Loading

நிவேதாவை ஒரு மாதமாக நேரில் சென்று பார்க்கவில்லை என அதி அவளுக்குச் சப்ரைஸ் குடுக்கலாம் என நினைத்து மதுரையில் இருந்து மாலை வேளையில் சேலத்திற்குக் கிளம்பினான்….

அவன் மட்டும் தனியாக பைக்கில் வந்தது தான் வினையாகி போனது….. இவன் நார்த்தில் பணியாற்றிய போது அங்கு ரொம்ப நாளாக ஆட்டம் காட்டிய ஒரு குற்றவாளியை மடக்கி பிடித்துசிறையில் அடைத்தான்…

மற்ற காவல்துறையினர் பயந்து அவனைப் பிடிக்க மறுக்க இவன் ஒற்றை ஆளாக அவனை மடக்கி பிடித்து சிறையில் அடைத்தான்… தற்போது அவன் சிறையில் இருந்து தப்பித்து அதியைப் பழிவாங்க தமிழ்நாடு வந்து இருந்தான்…

எப்படியோ அவன் இருக்கும் இடத்தைக் கண்டுறிந்து மதுரைக்கு இரண்டு நாட்கள் முன் சென்று இருந்தான்… அதியை யாருக்கும் சந்தேகம் வராமல் பின்தொடர்ந்து தற்போது அவன் தனியாக சேலம் செல்லும் விஷயம் அறிந்து அவனை ஒரு லாரி மூலம் பின்தொடர்ந்தான்….

ஆள் நடமாட்டம் இல்லாத இடமாக பார்த்து திண்டுக்கல் அருகே அவன் சுதாரிப்பதற்குள் பின்னிருந்து அவன் வண்டியை இடித்து விட்டு அந்த இடத்தை விட்டு தப்பி இருந்தான் அந்த குற்றவாளி…

அந்த வழியாக எதிர்புறம் இருந்து வந்த ஒரு மகிழுந்து இந்த காட்சியைப் பார்த்துவிட்டு அந்த லாரியின் எண்ணைக் குறித்து கொண்டு இந்த பக்க சாலைக்கு விரைவாக திருப்பிக் கொண்டு வந்தது….

அந்த மகிழுந்தில் இருந்து ஒரு இளம்பெண் மற்றும் அவளுடைய தாய் தந்தை இருவரும் வேகமாக இறங்கி இவனிடம் வந்தனர்…

அந்த இளம்பெண்ணின் அப்பா வேகமாக அதியை திருப்பி முதலில் உயிர் இருக்கிறதா என்று தான் பார்த்தார்… அவனுக்கு மூச்சு வரவில்லை… அதனால் இதயத்தில் காதை வைத்து பார்த்தார் அவர்… இதய துடிப்பு சீராக தான் இருந்தது… எனவே முதலில் ஆம்புலன்ஸ்க்கு அழைத்து விட்டு போலீஸ்க்கு தகவல் அளித்தனர்….

முதலில் அந்த இளம்பெண் தான் அதியின் முகத்தைப் பார்த்தாள்… பார்த்ததும் அதிர்ந்து விட்டாள்… “அப்பா அப்பா முதல்ல அது யாருனு பாருங்க???” என்று அதிர்ச்சியாக கூறினாள்…

அந்த பெண்ணின் அப்பாவும் அதியின் முகத்தைப் பார்த்து அதிர்ந்து விட்டார்… “நிஹா ம்மா இந்த தம்பி எப்படி இங்க…. நீ முதல்ல வசுந்தரா அம்மாக்கு போன் போடு” என்று கூறினார் பாலய்யா… அந்த இளம்பெண்ணும் அவளின் பெற்றவர்களும் நிஹாரிகா பாலய்யா மற்றும் அவரின் மனைவி ருக்மணி அம்மா தான்….

ருக்மணி  அம்மா தற்போது தெளிவாகி இருந்தார்…. அவர்களும் மூவரும் டிசி வாங்கிக் கொண்டு அவர்களின் சொந்த ஊரான ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருப்பூர் (கற்பனை ஊர்) சென்றனர்….

நிஹாரிகா கொஞ்சம் கொஞ்சமாக பாலய்யா பாசத்தில் மாறி இருந்தாள்… அவளே கல்லூரிக்குச் செல்லும் முன் ருக்மணி  அம்மாவை  குளிப்பாட்டி அவருக்கு உணவு ஊட்டிவிட்டு அவருக்கு மாத்திரை கொடுத்து விட்டு தான் செல்வாள்…

கல்லூரி முடிந்து வந்தவுடன் அவரை மீண்டும் குளிப்பாட்டி விடுவாள்… அவரிடம் தினமும் மணிக்கணக்காக பேசுவாள்… பாலய்யா அங்கு இத்தனை வருடமாக சேர்த்து வைத்து இருந்த பணத்தில் சிறிதாக ஒரு துணி கடை ஆரம்பித்தார்….

நிஹா அவருக்கு உதவுவாள்… தற்போது இருக்கும் பெண்கள் எந்த மாதிரி உடையை விரும்புவர் என்று கூறி அந்த மாதிரி உடையை வாங்க கூறுவாள்… அவரும் அவ்வாறே வாங்கி விற்பார்…

தற்போது கணிசமாக வியாபாரம் நடக்கிறது… இத்தனை வருடத்தில் ருக்மணி அம்மாவும் நிஹா மற்றும் பாலய்யா எடுத்த முயற்சியில் குணமாகி இருந்தார்….

நிஹாவை பற்றி பாலய்யா கூறியதும் அவளை கொண்டாடி தீர்த்துவிட்டார் ருக்மணி அம்மாள்… ஆனால் ஒரு அம்மாவாக அவர் நிவேதாவிற்கு செய்ததை கண்டிக்கவும் செய்தார்…

அளவான வாழ்க்கை… சிறிய காரை வாங்கி இருந்தனர்… நிஹாரிகா தற்போது தற்போது ஒரு வங்கியில் வேலை செய்து கொண்டு இருக்கிறாள்…. கல்லூரி படிக்கும் போதே அந்த தேர்வுக்கு படித்து இப்பொது பணியில் சேர்ந்து இருந்தாள்…

தற்போது மதுரைக்கு மதுரை மீனாட்சி தாயைப் பார்க்க வரும்போது தான் அதியின் ஆக்சிடென்ட்டைப் பார்த்தனர்….

சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்து இருந்தது… காவல் துறையினரும் வந்து இருந்தனர்… என்ன நடந்தது என விசாரித்துவிட்டு அவர்களை கிளம்ப கூறினர்… சேலத்தில் இருக்கும் போது பழக்கம் தான் அதனால் இவருடன் மருத்துவமனைக்கு நாங்களே செல்கிறோம் என்று பாலய்யா கூறினார்….

அவர்களும் சரி எனக் கூறினர்.. அவனை பற்றி விசாரித்தனர்… தாங்கள் சேலத்தில் இருக்கும் போது ஏஎஸ்பியாக இருந்தார் என பாலய்யா கூறினார்…

பிறகு தான் அங்கு வந்திருந்த காவலர் அவனின் முகத்தை ஊன்றி பார்த்து தற்போது அவன் மதுரை எஸ்பி என கண்டுகொண்டார்….

மிக விரைவாக அவனை மருத்துவமனையில் அனுமதித்தனர்…. அவனின் பைக்கை ஒரு போலீஸ் ஒரு நான்கு சக்கர ஆட்டோவில் ஏற்றி கொண்டு போய் அங்கிருக்கும் காவல் நிலையத்தில் நிறுத்தினார்… அந்த பைக் எதுக்குமே உதவாதது போல் தான் இருந்தது….

பாலய்யா அதியுடன் ஆம்புலன்ஸில் சென்றார்… நிஹாவும் அவள் அம்மாவும் காரில் அவர்களை பின்தொடர்ந்து சென்றனர்…. அவனை திண்டுக்கலில் இருக்கும் பிரபல மருத்துவமனையில் அனுமதித்தனர்…..

நிஹா வசும்மாவுக்கு அழைத்தாள்… அப்போது தான் தூங்க சென்ற வசும்மா அலைபேசி சத்தத்தில் எடுத்து யாரென பார்த்தார்…. நிஹாரிகாவின் எண்ணை பார்த்து இவள் எங்கே அழைக்கிறாள் என நினைத்து எடுத்து பேசினார்…

“ஹலோ நிஹா எப்படி இருக்க??? … இந்த நேரத்தில் கூப்டு இருக்க எதோ பிரச்சனையா டா” என்று கேட்டார்…

“ஹலோ பெரியம்மா நான் நல்லா இருக்கேன்… நான் அம்மா அப்பா மூணு பெரும் மதுரைக்கு போயிட்டு இருந்தோம்… அப்ப திண்டுக்கல் பக்கம் ஒரு ஆக்சிடென்ட்… நாங்க போய் பார்த்தோம்….”

“அங்க ஆக்சிடென்ட் ஆனது நிவேதா லவ் பண்ண அந்த ஏஎஸ்பிக்கு….  நாங்க இப்ப அவரை ஹாஸ்பிடல் அட்மிட் பண்ணி இருக்கோம் நீங்க இங்க வரிங்களா” என்று கேட்டாள்….

“நிஹா நீ என்ன சொல்ற ம்மா அதி தம்பியா… உயிருக்கு எதுவும் ஆபத்து இல்லையே” என்று வசும்மா தழுதழுத்த குரலில் கேட்டார்…

“பொய் சொல்ல விருப்பம் பெரியம்மா நாங்க பாக்குற அப்ப மூச்சுப்பேச்சு இல்ல… இதயம் துடிச்சிட்டு தான் இருந்திச்சி… அவர்கிட்ட எந்த அசைவும் இல்ல… தலையில நல்ல அடி… டாக்டர் இன்னும் எதுவும் சொல்லல” என்று கூறினாள்….

“நீங்க அங்கேயே கொஞ்ச நேரம் இருக்கீங்களா… அவங்க சொந்த ஊரு மதுரை தான் அங்கு இருந்து யாரையோ வர சொல்றேன்… அது வரைக்கும் இருங்க டா… நாங்களும் கிளம்புறோம்…”  என்று கூறினார்…

“சரி பெரியம்மா நாங்க இருக்கோம் நீங்க வாங்க” என்று கூறி வைத்துவிட்டாள்… வசும்மாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை…. நிவேதா சீக்கிரமாகவே தூங்கி இருந்தாள்…

அவள் தூங்கிவிட்டால் அவ்வளவு சீக்கிரம் எழுந்துகொள்ள மாட்டாள்…. அதனால் நிதிஷிற்கு அழைத்தார்… அவன் எடுத்தவுடன் என்ன “மீ இப்ப போன் பண்ணி இருக்க உடம்புக்கு எதுவும் முடியலையா” என்று கேட்டான்….

“நிதிஷ் நீயும் பிரியாவும் நிவிம்மாவ தொந்தரவு பண்ணாம என் ரூமுக்கு கீழ வாங்களேன்” என்று தழுதழுத்த குரலில் கூறினார்…

அவரின் அந்த அழுகுரல் கேட்டு நிதிஷ் பதறிவிட்டான்… பிரியாவை அழைத்து கொண்டு சத்தம் போடாமல் கீழே சென்றான்….

அங்கு அழுத முகமாய் இருந்த வசும்மாவை பார்த்து இருவரும் பதறி விட்டனர்…. “அம்மா என்ன ஆச்சி ஏன் இப்படி இருக்கீங்க” என்று வேகமாக கேட்டான் நிதிஷ்… “முதல்ல கதவை மூடு பிரியாம்மா” என்று கூறினார்….

அவளும் மூடிவிட்டு வந்து வசும்மா அருகில் முட்டி போட்டு அமர்ந்தாள்… அவரே நிஹாரிகா அழைத்தது… அவள் சொன்னது அனைத்தும் கூறிவிட்டார்….

கேட்ட இருவரும் அதிர்ந்துவிட்டனர்… முதலில் சுந்தரப்பாவிற்கு அழைக்கலாம் என நினைத்து போனை எடுத்தான்… பிரியா தான் “மாமா அப்பாக்கு வேணாம்… நீங்க மாறன் மாமாக்கு பண்ணுங்க” என்று கூறினாள்…

அவனும் அது தான் சரியென நினைத்து மாறனுக்கு அழைத்தான்…மாறன் மீனாட்சி தாரா பாப்பா மூவரும் நல்ல உறக்கத்தில் இருந்தனர்….அழைப்பு சத்தத்தில் தன மாறனும் மீனாட்சியும் எழுந்தனர்….

“யாரு மச்சான் இந்த நேரத்துக்கு அழைக்கிறது… வெரசா போன் எடுங்க பாப்பா எழுந்துக்க போறா… வெரசா எடுங்க மச்சான்” என்று கூறினாள்…

அவனும் எழுந்து யாரென பார்த்தான்… அவன் எடுப்பதற்குள் அந்த அழைப்பு நின்று இருந்தது…. “யாரு மச்சான்” என்று கேட்டாள் மீனாட்சி….

“நிதிஷ் தான் அழைச்சி இருக்கான் தங்கம் இந்த நேரத்துக்கு ஏன் அழைச்சி இருக்கான்னு தெரியல” என்று கூறிக் கொண்டு இருக்கும் போதே மீண்டும் நிதிஷ் அழைத்து இருந்தான்…

உடனே அந்த அழைப்பை ஏற்று “சொல்லு நிதிஷ்” என்று கூறினான்….

“அண்ணா அண்ணா அதிக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சாம்” என்று கூறி நிஹா கூறிய அனைத்தும் கூறி அவள் இருக்கும் மருத்துவமனையைக் கூறினான்…

கேட்ட மாறன் இடிந்து போய் அமர்ந்துவிட்டான்… அவனுக்கு மீனாவை விட அதி எப்போதும் ஒருபடி மேல் தான்… அவனுக்கு விபத்து எனக் கேட்டு இடிந்து அமர்ந்துவிட்டான்…

அங்கு அலைபேசியில் “ஹலோ ஹலோ” என கத்தினான்… அந்த சத்தத்தில் சுயநினைவு வந்து “ஓகே நிதிஷ் நான் போய் பாக்குறேன்… நீங்க இப்ப நைட் டைம் ட்ராவல் பண்ணாதீங்க….. காலைல வாங்க.. அதுமட்டும் இல்லாம நாளைக்கு பாப்பாவுக்கு எக்ஸாம் இருக்கு…. அவளுக்கு தெரியகூடாது…. அவ நல்லபடியா எக்ஸாம் முடிக்கட்டும்…. அப்பறம் சொல்லுங்க…” என்று கூறி மாறன் வைத்துவிட்டான்

இவன் பேசுவதைப் பார்த்து மீனாட்சி பயந்து போய் அமர்ந்து இருந்தாள்…. “மாமா என்ன ஆச்சு… நிதிஷ் என்ன சொன்னான்… யாருக்கும் எதுவும் இல்லையே… ஏதாவது சொல்லு மாமா” என்று அவனிடம் கேட்டாள்…

அவளை அணைத்து கொண்டு அழுதுவிட்டான்… மாறன் அழுவதைப் பார்த்து மீனாட்சியும் அழுகையுடனே “மாமா என்ன ஆச்சி மாமா சொல்லு மாமா” என்று அழுது கொண்டே கேட்டாள்…

தன்னை சமன்படுத்திக் கொண்டு அதிக்கு விபத்து நடந்தது பற்றி கூறிவிட்டான்… அவ்வளவு தான் அவளும் அழுக ஆரம்பித்து விட்டாள்…

“தங்கம் அமைதியா இரு… அவனுக்கு ஒன்னும் ஆகாது… அங்க வீட்டுல யாருக்கும் சொல்ல வேணாம்… நாம போகலாம்…. பாப்பாவை முரளி வீட்டுல விட்டுட்டு போலாம்… நான் கொண்டு போய் விட்டுட்டு வரேன்…. நீ தயாராகி இரு” என்று கூறி சட்டையை போட்டு கொண்டு தாரா பாப்பாவைத் தூக்கி கொண்டு பக்கத்தில் இருக்கும் முரளியின் வீட்டுக்கு சென்றான்….

ஆம் முரளியும் அபர்ணாவும் மதுரைக்கே வந்துவிட்டனர்…. முரளி பள்ளிக் கல்வி துறையில் வேலையில் உள்ளான்… மாற்றல் வாங்கி கொண்டு மதுரைக்கே வந்து விட்டான்…

அவனின் பெற்றோரும் அவனின் அக்கா பையனுடன் மதுரையில் வேறு ஒரு வீட்டில் உள்ளனர்… இருவரும் பெற்றவள் செய்து வைத்த திருமணம் என்று சொல்ல முடியாது… காதல் திருமணம் என்று சொல்ல முடியாது… விசாலினி இவர்களின் சொந்த குழந்தை இல்லை…

மாறன் முரளி அபர்ணா மூவரும் ஒரே கல்லூரி, ஒரே வகுப்பு… மூவரும் நல்ல நண்பர்கள்….. முரளியும் அபர்ணாவும் பள்ளியில் இருந்தே நண்பர்கள்… கல்லூரியில் தான் மாறனுடன் நட்பு வைத்தனர்….

முரளி அபர்ணாவிற்கு தான் என இருவர் வீட்டிலும் முடிவு செய்து இருந்தனர்… நண்பர்கள் ஆயினும் பெற்றவர்கள் கல்யாணம் இருவருக்கு தான் என சொல்லிவிட்டனர்… இருவரும் அந்த கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை….

பெற்றவர்களின் முடிவை ஏற்று கொண்டனர்…. இருவரும் ஒன்றாக தான் கல்லூரி சென்று வருவர்… அப்டி ஒரு நாள் கல்லூரியின் இறுதி தேர்வு முடித்து விட்டு வரும் போது… சாலையின் ஓரத்தில் ஒரு குழந்தை அழுக்கு ஆடையுடன் இருந்தது… அந்த இடத்தில் சுற்றியும் யாரும் இல்லை….

 

இருவரும் அந்த குழந்தைக்கு முதலில் தண்ணீர் குடுத்துவிட்டு பிஸ்கட் கொடுத்தனர்… பிறகு போலீசில் ஒரு கம்பளைண்ட் கொடுத்து விட்டு அவர்களே அங்கு இருக்கும் அனாதை ஆசிரமத்தில் விட்டனர்…

வாரத்திற்கு ஒருமுறை குழந்தையையும் வந்து பார்த்துவிட்டு செல்வர்… இருவரிடமும் குழந்தை நன்றாக ஒட்டிக்கொண்டாள்….

இருவரையும் அம்மா அப்பா என்று தான் அழைத்தாள்… இருவரும் இவளை பார்த்துவிட்டு செல்லும் போது அழுக ஆரம்பித்து விடுவாள்… சிறு குழந்தை தான் அவளுக்கு என்ன தெரியும்….

அதனால் இருவரும் ஒரு முடிவு எடுத்தனர்… திருமணம் செய்துகொண்டு குழந்தையை தத்து எடுத்துக்கொள்ளலாம் என… இருவரும் இந்த முடிவை வீட்டில் கூறினர்.. இருவரின் தந்தையை தவிர அனைவரும் ஒத்துக்கொண்டனர்….

முரளிக்கு ஒரு அக்கா… திருமணம் செய்து கொடுத்த ஏழு மாதங்களில் அவள் கணவன் இறந்துவிட்டான்… அப்போது அவனின் அக்காக்கு நான்கு மாதம்… குழந்தையின் ராசி தான் காரணம் என அவளின் புகுந்த வீட்டினர் விரட்டி விட்டுவிட்டனர்…

இவனின் பெற்றோர் தான் பாத்துக்கொண்டனர்…. அவனின் அக்காவும் குழந்தை பிறந்தவுடன் இறந்துவிட்டாள்…. குழந்தையை இவர்கள் தான் வளர்த்தனர்…. அந்த குழந்தையின் பெயர் கண்ணன்….

அபர்ணா வீட்டில் ஒரே பெண்…. அதனால் அவளை சிறு வயது முதல் நன்கு தெரிந்த முரளிக்கே கல்யாணம் செய்துவைத்து விடலாம் என  முடிவு செய்தனர்….

தற்போது இருவர் கூறுவதையும் கேட்ட தந்தைமார்கள் இருவரும் கல்யாணம் செய்து வைக்கிறோம்… ஆனால் குழந்தையை தத்து எடுக்க ஒத்துக்கொள்ள மாட்டோம் என கூறி விட்டனர்…

இருவரும் பெற்றோரை எதிர்த்து பதிவு திருமணம் செய்தனர் நண்பர்கள் உதவியுடன்…. இருவரின் அம்மாக்களும் வந்து இருந்தனர் தங்கள் கணவர்மார்களுக்கு தெரியாமல்…

கண்ணக்கு வயது ஐந்தும் விசாலினிக்கு வயது இரண்டும் ஆகி இருந்தது இருவரும் கல்யாணம் செய்து கொள்ளும் போது…. முரளி அபர்ணா இருவரும் நான்கு ஐந்து ஆண்டுகள் கழித்து தான் அகிலை ஈன்று எடுத்தனர்….

அகிலுக்கு இரண்டு வயது நடக்கும் போது அபர்ணாவின் பெற்றோர் ஒரு விபத்தில் சிக்கி இறந்து விட்டனர்… அப்போது தான் முரளியின் அப்பா இருவரையும் ஏற்றுக்கொண்டார்… விசாலினியிடமும் பாசமாக நடந்து கொண்டார்…

ஒரு வருடம் முன்பு தான் மதுரைக்கு சேலத்தில் இருந்து மாற்றல் வாங்கிக் கொண்டு மதுரைக்கு வந்துவிட்டனர்… ஆனாலும் இருவரும் தனி தனி வீட்டில் தான் உள்ளனர்…

.

.

.

.

வாங்க திரும்பியும் கதைக்கு போலாம்…..

மாறன் தாரா பாப்பாவைத் தூக்கிக் கொண்டு பக்கத்து வீட்டில் இருக்கும் முரளியிடம் விட சென்றான்… அவனுக்கு அழைத்து கதவைத் திறக்க கூறினான்.. மற்ற மூவரும் நல்ல தூக்கத்தில் இருந்தனர்…. முரளி மட்டும் எழுந்து கதவை திறந்தான்…

“என்ன ஆச்சு மாறா… எதுக்கு இந்த நேரத்துல பாப்பாவை இங்க விடுற.. ஏதாவது எமெர்ஜென்சியா???” என்று கேட்டான்…

மாறனும் அதி விபத்து பற்றி கூறி பாப்பாவை பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு வீட்டிற்கு சென்றான்… அங்கு மீனாட்சி தன் இரவுடையை மாற்றி விட்டு சாதாரண ட்ரெஸ்ஸில் இருந்தாள்…

ஒன்றரை மணி நேர பயணத்தை முக்கால் மணி நேரத்தில் முடித்து இருந்தான்… வேகமாக விசாரித்துவிட்டு எமெர்ஜென்சி கேஸ் அறைக்கு சென்றான்… அங்கு நிஹாரிகா மற்றும் அவள் பெற்றோர்கள் இருந்தனர்…

அவர்களுக்கு நன்றி கூறி அவர்களை வழி அனுப்பி வைத்தனர்…. டாக்டர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர்…

நிலவு மகள் தன்னுடைய காதலனைக் கண்டு ஓடி மறைகிறாள்…. காதலனோ தன்னுடைய காதலி இவ்வளவு சீக்கிரம் வந்தும் ஓடி விட்டாளே என நினைத்து கோபம் கொண்டு வெப்பத்தை அதிகமாக கொடுக்கிறான்….

காலை ஒன்பது மணி அளவில் சுந்தரப்பாவிற்கு அழைத்தான் மாறன்… அவரிடம் பொறுமையாக விஷயத்தைக் கூறி அஜயிடமும் நிவேதாவிடமும் கூற வேண்டாம்… மற்றவர்களிடமும் பொறுமையாக எடுத்து கூறி இங்கு ஹாஸ்பிடல் வருமாறு கூறி வைத்துவிட்டான்….

அஜயும் நீச்சல் போட்டிக்காக கொல்கத்தா சென்றுள்ளான்… அவனைப் பதறவைக்க வேண்டாம் என நினைத்து அப்படி கூறிவிட்டான்…. தற்போது கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறான்….

சுந்தரப்பா வீட்டில் உள்ளவர்களிடம் பொறுமையாக விஷயத்தை எடுத்து கூறி தாத்தா அப்பத்தா சிவாம்மாவை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்…

போகும் வழி எல்லாம் அப்பத்தாவும் சிவாம்மாவும் அழுது கொண்டே வந்தனர்…. மருத்துவமனையில் அழக்கூடாது என கூறி இருவரையும் தாத்தாவும் சுந்தர் அப்பாவும் அழைத்து சென்றனர்..

மாறன் உள்ளுக்குள்ளேயே கலங்கி அமர்ந்து இருந்தான்… அனைவரும் மௌனமாக கண்ணீர் விட்டு கொண்டு இருந்தனர்…

அப்போது நிவேதா அதிக்கு அழைத்தாள்.. அவளின் அழைப்பை பார்த்ததும் மீனாட்சியின் தேம்பல் கேவலாக மாறியது…

மாறன் உண்மையை நிவேதாவிடம் கூறுவானா???? நிவேதா அவளின் கடைசி தேர்வை நல்லபடியாக எழுதுவாளா??????

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்