்வி கண்களில் தொக்கி நிற்க
மதுரா குழப்பமாய் அவனைப் பார்த்தாள்.

தொடரும்..

மன்னிச்சு..கொஞ்சம் லாங் கேப் ஆகிட்டு… போன அத்தியாயத்திற்கு விருப்பங்களும் கருத்துக்களும் தெரிவித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்🙂♥️

மிஸ்டேக்ஸ் இருந்தா சொல்லுங்க திருத்திக்கிறேன்…

@shadowhero

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
31
+1
1
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. பிராக்கு ஜெக்கு செம. பிளாக் மது கியூட்
      . ஷாலினி மாதேஷ் சூப்பர்.