Loading

நிவேதா சிஏ தேர்வில் தேர்ச்சி பெற்று இருந்தாள்…. அவளைவிட அதி தான் கொண்டாடி தீர்த்துவிட்டான்…. கொஞ்சம் கொஞ்சமாக ஆடிட்டரிடம் இருந்து கற்றுக்கொண்டாள்…

அவரின் பாதி கிளைன்ட்ஸை தற்போது அவள் தான் பார்த்துகொள்ள்கிறாள்… அந்த ஆடிட்டர் அதியிடம் “ரொம்ப திறமையான பொண்ணு…. சொன்னவுடனே புரிஞ்சிக்குறா… ரொம்ப நல்லா வருவா” என்று கூறி பாராட்டினார்…

வளைகாப்பிற்கு முன்னாடிநாள் இரவு அண்ணியும் நாத்தனாரும் திருட்டுமுழியுடன் அதி மாறன் முன்பு நின்று இருந்தனர்… அதி தான் இருவரிடமும்”இன்னும் எத்தனை வெச்சிருக்கிங்க எடுங்க” என்று மிரட்டிக்கொண்டிருந்தான்….

சிணுங்கிக் கொண்டே நிவேதா தான் மறைந்து வைத்திருந்த சொக்கி சொக்கி(choki choki) சாக்லேட்டை எடுத்து குடுத்தாள்…. தாரா பாப்பாவோ “மாமா இன்னும் த்தை வெச்சி இருக்கா பேக்ல…. ம்மாவும் மறச்சி வெச்சிருக்கா” என்று போட்டுகொடுத்தாள்…

மீனாட்சியும் நிவேதாவும் சிணுங்கிக் கொண்டே எடுத்து கொடுத்தனர்… “எத்தனை தடவ சொல்றதுக்கா உனக்கு சுகர் லெவல் அதிகமாக இருக்கு நீ சாக்லேட் ஸ்வீட் ஐட்டமே சாப்பிட கூடாது சொல்லி இருக்காங்க நீ திருட்டுதனமா சாப்பிடுற” என்று அவளை திட்டிவிட்டு நிவேதாவிடம் திரும்பி “அதிகம் சாப்பிடக்கூடாதுனு சொல்லி இருக்கேன்ல” என்று அவளையும் திட்டினான்…

அந்த வழியாக வந்த சுந்தரப்பா “தம்பி எதுக்கு திட்டுறீங்க விடுங்க ஆசைக்காக ஒன்னு சாப்புட்டாங்க விடுங்க போய் வேலையை பாருங்க” என்று அனுப்ப முயன்றார்…

ஆனால் அவனோ “ஐயா இத வாங்கிக் கொடுத்ததே நீங்கனு தெரியும் ஏன் ஐயா????” என்று அவரையும் கேட்டான்….

அவரோ “இல்லையே” என்று கூறிவிட்டு “ஐயா கூப்பிட்டீங்களா” என்று கேட்டுக்கொண்டே சென்றுவிட்டார்…

இருவரிடமும் திரும்பி “இனிமே சாப்பிட்டீங்க அவளோ தான்” என்று கூறிவிட்டு மாறனும் அதியும் சென்றுவிட்டனர்…

தாரா பாப்பாவோ “எக்கு(எனக்கு) குலுத்து(குடுத்து) இருந்தா நான் சொன்னிருக்க(சொல்லிருக்க) மாட்டேன்னா… நீங்க தரல அதுதான் மாமாகிட்ட ப்பாகிட்ட சொன்னிட்டேன்(சொல்லிட்டேன்)” என்று பழிப்பு காட்டி ஓடிவிட்டாள் தாரா பாப்பா…

“அட நான் பெத்த குட்டி கொரங்கே நீ தான் போட்டு கொடுத்தியா” என்று  கூறிவிட்டு  சிறிதுநேரம் இருவரும் பேசிவிட்டு அப்டியே உறங்கிவிட்டனர்…

வேலை முடித்துவிட்டு தூங்க வந்த மாறனோ நிவேதா இங்கேயே தூங்கியதைப் பார்த்துவிட்டு அதியின் அறைக்கு சென்றுவிட்டான் தூங்க…

அடுத்த நாள் சிறப்பாக மீனாட்சியின் வளைகாப்பு நடைபெற்றது… வந்திருந்த கொஞ்சம் பேர் இரண்டாவது குழந்தைக்கு வளைகாப்பு தேவையா என்று பொறாமைப் பட்டு கொண்டு இருந்தனர்… வந்தவர்கள் எல்லாரும் வாழ்த்திவிட்டு சென்றனர்…

குடும்ப உறுப்பினர்கள் மட்டும் இருந்தனர்… மீண்டும் அப்பத்தாவே அதியிடம் “எப்ப கல்யாணம் வைக்கலாம்… உனக்கு ரெண்டு மாசத்துல பொறந்தநாள் வரப்போகுது… வந்தா முப்பது வயசு ராசா… முப்பது வயசு முடியுறதுக்குள்ள கல்யாணம் பண்ணனும்… பேத்திக்கும் இருபத்திநாலு நடக்குது இனிமே எப்ப பண்ணலாம்னு இருக்கீங்க…” என்று சத்தம் போட்டார்…

“சரி அப்பத்தா அக்காக்கு குழந்தை பொறந்து மூணு மாசத்துல கல்யாணம் வெச்சிடலாம்” என்று கூறினான்…

இப்போது சிவாம்மாவே “தம்பி அப்டினா இன்னும் ஆறு மாசம் ஆகும்டா…. மீனாக்கு குழந்தை பிறக்க இன்னும் ரெண்டு மாசம் இருக்குடா… ஒரு மாசத்துல வர முகூர்த்த நாள்ல வைக்கலாம்டா” என்று கூறினார்…

“வேணாம் ம்மா அவசர அவசரமா செய்யுற மாதிரி இருக்கும்… எனக்கும் லீவு இருக்காது… நிதிஷ்க்கும் அடுத்த மாசம் செமஸ்டர் ஸ்டார்ட் ஆகும்… கல்யாண வேலையைப் பாப்பானா காலேஜ் வேலையைப் பாப்பானா…. அஜய்க்கும் அடுத்த மாசம் பாரிஸ் போறான் ஒலிம்பிக்ஸ்க்கு அவன் அங்க போனா ஒன்றை மாசம் அங்க இருக்குற மாதிரி வரும்…. அதுனால நான் சொன்ன மாதிரி வெச்சுக்கலாம்” என்று கூறிவிட்டு நிவோதாவைப் பார்த்தான்…

அவளும் “ஆமா அத்தம்மா பேபி பொறந்தவாட்டி மேரேஜ் வெச்சுக்கலாம்… இப்ப தான் அண்ணி வளைகாப்புக்கு எல்லாரும் லீவு போட்டு வந்து இருக்காங்க… திரும்பியும் ஒரு மாசம்னா எல்லாருக்கும் ரொம்ப நாள் லீவு வராது… ப்ளீஸ் அத்தம்மா அண்ணிக்கு பேபி பிறந்தவாட்டி எங்க மேரேஜ் வெச்சுக்கலாம்” என்று கெஞ்சலாக கூறினாள்…

வீட்டில் உள்ளோரும் சரி எனக் கூறிவிட்டனர்… மீனாட்சியின் குழந்தை பிறப்பிற்கு பிறகு இவர்களின் கல்யாண வேலைகளைப் பார்த்து கொள்ளலாம் என விட்டுவிட்டனர்…

வளைகாப்பு முடிந்து அனைவரும் அவரவர் வீட்டிற்கு செல்ல ஆயத்தமாகினர்…. அவர்களுடன் நிவேதாவும்…. நிவேதா மதுரை வந்து பல மாதம் ஆகிவிட்டது… அவளுக்கு கொஞ்ச நாள் வசும்மாவுடன் இருக்கவேண்டும் என்று தோன்றியது..

அதை அதியிடம் கூறினாள்.. அவனும் சரியென கூறிவிட்டான் அதனால் இந்த பயணம் ….. அவ்வளவு வேலையில்லை நிவேதாவிற்கு அதனால் ஒரு பதினைந்து நாட்கள் சேலம் செல்லலாம் என முடிவெடுத்து தற்போது கிளம்பிவிட்டாள்…

அதன்பிறகு நாட்கள் அழகாக சென்றது அனைவருக்கும்….ஊருக்கு சென்ற ஒரு மாதத்தில் தீப்தி தாய்மை அடைந்த  விசயத்தை அரசுவும் தீப்தியும் குடும்பத்தினரிடம் கூறினர் …. அனைவரும் அறிவுறுத்தி வாழ்த்தினர்….

அஜயும் இந்திய நாட்டிற்காக ஒலிம்பிக்ஸில் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்றிருந்தான்… அனைவரும் அவனை வாழ்த்து மழையில் நனைத்திருந்தனர்…

அவனை நாடே வாழ்த்தியது… அவனுடன் வேறு வேறு போட்டியில் பதக்கங்களை வென்ற மற்ற வீரர்களையும் வாழ்த்தி டெல்லிலியில் கவுரவித்தனர்… அதன்பிறகு அவன் ஊருக்கு வந்த இரவில் மாறன் மீனாட்சியின் புதல்வன் பூமியில் கால் பதித்து இருந்தான்…

அனைவரையும் பதறவிட்டு மாறனை கண்ணீர் சிந்தவிட்ட பின்பு தான் அந்த சுட்டி கண்ணன் வெளியே வந்தான்…. இரண்டு நாட்களில் மீனாட்சியும் சுட்டி கண்ணனும் வீட்டிற்கு வந்து விட்டனர்…

ஒரு மாதம் கழித்து அந்த சுட்டி கண்ணனுக்கு பேர் வைக்க விழா ஏற்பாடு செய்யப்பட்டது…. அந்த ஒரு மாதம் அனைவருக்கும் அவனுடன் நன்றாக கழிந்தது… அஜயின் குரல் கேட்டால் போதும் ஆ ஊ என கத்த ஆரம்பித்துவிடுவான்… ஒரு மாதம் வேகமாக சென்றது…

குடும்ப உறுப்பினர்கள் வைத்து மட்டும் வீட்டில் சிம்பிளாக அந்த குட்டி கண்ணனுக்கு “அகரன் பாண்டியன்” என பேர் சூட்ட பட்டது… அந்த விழா முடிந்தவுடன் அதி நிவேதா கல்யாண பேச்சு ஆரம்பிக்க பட்டது…

 

இன்னும் இரண்டு மாதத்தில் வரும் நல்ல முகூர்த்த நாளில் கல்யாணம் வைத்து கொள்ளலாம் என முடிவு செய்தனர்…. அதன்பிறகான நாட்கள் கல்யாண வேலைகளில் காற்றாய் பறந்தது..

சிவாம்மா ஒப்புதலுடன் அதி நிவேதாவை அழைத்து கொண்டு பைக்கில் லாங் டிரைவ் சென்றான்… மதுரை மீனாட்சியை தரிசித்துவிட்டு திருப்பரங்குன்றம் முருகனை தரிசிக்க சென்றனர்… அந்த கோவிலில் உட்காந்து கொண்டிருந்தனர்…

அப்போது நிவேதா அதியிடம் “உங்களுக்கு எப்படி பாவா என்மேல லவ் வந்துச்சு…. ” என்று கேட்டாள்..

“தெரியல அம்மு உன்ன நிதிஷ் முரளி அண்ணா வீட்டுல இருந்து தூக்கிட்டு வந்தான்.. உன் முகம் அப்டியே வாடி போய் இருந்துச்சு… ஏன்னு தெரியல.. உன்னோட முகம் வாடி இருந்ததை என்னால பாக்க முடியல.. மனசெல்லாம் ஒரு மாதிரி இருந்துச்சு…

உன் அம்மா உன்ன அப்பயும் திட்டிட்டே இருந்தாங்க.. அப்டியே அவங்கள சுட்டா என்னனு இருந்தது… அபர்ணா அண்ணி உன்ன பத்தி மேலோட்டமா சொல்லிட்டு இருந்தாங்க…

உன்ன அப்படியே எனக்குள்ள வெச்சுக்கணும்னு தோனிச்சு…. அதுக்கப்பறம் தான் மணிப்பா கிட்ட உன்ன பத்தி சொல்லி விசாரிக்க சொன்னேன்.. அவரும் விசாரிச்சாரு… உன் அம்மா அப்பா அப்புறம் அந்த பொண்ணு மேல கொலைவெறில இருந்தேன்….

நீயும் வசும்மா வீட்டுக்கு வந்துட்ட… எனக்கும் பக்கத்துலேயே வீடு கிடைச்சிடுச்சு… காலைல தினமும் வாக்கிங் போகும் போது நீ சிரிப்பல அது எனக்கு அவளோ சந்தோசத்தை குடுக்கும்…

உங்க அம்மா உன்ன அன்னிக்கு அடிச்சாங்கல அவங்கள என் கையாலேயே கொல்லணும்னு தோனிச்சு… அன்னிக்கே நான் நிதிஷ்கிட்ட பேசிட்டேன்… அப்பத்தாவும் அக்காவும் வசும்மாகிட்டயும் பிரியாகிட்டயும் பேசிட்டாங்க….

அடுத்த ரெண்டு நாள்ல நடந்தது… உனக்கு நடந்த விஷயத்தை உன் வாயால கேட்டது.. நீ அழுதது எல்லாம் என்னால தாங்க முடியல… என் வாழ்க்கைல ரெண்டு தடவ தான் அம்மு அழுது இருக்கேன்.. அது ரெண்டும் உனக்காக தான்…

நீ சொன்ன அப்ப அழுதது… உனக்கு ஆக்சிடென்ட் ஆனா வாட்டி நீ வீட்டுக்கு வந்ததும் என்னை ஹக் பண்ணியே அன்னிக்கும் தான் அழுதேன்” என்று கூறினான்….

“உங்கள நான் மட்டும் தான் அழுக வெச்சி இருக்கேன்ல பாவா” என்று வருத்தமாக கேட்டாள்…

“மக்கு அம்மு அப்போ தான் உன்மேல நான் எவளோ லவ் வெச்சி இருக்கேனு தெரிஞ்சது… நீதான் எனக்கு பலமே அதுபோல உன் கண்ணீர் தான் எனக்கு பலகீனமே… அண்ட் மோரோவர் (moreover) என் அம்மு என்னை என்னிக்குமே கஷ்டப்படுத்த மாட்டா.. என்னை மட்டும் இல்ல யாரையுமே….” என்று அவளை காதலாக பார்த்து கூறினான்…

“அப்பறம் இந்த கண்ணு ப்பா என்ன கண்ணு…. நீ உன்னோட பீலிங்ஸ் வெளியே காட்டலானாலும் இந்த கண்ணு உன்னோட பீலிங்ஸ வெளிய காட்டிடும்… தோ இப்ப காட்டுற மாதிரியே லவ்வ” என்று மையலாக கூறினான்…

“ச்சு பாவா கோவில்ல இருக்கோம் என்ன பேச்சு பேசுறீங்க…” அமைதியா இருங்க என்று கன்னம் சிவந்து கூறினாள்…

“அம்மு இப்படி உன் கன்னத்தை சிவக்க விடாத… அப்பறம் இங்கயே கிஸ் பண்ணிடுவேன்” என்று கூறினான்…

“ச்சு பாவா வாங்க எழுந்துருங்க போலாம்…” என்று கூறி அவனை அழைத்து கொண்டு வண்டி நிறுத்திய இடத்திற்கு வந்தாள்…..

“இப்ப எங்க போறோம் பாவா… எனக்கு பசிக்குது” என்று பாவமாக கூறினாள்….

” இருவது நிமிஷம் அம்மு… வெயிட் பண்ணு” என்று வண்டியை எடுத்து அவன் போக வேண்டிய பாதையில் வண்டியை விட்டான்..

இருவது நிமிட பயணத்தில் தென்னை தோப்பு சூழ நடுவில் ஒரு குட்டி வீடு இருந்தது…. “அம்மு இது என் சம்பாத்தியத்துல வாங்குன தோப்பு வீடுடா…. இங்க யாருமே வந்தது இல்ல…. நான் மட்டும் தான் வந்து இருக்கேன்…”

“நம்ம வீட்டுல இருந்து நீ மட்டும் தான் முதல்ல வந்து இருக்க… அதுனால வலது கால் எடுத்து வெச்சி வா அம்மு” என்று கூறினான்…

அவளும் அப்டியே செய்தாள்… இயற்கை சூழ அந்த வீடு சொர்க்கமாக தெரிந்தது அவளுக்கு… அவள் நேராக சென்றது அங்கு இருக்கும் பூஜை அறைக்கு தான்… கொஞ்சம் குப்பையாக இருந்தது… அதை சுத்தம் செய்து முதலில் விளக்கேற்றி பூஜை செய்தாள்….

பிறகு சமையலறை சென்றாள்… அங்கும் கொஞ்சம் குப்பையாக இருந்தது…. அதை சுத்தம் செய்ய சென்றாள்…. அதியிடம் “இங்க சமைக்க பொருள் இருக்கா பாவா” என்று கேட்டாள்… அவன் இல்லை என்றான்…. “போய் வாங்கிட்டு வாங்க” என்று கூறினாள்…

“இல்லை அம்மு ஒரு டூ மினிட்ஸ் பொருள் எல்லாம் வந்துடும்” என்று கூறினான்.. அவன் சொன்ன மாதிரியே பொருள் எல்லாம் ஒருவர் வந்து குடுத்து விட்டு சென்றார்…

அதற்குள் அவளும் சுத்தம் செய்து முடித்திருந்தாள்… அவன் எடுத்த வந்த பொருட்களை வைத்து நிவேதா சமைக்க ஆரம்பித்தாள்… அதி அவளுக்கு உதவி செய்து கொண்டிருந்தான்…

அவள் அடுத்த முக்கால் மணி நேரத்தில் சமைத்து முடித்திருந்தாள்…. இருவரும் ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டு கொண்டு சாப்பிட்டு முடித்தனர்…. சிறிதுநேரம் இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர்…. பிறகு வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர்…

அதன்பிறகான நாள் ஜெட் போல் சொய் என்று பறந்திருந்த்தது… திருமணத்திற்கு பதினைந்து நாள்முன்பு வசும்மா நிவேதாவை சேலம் அழைத்து கொண்டு சென்றுவிட்டார்….

 

 

 

 

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்