Loading

“அடியே….ஏஞ்சல் நில்லு நில்லுன்னு சொல்றன்ல.. இவள நில்லுடி வரேன்” என்று தன் ஸ்கூட்டிய நம் நாயகி முன்னாடி போய் நிப்பாட்டுறாங்க நம்ம ஹீரோயின் தோழி பிரியதர்ஷினி.. இவங்கள தோழி.. அண்ணி.. அம்மா எப்படினு வேணா சொல்லலாம்.. நம்ம நாயகி துவண்டு போற அப்பலாம் இவங்க தான் தோள் குடுப்பாங்க… சரி இப்ப கதைக்குப் போகலாம்

“நில்லுனு சொல்றல சொல்ல சொல்ல கேட்காம போற… என்ன ஆச்சி ஏஞ்சல்? ஏன் உன் முகம் இப்டி இருக்கு…. உன் அம்மா திட்டுனாங்களா என்ன?”…

எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்…

“எதுவும் சொல்லாத… இப்டியே இரு..நீ சொல்லாம இருந்தாலும் தெரியும் உங்க அம்மா எப்படினாலும் திட்டி தான் இருப்பாங்க….சரி வா வண்டில உட்காரு ஏற்கனவே ரெண்டு கிலோமீட்டர் நடந்தே வந்துட்ட… கொஞ்சம் தூரமாச்சும் வண்டில போலாம் வா…”

“இல்ல அண்ணிம்மா நான் வரல நீ போ… இன்னும் டைம் இருக்குல்ல நான் நடந்த வரேன்….”

“ஏஞ்சல் சொன்னா கேளு… பார்க்கவே எதோ மாதிரி இருக்க.. வா வண்டில போலாம்… வா டா..”

“இல்ல அண்ணிம்மா நான் வரல..”

“சொல்ற பேச்சைக் கேட்கவே மாட்டியாடி வா வண்டில போலாம்.. இல்லனா உன் அண்ணா கிட்ட சொல்லிடுவேன்….”

“ஹூம் ஹூம் வரல… பாரு அங்க தூரமா நின்னு நிஹாரிகா  பாத்துட்டு இருக்கா… உன் கூட நான் வண்டில போனா நைட் சாப்பாடு போட மாட்டேன்னு அம்மா சொல்லிட்டாங்க…இப்ப நான் வண்டில உன்கூட போனா அம்மா கிட்ட போய் சொல்லிடுவா….”

“நில்லு இன்னிக்கு உன் தங்கச்சிய எதோ பண்ணல என் பேரு இன்னிக்கு பிரியா இல்ல” என்று பிரியா சொல்லிவிட்டு திரும்ப பாக்க.. அதற்குள் நிவேதா “அண்ணிம்மா எனக்கு ரொம்ப பசிக்குது… நீ போய் காலேஜ்ல எதோ வாங்கி வை…. உன்கூட போன அவ போய் அவங்க கிட்ட சொல்லிடுவா… ப்ளீஸ் மா… நீ போ…. நான் காலேஜ் நடந்தே வரேன்….”

“நீ திருந்தவே திருந்தாத… உன் அம்மா ஏன்தான் இப்படி இருக்காங்களோ??… காலேஜ் வா உனக்கு இருக்கு….. “என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள்….

அங்கு காலேஜில் …  பிரியா தன் கணவனிடம் முறையிட்டு கொண்டு இருந்தாள்…

“உன் தங்கச்சி ஓவரா பண்ணிட்டு இருக்கா மாமா… ஒழுங்கா இருக்க சொல்லு… எட்டு மணிக்கே காலேஜூக்கு கிளம்பிட்டா போல நான் போய் கூப்புடறேன் அந்த அம்மா  என் ஏஞ்சல பத்தி என்கிட்டயே தப்பா பேசுது… எங்க ஊரு சுத்த போய்ட்டாளோனு….. அங்கேயே திட்டி இருப்பேன் தப்பிச்சிடிச்சி….

இவள வந்து பாத்தா ரெண்டு கிலோமீட்டர் நடந்தே போய் இருக்கா.. சரி ஒரு கிலோமீட்டர் வண்டில போலாம் வானு கூப்டா நைட் சாப்பாடு போட மாட்டேன்னு சொல்லி இருக்காம்… அப்றம் அதோட சின்ன பொண்ண வேவு பாக்க பின்னாடியே அனுப்பி இருக்கு… அவளுக்கு மட்டும் புது வண்டி வாங்கி குடுத்து இருக்கு.. ஏஞ்சல நடந்து போக சொல்லுது என்ன ஒரு கொடூரம்….

உங்கிட்டயே சொல்ல வேணாம்னு வேற சொல்றா… சேரி நான் போய் அவளுக்கு டிபன் வாங்கி வைக்குறேன்… அவ கிட்ட நீ பேசு..  ஒரு ஊருக்கு வாரம் நாம அவளை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரலாம்… அத்தமா கிட்ட கேட்கலாம்… சரியா.. நான் என்ன பேசுறேன்… நீங்க பேசவே இல்ல மாமா…”

“அடியே பாப்பு என்ன நீ பேச விட்டா தானுடி நீ பாட்டுக்கு பட படனு பட்டாசு மாதிரி பேசிட்டே இருந்தா நான் எப்படிடி பேசுவேன்… நீ விடு நான் அம்மா கிட்ட பேசுறேன்… ஒழுங்கா கிளாஸ் போ குட்டிமாவ திட்டக் கூடாது… ஈவினிங் பாக்கலாம்.. சரியா… குட்டிமாவ சாயந்திரம் (மாலை) வீட்டுக்குக் கூட்டிட்டு வரலாம் … போ போயி அவளுக்கு தோசை வாங்கி வை.. காசு இருக்குல்ல.. இல்ல ஜிபேல அனுப்புரதா டா…”

“இல்ல மாமா வேணாம்… அத்தமா குடுத்துதான் அனுப்புனாங்க.. மாமா உன் தங்கச்சி வந்துட்டா பேசுறியா…”

“பாப்பு வேணாம் தராத…”

“ஹலோ ண்ணா… என்கிட்ட பேசமாட்டியா… ப்ளீஸ் பேசு ண்ணா… ஹலோ ஹலோ.. ண்ணா..” இவள் அழுவதை கேட்க முடியாமல் நிதிஷ் போனை வைத்து விட்டான்..

“ஏஞ்சல்  உன் அண்ணா வெச்சிட்டாரு போல… நீ அழுகாத… அவரு தான்  கோச்சிங் போனு சொல்லறாருல போயேன்.. ஏன் இப்டி பண்ற..ப்ளீஸ் ஏஞ்சல்…”

“வேணாம் அம்மா திட்டுவாங்க..”

“உனக்கு உன் அண்ணாதான் சரி… அவருகிட்ட பேசிக்கோ நீ… ஈவினிங் வராரு போல பெங்களூருல இருந்து பேசிக்கலாம் சரியா… உட்காரு நான் போய் தோசை வாங்கிட்டு வரேன் சரியா..”

“இந்தா சாப்பிடு..  கிளாஸ் போலாம்..”

“இல்ல வேணாம் நான் கிளாஸ் போறேன்…”

“அடியே உன்ன கொல்ல போறேன் பாரு.. இந்த ஆ காட்டு…” அவளுக்கு ஊட்டிவிட்டு அவளுக்காக ஜூஸ் வாங்கி குடிக்க வைத்து கிளாஸ்கு அழைத்துச்சென்றாள் வாங்க அவங்க கிளாஸ் போகட்டும்… நாம நம்ம நாயகி பத்தி பாக்கலாம்….

நம்ம ஹீரோயின் அவங்க அப்பா அம்மாக்கு ஏழு வருஷம் கழிச்சி பொறந்த குழந்தை….. அப்பா பேரு ஜனகராஜ்  அம்மா பேரு சாந்தா… தவம் இருந்து பெத்த பிள்ளையை அவங்க அம்மாவே வெறுத்து இப்டி பேச காரணம்….  ஹீரோயின் குண்டா இருப்பா பாக்க.. அவளோ குண்டுலாம் இல்ல…. கொஞ்சம் பூசுனமாதிரி இருப்பா… கொஞ்சம் குள்ளமா இருப்பா.. அதுனால குண்டா இருக்குற மாதிரி தெரியும்.. அதுனால அவங்க அம்மாக்கு பிடிக்காது .. அது மட்டும் இல்ல ஜோசியம் அது தான் முக்கிய காரணம்… நம்ம ஹீரோயின் பேரு நிவேதா…..

நிவேதாவிற்கு  தங்கச்சி ஒருத்தி இருக்கா அவ பேரு நிஹாரிகா…. இவ என்ஜினீயர் முதல் வருஷம் படிக்குறா…  இவளுக்கும் நாம நாயகிய பிடிக்காது… அப்டியே அம்மா மாதிரி.. எப்ப பாத்தாலும் திட்டிட்டே இருப்பா… நிவேதா ஓட அப்பாவும் அவளுக்கு சப்போர்ட்டா பேச மாட்டாங்க சொந்த வீட்டுலயே ஜெயிலுல இருக்குற மாதிரி இருப்பா…..

சாந்தாவோட அக்காதான் வசுந்த்ரா தேவி… இவங்களோட கணவர் பேரு நல்லசிவம் .. இவங்களுக்கு ஒரே பையன் பேரு… நிதிஷ்குமார் காலேஜ் ப்ரோபசரா நிவேதா,பிரியா படிக்குற காலேஜ்லயே ஒர்க் பண்றாங்க…. அவங்களோட கிளாஸ் இன்சார்ஜ்…..

பிரியதர்ஷினி நல்லசிவத்தோட தங்கச்சி பொண்ணு… பிரியா அம்மா அப்பா ஒரு விபத்துல இறந்துட்டாங்க….நல்லசிவம் தான் பிரியாவ  வளத்துனாரு…..பிரியாக்கு 18 வயசு ஆனா உடனே நிதிஷ்க்கும் அவளுக்கும் கல்யாணம் பண்ணிட்டாங்க….. நம்ம நாயகியோட நலன்விரும்பிகள் இவங்க 4 பேரு தான்… ஆனா ஒரு 6 மாசம் முன்னாடி தான் நல்லசிவம் ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாரு…..

சின்ன வயசுல இருந்தே நிவேதாவ படிக்க வைக்குறது வசுந்த்ரா அம்மா தான்….

நிவேதாவிற்கு  பட்டய கணக்காளர்(CA) ஆகுறது தான் ஆசை… ஆனா அவங்க அம்மாக்கு பயந்து கோச்சிங் கிளாஸ் போகாம இருக்கா… ஆனா மொபைல வெச்சி கொஞ்சம் கொஞ்சம் தெரிஞ்சி வெச்சி இருக்கா .. வசும்மா அவள கோச்சிங் கிளாஸ் போக சொல்றாங்க .. ஆனா இவ கேட்க மாட்டிங்குறா..  அதுனால தான் நிதிஷ் இவ கிட்ட நீ கோச்சிங் கிளாஸ் போற வரைக்கும் பேச மாட்டேன்னு சொல்லிட்டான்… நிவேதா கிளாஸ் போவாளா மாட்டாளான்னு கதைல பாக்கலாம்…

சரி வாங்க கதைக்கு போகலாம்…..

நம் நாயகி வீட்டில்…

“அம்மா அவ நடந்து தான் போன…. நான் அவ பின்னாடியே போய் பாத்தேன்….”

“எப்டியோ போய் தொலையட்டும் குண்டம்மா… குண்டு பூசணிக்கா மாதிரி இருக்கா… என்னோட பொண்ணு மாதிரியா இருக்கா…. நீ தாண்டி என் கண்ணு… அம்மா மாற்றியே அழகா இருக்க…… நீ தாண்டி என் சமத்து… நில்லு… உனக்கு பூரி சுட சொல்லிட்டு போனேன்… சுட்டுட்டு தான் போய் இருக்கா..  வா ராசாத்தி சாப்பிடலாம்….  காலேஜ் போகலையாடி தங்கம்…”

“இல்ல ம்மா இந்த வாரம் எல்லாம் லீவு தானு ம்மா….”

“சரிடி ராசாத்தி சாப்பிடு…. நான் போய் குளிச்சிட்டு வரேன்..”

“சரி மா…”

சாந்தா போனவுடன் “அப்பாடா… இந்த வாரம் எல்லாம் லீவு போட்டுட்டோம்…. ஜாலி தான்…என்ன சொன்னாலும் நம்புது இந்த அம்மா…இந்த அம்மா கூட போயி டிரஸ் அப்பறம் நமக்கு தேவையான எல்லாம் வாங்கணும்…..”

சாந்தா வந்துவிட்டார்…

“அம்மா இன்னிக்கு ரிலையன்ஸ் மால் போலமா.. “

“போலாம் டி ராசாத்தி….”

“அப்பா எங்க மா?… “

“கடைல இருக்காரு டா..”

“சரி மா….”

“போலாம் வா… வா டா போவோம்..” என்று கிளம்பிவிட்டர்கள்…..

இங்கு நிதிஷ் வீட்டில்…

“மீ… மீ… எங்க இருக்க..???”

“டேய் ரூம்ல இருக்கேன்… வாடா… என்ன டா இவளோ நாள் ஆயிடிச்சு… பிரியா உன்ன ரொம்ப  மிஸ் பண்ணா போல… மூஞ்சி ஒரு மாதிரி இருந்துச்சி டா கண்ணா”

“காலைல பேசுனேன் மா…. குட்டிமா பத்தி தான் பொலம்பிட்டு இருந்தா..”என்று பிரியா சொன்னதுலாம் வசும்மா கிட்ட சொல்லி…. “ம்மா ஒரு வாரம்… குட்டிமாவ வீட்டுக்கு கூட்டிட்டு வரனும்ம்மா ..”

“சரி டா..  நீ அவ கூட பேசேன்டா..”

“ம்மா வேணாம் அவ கிளாஸ் போறன்னு சொல்லட்டும் அப்ப பேசுறேன்.. “

“போய் தூங்கு… சாயங்காலம போய் அழைச்சிட்டு வரலாம் நிவிம்மாவ ஓகேவா… “

“சோ ஸ்வீட் மீ…. “என்று சொல்லி தூங்க சென்று விட்டான்…

“இந்த சாந்தாவ என்ன சொல்றது… என்கூட தானு அவளும் பொறந்தா இவ மட்டும் ஏன் இப்டி இருக்கா… அவ புருசனும் ஒன்னுமே கேட்க மாட்டீங்குறாரு இன்னிக்கு போய் நிவிம்மாவ கூட்டிட்டு வரணும்…

பாப்பா வர முன்னாடியே போகணும்…..  இல்லனா அவளை எல்லாம் வேலையும் செய்ய சொல்லுவா….” என்று தனக்குள் பேசிவிட்டு  “ஐயோ இவனுக்கு காபி தரவே இல்லையே…” என்று கூறி விட்டு அவனுக்கு காபி தயார் செய்யும் வேலையில் … “மீ காபி…”  என்று குரல் கேட்டது

“என்ன டா இன்னும் சவுண்ட் காணோம்னு நெனச்சேன்….இந்தா குடி..”

“ஈஈஈ செல்ல அம்மா” என்று கொஞ்சினான்….

“டேய் நாலு மணிக்கே அங்க போலாம்.. பாப்பா நாலறை மணிக்கு வந்துடுவா….”

“ம்மா மறந்துட்டியா… சித்தி சொல்லி தான் அனுப்புனாங்களாம்… இன்னிக்கு நடந்து வரணும்னு…நேரம் ஆகும் குட்டிமா வர…”

“டேய் நாலுக்கே போலாம் ஏன் இன்னும் நிவிம்மா வரலன்னு கேட்கலாம் என்ன சமளிக்குறான்னு பாக்கலாம்….சரி ம்மா போலாம்…”

என்ன சமாளிக்குறாங்கன்னு அடுத்த எபில பாக்கலாம்….

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்