
நினைவுகள் -23
அன்று…
” அடிப்பாவி… அப்ப நாலு வருஷமா நீ தான் எனக்கு சீக்ரெட்டா ரெட் ரோஸ் கொடுத்ததா… ” என்று விஸ்வரூபன் வினவ…
முகம் சிவக்க தலைக் குனிந்து இருந்தவள், மெல்ல விழிகளை மட்டும் உயர்த்தி அவனைப் பார்த்து சிரித்தாள்.
” ப்ச்… நான் தான் உன் கிட்ட ஃபர்ஸ்ட் லவ் சொன்னேன் என்று நினைச்சு சந்தோஷப்பட்டேன். பட் நீ எனக்கு முன்னாடியே ரெட் ரோஸ் கொடுத்து, காதலை சொல்லாமல் சொல்லிட்டியா. நான் தான் புரிந்துக் கொள்ளாமல் இருந்திருக்கிறேன். ” என்று அவள் கை விரல்களை வருடியபடியே கூறியவன், அந்த நிகழ்ச்சியை நினைத்துப் பார்த்தான்.
‘ வழக்கம்போல பிலிப்பைன்ஸில் இருந்து அனன்யா கால் செய்து குடும்பத்திலுள்ள எல்லோரிடம் பேசி முடித்து விட்டு, இறுதியாக விஸ்வரூபனுக்கு அழைத்திருந்தாள்.
” ஹாய் மாம்ஸ்… எப்படி இருக்கீங்க?”
” ம்… இது வரைக்கும் நல்லாத்தான் இருந்தேன். இப்ப என்ன குண்டைத் தூக்கிப் போட போற அந்துருண்டை?”
” மாமா… ” என்று சிணுங்க…
” சரி! சரி! அழாத… இப்போ எதுக்கு ஃபோன் பண்ண? காரணமில்லாமல் எனக்கு ஃபோன் பண்ண மாட்டியே?”
” நான் ஒன்னும் அழல. ” என்று முதலில் கூறி விட்டு தான், தான் ஃபோன் செய்ததற்கான காரணத்தையேக் கூறினாள் அனன்யா.
” அது வந்து மாமா… எங்க காலேஜ்ல ஐ எம் டி டே கொண்டாடுறாங்க. ” என…
” அப்படின்னா என்ன அனு?” என்று இடையிட்டான் விஸ்வரூபன்.
” இந்தியன் மெடிக்கல் ஸ்டூடெண்டுக்கான ஒரு பங்க்ஷன். காலேஜ்ல ஒவ்வொரு ஸ்டுடென்ட்ஸுக்கும் தவுசண்ட் பெசோஸ் ( பிலிப்பைன்ஸ் கரன்சி) அவங்களே கொடுத்துருவாங்க. அத வச்சு அங்க நாம ஸ்டால் போடலாம். நான் ரோஸ் ஸ்டால் போடுறேன்.”
” வேற என்ன ஸ்டால் போடலாம் அனு?”
” புட் ஸ்டால், ஜுஸ் ஸ்டால், பானிப்பூரி ஸ்டால், கேம்ஸ் ஸ்டால்னு நிறைய இருக்கு மாமா .”
” வெரிகுட்… ஆனால் நீ புட் ஸ்டால் தான் போடுவேன் நினைச்சேன்.” என்று கிண்டலாக சிரிக்க…
” அது சரி தான். நானும் அப்படித்தான் நினைத்தேன். பட் சரி வராதுன்னு விட்டுட்டேன்.”
” வொய் அந்துருண்டை?”
” அதுவா மாமா… புட் ஸ்டால் போட்டால், நான் அதை சாப்பிட்டுகிட்டே இருப்பேன். அப்புறம் ஃப்ராஃபிட் குறையும். அப்புறம் அது வேலையும் அதிகம். இதுவே ரோஸ் ஸ்டால் போட்டால் ஜாலியா இருக்கலாம்.
ஒரு ரோஸ் தெர்டி பெசோஸ். மோஸ்ட்லி நிறைய ஸ்டூடண்ட்ஸ், அவங்க சீக்ரெட் க்ரெஷ்ஷுக்கு கொடுக்கிறதுக்கு ரோஸ் வாங்குவாங்க. அவங்க யார் கிட்ட கொடுக்க சொல்றாங்களோ, அவங்கக்கிட்ட சீக்ரெட்டா நாங்க போய் கொடுத்துருவோம். கான்ஃபிடன்ஸியாலிட்டியை மெயின்டைன் பண்ணுவோம். இது ஜாலியாக இருக்கும்.
அதுவுமில்லாமல் என்னோட ராது செல்லம், பானிப்பூரி ஸ்டால் போடப்போறா, அவளுக்கு அதுல எக்ஸ்பிரியன்ஸ் இருக்கு.
என்னோட ஸ்டால்ல சீக்கிரம் வித்துடுவேன். அப்புறம் அதில் வேலை இருக்காது. தென் ஜாலியா என் ஃப்ரண்ட்ஸோட உட்கார்ந்து, அரட்டை அடிச்சிக்கிட்டே, வேணுன்றதை சாப்பிட்டுக்குவேன். எப்படி என்னுடைய இராஜதந்திரம்?” என்றுக் கூறி அனு புன்னகைக்க…
” அதுக்கு பேரு ராஜத்தந்திரமில்லை.
சோம்பேறித்தனம். சரி அதெல்லாம் எனக்கு எதற்கு? உன் ஃப்ரெண்ட் தான் பாவம். உனக்கு செஞ்சுக்கொடுத்தே டயர்டாயிடுவா.”
” மாமா… என் ஃப்ரெண்டைப் பத்தி எதுவும் பேசாதீங்க. நீங்க மண்டே இங்கே வருவீங்களா? இல்லையா?”
” ஹேய் அந்துருண்டை நான் எதுக்கு அங்கே வரணும்?”
” மாமா! நான் முதன் முதலா ஸ்டால் போட்டு மணி ஏர்ன் பண்ண போறேன். நீங்க வர மாட்டீங்களா?” என்று பாவமாக அனன்யா வினவ?
” ஏய் லூசு! இங்கே இருக்குற எல்லா ஹாஸ்பிடல்லையும் உனக்கும் ஷேர்ஸ் இருக்கு. உன்னோட அக்கௌண்ட்ல மணி ஆட்டோமேடிக்கா வரும். இதுக்கு போய் இவ்வளவு அலப்பறை பண்ணுற…”
” அதெல்லாம் எனக்கு தெரியாது மாமா. நீங்க வந்து தான் ஆகணும். என்ன செலவாகும்னு பார்க்கிறீங்களா?” என்று அனு கோபப்பட…
” சரி சரி கோபப்படாதே… நான் வரேன்.” என்றவன் சொன்னபடியே வந்தான்.
” ஹாய் மாம்ஸ்… வந்தது தான் வந்தீங்க. ஒரு ரோஸ் வாங்கிக்கோங்க.” என்று அனு சொல்ல…
” அந்துருண்டை! உதை வாங்கப் போற.” என்றவனின் பார்வையோ, சுற்றிலும் பாய்ந்தது.
சற்றுத் தள்ளி வேறோரு ஸ்டாலில் பிஸியாக இருந்த ராதிகாவை கண்டுக்கொண்டது.
அவளும், அவனை ஒரு பார்வை பார்த்தவள், பிறகுத் திரும்பிக் கொண்டாள்.
அவளது இன்னொரு தோழியிடம் ஸ்டாலை கொஞ்ச நேரம் பார்த்துக்க சொல்லி விட்டு அங்கிருந்துச் சென்று விட்டாள் ராதிகா.
தன் மாமா வந்ததும், ராதிகாவைப் பார்த்தாள் அனன்யா, அவளோ அங்கு இல்லை.
‘எங்கே போயிருப்பாள்?’ என்ற யோசனையுடன் பார்வையை சற்று தள்ளி செலுத்த, அங்கிருந்த ரோஸ் ஸ்டாலிலிருந்து திரும்பி வந்துக் கொண்டிருந்தாள்.
” மாம்ஸ் ஃபைவ் மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க. இதோ வந்துடுறேன்.” என்றவள் நின்றதோ ராதிகாவிற்கு
முன்பு நின்றவள், அவளைப் பார்த்து முறைத்தாள்.
ராதிகாவோ சற்று அதிர்ந்து, “அது… அனு…” என்று இழுக்க…
” ரகசியமா இருக்கணும்னு என்னோட ஸ்டாலை விட்டுட்டு வேற இடத்துக்கு போயிருக்க. ரைட்.” என்று கோவமாகக் கூற…
” அப்படியெல்லாம் இல்லை அனு.”
” சரி! அப்போ யாருக்கு கொடுக்க சொன்ன?” என்று அனு கேட்க…
” ம்கூம்…” என்று முகம் சிவக்க தலையசைத்தாள் ராதிகா.
” நீ சொல்லலைன்னா என்ன? எனக்குத் தெரியாதா? எங்க மாமாவுக்கு தானே கொடுக்க சொன்ன?” என்றாள் அனன்யா.
அவள் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியில் ராதிகா உறைந்து நிற்க…
” அடிப்பாவி! அப்போ உண்மையா எங்க மாமாவுக்கு தான் கொடுக்க சொன்னீயா. ஐயோ! எனக்கு போட்டியா வர்றீயா” என்று அனு கிண்டல் செய்ய…
கண்கள் கலங்க ராதிகா, “அனு அப்படி எல்லாம் சொல்லாத. நீ உங்க மாமாவை கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சா, நான் உங்களுக்கு நடுவே வர மாட்டேன்.” என்றாள்.
” அட லூசு!சும்மா கேலி தான் பண்ணேன். நீ எங்க மாமாவை கல்யாணம் பண்ணிட்டு வந்தா, எனக்கு தான் ரொம்ப சந்தோஷம். நாம என்னைக்கும் பிரிய வேண்டாம். சரிடி இனிமே ரோஸ் என்கிட்ட தான் வாங்கணும்.” என்றுக் கூறி சிரிக்க…
ராதிகாவும் சிரித்தபடியே, ” அனு! உங்க மாமாக்கிட்ட சொல்லக்கூடாது.” என்றாள்.
” ஓகே ராது செல்லம்.” என்றாள் அனன்யா.
அடுத்த வருடத்தில் இருந்து
அனன்யா தான் ராதிகாவுக்கான ரோஸை கொடுக்க…
” ஹேய் அந்துருண்டை! யாருடா ரோஸ் கொடுக்க சொன்னா?” என்று விஸ்வரூபன் கேட்டான்.
” சாரி மாம்ஸ். திஸ் இஸ் சீக்ரெட்.” என்று அனு மறுத்து விட்டாள்.
ஒரு வேளை அது ராதிகாவா இருக்க கூடுமோ என்று மனதிற்குள் ஒரு பரபரப்பு உண்டாகும் போதே, இருக்காது என்று அவனே முடிவு செய்துக் கொண்டான்.’
இன்று அதைத்தான் அவன் ராதிகாவிடம் கேட்டு தெளிவு செய்துக் கொண்டான்.
விஸ்வரூபன், ராதிகாவின் கைப்பிடித்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த அனன்யா, ஒருவழியாக ராதிகா தன் காதலை கூறி விட்டாள் போல என்று எண்ணி சிரிப்புடனே அவர்களுக்கு அருகே வந்து அமர்ந்தாள்.
இன்று…
வீடியோவைப் பார்த்து விஸ்வரூபன் முகம் இறுக நின்றதெல்லாம் ஒரு நொடி தான், பிறகு
அங்கு நின்றுக் கொண்டிருந்த ட்ரைனிங் டாக்டரை வரச் சொன்னான்.
அவரோ பயந்துக் கொண்டே செல்ல… “இப்போ நான் சொல்றதை வீடியோ எடு…” என்றவன் அவனது ஃபோனை அன்லாக் செய்துக் கொடுத்தான்.
அமர்ந்து இருந்த ராதிகாவை எழுப்பி லேசாக அணைத்தபடி, ” ஹாய்… எவ்ரிபடி. ஷீ இஸ் மை பியான்ஸி. எங்கள் இருவருக்கும் நிச்சயதார்த்த முடிஞ்சிருச்சு. கூடிய சீக்கிரம் கல்யாணம்.” என்றுக் கூறியவன், தங்கள் இருவரது கைகளையும் காட்டினான் ஒன்று போல் உள்ள கப்புள் ரிங் ஜொலித்தது.
வீடியோ எடுத்து முடித்தவுடன், தனது கையை நீட்டி ஃபோனை கேட்க…
அந்த டாக்டரோ, விஸ்வரூபனின் கோபத்தை பார்த்து, வியர்வை நெற்றியில் துளிர்க்க, படபடப்புடனே ஃபோனைக் கொடுத்தார்.
தனது ஃபோனை வாங்கியவன், இப்போது எடுத்திருந்த வீடியோவை,, காலேஜ்ஜோட வாட்ஸ் அப் க்ரூப்லையும், எப்ஃபியில் உள்ள ஹாஸ்பிடல் பேஜ்லையும் ஷேர் செய்தான்.
விஸ்வரூபன், இருவருக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்தது, என்று வீடியோ எடுத்து போட்டவன்,
அதற்குப் பிறகே வீட்டிலிருப்பவர்களுக்கு தகவல் சொன்னான்.
அவன் செய்தவற்றையெல்லாம் அருகிலிருந்துப் பார்த்தவள், மறுப்பு ஏதும் தெரிவிக்காமல், ஹாஸ்டலுக்கு கிளம்பிச் சென்றாள்.
தன்னிடம் சொல்லாமலே செல்லும் ராதிகாவை பார்த்துக் கொண்டிருந்தான் விஸ்வரூபன்.
அதற்குள் வீட்டிலிருந்தும் வந்துவிட்டார்கள்.
சற்றுநேரத்தில் கிருஷ்ணன் கண் விழித்து விட…
ரஞ்சிதம், கௌரி, விஸ்வரூபன் மூவரும் உள்ளே சென்றனர்.
கலங்கிய கண்களுடன் வந்த பெண்கள் இருவரையும் பார்த்து, லேசாக புன்னகைத்து தனக்கு ஒன்றும் இல்லை என்றார். விஸ்வரூபனை நிமிர்ந்துக் கூடப் பார்க்கவில்லை.
மெல்ல தந்தையின் கைகளைப் பற்றிய விஸ்வரூபன், ” அப்பா! ரிலாக்ஸா இருங்க. உங்க இஷ்டப்படியே கல்யாணம் பண்ணிக்கிறேன்.” என்று சம்மதம் சொல்ல.
” என்னப்பா! அப்பா செத்துடுவேனு பயந்துட்டீயா? இல்லை நம்ம ஹாஸ்பிடலில்ல ஏதும் போதி மரம் இருக்கா?” என்று கிண்டல் பண்ண…
” அப்பா…” என்று தயங்கிய விஸ்வரூபன், ‘ எப்படி இருந்தாலும் அவருக்கும் எல்லாம் தெரிய வரும்.’ என்று எண்ணியவன், சற்று முன் நடந்ததை அவரிடம் மெல்லிய குரலில் கூறினான்.
அதற்குப் பிறகு என்ன… அது ஹாஸ்பிட்டல் என்பதையும் மறந்து கிருஷ்ணன் வேகமாக திருமணத்தை நடத்த திட்டம் தீட்டினார்.
” டாட்! முதல்ல வீட்டுக்கு வாங்க… அப்புறம் ராதிகாவின் பெற்றோரிடம் பேசணும். அவங்க சம்மதம் முக்கியம். நெக்ஸ்ட் கல்யாணத்தைப் பத்தி ப்ளான் பண்ணுங்க. பட் எதுவா இருந்தாலும் சிம்பிளாக கல்யாணத்தை செய்யுங்க.” என்றான்.
” சரிப்பா… அப்போ டிஸ்சார்ஜ் ரெடி பண்ண சொல்லு. வீட்டுக்கு போவோம்.”
” டாட்… கிண்டல் பண்றீங்களா? இன்னைக்கு ஃபுல்லா அப்சர்வேஷன்ல இருக்கணும். நீங்களே ஒரு டாக்டர். உங்களுக்கத் தெரியாததா? இரண்டு நாளாவது ஃபுல் ரெஸ்ட்ல இருக்கணும்.” என்று அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே, சீஃப் டாக்டர் வந்தார்.
” ஹலோ! டாக்டர்! ஹவ் ஆர் யூ ஃபீலிங் நவ்.” என்றார் சீஃப் டாக்டர்.
” நவ் ஐயம் ஆல்ரைட்.” என்று கம்பீரமாகக் கூறினார்.
” இன்னைக்கு ஈவினிங் எப்படி இருந்தீங்க தெரியுமா? தேங்க் காட். அந்த நேரத்துல கரெக்டா ராதிகா வந்தாங்க. உங்க ட்ரைனிங் ஆச்சே. சூப்பரா ஹாண்டில் பண்ணாங்க. ஃபர்ஸ்ட் எய்ட் செஞ்சு, ஆஞ்சியோ ப்ளாஸ்ட்க்கு ரெடி பண்ணி… செம ப்ரில்லியண்ட்.
அடைப்பும் இரண்டு எடத்துல தான் இருந்தது. இதுலே சரியாயிடும். கொஞ்சம் ஃபுட் டயட் ஃபாலோ பண்ணனும் டாக்டர். டூடேஸ் இருந்து ஹெல்த் கண்டீஷனை இம்ப்ரூவ் பண்ணிட்டு போங்க டாக்டர்.” என
” ஓகே.” என்ற கிருஷ்ணன், ராதாவை நினைத்து பெருமிதம் கொண்டார்.
சீஃப் டாக்டர் சொன்னதை கண்டுக்கொள்ளாமல், கௌரியிடம் திரும்பிய விஸ்வரூபன், ” அத்தை! நீங்க அம்மாவோட வீட்டுக்கு கிளம்புங்க. அப்பாவை நான் பார்த்துக்குறேன்.” என்று அவர்கள் இருவரையும் படாதபாடு பட்டு அனுப்பி வைத்தான்.
அவர்களை வீட்டுக்கு அனுப்பியதே நல்லதாக இருந்தது. ஏனென்றால் விடியற்காலையில் புயல் போல் ராதிகாவின் வீட்டிலிருந்து அவளது பெற்றோர் வந்திருந்தனர்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
+1
+1

