22. நீ நிழலானால் நின்மதுரம் நானாவேன்
என்னவோ அவனை வெறுப்பேற்ற வேண்டும் என்று எனக்கு திருமணமாகப் போகிறது என்னிடமிருந்து விலகி நில் என்று சொல்லி வைக்க, அதைக் கேட்டவனின் முகம் போன போக்கை பார்த்து
மகிழ்ச்சியாக இருப்பது போல் நினைத்தாலும் உள்ளுக்குள் புரியாத வெறுமையை தான் உணர்ந்தாள்.
பின்னே, அவர்கள் உறவுக்குள் எந்த வித தெளிவும் இல்லையே!
அவனும் முழு உண்மையை சொல்ல வில்லை… இவளும் சொல்வதை கேட்கும் நிலையில் இல்லை.. இருவரும் எதிரும் புதிருமாக இருக்க, ஏற்கனவே அவன் மீது பயங்கர குற்றசாட்டில் மனதிற்குள் அவனை விலக்கி வைக்க போராடிக் கொண்டிருந்தவளை
இவனும் விளையாடுகிறேன் என்ற பெயரில் அடைத்து வைத்து அவன் மீதிருந்த கோபத்தை தூண்டி விட்டது மட்டுமின்றி அவனிடம் பதிலுக்கு பதில் பேசியவளை பேசவிடாமல் அவனாகவே எடுத்துக் கொண்ட அதீத நெருக்கம் அவளுக்குள் அவள் எடுத்திருந்த முடிவில் பலவீனத்தை ஏற்படுத்தி இருக்க, அதில் ஏற்பட்ட உச்சகட்ட கடுப்பில், அவனை தன்னிடமிருந்து விலக்கி வைக்கும் ஆயுதமாக தனக்கு திருமணம் என்ற நாடகத்தை அவளாகவே தொடங்கி வைத்திருந்தாள்.
இங்கோ அவள் சொன்னதில் கோபத்தில் முகம் சிவக்க,
முறைத்தவன், தன் கைபிடிக்குள் இருந்தவளை இன்னும் நெருங்கி,
“உனக்கு இந்த ஜென்மத்துல புருஷன்கிறது நா மட்டும் தான்.. அந்த உரிமையை நான் யாருக்கும் தர மாட்டேன்” என்று அழுத்தமாய் சொல்ல,
‘போடா டேய் போடா உனக்கே ஃபர்ஸ்ட் எந்த உரிமையும் தர்றதா இல்ல நானு’ என்று மனதிற்குள் நினைத்தவள்,
“ஹலோ சார் நீங்க திரும்பத் திரும்ப என்ன சொன்னாலும் நமக்கு நடந்தது கல்யாணமே இல்ல நீங்க என் புருஷனும் இல்லன்னு தான் நா சொல்லுவேன்”என்று அவளும் அவனின் கண்களை பார்த்து அவனைப் போலவே அழுத்தி சொல்ல…
“விளையாடாத மது… எனக்கு தெரியும் உனக்கும் என்ன பிடிக்கும்னு.. அந்த நம்பிக்கையில தான் உன்னை இன்னும் விடாம இருக்கேன்”
“ஆஹா என்ன ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு… போய் தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதி வச்சுட்டு அது பக்கத்துலயே படுத்துக்கோங்க… நம்ம வருங்கால சந்ததியினர் படிச்சு தெரிஞ்சுகிட்டும்” என்றாள் நக்கலாய்.
“பேச்ச மாத்தாத மதுரா… ஐ நோ யூ லைக் மீ…” என்றான் உறுதியாக..
“ஆமா ஆமா… ஆனா அதுல சின்ன சேஞ்ச்…ஐ லைக் யூக்கு பதிலா… ஐ ஹேட் யூன்னு சொன்னா இன்னும் பெர்பெக்ட்டா இருக்கும்.. ஏன்னா உங்க மேல எனக்கு அந்த அளவுக்கு வெறுப்பா இருக்கு”
என்றதும் அவன் சிரிக்க ஆரம்பிக்க,
மதுராவோ எரிச்சலாகி, “நான் ஒன்னும் காமெடி பண்ணல சீரியஸா சொல்றேன்.. எதுக்கு இப்போ கெக்க பிக்கேன்னே சிரிக்கீங்க?” என்றாள் கடுப்பாய்.
“ஹாஸ்பிடல்ல அன்கான்சியஸ் ஸ்டேட்ல இருக்கும்போது கூட நீ என்னோட ப்ரெசென்ஸ உணர்ந்து நீ பிளாக்னு சொன்ன… நீ என்ன வெறுக்கிறதா சொல்றதுதான் சிரிப்பா தானே இருக்கும்…”
அதில் சிறு தடும் மாற்றத்துடன்,
“நீங்..நீங்க என்ன பாக்க வந்தீங்களா?”
“ஆமா..”
“இது என்ன புது கத? பொ..பொய் சொல்லாதீங்க நா..நா நம்ப மாட்டேன்”
“நீ நம்பலனாலும் நா உன்ன பார்க்க வந்ததும் உண்மை.. நீ என் பேரை சொன்னதும் உண்மை …அது மாறாது மது.. நீ என்ன விரும்புற ஒத்துக்கோ” என்று சொல்ல..
“நோ நோ.. ஐ ஹேட் யூ” என்றாள் அவள்.
“பட் ஐ லைக் யூ லாட்” என்றான் இவன்.. கண்களில் வழியும் காதலுடன்,
அதில் எரிச்சலுற்றவள், “பட் ஐ ஹேட் யூ கோர்..”
அவனோ அதற்கும் அசராமல்,
“விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையில ஒரு மெல்லிய கோடு தான் இருக்கு மதுரா இதோ நம்மள போல” என்றபடி இருவரின் நெருக்கத்தையும் கூட்ட,
இருவரின் பார்வையும் ஒரே நேர்கோட்டில் சந்தித்தது.
கண்கள் இரண்டும் கவ்விக்கொள்ள ..மூக்கும் மூக்கும் உரச, இருவரின் சூடான மூச்சுக்காற்றும் சுற்றுப்புறத்தை சூடாக்கி ஒரு வித வெப்பநிலையை உண்டாக்க,
எதற்காக பேச ஆரம்பித்தோம் எங்கிருக்கிறோம்? என்ன செய்கிறோம்? என்பதை கூட மறந்து இருவரின் உடலும் ஒரு வித உஷ்ணத்தோடு தனது துணையை பார்த்தது.
ஏதோ மாயலோகத்தில் இருந்த உணர்வோடு ஒரு சில நொடிகள் தங்களை மறந்து பார்வை பரிமாற்றத்தில் இருந்தவர்களின் இதழ்கள் ஒன்றோடு ஒன்று தன் துணையை இணைந்த வேளையில், கீழே கிடந்து அவ்வறையில் அவர்களுக்காக மெல்லிய வெளிச்சத்தை பரப்பி கொண்டிருந்த அவனது மொபைல் போன் சத்தம் எழுப்பி கவனம் களைக்க, அதில் தெளிந்த மதுரா அவசரமாய் தன்னிடம் அட்டை போல் ஒட்டிக் கொண்டிருந்தவனை தன் பலம் கொண்டு விலக்கி தள்ளிவிட்டு மூச்சு வாங்க, வாயை மூடியபடி அவ்வறையை விட்டு வெளியே ஓடிப் போனாள்.
தன்னை விலக்கி விட்டு சென்றவளை கண்களால் பின்தொடர்ந்தவன், பொறுமையாய் காதில் இருந்த, இயர் பட்ஸின் பொத்தானைத் தட்ட , அலைபேசியில் இருந்த அழைப்பு இதில் இணைக்கப்பட்டது.
அதில் ஒரு பெண் குரல் “சார் இங்க ஆல் கிளியர்… நீங்க இப்ப சேஃபா வெளியே வரலாம்… அண்ட் அந்த வாட்ச்மேன் அவன் கூட இருந்த இன்னும் அஞ்சு பேர் நம்ம கிட்ட மாட்டிகிட்டாங்க ” என்று சொல்ல,
“ம்ம்ம்.. குட் அவனுங்க கிட்ட விசாரிங்க… உடம்புல உயிர் மட்டும் மிச்சம் இருந்தா போதும்” என்று சொல்ல,
“ஓகே சார்..சார் இது இதோட முடியும்னு தோணல… ரொம்ப கவனமா பிளான் பண்ணி எக்ஸிக்யூட் பண்ணி இருக்காங்க” என்றது அந்த பெண் குரல்..
“ஐ நோ … பட் இன்னும் கொஞ்சம் பொறுமையா இருந்தா மொத்தம் நெட்வொர்க்கையும் புடிச்சுடலாம்”
என்றவன் வெளியே போன மதுரா சென்ற வேகத்திலேயே மீண்டும் திரும்பி வருவதை பார்த்ததும்,
“ஐ கால் யூ லேட்டர்… அண்ட் நான் சொல்றவரை பவர் ஆன் பண்ண வேண்டாம்” என்று மெல்லிய குரலில் சொன்னதோடு காதில் இருந்த பொத்தானை அழுத்தி அவள் தன் அருகில் வருவதற்குள் அழைப்பை துண்டித்து விட்டவன்,
அப்பொழுதுதான் தன் முன்னே வந்து நின்றவளைக் கவனித்து,
‘இன்னும் போகலையா நீ?’ என்பது போல் பார்க்க,
அவளோ வேர்த்து விறுவிறுத்து மூச்சு வாங்க,
“அய்யோவ் ஆபீஸே இருட்டுல அருந்ததி படத்துல வர பேய் பங்களா மாதிரி இருக்கு.. ப்ளீஸ் கொஞ்சம் கீழ வர என் கூட வர முடியுமா? ஒரு ஹெல்ப்பா தான் கேட்கிறேன்” என்றாள் பயத்தில்..
“உன்னோட ஹஸ்பண்டா என்ன கூப்பிடுறியா? இல்ல பாஸா கூப்பிடுறியா?”
“அய்யோ இக்கட்டான நேரத்துல இந்த ஆராய்ச்சி எல்லாம் தேவையா? கூட வாங்கன்னு சொன்னா வாங்களேன்” என்றாள் தாள மாட்டாதவளாய்,
“நீ சொன்னா தான் உன்ன கூட்டிட்டு போவேன்…” என்று அவன் சொல்ல,
“ப்ளீஸ் நம்ம பஞ்சாயத்த அப்புறம் வச்சுக்கலாம்..எனக்கு ரொம்ப பசிக்குது… வொர்க் பிஸில நான் இன்னைக்கு லஞ்ச் கூட சாப்பிடல.. வயிறு வேற ஆயில் ஊத்தாத இன்ஜின் கணக்கா சவுண்ட் குடுத்துட்டே இருக்கு” என்றாள் தன் வயிற்றை தடவிக் கொண்டே பாவமாய்.
கார்முகில் வர்ணனின் இதழ்கள் மெலிதாய் விரிந்தது அவள் சொன்ன பாங்கில்…
அவனுக்கு நன்றாகவே தெரியும் அவளுக்கு அவன் பாடிகார்ட் வேலை பார்த்த தினங்களில் அவள் நேரம் தவறாமல் சாப்பிடுவாள்… அவன் கூட சில நேரங்களில் வியப்போடு தான் அவள் உண்பதை பார்ப்பான்.
அவளது உருவத்திற்கும் அவள் சாப்பிடுவதற்கும் சம்பந்தமே இருக்காது அந்த அளவு உணவை ரசித்து ருசித்து விதவிதமாய் ரகரகமாய் சாப்பிடுவாள்.
அதனால் இன்று அவள் பசி என்று சொன்னதும் அதற்கு மேல் அவளிடம் வம்பு செய்யாமல்,
“சரி நான் கூட்டிட்டு போறேன்”என்றவன் அவளின் கையைப் பிடிக்க,
சட்டென்று அதை உறுவிக் கொண்டவள்,
“என்ன டச் பண்ணாமலே கூட்டிட்டு போகலாம்” என்றதும்,
மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏற, அவன் கூட்டி செல்லமாட்டேன் என்று முறுக்கிக் கொள்ள,
கடைசியில் இவள்தான் இறங்கி வர வேண்டியதாயிற்று.
அவன் கையைப் பிடித்துக் கொண்டு சுற்று முற்றும் பார்த்தபடி கோப்புகள் இருந்த அறையை விட்டு இருவரும் வெளியே வர,
“என்னோட ஹேண்ட்ஃபேக் போன் எல்லாம் என்னோட ப்ளேஸ்ல இருக்கு… அதை எடுத்துட்டு போய்டலாம்”
என்றதும், அவன் சம்மதிக்க, அவசரமாய் அனைத்தையும் எடுத்துக் கொண்டவள், தனது மொபைலை ஆன் செய்ய அதுவோ சார்ஜ் இல்லாமல் எப்பொழுதோ உயிரை விட்டிருந்தது.
“அச்சோ வீட்ல கால் பண்ணி எடுக்கலைனா.. அவங்க பயப்படுவாங்களே” என்றவள் “சீக்கிரம் கூட்டிட்டு போங்க” என்று கார்முகில் வர்ணனை துரிதப்படுத்த,
அவனோ, சாவகாசமாக அவளைப் பார்த்து,
“நான் தான் சொன்னேன்ல வீட்ல யாரும் இல்ல…நீ வேணும்னா என் கூட ஸ்டே பண்ணு”
‘ஆத்தி இன்னைக்கு தனியா மாட்னதுக்கே என்னென்னமோ பண்ணி மாய வித்த காட்டி மயக்க பாக்குறான்.. இதுல இவன் கூட ஸ்டே வேற பண்ணனும் மாமே’
என்று கிட்டத்தட்ட மனதிற்குள் அலறியவள், “அதெல்லாம் வேண்டாம் ..என்கிட்ட ஸ்பேர் கீ இருக்கு நான் என்னோட அப்பார்ட்மெண்டுக்கு போய்டுவேன்”என்றாள் வேகமாய்.
அவனும் அதற்கு மேல் வற்புறுத்தாமலும் மறுப்பு சொல்லாமலும் விட்டுவிட்டான்.
அந்த பில்டிங் முழுவதுமே மின்சாரம் துண்டிக்கப்பட்டதனால், காரிருளில் மூழ்கி இருக்க, ஒரு வித திகிலுடனேயே அவனின் கையை பிடித்தபடி நடக்கலானாள் மதுரா.
மின்சாரம் இன்றி லிஃப்ட் பயன்படுத்த முடியாததால் படிக்கட்டு மூலமாகவே இறங்க வேண்டிய நிலை!
பசியினாலும் தாகத்தினாலும் நா வறண்டு போய் உடல் அலுப்போடு அவன் பின்னே வந்து கொண்டிருந்தவள் ஒரு கட்டத்தில்,
“ப்ளீஸ்… ப்ளீஸ் போதும் ஒரே ஒரு செகண்ட்” என்று கால் மூட்டை கைகளால் தேய்த்து விட,
அவள் நிலை புரிந்தவன்,
ஒரு நொடி தாமதித்தான்.
அவன் நினைத்தால் வம்படியாய் அவளைக் கைகளில் அள்ளிக்கொண்டே கூட கீழே இறங்கி இருப்பான் தான். ஆனால் ஏற்கனவே அவளிடம் சற்று எல்லை மீறி நடந்து கொண்டதாகவே அவன் உள்ளம் இடித்துரைக்க, சற்று நடையின் வேகத்தை குறைத்து மெதுவாகவே அவளை அழைத்துக் கொண்டு கீழ்தளத்திற்கு வந்திருந்தான்.
“சரி எப்டி வீட்டுக்கு போக போற? மணி ஆல்ரெடி 9:30 தாண்ட போகுது” என்றதும்,
“நான் கேப் புக் பண்ணி போக போறேன்”என்றவள் அவன் முறைக்கவும்,
” என்ன?” என்று கேட்க,
“உன் மொபைல்ல சார்ஜ் இல்ல… உங்க வீட்டிலயும் உன்ன தேட யாரும் இல்ல.. இந்த சிச்சுவேஷன்ல நைட் டைம் தனியா வேற போக போறியா?”
“அதுக்கு நான் இப்ப என்ன பண்ணனும்? உங்க கூட உங்க வீட்டுக்கு வரணும் சொல்றீங்களா?” என்று
அவன் தன்னை அவனது வீட்டிற்கு அழைத்து செல்ல வழிப் பார்க்கிறான் என்று தானாகவே ஒரு கணிப்பில்.. கடுப்பில் கேட்க…
அவனோ அவளது கணிப்பில் இருந்து தவறியவனாய்,
“வா நானே உன்ன உன்னோட அப்பார்ட்மெண்ட்ல டிராப் பண்றேன்” என்றான்.
ஒரு நொடி இவனை நம்பலாமா? என்று யோசித்தவள், அவனது பார்வையில் இருந்த நேர்மையில் மெல்லமாய் சரி என்று சம்மதித்தவள் கூடவே,
“நாங்க கூட வர்றத சாக்கா வச்சு என்ன.. டச்சிங் டச்சிங் கிஸ்ஸிங் கிஸ்ஸிங் எல்லாம் பண்ண கூடாது.. டிஸ்டன்ஸ் மைண்டைன் பண்ணனும்.. இதுக்கு சம்மதம்னா ப்ராமிஸ் பண்ணுங்க” என்றாள்.
“இதுக்கெல்லாம் ப்ராமிஸா? என் மேல நம்பிக்கை இல்லையா?” என்று அவன் மறுத்தாலும் அவள் கையை நீட்டிக் கொண்டு நிற்க,
அவளை இன்று தான் சற்று படுத்து விட்டோம் தான் என்று புரியவும் ஒரு நீண்ட பெருமூச்சுடன் அவனும் சம்மதமாய் அவளின் கைமீது கையை வைத்தான்.
அதை காற்றில் ஊதி கடவுளுக்கு அனுப்பியவள், எக்காரணம் கொண்டும் இத மீறக்கூடாது என்று கண்களை உருட்டி மிரட்டி தான் அவனுடன் காரிலேயே ஏறினாள்.
முதலில் அவனது கார் உணவு விடுதியில் நிற்க, கேள்வியாய் பார்த்தவளிடம்
“ரொம்ப பசிக்குதுன்னு சொன்ன? வீட்டுக்கு போய் எப்ப சாப்ட போற? இங்கே டின்னர் முடிச்சிட்டு போ” என்று சொல்லவும், முதலில் மறுத்தவள் பின் தன் உணவிற்கு தான் தான் பணம் தருவேன் என்று சம்மதம் சொல்ல,
கூட்டம் அதிகமான நேரம் என்பதால் அமர்ந்து உண்பதற்கு எல்லாம் அங்கே இடமில்லை..அவனே உள்ளே சென்று உணவை பார்சல் செய்து தண்ணீர் பாட்டலுடன் வாங்கி வந்தான்.
பார்சலை அவளிடம் கொடுத்து சாப்பிடு என்று சொல்ல,
“இங்கேயா?”என்று முதலில் சங்கோஜமாய் சொல்லி மறுத்தவள், பின்பு அவன் வற்புறுத்தவும், பசி பொறுக்க முடியாமல் சாப்பிட்டாள்.
அவள் உண்ணும் அழகை ரசித்தபடி இருந்தவனிடம்,
“ப்ப்ச்ச்… உங்களுக்கு வேணும்னா இன்னொரு பார்சல் வாங்கிட்டு வந்து சாப்பிட வேண்டியது தானே என்ன எதுக்கு முழுங்குற மாதிரி பாக்குறீங்க?”
“உன்ன முழுங்கணும்னு எனக்கும் ஆசையா தான் இருக்கு ஆனா நீ தான் விடமாட்டேன்கிறியே..”என்றான் அவளை தன் கண்களாலேயே அளந்தபடி …
“இதுதான் வேண்டாங்கிறது… நான் சொல்லிதான கூப்ட்டு வந்தேன்..”
“டச்சிங்.. கிச்சிங் தான பண்ண கூடாது….கண்ணால கூட உன்ன பாக்க கூடாதா? இல்ல ரொமான்டிக்கா தான் பேச கூடாதா”
‘அடேய் கருப்பு நீ பார்த்தாலே எனக்கு அவஸ்தையா
இருக்கு.. உன் கூடவே ஒட்டிக்கணும்னு தான் தோணுது.. என்ன மாய மந்திரம் பண்ணி என்ன மந்திருச்சியோ’ என்று மனதிற்குள் அவனை கரித்துக் கொட்டியவள், பேச்சை மாற்றுவதற்காக
“நான் சாப்ட்டு முடிச்சிட்டேன் இப்போ என்ன கொண்டு ட்ராப் பண்றீங்களா? இல்ல நானே இறங்கி போய் டாக்ஸி பிடிச்சு போகவா?”என்று இறங்கப் போக,
அடுத்த இருபதாவது நிமிடத்தில் கார்முகில் வர்ணனின் கார் அவளது அப்பார்ட்மெண்டின் பார்க்கிங் ஏரியாவில் போய் நின்றது.
வீடு வந்து சேர்ந்து விட்டோம் என்ற நிம்மதியோடு மதுரா உள்ளே செல்ல போக, அதே நேரம் அவள் பின்னே தன் காரை பூட்டிக்கொண்டு அவனும் இறங்கினான்.
அவனுக்கு நன்றி சொல்ல திரும்பியவள், அவன் தன் பின்னால் வருவதை பார்த்ததும்,
“எங்க வரீங்க?” என்று கோபமாய் கேட்க,
“உன் கூட தான் வரேன்”
“இல்ல வேணாம் … நானே போய்டுவேன்..இதுவர கொண்டுவிட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ்..நீங்க போங்க”
“உனக்கு பிராப்ளம்னு வரும்போது இவ்வளவு தூரம் ஹெல்ப் பண்ணிருக்கேன் ..என்ன பாதியிலேயே வெட்டி விட பாக்குறியா?” என்று கேட்க,
‘எனக்கு பிராப்ளம் வந்ததே உன்னால தானடா’ என்று நினைத்தவள் கொடூரமாய் முறைக்கவும்,
“இல்ல இவ்வளவு தூரம் கொண்டு விட்டுருக்கேன் அட்லீஸ்ட் ஒரு ஃகர்ட்டசிக்காக வீட்டுக்கு இன்வைட் பண்ணி ஒரு கப் காஃபியாவது தரலாமே!”
‘இதுக்கு பேரு தான் எடத்த குடுத்தா மடத்தை பிடிக்கிறதா?’என்று நினைத்தாலும், சோர்வாய் தெரிந்த அவன் முகத்தைப் பார்த்ததும் மறுக்க தோன்றாமல்,
முறைப்போடையே,
“காஃபி குடிச்சிட்டு உடனே கிளம்பிடனும்… வம்பு இழுக்க கூடாது என்கிட்ட” என்றாள் கண்டிஷனுடன் ..
ஒரு நொடி அவளை ஆழ்ந்து பார்த்தவன் சம்மதித்தான்.
அது மிகப்பெரிய அப்பார்ட்மெண்ட் தான் என்றாலும், ஒருவர் பிளாட்டில் என்ன நடக்கிறது என்று இன்னொருவர் கவனிக்கும் அபாயம் இல்லாததால் தைரியமாகவே அவனையும் அழைத்து வந்து விட்டாள்.
தன்னிடம் இருந்த ஸ்பேர் கீ மூலமாக கதவை திறந்து உள்ளே போக, அவனை ஹாலில் காத்திருக்க சொல்லிவிட்டு தனது மொபைலுக்கு சார்ஜை போட்டவள், அவன் கேட்ட காஃபியை தயாரிக்க சமையலறைக்குள் செல்ல, அதுவரை ஹாலில் மாட்டப்பட்டிருந்த மூவரின் வெவ்வேறான புகைப்படங்களையும் அழகுக்காக ஷோகேஸில் வைக்கப்பட்டிருந்த வெவ்வேறு வகையான பொம்மைகளையும் அதற்கிடையே மூவரும் கல்லூரிகளில் வாங்கி இருந்த பட்டங்களையும் பதக்கங்களையும் அழகாய் வரிசைப்படுத்தி அடுக்கி வைத்திருந்ததைப் பார்ப்பது போல் நின்றான்.
சமையலறையில் நின்றாலும் ஹாலில் ஒரு கண்ணாக இருந்த மதுராவும் அவனை அனுப்ப வேண்டுமே என அவசரமாய் காஃபியை போட்டு வந்து கொடுக்க, அவனும் மறுப்பு சொல்லாமல் வாங்கி குடித்தவன், அதற்கு மேல் அவளை சோதிக்க விரும்பாமல் கிளம்பி விட்டான்.
செல்வதற்கு முன் கதவை உள்பக்கமாக தாழிட்டுக்கொள் அவசரமென்றால் தன்னை அழைக்கலாம் என்று அவனது தனிப்பட்ட எண்ணையும் கொடுத்துவிட்டே சென்றான்.
அவனது அக்கறையில் உள்ளம் மெலிதாய் உருகினாலும்,
எதற்கு இந்த திடீர் கரிசனம்? என்ற கோபம் வர எனக்கு தெரியும் என்று முகத்தில் அடிப்பது போல் சொன்னவள், அதேபோல கதவையும் சாத்தி உள்ளே பூட்டிவிட்டாள்.
***********
மறுநாள் காலை வினோதா டிஸ்சார்ஜ் செய்யப்பட, அவளை அழைத்துக்கொண்டு ஜெகதீஷ் வரவும், நைட் ஷிப்ட் முடிந்து பிரகதீஷ் வரவும் சரியாக இருந்தது.
வந்தவர்களை ஒரு பார்வை பார்த்த மதுரா வினோதாவிடம் அவள் நலனை விசாரித்ததோடு சரி, பிரகதீஷ் கேட்டதற்கு பதில் சொன்னாளே தவிர ஜெகதீஷிடம் பேசவே இல்லை.
முதலில் அதை கவனிக்காத ஜெகதீஷ், கவனித்து அவளிடம் பேச முயற்சி செய்ய வேலைக்கு நேரமாக சொல்லிவிட்டு கிளம்பி விட்டாள் மதுரா.
அவளுக்கோ அவன் நிலை புரியாமல் இல்லை.
முதலில் வினோதாவின் நிலையை நினைத்து வருத்தமாய் இருந்தாலும் அதன் பிறகு அவளுக்கு ஒன்றுமில்லை என்று தெரிந்தவுடன், தான் வீட்டிற்கு வந்தோமா இல்லையா என்று தன்னை பற்றி விசாரிக்க அவனுக்கு நேரமில்லையா? என்ற ஆதங்கமும் இருக்க, கூடவே அவர்கள் மூவரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள்… ஆனால் தான் யாரோ தானே! என்ற உண்மையும் உள்ளுக்குள் உரைக்க, ஒருவித வெறுமையுடன் பணிக்கு வந்தவளுக்கு முன் ஷாலினி கோபத்துடன் ஃபைலை தூக்கி போட்டாள்.
“பெருசா முடிச்சுட்டு போயிடுவேன்னு சொன்னீங்க மிஸ் மதுரா.. இன்னும் ஒரு ஃபைல் பெண்டிங்ல இருக்கு… அதுவும் அதுக்குள்ள அத்தனை குளறுபடி”
“ஐ அம் சாரி ஷாலினி.. நேத்து இதை முடிக்கணும்ன்னு ஓவர் டைம் கூட ஒர்க் பண்ணேன் பட் ஆபீஸ்ல கரண்ட் கட் ஆகிட்டு… அதனாலதான்”என்று அவள் சொல்ல ஆரம்பிக்கவும்,
“எதையாவது சாக்குன்னு சொல்லி தப்பிக்கிறது இவங்கள மாதிரி சோம்பேறித்தனமான ஆளுங்களுக்கு வேலையா போச்சு…ப்ச்ச்”என்று அனைவருக்கும் கேட்கும் படியான முணுமுணுப்புடன் மதுரா சொல்வதையே காதில் வாங்காமல் ஷாலினி சென்றுவிட,
அத்தனை பேரின் முன்பும் மதுராவிற்கு அவமானமாய் போய்விட்டது.
கண்கள் கலங்க ஆரம்பிக்கவும்,
தேஜு ஆறுதலாய் அவளின் கையை பிடிக்க,
மெதுவாய் தன்னை தேற்றிக்கொண்டவள்,
நினைவு வந்தவளாக,
“நேத்து ஏண்டி என்கிட்ட சொல்லாம கொள்ளாம வெளில போய்ட்ட?”
“அடியே வீட்ல ஒரு எமர்ஜென்சின்னு உன்கிட்ட சொல்லிட்டு தானே போன? நீதான் என்ன கவனிக்கல போல”
அப்படியா என்று கேட்டுக் கொண்டவளுக்கு நேற்று வேலை மும்முரத்தில் எதை தான் கவனித்தோம் என்றுதான் தோன்றியது.
அதன் பிறகு ஷாலினி மீண்டும் நேற்று கொடுத்த அளவிற்கு ஃபைல்களை கொண்டு வந்து முடித்துக் கொடுக்கும்படி கட்டளை இட்டு செல்ல,
நேற்று போல தன்னை வருத்திக்கொண்டு வேலை செய்ய நினைக்காமல்,
முயன்றவரை செய்யலாம் என்ற முடிவோடேயே வேலையை தொடங்கினாள்.
சிறிது நேரத்தில் ஆபீஸிற்கு கார்முகில் வர்ணன் இன்று வரவில்லை என்றும் அவனுக்கு உடல்நிலை சரியில்லை என்றும் பரவ, அவனுக்கு பதிலாக மாதேஷ் தான் அனைத்து வேலைகளையும் கவனித்தான்.
அவனுக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் இவளுக்கு என்னவோ போல் ஆனது. நேற்று வரை நன்றாக தானே இருந்தான்… இன்று என்னானது? என்று அவனின் சிந்தனையே மனதிற்குள் தோன்றி கொண்டிருக்க,
‘அவனை நினையாதே மனதே!’ என்று மனதை கடிவாளம் போடுவதற்காக இதையே தாரக மந்திரப் போல் சொல்லிக் கொண்டவளுக்கு குரங்கை நினைக்காமல் மருந்தை குடி என்பது போல் தான் ஆனது.
கூடவே அவனின் ஃபியான்சி ‘ஷாலினி’ ஏன் அவனை அருகில் இருந்து கண்ணும் கருத்துமாய் கவனிக்கவில்லை… மாதேஷ் கூட இங்கே தான் இருக்கிறான்.. அப்படி என்றால் உடல்நிலை சரியில்லாத நேரத்தில் அவன் வீட்டில் தனியாக என்ன செய்கிறான்? கவனிக்க யாராவது உடன் இருப்பார்களா? என்ற பல கேள்விகள் அவளுக்குள் அலைக்கழித்தது.
அவன் நினைவே நெஞ்சை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கவும் , அவன் நினைவை துரத்துவதற்காக நேற்றைய தினத்தை விட வேகமாக வேலை செய்து கொண்டிருந்தவளுக்கு தேஜு அவளிடம் கதை அளந்தது.. ஷாலினி திட்டியது உணவு இடைவேளையில் எந்த உணவு சாப்பிட்டால் என்பது கூட மனதிற்குள் ஏறவில்லை.
மாலை அலுவலகம் முடியவும், தேஜுவை இழுத்துக் கொண்டு அவசரமாய் கிளம்பினாள்.
இன்னும் கொஞ்சம் வேலை இருப்பதாய் அவளைப் பிடித்து வைக்க முயன்ற ஷாலினியிடம் கூட,
தேஜுவின் ஒன்றுவிட்ட பாட்டி மண்டைய போட்டு விட்டதாக கதை அளந்து வராத கண்ணீரை வரவழைத்துக் கொண்டு கிளம்பினாள்.
தேஜஸ்வினி அவளின் இத்தகைய பரிணாமத்தில் ஆ என்று வாயைப் பிளக்க,
“தேஜு ப்ளீஸ் அவர
எனக்கு பாக்கணும்… கூட்டிட்டு போடி”
“எவரடி”
“ப்ச்ச் அதான் நம்ம பாஸ… அவர் தனியா என்ன பண்றாருன்னு தெரியல”
“ஓஹோ அப்டியா விஷயம்… அது என்ன பாஸு… அவர்தான உன்னோட வீட்டுக்கார்”
“ப்ச்ச்… என்ன கடுப்பேத்தாம உனக்கு அவர் வீடு எங்க இருக்குன்னு தெரியும் தானே கொஞ்சம் கூட்டிட்டு போடி..” என்று கண்கள் கலங்க சொல்லவும், இருவரும் பார்க்கிங் ஏரியாவிற்கு வந்துவிட,
அங்கோ ஜெகதீஷ் பிரகதீஷ் இருவரும் அவளை அழைப்பதற்காக வந்திருந்தனர். கூடவே இன்னொருவனும் இருக்க, அவனின் பார்வை மதுராவின் மீது அத்தனை அழுத்தமாய் படிந்தது.
தொடரும்…
போன அத்தியாயத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் ☺️♥️
இந்த அத்தியாயத்தை பற்றிய தங்களது கருத்துக்களை பதிவிடவும் நட்பூஸ் 🙂♥️
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
25
+1
3
+1
வில்லன் வந்து விட்டனா?.