Loading

நிவேதாவின் பயம் பதட்டம் எல்லாம் தீரும் வரை தன் அழுகையை வெளிப்படுத்தினாள்…. இவ்வளவு அழுகை அவளுக்கு ஆகாது என நினைத்து அதி தான் “அம்மு டோன்ட் க்ரை அமைதியா இரு… எதுக்கு இந்த அழுகை எனக்கு ஒன்னும் ஆகல… என் அம்மு பிரேவ் கேர்ள் அழுக கூடாது… இன்னும் ஒன் மந்த் எல்லாமே சரியாகிடும்… நீ அழுகாத அம்மு” என்று கூறி சமாதானம் படுத்தினான்…..

அதன்பிறகு தான் அழுகை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது… அவனின் அடிபட்ட கையை தடவி குடுத்தாள்… இருவருக்கும் எந்த பேச்சும் இல்லை… அதி கை அருகில் தலை வைத்து நிவேதா தூங்கி இருந்தாள்…

அப்போது அரசுவும் மாறனும் கதவை தட்டிவிட்டு உள்ளே வந்தனர்…. அனைவரும் பேசிய போது இருவரும் அவனிடம் சரியாக பேசவில்லை… இருவரையும் பார்த்து சினேகமாக சிரித்தான்…

மாறன் அவனின் தலையை கோதி கொடுத்து “எதோ வலி இருக்கா வீரா???” என்று கேட்டான்…

“வலி இருக்கு மாமா… கை கால் தான் வலிக்குது தலைல வலி இல்ல…” என்று கூறினான்… பின் அரசுவைப் பார்த்து “அவனை என்ன பண்ண சூர்யா???” என்று கேட்டான்…

அதற்கு அவனோ “நான் ஒன்னுமே பண்ணல தேவா” என்று கூறினான்… ஆனால் அதை கேட்ட அதி மாறன் இருவரும் நம்பவில்லை….

“உண்மையை சொல்லு சூர்யா… எனக்கு தெரியும் உன்ன பத்தி சொல்லுடா” என்று கேட்டான்…

“அவனைப் பிடிச்சி வைக்க மட்டும் தான் சொல்லி இருக்கேன்.. இங்க பசங்ககிட்ட…. நான் இன்னும் போய் பாக்கல… இனிமே தான் போகனும்னு இருந்தேன்” என்று கூறினான்….

“நீ எங்கயும் போகாத… நான் வந்து பாத்துக்குறேன்… அமைதியா இருங்க… மாமா உங்களுக்கும் சேர்த்து தான் சொல்றேன்” என்று கூறிக் கொண்டு இருக்கும் போதே தீப்தி உள்ளே வந்தாள்…

“உங்க ரெண்டு பேருகிட்டயும் என்ன சொன்னா நீங்க உட்காந்து பேசிட்டு இருக்கீங்க… அவளை சாப்பிட அனுப்பி வெச்சிட்டு பேசவேண்டியது தானே அவ மாத்திரை போடனும்ல” என்று தீப்தி கேட்டாள்….

மாறன் தான் “தூங்கட்டும்மா” என்று தீப்தியிடம் கூறினான்… “இல்ல ண்ணா சாப்பிட்டு மாத்திரை போட்டுக்கிட்டு தூங்கட்டும்” என்று கூறி அவளை எழுப்ப முயற்சித்தாள்…

“எதுக்கு மாத்திரை போடனும்… நான் மயக்கத்துல இருக்குற அப்ப கூட எதோ அம்மு சொன்ன மாதிரி இருந்துச்சு… எதோ ஹார்ட் பீட் அப்டினு எதோ சொன்னா… ஆனா என்னன்னு ஞாபகம் இல்ல” என்று கூறினான்….

அரசு தீப்தியை பார்த்து முறைத்தான்…. அவன் முறைப்பதை பார்த்துவிட்டு தான் அதிக்கு அந்த விஷயம் தெரியாது… அவன் முன்னால் உளறிவிட்டோமே என நினைத்து அரசுவைப் பார்த்து கெஞ்சலாக ஒரு பார்வை பார்த்தாள்….

மாறன் தான் மெதுவாக நிவேதாவிற்கு நேர்ந்தது குறித்து கூறினான்… அவன் பதறிவிட்டான்… பிறகு மாறன் அவனை சமாதானம் படுத்தி தூங்க சொன்னான்… அவனும் மருந்தின் வீரியத்தில் தூங்கிவிட்டான்…

பிறகு நிவேதாவை எழுப்பி அவளை சாப்பிடவைத்து மாத்திரை தந்து தூங்க வைத்தனர்…

அதன் பின் நாட்கள் ரெக்கைகட்டி கொண்டு பறந்தது.. அதிக்கு தலையின் காயம் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி கொண்டு இருந்தது… நிதிஷ் மற்றும் அரசுவின் குடும்பம் இரண்டு நாட்களில் சேலம் புறப்பட்டது…. நிவேதா மதுரையில் தங்கிக்கொண்டாள்….

அவர்கள் சென்ற மூன்றாவது நாள் அஜய் மதுரை வந்து சேர்ந்தான்…. விஷயம் கேள்விப்பட்டு அனைவரிடமும் கோவப்பட்டுவிட்டு அதியை பார்க்க சென்றான்… அவனை பார்த்து கலங்கி நின்றுவிட்டான்..அதி தான் அவனை சமாதானம் படுத்தி போட்டி என்ன ஆனது என்று கேட்டான்..

அதற்கு அவன் “அண்ணா நான் உன் தம்பி… ஜெயிக்காம வருவனா… நான் தான் பிரஸ்ட்… கோல்ட் மெடல்” என்று கூறினான்…

அதியும் அவனிடம் “கங்ராட்ஸ் மை பாய்” என்று அவனை அருகில் அழைத்து தோளில் தட்டி கொடுத்தான்… என்னதான் கல்லூரியில் படித்தாலும் அவன் இன்னும் அவர்கள் அனைவருக்கும் சிறுபிள்ளை தான்… அதி அவனை பாராட்டியவுடன் சிறுபிள்ளை போல் ஒரு மகிழ்ச்சி… அத்தனை பேர் பாராட்டினர்… ஆனால் வீட்டினர் பாராட்டியது தான் அவனின் மகிழ்ச்சி….

தலை காயம் ஆறியவுடன் அவனின் கை, காலுக்கு பிசியோ தரப்பட்டது….. அவன் இயற்கையிலேயே நல்ல திடமானவன் அதனால் சீக்கிரம் அவனுக்கு கை, கால் சரியானது….

ஒரு மாதத்தில் அவனுக்கு பூரணகுணம் ஆகியது… ஒரு மாதமும் நிவேதா மதுரையில் தான் இருந்தாள்…. அதிக்கு தேவையானது அனைத்தும் அவள் தான் பார்த்து கொண்டாள்… அந்த வீட்டில் அவள் இல்லாமல் ஒன்றும் இல்லை என்றும் நிலை ஆகிவிட்டது….

இதற்கிடையில் அதி வீட்டிற்கு வந்தவுடன் மாறன் மீனாட்சி மீண்டும் கர்ப்பமாக உள்ளாள் எனக்கூறினான்… அனைவரும் ஏன் முன்னாடியே சொல்லவில்லை எனக் கேட்டுவிட்டு இந்த வீட்டிலேயே இருக்கட்டும்.. நீங்கள் மட்டும் அங்கு சென்று வயல் மற்றும் தோப்பு வேலைகளை பார்த்துவிட்டு வாருங்கள் எனக்கூறிவிட்டனர்…

தாராகுட்டி எல்கேஜி(LKG) போய் கொண்டிருந்தாள்.. தினமும் பாதி நாள் தான் அவளுக்கு பள்ளி… எனவே அவளை அஜய் கல்லூரி செல்லும்போது பள்ளியில் விட்டுவிட்டு அரசு வேலைகளை முடித்துக்கொண்டு வரும்போது அழைத்துவந்து விடுவான்….

அன்று ஒருநாள் அனைவரும் மதுரையில் ஆஜராகி இருந்தனர்… அப்பத்தா தான் திருமண பேச்சை ஆரம்பித்தார்.. ஆனால் அதியோ “அப்பத்தா கல்யாணம் ஒரு ஆறு மாசம் ஆகட்டும்… அம்மு நம்ம ஆடிட்டர்கிட்ட கொஞ்ச நாள் இங்க இருந்தே ட்ரைனிங் போகட்டும்… அதுக்கு அப்பறம் கல்யாணம் வெச்சுக்கலாம்” என்று கூறிவிட்டான்…

அவனின் பதிலில் பெரியவர்கள் அனைவருக்கும் சுணக்கம்… ஆனால் எதுவும் பேசவில்லை… ஆனால் நிவேதா தான் முகத்தை தூக்கிவைத்து நின்று இருந்தாள்… அது தெரிந்தும் அதி அவளை பார்க்கவில்லை…

ஆனால் அப்பத்தவோ அரசுவின் அப்பாவிடம் “மணி அப்டினா அரசுவுக்கும் தீப்திக்கும் கல்யாணம் ஏற்பாடு பண்ணுங்க” என்று கூறினார்…

மணிகண்டனும் ஒத்துக்கொண்டார்… அவர் தீப்தியின் அப்பா ஆறுசாமியிடம் விருப்பத்தை கேட்டார் மணிகண்டன்… அவரும் ஒத்துக்கொண்டார்… அங்கேயே ஒரு நல்ல நாள் பார்த்து அவர்களின் திருமணத்தை உறுதி செய்தனர்….

இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் வைத்து கொள்ளலாம் என்று முடிவு செய்தனர்… ஒரு வாரத்தில் கோவிலில் வைத்து வீட்டினரை மட்டும் வைத்து பரிசம் போட்டு கொள்ளலாம் என முடிவு எடுத்தனர்….

வீட்டில் பெரியவர்கள் அனைவரும் கல்யாண வேலையில் ஈடுபட சிறியவர்கள் அனைவரும் அரசுவையும் தீப்தியையும் ஓட்டிக்கொண்டு இருந்தனர்…. நிதிஷ் வசும்மா அரசு மூவர் மட்டும் சேலம் சென்றனர்… அரசு மனமே இல்லாமல் சேலம் சென்றான்…

தீப்தியை தனியாக சந்தித்து பரிசம் போடுவதற்கு முன் கண்டிப்பாக வந்துவிடுவேன் என்று உறுதி கூறி முத்தங்களை தந்து முத்தங்களை பெற்று மனமே இல்லாமல் சேலம் புறப்பட்டான்…

அதி தனியாக நிவேதாவை அழைத்து சென்று “இப்ப எதுக்கு அம்மு மூஞ்சிய தூக்கி வெச்சிட்டு இருக்க…???” என்று கேட்டான் கொஞ்சம் கோவமாகவே…

“ஏன் இப்ப கல்யாணம் வேண்டாம்னு சொன்னிங்க பாவா….?? எதுக்கு ஆறு மாசம் கழிச்சி வைக்கலாம்னு சொன்னிங்க… ரிசல்ட் வர இன்னும் நாள் இருக்குல” என்று கோவமாக கேட்டாள்….

“ப்ச் அம்மு இன்னும் எத்தனை நாள் இருக்கு இன்னும் ஒரு மாசம் தான் இருக்கு.. ரிசல்ட் வரட்டும்… நம்ம ஆடிட்டர்கிட்ட நீ கொஞ்ச நாள் ட்ரைனிங் போடா… அவர்கிட்ட நாலு பேரு இன்டெர்ன்னா இப்ப ஒர்க் பண்றாங்க.. நாலு பேரு அவர்கிட்ட ரொம்ப வருஷமா ஒர்க் பண்றாங்க.. எல்லாரும் கொஞ்சம் ஓல்ட் பர்சன்ஸ் தான்…

எல்லாரும் இன்னும் ரெண்டு வருஷம் தான் அங்க ஒர்க் பண்ணுவேன்னு சொல்லிட்டாங்க… அவர்கிட்ட இருக்க எல்லார் கிளைன்டையும் வேற ஆடிட்டர் பாக்க சொல்லிட்டாரு…

நான் ரெண்டு மாசம் முன்னாடியே பேசுனேன் அவர்கிட்ட உன்ன பத்தி சொன்னேன்… அவரும் சரினு சொல்லிட்டாரு… நீ போ அவர்கிட்ட ட்ரைனிங்… அப்பறம் நீயே கிளைன்ட்ஸ் எல்லாத்தையும் ஓவர்டேக் பண்ணிக்கோ” என்று கூறினான்….

“கொஞ்ச நாள் போடா எந்த கமிட்மென்ட்டும் வேணாம் ஒரு ஆறுமாசம் ப்ரீயா எல்லாத்தையும் கத்துக்கோ…. அதுக்கு அப்பறம் நாம கல்யாணம் பண்ணிக்கலாம் அம்மு..” என்று நீளமாக பேசி முடித்தான்…

அவளுக்காக அவளைவிட அதிகமாக யோசிக்கும் தன்னவனை பெருமையாக பார்த்தாள்.. பின்பு அவனை அணைத்து கொண்டு “தேங்க்ஸ் பாவா… என்னைவிட எனக்காக நீங்க யோசிக்குறீங்க… நீங்க எனக்கு கிடைக்க நான் குடுத்து வெச்சிருக்கனும்” என்று அணைத்தவாறே கூறினாள்…

அவளின் தலையில் செல்லமாக கொட்டி “நமக்குள்ள எதுக்கு அம்மு தேங்க்ஸ்… என் அம்மு எனக்கு கிடைக்க நான் தான் குடுத்து வெச்சிருக்கனும்” என்று அவளின் உச்சியில் முத்தமிட்டு கூறினான்..

நீண்ட நேரம் அவர்களின் அணைப்பு நீண்டது…. தாரா பாப்பாவின் வருகையில் தான் இருவரும் மீண்டனர்…

தாரா பாப்பா வந்தவுடன் நிவேதா அவளைத் தூக்கி கொண்டாள்.. அதியிடம் “மாமா முத்தா தா” என்று கன்னத்தைக் காட்டி கேட்டாள்…

அவனும் “உனக்கு இல்லாததா என் தங்கம்” என்று இரு கன்னத்திலும் முத்தமிட்டான்.. அப்படியே பாப்பாவைத் தூக்கி வைத்து இருப்பவளுக்கும் சேர்த்து முத்தம் கொடுத்தான்…

அவளும் வெக்கப்பட்டு கொண்டே பாப்பாவைத் தூக்கிக் கொண்டு கீழே இறங்கினாள்… தீப்தி அவளைப் பார்த்து “என்ன நிவி மச்சான் செம கவனிப்பா உன் கன்னம் ஆப்பிள் மாதிரி சிவந்து இருக்கு” என்று கேட்டாள்…. “ஒன்னும் இல்லையே” என்று கூறி சாமாளித்தாள்…

“சரி ஓகே நிவி நான் வீட்டுக்கு கிளம்புறேன்.. நீ பிரியாவ கூட்டிட்டு வீட்டுக்கு வா” என்று கூறி அவளின் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்…

அதை பார்த்து தாரா பாப்பா மீனாட்சியிடம் “ம்மா இதே மாயி(மாதிரி) மாமா தைக்கு(அத்தைக்கு) முத்தா குலுத்தா(குடுத்தான்)” என்று தன் மழலையில் கூறினாள்… அதை கேட்டு அனைவரும் நிவேதாவை ஓட்டினர்… நிவேதா ஓடிச்சென்று அங்கு வந்து கொண்டிருந்த அதியின் பின்புறம் ஒளிந்து கொண்டாள்…

அவனை சிறிது நேரம் ஓட்டிவிட்டு தீப்தியின் குடும்பம் அவர்கள் வீட்டிற்கு புறப்பட்டது…

ஒருவாரம் வேகமாக ஓடியது…. அரசுவின் குடும்பம், அதியின் குடும்பம், முரளியின் குடும்பம், நிதிஷின் குடும்பம் மட்டும் தீப்திக்கு பரிசம் போட்டனர்..அடுத்தஒரு மாதத்தில் கல்யாணம் வைக்கப்பட்டது…

ஒரு மாதகாலம் கல்யாண ஆரவாரத்தில் வேகமாக சென்றது…. நிவேதா அதியின் குடும்ப தொழிலை கவனிக்கும் அவர்கள் ஆடிட்டரிடம் பயிற்சிக்கு சென்றாள்… அந்த ஆடிட்டர் மதுரையில் உள்ள பல பிரபலமான கடைகளின் கண்ணகை இவர் தான் பார்த்து கொள்வார்… ஒரு மாதமாக தீப்தியின் வீட்டில் இருந்து கொண்டுதான் அங்கு சென்றுவந்த கொண்டிருந்தாள்…..

கல்யாணத்திற்கு இரண்டு நாள்முன்பு அனைவரும் மதுரைக்கு வந்துவிட்டனர்… வந்த நாள் முதல் அரசுவை அந்த சடங்கு செய்யவேண்டும் இது செய்யவேண்டும் என்று வீட்டில் இருந்து வெளியே விடவில்லை…

தீப்தியைப் பார்க்க முக்கியமாக வெளியேவிடவில்லை… முகுர்த்த நாளுக்கு முன்னாடி நாள் ரிசப்சன் கோலாகலமாக நடைபெற்றது…. அரசுவின் காவல்துறை நண்பர்கள் மணிகண்டனின் நண்பர்கள்… கட்சி தலைவர்கள்..  என ரிசப்சன் சந்தோசமாக நடைபெற்றது…

அடுத்த நாள் பிரம்ம முகுர்த்ததில் அரசு தன் காதலியை தாலி கட்டி தன்னவள் ஆக்கிக்கொண்டான்…. அரசு இரண்டு முடிச்சு போட்டான்… நாத்தனார் முடிச்சை பிரியா தான் தன் உடன் பிறவா அண்ணனுக்காக போட்டாள்… ஆட்டம் பாட்டம் சடங்கு என அந்த நாள் கலகலப்பாக சென்றது….

அரசு வெண்பட்டு சட்டை வேட்டியிலும் தீப்தி சிவப்பு நிற பட்டு புடவையிலும் தங்கமாக ஜொலித்தனர்… அனைத்து சடங்குகளும் முடிந்து மணமக்கள் மாப்பிள்ளையின் வீட்டுக்கு அழைத்து சென்றனர்… அங்கு செய்யவேண்டிய சடங்குகளை செய்து முடித்தனர்….

இளையவர்களில் அஜய் அதி நிவேதா ஆராதனாவை தீப்தியின் வீட்டுக்கு அனுப்பிவிட்டுட்டு இரவு சடங்குகளை ஏற்பாடு செய்தனர்… மீனாட்சி பிரியா அபர்ணா முவரும் தீப்தியை அலங்காரம் செய்து பெரியவர்கள் ஆசீர்வாதம் செய்தவுடன் அரசுவின் அறைக்கு அழைத்து சென்றனர்…

போகும் அந்த இரண்டு நிமிடத்தில் அவளை எவ்வளவு சிவக்க வைக்க முடியுமோ அந்த அளவு சிவக்க வைத்தனர்… அரசுவின் அறையில் விட்டுவிட்டு சென்றுவிட்டனர்… வெக்கம் சூழ மெதுவாக கதவை திறந்து உள்ளே சென்றாள்…

அங்கு அவளவன் இல்லை… மெதுவாக கொண்டுவந்த பாலை மேஜையில் வைத்தாள்.. அவள் வைத்த நொடி அவளவன் பின்னால் இருந்து அணைத்தான்…. இருவருக்கும் எந்த பேச்சும் இல்லை…

அவளை அப்டியே தூக்கி கொண்டு போய் கட்டிலில் போட்டுவிட்டு அவளை அணைத்து அறையின் விளக்கையும் அணைத்தான்..

(இனிமே அந்த அறையில நமக்கு வேல இல்ல… வாங்க ஓடி போய்டலாம்…)

அதன்பிறகு நாட்கள் ரெக்கை கட்டிக்கொண்டு பறந்தது…. புதுமண தம்பதிகள் இருவரும் மணாலிக்கு ஹனிமூன் சென்று வந்தனர்…

நிவேதா தீப்தியின் வீட்டில் பாதி நாள்.. அதியின் வீட்டில் பாதி நாள் என தங்கி ஆடிட்டரிடம் ட்ரைனிங் சென்றாள்… நான்கு மாதம் காற்றாய் பறந்தது… நாளை மீனாட்சியின் வளைகாப்பு….!!!

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்