
நினைவுகள் -36
அன்று…
வாட்ச்மேன் வந்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்ட ஆகாஷ், ” டேபிளில் வச்சிட்டு போங்க.” என்றான்.
அவர் சென்றதும் அனன்யாவிடம் திரும்பி, ” வா அனு… சாப்பிடலாம்.” என.
” எனக்கு வேண்டாம்… ” என்றவளின் கண்களிலிருந்து மீண்டும் கண்ணீர் பெருக…
” சும்மா அழக் கூடாது. என்னை கல்யாணம் பண்ணது உனக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கா?” என்றான் ஆகாஷ்.
‘ ஏன் இப்படி?’ என்பது போல பாவமாக அவனைப் பார்த்தாள் அனன்யா.
” இன்னைக்கு நீ அழவே கூடாது. புரியுதா அனு? வாழ்நாள் முழுவதும் நாம சந்தோஷமாக இருப்பதற்கு அச்சாரம் போட்ட நாள். அதுக்காகத்தான் சொல்றேன். இப்போ வா.” என்று அவளைக் கைப்பிடியாக அழைத்துச் சென்றவன், டைனிங் டேபிளில் இருந்த உணவை தட்டில் வைத்து ஊட்டி விட்டான்.
அவன் ஊட்ட, ஊட்ட… அவளுக்கு அவளது பாட்டியின் ஞாபகம் வந்தது. கூடவே கண்களில் கண்ணீரும் பெருகியது.
” ப்ச்.” என்றவன் இடது கையால் தலையை கோதியவாறே, ‘ எப்படி இவளது அழுகையை நிறுத்துவது.’ என்று தனக்குள் குழம்பிக் கொண்டிருந்தான்.
‘இதுக்கு மேல் இவள் சாப்பிடுவது கடினம்.’ என்று எண்ணியவன், அனுவை அவனது அறைக்கு அழைத்துச் சென்றான்.
அவளோ செறுமியபடியே இருக்க…
” ப்ச்… அழாதடா… ” என்றவன் அவளை இறுக்கி அணைக்க…
அவனைக் கட்டிக் கொண்டவள், கதறி அழுதுத் தீர்த்தாள்.
அவளது அழுகையை நிறுத்த வழித் தெரியாமல் அவளது முகம் முழுவதும் தனது முத்திரையைப் பதித்தான்.
ஒரு நிமிடம் அதிர்ந்த அனன்யா, திகைத்து விலக முயன்றான்.
அவன் விட்டால் தானே… ஆறுதலுக்காக ஆரம்பித்தது, அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்தது.
அவனது கரங்கள் மெல்ல, மெல்ல எல்லை மீற… அவளது மறுப்புக்களும் மெல்ல, மெல்ல மறைந்தது.
அடுத்து நகர்ந்த மணித்துளிகள் முழுவதும், இருவரும் வேறு உலகிற்குச் சென்றனர்.
முதலில் நிதானத்திற்கு வந்த ஆகாஷ், தான் செய்த செயலை நினைத்து, தன் தலையில் தட்டிக் கொண்டான்.
அனன்யாவோ எதுவாக இருந்தாலும், ஆகாஷ் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கையுடன் இருந்தாள்.
அவளைப் பார்த்த ஆகாஷ், ” அனு… நான் வேணும்னே எதுவும் செய்யலை. நீ என்னை நம்புற தானே. நான் இப்பவே உன்னோட உங்க வீட்டுக்கு வரேன். எதுவா இருந்தாலும் ஃபேஸ் பண்ணிக்கலாம்.” என்று வினவ.
அவளோ முகம் முழுவதும் பூரிப்புடன், ” உன்னை நம்பாமல் யாரை நம்பப் போறேன். ஐ லவ் யூ ஆக்ஸ்.” என்று அவனை அணைக்க.
மெல்ல அணைத்து விட்டு விலகியவன், ” சரி அனு… நீ ஃப்ரெஷ்ஷப் ஆகிட்டு வா.” என்று விட்டு வெளியே சென்றான்.
அனன்யாவோ ஆகாஷ் மேல் உள்ள நம்பிக்கையில் நடந்த இனியத் தவறை எண்ணி, தனக்குள் புன்னகைத்துக் கொண்டே இருந்தாள்.
ஆகாஷோ, ‘ தன்னை நம்பி வந்தவளை, எல்லோரிடமும் சொல்லி முறையாக வாழ்க்கையை ஆரம்பித்து இருக்கணுமோ.’ என்று எண்ணி குற்றவுணர்ச்சியில் தவித்தான்.
இயல்புக்கு மாறாக படபடப்புடன் ஆகாஷ் இருக்க… திரும்பி பைக்கில் செல்லும் போது ரோட்டில் கவனத்தை வைக்காமல் ஓட்ட…
திடீரென்று வேகமாக ஒரு பைக் கண்முன்னால் கன்னாபின்னாவென்று வேகமாக வர, ரோட்டில் கவனமில்லாத ஆகாஷ் அனிச்சை செயலாக வண்டியை ஒடிக்க…
எதிரே வந்த லாரியில் மோதி தூக்கி வீசப்பட்டனர்.
அனன்யா உருண்டு ரோட்டோரமாக விழுந்து மயங்க…
ஆதியோ ஒரு கல்லில் தலைமோதி அந்த இடத்திலே உயிரை விட்டிருந்தான். அவனது விழிகளோ அனன்யாவை பார்த்தவாறே உயிரை விட்டிருந்தது.
தனக்குள்ளே சிரித்து வெட்கப்பட்டு கொண்டு வந்த அனன்யா, முதலில் கவனிக்கவில்லை. வண்டி தடுமாறுவதை…
ஆகாஷ் வண்டி ஓட்டுவதில் கவனத்தை வைக்கவில்லை என்பதை உணர்ந்தவள், அவனது தோளைத் தொட்டு சமாதானம் செய்ய முயல… திடீரென்று எதன் மீதோ மோதி தூக்கி வீசப்பட்டாள்.
அவள் மயங்கி கண் மூடும் முன்னே, பார்த்தது என்னவோ, ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆகாஷை தான்.
இரண்டு நாட்களுக்கு பிறகு தான் கண் விழித்தாள் அனன்யா.
அவளது கண் பார்த்த விஷயத்தை, மூளை ஏற்க மறுக்க, பெரிதாக எந்த அடியும் படாத அவள் கண் விழிக்க தாமதம் ஆனது.
விளைவு, ஆகாஷின் உடலைக் கூட அவளால் பார்க்க முடியவில்லை.
அனன்யா கண் விழித்ததும் நர்ஸ் விஸ்வரூபனை அழைக்க… விரைந்து ஓடி வந்தான்.
” அந்துருண்டை…” என்ற அழைப்பில், அவனை நிமிர்ந்துப் பார்த்தவள், ” மாமா” என்றவள் கதறி அழுதுத் கொண்டே எழுந்திருக்க முயற்சி செய்தாள்.
” கொஞ்சம் பொறு டா. ட்ரிப்ஸ் ஏறுது.” என்றுக் கூறியவன், அவளை சமாதனப்படுத்த முயல…
” ஆகாஷுக்கு ஒன்னும் இல்லை தான மாமா. நான் அவனைப் பார்க்கணும். ” என்றுக் கதற…
” ஷ்… காம் டவுன். இது ஹாஸ்பிடல்.” என்றான் விஸ்வரூபன்.
அப்போது தான், அவள் தான் எங்கே இருக்கிறோம் என்பதையே கவனித்தாள்.
இவ்வளவு நேரம் விஸ்வரூபன் ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருக்கிறது என்று சொன்னதைக் கூட உள்வாங்கிக் கொள்ளவில்லை.
” அப்போ ஆக்ஸிடென்ட் ஆனது உண்மை தானா… ஆகாஷ் இரத்த வெள்ளத்தில் கிடந்ததும் உண்மை தானா… ” என்று புலம்பியவள், தன் கழுத்தை வருடிப் பார்த்துக் கொண்டாள்.
மஞ்சள் கயிறு தென்பட… ” ஆகாஷ் உயிரோட தான இருக்கான். எங்க அவனைக் காணோம். நீங்க உள்ள விடலையா…” என்று அவளே எதாவது கூறுவதும், புலம்புவதுமாக இருக்க…
அவளை சமாளிக்க முடியாமல், நர்ஸிடம் உறங்குவதற்கான இன்ஜெக்ஷனை ரெடி பண்ண சொன்னவன், அதைப் போட்டும் விட்டான்.
அவள் மெல்ல புலம்பிக் கொண்டே உறங்கவும், கண் கலங்க அங்கிருந்த நாற்காலியில் ஓய்ந்துப் போய் அமர்ந்தான்.
இரண்டே நாட்களில் வீட்டோட நிம்மதியே பறந்திருந்தது.
வீட்டில் நிச்சயத்தார்த்ததிற்கான ஏற்பாடுகளை செய்து விட்டு, இவளை காணவில்லை என்று டென்ஷனோடு இருக்க…
ஆதவனிடமிருந்து தான் அழைப்பு வந்திருந்தது.
அவர்களது ஹாஸ்பிடலில் அனன்யாவை சேர்த்திருப்பதாக கூறியவன், வேறு எதுவும் சொல்லவில்லை. அவனது குரலும் சரியில்லாமலிருக்க, என்னவோ ஏதோ என்று பயந்தவன் வீட்டில் கூற…
எல்லோருமே கிளம்பினர்… விஸ்வரூபன் தான், ” பாட்டி… அத்தை… நீங்க எல்லோரும் இங்கேயே இருங்க. அம்மா பாத்துக்கோங்க. நானும், அப்பாவும் போயிட்டு வர்றோம். அங்க எல்லாம் இவங்க வேண்டாம். அவங்க ஹாஸ்பிடல்ல தான் சேர்த்து இருக்காங்களாம்.” என.
” சரி.” என தலையாட்டினர்.
அங்கே சென்ற விஸ்வரூபன் ரிஷப்ஷனில் விசாரித்தான்…
ஆஸ்பத்திரியில் எல்லோருமே படபடவென டென்ஷெனோடு அங்கும், இங்கும் குழப்பத்தோடு போய் கொண்டிருந்தனர்.
இவன் விசாரிப்பதற்கு கூட யாரும் ஒழுங்காக பதில் சொல்லாமல் இருந்தனர்.
” வாட்ஸ் கோயிங் ஆன். ” என்று கத்தினான். அதற்குப் பிறகு தான் தெரியும் ஆகாஷோட தான் வெளியே சென்றிருக்கிறாள். அவன் இறந்து விட்டான் என்றும்…
அதற்குப் பிறகு நேரத்தை வீணாக்காமல் இவர்களது ஹாஸ்பிட்டல் ஆம்புலன்ஸை வரவழைத்து, அனுவை அழைத்துக்கொண்டு உடனடியாக அந்த இடத்தை விட்டு கிளம்பினான்.
அனு, ஆகாஷுடன் இன்னும் கான்டாக்ட் வைத்திருப்பதை அவனால் நம்பவே முடியவில்லை. இன்னும் இதை விட பெரிய அதிர்ச்சியை ஹாஸ்பிடல் சென்று தெரிந்துக் கொண்டான்.
இன்று…
ஸ்வேதா தான், ” ராதிகாவோட ஃப்ரெண்ட். போனமுறை அவந்திகாவோட பிறந்தநாளுக்கு கோவில்ல அன்னதானம் ஏற்பாடு செய்திருந்தோம்ல. அப்போ ராதிகாவோட வந்திருந்தாங்க..” என்றாள்.
” ஓ…” என்றவன் தன்னையும் அறிமுகப் படுத்திக் கொண்டான்.
விக்ரம் அப்போது ஊரில் இல்லை. அதான் அவனுக்கு ஆதவனை தெரியவில்லை.
சுந்தரியிடம் இருந்த குழந்தையிடம் கையை நீட்ட…
அவனிடம் தாவிய அவந்திகாவோ, அதற்குப்பிறகு அவனை விட்டு நகரவே இல்லை.
ராதிகா எல்லோருக்கும் காஃபி கொண்டு வந்து கொடுத்தாள்.
சற்று நேரம் கழித்து கீழே இறங்கி வந்த விஸ்வரூபன், அங்கு ஸ்வாதீனமாக அமர்ந்து இருந்த ஆதவனைப் பார்த்து முகம் இறுக நின்றான்.
சுந்தரி, ஆதவன் மடியிலிருந்த குழந்தைக்கு ஊட்டி விட்டுக் கொண்டு இருக்க… அவனால் குழந்தையை தூக்கிக் கொண்டு செல்ல முடியவில்லை.
” ராதிகா.” என்று அழுத்தமாக அழைக்க…
அவன் அருகில் வந்தாள் ராதிகா.
” கம் டூ அவர் ரூம்.” என்றவன் அங்கிருந்த யாரிடமும் எதுவும் பேசாமல் மாடிக்குச் சென்றான்.
மாடிக்கு வந்தவனோ கோபத்தை அடக்க முடியாமல், டென்ஷனோடு இருக்க…
கூலாக வந்தாள் ராதிகா.
” என்ன வேணும் விஷ்வா? காஃபிய இங்கே கொண்டு வரட்டுமா?” என்று எதுவும் தெரியாதது போல வினவ.
” நான் இப்போ எதுக்கு கூப்பிட்டேன் என்று உனக்குத் தெரியாதா? ” என்று அவளைப் பார்த்து வினவினான் விஸ்வரூபன்.
” ம்ஹூம்.” என்று தோளைக் குலுக்க…
” என்ன டென்ஷனாக்காத ராதா. அவனை வீட்டுக்கு வரக் கூடாது என்று தான சொல்லியிருந்தேன்.” என…
” ஒரு ஸ்மால் சேஞ்சேஸ். உங்க வீட்டுக்கு வரக்கூடாது என்று தானே சொன்னீங்க. அதான் என் ஃப்ரெண்டை அதுக்கு அப்புறம் உங்க வீட்டுக்கு வரச் சொல்லலையே.” என்று அழுத்திச் சொல்ல.
” அப்போ எனக்கு இங்கே எந்த உரிமையும் இல்லை என்று சொல்றீயா.”
” நான் அப்படி சொல்லலையே. நீங்க தான் என் வீட்டுக்கு வரக்கூடாதுன்னு சொன்னீங்க. எனக்குத் தான் எந்த உரிமையும் இல்லை. ஐ நோ. பட் ஏத்துக்கத் தான் கஷ்டமா இருக்கு.” என்றாள்.
வேகமாக அவளருகில் வந்தவன், ” நான் ஏன் சொன்னேன்னு உனக்குத் தெரியும். ரைட்?”
” என் கிட்ட ஏதாவது ஷேர் பண்ணியிருக்கீங்களா? அப்புறம் எப்படி எனக்குத் தெரியும். நான் அந்த வீட்ல இருக்கிற வேண்டாத விருந்தாளி. உங்க ரூம்ல இருக்குற சோஃபா, கட்டில் ட்ரெஸிங்டேபிளோட சேர்ந்து நானும் ஒரு ஜடம் . அவ்வளவு தானே… வேற ஏதாவது ரியாக்ட் பண்ணியிருக்கீங்களா?” என்று பொறும.
” தேவையில்லாதது பேசாத ராதிகா.”
“ஏன் பேசுனா என்ன பண்ணுவீங்க? நான் அப்படித் தான் பேசுவேன்.” என்று மீண்டும் ஏதோ கூற வர…
அவளது இதழை மூடியிருந்தான், தன் இதழ் கொண்டு…
அடுத்து நடந்தவை எல்லாம் அவனை மீறி நடக்க…
இனிய மயக்கம் தெளிந்து, நிதானத்திற்கு வந்தவன் தன்னையே நொந்துக் கொண்டு, தலையில் கைவைத்து அமர்ந்திருந்தான்.
குளித்து விட்டு வெளியே வந்த ராதிகாவோ அவனைப் பார்த்து முறைத்தாள்.
அவளை நிமிர்ந்துப் பார்த்த விஸ்வரூபனோ, குற்றவுணர்வுடன் தலை குனிந்துக் கொண்டான்.
குற்றவுணர்வுடன் தலைக்குனிந்த விஸ்வரூபன் அருகில் சென்ற ராதிகா, கைகளைக் கட்டிக் கொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனோ நிமிர்ந்தபாடில்லை என்றவுடன்,” ஹலோ… இப்போ என்ன நடந்திடுச்சுன்னு சார் சீன் போட்டுட்டு இருக்கீங்க.” என்றாள் ராதிகா.
“ ஹேய் ராதா… ரியல்லி சாரி. உண்மையிலே உன்னை ஹர்ட் பண்ணனும்னு நான் நினைக்கலை. காட்… உன்னை கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு தான் விலகி விலகிப் போனேன். கடைசியா எங்க பாட்டி நினைச்சது மாதிரியே நடந்துடுச்சு. ” என்று அவளது கையைப் பற்றி, பித்துப் பிடித்தாற் போலக் கூறினான்…
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
1
+1
+1
