Loading

12. நீ நிழலானால் நின்மதுரம் நானாவேன் 

இது என்னடா அநியாயமா இருக்கு.. இப்பதான் ஒரு பிரச்சனை முடிஞ்சதுன்னு நிம்மதியா மூச்சு விடுறதுக்குள்ள அடுத்த டுவிஸ்ட் டா? அதென்ன எனக்கு மட்டும் ஆடி ஆஃபர் மாதிரி அடுக்கடுக்கா ஆப்பு வருது அவ்வ்… கல்யாணம் பண்ணிக்கனுமா? அதுவும் பிளாக்கையா? அய்யோ இந்த கருப்பு வேற ஓகே சொல்லிட்டே..ஆனா நா  அப்படி எல்லாம் நினைச்சு பார்த்ததே இல்லையே! என்று

அதிர்ச்சி தாங்காமல் மயங்கி விழுந்தவளுக்கு தன்னை சுற்றி ஆட்கள் இருந்ததை உணர முடிந்தது தான்… அவள் முகத்தில் நீர் கூட தெளிக்கப்பட்டது.

ஆனால் கண்ணைத் திறப்பேனா? என்பது போல் கண்களை இறுக மூடி அமைதியாய் கிடந்தாள் மதுரா இப்படியாவது திருமணம் நின்று விட்டால் என்ற நப்பாசை தான்…

ஆனால் அருகில் கேட்ட சில கிசு கிசு குரல்களால் அவளால் வெகு நேரம் கண்களை மூடியபடி அப்படியே கிடக்க முடியவில்லை.

வினோதா அவள் கன்னத்தை தட்டிக் கொண்டிருக்க, “ஏய் குட்ட கல்யாணம் வேண்டாம்னு மயங்கி விழுந்த மாதிரி நடிக்கிறியா? ஒழுங்கா மரியாதையா எந்திரி” என்ற பிரகதீஷின் மிரட்டல் குரலோடு, ஜெகதீஷின் குரல் பதட்டமாய் மருத்துவரை அழைப்பது வரை அவளுக்கு நன்றாகவே கேட்டது. 

கூடவே இன்னும் சில கிசு கிசு குரல்களும்… 

“எனக்கு தெரிஞ்சு பொண்ணு மாசமா இருக்கும்னு நினைக்கிறேன்..” என்ற குரலோடு,

“ஆமா ஆமா மசக்க நேரத்துல மயக்கம் வர்றது சகஜம்தான?”என்று மற்றொரு குரல் பதில் பேச,

“அதனாலதான் சீக்கிரமா கல்யாணம் பண்ணி குடுக்க முயற்சி பண்ணுகிறாங்க போல” என்று அதற்கும் பதில் சொன்னது இன்னொரு குரல்.

“இவ்வளவு நாள் வெளியூர்ல புள்ள படிக்குதுன்னு சொன்னாங்களே அப்பவே எனக்கு கொஞ்சம் சந்தேகம் தான்… பார்த்தா அது சரியா தான் இருந்திருக்கு”

என்றுதிருமணத்திற்காக வந்திருந்த உறவின பெண்மணிகள் சிலர் அவர்களுக்குள் வாய்க்கு வந்தபடி பேசிக்கொள்ள,

அது மயக்கத்தில் இருப்பது போல் கண்மூடி கிடந்த மதுராவின் செவிகளில் அச்சரம் பிசங்காமல் விழுந்தது.

‘அடப்பாவிகளா யாருடா நீங்க? நீங்கதான் அந்த நாலு பேர் நாலு விதமா பேசுற குரூப்பா?..’என்று அதிர்ந்த மதுரா இதற்கு மேல் மயக்கத்தில் கிடந்தால்  தனக்கு பிறந்த குழந்தை பள்ளியில் சேர்ந்து இருப்பதாக கூட இவர்கள் புரளி பேசுவார்கள் என்ற பயத்திலேயே, கண் விழித்து விடலாம் என்று ஒருமனதாய் முடிவெடுக்க,

“எல்லாரும் நகருங்க… அவங்களுக்கு காத்து போக வேணாமா?” என்ற கருப்பசாமியின் குரல் கணீரென்று கேட்டது. கூடவே அழுத்தமான அவனின் காலடி ஓசையும்.. அதற்கு தடை விதித்தது.

மதுராவை சுற்றிக் குழுமி இருந்த அனைவரும் நகர்வது சில்லென்ற காற்று அவளை ஆக்கிரமிக்கும் போதே நன்றாகவே தெரிந்தது.

அவள் மயங்கி விழுந்த நொடியில் இருந்து அத்தனை பேரின் குரலை கேட்டிருந்தாலும் முத்து மாணிக்கத்தின் குரலோ கருப்பசாமியின் குரலோ அவள் செவிகளில் விழவில்லை.

‘இவ்ளோ நேரம் என்ன பண்ணினாங்க ரெண்டு பேரும்?’ என்ற கேள்வி மனதில் எழ,

கீழே மடிந்து போய் மயக்கத்தில் கிடந்த மதுராவின் அருகே அமர்ந்த கருப்பசாமியோ, அவளை மடி தாங்கி இருந்த பெண்மணியை ஒரு பார்வை பார்க்க, ஏதோ புரிந்தவராக தன் போல் மதுராவின் தலையை கருப்பசாமி இடம் கொடுத்துவிட்டு எழுந்து ஒதுங்கி நின்று கொண்டார்.

தன் தலை யாருக்கோ இடம் மாறுவதை உணர்ந்து மதுராவோ, பட்டென்று கண்களை திறக்க, கண்ணெதிரே கருப்பசாமியின் விழிகள் காந்தமாய்! அதுவோ அவளை ஈர்க்க அந்த ஈர்ப்பை மீறிய பயம் இருக்க சட்டென்று அவனிடமிருந்து விலகி நகர்ந்து கொண்டாள்.

அதன் பிறகு நடந்ததெல்லாம் அத்தனை அவசரமாய் மின்னல் வேகத்தில் தான் நடந்தேறியது. ஐயர் அடுத்த முகூர்த்த நேரம்  இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது என்று சொன்னது… 

ஜெகதீஷ் அழைத்திருந்த மருத்துவர் வந்து அவளை பரிசோதித்தது.. அழகு நிலைய பெண்கள் அவளது அலங்காரத்தை சரி செய்தது.. அனைத்திலும் அத்தனை வேகம். நின்று என்ன ஏது என்று யோசிக்கக்கூட நேரம் கிடைக்கவில்லை.

விதியோ அவள் விருப்பம் இன்றியே அவளை இழுத்துக்கொண்டு மணமேடையில் அமர வைத்தது ..

முத்து மாணிக்கம் மதுராவிடம் சம்மதமா? என்றெல்லாம் கேட்கவில்லை. தன் முடிவே மகளின் முடிவாக்கி விட, மதுராவிடம் சம்மதமா என்று ஒரு வார்த்தை கூட கேட்காமலேயே மணமேடையிலேயே அமர வைத்து விட்டார்கள்.

அவளுக்கு தான் யாரையும் எதிர்த்து பேச தைரியம் இல்லையே! உள்ளுக்குள் மட்டும் தானே பக்கம் பக்கமாய் தீப்பொறி பறக்க பேசுவாள்..

வேண்டாம் வேண்டாம் என்று உள்ளுக்குள் அவளுக்கு கதறல் தான். ஆனால் வெளியே அவளின் முகமோ உணர்ச்சியற்று பயத்தில் பதற்றத்தில் வெளிறி போய் இருந்தது. 

கருப்பசாமி மாப்பிள்ளையாக… அவன் எப்பொழுதும் அணியும் கருப்பு உடையுடன் இல்லாமல் பட்டு கரையிட்ட ஒட்டிக்கோ கட்டிக்கோ வேஷ்டி சட்டையில் மணமேடையில் அவள் அருகில் அமர்ந்திருக்க, அதைக் கூட கவனிக்க முடியாத பதற்றத்தில்

” ஏன் இதுக்கு ஓகே சொன்னீங்க?”என்று அவனுக்கு மட்டுமே கேட்குமாறு மெல்லிய குரலில் கேட்டிருந்தாள் அவள்.

அவனோ, அவள் கேட்டது கேட்டும் பதில் சொல்லாமல் மௌனமாய் இருக்க,

ஆனால் மதுரா விடவில்லை. நெஞ்சம் படபடக்க பேச்சை தொடர்ந்தாள்.

“எனக்கு ரொம்ப பயமா இருக்கு அந்த பத்ரிய கூட அவன் குணம் இப்படித்தானேனு தெரிஞ்சு போச்சு..பட் உங்கள பத்தி எனக்கு ஒண்ணுமே தெரியாதே?”

“என்ன பத்தி என்ன தெரியணும் சொல்லு?” என்று தன் அமைதியை கைவிட்டு வாயை திறந்தான் அவன். ஆனால் அவள் பக்கம் திரும்பவில்லை.

மதுராவோ என்றுமில்லாத திருநாளாய் என்ன கேட்கலாம்? என்பதுபோல் அவனை ஆழ்ந்து பார்த்தாள்.

தாடியும் மீசையும் அடர்ந்து அவன் தோள் வரை வழிந்த அவனது சிகையும் அவனுக்கு எப்படியும் வயது முப்பத்துக்கு மேலேயே இருக்கும் என்று கணித்தவள்,

உடனே..”உங்களுக்கு இன்னுமா கல்யாணம் ஆகல?” என்று தன் மனம் போல் கேட்டிருந்தாள்.

மணமேடையில் அவளோடு அமர்ந்திருப்பவனிடம் கேட்கும் கேள்வியா இது?

“இன்னும் இல்ல.. ஆனா கொஞ்ச நேரத்துல ஆகிடும்..”என்றான் அழுத்தமாய்.

அவளிடம் பேச்சு இருந்தாலும்..

கூடவே ஐயர் கூறிய மந்திர உச்சாடனங்களும் அவன் உச்சரிக்க தவறவில்லை.

கருப்பசாமியின் பதிலில் “ஹான்..”என்று முழித்தவள், கேட்ட கேள்வியின் அபத்தம் புரிய,

“அச்சோ சாரி.. பிளாக் தப்பு தப்பா கேட்டுட்டேன்” என்று உடனே மன்னிப்பு கேட்டதோடு,

“உங்க வயசு என்ன? என்ன படிச்சு இருக்கீங்க? உங்க ஃபேமிலி பத்தி எனக்கு எதுவுமே தெரியாது..அதான்…”

“மெதுவா தெரிஞ்சிக்கலாம்..” என்றான் அவன் ஒட்டாத தன்மையுடன்.

அவன் குரலில் இருந்த ஒட்டாத தன்மை புரிய, அவளுக்கு நெஞ்சுக்குள் ஏதோ ஒரு தவிப்பு.

“பிளாக் இதெல்லாம் வேண்டாம்ன்னு சொல்லுங்களேன்.. நமக்குள்ள மேரேஜ் எல்லாம் செட்டே ஆகாது” என்றாள் அவனுக்கு மட்டுமே கேட்குமாறு கலங்கிய விழிகளுடன்..

அவளை திரும்பி ஒரு நொடி இனம் புரியாத பார்வை பார்த்தவன், பின் முகத்தை ஹோமகுண்டத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பின் மீது வைத்து,

“உன்னோட அப்பா நான் இல்லனா இன்னொருத்தன கூட்டிட்டு வந்து இந்த கல்யாணத்தை முடிச்சுட்டு தான் மறு வேலை பார்ப்பார் பரவாயில்லையா?” என்று கேட்டிருக்க,

மதுராவிற்கு இது என்னடா கொடுமை! என்றானது.

மதுராவோ, “அதுக்குன்னு நம்ம கல்யாணம் பண்ணிக்க முடியுமா? இது லைஃப் டைம் கமிட்மெண்ட்.. சுருக்கமா சொல்லணும்னா இது ஒரு வழி பாதை.. இதுக்கு ரிட்டன் டிக்கெட்ல்லாம் போட முடியாதுதுது” என்று இருக்கும் இடம் மறந்து அவள் நீட்டி முழங்க, 

கருப்பசாமி ஓரவிழியால் அவளை முறைத்தான் என்றால்

“மாப்பிள்ளையாண்டா கூட கல்யாணத்துக்கு அப்புறம் ஜோரா விடிய விடிய பேசிக்கலாம்டி கொழந்த.. இப்ப நான் உச்சரிக்கிற மந்திர உச்சாடனத்த மட்டும் நன்னா சொல்லு..” என்று ஐயரும் தன் பங்கிற்கு மதுராவை மாட்டி விட, சுற்றும் முற்றும் யாரும் தன்னை கவனித்தார்களா? என்று அப்போது தான் பார்த்தவள், தந்தை, வினோதா தமையன்மார்கள் உட்பட சுற்றி இருந்த அனைவரும் ஒன்றுபோல் அவளையே பாசமாய் முறைப்பது போல் இருக்கவும், ‘ஆத்தி டேஞ்சரு.. க்ளோஸ் தி டோர் ‘ என்று வாயை மூடிக்கொண்டு தலையை குனிந்தவள் அதன் பிறகு நிமிரவும் இல்லையே..!

மதுரா கருப்பசாமியின் கலவர திருமணம் இங்கு நடந்து கொண்டிருந்த சமயம்  பத்ரிநாத் மண்டபத்தை விட்டு வெளியேறி இருக்க அதை பார்த்துவிட்ட இரண்டு ஜோடி கண்கள், யாருக்கோ தகவல் அளிக்க, 

“ஷிட்ட் ஒரு வேலைக்கு உதவ மாட்டீங்களா டா நீங்க… முதல்ல உங்களை தாண்டா வெட்டி போடணும் ***”என்று அசிங்கமாய் கத்திய அவ்வுருவம் நிச்சயமாய் மதுராவை அடைய விரும்பும் பெர்னாண்டஸ் என்ற மிருகம் தான்.

அவன் நினைத்தால் இப்பொழுதே மண்டபத்திற்கு சென்று அவளை தூக்கி வர முடியும் ஆனால் அதை செய்ய விடாமல் தடுத்தது அவனை பிடிப்பதற்காக தனி படை ஒன்று அமைத்து இருப்பதாக மேலிடத்தில் இருந்து வந்த ரகசிய தகவலே!

வெளிப்படையாக அவனால் எங்கேயும் செல்ல முடியாது நிலை.. தமிழ்நாட்டில் அவன் தன்னை கைதேர்ந்த பிஸ்னஸ்மேனாக காட்டிக் கொண்டு வலம் வந்து கொண்டிருக்க அவனின் உண்மையான அடையாளம் தேச துரோகியாக வெளியே கசிய ஆரம்பித்ததாக வந்த தகவலும்.. சில முக்கிய அதிகாரிகளின் சந்தேக பார்வைகள் அவன் பக்கம் திரும்பவும்…அவனை கடப்பாவில் பதுங்க வைத்தது.

இப்பொழுது கூட மதுராவிற்காக தான் தமிழ்நாடு வந்திருந்தான். அவளை சூறையாடும் எண்ணத்தோடு இங்கு அவன் காத்திருக்க அதிர்ச்சியாய் வந்தது மாப்பிள்ளை மாறிப் போன செய்தி!

தூத்துக்குடியில் இருந்த மிகப்பெரிய ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் எட்டாவது தளத்தில் நின்றவன் தனது உளவாளிகள் சொன்ன விஷயத்தை கேட்டு கொதித்துப் போனான்.

அவன் எவ்வளவு நுட்பமாய் திட்டம் போட்டு மதுராவின் மாப்பிள்ளை பத்ரிநாத் என்பதை முத்துமாணிக்கத்தின் கட்சித் தலைவர் மூலமாக கண்டறிந்து அவனின் பலவீனத்தில் அடித்து மிரட்டி வைத்திருந்தான்… அதுவும் அவனையே மதுராவை கூட்டிக்கொண்டு தன்னிடம் வந்து விடுமாறு இவன் சொல்லி இருக்க.. மதுராவிற்காக வன்மமும் தேடலுமாய் அவளைக் களவாடும் நேரத்திற்காக காத்துக் கொண்டிருந்தவனுக்கு கிடைத்ததோ ஏமாற்றம்.. போட்ட திட்டமெல்லாம் வீணாக போய்விட மாப்பிள்ளை வேறு மாறிவிட்டதாக வந்த தகவல் அவனை கொதிக்க வைத்தது.

 

இப்பொழுது முத்து மாணிக்கத்தின் திட்டம் கூட ஏதாவது மாறி இருந்தால்? புத்தம் புது பூவாக இருக்கும் மதுரா தன் கை விட்டு போய்விடுவாளே… அவளை கணவனாக இருக்கும் இன்னொருவன் தொட்டுவிட்டால்… அவளின் கன்னித்தன்மை மற்றொருவனுக்கு சொந்தமாகிவிட்டால் அதை நினைக்கவே அவனுக்குள் அத்தனை ஆத்திரம் அகங்காரம் …எல்லாம் … குமிழ் விட்டு அவனின் உள்ளத்தை எரிமலை ஆக்க.. என்ன செய்யலாம்? என்ன செய்யலாம்? என்று யோசனையில் சில நொடிகளை கடத்தியவனுக்குள் மது.. மது ..என்று அவன் உடலில் உள்ள அத்தனை செல்களும் பேயாட்டம் போட, தனக்கு முன் இருந்த அனைத்து தடைகளையும் தாண்டி அவளை அடைந்தே தீர வேண்டும் என்ற வெறி வர,

ஏதோ முடிவெடுத்தவனாகக் கட்சித் தலைவருக்கு அழைத்தவன், ஏதோ ஒரு விஷயத்தை சொல்ல,

அவர் மறுக்கவும், 

“என்ன பத்தி உனக்கு தெரியும் கலிங்கமூர்த்தி என்னால ஒருத்தனை ஆளாக்கி விடவும் முடியும் அடியோடு அழிக்கவும் முடியும் இந்த தடவை எலக்சன் மூலமா உன்ன ஆளாக்கலாம்னு நெனைச்சேன் அப்புறம் உன் இஷ்டம்… உன்ன பத்தின ஆதாரங்கள் என்கிட்ட இருக்கு மறந்துடாத” என்றதும், அவனுக்கு கூழை கும்பிடு போடும் அந்த அரசியல் தலைவரால் அதற்கு மேல் மறுக்க முடியவில்லை.

உடனே அவரின் ஆட்களோடு அங்கு கிளம்பி இருக்க அடுத்த இருபதாவது நிமிடம் மண்டபத்திற்குள் கட்சித் தலைவர் அனுப்பிய பெரும்படையை திரட்டி கொண்டு உள்ளே நுழைந்தான் பெர்னாண்டஸ். 

 கிட்டத்தட்ட பெரியோர்களின் ஆசிர்வாதம் பெற்ற பொன்னாலான மாங்கல்யம் கருப்பசாமியின் கைகளிலிருந்து மதுராவின் கழுத்திற்கு மாறப் போகும் தருணம்..

ஏனோ அவ்வளவு நேரம் இருந்த மனதின் அலைப்புறுதல் நீங்க,

சேர வேண்டிய இடத்தில் சேர போகும் தருணமாய் கண்களை இறுக மூடி தன்னை எப்பொழுதும் இவன் பாதுகாப்பான் என்ற நம்பிக்கையுடன் கருப்பசாமியின் கைகளால் பொன் தாலியை ஏற்க தயாராய் இருந்த மதுராவிற்கு அபசகுணமாய் கேட்டது பெர்னாண்டஸின் குரல்.

மதூ… என்று வெறி பிடித்தவன் போல் கத்திக் கொண்டே மண்டப வாயிலில் நுழைந்தான் பெர்னாண்டஸ்.

மண்டபத்தில் இருந்த அத்தனை பேருக்கும் அதிர்ச்சி தான்.. ஏன் இத்தனை பேர் கைகளில் ஆயுதத்துடன் வந்திருக்கிறார்கள் என்று… அனைவரும் ஏதோ கலவரமாக போகிறது என்று பயத்தில் பார்த்திருக்க… சிலர் அங்கிருந்து நழுவப் பார்க்க… யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை அந்த ராட்சச கும்பல். மண்டபத்தின் கதவு அவர்களால் இழுத்து மூடப்பட்டது.

முத்துமாணிக்கமோ பெர்னாண்டஸை பார்த்து அதிர்ச்சியில் கிட்டத்தட்ட மயங்கி விழாத குறை.. எது நடக்கக் கூடாது என்று இத்தனை தூரம் மெனக்ககெட்டாறோ எல்லாம் வீணாகியதா? தன் மகளின் வாழ்க்கை அவ்வளவுதானா? என்று பார்வை வாயிலில் நுழைந்தவனையே நிலைகுத்திப் பார்த்திருக்க, மள மளவென்று ஆயுதத்தோடு உள்ளே நுழைந்தவர்களை மண்டபத்திற்குள் ஆங்காங்கே இருந்த முத்து மாணிக்கத்தின் பாதுகாப்பாளர்கள் ஒருபுறம் அவர்கள் உள்ளே நுழையாமல் தடுக்க முயற்சித்தார்கள் என்றால், பிரகதீஷ் ஒருபுறம் காவல் நிலையத்திற்கு தொடர்ந்து அழைக்க முயற்சி செய்து கொண்டிருக்க.. ஜாமர் வைத்து தகவல் தொடர்பையே துண்டித்து இருந்ததால் அதுவும் முடியாமல் போனது.

பெர்னாண்டஸ் மட்டும் தொடர்ந்து மணமேடையில் மனதை மயக்கும் மாய மோகினியாய் மணப்பெண்ணிற்கான சர்வ அலங்காரத்துடன் அமர்ந்திருந்த மதுராவை நோக்கி வேட்டையாடும் பார்வை பார்த்தவாறே மெதுவாய் முன்னேற… ஜெகதீஷ் அவனை தடுக்க வர ஒரே எட்டில் அவனை மிதித்து தள்ளியவன் தன் நடையை தொடர… வினோதாவோ கீழே விழுந்து கிடந்த தம்பியை கூட தூக்கிவிடாமல் பயத்தில் சுவரோடு சுவராக ஒன்றி போய் தன் கணவனை இழுத்துப் பிடித்துக் கொண்டு நின்று கொண்டாள்.

ஆனால் இத்தனை கலவரத்தில் யாரும் எதிர்பார்க்காத இன்னொன்றும் நடந்தது…

அதுதான் மதுராவின் திருமணம்!

ஆம் அத்தனை ஆபத்திற்கு நடுவே நிதானமாய் அவளின் வெண்சங்கு கழுத்தில் பொன் தாலியை அணிவித்து விட்டான் கருப்பசாமி அவனின் கண்கள்.. பயத்தில் விழி விரித்து அவனையே பார்த்திருந்த மதுராவின் மீது இருக்க… அவளோ தன் கழுத்தை தீண்டிய பொன் தாலியை நம்ப முடியாமல் பார்த்துவிட்டு அவர்களை நோக்கி பெருங்கோபத்துடன் வந்த பெர்னாண்டஸையும் அவன் கைகளிலிருந்த துப்பாக்கியையும் அது சரியாக கருப்பசாமியை நோக்கி குறி பார்த்து இருப்பதையும் உணர்ந்தவள், அடுத்து நடக்கப் போகும் விபரீதத்தை உணர்ந்தவளாய், 

“பிளாக் நோஓஓ”என்று கத்தியிருக்க, 

அடுத்த நொடி மிக அருகிலேயே.. கேட்டது துப்பாக்கியில் இருந்து வெளிவந்த தோட்டாவின் சத்தம்..!

மண்டபமே ஒரு நொடி உறைந்து போன நிலை…! 

கருப்பசாமியின் நிலையோடு… மதுராவின் கதறல் மட்டுமே அப்போதைய நிசப்தத்தை கிழிப்பதாய்!

 

தொடரும்…

 

போன எபிசோட்க்கு அவ்வளவு சப்போர்ட்… நிறைய கமெண்ட்ஸ் வந்து இருந்துச்சு.. குமுதா ஹேப்பி அண்ணாச்சி ☺️♥️

எனக்கு ஆதரவும் விமர்சனங்களும் தரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் 😍🥰♥️

இதே சப்போர்ட் அடுத்தடுத்த எபிஸ்க்கும் குடுப்பீங்கன்னே நம்பிக்கையோடு…😌🙆🏻

Shadow hero TTN competition 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
47
+1
4
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    14 Comments

    1. Hi sis…
      Kalavarathil marriage… super sis..
      Karupuku ethuvum akalala sis…
      Karupu yarune innum sollala sis… Mathura mathiri nakalum karupu yarunu yosikirom… 🤔🤔
      Waiting next episode sis…

      1. Author

        Thank you so much sister..unga comment paathu happieee😍💖 seikrem therinchidum sis🥰❤️ black yaarunu seikrem therinchidum 😊🤫

    2. பிளாக் தான் சுட்டு இருப்பான் மிருகத்தை.

    3. இந்த பிளாக் தான் அந்த தனிப்படையா??
      பெர்னாண்டஸ்ஆ சுட்டது பிளாக் தான!!!

      1. Author

        நெக்ஸ்ட் எபிசோட்ல பாக்கலாம் சிஸ்டர்… தேங்க்ஸ் பார் யுவர் கமெண்ட் ❤️😍

      1. Author

        ஈஈஈ அடுத்தடுத்த எபில பாக்கலாம் சிஸ்டர் 🥰😍💖